Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார்த்திகையில் றோயலுடன் கிரிக்கெட் குத்தாட்டம் போட்டது யாழ் இந்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொடிய கொரோனா தொற்றுகை ஒரு பக்கம்.. மழை வெள்ளம் இன்னொரு பக்கம்.. மண் இன விடுதலைக்காக  உயிர் தியாகம் செய்த சகோதரர்களை நினைவு கூறுதல் இன்னொரு பக்கம் இருக்க..

யாழ் இந்துக்கல்லூரி யுகே பழைய மாணவர் சங்கம் அமைத்துக் கொடுத்து அண்மையில் திறந்து வைத்த புதிய விளையாட்டுத் திடலில்.. கொழும்பு றோயல் கல்லூரியை கூப்பிட்டு வைச்சு கிரிக்கெட் குத்தாட்டம் போட்டுள்ளது யாழ் இந்துக் கல்லூரி.

இது அவசியமா.. இந்த வேளையில்..?!

May be an image of 1 person, standing and text that says "முன்னாள் நகர சபைத் தலைவர் கொரோனாத் தொற்றால் சாவு! சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் முன் னாள் தவிசாளர் வசகாயம்பிள்ளை கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். 2011ஆம் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சாவகச்சரி நகர சபைக்குப் போட்டியிட்டு அதிகூடிய 2 பக்கங்கள்: 08 காலைக்கதிர் Kalaikkathir மாலைப்பதிப்பு சாயல் 02 வள்ளுவர் ஆண்டு 2052 ஐப்பசி 27 சனிக்கிழமை 13.11.2021 கதிர் 23G உவருடங்களுக்குப்பின்னர்யாழ். மண்ணில் களைகட்டிய பாடசாலைக் கிரிக்கெட் போட்டி யாழ். இந்து- கொழும்பு றோயல் அணிகள் மோதல் .கலையமுதன்) யாழ்ப்பாணம் இந்துக கல்லூரி. கொழும்பு றோயல் கல்லூரி அணிகள் மோதிய குட்பட்டோருக்கான30 ஓவர்கள் கொண்ட சிநேக பூரவ அழைப்பு கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மமைதா னத்தில் நடைபெற்றது. வெற்றிபெற்ற யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ளத் தீர்மானித்தது. முதலில்"

May be an image of 8 people, people standing and text that says "யாழ்ப்பாணம் இந்துக் விளையாட்டுத்"

May be an image of 11 people, people standing and outdoors

இன்று இந்த கிரிக்கெட் அகால காலத்தில் நிகழ்த்தப்பட்ட கிரிக்கெட் ஆட்டத்தில் யாழ் இந்து றோயலிடம் தோல்வியையும் சந்தித்தது. அதாவது கூப்பிட்டு வைச்சு வாங்கிக் கட்டியுள்ளது.

Royal 228/6 JHC 152/10

  • கருத்துக்கள உறவுகள்

நேசம் பாசம் நேசிப்பு மதிப்பு மரியாதை உணர்வுபூர்வமான அஞ்சலி.. இதெல்லாம் எமக்கு உள் இருந்து வரவேண்டும்.. யார் மீதும் திணிக்கமுடியாது.. நமது வரலாற்றை சொல்ல வேண்டிய முறையில் மனதை உருக்கும் வகையில் உணர்வுபூர்வமாக அடுத்த சந்ததியிடம் கடத்தவேண்டும்.. வற்புறுத்தி ஒரு வரலாற்றை கடத்தமுடியாது.. நாங்களே மாவீரர் நாள் கொண்டாடிவிட்டு அதே மண்டபத்திலே கொத்து சாப்பிட்டு வீட்ட போய் படுக்கிறம் வெளிநாட்டில்.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதனை சிங்கள இராணுவத்துக்கு வெற்றி விழா எடுக்கும் போது மகிந்த கும்பலுக்குப் போதிக்க முடியுமா..?!

இங்கிலாந்தில் நவம்பர் 11 இல் நாட்டுக்காக உயிர் நீத்தோருக்கு 2 நிமிட அஞ்சலி.. அவரவர் விருப்பம் கேட்டல்ல.. கட்டாயம் எல்லோரும் செய்ய கோரப்பட்டது.

யாழ் இந்துக் கல்லூரி எமதின தேச விடுதலைப் போராட்டத்திற்கு தனது சொந்த புதல்வர்கள் பலரை களப்பலியிட்டிருக்கும் நிலையில்...

மாவீரர்களுக்கான புனித மாதத்தில்.. கிரிக்கெட்டுக்கே உதவாத ஒரு காலப்பகுதியில்... தென்பகுதியில் இருந்து ஒரு பாடசாலையை அழைத்து வந்து கிரிக்கெட் குத்தாட்டம் போட வேண்டிய அவசியம் என்ன..??!

யாழ் இந்துக் கல்லூரி தான் சார்ந்த சமூகத்திற்கும் மண்ணிற்கும் மாணவர்களுக்கானதா.. அல்லது வேறு யாரினதோ தேவைக்கு பயன்படுத்தப்படுகிறதா..???!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nedukkalapoovan said:

அதிகாரம்… அதிகாரம் புரோ… அது இல்லாட்டி நாம அடக்கித்தான் வாசிக்கணும்.. அன்பாத்தான் சொல்லி புரியவைக்கோணும்.. இப்பிடி குத்தாட்டம் கித்தாட்டம் எண்டு எழுதி யாருக்கு வேலைக்கு செய்கிறாங்கள் சிங்கள கைக்கூலிகள் எண்டு எல்லாம் திட்டினா இன்னும் வன்மம் வளரும் எதிர்ப்பக்கம்.. எங்கள் பக்கம் இருக்கும் ஒவ்வொரு விக்கட்டா நாமளே விழுத்துவம்.. ஒரு பக்கம் திராவிடத்தை எதிர்க்கிறம் எண்டு தமிழ்நாட்டையே எதிரி ஆக்கி.. இப்படியே எதிர்கால தொலைநோக்கு சிந்தனை இல்லாத காட்கோர் தமிழ்த்தேசிதவாதிகளால் நம்போன்ற ஒட்டுமொத்த தமிழ்த்தேசியவாதிகளும் இழந்தது அதிகம்.. மகிந்தவிடம் போய் போதிப்பீங்களா என்று கேட்பது எல்லாம் அறியாமை.. அது சகல அதிகாரங்களும் கொண்ட அரசு.. புலிகள் இருக்கும்போது இந்துக்கல்லூரி இப்படீ நினைத்துகூட பார்த்திருக்குமா..? இங்கிலாந்து மக்களுக்கு ஒரு அரசு இருக்கிறது.. அது தீர்மானம் இயற்றி நடைமுறைப்படுத்துது.. எங்களுக்கு..? ஆக அதிகாரம் வேணும்.. தமிழ்தேசியத்தை நேசிக்கும் நாங்கள் எதுவும் இல்லாதவர்கள் உலக நாடின் ஒன்றினதும்கூட ஆதரவு இல்லாதவர்கள் பொறுமையாக உணர்ச்சிக்கு ஆட்பட்டு மனசு சொல்வதை கேட்காமல் சிந்தித்து அறிவு சொல்வதை கேட்கணும்.. அதன் அடிப்படையில் தூர நோக்கில் சிந்தித்து எழுதனும் செயற்படனும்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு எம் உறவுகளை நினைவு கூறவும்.. ஒரு அகால வேளையில் ஒரு நிகழ்வை நடத்தாமல் விடவும் சிந்திக்க அடிப்படை புத்தி இருந்தால் போதும். அதுகூட யாழ் இந்துக்கல்லூரி படித்த மேதைகள் என்கிற மேதாவிகளிடம் இல்லாமல் போனது வேடிக்கையிலும் வேடிக்கை..!

மேலும் திராவிட மாயையை தமிழகத்தில் தமிழ் தேசியம் எதிர்த்தது உங்களுக்கு இன்று தான் தெரியுது. ஆனால்.. அது மா பொ சி காலத்தில்.. தனித் தமிழ் நாடு கேட்ட போதே உருவாகிட்டுது.

திராவிடம் தமிழ் இனத்திற்கு எதிரி என்பது இன்று நேற்றல்ல 50 ஆண்டுகால வரலாறு. ஒரு சிங்கப்பூருக்கு அந்த தேச மைந்தன் அமைந்தது போல்.. தமிழ் நாட்டுக்கு ஒரு தமிழ் மைந்தன் அமைந்திருந்தால்.. ஈழமும்.. தமிழகமும் இன்று எவ்வளவோ சிறப்புற்றிருக்கும்.

எல்லாத்தையும் பயங்காட்டி.. அடிமைப்படுத்தி வைப்பதால்.. எந்த விமோசனமும் இல்லை. திராவிடப் போலிகளுக்கும்.. சிங்கள பேரினவாதிகளுக்கும்.. தமிழ் கூலிகளுக்கும் இன்னும் ஆயுளைக் கூட்டுமே தவிர தமிழ் இனம்.. மண்ணிற்கு விமோசனமில்லை.

யாழ் இந்துக்கல்லூரியில்... கார்த்திகையில் கிரிக்கெட்.. முந்தாள் வெள்ளத்தில் மிதக்குது.. இன்று கிரிக்கெட்.. இது குத்தாட்டமில்லாமல்.. பேயாட்டம் என்று சொல்லச் சொல்லுகிறீர்களா. அதுவும் கொரோனா பெருந்தொற்று அபாயம் இன்னும் தனியாத நிலையில்.. ஒரு சமூகப் பொறுப்புள்ள கல்லூரி ஆற்றும் கருமமா இது..?!

கேள்வி கேட்காமல்.. எல்லா அநீதிகளுக்கும் மந்தைகள் போல கூட்டமாப் போய் ஆமாப் போடனும் என்ற அவசியமில்லை. 

May be an image of 5 people, people standing, tree and outdoors

May be an image of 4 people, people standing, outdoors and text that says "யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விளையாட்டுத் திடல் - Attack"

May be an image of 4 people, people standing and outdoors

யாழ் இந்துக்கல்லூரி பகுதியில் தேங்கிய வெள்ள நீர் தொடர்பாக பாடசாலை அதிபரின் அழைப்பை எற்று சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்ற யாழ் மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளர், மாநகர பொறியாளர் ஆகியோர். பார்வையிட்ட பிறகு மிக விரைவில் பாடசாலை மாணவர்களை பாதிக்காத வகையி்ல் சீர்செய்யப்படும் என்று கூறினார்கள்.

(இது 11 திகதி. 13 திகதி அதே வெள்ளத்துக்குள் றோயலுடன் குத்தாட்டம்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மாதமும் என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்று எழுதி யாழ் இந்து அதிபருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிடுங்கள். இதன் பிரதியை யாழ் இந்து பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஒவ்வொரு மாதமும் என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்று எழுதி யாழ் இந்து அதிபருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிடுங்கள். இதன் பிரதியை யாழ் இந்து பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும்..

தப்புத்தாளம் போடுறவைக்கு அவைட தப்பு நன்கே புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்

Facebook இல் வரும் படங்களையும், செய்திகளையும் பார்த்தால் குத்தாட்டம் நடந்த மாதிரித் தெரியவில்லையே. எல்லோரும் வாழ்த்தித்தானே இருக்கின்றார்கள்.🤨

OBA UK இன் புதிய தலைவர் நம்ம நண்பர்தான். நெடுக்ஸின் அதிருப்தியை காதில் போட்டுவிடவா?😁

எங்கள் கல்லூரியின் வருடாந்த ஒன்றுகூடல் அடுத்த சனிக்கிழமை! அங்கு நாம குத்தாட்டம் போடக்கூடாதா???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

எங்கள் கல்லூரியின் வருடாந்த ஒன்றுகூடல் அடுத்த சனிக்கிழமை! அங்கு நாம குத்தாட்டம் போடக்கூடாதா???

வருடா வருடா ஒன்றுகூடி என்னத்தை பண்ணினம்.. சேர்க்கிற காசில ஒரு பகுதியை தண்ணியிலும் தள்ளாட்டத்திலும் தான் போடினம். இதில குத்தாட்டம் வேற வேணுமா..?!

உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள்.. மைதானத்தை அமைச்சியல் சரி.. ஏதோ 7 கறியும் சோறும் சமைச்ச கணக்கா எதுக்கு அவசரம்...?!! மைதானம் பழுதாகிடுமா..இல்ல எழுந்து ஓடிடுமா..?!

கொஞ்சம் ஆற அமர.. வெள்ளம் வடிய.. மழை விட.. கொரோனா அடங்க.. நவம்பர்.. டிசம்பர் முடிய.. அந்த ஊர் மக்களும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடேக்க திறந்திருக்கலாம்.. தென்னிலங்கையில் இருந்து கூட்டி வந்து முதல் குத்தாட்டத்தை போட்டு முதல் ஆட்டத்திலேயே தோற்று அவமான வரலாற்றை பதிவு செய்வதிலும்.. கொஞ்சம் புத்தி சீவி தனமா புத்தியை சீவி கூர்மையாக்கி பாவிச்சிருக்கலாம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

Facebook இல் வரும் படங்களையும், செய்திகளையும் பார்த்தால் குத்தாட்டம் நடந்த மாதிரித் தெரியவில்லையே. எல்லோரும் வாழ்த்தித்தானே இருக்கின்றார்கள்.🤨

OBA UK இன் புதிய தலைவர் நம்ம நண்பர்தான். நெடுக்ஸின் அதிருப்தியை காதில் போட்டுவிடவா?😁

எங்கள் கல்லூரியின் வருடாந்த ஒன்றுகூடல் அடுத்த சனிக்கிழமை! அங்கு நாம குத்தாட்டம் போடக்கூடாதா???

கிட்டதட்ட 185,000 பவுண்ஸ் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். வருடாந்த பராமரிப்பு செலவு மட்டும் இன்னுமொரு 10 லட்சம் வரை வருமாம். 

எட்டுபேர் சேர்ந்து இந்த கொடையை வழங்கியுள்ளார்கள்.

படங்களை பார்க்க grass turf பிட்ச் உம் அமைத்துள்ளார்கள் போல தெரிகிறது.  இதை உறுதி படுத்த முடியுமா? 

அப்படி என்றால் சென்பற்றிக்ஸ்க்கு அடுத்து இந்த வசதி இருக்கும் யாழ் மைதானம் இதுதான்.

மெட்டினில் கிரிகெட் விளையாடி ஒரு போதும் இலங்கை உள்ளூர் அளவில் கூட பிரகாசிக்க முடியாது. ஒரு காலத்தில் யாழ் இந்து மாணவர்கள் இதில் விளையாடி பின்னர் கொழும்பு கிளப்புகளில் போய் பிரகாசிக்க இது வழி கோலலாம்.

இனவாத நந்தி வழி மறிக்கும் ஆனால் அதை தாண்ட எல்லா வழிகளிலும் நாம் முயலவேண்டும். இது ஒரு வழி.

அடுத்து ரோயல் கல்லூரிக்கு போய் விளையாட வேண்டும். இதை வருடாந்த விளையாட்டாக மாற்ற வேண்டும். எமது பிள்ளைகளின் பெயரும் ரன், விக்கெட் எண்ணிக்கையும் டெய்லி நியூஸ் கடைசி பக்கத்தில் வரவேண்டும்.

பொதுவாக நான் பழைய மாணவர் தமது பள்ளிகளில் காசை கொட்டுவதை விட ஏனைய பள்ளிகளில் இடலாம் என சொல்பவன்.

ஆனால் இந்த பெருமுயற்சி தேவையான விதி விலக்கு.

உங்கள் நண்பரிடம் சொல்லி விடுங்கள் - கோஷான் என்று ஒருத்தர் - எல்லாத்திலும் குறை பிடிப்பவர்🤣, அவரே உங்கள் சேவையை பாராட்டி எழுதியுள்ளார் என்று.

இரு விண்ணப்பங்கள் - நண்பரின் காதில் போட்டு விடுங்கள்.

1. தனியே academic selection மற்றும் இல்லாது, வருடாந்தம் 5 மாணவர்களையாவது sports ability அடிப்படையில் உள்வாங்கினால் சிறப்பாக இருக்கும். புதிதாக வந்துள்ள அதிபர் இளையவர், ஊழல் அற்றவர், ஒழுக்கத்தை மீள கொண்டு வருகிறார் என கேள்விபடுகிறேன். ஒரு தேசிய பாடசாலையில் இப்படி செய்ய இலங்கை சட்டம் அனுமதி கொடுக்குமா தெரியவில்லை. முயற்சி செய்யலாம்.

2. Jaffna Hindu Cricket Academy என ஒரு அமைப்பை மாணவர் சங்க கட்டுப்பாட்டில் நிறுவி, பள்ளியில் சேர முடியாத ஆனால் திறமையுள்ள ஏனைய வட, கிழக்கு மாணவர்களுக்கும் இதே வாய்ப்பை வழங்கலாம். 

large.08DD4DD2-1CE1-49C7-9154-65E27779C846.jpeg.958c1fc7aa0a1d13c4c738ed34d16a77.jpeg

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மேலே உள்ளதை அப்படியே காதில் (வட்ஸப்பில்) போட்டாச்சு😀

முன்னைய OBA தலைவர்தான் திறந்து வைத்தவர். நம்ம நண்பரும் போய் நிற்கின்றார்.

கிடைத்த பதில்.

Matting pitch நடுவில் உள்ளது.   A half turf pitch பயிற்சிக்கு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

Matting pitch நடுவில் உள்ளது.   A half turf pitch பயிற்சிக்கு உள்ளது.

half turf pitchஇல் பயிற்சி எடுத்துவிட்டு matting பிட்சில் மேட்சுகளை விளையாடுவதில் எந்த பயனும் இல்லை.

கோஷான். நீங்கள் கூப்பிட்டியல் என்பதற்காக றோயல் கல்லூரி உங்களை கூப்பிடும் என்று கனவு காணாதீர்கள். அதுவும் Turf பிட்சில் விளையாடினால் அவமானம்தான் மிஞ்சும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

Matting pitch நடுவில் உள்ளது.   A half turf pitch பயிற்சிக்கு உள்ளது.

நன்றி ஜி. 

உங்கள் நண்பர் தலைமை காலத்தில் நடு பிச்சும் turf பிட்சாக வர வாழ்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

half turf pitchஇல் பயிற்சி எடுத்துவிட்டு matting பிட்சில் மேட்சுகளை விளையாடுவதில் எந்த பயனும் இல்லை.

கோஷான். நீங்கள் கூப்பிட்டியல் என்பதற்காக றோயல் கல்லூரி உங்களை கூப்பிடும் என்று கனவு காணாதீர்கள். அதுவும் Turf பிட்சில் விளையாடினால் அவமானம்தான் மிஞ்சும்.

உண்மை. 

இந்த பணத்தை turf போட செலவழித்து விட்டு பின்னர் ஏனையவற்றை செய்திருக்கலாம் என்பதே என் நோக்கமும்.

இந்த எட்டு பேரை போல இன்னும் கொஞ்ச பேர் முன்வந்தால் அதையும் செய்யலாம்.

ரோயல் கல்லூரி வருடாந்தம் அழைப்பது கடினம்தான். ஆனால் ஒரு T20 யாவது போய் விளையாடலாம். 

ரோயலில் ஆண்டு 11இன் பின் திறமையான வீரர்களை வெளிமாவட்ட பாடசாலைகளில் இருந்து இனம் கண்டு எடுக்கும் வழக்கமும் உண்டு. இப்படி சில யாழ் இந்து இளைஞர்கள் இனம் காணப்பட இது ஒரு வாய்ப்பாக அமையும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

முன்னைய OBA தலைவர்தான் திறந்து வைத்தவர். நம்ம நண்பரும் போய் நிற்கின்றார்.

கிடைத்த பதில்.

ஆக மொத்தத்தில் அவைட தனிப்பட்ட தேவை நிமித்தம் தகாத காலம் என்றும் பார்க்காமல் திறந்து.. தங்கள் தனிப்பட்ட லெவலைக் காட்ட றோயலைக் கூப்பிட்டு கூத்தடிச்சிட்டு எனி கிளம்பப் போகினம்.

யு கே திரும்பி உண்டியல் குலுக்க வருவினம் தானே.. அப்ப மிச்சத்தை சம்பந்தப்பட்டவைக்கு சொல்லி வைக்கிறது நல்லம் போல இருக்கு.

யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் அமைப்பை ஒரு சிலர் தங்களின் செல்வாக்கை நிலை நிறுத்த பாவிக்கிறது என்றால்.. உண்மையான பாடசாலை விசுவாசிகள்.. உவைட அமைப்புக்களுக்கு பங்களிப்பதை நிறுத்திக் கொள்வதை விட வேற வழியில்லை. 

2 hours ago, goshan_che said:

இந்த பணத்தை turf போட செலவழித்து விட்டு பின்னர் ஏனையவற்றை செய்திருக்கலாம் என்பதே என் நோக்கமும்.

இதைப் பற்றி முன்னரும் இங்கு யாழில் கலந்துரையாடி இருந்ததாக ஞாபகம். ஒரு சிலர் தாங்கள் நினைச்சதை செய்வது தான் தங்களின் தனிப்பட்ட செல்வாக்கை காட்ட உதவும்  என்று நினைக்கிறதால தான்.. இந்த தமிழ் சமூகமே தாழ்ந்து கிடக்குது. பொதுத் தேவை.. அவசியம் குறித்த சிந்திப்பும்.. செயற்பாடும் அறவே இல்லை.

இது தான் யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் இந்து வரை நிலைமை அங்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.