Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில்லையூர் செல்வராஜனும் தணியாத தாகமும்

Featured Replies

கவிஞர் சில்லையூர் செல்வராஜன்

sillaiyoorselvarajanwn4.th.jpg

(கரவையூரன்)

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (வருமானவரிக்காரர்கள் தான்) நடாத்திய ஒரு பிரம்மாண்டமான தமிழ் விழாவில், கவியரங்கத்தில் பங்குபற்ற வந்திருந்த கவிஞர்களிடையே, பட்டுவேட்டி, ஜிப்பா, சரிகைச் சால்வையடன், பென்சில் கீற்று மீசையுடன், அசப்பில் ஒரு சினிமா நட்சத்திரம் போல ஒருவர் எழுந்து நின்று , இனிய குரலில் "தேனாக.." என்று தொடங்கி, "சில்லாலை என்ற சிற்றூரில், நிலவில், முற்றத்து மணலில், அம்மா தன் கைவிரல்கள் பற்றி, ஆனா, ஆவன்னா எழுதியது" பற்றி கவிதைவரிகளில் சொன்ன அந்த நிமிடமே நான் அவரை என் ஆதர்சத்துக்கு உரியவராக்கிக் கொண்டேன்.

ஒரு வெளிநாட்டவரின் தனியார் விளம்பர நிறுவனத்தில் சில்லையூரார் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தார்.

சில்லையூரார் "ஜிங்கிள்ஸ்" (Jingles) என்ற விளம்பர வாசகங்களை அற்புதமாக கவி நயத்தடன் உருவாக்குவார். உதாரணத்துக்கு ஒரு ஆங்கில வாசகம் - Upali நிறுவனத்தின் Unic றேடியோவுக்கான விளம்பரம் , இவ்வாறு உப்பு சப்பில்லாமல் வரும் -

In electronic engineering unic is matchless

அதற்கு சில்லையூரார் இவ்வாறு தமிழில் எழுதியிருந்தார் - மின்னியக்க பொறிவன்மையில் தன்னிகரற்றது யுனிக்" - சொல்லிப்பாருங்கள்.

அந்தச்சந்தத்தின் அழகு ஒரு விளம்பரவாசகத்தில் கூட வந்து பொருந்தியிருப்பதைக் காணலாம்.

சில்லையூராரிடம் இருந்த நூல் சேகரிப்பு பிரக்யாதிபெற்றது. இலங்கையில் வெளியான நூல்கள், சஞ்சிகைகள் என்பனவற்றையெல்லாம் வரிசைப்படுத்தி வைத்திருந்தார். பல சிறுகதை எழுத்தாளர்கள் தாங்கள் சிறுகதைத்தொகுதிகள் வெளியிடும்பொழுது, தவறவிட்ட தங்களுடைய சிறுகதைகளை இந்த சேகரிப்பில் இருந்து பெற்றுக் கொண்ட சம்பவங்கள் எனக்குத் தெரியும்.

ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி என்ற நூல் எழுதுவதற்கு அவருடைய சொந்த சேகரிப்புத்தான் தூண்டியிருக்கவேண்டும்.

ஒரு முறை சில்லையூராரிடம் கேட்டேன்- "உங்கள் வீட்டு இலக்கம் ஞாபகத்தில் இருக்க மறுக்கிறதே..என்ன செய்யலாம்"

அவர் சொன்னார் - "ஏழேழு தலைமுறைக்கும் என் புகழ் மங்காது என்று ஞாபகம் வைத்துக்கொள்"

அவரது வீட்டின் இலக்கம் - (7X7) 49/7

ஷேக்ஸ்பியரின் நாடகமான ஜூலியஸ் சீசரில் , புறூட்டஸ், மார்க் அன்ரனி இருவரும் , சீசரின் மரணச்சடங்கில் பேசுகின்ற பகுதியை மொழிபெயர்த்திருந்தார். ஒருமுறை அந்தப்பகுதியை அந்த இரண்டு பாத்திரங்களின் குணாதிசயங்களை வேறுபடுத்திக்காட்டும் வகையிலே எனக்கு அற்புதமாக நடித்துக்காட்டினார். நான் கண்ணீர் விட்டேன்.

சில்லையூரார் உண்மையில் "பல்கலைவேந்தராகவே" திகழ்ந்தவர். கவிஞர், எழுத்தாளர், மேடை நடிகர், திரைப்படநடிகர் (ஆங்கில திரைப்படங்கள் உட்பட), வானொலி தயாரிப்பாளர், பாடகர், கூத்துக்கலைஞர்- இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சில்லையூரார் தனது கவிதைகளை தானே உரைத்திட "கவிதைச்சிமிழ்" என்ற ஒலிப்பேழை ஒன்று வெளியிடப்பட்டத.

தணியாத தாகம் கலைஞர்கள்

thaniyathagamyv0.th.jpg

நிற்பவர்கள் (வலமிருந்து இடம்) வி.என்.மதியழகன், ஆர்.எஸ்.சோதிநாதன், கே.எம்.வாசகர், எஸ்.வாசுதேவன், கே.எஸ்.பாலச்சந்திரன், பி.என்.ஆர்.அமிர்தவாசகம், கே.மார்க்கண்டன், எம்.கே.ராகுலன், கே.சந்திரசேகரன், எஸ்.ஜேசுரட்னம், எஸ்.மயில்வாகனம், எஸ்.எழில்வேந்தன், எஸ்.சிவசுந்தரம், என்.கே.தர்மலிங்கம்

இருப்பவர்கள் (வலமிருந்து இடம்) சசி பரம், யோகா தில்லைநாதன், சந்திரப்பிரபா மாதவன், கே.எஸ்.நடராஜா(வானொலி தமிழ் நிகழ்ச்சி தலைவர்), விஜயாள் பீற்றர், ஷாமினி ஜெயசிங்கம், செல்வநாயகி தியாகராஜா, மொறின் கனகராயர்

அவரது தயாரிப்பில் மக்கள் வங்கி விளம்பர நிகழ்ச்சியாக வந்து வெற்றி பெற்ற " கோமாளிகள் கும்மாளம்" ஏறக்குறைய இரண்டாண்டுகள் ஒலிபரப்பாகி முடிவடைந்த நேரம். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அவரே எழுதிய "தணியாத தாகம் " என்ற திரைப்படச்சுவடி (Film Script) நூல்வடிவில் வெளிவந்திருந்தது. தற்செயலாக அந்த நூலை பம்பலப்பிட்டி கிறீன்லண்ட்ஸ் புத்தகக்கடையில், பார்த்த நான் ஆவலுடன் வாங்கி வாசித்த பிறகு, அதையே அடுத்த தொடர்நாடகமாகச் செய்யலாம் என்று அவருக்குசொன்னேன். ஒரு நகைச்சுவை நாடகத்துக்கு பிறகு, ஒரு சோகமயமான நாடகம், அதுவும் யாழ்ப்பாணத்தமிழில் எடுபடுமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. நான் விடவில்லை. செய்து பார்ப்போம் என்று விடாப்பிடியாக நின்றேன். "கோமாளிகள் கும்மாளத்தில்" முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்கள் எவரும் இல்லாமல் புதிய நடிகர் குழாம் ஒன்று தெரிவாகியது.

கே.எஸ்.பாலச்சந்திரன்(சோமு), விஜயாள் பீற்றர்(யோகம்), கமலினி செல்வராஜன்(கமலி), கே.மார்க்கண்டன்(மாமா), செல்வநாயகி தியாகராஜா(மாமி), வாசுதேவன்(குமார்), ஷாமினி ஜெயசிங்கம்(சோமுவின் காதலி), எஸ்.கே. தர்மலிங்கம்(அப்பா), யோகா தில்லைநாதன்(அம்மா), எஸ். ஜேசுரட்னம், பி.என்.ஆர்.அமிர்தவாசகம், எஸ்.எழில்வேந்தன் என்ற புதுக்குழு களமிறங்கியது.

தொடர் நாடகம் ஆரம்பித்து சில வாரங்களில், எராளமான நேயர்கள் வானொலி நிலையத்திறகும், மக்கள் வங்கி முகவரிக்குமாக பாராட்டுக்கடிதங்கள் எழுதத் தொடங்கினார்கள். சோமுவும், தங்கைகள் யோகம், கமலி இருவரும் தங்களின் உடன்பிறப்புகளாக நினைத்து, அவர்களின் துன்பங்களுக்காக கண்ணீர் விட்டு, சந்தோசங்களில் மகிழ்ச்சி அடைவதாக அந்தக்கடிதங்கள் வந்தன. நாட்டின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் ஞாயிறு தோறும் நாலரை மணிக்கு வீடுகளில், தோட்டங்களில், வயல் வரப்புகளில், டிரான்ஸிஸ்டர் ரேடியோக்களோடு காத்திருக்கிறோம் என்றார்கள்.

யாழ்ப்பாணம் சென்ற கொண்டிருந்த இ.போ.ச பஸ் ஒன்று ஞாயிறு 4.30க்கு " அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே..கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே" என்று ஆரம்பப்பாடல் ஒலிக்க, பஸ்ஸில் இருந்த பிரயாணிகளின் ஏகோபித்த வேண்டுகோளுக்க இணங்க, திருநெல்வேலி தேனீர் கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டு , தணியாத தாகம் கேட்கப்பட்டதாக யாரோ சொல்லக்கேட்டு ஆனந்தமடைந்தோம்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு அபிமான நேயர், "சோமு"வின் குடும்பகஷ்டத்தை பொறுக்கமுடியாமல் 100ரூபாவுக்கான காசோலையை அனுப்பியிருந்தார். தெல்லிப்பளையிலிருந்து மூன்று சகோதரிகள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை நீண்ட கடிதங்களில் எழுதி அனுப்பினார்கள். நாடகத்தை வானொலி ஏற்றவகையில் மாற்றி எழுதி வழங்கிய கே.எம்.வாசகர் , முடிவிலே இந்த சகோதரிகளின் விருப்பபடி சிறு மாற்றம் ஒன்றைச் செய்யும் அளவிற்கு அவர்களது பங்களிப்பு இருந்தது.

இத்தொடர்நாடகத்தின் இறுதிக்காட்சி ஒலிப்பதிவு செய்யப்பட்டபொழுது, யோகத்தின் மரணஊர்வலக் காட்சியில் நாங்கள் எல்லோரும் கண்ணீரை அடக்கமுடியாமல் தடுமாறினோம். நீண்ட நாட்களாக அந்தப் பாதிப்பிலிருந்து விடுபடமுடியாமல் தவித்தோம். இப்படி ஒரு வானொலி நாடகம் நிறைவெய்தியது.

http://karavaiyuran01.blogspot.com/2007/06/11.html

<_< .

Edited by Ponniyinselvan

  • தொடங்கியவர்

உங்கள் பலருக்கு எங்கள் படைப்பாளிகளை தெரியாது என்று நினைத்துத்தான் இக்கட்டுரையை இணைத்தேன். இது தொடர்பான கருத்துக்களை வரவேற்கிறேன். வெறும் அரட்டை அல்ல..

:D

எனக்கு செல்வராஜன் பற்றித் தெரியாது. ஆனால் தாயகத்தில் சிறு வயதில் அடிக்கடி வானொலியில் கேட்ட 'சில்லையூர் செல்வராஜனின் தோழமையுள்ள வணக்கங்கள்' என்ற வசனம் மட்டும் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துள்ளது. அந்தக் உணர்ச்சிகரமான குரலை என்றுமே மறக்க முடியவில்லை.

இக் கட்டுரை இணைத்தமைக்கு நன்றிகள்.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

சில்லையூர் செல்வராஜன் பற்றிய ஆக்கத்திற்கு நன்றி களவுறவே.

கே.எஸ்.பாலச்சந்திரன்(சோமு), விஜயாள் பீற்றர்(யோகம்), கமலினி செல்வராஜன்(கமலி), கே.மார்க்கண்டன்(மாமா), செல்வநாயகி தியாகராஜா(மாமி), வாசுதேவன்(குமார்), ஷாமினி ஜெயசிங்கம்(சோமுவின் காதலி), எஸ்.கே. தர்மலிங்கம்(அப்பா), யோகா தில்லைநாதன்(அம்மா), எஸ். ஜேசுரட்னம், பி.என்.ஆர்.அமிர்தவாசகம், எஸ்.எழில்வேந்தன் என்ற புதுக்குழு களமிறங்கியது.

இதில் வருகின்ற கமலினி செல்வராஜன் தான் இவரது மனைவி என்று நினைக்கின்றேன். ஆனால் நீண்ட வயது வேறுபாட்டில் திருமணம் செய்ததாக கமலி சொன்னதாக ஞாபகம். இப்போது கமலி கொழும்பில் விளம்பர நிலையம் ஒன்றை வைத்து நடத்துகின்றார் போலும். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு.

செல்வராஜன் மறைந்தாலும், அவரது புகழ் மறையாது இருக்கின்றது என்பதற்கு இளைய தலைமுறையினர் சிலர் அறிந்து வைத்திருப்பதைக் கண்டபோது உணர்ந்து கொண்டேன்.

செல்வராஜன் பற்றிய மேலதிக விபரங்களை இவ்விணைப்பில் பார்த்துக் கொள்ளலாம்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%...%AE%A9%E0%AF%8D

அவரது குரலைக் கேட்க: http://www.esnips.com/doc/1cad0fb8-329a-40...oor-Selvarajan-

  • தொடங்கியவர்

எனக்கு செல்வராஜன் பற்றித் தெரியாது. ஆனால் தாயகத்தில் சிறு வயதில் அடிக்கடி வானொலியில் கேட்ட 'சில்லையூர் செல்வராஜனின் தோழமையுள்ள வணக்கங்கள்' என்ற வசனம் மட்டும் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துள்ளது. அந்தக் உணர்ச்சிகரமான குரலை என்றுமே மறக்க முடியவில்லை.

இக் கட்டுரை இணைத்தமைக்கு நன்றிகள்.

நன்றி இணையவன். தேனாக இனித்த அவரின் குரல் இறுதிக்காலத்தில் சற்றே மங்கிப்போனாலும் அவர் குரலில் ஒரு கவிதை இதோ..

http://www.esnips.com/doc/1cad0fb8-329a-40...yoor-Selvarajan

:D

  • தொடங்கியவர்

சில்லையூர் செல்வராஜன் பற்றிய ஆக்கத்திற்கு நன்றி களவுறவே.

இதில் வருகின்ற கமலினி செல்வராஜன் தான் இவரது மனைவி என்று நினைக்கின்றேன். ஆனால் நீண்ட வயது வேறுபாட்டில் திருமணம் செய்ததாக கமலி சொன்னதாக ஞாபகம். இப்போது கமலி கொழும்பில் விளம்பர நிலையம் ஒன்றை வைத்து நடத்துகின்றார் போலும். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு.

நன்றி தூயவன்.. கமலினி அவரது மனைவிதான். தமிழ் புலமைமிக்க புலோலி மு. கணபதிபிள்ளையின் மகள். இவர்களது மகனின் பெயர் அதிசயன். இவர் விளம்பர நிலையம் நடத்துவது தெரியாது. கமலினியும் சில்லையூர் செல்வராஜனும் தான் தணியாத தாகத்தில் தொடக்கத்தில் வரும் "அத்தானே அத்தானே..எந்தன் ஆசை அத்தானே..கேள்வி ஒன்று கேக்கலாமா உனைத்தானே" பாடலை பாடுபவர்கள்.

:D

Edited by Ponniyinselvan

செல்வராஜன், மற்றும் கமலினி செல்வராஜன் இணைந்து நட்டித்த லிப்ரன் தேயிலை விளம்பரம் மட்டும் இன்னும் மனதில் நிக்கிறது. கமலினி செல்வராஜனின் குரல் மனதில் நிற்பது போல் செல்வராஜனின் குரல் நினைவில் இல்லை.

உங்கள் இணைப்புக்கு நன்றி

"துப்பறியும் லாவொஜி" என்பதா அதன் பெயர்?

:D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுகின்ற மு.கணபதிப்பிள்ளையைத் தானா, பண்டிதமணி கணபதிப்பிள்ளை என்பார்கள்???

கமலினி சிறிலங்கா அரச தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் இப்போதும் பங்காற்றுகின்றார் என நினைக்கின்றேன்.

நன்றி தூயவன்.. கமலினி அவரது மனைவிதான். தமிழ் புலமைமிக்க புலோலி மு. கணபதிபிள்ளையின் மகள். இவர்களது மகனின் பெயர் அதிசயன். இவர் விளம்பர நிலையம் நடத்துவது தெரியாது. கமலினியும் சில்லையூர் செல்வராஜனும் தான் தணியாத தாகத்தில் தொடக்கத்தில் வரும் "அத்தானே அத்தானே..எந்தன் ஆசை அத்தானே..கேள்வி ஒன்று கேக்கலாமா உனைத்தானே" பாடலை பாடுபவர்கள்.

:D

என்னா பொன்னி சார்.. அவங்க சில்லையூர் சாருங்கோட செக்கன்ட் வைப் இல்லிங்களா :D

  • தொடங்கியவர்

நீங்கள் சொல்லுகின்ற மு.கணபதிப்பிள்ளையைத் தானா, பண்டிதமணி கணபதிப்பிள்ளை என்பார்கள்???

கமலினி சிறிலங்கா அரச தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் இப்போதும் பங்காற்றுகின்றார் என நினைக்கின்றேன்.

நன்றி தூயவன்.. தமிழ் இலக்கியகாரர்கள் மூவர் - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, மு. கணபதிப்பிள்ளை. - மூன்றாமவர் மகள்தான் கமலினி. மு.கணபதிப்பிள்ளை - அன்னைதயை, தமிழன் எங்கே, ஈழநாட்டு தமிழ் சுடர்மணிகள் போன்ற நூல்களை எழுதியவர்.

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்லுகின்ற மு.கணபதிப்பிள்ளையைத் தானா, பண்டிதமணி கணபதிப்பிள்ளை என்பார்கள்???

கமலினி சிறிலங்கா அரச தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் இப்போதும் பங்காற்றுகின்றார் என நினைக்கின்றேன்.

தற்போது திருமதி கமலினி இலங்கை ஒளிப்பு மறைப்பு கூட்டுத்தாபனத்தில் இல்லை. அவர் சுயாதீன மொழிபெயர்ப்பாளராக ஒரு அரசசார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

பண்டிதமணி அல்ல இவர் புலோலியைச் சேர்ந்தவர் இவரும் ஒரு கவிஞர்தான்

சில்லையூராரின் ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு

சட்ட விரோதம்

ஆண்டிடுவோர் செய்கை இது

விந்தை விந்தை

அச்செய்கைத் தன்மையினை

என்னென் போம் நாம்!

மாண்டிடுவார் அனேகர் கத்தி

முனையில் என்று

மழுங்கு முனைச் சிறு கத்தி

யில்லா தொன்றைத்

தீண்டவுமே கூடாதெனச்

சட்டஞ் செய்தார்

தீங்கொழிந்த தென; அந்தோ

சட்டம் மீறி

நீண்டவொரு கத்தி தனை

நிமிர ஏந்தி

நெடுந்தடியில் கொலைச் சிங்கம்

பறக்கலாமோ ?

தான் தோன்றிக்கவிராயர் சில்லையூர் செல்வராஜன் (ஈழம்) 1951ல் சுதந்திரன் பத்திரிகையில் எழுதியது.

இன்று யாழ்களத்தில் வெளி வந்துள்ள முனாவின் கருத்துப்படத்திற்கு பொருத்தமான இந்தக் கவிதையை சில்லையூர் செல்வராஜன் 1951ல் எழுதியிருக்கிறார். பாருங்களேன்

நன்றி வந்தியத்தேவன்

:D

  • தொடங்கியவர்

தணியாத தாகம் வானொலித்தொடர் யாராவது கேட்டிருக்கிறீர்களா ? உங்களுக்கு பிடித்த அம்சத்தை சொல்லுங்கள்.

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தணியாத தாகம்"நாடகத்தை தொடர்ந்து கேட்டிருக்கிறேன்.பலரை கண்கலங்க வைத்த தொடர் நாடகம். பல வருடங்கள் சென்று விட்டதால் பலவற்றை நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. :rolleyes: எனினும் "அத்தானே அத்தானே எந்தனாசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா" என்ற விளம்பரப்பாடல் இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது.

  • தொடங்கியவர்

"தணியாத தாகம்"நாடகத்தை தொடர்ந்து கேட்டிருக்கிறேன்.பலரை கண்கலங்க வைத்த தொடர் நாடகம். பல வருடங்கள் சென்று விட்டதால் பலவற்றை நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. :) எனினும் "அத்தானே அத்தானே எந்தனாசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா" என்ற விளம்பரப்பாடல் இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது.

நன்றி குமாரசாமி அவர்களே.. இதுதான் சுருக்கமான கதை. ஒரு ஏழைக்குடும்பத்தின் மூத்தமகன் சோமு. இரண்டு தங்கைகள் யோகம், கமலி . அடுத்தவீட்டில் இருக்கும் செல்லாச்சி மாமியின் மகன் குமாரை யோகம் விரும்புகிறாள். அவனும் அப்படியே விரும்புகிறான்.. அண்ணன் சோமு செல்லாச்சி மாமி கேட்கும் சீதனம் தேடப்புறப்பட, தன்னால்தானே தன் குடும்பத்துக்கு இத்தனை தொல்லை நேர்ந்தது என்று யோகம் தற்கொலை செய்து கொள்கிறாள்.

அவளது இறுதி ஊர்வலம் போகின்ற கட்டத்தில் நாடு முழுவதுமுள்ள நேயர்கள் அழுதார்கள்.

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தணியாத தாகம் வானொலித்தொடர் யாராவது கேட்டிருக்கிறீர்களா ? உங்களுக்கு பிடித்த அம்சத்தை சொல்லுங்கள்.

:)

அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமே உனை தானே திருமணம் எப்போது ஆகும்............

மக்கள் வங்கியில் கடன் எடுப்பதிற்காக செய்யபட்ட விளம்பரம் என்று நினைக்கிறேன்,கமலினி செல்வராஜா தற்போது ரூபாவாகினியில் செய்திகள் வாசிக்கிறா போல இருக்கு.

புத்தன் சொன்ன மாதிரி கால ஓட்ட காரணமாக தணியாத தாகம் பற்றிய விபரங்கள் மறந்து விட்டது. அத்தானே அத்தானே என்ற மக்கள் வங்கி பாடல் ஒன்றை தவிர. ஆனால் நல்லதொரு நாடகம் . நல்லதொரு திரைகதை அமைக்க கூடிய நாடகம் என்பது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

இந்த நாடகம் மற்றும் அந்த கால வானொலி நிகழ்ச்சிகள் போன்றவற்றை இன்றைய இணைய ஊடக வசதிகளின் மூலம் சம்பந்த பட்டவர்கள் கொணர்ந்தார்கள் என்றால் நாங்கள் மட்டுமல்ல இளைய தலைமுறையும் நிச்சயம் விரும்பி ரசிக்கும் எனது நம்பிக்கை.

இந்த கசட்டுக்கள் வைத்திருப்பவர்கள் copy right பிரச்சனைகளால் இணையத்தில் ப்ளாக்கில் போட யோசிக்கிறார்களோ தெரியாது.

வணிக நோக்கம் இல்லாமல்ல் பதிவு இணயம் வைத்திருப்பவர்கள் இவற்றை வெளியிட்டால் பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன்

பொன்னு அவர்கள் யாழ் இணைய உரையாலில் தனக்கு பல வானொலி கலைஞர்களை தெரியும் என்று கூறியதாக ஞாபகம். இதற்கான முயற்சியை அவர் செய்வாரென நம்புகிறோம்

ஆமாம் புத்தன்.. அதுதான் பாடல். மக்கள் வங்கி ஞாயிற்றுக்கிழமைகளில் 4.30க்கு வழங்கிய நிகழ்ச்சி. கமலினி பற்றிய விபரங்கள் தெரியாது. சில்லையூர் 1995ல் இறந்து விட்டார்.

:)

  • தொடங்கியவர்

புத்தன் சொன்ன மாதிரி கால ஓட்ட காரணமாக தணியாத தாகம் பற்றிய விபரங்கள் மறந்து விட்டது. அத்தானே அத்தானே என்ற மக்கள் வங்கி பாடல் ஒன்றை தவிர. ஆனால் நல்லதொரு நாடகம் . நல்லதொரு திரைகதை அமைக்க கூடிய நாடகம் என்பது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

இந்த நாடகம் மற்றும் அந்த கால வானொலி நிகழ்ச்சிகள் போன்றவற்றை இன்றைய இணைய ஊடக வசதிகளின் மூலம் சம்பந்த பட்டவர்கள் கொணர்ந்தார்கள் என்றால் நாங்கள் மட்டுமல்ல இளைய தலைமுறையும் நிச்சயம் விரும்பி ரசிக்கும் எனது நம்பிக்கை.

இந்த கசட்டுக்கள் வைத்திருப்பவர்கள் copy right பிரச்சனைகளால் இணையத்தில் ப்ளாக்கில் போட யோசிக்கிறார்களோ தெரியாது.

வணிக நோக்கம் இல்லாமல்ல் பதிவு இணயம் வைத்திருப்பவர்கள் இவற்றை வெளியிட்டால் பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன்

பொன்னு அவர்கள் யாழ் இணைய உரையாலில் தனக்கு பல வானொலி கலைஞர்களை தெரியும் என்று கூறியதாக ஞாபகம். இதற்கான முயற்சியை அவர் செய்வாரென நம்புகிறோம்

ஆமாம். இந்த வானொலி நாடகத்தை திரைப்படமாக்க மெய்கண்டான் (கலண்டர்) நிறுவனத்தின் அதிபர் விரும்பினார். சம்பந்தப்பட்டவர்கள் ஏனோ மறுத்து விட்டார்கள். ஒன்று தெரியுமா.. இலங்கை வானொலிக்காரர் தணியாத தாகம் ஒலிப்பதிவு நாடாக்களை அழித்து விட்டார்கள். வெளியில் யாராவது ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தால் இருக்கலாம். . அவர்கள் முன்வருவார்களா?

புகழ்பெற்ற வேறு வானொலி நாடகங்களை வெகுவிரைவில் இணைக்கிறேன். உங்கள் அக்கறைக்கு நன்றி

:)

  • கருத்துக்கள உறவுகள்

சில்லையூர் செல்வராஜன் தனது வானொலி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அவர் கூறும் வசனம் "சில்லையூர் செல்வராஜனின் தோழமை உள்ள வணக்கங்கள்" இன்னும் காதில் கேட்கிறது.

  • தொடங்கியவர்

சில்லையூர் செல்வராஜன் தனது வானொலி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அவர் கூறும் வசனம் "சில்லையூர் செல்வராஜனின் தோழமை உள்ள வணக்கங்கள்" இன்னும் காதில் கேட்கிறது.

ஆமாம் புத்தன் .. கவிஞனுக்குரிய மிடுக்குடன் சொல்லும் அந்த வார்த்தைகள் எனக்கும் கேட்கிற மாதிரி இருக்கிறது. அவர் எழுதிய "உப்பு" பற்றிய கவிதையை யாராவது தருவீர்களா? அழகான கவிதை.

<_<

  • தொடங்கியவர்

ஆமாம் புத்தன் .. கவிஞனுக்குரிய மிடுக்குடன் சொல்லும் அந்த வார்த்தைகள் எனக்கும் கேட்கிற மாதிரி இருக்கிறது. அவர் எழுதிய "உப்பு" பற்றிய கவிதையை யாராவது தருவீர்களா? அழகான கவிதை.

<_<

"உப்பு" பற்றிய அந்த கவிதையை சகோதரி கமலினி செல்வராஜன் எனக்கு இப்போது அனுப்பி வைத்திருக்கிறார். அவருக்கு நன்றி.

இதுதான் சில்லையூர் செல்வராஜனின் அந்தக்கவிதை -

சங்கு, முத்து, ஓர்க்கோலையுடன் சார் பவளம் ஈவதனாற்

பொங்கு கடலே உன்னைப் போற்றேன் நான் - பங்கமுறும்

நாழி உணவாளிகட்கும் நல்குகிற உப்புக்காய்

வாழியென வாரிதி ! என் வாழ்த்து.

கடல் தருகின்ற பெறுமதி வாய்ந்த முத்து, பவளம், அம்பர் (Amber), சங்கு போன்றவற்றுக்காக கடலே உன்னை நான் போற்ற மாட்டேன். ஏழையின் அன்றாட உணவுக்கும் சுவை தரும் உப்புக்காக உன்னை வாழ்த்துகிறேன்.

ஒர்க்கோலை = amber

கவிஞனின் நல்லெண்ணத்தை பாருங்கள்.

:lol:

Edited by Ponniyinselvan

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக் கட்டுரை இணைத்தமைக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்

இக் கட்டுரை இணைத்தமைக்கு நன்றிகள்.

மறைந்து போன எம் கலைஞர்களை இளைய தலைமுறையிடம் திணிப்பதாகவும் சொல்லப்படும் இந்த வேளையில் உங்கள் பின்னூட்டம் தெம்பு தருகிறது. நன்றிகள்.

:huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.