Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுமந்திரன் தலைமையிலான குழு வோஷிங்டனில் முக்கிய பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தலைமையிலான குழு வோஷிங்டனில் முக்கிய பேச்சு

November 18, 2021

spacer.png

அமெரிக்கா சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர்கள் குழு மற்றும் உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு ஆகியவை இரண்டும் ஒன்றிணைந்து வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த மூன்று நாள்களில் பல தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமந்திரன் தலைமையிலான குழு இன்று நியூயோர்க் செல்கின்றது. அங்கு ஐ.நா. அதிகாரிகளுடன் இன்றும் நாளையும் பல மட்ட கலந்தாய்வுகளில் அக்குழு ஈடுபடும் எனத் தெரிகின்றது. திங்களன்று பத்துத் தரப்புகளுடனும், செவ்வாயன்று பத்து தரப்புகளுடனும், நேற்று ஐந்து தரப்புகளுடனும் இக்குழு சந்திப்புக்களை நடத்தி கலந்தாய்வுகளை மேற்கொண்டது.

இந்தச் சந்திப்புகள், கலந்தாய்வுகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிடும் எனத் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது. அதனால் தமிழர் தரப்புப் பிரதிநிதிகள் இச்சந்திப்புகள் தொடர்பில் தங்கள் பக்கத்தில் இருந்து அறிவிப்புகள் மற்றும் தகவல் வெளியீடுகளைத் தவிர்த்து வருகின்றனர் எனவும் கூறப்பட்டது.

spacer.png

கடந்த மூன்று நாள்களாக நடந்த சந்திப்புகளில் தமிழர் தரப்பில் மொத்தம் ஒன்பது பிரதிநிதிகள் ஒன்றாகக் கலந்துகொண்டனர். கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, கனகேஸ்வரன் மற்றும் திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே.

உலகத் தமிழர் பேரவையின் சார்பில் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒவ்வொரு பிரதிநிதியும், அமெரிக்காவில் இருந்து மூவருமாக மொத்தம் ஆறு பேர் பங்கு பற்றுகின்றனர். அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பல்வேறு திணைக்களங்களின் இரண்டாம் நிலை அதிகாரிகள், தமது அரசின் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பு நிலைப்பாடுகள் சம்பந்தமான தீர்மானங்களை எடுப்பதற்காக தமிழர் தரப்புடன் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சந்து நேற்று முன்தினம் இரவு, கூட்டமைப்புப் பேச்சாளர் சுமந்திரனை அழைத்து இரவு விருந்துடன் சந்திப்பு நடத்தினார். அமெரிக்கத் தரப்புடன் தமிழ்ப் பிரதிநிதிகள் தற்போது நடத்தும் கலந்தாய்வுகள் குறித்து சுமந்திரனிடம் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் விவரமாகக் கேட்டறிந்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இச்சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

spacer.png

இதற்கிடையில் அமெரிக்க நேரப்படி நேற்றுப் புதன்கிழமை பகல் (இலங்கை நேரப்படி நேற்றிரவு) பல்வேறு பேச்சுக்களை முடித்துக் கொண்டு சுமந்திரன் நியூயோர்க் புறப்பட்டார். அவருடன் வொ´ங்டன் சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரனும், திருமதி நிர்மலா சந்திரஹாசனும் வொஷிங்டனிலேயே தங்கியுள்ளனர்.

நியூயோர்கிற்கு சுமந்திரனுடன் உலகத் தமிழர் பேரவையின் ஓரிரு பிரதிநிதிகளும் சேர்ந்து செல்லக் கூடும் எனத்தெரிவிக்கப்பட்டது. நியூயோர்க்கில் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி, இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி மற்றும் ஐ.நாவின் உயர்மட்ட அலுவலர்களோடு சுமந்திரன் குழுவினர் சந்திப்பில் ஈடுபடுவர் எனத் தெரிகின்றது.

நியூயோர்க் பேச்சுக்களை முடித்துக் கொண்டு சுமந்திரன் குழு ஞாயிறன்று மீண்டும் வொ´ங்டன் திரும்பும். அடுத்த நாள் 22ஆம் திகதி திங்கட்கிழமை தமிழர் தரப்பின் ஒன்பது பிரதிநிதிகளும் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உயர்மட்ட அதிகாரியுடன் பேச்சுக்களை நடத்துவர். அத்தோடு தமிழர் தரப்பின் இந்த அமெரிக்க விஜயம் முடிவுக்கு வரும் எனத் தெரிகின்றது.

அடுத்த நாள் 23ஆம் திகதி கனடாவின் ஒட்டாவா நகரில் கனேடிய வெளி விவகார அமைச்சு அதிகாரிகளுடனும் – அதன் பின் இரண்டு நாள்கள் கழித்து 25ஆம் திகதி லண்டனில் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடனும் – சுமந்திரன் எம்.பி. – சாணக்கியன் எம்.பி. ஆகியோரைக் கொண்ட இரு பிரதிநிதிகள் குழு பேச்சு நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

https://www.ilakku.org/the-sumanthiran-led-delegation-held-talks-with-us-officials-in-washington/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா சென்ற சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அரசியல் தீர்வு குறித்து காங்கிரஸ் உறுப்பினருடன் பேச்சு

(நா.தனுஜா)

அரசியலமைப்பு உள்ளடங்கலாகப் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் அமெரிக்காவிற்குச் சென்றுள்ள தமிழ்த்தேசியக்ககூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டெபோரா கே.ரோஸை சந்தித்து பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Image

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் மற்றும் கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் அடங்கிய சட்டநிபுணர் குழு கடந்த சனிக்கிழமை அமெரிக்கா பயணமானது. 

தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இக்குழுவினருக்கும் அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன.

Lisa Peterson, Acting Assistant Secretary of the U.S. State Department Bureau of Democracy, Human Rights,  and Labor, meets with Tamil National Alliance and Global Tamil Forum.

 அதன் ஓரங்கமாக அமெரிக்க காங்கிரஸில் வட கரோலினா மாநிலத்தின் இரண்டாவது மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரும் சட்டத்தரணியுமான டெபோரா கே.ரோஸிற்கும் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இச்சந்திப்பின்போது பொறுப்புக்கூறல் மற்றும் நிலைபேறான அமைதியை உறுதிசெய்வதற்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக் குழுமம் தெரிவித்திருக்கின்றது.

 அதுமாத்திரமன்றி அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் பதில் உதவிச்செயலாளர் லிஸா பீட்டர்ஸன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுடனும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவுடனும் இலங்கையிலிருந்து சென்ற எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

Image

 இலங்கைத்தமிழ் பிரதிநிதிகளுடனும் புலம்பெயர் தமிழர் அமைப்பான உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தியமைக்காக அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் கிளை அலுவலகங்களின் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க காங்கிஸ் உறுப்பினர் டெபோரா ரோஸுக்கும் நன்றி தெரிவித்துள்ள அமெரிக்க தமிழ் தமிழர் செயற்பாட்டுக் குழுமம், நிறைபேறான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கக்கூடிய அரசியல் தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட இக்கலந்துரையாடல்கள் மிகவும் முக்கியமானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

 அதுமாத்திரமன்றி இலங்கையில் நீதிக்கான வேட்கை தொடரும் அதேவேளை, கடந்த காலத்தில் இடம்பெற்றதைப்போன்ற மிகமோசமான வன்முறைகள் மீளநிகழாதிருப்பதற்கு வழிவகுக்கக்கூடிய அரசியல் தீர்வு குறித்த தமிழ்ப்பிரதிநிதிகளின் குரல்களை அமெரிக்கப்பிரதிநிதிகள் செவிமடுத்தமை வரவேற்கத்தக்கது என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

https://www.virakesari.lk/article/117505

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2021 at 00:05, கிருபன் said:

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சந்து நேற்று முன்தினம் இரவு, கூட்டமைப்புப் பேச்சாளர் சுமந்திரனை அழைத்து இரவு விருந்துடன் சந்திப்பு நடத்தினார்.

என்னவோ இந்தியாவும், றோவும் சுமந்திரனை ஒழிச்சுக்கட்டப்போகுது என்று ஒரு கதை உலாவிச்சு, இப்போ கதை மாறிப்போகுது. நாடகத்தில் தடங்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு புரளியை தாங்களே உருவாக்கியிருப்பார்களோ? சச்சியரையும், சுமந்திரனையும் வைத்து இரண்டு சிறு குழுக்கள்! கதை நன்றாக ஓடுது.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, satan said:

என்னவோ இந்தியாவும், றோவும் சுமந்திரனை ஒழிச்சுக்கட்டப்போகுது என்று ஒரு கதை உலாவிச்சு, இப்போ கதை மாறிப்போகுது. நாடகத்தில் தடங்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு புரளியை தாங்களே உருவாக்கியிருப்பார்களோ? சச்சியரையும், சுமந்திரனையும் வைத்து இரண்டு சிறு குழுக்கள்! கதை நன்றாக ஓடுது.

இதன் உண்மைத்தன்மையை பெருமாளிடம் உறுதிப்படுத்தலாம்.

😎

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழ் தேசியம் வளர்ச்சியடைவதை சர்வதேசமும் இந்தியாவும் விரும்பவில்லை....இது இலங்கை என்ற நாட்டை உருவாக்கிய வல்லரசுகளுக்கும் இந்தியாவுக்கும் விருப்பமில்லை.....

இந்து,கிறிஸ்தவம் ,இஸ்லாம் ,பெளத்தம் என்ற வகையில் நாட்டை பிளவு படுத்தி வைப்பதில தான் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் தற்பொழுது.....தெற்காசியாவில் தேசிய இனங்களை அடையாளப்படுத்தி உரிமைகளை வழங்குவதை விட மத அடையாளங்களை முன்னிறுத்துவதை இந்த ஜனநாயகவாதிகள் ஆர்வம் காட்டுகின்றனர் போல  தெரிகின்றது....

இஸ்லாமிய பங்கரவாதம் என்ற போர்வையில் கிறிஸ்தவ தேவாலய குண்டு வெடிப்பு அதை 
தொடர்ந்து ஆயர் தொடர்ந்து அறிக்கை விடுவது ....
சச்சி மாடுகள் மீது பாசமழை பொழிவது
பெளத்த பிக்குமார் இந்து ஆலயங்களில் புத்தரை புகுத்துவது
மாவீரர் தின திகதியை மாற்றுவது பற்றிய ஆயர்களின் கருத்து 
இஸ்லாமியமத வாதிகள்,புத்த,கிறிஸ்தவ இந்து சிலைகளை உடைப்பது....

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இதன் உண்மைத்தன்மையை பெருமாளிடம் உறுதிப்படுத்தலாம்

உங்களுக்கு தெரியாதவிடத்து விட்டுத்தள்ளுங்கள். எதுக்கு பெருமாளை இழுக்கிறீர்கள் இதுக்குள்ள? அவருக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை? நான் யாரை குறித்தும் இந்த கேள்வி கேட்கவில்லை, கேள்விப்பட்டதை பகிர்ந்தேன். அவ்வளவே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

உங்களுக்கு தெரியாதவிடத்து விட்டுத்தள்ளுங்கள். எதுக்கு பெருமாளை இழுக்கிறீர்கள் இதுக்குள்ள? அவருக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை? நான் யாரை குறித்தும் இந்த கேள்வி கேட்கவில்லை, கேள்விப்பட்டதை பகிர்ந்தேன். அவ்வளவே!

அப்படியா.. ம்ம்ம்ம்ம்ம்ம்😳

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.