Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிரியாரின் அதிர்ச்சி...... மோசடிகள் பலவிதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

இதுக்கு.... சட்ட அறிவு கொண்ட மேதைகள் போல.... நேரத்தினை விரயம் செய்யாமல்....

மேதை என்று சொல்லவில்லை.

அனால், இழக்கும் அல்லது இழக்காமல் இருக்கும் பிடி வைத்து , சட்டமன்றம் ஏறி, இறங்கிய அனுபவத்தை கொண்டுதான் நான் சொல்வது. 
 
  • Replies 171
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இந்த விடயம் தனியே சிவிலும் இல்லை, தனியே கிரிமினலும் இல்லை. காணி தகறாறு சிவில் ஆனால் fraud கிரிமினல்.

முன்பே சொன்னதுதான்,
Buyer கூட்டு களவாணி இல்லை என பொலீஸ் முடிவு செய்தால் - அதன் பின் buyerக்கும் பாதிரிக்கும், land registry க்கும், சொலிசிட்டர்சுக்கும், வங்கிக்கும் இடையே இது ஒரு சிவில் மேட்டர்.

Identify fraud இல் buyer க்கும் பங்கு இருந்தால் இந்த வீடு proceeds of crime. சட்டபடி பாதிரிக்கு மீளும்.

உங்களுக்கு சட்டம் கொஞ்சம் அலர்ஜி போல தெரிகிறது - ஆனாலும் சொல்கிறேன் - நஸ்ட ஈடு எடுக்க - நட்டம் இருக்க வேண்டும். தாமதமாகவேணும் பொலிஸ் விசாரிக்கிறது, பொலிஸ்சுக்கு பாதிரியார் போக முதலே நட்டம் ஏற்பட்டு விட்டது. பொலீஸ் விசாரணையை தாமதித்ததால் வந்த நட்டம் என்ன? அப்படி இருந்தாலும் அது சொற்பகாமகவே இருக்கும் 

.

இல்லை..... நான் ஆரம்பத்தில் இருந்தேதெளிவாக சொல்லி விட்டேன்.... சட்டம் தெரியாத சாமானியன் ஆகவே பேசுகிறேன் என்று......

ஆகவே..... சட்டம் அலரஜி கதைகளை... விட்டு.... ஒரு சாமானியனுக்கு புரியும் வகையில் இன்னும் நீஙகள் முயலவில்லை....

நான் கொலிடே போய்விட்டு வந்தால்.... வீட்டில யாரோ நிக்கினம்.....

தங்கடை எண்டுகினம்......

உந்த சட்ட வியாக்கியானத்தை விட்டு.... தெளிவாக சொல்லுங்க..... நான் என்ன செய்யோனும்.

🥺

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வங்கியின் பிரச்சனை என சுலபமாக முடிக்க முடியாது. ஒரு வீடு விற்கும் போது பணம் சொலிசிட்டரின் client account ஊடாகவே மறு பக்கம் போகும். 

குண்டு கட்டாக வெளியே தூக்கி போய், attempted GBH என்று ஒரு வழக்கும் போட்டு அனுப்பி இருப்பார்கள்.

நீங்கள் எழுதிய இரெண்டு கருத்தும் 👏🏾👏🏾👏🏾

உங்களுக்கு இருக்கும் title, possession, legal ownership பற்றிய புரிதல் எல்லாருக்கும் இருக்காதுதானே.

கோசன், எனக்கு பெரியளவு law தெரியாது. ஆனால் business law - accountancy ல் படித்த அறிவில் கேட்கின்றேன் நாங்கள் Caveat Emptor (Buyer Beware) எனும் விதியின் படி

பொருளை வாங்குபவர் கவனமாக இருக்க வேன்டும் என படித்துள்ளோம். இந்த due diligence process ஐ சரியான முறையில் வாங்கியவர் செய்தாரா? ஒருவர் தன்னுடைய வீடு என்று விற்கும்போது குறித்த விற்பவரை பற்றி இந்த வாங்கியவர் அவருடைய பின்புலத்தை சிறிது ஆராய்ந்து இருக்கலாமே? 

பாதர் என்றால் இவர் திருமணம் முடித்த அங்கிலிகன் பாதாரா? அல்லது ரோமன் கத்தோலிக்க பாதர் என்றால் இவர் எந்த பங்கு சபையில் இருக்கின் இருகின்றார் போன்ற விபரங்களையாவது சாதரணமாக தேடிப்பார்த்தாரா? 

இதில் எப்படி வாங்கியவர் பொறுப்பாளியாக முடியாது?

எனக்கென்வோ வங்கியவரும் இதில் சம்பந்த்டப்ப்டுள்ளார் என தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

உந்த சட்ட வியாக்கியானத்தை விட்டு.... தெளிவாக சொல்லுங்க..... நான் என்ன செய்யோனும்.

ஒரு கெட்டிக்கார லோயரை அணுகி அவர் சொல்படி நடக்க வேண்டும். Common sense கதையள் கதைச்சு அவருக்கும் கடுப்பேத்த கூடாது (பகிடி இல்லை உண்மைதான்).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, colomban said:

கோசன்.... சட்டத்துக்குள்ள நிண்டு என்னை, சட்டம் புரியாத சாமானியனை குழப்புறார், யுவர் ஆனர்.....

எனக்கு தெரிந்த சட்டம், என்னையும், எனது கடின உழைபினால் தேடின சொத்துககளை, திருடர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பது....

7 minutes ago, goshan_che said:

ஒரு கெட்டிக்கார லோயரை அணுகி அவர் சொல்படி நடக்க வேண்டும். Common sense கதையள் கதைச்சு அவருக்கும் கடுப்பேத்த கூடாது (பகிடி இல்லை உண்மைதான்).

கெட்டிக்கார லோயரை அணுகியவர்.... மோசடி விசாரணைக்குள் சிக்குண்டு போனாரே...

நாடே திட்டுது..... அவரும் சேர்ந்து செய்திருப்பார் எண்டு சொல்லுதே...

**

வெரி சிம்பிள்...... பிபிசி வரும் வரை.... சிவில் மற்றர் எண்டு போலீஸ் சொன்னதால்.... வாங்கி.வர்.. ரைற்றில் டீட்டோடை குந்திப்பிடிச்சுக் கொண்டு இருந்திருக்கிறார்.

இப்ப மோசடி என்றவுடன்.... கதையே வேற....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, colomban said:

கோசன், எனக்கு பெரியளவு law தெரியாது. ஆனால் business law - accountancy ல் படித்த அறிவில் கேட்கின்றேன் நாங்கள் Caveat Emptor (Buyer Beware) எனும் விதியின் படி

பொருளை வாங்குபவர் கவனமாக இருக்க வேன்டும் என படித்துள்ளோம். இந்த due diligence process ஐ சரியான முறையில் வாங்கியவர் செய்தாரா? ஒருவர் தன்னுடைய வீடு என்று விற்கும்போது குறித்த விற்பவரை பற்றி இந்த வாங்கியவர் அவருடைய பின்புலத்தை சிறிது ஆராய்ந்து இருக்கலாமே? 

பாதர் என்றால் இவர் திருமணம் முடித்த அங்கிலிகன் பாதாரா? அல்லது ரோமன் கத்தோலிக்க பாதர் என்றால் இவர் எந்த பங்கு சபையில் இருக்கின் இருகின்றார் போன்ற விபரங்களையாவது சாதரணமாக தேடிப்பார்த்தாரா? 

இதில் எப்படி வாங்கியவர் பொறுப்பாளியாக முடியாது?

எனக்கென்வோ வங்கியவரும் இதில் சம்பந்த்டப்ப்டுள்ளார் என தோன்றுகின்றது.

வாங்கியவர் கூட்டு களவாணியா இல்லையா என்பது எனக்கும் தெரியவில்லை என மேலே சொல்லியுள்ளேன் கொழும்பான்.

Buyer இல் ஒரு பிழையும் இல்லை என நான் சொல்லவில்லை. செய்திகளில் அப்படி ஏதும் இல்லை.

ஆனால் இவர்கள் செய்தது identify fraud. வீடு வாங்கும் போது, title search, structural survey இன்னும் சிலதை சொலிசிட்டர் செய்வார்கள். ஆனால் விற்பவரின் பின் புலத்தை தேடுவது குறைவு. அதுவும் இப்படி ஒரு மலிவான சொத்துக்கு.

லான்லோட் வெளிநாட்டில் இருந்த படி வீட்டை விற்பதெல்லாம் சர்வ சாதாரணம். 

ஆகவே ஒரு objective test ஆக did the buyer or his solicitors show due diligence as expected என்றே பார்ப்பார்கள். இதே போல் வீடுகளை வாங்கும் ஏனையோர் காட்டிய due diligence ஐ இவரும் காட்டினாரா?

என்பதே கேள்வியாய் இருக்கும். 

8 minutes ago, Nathamuni said:

கெட்டிக்கார லோயரை அணுகியவர்.... மோசடி விசாரணைக்குள் சிக்குண்டு போனாரே...

நாடே திட்டுது..... அவரும் சேர்ந்து செய்திருப்பார் எண்டு சொல்லுதே...

லோயர் கெட்டிகாரரோ ஆரோ?

சிலர் நேரம் லோயர் கெட்டிகாரராய் இருந்தாலும் போனவர் லோயருக்கே பாடம் எடுக்கிற சுரீம் கோர்ட் கொமென்சென்ஸ் ஜட்ட்ஜா இருந்து லோயரை குழப்பி அடிச்சிருக்கவும் கூடும்🤣.

அரை வைத்தியன் ஆயிரம் பேரை கொல்லுவான்👏🏾

பாதி பிரக்கிராசி 10,000 பேரை 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

தெளிவாக சொல்லுங்க..... நான் என்ன செய்யோனும்.

நீங்கள்  பொல்லெடுப்பது தவிர்கவும். அது மேலதிக இழப்பில் முடியும். 

police இல் அறிவித்து விட்டு,  மேலதிக சட்ட வேலையை ஆரம்பிக்கவும். 

மற்றது criminal, civil matters என்பதை ஓரளவு தெரிந்து வைத்திருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

நீங்கள்  பொல்லெடுப்பது தவிர்கவும். அது மேலதிக இழப்பில் முடியும். 

police இல் அறிவித்து விட்டு,  மேலதிக சட்ட வேலையை ஆரம்பிக்கவும். 

மற்றது criminal, civil matters என்பதை ஓரளவு தெரிந்து வைத்திருங்கள். 

👆🏼👏🏾 கடஞ்சா சொல் மிக்க மந்திரம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

crypto  மற்றும் blockchain இன் பிரயோகம் இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

அதை நோக்கி வெகு விரைவாக போகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ராப்பா வீடு வாங்கி வாடகைக்கு விட்டிட்டு ஊருக்கு போய் நிம்மதியா வாழவும் விடமாட்டியள் போல..🤦🏻

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ராப்பா வீடு வாங்கி வாடகைக்கு விட்டிட்டு ஊருக்கு போய் நிம்மதியா வாழவும் விடமாட்டியள் போல..🤦🏻

சத்தியமா இந்த செய்தியை வாசிச்சதும் நீங்கள்தான் மனதில் வந்தீர்கள்.

7 minutes ago, Kadancha said:

crypto  மற்றும் blockchain இன் பிரயோகம் இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

அதை நோக்கி வெகு விரைவாக போகிறோம்.

👏🏾👏🏾👏🏾🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ராப்பா வீடு வாங்கி வாடகைக்கு விட்டிட்டு ஊருக்கு போய் நிம்மதியா வாழவும் விடமாட்டியள் போல..

இதை உங்களை குழப்ப சொல்லவில்லை. வாடைக்கு விடும் பொது உள்ள ரிஸ்க் ஐ சொல்வதற்கு.       

மற்றது, UK இன் சட்டமன்றம் பொதுவாக ஒருவர் வதியும் வீட்டை அவர்  இழப்பதை தவிர்க்கவே முயதர்சிக்கும் என்பது எழுதில்  இல்லாத நடைமுறை.    

UK இல் வீடு வடைக்கு விட்டு எடுப்பது ஒப்பீட்டளவில் சுலபமாக இருப்பது section 21 (no fault eviction) என்ற சட்டம் இருப்பதால் தான்.

வாடைக்கு இருப்போர் தொகை குறைவாக இருந்ததால், முக்கியமாக வாக்கு வங்கியாக அல்லாமல்  இருந்ததால், அந்த section 21 மீது இவ்வளவு நாளும் ஓர் அழுத்தமும் இல்லை.

இப்போது அரசியல் காட்சிகள் மீது அழுத்தம் வந்துள்ளது section 21 ஐ நீக்கும் படி, கட்சிகளும் புறக்கணிக்க முடிய நிலை, ஏனெனில் வாடைக்கு இருப்போர் இப்பொது வாக்கு வங்கி.

section 21 ஐ நீக்கினால் தெரியும், வீடு வாடைக்கு விட்டு எடுப்பது எவ்வளவு risk ஆனா விடயம் என்று.
 
அரசாங்கம் section 21  ஐ ஒன்றில் முற்றாக நீக்குவதற்கு அல்லது சீர்திருத்தம் செய்வது வேலையே தொடக்கி விட்டது.

காரணம், வ்வேட்டை வாடைக்கு விடுவோர்கள், section 21 ஐ துர்பிரோயகம் செய்து, திருத்த வேலைகள் செய்யும் படி வாடைக்கு இருப்போர் கார்ட்க, அவர்களை எழுப்பியது.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ராப்பா வீடு வாங்கி வாடகைக்கு விட்டிட்டு ஊருக்கு போய் நிம்மதியா வாழவும் விடமாட்டியள் போல..🤦🏻

சட்டம் தெரியாத சாமானியனா கேட்ட சிம்பிள் கேள்விக்கு, பத்திபத்தியா புரியாத, சட்டம் எழுதி...... என்னையும் குழப்பி..... கொழும்பானையும் குழப்பி.... கடசீல ஓணாண்டியாரையும் குழப்பியாச்சு....

இவ்வளத்துக்கும்..... யாருமே சட்டம் படித்தவர்கள் என்று சொல்லவில்லை....

கடைசீல என்ன சொல்ல வருகினம் எண்டா...... உழைத்து, தேட்டம் தேடாமல்..... கிரிமினல் வழில..... அடுத்தவன் வீட்டை ஆட்டையைப் போடலாம், சட்டம்  கண்டு கொள்ளாது எண்டு ......

காணிப்பதிவகமே..... இப்படி பிழையள் நடக்கிறது தான்.... இரண்டு பக்கமும் செயல்படும் வக்கீகள் மீதான நம்பகத்தன்மை காரணமாக நாமும் பதிந்து விடுகிறோம்..... என்று பிபிசிக்கு சொல்லி.... தனது தவறை ஒத்துக்கொண்டாலும்...... இவயள்..... விடுகினம் இல்லை.....

இதுதான் எனக்கு புரியுது...... புலவரே உங்களுக்கு? 😇

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Nathamuni said:

இதுதான் எனக்கு புரியுது...... புலவரே உங்களுக்கு? 😇

உங்களுக்கு சுத்தமாக எதுவும் புரியவில்லை என்பதுதான் எனக்கு புரிகிறது 🤣.

நீங்கள் கேட்டது சட்டம் சம்பந்தமான விளக்கம், அதை சட்ட விளக்கம் மூலம்தான் கொடுக்க முடியும். நீங்கள் சாமானிய புரிதல் உள்ளவர் எண்டபடியால் சில விசயங்களை அரிவரி பிள்ளைகள் ரேஞ்சில் சொல்ல முடியாது.

ஆகவேதான் உங்கள் போன்றவர்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் என்ன என்ற கேள்விக்கு ஒரு நல்ல லோயரை அணுகுங்கள் என சொல்லப்பட்டுள்ளது.

40 minutes ago, Nathamuni said:

இவ்வளத்துக்கும்..... யாருமே சட்டம் படித்தவர்கள் என்று சொல்லவில்லை...

நான் முன்பே சொல்லியுள்ளேன். எனக்கு சட்டம் தெரியும். நீங்கள் இங்கே என்னிடம் paid advice எடுக்கவில்லை ஆகவே ஒரு கருத்தாளராக நான் கருத்து எழுத என்CV ஐ போட வேண்டிய அவசியம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உங்களுக்கு சுத்தமாக எதுவும் புரியவில்லை என்பதுதான் எனக்கு புரிகிறது 🤣.

நீங்கள் கேட்டது சட்டம் சம்பந்தமான விளக்கம், அதை சட்ட விளக்கம் மூலம்தான் கொடுக்க முடியும். நீங்கள் சாமானிய புரிதல் உள்ளவர் எண்டபடியால் சில விசயங்களை அரிவரி பிள்ளைகள் ரேஞ்சில் சொல்ல முடியாது.

ஆகவேதான் உங்கள் போன்றவர்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் என்ன என்ற கேள்விக்கு ஒரு நல்ல லோயரை அணுகுங்கள் என சொல்லப்பட்டுள்ளது.

எனக்கு அப்படி நிலை வராது... பயப்படாதீங்க.... மார்கேஜ் புல்லா கட்டி முடிச்சு.... ஜாலியா...... இருக்கிற எங்கண்ட கோசன்தான்கவனமா இருக்கோனும்....

உங்கட..... எண்ட ...... மார்கேஜ் கணக்கைப் பார்த்தால்.... சுத்த வேஸ்ட் ..... எண்டு தான் சொல்லிப்போட்டு போவாங்கள்.... 

என்ன, நான் சொல்லுறது.... சரியே...😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

கடைசீல என்ன சொல்ல வருகினம் எண்டா...... உழைத்து, தேட்டம் தேடாமல்..... கிரிமினல் வழில..... அடுத்தவன் வீட்டை ஆட்டையைப் போடலாம், சட்டம்  கண்டு கொள்ளாது எண்டு

அப்படி இங்கே யாரும் எழுதவில்லை.

ஒரு கிரிமினல் வேலை அதை யாரும் கண்டுபிடிக்காமல் ஒரு கட்டத்துக்கு போய், பதிவும் ஒரு good-faith buyer இடம் மாறிய பிறகு - அதை நீங்கள் சொல்லுமாப்போல் தடியோடு போய் திருப்பி எடுக்க முடியாது. 

பொலிசும் இதில் தலையிட்டு உடனே நாட்டாமை போல் வீட்டை எடுத்து பாதிரியாரிடம் கொடாது. Law will take its time. ஆனால் இப்போ legal owner புதிய பையர். ஆகவே தீர்ப்பு வரும் வரை பாதிரியார் வீட்டுக்குள் போக முடியாது.

வேணும் எண்டால் பையரும் வீட்டை மேலும் திருத்த கூடாது என ஒரு injunction அப்ளிகேசன் போடலாம்.

51 minutes ago, Nathamuni said:

காணிப்பதிவகமே..... இப்படி பிழையள் நடக்கிறது தான்.... இரண்டு பக்கமும் செயல்படும் வக்கீகள் மீதான நம்பகத்தன்மை காரணமாக நாமும் பதிந்து விடுகிறோம்..... என்று பிபிசிக்கு சொல்லி.... தனது தவறை ஒத்துக்கொண்டாலும்...... இவயள்..... விடுகினம் இல்லை..

லாண்ட் ரெஜிஸ்டிரி இந்த வழக்கில் தாம் தவறு விட்டோம் என சொல்லவில்லை.  

ஒரு வழக்கில் பூர்வாங்க விசாராணை முடிய முன்னம் இப்படி சொல்லமாட்டார்கள்.

பொதுவாக வக்கீல்கள் மீதான நம்பகதன்மையால் நாம் பதிகிறோம் என்கிறார்கள்.

மீண்டும் ஒருக்கால் பிபிசி ஆங்கில கட்டுரையை ஊண்டி வாசிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ராப்பா வீடு வாங்கி வாடகைக்கு விட்டிட்டு ஊருக்கு போய் நிம்மதியா வாழவும் விடமாட்டியள் போல..🤦🏻

1 hour ago, Kadancha said:

இதை உங்களை குழப்ப சொல்லவில்லை. வாடைக்கு விடும் பொது உள்ள ரிஸ்க் ஐ சொல்வதற்கு.       

மற்றது, UK இன் சட்டமன்றம் பொதுவாக ஒருவர் வதியும் வீட்டை அவர்  இழப்பதை தவிர்க்கவே முயதர்சிக்கும் என்பது எழுதில்  இல்லாத நடைமுறை.    

UK இல் வீடு வடைக்கு விட்டு எடுப்பது ஒப்பீட்டளவில் சுலபமாக இருப்பது section 21 (no fault eviction) என்ற சட்டம் இருப்பதால் தான்.

வாடைக்கு இருப்போர் தொகை குறைவாக இருந்ததால், முக்கியமாக வாக்கு வங்கியாக அல்லாமல்  இருந்ததால், அந்த section 21 மீது இவ்வளவு நாளும் ஓர் அழுத்தமும் இல்லை.

இப்போது அரசியல் காட்சிகள் மீது அழுத்தம் வந்துள்ளது section 21 ஐ நீக்கும் படி, கட்சிகளும் புறக்கணிக்க முடிய நிலை, ஏனெனில் வாடைக்கு இருப்போர் இப்பொது வாக்கு வங்கி.

section 21 ஐ நீக்கினால் தெரியும், வீடு வாடைக்கு விட்டு எடுப்பது எவ்வளவு risk ஆனா விடயம் என்று.
 
அரசாங்கம் section 21  ஐ ஒன்றில் முற்றாக நீக்குவதற்கு அல்லது சீர்திருத்தம் செய்வது வேலையே தொடக்கி விட்டது.

காரணம், வ்வேட்டை வாடைக்கு விடுவோர்கள், section 21 ஐ துர்பிரோயகம் செய்து, திருத்த வேலைகள் செய்யும் படி வாடைக்கு இருப்போர் கார்ட்க, அவர்களை எழுப்பியது.  

அதிகம் டென்சன் வேண்டாம் புலவரே. 

இதெல்லாம் பல மில்லியனில் ஒன்று நிகழ்தகவு உள்ள விடயங்கள்.

ஆனால் கடஞ்சா சொன்ன விடயம் கவனத்துக்குரியதுதான்.

ஆனால் ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட முடியாது. 

தகுந்த முறையில் பிளான் பண்ணினால் வெல்லலாம். 

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலையில் இருந்து ஒரு சின்ன கேள்வி..... சட்டம் தெரியாத சாமியனாக..... 

எனது பாயிண்ட்.... வெரி சிம்பிள்..... நான்... கடின உழைப்பில் தேடிய பொருளை.... ஒரு களவாணிபயல் வேறு யாருக்கோ வித்து விட்டால்... அதனை சட்டம் கண்டுகொள்ளாமல் விட்டு விடுமா? 

ஒருத்தர் கூட.... தேவையான விளக்கம் தரவில்லை. அதிலும் பிரபா அக்கா... பவர்பாயிண்ட் சிலைடு specialist போல... செக் மார்க் எல்லாம் போட்டு பயமுறுத்தினார். 😁

ஆளாளுக்கு பீதியை கிளப்பினார்கள்.... தமக்கு தெரிந்த சட்டங்களை சொல்லி..... ஆனால் ஒருவருமே.... தமக்கு சட்டம்  புலமை இருக்கிறது என்று சொல்ல வில்லை.... நல்லது தான்.

சரி.... இந்த பாதிரியாருக்கு நடந்த விசயத்தினை தவிர்க்க என்ன செய்யவேண்டும் என்று அரசும், சம்பந்தப்பட்ட அமைப்புகளும் சொல்லும் ஆலோசனை என்ன?

1. கிரெடிட் ரெபெரென்ஸ் ஏஜென்சியில் பதிந்து, மாதாமாதம்.... எமது கிரெடிட் பைலில் என்ன நடக்கிறது என்று பார்ப்பது போலவே, உங்கள் ஆதனம் குறித்த, பதிவுகள் ஏதேனும் உங்களுக்கு தெரியாத மாறுதல்கள் குறித்த வேண்டுதல் காணிப்பதிவகத்துக்கு வந்தால், உங்களுக்கு அலெர்ட் மெயில் அனுப்ப பதிவு செய்ய முடியும். உங்களின் 10 ஆதனங்களுக்கு இது போல பதிவுகளை இலவசமாக செய்ய முடியும்.

https://propertyalert.landregistry.gov.uk/

2. £40 செலுத்தி, பதிவு தடை செய்து வைக்க முடியும். அதாவது.... உங்கள் அல்லது உங்கள் சொலிசிட்டர் கடிதம் இன்றி, வேறு பதிவுகள் யாருமே செய்ய முடியாது. தனியார் நிறுவங்கள் இந்த மோசடி தடுப்பு சேவைகளை தருகின்றன. நீங்கள் பல ஆதனங்களை வைத்திருப்பவரானால், இந்த முறை நல்லது.

https://www.gov.uk/government/publications/restriction-by-company-request-registration-rqco

3. மோசடி நடந்ததாக உணர்ந்தால் உடனடியாக.... காணிப்பதிவகத்தின் மோசடி தடுப்பு பிரிவுக்கு அறிவியுங்கள்.

reportafraud@landregistry.gov.uk
Phone: 0300 006 7030

4. உங்கள் கிரெடிட் பைல் மிக முக்கியமானது... உங்கள் குறித்த ஒரு ஆதனம் தொடர்பான, மோர்ட்கேஜ் கடன் தொகை தீடீரென இல்லாமல் 0 ஆகி.... மூடப்படும் விட்டால்.... யாரோ மாறி காசை போட்டு இருக்கிறாங்கள் போலை என்று இருந்து விடாதீர்கள்.... விசயம் பாதிரியார் கேசாக இருக்கலாம்....

5. citizen advice bureau உங்களுக்கு தகுந்த ஆலோசனை தரக்கூடும். இது இலவசம். ஒரு பணம் அறவிடக்கூடிய வக்கிலிடம் போக முன்னர், இது உதவும்.

6. அரசின் தளத்தில் சென்று ஆலோசனை பெறுங்கள்.

https://www.gov.uk/protect-land-property-from-fraud

7. அனைத்துக்கும் மேலாக..... உங்கள் நேர்மையாக உழைத்த சொத்து, உங்களுக்கு திருப்பி கிடைக்க, அரசும், அரச அமைப்புகளும் துணை நிற்கும். இன்று பாதிரியாருக்கு நாடே துணை நிக்கிறது.... முதலில் சிவில் கேஸ்  என்று சொல்லி  புறக்கணித்த போலீசாருக்கு....கண்டனங்கள் குவிகின்றன.

பல பில்லியன் பவுண்ட்ஸ் property வியாபார நடவடிக்கைகளில், இந்த மோசடி..... மிக சிறிய வீதம் தான்.... அரசும், அதிகாரிகளும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கிறார்கள். கவலை வேண்டாம். 

பாதிரியார் நிதியம் ஆரம்பித்து விட்டார்கள். பாதிரி இனி வேலைக்கு எண்டு வேல்ஸ் பக்கம் ஓட தேவையில்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

காலையில் இருந்து ஒரு சின்ன கேள்வி..... சட்டம் தெரியாத சாமியனாக..... 

எனது பாயிண்ட்.... வெரி சிம்பிள்..... நான்... கடின உழைப்பில் தேடிய பொருளை.... ஒரு களவாணிபயல் வேறு யாருக்கோ வித்து விட்டால்... அதனை சட்டம் கண்டுகொள்ளாமல் விட்டு விடுமா? 

ஒருத்தர் கூட.... தேவையான விளக்கம் தரவில்லை. அதிலும் பிரபா அக்கா... பவர்பாயிண்ட் சிலைடு போல... செக் மார்க் எல்லாம் போட்டு பயமுறுத்தினார். 😁

ஆளாளுக்கு பீதியை கிளப்பினார்கள்.... தமக்கு தெரிந்த சட்டங்களை சொல்லி..... ஆனால் ஒருவருமே.... தமக்கு சட்டம்  புலமை இருக்கிறது என்று சொல்ல வில்லை.... நல்லது தான்.

சரி.... இந்த பாதிரியாருக்கு நடந்த விசயத்தினை தவிர்க்க என்ன செய்யவேண்டும் என்று அரசும், சம்பந்தப்பட்ட அமைப்புகளும் சொல்லும் ஆலோசனை என்ன?

1. கிரெடிட் ரெபெரென்ஸ் ஏஜென்சியில் பதிந்து, மாதாமாதம்.... எமது கிரெடிட் பைலில் என்ன நடக்கிறது என்று பார்ப்பது போலவே, உங்கள் ஆதனம் குறித்த, பதிவுகள் ஏதேனும் உங்களுக்கு தெரியாத மாறுதல்கள் குறித்த வேண்டுதல் காணிப்பதிவகத்துக்கு வந்தால், உங்களுக்கு அலெர்ட் மெயில் அனுப்ப பதிவு செய்ய முடியும். உங்களின் 10 ஆதனங்களுக்கு இது போல பதிவுகளை இலவசமாக செய்ய முடியும்.

https://propertyalert.landregistry.gov.uk/

2. £40 செலுத்தி, பதிவு தடை செய்து வைக்க முடியும். அதாவது.... உங்கள் அல்லது உங்கள் சொலிசிட்டர் கடிதம் இன்றி, வேறு பதிவுகள் யாருமே செய்ய முடியாது. தனியார் நிறுவங்கள் இந்த மோசடி தடுப்பு சேவைகளை தருகின்றன. நீங்கள் பல ஆதனங்களை வைத்திருப்பவரானால், இந்த முறை நல்லது.

https://www.gov.uk/government/publications/restriction-by-company-request-registration-rqco

3. மோசடி நடந்ததாக உணர்ந்தால் உடனடியாக.... காணிப்பதிவகத்தின் மோசடி தடுப்பு பிரிவுக்கு அறிவியுங்கள்.

reportafraud@landregistry.gov.uk
Phone: 0300 006 7030

4. உங்கள் கிரெடிட் பைல் மிக முக்கியமானது... உங்கள் குறித்த ஒரு ஆதனம் தொடர்பான, மோர்ட்கேஜ் கடன் தொகை தீடீரென இல்லாமல் 0 ஆகி.... மூடப்படும் விட்டால்.... யாரு மாறி காசை போட்டு இருக்கிறாங்கள் போலை என்று இருந்து விடாதீர்கள்.... விசயம் பாதிரியார் கேசாக இருக்கலாம்....

5. citizen advice bureau உங்களுக்கு தகுந்த ஆலோசனை தரக்கூடும். இது இலவசம். ஒரு பணம் அறவிடக்கூடிய வக்கிலிடம் போக முன்னர், இது உதவும்.

6. அரசின் தளத்தில் சென்று ஆலோசனை பெறுங்கள்.

https://www.gov.uk/protect-land-property-from-fraud

7. அனைத்துக்கும் மேலாக..... உங்கள் நேர்மையாக உழைத்த சொத்து, உங்களுக்கு திருப்பி கிடைக்க, அரசும், அரச அமைப்புகளும் துணை நிற்கும். இன்று பாதிரியாருக்கு நாடே துணை நிக்கிறது.... முதலில் சிவில் கேஸ்  புறக்கணித்த போலீசாருக்கு....கண்டனங்கள் குவிகின்றன.

பாதிரியார் நிதியம் ஆரம்பித்து விட்டார்கள். பாதிரி இனி வேலைக்கு எண்டு வேல்ஸ் பக்கம் ஓட தேவையில்லை.

நீங்கள் மேலே கொடுத்திருப்பது இப்படி ஒரு சிக்கல் வராமல் எப்படி வரு முன் காக்கலாம் என்ற கேள்விக்கான விடை.

நீங்கள் இன்று காலை கேட்ட கேள்வி பாதிரியாருக்கு நடந்தது போல் நடந்தால் (நடந்த பின்) என்ன செய்யலாம் என்ற கேள்வி.

நீங்கள் மேலே கொடுத்திருக்கும் பதில் - நீங்கள் காலையில் கேட்ட கேள்விக்கான பதில் அல்ல. 

மறுபடியும் நினைவு படுத்துகிறேன் நீங்கள் கேட்ட கேள்வி கீழே உள்ளது. மீண்டும் ஒரு தடவை ஊண்டி வாசியுங்கள்.

8 hours ago, Nathamuni said:

நான் கொலிடே போய்விட்டு வந்தால்.... வீட்டில யாரோ நிக்கினம்.....

தங்கடை எண்டுகினம்......

உந்த சட்ட வியாக்கியானத்தை விட்டு.... தெளிவாக சொல்லுங்க..... நான் என்ன செய்யோனும்.

👆🏼 இதுதான் நீங்கள் கேட்ட கேள்வி.

அதற்குத்தான் மேலே பதில் வழங்க பட்டுள்ளது.

இப்போ நீங்களாகவே பதில் கொடுத்துள்ள பதிலுக்கான கேள்வி.

ஒருவரின் வீடு பறி போகாமல் இருக்க அவர் என்ன முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்?

இந்த திரியில் நீங்கள் இதுவரை இந்த கேள்வியை கேட்கவில்லை. 

கேட்டிருந்தால் பதில் கிடைத்திருக்கும்.

என்ன கேள்வி கேட்கிறோம் என்ற தெளிவு கூட இல்லாமல் நீங்கள் இருந்தபடி, பதில் சொல்பவரை நோககூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நீங்கள் மேலே கொடுத்திருப்பது இப்படி ஒரு சிக்கல் வராமல் எப்படி வரு முன் காக்கலாம் என்ற கேள்விக்கான விடை.

நீங்கள் இன்று காலை கேட்ட கேள்வி பாதிரியாருக்கு நடந்தது போல் நடந்தால் (நடந்த பின்) என்ன செய்யலாம் என்ற கேள்வி.

நீங்கள் மேலே கொடுத்திருக்கும் பதில் - நீங்கள் காலையில் கேட்ட கேள்விக்கான பதில் அல்ல. 

மறுபடியும் நினைவு படுத்துகிறேன் நீங்கள் கேட்ட கேள்வி கீழே உள்ளது. மீண்டும் ஒரு தடவை ஊண்டி வாசியுங்கள்.

👆🏼 இதுதான் நீங்கள் கேட்ட கேள்வி.

அதற்குத்தான் மேலே பதில் வழங்க பட்டுள்ளது.

இப்போ நீங்களாகவே பதில் கொடுத்துள்ள பதிலுக்கான கேள்வி.

ஒருவரின் வீடு பறி போகாமல் இருக்க அவர் என்ன முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்?

இந்த திரியில் நீங்கள் இதுவரை இந்த கேள்வியை கேட்கவில்லை. 

கேட்டிருந்தால் பதில் கிடைத்திருக்கும்.

என்ன கேள்வி கேட்கிறோம் என்ற தெளிவு கூட இல்லாமல் நீங்கள் இருந்தபடி, பதில் சொல்பவரை நோககூடாது.

நான் எல்லா வழியிலும் கேட்டு தலையால கிடங்கு கிண்டியெல்லே பார்த்தன்..... ம்..க்கும்.. 😁

ஆளாளுக்கு பீதியை எல்லோ கிளப்பி விட்டீர்கள்.. ஓணாண்டியார்.... ஊருக்கு போற ஐடியாவையே கான்சல் பண்ணுற அளவுக்கு டென்சன் ஆகிட்டார்... :grin:

சரி விடுங்க... ஒரு அறிதல் தானே.. 👌

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

நீங்கள் எல்லா வழியாலும் நடந்த பின் என்ன செய்யலாம் என்ற கேள்வியைதான் கேட்டீர்கள். 

ஒரு தடவை கூட இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என கேட்கவில்லை

இனியாவது கேள்வியை ஒழுங்கா formulate பண்ணி கேளுங்கள். 

எல்லாருக்கும் நேரம் மிச்சம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

நீங்கள் எல்லா வழியாலும் நடந்த பின் என்ன செய்யலாம் என்ற கேள்வியைதான் கேட்டீர்கள். 

ஒரு தடவை கூட இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என கேட்கவில்லை

இனியாவது கேள்வியை ஒழுங்கா formulate பண்ணி கேளுங்கள். 

எல்லாருக்கும் நேரம் மிச்சம்.

அப்படி இல்லையே... டைட்டில் டீட் வைத்திருந்தால்.... அவருக்கு தான் சொந்தம் என்றீர்கள். அதுவே பீதிக்கு காரணம்....

என்னடா... இது எப்படி சாத்தியம் என்று பீதி உண்டானது. எனது பிரகிராசி நண்பரிடம் விசாரித்தேன். தகவலுக்காக பகிர்கிறேன். நான் மேலே சொன்னது தான் கோசன்.... உங்கள் தகவல்கள் தவறு என்று சொல்லவில்லை. இவை மேலதிக தகவல்கள். 👍

நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய போலீசார்... சிவில் விடயம் என்று தவறாக சொன்னது..... டைட்டில் டீட் வைத்திருந்தவர்... உரிமையாளர் என்ற நிலைப்பாட்டினை உருவாக்கி விட்டது. மோசடி பிரிவினர் விடயத்தினை கையில் எடுத்ததும், முதல் கேள்வியே.... வாங்கியவர்... மோசடியில் உடந்தையா இல்லையா என்பதே. ஆகவே அந்த கணத்தில் இருந்து, அவர் ஒரு சந்தேக நபர். தான் innocent party to a  fraudulent act  என்பதனை நிரூபிப்பதே அவரது உடனடி பிரச்சனையே அன்றி, டைட்டில் டீட்டொ அல்லது, ஆதன உரிமையோ அல்ல. அதனை நிரூபிக்காவிடில், வியாபாரம் செய்து பணத்தினை எடுத்துக்கொண்டு ஓடியவர், மீண்டும் வர சந்தர்ப்பம் இல்லை என்பதால், அவரே முழு பண இழப்புக்கும் வகை சொல்வதுடன் சிறை செல்வார். 🤗

மேலும்..... பிபிசி.... (web contents) இந்தியாவுக்கு outsource பண்ணி.... நம்பகத்தன்மை இல்லாமல் போய் விட்டது.... பிபிசி தமிழ் ஒரு உதாரணம். 🥴

🙏

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

கடைசீல என்ன சொல்ல வருகினம் எண்டா...... உழைத்து, தேட்டம் தேடாமல்..... கிரிமினல் வழில..... அடுத்தவன் வீட்டை ஆட்டையைப் போடலாம், சட்டம்  கண்டு கொள்ளாது எண்டு ......

நான் சிவனே என்று இருந்திருக்கலாம் போல தெரிகிறது. 

இது முற்றாக வேறு விடயம். 

நீங்கள் இதை, நேரடியாக, சட்டத்தை பற்றி கதைக்காமல்,  சொத்து பாதுகாப்பு விடயத்தில்,  முன் எச்சரிக்கையாக,  தனி நபர்  எடுக்க கூடிய  முன்னேற்றப்பாடுகள் எவை என்று கேட்டு இருந்தால்,  பதிலாக நீங்கள் சொல்லியது வந்து இருக்கும்.

நான் சிந்தித்து பார்த்ததில், நீங்கள் எழுதியவற்றை விட, சொத்தின் பெறுமதியை பொறுத்து, வேறு சில சட்ட ஏற்பாடுகளும் உள்ளது. அது controlling stake, trust என்பவற்றுடனுன் சம்பந்தப்பட்டது.  வேண்டும் என்றால், நல்ல சட்ட அறிஞரை அணுகவும்.  
 
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

அப்படி இல்லையே... டைட்டில் டீட் வைத்திருந்தால்.... அவருக்கு தான் சொந்தம் என்றீர்கள். அதுவே பீதிக்கு காரணம்....

என்னடா... இது எப்படி சாத்தியம் என்று பீதி உண்டானது. எனது பிரகிராசி நண்பரிடம் விசாரித்தேன். தகவலுக்காக பகிர்கிறேன். நான் மேலே சொன்னது தான் கோசன்.... உங்கள் தகவல்கள் தவறு என்று சொல்லவில்லை. இவை மேலதிக தகவல்கள். 👍

நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய போலீசார்... சிவில் விடயம் என்று தவறாக சொன்னது..... டைட்டில் டீட் வைத்திருந்தவர்... உரிமையாளர் என்ற நிலைப்பாட்டினை உருவாக்கி விட்டது. மோசடி பிரிவினர் விடயத்தினை கையில் எடுத்ததும், முதல் கேள்வியே.... வாங்கியவர்... மோசடியில் உடந்தையா இல்லையா என்பதே. ஆகவே அந்த கணத்தில் இருந்து, அவர் ஒரு சந்தேக நபர். தான் innocent party to a  fraudulent act  என்பதனை நிரூபிப்பதே அவரது உடனடி பிரச்சனையே அன்றி, டைட்டில் டீட்டொ அல்லது, ஆதன உரிமையோ அல்ல. அதனை நிரூபிக்காவிடில், வியாபாரம் செய்து பணத்தினை எடுத்துக்கொண்டு ஓடியவர், மீண்டும் வர சந்தர்ப்பம் இல்லை என்பதால், அவரே முழு பண இழப்புக்கும் வகை சொல்வதுடன் சிறை செல்வார். 🤗

மேலும்..... பிபிசி.... இந்தியாவுக்கு outsource பண்ணி.... நம்பகத்தன்மை இல்லாமல் போய் விட்டது.... பிபிசி தமிழ் ஒரு உதாரணம். 🥴

🙏

மன்னிகவும் நீங்கள் உங்கள் பிரக்கிராசி நண்பரிடம் இன்னொரு தவறான கேள்வியை கேட்டுள்ளீர்கள்.

நான் முன்பே சொன்னேன் - title buyer பெயரில் உள்ளது என்ற பாதுகாப்பு அவர் களவில் சம்பந்த படவில்லை எனும் போதுதான். 

அவர் களவில் சம்பந்த பட்டுள்ளார் என்றால் - அந்த பாதுகாப்பு அவருக்கு இராது. இதைதான் நான் மிக தெளிவாக buyer ஒரு mala fide buyer என்றால் இந்த வீடு proceeds of crime என்ற வகையில் பாதிரியாருக்கு மீள வரும் என கூறினேன்.

ஆனால் இதில்  buyer தான் களவில்தான் சம்பந்த படவில்லை என prove பண்ண வேண்டிய அவசியம் இல்லை.  All criminal allegations must be proved by those making the allegation. 

நிச்சயமாக இந்த கணத்தில் இருந்து பொலீசுக்கு அவர் மேல் சந்தேகம் வரலாம் - ஆனால் அவரை ஒரு mala fide buyer என நிறுவ சந்தேகம் மட்டும் போதாது.

அவருக்கும் களவில் பங்கு உண்டு என்பதை பொலீஸ் beyond reasonable doubt ஒரு கோர்ட்டில் நிருபிக்க வேண்டும். 

(உங்கள் நண்பர் வக்கீல் என்றால் இப்படி சொல்லி இருக்க மாட்டார் - இது மிக அடிப்படையான சட்ட அறிவு - நீங்கள் சரியாக விளங்கவில்லையோ தெரியாது).

அப்படி பொலிஸ் நிறுவாவிடில் அவர் bona fide buyer தான்.  இந்த நிலையில்,

இந்த வழக்கில் buyer 

1. நான் good faith இல்தான் வாங்கினேன்

2. களவை பற்றி எனக்கு ஒரு அறிவும் இல்லை

3. Title, possession என்னுடையது 

என்று மட்டும் சொன்னால் போதுமானது.

அவர் களவில் கூட்டு களவாணியா இல்லையா என பொலீஸ் கேஸ் போட்டு நிறுவ வேண்டும்.

நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு மிக பெரிய assumption எடுக்கிறீகள், வாங்கியவரும் களவில் உடந்தை என. 

ஆனால் இதுவரை அப்படி தகவல் ஏதும் இல்லை. 

மறுபடியும் சொல்கிறேன் வாங்கியவர் களவில் உடந்தை என்றால் நான் மேலே சொன்னது போல் இலகுவாக முடியும்.

இல்லை - என்ன விளையாடுகிறீர்களா- நான் முறைப்படி இந்த வீட்டை வாங்கினேன். சொலிசிட்டர்கள், வங்கிகள், லாண்ட் ரெஜிஸ்திரி எல்லாம் சரி பார்த்து என் தலையில் கட்டி விட்டு இப்போ வீடு களவில் விற்றகப்பட்டது என்றால் எப்படி? என கேட்கும் நிலையில் இருக்கும் good-faith buyer ஆக அவர் இருந்தால், அவரிடம் title இருப்பது நிச்சயம் அவருக்கு ஒரு பெரிய பலம். ஒன்றில் வீட்டை அல்லது நட்ட ஈட்டை அவர் பெற இது பெரிதும் உதவும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

சரி.... இந்த பாதிரியாருக்கு நடந்த விசயத்தினை தவிர்க்க என்ன செய்யவேண்டும் என்று அரசும், சம்பந்தப்பட்ட அமைப்புகளும் சொல்லும் ஆலோசனை என்ன?

நான் சிவனே என்று இருந்திருக்கலாம் போல தெரிகிறது. 

இது முற்றாக வேறு விடயம்.  

நீங்கள் இதை, நேரடியாக, சட்டத்தை பற்றி கதைக்காமல்,  சொத்து பாதுகாப்பு விடயத்தில்,  முன் எச்சரிக்கையாக,  தனி நபர்  எடுக்க கூடிய  முன்னேற்றப்பாடுகள் எவை என்று கேட்டு இருந்தால்,  பதிலாக நீங்கள் சொல்லியது வந்து இருக்கும்.

நீங்கள் எழுதியவற்றை விட, சொத்தின் பெறுமதியை பொறுத்து, வேறு சில சட்ட ஏற்பாடுகளும் உள்ளது. அது controlling stake, trust என்பவற்றுடனுன் சம்பந்தப்பட்டது.     

வேண்டும் என்றால், நல்ல ஓர் சட்ட அறிஞரை அணுகவும்.  
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.