Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல் போய் திரும்பி வந்த 3 சிறுமிகள் விவகாரம்.. நடந்தது என்ன என்பதை விளக்கமாக அறிவித்தார் போலிஸ் ஊடக பேச்சாளர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

8ஆம் திகதி காணாமல் போயிருந்து நேற்று (09) வீடு திரும்பிய 3 சிறுமிகளும்  நடன நட்சத்திரங்களாக ஆவதற்கு

   வீட்டை விட்டு சென்றதாக காவல்துறை வெளியிட்ட தகவல்களை மேற்கோள்காட்டி The Morning பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

The Morning பத்திரிகையிடம்  பேசிய போலீஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ, 3 சிறுமிகளுக்கு என்ன நடந்தது என்ற விவரங்களை  தெரிவித்துள்ளார்.

 

“ நடன நட்சத்திரம் ஆகும் ஆசையில் குறிப்பிட்ட சிறுமிகள்  நவம்பர் 8ஆம் தேதி அதிகாலையில்  ரகசியமாக வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் கையில் இருந்த 2 மோதிரங்களை அடகு வைத்து ரூ.60 ஆயிரம் பணம்  பெற்றுள்ளனர்.

 பின்னர் அவர்கள் ஃபேஷன் பக் என்ற ஆடை விற்பனை நிலையத்திற்குச் சென்று ஜீன்ஸ், டி-சர்ட்கள் மற்றும் பிற சாதாரண உடைகள் போன்ற ஆடைகளை வாங்கியுள்ளனர். ஏனென்றால், அவர்கள் அணிந்திருந்த உடையை அணிந்துகொண்டு நடனக் குழுவில் அல்லது வகுப்பில் சேர வாய்ப்பில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 

குறிப்பிட்ட சிறுமிகள் தமது  கனவுகள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்ற  தன்னிச்சையாக செயல்பட்டனர், ”என்று நிஹால்  தல்துவ மேலும்  கூறினார்.

 

அவர்கள் ஆடைகளை மாற்றிய பின்னர், வத்தளையில் உள்ள நடனக் குழுவில் சேர முயற்சித்ததாக அவர் கூறினார். அதேசமயம், முயற்சி தோல்வியடைந்ததால், 3 சிறுமிகளும் அனுராதபுரம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர்.

 

 பஸ் நடத்துனர் சிறுமிகள் மைனர் என்பதால் சந்தேகத்தில்  உடனடியாக அவர்களை கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார்.

 

நடனக் குழுவில் இணைவதற்கான அவநம்பிக்கையான முயற்சியில், சிறுமிகள் பின்னர் சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவிடம் உதவி பெற முயன்றனர்.

 

“சிறிகொத்தாவில் உதவி கேட்டு சிறுமிகள் வந்துள்ளனர். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யாரும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டபோது, பெண்கள் SJB தலைவர் அலுவலகத்திற்குச் சென்றனர், அங்கு பிரேமதாச பதவியில் இல்லாததால் அவர்கள் மீண்டும் நிராகரிக்கப்பட்டனர், ”என்று தல்துவா கூறினார்.

 

 பெண்கள் மிகவும் "கடுமையான மற்றும் பழமைவாத" வீடுகளில் இருந்து வருகிறார்கள், எனவே அவர்கள் இசையைக் கேட்கவோ அல்லது தொலைக்காட்சியைப் பார்க்கவோ அனுமதிக்கப்படவில்லை என்று நிஹால்  தல்துவ குறிப்பிட்டார்.

 

"இது வருத்தமாக இருக்கிறது, பெண்கள் நட்சத்திரங்களாக வேண்டும் என்ற தங்கள் கனவுகளைப் பின்பற்றுகிறார்கள். போலீசார் இப்போது அவர்களின் கதையை விசாரித்து வருகின்றனர், மேலும் சிறுமிகள் மன மற்றும் உடல் மதிப்பீட்டை நடத்த நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 

சிறுமிகள் பாதிப்பில்லாமல் இருப்பதாகத் தெரிகிறது, ஆனால் நாங்கள் இன்னும் சிறுமிகளை  மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும், ”என்று SSP தல்துவ மேலும் தெரிவித்தார்.

https://www.madawalaenews.com/2021/11/3_10.htm

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போன சிறுமிகள் மூவரும் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர் !

கணாமல்போனதாக கூறி தேடப்பட்டு வந்த கொழும்பு - வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 

தமது அயல் வீடொன்றில்  இருந்த போது பொலிஸார் இவர்களை கண்டுபிடித்து மீட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.  

Three-underage-girls-missing-from-Colomb

எவ்வறாயினும் இந்த சிறுமிகள் மூவரும்  நேற்று (9 )வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஊடக அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது.

நேற்றுமுன்தினம் 8 ஆம் திகதி திங்கள் முதல் இவர்கள் மூவரும் காணாமல் போயுள்ளதாக  வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

காணாமல்போன மூன்று சிறுமிகளில் இருவரின்  தாயார் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் நேற்று (9)கொழும்பு பிரதான நீதிவான் புத்திக்க சி ராகலவுக்கு  பி அறிக்கை ஊடாக அறிவித்திருந்தனர்.

 இந்த சிறுமியர் மூவரும் கொழும்பிலிருந்து அனுராதபுரத்துக்கு  நேற்றுமுன்தினம் 8 ஆம் திகதி சென்றுள்ளதாகவும், மீள அவர்கள்  கொழும்புக்கு திரும்பி தமது வீட்டுக்கு அருகே உள்ள வீடொன்றில் மறைந்திருந்தபோது பொலிஸாரால் மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

 எவ்வாறாயினும்  இவ்வாறு அவர்கள் அனுராதபுரம் செல்ல காரணம்,  மீள அயல் வீட்டில் பதுங்கி இருக்க காரணம் உள்ளிட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை வெளிப்படுத்த பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

முன்னதாக  தனது கையடக்கத் தொலைபேசியுடன், இந்த சிறுமிகள் மூவரும்  நேற்றுமுன்தினம்  ( 😎 பயணப் பைகளையும் சுமந்த வண்ணம் முச்சக்கர வண்டியொன்றில் காலை 8.00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறுகின்றமை சி.சி.ரி.வி. காணொளிகள் ஊடாக  தெரியவந்துள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் இல்லை என  சிறுமிகளின் தாயார் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன.  13 வயது, 14 வயது மற்றும் 15  வயதுடைய சிறுதிகளே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.
 

https://www.virakesari.lk/article/116902

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறுமிகளுக்கு நடனத்தில் ஆர்வம் ஆனால் பெற்றோர் கடும்போக்கு முஸ்லீம்கள் என்பதால் பவேறுதடைகள் இது இவர்களை வீட்டை விட்டு வெளியேர தூண்டுயுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன சிறுமிகள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள்

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மார்டின் குறுக்கு வீதி கொழும்பு 12 சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல்போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் பல்வேறு அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளனர். 13 வயதான பாத்திமா மர்யம், 14 வயதான பாத்திமா கதீஜா, 15 வயதான பாத்திமா ரஷா ஆகியோரே இவ்வாறு காணாமல் போனதாக சிறுமிகளின் தாயரான மொஹமட் பாரிஸ் பாத்திமா நஸ்ரினா புகார் அளித்திருந்தார். 14,15 வயதான சிறுமிகள் தனது மகள் எனவும் 13 வயதான சிறுமி தனது அக்காவின் மகள் எனவும் புகாரில் கூறப்பட்டடுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பான விசாராணையை மேற்கொண்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹாஸ் தல்துவ காணாமல் போன மூன்று சிறுமிகளும் பாதுகாப்பாக வீடு திரும்பியாதக தெரிவித்துள்ளார். இவ் விசாரணையில் மூன்று சிறுமிகளும் ஏன் வீட்டை விட்டு வெளியேறினார்கள் என்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இவ் விசாராணையின் அடிப்படையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொழும்பு 12ஜச் சேர்ந்த மூன்று சிறுமிகளும் 42 மணி நேரத்தின் பின்னர்  வீடு திரும்பிய நிலையில் மூன்று சிறுமிகளும் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு அங்கு முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் நடனம் மற்றும் இசை பயில்வதற்கான ஆசையில் வீட்டை விட்டு இவ்வாறாக வெளியேறினாதாக பொலிஸாரிடம் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அம் மூவரும் தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சட்ட மருத்துவ அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் சிறுமிகளுக்கு எந்தவித உடல், உள ரீதியான பாதிப்புக்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டடுள்ளது. 

அத்துடன் வாழைத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி பிராதான பொலிஸ் பரிசோதகர் பமுனு ஆராச்சி, சிறு முறைப்பாட்டின் பொறுப்பாதிகாரி ரத்ன குமார, குற்ற விசாரணை பிரிவு பொறுப்பாதிகாரி உடுவெல்ல மற்றும் பிராதான பொலிஸ் பரிசோதகர் ஜி.பி. ரம்யசிறி ஆகியோர் உள்ளடங்கிய விஷேட குழுவினர் ஊடாக இந்த விசாராணைகள் ஆரம்பிக்கப்பட்டன, அத்துடன் மத்திய சிறுவர் மற்றும் மகளிர் விசாராணை பிரிவும் விசாரணையில் இணைந்தது.

 இந்நிலையில் சி.சி.ரி.வி கானோளிகளை ஆராய்ந்து பார்த்ததில் குறித்த சிறுமிகள் 8ஆம் திகதி முற்பகல் கொழும்பு விகாரமாதேவி பூங்கா அருகிலுள்ள உணவகம் ஒன்றிக்கு சென்று உணவு அருந்தியமை தெரியவந்துள்ளது.

மேலும் சிறுமிகளின் கைகளில் இருந்த தாயாரின் கையடக்க தொலைப்பேசியை ஜி.பி.எஸ். தொழிநுட்பம் ஊடாக பின் தொடர்ந்து தேடிய போது 8 ஆம் திகதி காலி முகத்திடலில் இருந்தமை தெரியவந்ததுடன் அதன் பின்னர் அவர்களது கையடக்க தொலைப்பேசி செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

அதன் பின்பு  சிறுமிகளின் கைகளில் 1,800 ரூபா மட்டுமே பணம் இருந்துள்ளது. எனவே தாங்கள் அணிந்திருந்த சுமார் ஒரு பவுன் வரை நிறையுடைய இரு மோதிரங்களை அடகு வைத்துள்ளனர். அதனூடாக 60 ஆயிரம் ரூபாவைப் பெற்றுள்ளனர். அந்த பணத்தில் தமக்கு தேவையான ஜீன்ஸ் ரீ-சேட்டுக்களை கொள்வனவு செய்துள்ளனர்.

அத்துடன் ஆடைகளை கொள்வனவு செய்த சிறுமிகள் அவ்க ஆடைகளை அணிந்தவாறு வத்தளை பகுதிக்குச் சென்று அங்குள்ள நடன வகுப்பொன்றில் சேர முயற்சித்துள்ளனர். 

எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் அவர்கள் அநுராதபுரம் சென்றுள்ளனர். அநுராதபுர பஸ் நிலையத்தில் சிறுமிகளின் பின்னால் இளைஞர் குழுவொன்று வட்டமிடுதலை கண்ட பஸ் சாரதி ஒருவர் சிறுமிகளிடம் தாம் செல்ல வேண்டிய இடம் தொடர்பில் விசாரித்துள்ளார்

இதனையடுத்து மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பஸ் வண்டியொன்றில் ஏற்றிவிட்டுள்ளார். அத்தோடு அவர்களை இடையில் எங்கும் இறக்காது கொழும்பில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளார். அத்துடன் கொழும்பை வந்தடைந்த சிறுமிகள் ஐ.தே.க தலையகமான சிறிகொத்தாவுக்கு சென்று அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரியுள்ளனர்.

அதற்கு இடமளிக்கவில்லை பாதுகாப்பு அதிகாரி இதனையடுத்து அருகில் உள்ள ஜக்கிய மக்கள் சக்தி அலுவலகத்திற்கு சென்று அங்கு சஜித் பிரேமதாசவை சந்திக்க முயற்சித்துள்ளனர். அங்கு சஜித் பிரேமதாச இருக்காத நிலையில் அவர்கள் பின்னர் உறவினர் ஒருவரின் வீட்டை வந்தடைந்த சிறுமிகள் அங்கிருந்து வீட்டுக்கு சென்றனர்.

இதனையடுத்து இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவே அவர்கள் சிறுமிகளிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த மூன்று சிறுமிகளும் பொலிஸாரால் கொழும்பு மேலதிக நீதிவான் சந்திக லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே நீதிவான் இந்த  உத்தரவை பிறப்பித்துள்ளார். 

பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று பிணையம் ஒற்றின் கீழ் அம் மூன்று சிறுமிகளும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதன் பிறகு வீட்டுக்கு தெரியாமல் இரகசியமாக வெளியேறினால் இப்பிணையம் ரத்து செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்படுவார்கள் என்று இதன்போது நீதிவான் எச்சரித்தார். 

இந்நிலையில் இது குறித்து மேலதிக வழக்கு விசாராணைகள் நாளை 16 ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/117249

 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2021 at 14:57, colomban said:

கடும்போக்கு முஸ்லீம்கள் என்பதால் பவேறுதடைகள் இது இவர்களை வீட்டை விட்டு வெளியேர தூண்டுயுள்ளது. 

அது தான் உண்மை.தனது தலைமயிரை காட்டமுடியாத ஒரு பரிதாபகரமான நிலைமை. சவுதிஅரேபிய இளவரசி அனுபவிக்கும் உரிமையை கூட அந்த நாட்டின் மதத்தை பின்பற்றும் இலங்கை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மறுப்பது ஏனோ ☹️

Prinzessin aus Saudi-Arabien räumt mit allen Vorurteilen auf!

  • கருத்துக்கள உறவுகள்

இச் சிறுமிகளின் ஆசையை பெற்றோர் நிறைவேற்ற வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.