Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிரியாரின் அதிர்ச்சி...... மோசடிகள் பலவிதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

மேலும்..... பிபிசி.... (web contents) இந்தியாவுக்கு outsource பண்ணி.... நம்பகத்தன்மை இல்லாமல் போய் விட்டது.... பிபிசி தமிழ் ஒரு உதாரணம். 🥴

பி பி சி உள்நாட்டு சேவை you and yours ஒரு ரேடியோ 4 நிகழ்சி. அது இந்தியா போகவில்லை. தவிர legal ownership of a property goes with the title holder என்பது மிக அடிப்படையான விடயம். பி பி சி அல்ல, எந்த சிறிய அமைப்பும் இதை சொல்ல கூடியதாய் இருக்கும்.

  • Replies 171
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

டைட்டில் டீட் வைத்திருந்தவர்... உரிமையாளர் என்ற நிலைப்பாட்டினை உருவாக்கி விட்டது.

இது உங்கள் நண்பரின் கருத்து.

சட்டத்தின் அடிப்படையில், உரிமையாளர் title registration இல் பதிந்து உள்ளவர். 

இதில் பிரச்னை உள்ளது என்பது வேறு விடயம்.

உங்கள் நண்பரின் கருத்து படி, நீங்களே விற்று விட்டு, மீண்டும் வந்து விற்கவில்லை என்றால் (identity மோசடி நடக்கவில்லை என்றால்) , நிலை ஒன்றல்லவா?   

3 minutes ago, goshan_che said:

ஆனால் இதில்  buyer தான் களவில்தான் சம்பந்த படவில்லை என prove பண்ண வேண்டிய அவசியம் இல்லை.  All criminal allegations must be proved by those making the allegation. 

நிச்சயமாக இந்த கணத்தில் இருந்து பொலீசுக்கு அவர் மேல் சந்தேகம் வரலாம் - ஆனால் அவரை ஒரு mala fide buyer என நிறுவ சந்தேகம் மட்டும் போதாது.

அவருக்கும் களவில் பங்கு உண்டு என்பதை பொலீஸ் beyond reasonable doubt ஒரு கோர்ட்டில் நிருபிக்க வேண்டும். 

நன்றி. முதன் முதலாக  தலை கீழாக கேள்விப்பட்டது (நாதம் சொல்லியது), அதாவது குற்றம் சுமதப்படுபவர், நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும்  என்று.

அடிப்படை, குற்றம் சுமத்துபவரே, சந்தேக நபரை குற்றவாளி ஏன்று நிரூபிக்க வேண்டும் (innocent until proven guilty) . 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kadancha said:

சட்டத்தின் அடிப்படையில், உரிமையாளர் title registration இல் பதிந்து உள்ளவர். 

இதை இதற்கு மேல் எப்படி விளங்கபடுத்துவது என எனக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நாளைக்கு நீங்கள் ஒரு வீட்டை சட்டபூர்வமாக வாங்கியபின் யாரோ ஒரு பாதிரியார் திடீரென வீட்டுக்குள் வந்து பைத்தியம் போல இது என் வீடு என கத்தினால் வீட்டை கொடுப்பீர்களா?

இல்லைதானே. போலிசுக்கு அழைத்து இந்த மனிதரை வெளியேற்றுங்கள் என்றுதானே சொல்வீர்கள்?

அதுதான் சொல்கிறேன் land registry யில் டைட்டில் மாறி விட்டது. ஆகவே புதிய ஓனர்தான் இப்போதைக்கு legal owner. பாதிரியார்தான் வழக்கு போட்டு வீட்டின் டைட்டிலை மீட்க வேண்டும்.

இதை நான் ஏற்கனவே நாதத்திடம் கேட்டு விட்டேன். ஆனால் பதில் அளிக்காமல் போய்விட்டார்.

நாளைக்கு நாதம் இருக்கும் சொந்த வீட்டில் திடீரென அதன் முன்னாள் உரிமையாளர் வந்து, நான் வீட்டை விற்கவில்லை, இது இப்போதும் என் வீடுதான், யாரோ திருட்டுதனமா உமக்கு வித்து விட்டார்கள் என சொன்னால் - நாதம் திறப்ப்பை கொடுத்து விட்டு முத்து பட தகப்பன் ரஜனி போல் (அவரது பிரக்கிராசி நண்பரையும் கூட்டி கொண்டு) கிளம்பிவிடுவார் போலுள்ளளது 🤣

50 minutes ago, Kadancha said:

உங்கள் நண்பரின் கருத்து படி, நீங்களே விற்று விட்டு, மீண்டும் வந்து விற்கவில்லை என்றால் (identity மோசடி நடக்கவில்லை என்றால்) , நிலை ஒன்றல்லவா?  

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நாளைக்கு நாதம் இருக்கும் சொந்த வீட்டில் திடீரென அதன் முன்னாள் உரிமையாளர் வந்து, நான் வீட்டை விற்கவில்லை, இது இப்போதும் என் வீடுதான், யாரோ திருட்டுதனமா உமக்கு வித்து விட்டார்கள் என சொன்னால் - நாதம் திறப்ப்பை கொடுத்து விட்டு முத்து பட தகப்பன் ரஜனி போல் (அவரது பிரக்கிராசி நண்பரையும் கூட்டி கொண்டு) கிளம்பிவிடுவார் போலுள்ளளது 🤣

நீஙகள், நம்மள வச்சு....காமடி, கீமடி பண்ணவில்லை தானே கோசன்.....

முன்னாளில் இப்படி நடந்த காரணமாகவே..... சட்டம் ..... ஒரு சட்டத்தரணி முன்னால், விற்ற விலை உள்பட, இடம், திகதி, நேரம்.... மற்றும் இரு சாட்சிகள் உடன் விற்பவர், கையெழுத்து வைக்க சொல்கிறது.

வாங்குபவருக்கு அந்த சட்ட தேவையில்லை.

அப்படி முன்னாள் ஓணர் வந்து நின்றால்..... பொலீசை அல்ல.... அம்புலன்ஸை கூப்பிட்டு, விசராஸ்பத்திரிக்கு கொண்டு போக அலுவல் பார்க்க வேண்டியது தான்.

***

நீங்கள்... சொல்லும் சட்ட நிலைப்பாடு..... இது ஒரு சிவில் விடயமாக இருக்கும் வரை மட்டுமே.....

சிவில் விடயத்துக்கு உதாரணம்..... பாதிரியார் உண்மையில் விற்று விட்டார்..... அவருக்கு வரவேண்டிய வாங்கியவரின், மோற்கேஜ் வங்கி அனுப்பிய பணத்துடன், சட்டத்தரணி அலுவலகத்தை பூட்டி விட்டு.... நாட்டை விட்டே.... ஓடிவிட்டார்...

பாதிரி.... வாங்கியவருடன்.... விற்ற வீட்டுக்குப் போய்.... மல்லுக்கட்டினால்.... சிவில் விடயம்...

***

சரி..... திருட்டு வியாபாரியின் சட்டத்தரணி முன்னால், பாதிரியார்..... கையைழுத்து போடவில்லை என்பதை..... அவரும், சாட்சிகளும் உறுதிப்படுத்தியிருப்பர். 

பாதிரியார் படத்தை அனுப்பினால்..... இது... ஒரு நிமிட வேலை.

ஆக.... ரைற்றில் டீட் வைத்திருப்பவர்..... சட்டபூர்வமான உரிமையாளரிடம் வாங்கவில்லை என்பதை உறுதி செய்தல்.... அரை மணிநேர வேலை.....

விற்றவர், திருடர்..... சட்டத்தரணி சேர்ரிபிக்கேசனுடன் ரைற்றில் டீட் கதை முடியும்.

இப்ப .... வாங்கியவர்.... போலீசாரின்.... கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

இது சரி …ஆனால் திருடன் போட்ட கையெழுத்து, திருடன் அமர்த்திய சட்டதரணிக்கு முன்பு அல்லவா?

அந்த சட்டததரணி பாதிரியாரின் படத்தை பார்த்து இது என் முன் கை எழுத்து வைத்த ஆள் இல்லை என்று அரை மணியில் சொன்னாலும் அது வீட்டை வாங்கியவரை பாதிக்காது, ஏனென்றால் அந்த கை எழுத்து அவர் முன்னோ, அவரின் சட்டதரணி முன்போ போடப்படவில்லை.

ஒழுங்காக ID check பண்ணவில்லை என திருடனுக்கு சட்டதரணியாக இருந்தவர்தான் முழிக்க வேணும் (fraudulent seller’s solicitor).

37 minutes ago, Nathamuni said:

ஆக.... ரைற்றில் டீட் வைத்திருப்பவர்..... சட்டபூர்வமான உரிமையாளரிடம் வாங்கவில்லை என்பதை உறுதி செய்தல்.... அரை மணிநேர வேலை.....

விற்றவர், திருடர்..... சட்டத்தரணி சேர்ரிபிக்கேசனுடன் ரைற்றில் டீட் கதை முடியும்.

மீண்டும் உங்களுக்கு land registry யின் title ஒருவர் பெயரில் இருப்பதன் தார்பரியம் விளங்கவில்லை. இந்த title இவர் பெயரில் இருக்கும் வரை புதிய buyer தான் legal owner, அவர் வாங்கியது கள்ள ஓனரிடம் என்பது it’s just an allegation. அது கோர்ர்டில் முடிவாகி, கோர்ட் ஓடரின் படி லாண்ட் ரெஜிஸ்ரிரி டைட்டிலை மாற்றும் வரை title holder க்கு ஒரு பிரச்சனையும் இல்லை.

43 minutes ago, Nathamuni said:

இப்ப .... வாங்கியவர்.... போலீசாரின்.... கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.

(அவருக்கும் களவில் பங்கு இல்லாத போது) பொலீஸ் ஒரு கிடுக்கியும் போட முடியாது.  

விற்க போட்ட வீட்டை, எனது சொலிசிட்டர் மூலம் வாங்கினேன். நான் போய் பார்க்கும் போது வீடு விற்றவரின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. எனக்கு ஒரு சந்தேகமும் வரவில்லை. உறுதி, ஐடி செக்கிங் எல்லாம் இதற்கென இருக்கும், ஊதியம் வாங்கும் சொலிசிட்டரிடம் பாரம் கொடுத்தேன்.

இவ்வளவுதான் பொலிசின் கேள்விக்கு வாங்கியவர் சொல்லவேண்டியது. அத்தோடு அவர் மீதான கிரிமினல் வழக்கு சந்தேகம் முடிந்து விடும்.

அதன் வித்த கள்ளனை தேடி பிடிக்க வேண்டியது பொலிசின் வேலை.

வீட்டு உரிமை வழக்கு சிவில் கேசாக தொடரும். அந்த கேசில் இறுதி முடிவு வரும் வரை, title உள்ள buyer தான் உரிமையாளர். 

51 minutes ago, Nathamuni said:

அப்படி முன்னாள் ஓணர் வந்து நின்றால்..... பொலீசை அல்ல.... அம்புலன்ஸை கூப்பிட்டு, விசராஸ்பத்திரிக்கு கொண்டு போக அலுவல் பார்க்க வேண்டியது தான்.

இதைதான் இந்த வழக்கில் buyer செய்துள்ளார். பொலிசும் வந்து பாதிரியை வெளியே போட்டுள்ளது.

உங்களுக்கு வந்தா இரத்தம், யாரோ ஒரு buyer க்கு வந்தால் தக்காளி சோசா?🤣.

ஆனால் சட்டம் அப்படி இல்லை, அது எல்லா buyers ஐயும் ஒரு மாதிரியே protect பண்ணும். அதனால்தான் title உள்ளவருக்கு மேலே விளக்கிய தனி உரிமையை கொடுக்கிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இது சரி …ஆனால் திருடன் போட்ட கையெழுத்து, திருடன் அமர்த்திய சட்டதரணிக்கு முன்பு அல்லவா?

அந்த சட்டததரணி பாதிரியாரின் படத்தை பார்த்து இது என் முன் கை எழுத்து வைத்த ஆள் இல்லை என்று அரை மணியில் சொன்னாலும் அது வீட்டை வாங்கியவரை பாதிக்காது, ஏனென்றால் அந்த கை எழுத்து அவர் முன்னோ, அவரின் சட்டதரணி முன்போ போடப்படவில்லை.

ஒழுங்காக ID check பண்ணவில்லை என திருடனுக்கு சட்டதரணியாக இருந்தவர்தான் முழிக்க வேணும் (fraudulent seller’s solicitor).

மீண்டும் உங்களுக்கு land registry யின் title ஒருவர் பெயரில் இருப்பதன் தார்பரியம் விளங்கவில்லை. இந்த title இவர் பெயரில் இருக்கும் வரை புதிய buyer தான் legal owner, அவர் வாங்கியது கள்ள ஓனரிடம் என்பது it’s just an allegation. அது கோர்ர்டில் முடிவாகி, கோர்ட் ஓடரின் படி லாண்ட் ரெஜிஸ்ரிரி டைட்டிலை மாற்றும் வரை title holder க்கு ஒரு பிரச்சனையும் இல்லை.

(அவருக்கும் களவில் பங்கு இல்லாத போது) பொலீஸ் ஒரு கிடுக்கியும் போட முடியாது.  

விற்க போட்ட வீட்டை, எனது சொலிசிட்டர் மூலம் வாங்கினேன். நான் போய் பார்க்கும் போது வீடு விற்றவரின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. எனக்கு ஒரு சந்தேகமும் வரவில்லை. உறுதி, ஐடி செக்கிங் எல்லாம் இதற்கென இருக்கும், ஊதியம் வாங்கும் சொலிசிட்டரிடம் பாரம் கொடுத்தேன்.

இவ்வளவுதான் பொலிசின் கேள்விக்கு வாங்கியவர் சொல்லவேண்டியது. அத்தோடு அவர் மீதான கிரிமினல் வழக்கு சந்தேகம் முடிந்து விடும்.

அதன் வித்த கள்ளனை தேடி பிடிக்க வேண்டியது பொலிசின் வேலை.

வீட்டு உரிமை வழக்கு சிவில் கேசாக தொடரும். அந்த கேசில் இறுதி முடிவு வரும் வரை, title உள்ள buyer தான் உரிமையாளர். 

நீஙகள்.... இதை மோசடி விவகாரம் என்ற நிலைப்பாடு எடுக்காது..... சிவில் விவகாரம் என்ற நிலையில் வைத்தே பேசுகிறீர்கள்..... எனறு கருதுகிறேன்.

நாம் சட்ட மேதைகள் அல்ல...  உங்களைப் போலவே, நானும் இதன் போக்கை, ஆவலுடன் கவனிக்கிறேன்..... மேல் விபரம் தெரிந்தால், பதியுங்கள்.... நானும் அவ்வாறே செய்கிறேன்.

பார்க்கலாம்.....

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

நீஙகள், நம்மள வச்சு....காமடி, கீமடி பண்ணவில்லை தானே கோசன்.....

சேச்சே….🤣

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

நீங்கள்... சொல்லும் சட்ட நிலைப்பாடு..... இது ஒரு சிவில் விடயமாக இருக்கும் வரை மட்டுமே.....

வாங்கியவர் உடந்தை என்று போலீஸ் அல்லது பாதிரியார் நிரூபிக்கும் வரையிலும் வீடு உரிமம் civil விடயம். உரிமையாளர் வாங்கியவர்.

போலீஸ் இப்போது செய்வது வாங்கியவர் உடந்தை என்பது. அது வேறு விடயம், கிரிமினல் விடயமும் கூட. வீடு உரிமத்தை போலீஸ் இதனுடன் கலக்காது. கலந்தால் case நிற்காது.   

நீங்கள் தலைகீழாக சொன்ன, வாங்கியவர் தான் innocent buyer என்று நிரூபிக்க தேவை இல்லை. அவர் அதை சொன்னாலே போதும்.

நீங்கள் அடிப்படை, இயற்கை  நீதியின் தத்துவத்தையே தலை  கீழாக ஒன்றில் புரிந்து கொண்டு அல்லது விளங்காமல் சொல்லியது. அதாவது, உங்களின் அடிப்படை, இயற்கை  நீதியின் தத்துவம் guilty until proven innocent. அப்படி என்றால், ஏன் வழக்கு? 

கோசான் சொன்னது போல, இரு விடயங்களும் அடங்கி உள்ளது.   போலீஸ் இப்பொது செய்வது கிரிமினல் பகுதி.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நீஙகள்.... இதை மோசடி விவகாரம் என்ற நிலைப்பாடு எடுக்காது..... சிவில் விவகாரம் என்ற நிலையில் வைத்தே பேசுகிறீர்கள்..... எனறு கருதுகிறேன்.

நாம் சட்ட மேதைகள் அல்ல...  உங்களைப் போலவே, நானும் இதன் போக்கை, ஆவலுடன் கவனிக்கிறேன்..... மேல் விபரம் தெரிந்தால், பதியுங்கள்.... நானும் அவ்வாறே செய்கிறேன்.

பார்க்கலாம்.....

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....

முன்பே சொல்லி விட்டேன். வெறும் பத்திரிகை செய்தியை வைத்து எதையும் சொல்ல முடியாது. ஆகவேதான் எனது முதல் பதிவிலேயே buyer நன்னம்பிக்கையில் வாங்கியவர் (bona fide, good-faith) என்றால் என்ற caveat உடன் எழுதினேன்.

Buyer உம் கூட்டு களவாணி என்றால் - கதை வேறு.  

தவிர இதை சொல்ல சாதாரண சட்ட புலமையே போதும்.

ஒன்றை சொல்லவா? கிட்டதட்ட 90% இதை ஒத்த வழக்கு ஒன்று ஏற்கனவே நீதி மன்றில் தீர்ப்பாகி விட்டது. 

அந்த வழக்கில் - சொலிசிட்டர் தவறு விட்டதாக தீர்ப்பாகி - good-faith buyer க்கு ஏற்பட்ட இழப்பை அந்த நிறுவனம் கொடுக்க வேண்டி ஓடர் வந்துள்ளது. வீடு (தீர்ப்பின் பின்) ஒருஜினல் ஓனரிடம் திரும்பியது.

அதை தொடர்ந்து law society எப்படி நடக்க வேண்டும் என ஒரு சுற்று நிருபத்தையும் எல்லா சொலிசுக்கும் அனுப்பியுள்ளது.

இதை இங்கே சொன்னால் மேலும் குழம்புவியள் என்பதால் இதுவரை எழுதவில்லை.

முடிவாக,

இந்த வழக்கும் ஒன்றும் விசித்திரமானதும் அல்ல, பாதிரியாரும் விசித்திஆனவர் அல்ல 🤣.

இனிய தீபாவளி வாழ்துக்கள் உங்களுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நீங்கள்... சொல்லும் சட்ட நிலைப்பாடு..... இது ஒரு சிவில் விடயமாக இருக்கும் வரை மட்டுமே.....

சிவில் விடயத்துக்கு உதாரணம்..... பாதிரியார் உண்மையில் விற்று விட்டார்..... அவருக்கு வரவேண்டிய வாங்கியவரின், மோற்கேஜ் வங்கி அனுப்பிய பணத்துடன், சட்டத்தரணி அலுவலகத்தை பூட்டி விட்டு.... நாட்டை விட்டே.... ஓடிவிட்டார்...

பாதிரி.... வாங்கியவருடன்.... விற்ற வீட்டுக்குப் போய்.... மல்லுக்கட்டினால்.... சிவில் விடயம்...

நீங்கள் ஏன் எப்படி செய்கிறீர்களோ தெரியவில்லை நாதம், ஒரு பதிவை போட்டு விட்டு - அதற்கான முழு விளக்கத்தையும் நான் வரிக்கு வரி கோட் செய்து கொடுத்த பின், அந்த பதிலுக்கு பதிலும் எழுதி விட்டு, பின்னர் மேலே போய் முன்னர் நீங்கள் பதிந்த விடயத்தில் புதிதாக சிலதை சேர்ப்பீர்கள் 🤦‍♂️.

இதனால் உங்கள் கருத்து நிலை பெற்று விட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறீர்களோ தெரியாது (I hope not).

இனிமேல், அடுத்து வரும் தொடர் பதிவுகளை புதிய பதிவாக பதியுங்கள் - பதிந்தால் - எல்லாருக்கும் ஈசி.

- பரவாயில்லை நீங்கள் பின்னர் செருகிய பதிலுக்கான எனது விளக்கம்.

மேலே பலதடவை சொன்னது போல் இது தனியே கிரிமினல் விடயமோ, சிவில் விடயமோ இல்லை.

மீண்டும் ஒரு தடவை விளக்கமாக

1. நடந்த fraud கிரிமினல் விடயம்

2. ஆனால் அந்த fraud இல் buyer இற்கு சம்பந்தம் இல்லாத இடத்து (அப்படி இருப்பதாக இதுவரை எந்த தகவலும் இல்லை) - buyer, solicitors, original owner இற்கு இடையான விடயம் முழுக்க முழுக்க சிவில் விடயம். 

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

இங்கே ஆளுக்காள்.... குழப்பவதால்.... நான்... சற்று முன்னர், காணிப் பதிவக மோசடி தொலைபேசி இலக்கத்துக்கு போனைப் போட்டு.... தேவையான விளக்கம் பெற்று தெளிவடைந்துள்ளேன். 👍

அதனை இங்கே பகிர்ந்தாலும்..... நீஙகள் என்ன சொலவீர்கள் என்பது தெரியும்.. 😁

ஆகவே.... பாதிரியார் கேஸ் முடிவு, ஊடகங்களில் வரும் வரை பொறுப்தே... செயல்படு பொருள்....👌

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

🤣 ஐயர் சொன்னவர் ….

பிரக்கிராசி நண்பர் சொன்னவர்….

இப்போ காணி பதிவகத்துக்கு போன் போட்டு கேட்டேன் …..🤣

காணி பதிவகத்தில் we do not comment on individual cases, please contact our press office எண்டு சொல்லி இருப்பார்கள்🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

🤣 ஐயர் சொன்னவர் ….

பிரக்கிராசி நண்பர் சொன்னவர்….

இப்போ காணி பதிவகத்துக்கு போன் போட்டு கேட்டேன் …..🤣

காணி பதிவகத்தில் we do not comment on individual cases, please contact our press office எண்டு சொல்லி இருப்பார்கள்🤣.

காணிப்பதிவகதிடம், பாதிரியார் கேசை பத்தி பேசி கருத்து கேட்கும் முட்டாள் என நிணைத்து நீஙகள் சொன்ன கருத்துக்கு பதிலில்லை.

ஒரு சாமானியனாக..... இங்கே கேட்டும்... கிடைக்காத.... விபரம்... கிடைத்தது.

இங்கே... சொந்த அனுபவத்துடன் அல்லது கூகிளில் கிளறி.. கருத்து சொல்பவர்களிலும் பார்க்க.... அவர்கள் சொல்வது நம்பகத்தன்மை மிக்கது அல்லவா

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

காணிப்பதிவகதிடம், பாதிரியார் கேசை பத்தி பேசி கருத்து கேட்கும் முட்டாள் என நிணைத்து நீஙகள் சொன்ன கருத்துக்கு பதிலில்லை.

ஒரு சாமானியனாக..... இங்கே கேட்டும்... கிடைக்காத.... விபரம்... கிடைத்தது.

ஓ அப்போ காணி பதிவகத்திடம் நீங்கள் பாதிரியாரின் கேசை பற்றி கேட்கவில்லை?

ஆனால்  அதைதான் 3 நாளாய் இங்கே கேட்டீர்கள் இல்லையா? அதற்கான பதில்தான் இங்கே கொடுக்கப்பட்டது.

மற்றும் படி நீங்கள் வேறு ஏதும் கேள்விகள் கேட்கவில்லை.

நேற்றே எழுதினேன் உங்களுக்கு நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தாகி விட்டது.

இங்கே நீங்கள் கேட்ட கேள்வி 

இப்படி எனக்கு நடந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் கேட்காத கேள்வி 

இப்படி எனக்கு நடக்காமல் தடுக்க நான் என்ன செய்ய வேண்டும். 

நீங்கள் கேட்ட கேள்விக்குத்தான் மேலே பதில் தரப்பட்டுள்ளது.

13 minutes ago, Nathamuni said:

இங்கே... சொந்த அனுபவத்துடன் அல்லது கூகிளில் கிளறி.. கருத்து சொல்பவர்களிலும் பார்க்க.... அவர்கள் சொல்வது நம்பகத்தன்மை மிக்கது அல்லவா

நிச்சயமாக ஆனால் இது சட்ட ஆலோசனை மையம் இல்லை நாதம். கருத்து களம்.

தவிர பல ஆயிரம் பவுண்ஸ் பெறுமதியான ஆலோசனையை நீங்கள் இங்கு திரி திறந்து இலவசமாக பெறவும் முடியாது 🤣.

ஆகவேதான் நீங்கள் ஆலோசனை கேட்டதும் ஒரு நல்ல லோயரை பாருங்கள் என்றேன்.

இங்கே நாம் அலசியது, note this point அலசியது, ஆலோசனை கூறியது அல்ல, இந்த பாதிரியாரின் வழக்கை பற்றி மட்டுமே, நாதமுனியின் வழக்கை பற்றி அல்ல. 

ஆகவே பாதிரியாரின் வழக்கு பற்றிய கேள்விகளுக்கு தக்க விடை அளிக்கப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

ஓ அப்போ காணி பதிவகத்திடம் நீங்கள் பாதிரியாரின் கேசை பற்றி கேட்கவில்லை?

ஆனால்  அதைதான் 3 நாளாய் இங்கே கேட்டீர்கள் இல்லையா? அதற்கான பதில்தான் இங்கே கொடுக்கப்பட்டது.

மற்றும் படி நீங்கள் வேறு ஏதும் கேள்விகள் கேட்கவில்லை.

நேற்றே எழுதினேன் உங்களுக்கு நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தாகி விட்டது.

இங்கே நீங்கள் கேட்ட கேள்வி 

இப்படி எனக்கு நடந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் கேட்காத கேள்வி 

இப்படி எனக்கு நடக்காமல் தடுக்க நான் என்ன செய்ய வேண்டும். 

நீங்கள் கேட்ட கேள்விக்குத்தான் மேலே பதில் தரப்பட்டுள்ளது.

நிச்சயமாக ஆனால் இது சட்ட ஆலோசனை மையம் இல்லை நாதம். கருத்து களம்.

தவிர பல ஆயிரம் பவுண்ஸ் பெறுமதியான ஆலோசனையை நீங்கள் இங்கு திரி திறந்து இலவசமாக பெறவும் முடியாது 🤣.

ஆகவேதான் நீங்கள் ஆலோசனை கேட்டதும் ஒரு நல்ல லோயரை பாருங்கள் என்றேன்.

இங்கே நாம் அலசியது, note this point அலசியது, ஆலோசனை கூறியது அல்ல, இந்த பாதிரியாரின் வழக்கை பற்றி மட்டுமே, நாதமுனியின் வழக்கை பற்றி அல்ல. 

ஆகவே பாதிரியாரின் வழக்கு பற்றிய கேள்விகளுக்கு தக்க விடை அளிக்கப்பட்டது.

நான் சொன்னது என்ன, நீங்கள் சொல்வது என்ன கோசன்...

இந்த குழப்பத்தினால் தான்...சரியான தகவல் தேடி அலைந்தேன்.

நீஙகள் சொன்னது, காணிப் பதிவகத்துடனான எனது உரையாடல் குறித்து.

இப்போது சொல்வது வேறு....

நான் உங்களை கலாய்க அல்லது, நக்கல் அடிக்க சொல்லவில்லை. நீஙகள் மறுககும் வரை, நீஙகள் ஒரு சட்டத்தரணி என நிணைத்திருந்தேன்.

ஆகவே... திரியை திறந்த காரணத்தால் சரியான விபரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இங்கே மினக்கெடுகிறேன்.

இங்கே, நான் உட்பட, பாதிரியார் கேசிலும் பார்க்க, இப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய்வது, வர முன்னர் தவிர்பது எப்படி என்று தானே கரிசனை கொள்கிறோம்.

புரியும் என்று நிணைக்கிறேன்.....

சரியான விபரம் இருந்தால் மட்டும் தயவுடன் தாருங்கள்... இல்லாவிடில் நான் மேலே தந்த லிங்கைப் பயன்படுத்தி முறையான ஆலோசணை பெற.... சக கருத்தாளரை கோருவோம்.

நன்றி கோசன். 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

இந்த குழப்பத்தினால் தான்...சரியான தகவல் தேடி அலைந்தேன்.

நீஙகள் சொன்னது, காணிப் பதிவகத்துடனான எனது உரையாடல் குறித்து.

இப்போது சொல்வது வேறு....

இல்லை நாதம் நீங்கள்தான் சரியாக குழம்பி மற்றவரையும் குழப்புகிறீர்கள்.

நீங்கள் இந்த திரியில் இதுவரை கேட்டது இந்த பாதிரியார் வழக்கில் என்ன நடக்கிறது என்ற விளக்கம். 

நீங்கள் காணி பதிவகத்தில் அதை பற்றி கேட்கவில்லை என்று எழுதியுள்ளீர்கள். ஆகவே வேறு என்ன கேட்டீர்கள் என்பது நீங்கள் சொல்லவில்லை ஆகவே எனக்கோ, யாருக்குமோ தெரியாது.

ஆனால் இந்த திரியில் பாதிரியார் வழக்கு மட்டுமே அலசப்பட்டது.

20 minutes ago, Nathamuni said:

நான் உங்களை கலாய்க அல்லது, நக்கல் அடிக்க சொல்லவில்லை. நீஙகள் மறுககும் வரை, நீஙகள் ஒரு சட்டத்தரணி என நிணைத்திருந்தேன்.

நான் நான் ஒரு சட்டதரணி இல்லை என எங்கே மறுத்தேன் நாதம்?

நான் ஒரு சட்டததரணி என எங்கே ஒத்து கொண்டேன் நாதம்?

இரெண்டும் இல்லை.

எனது சட்ட தொழில் தகமை இங்கே தேவையும் இல்லை. ஏனென்றால் இது ஒரு கருத்துக்களம். 

நீங்கள் என்னை முன்பு சட்டததரணி என நினைத்தாலும், இப்போ இல்லை என நினைத்தாலும் அது உங்கள் மனதில் தோன்றியதே.

என்னை பொறுத்தவரை யாழில் நான் எனது தொழில், தகமைகளை வெளியிட விரும்பவில்லை. ஆகவேதான் எனக்கு சட்டம் தெரியும் என கூறி, என் விளக்கத்தை முன்வைக்கிறேன்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

நான் நான் ஒரு சட்டதரணி இல்லை என எங்கே மறுத்தேன் நாதம்?

நான் ஒரு சட்டததரணி என எங்கே ஒத்து கொண்டேன் நாதம்?

மேலும் கருத்து போட்டு மோதாமல்.... நட்புடன் நகர்வோம்... நண்பரே...

வேறு திரியில் சந்திப்போம்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

இங்கே, நான் உட்பட, பாதிரியார் கேசிலும் பார்க்க, இப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய்வது, வர முன்னர் தவிர்பது எப்படி என்று தானே கரிசனை கொள்கிறோம்.

புரியும் என்று நிணைக்கிறேன்.....

சரியான விபரம் இருந்தால் மட்டும் தயவுடன் தாருங்கள்... இல்லாவிடில் நான் மேலே தந்த லிங்கைப் பயன்படுத்தி முறையான ஆலோசணை பெற.... சக கருத்தாளரை கோருவோம்.

முன்பே சொன்னதுதான் நாதம்.  வட்டுகோட்டைக்கு எப்படி போவது என கேட்டால் - அதைதான் சொல்ல முடியும். பதில் சொன்ன பின் வந்து நீங்கள் ஏன் முல்லேரியா போகும் வழியை சொல்லவில்லை என கேட்கப்படாது.

பாதிரியார் கேசில் என்ன நடந்தது என்பதை தான் நேற்று பின்னேரம் வரை நீங்களும் ஏனையோரும் இங்கே கேட்டார்கள், தத்தம் கருத்தை முன்வைதார்கள்.

இடையில் ஒருக்கா பெருமாள் எப்படி கிரெடிட் செக்கை பார்த்து கொள்வது என்பதை கேட்டார் அதகுரிய விளக்கமும் கொடுக்கப்பட்டது.

நேற்று பின்னேரம் நீங்கள் புதிதாக கேட்ட கேள்வி, பாதிரியாருக்கு நடந்தது போல நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது.

இதை இதற்கு முன் நீங்கள் கேட்கவில்லை. தவிரவும் கூகிள் தேடல் மூலம் .gov வெப்சைட் உட்பட்ட சிலதை ( நான் பிரபாவுக்கான பதிலில், correspondence address பற்றி கூறி  முதலில் இதை தொட்டு போனேன்) போட்டிருந்தீர்கள். 

அதில் எனக்கு மேலதிகமாக சொல்ல ஏதும் இல்லை.

ஆகவே கேட்ட கேள்விகுத்தான் விடை தர முடியும்.

3 minutes ago, Nathamuni said:

மேலும் கருத்து போட்டு மோதாமல்.... நட்புடன் நகர்வோம்... நண்பரே...

வேறு திரியில் சந்திப்போம்...

மோதல் இல்லை. பரிமாற்றமே.

ஆனால் please stop moving the goal post as you move along.

சந்திப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

முன்பே சொன்னதுதான் நாதம்.  வட்டுகோட்டைக்கு எப்படி போவது என கேட்டால் - அதைதான் சொல்ல முடியும். பதில் சொன்ன பின் வந்து நீங்கள் ஏன் முல்லேரியா போகும் வழியை சொல்லவில்லை என கேட்கப்படாது.

பாதிரியார் கேசில் என்ன நடந்தது என்பதை தான் நேற்று பின்னேரம் வரை நீங்களும் ஏனையோரும் இங்கே கேட்டார்கள், தத்தம் கருத்தை முன்வைதார்கள்.

இடையில் ஒருக்கா பெருமாள் எப்படி கிரெடிட் செக்கை பார்த்து கொள்வது என்பதை கேட்டார் அதகுரிய விளக்கமும் கொடுக்கப்பட்டது.

நேற்று பின்னேரம் நீங்கள் புதிதாக கேட்ட கேள்வி, பாதிரியாருக்கு நடந்தது போல நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது.

இதை இதற்கு முன் நீங்கள் கேட்கவில்லை. தவிரவும் கூகிள் தேடல் மூலம் .gov வெப்சைட் உட்பட்ட சிலதை ( நான் பிரபாவுக்கான பதிலில், correspondence address பற்றி கூறி  முதலில் இதை தொட்டு போனேன்) போட்டிருந்தீர்கள். 

அதில் எனக்கு மேலதிகமாக சொல்ல ஏதும் இல்லை.

ஆகவே கேட்ட கேள்விகுத்தான் விடை தர முடியும்.

மோதல் இல்லை. பரிமாற்றமே.

ஆனால் please stop moving the goal post as you move along.

சந்திப்போம்.

Concentre on the ball, not on the post 😊

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வாங்கியவர் அப்பாவியா, சேர்ந்து செய்த கள்ளனா என்பதை விட, தற்போது வாங்கியவர்  கையில் காணி அலுவலகத்தில் மாற்றிப் பதிந்த உறுதி இருக்கிறது என்பது தான் indisputable fact. அது முறைகேடாக வந்தது என சட்டம் சொல்லும் வரை பாதிக்கப் பட்ட பாதிரியார் தானாக எதுவும் நடவடிக்கை எடுத்து விட முடியாது. இது தமிழ் சினிமாப் படமாக இருந்தால் திருப்பாச்சி அரிவாளால் போட்டுத் தள்ளி விட்டு ஜெயிலுக்கும் போகாமல் டூயற் பாடி சுபம் போடலாம்! அப்படி நாதம் நினைத்தால் அவர் கடினமான வழியில் கற்றுக் கொண்டு அறியட்டும் - கோசானும், கடஞ்சாவும் பேசாமல் இருங்கள் ஐயா! 😂  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Title Fraud on the increase in the USA:

https://www.experian.com/blogs/ask-experian/what-is-home-title-fraud/

🤦‍♂️

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

Concentre on the ball, not on the post 😊

That’s what you do Natham🤣.

You run around with the ball aimlessly, never scoring, as you haven’t got a clue what to do with the ball🤣.

The aim of the game is to score - so knowing where the goal post is crucial. 

45 minutes ago, Justin said:

வீடு வாங்கியவர் அப்பாவியா, சேர்ந்து செய்த கள்ளனா என்பதை விட, தற்போது வாங்கியவர்  கையில் காணி அலுவலகத்தில் மாற்றிப் பதிந்த உறுதி இருக்கிறது என்பது தான் indisputable fact. அது முறைகேடாக வந்தது என சட்டம் சொல்லும் வரை பாதிக்கப் பட்ட பாதிரியார் தானாக எதுவும் நடவடிக்கை எடுத்து விட முடியாது. இது தமிழ் சினிமாப் படமாக இருந்தால் திருப்பாச்சி அரிவாளால் போட்டுத் தள்ளி விட்டு ஜெயிலுக்கும் போகாமல் டூயற் பாடி சுபம் போடலாம்! அப்படி நாதம் நினைத்தால் அவர் கடினமான வழியில் கற்றுக் கொண்டு அறியட்டும் - கோசானும், கடஞ்சாவும் பேசாமல் இருங்கள் ஐயா! 😂  

🤣 நீங்கள் எங்களை பேசாமல் இருக்க சொல்ல நாதம் உங்களுக்கு அரிவாள் கேட்டை போடுறார்….

மாட்டினிங்களா….

நான் எஸ்கேப்….🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

Title Fraud on the increase in the USA:

https://www.experian.com/blogs/ask-experian/what-is-home-title-fraud/

🤦‍♂️

😎இதுக்கேன் நீங்க தலையில அடிக்கிறியள்? வரமுன் காப்பு, வந்த பின் தீர்வு என இருக்கும் படிமுறைகள் எந்த நாட்டிலும் இருக்கின்றன, தெரிந்தவன் சொல்லும் போது கேட்கிற மனநிலையில் இருந்தால் போதும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

That’s what you do Natham🤣.

You run around with the ball aimlessly, never scoring, as you haven’t got a clue what to do with the ball🤣.

The aim of the game is to score - so knowing where the goal post is crucial. 

🤣 நீங்கள் எங்களை பேசாமல் இருக்க சொல்ல நாதம் உங்களுக்கு அரிவாள் கேட்டை போடுறார்….

மாட்டினிங்களா….

நான் எஸ்கேப்….🤣

இல்லை... கோசன்...

ஆரம்பத்தில் இருந்தே கேட்கிறேன்......

சும்மா பீதியை கிளப்பாமல்...... தகுந்த, சரியான அட்வைஸ் கொடுங்கள் என்று.....

நீஙகள் தான்..... குழப்பத்துடன் தகவல்களை தருகிறீர்கள்....

பாதிரியார் விபரம் பகிர்ந்து கொண்டது.... பாதிரிக்கு என்ன நடந்தது என்ற விடுப்புக்காக அல்ல....

நமக்கு, இப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும்.... நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதே..... விபரம் புரிந்த உங்களைப் போன்றவரிடம் இருந்து எதிர்பார்கிறோம்.... அதனால் தான் நான் சாமானியன் என்று அடக்கமாகவே பதிந்தேன்.

விடயம் தெரிந்தவர்கள் செய்ய வேண்டியது... சும்மா.... பீதியை கிளப்புவதல்ல...

சரி விடுங்க.....

****

பக்கத்து வீடு ஒழுகுது.... ஹா... ஹாகா....சரி.... அப்ப உங்க வீடு? கூரையே இல்லை..... குடை பிடிச்சுக்கொண்டு நிக்கிறம்.... கதை கேள்விப்படவில்லையோ..... அது தான்..... 🤦‍♂️

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.