Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எத்தனை காலந்தான் மகிந்தரின் வீராப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்இணைய செய்தி ஆய்வு

எத்தனை காலந்தான் மகிந்தரின் வீராப்பு?

தென் தமிழீழத்தில் மட்டக்களப்பை முற்றாக கைபற்றி விட்டதாக சிங்கள இனவாதிகள் ஏதோ ஒரு நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த மாதிரி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்பினால் எமது தமிழீழ மக்கள் அகதிகளாக தங்கள் சொத்துக்கள், வதிவிடங்கள் அத்தனையையும் இழந்து, இன்று அரைவயிறு உணவுடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் வேளையில், மகிந்தாவின் அரசு பசுமைப்புரட்சி செய்வதாகக் கூறிக்கொண்டு தென்தமிழீழத்தில் சிங்கள குடியேற்றத்தின் மூலம் தனது கைங்கரித்தைக் காட்ட முனைகின்றார். இது போன்றவை காலங்காலமாக ஒவ்வொரு சிங்கள அரசாங்கங்களும் நடைமுறை படுத்திக் கொண்டிருக்கின்றது.

இப்படி வீராப்பு பேசும் மகிந்தர் சிங்கள இராணுவம் வீரம் மிக்கவர்கள், நெஞ்சுரம் கொண்டவர்கள் என்று கூறிக் கொள்ளும் ராஜபக்ச சகோதர்கள் (ராஜபக்ச அன்ட் கோ) மார்பு தட்டிக்கொண்டிருக்கும் வேளையில், ஐக்கிய தேசியக் கட்சி ரணில் தலைமையில் இருப்பவர்கள் தாம் தாம் விடுதலைப்புலிகளை சிதற அடித்த படியால் தான் மட்டக்களப்பு இன்று தம்வசம் வந்தது என்று சொல்லி அவர்களும் தம்பட்டம் அடிக்கின்றார்கள்.

இவை எத்தனை காலம் தாக்கும் பிடிக்கும்? விரைவில் எமது தமிழீழ விடுதலைப்புலிகள் இதற்கான தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

எமது புலம் பெயர்ந்த மக்களும் மனந் தளராது எமது தலைவருக்கு உறுதுணையாக நின்று தங்கள் முழு பங்களிப்பையும் செய்வார்கள், செய்து கொண்டும் இருப்பார்கள்.

நாலா பக்கமும் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆயுதக் கொள்வனவு செய்து கொண்டும் அத்தோடு வெளிநாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு, நிதி உதவிகளையும்,போர் பயிற்சிகளையும் கொடுப்பதிலும் மும்மும்முரமாக இருக்கின்றார்கள். உண்மையிலேயே சிங்கள இராணுவம் வீரம் மிக்க இராணுவமாக இருந்திருந்தால், ஸ்ரீலங்கா அரசாங்கம் வேறுநாடுகளின் உதவியை பெறாமல் எமது தமிழர்களாகிய தழிழீழ விடுதலைப்புலிகளோடு நேருக்கு நேர் போர் புரிந்திருந்தால் அவர்களுடைய வீரம் எப்படி என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பல நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் சவப்பெட்டிகள் கொழும்பை நோக்கி சென்றடைந்திருக்கும்

அப்படியிருந்தும் சிங்கள இராணுவத்துக்கு எல்லாவிதமான உதவிகளும் கிடைக்கப்பெற்றும், தமிழீழ விடுதலைப்புலிகளுடன் போர்புரிவதற்கு லாயக்கு அற்றவர்கள்.

இதே வேளையில் இவர்கள் இலங்கை இந்திய கடற்படை கூட்டு ஒப்பந்தம் மூலம் எமது தமிழீழத்தில் உள்ள தமிழர்களை அடக்கி ஆள்வதற்கு எத்தனித்து கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம்.

இதை எதிர்த்து தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள் இந்திய மத்திய அரசாங்கத்தை நேரடியாக கண்டித்தும், அதை அசட்டை செய்யாத மத்திய அரசாங்கமும், தமிழ்நாட்டிலுள்ள ஆளுங்கட்சியும் மத்திய அரசாங்கத்துக்கு ஊதுகுழல்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஓருசில செய்திகளின்படி இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சி வலைகளில் சிக்கி இருக்கின்றார்கள் எனறு கூறப்படுகின்றது. ஆனால் இது உண்மையல்ல. அவர்கள் சூழ்ச்சி வலையில் சிக்குண்டதாக நான் கருதவில்லை ஏன்என்றால் இந்திய அரசாங்கம் பல தசாப்தங்களாக இலங்கை அரசாங்கத்துக்கு உறுதுணையாகவும் இனப்பிரச்சனையை தீர்ப்பதில் அக்கரை காட்டவில்லை. தங்களுடைய பிராந்திய நலனுக்காக ஒற்றையாட்சியின் கீழ் நடத்தப்பட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். இதை ஆராய்ந்து பார்ப்போமானால் ராஜீவ் காந்தி ஜெயவர்தனா கூட்டு ஒப்பந்தம் தெளிவாகப் புரிகிறது.

இந்தியா ஒருபோதும் ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்காது. எப்படியும் விடுதலைப்புலிகளின் பலத்தை முறியடிக்கவே அரசாங்கத்துடன் கூட்டு சேர்வார்களே ஒழிய தழிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு முட்டுக்கட்டையாகவே இருப்பார்கள் இது திண்ணம்.

இத்தனை சூழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலும், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் தமிழீழத்தில் நடக்கும் கடத்தல்கள், கொலைகள் இராணுவத்தினராலும், குழுக்களாலும் நடைபெற்று வருகிறது. என்று அரசாங்கத்துக்கு சுட்டிக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த கண்காணிப்புக் குழுவும் அறிக்கை விடுவதிலேயே தான் குறியாக இருக்கின்றார்கள். கண்காணிப்புக் குழு ஏன் இன்னும் ஸ்ரீலங்காவில் குந்துரைந்து கொண்டிருப்பது என்று புரியவில்லை

எந்த ஒரு நாடும் எமது இனப்பிரச்சனைக்கு சுயாட்சி தீர்வு காண முன்வர மாட்டார்கள். தற்போதைய மகிந்தாவின் செய்தியின்படி வடக்கில் போர் புரிவதை நிறுத்தி, கிழக்கே கைபற்றியதை வைத்துக்கொண்டு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிப்பதாக தெரிய வருகின்றது.

இதனால் இனப் பிரச்சனை என்ற தீர்வில் ஆகக் குறைந்த பட்ச தீர்வுத் திட்டத்தை முன் வைத்து விடுதலைப்புலிகளை பேச்சு வார்த்தை மேசைக்கு முன்வர எத்தனிக்கக் கூடும். இதனை மேற்குலக நாடுகளும் அரசாங்கத்துக்கு சார்பாக இணைந்து ஜால்ரா போடுவார்கள்.

இதை காலங்காலமாக அறிந்து வருகிறோம். இதற்கு ஒரே வழி தமிழ் மக்களாகிய நாம் விடுதலைப் புலிகளுடன் இணைந்து தனிநாட்டுக்கான பிரகடனத்தை புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் ஜனநாயக முறையில் பேரணிகள் மூலமாகவும் மேற்குலக நாடுகளுக்கு மீண்டும் மீண்டும் வலி உணர்த்த வேண்டும்.

இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது, வடமகாணம் முழுவதையும் எமது விடுதலைப்புலிகள் கைபற்றுவதன் மூலம் மைந்தரின் முகத்திரை கிழித்தெறியப்படும்.

வெகுவிரைவில் சாத்தியப்படும்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழீழம்!

Edited by கறுப்பி

நல்ல செய்தி ஆய்வு கறுப்பி அக்கா வாழ்த்துகள் இப்படி ஒவ்வொரு வாராவாரமும் ஒவ்வருவர் எழுதுவோம் எம் களத்தின் தனித்தன்மையை இப்படியான நகர்வுகள் தக்கவைக்கும்

எந்த ஒரு நாடும் எமது இனப்பிரச்சனைக்கு சுயாட்சி தீர்வு காண முன்வர மாட்டார்கள். தற்போதைய மகிந்தாவின் செய்தியின்படி வடக்கில் போர் புரிவதை நிறுத்திஇ கிழக்கே கைபற்றியதை வைத்துக்கொண்டு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிப்பதாக தெரிய வருகின்றது.

இதனால் இனப் பிரச்சனை என்ற தீர்வில் ஆகக் குறைந்த பட்ச தீர்வுத் திட்டத்தை முன் வைத்து விடுதலைப்புலிகளை பேச்சு வார்த்தை மேசைக்கு முன்வர எத்தனிக்கக் கூடும். இதனை மேற்குலக நாடுகளும் அரசாங்கத்துக்கு சார்பாக இணைந்து ஜால்ரா போடுவார்கள்.

இதை காலங்காலமாக அறிந்து வருகிறோம். இதற்கு ஒரே வழி தமிழ் மக்களாகிய நாம் விடுதலைப் புலிகளுடன் இணைந்து தனிநாட்டுக்கான பிரகடனத்தை புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் ஜனநாயக முறையில் பேரணிகள் மூலமாகவும் மேற்குலக நாடுகளுக்கு மீண்டும் மீண்டும் வலி உணர்த்த வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------

தற்போதைய சூழ்நிலையையும் செய்ய வேண்டிய கடமைகளையும் விபரித்திருக்கின்றீர்கள். இவ்வாறான பின்னணியில் தொடர்ந்தும் எழுதுங்கள்.

Edited by sukan

கறுப்பியின் இரண்டாவது அரசியல் ஆய்விற்கு எனது பாராட்டுக்கள்.

ஆனால் இதிலுள்ள ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தியா தொடர்பான விடயங்களை நாங்கள் கவனமாக அணுக வேண்டும் என்பது எனது கருத்து. இந்தியாவின் ஆதரவுடன் தான் தமிழீழம் அமைய முடியும். தமிழ்நாட்டில் எமக்கு குறிப்பிட்ட அளவு ஆதரவு இருந்தாலும், இந்திய அரசியலில் ஈழத்தமிழருக்கு ஆதரவு ஏற்பட வேண்டும். அதுவரை போராடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ம் நல்லதொரு ஆய்வுக்கட்டுரை கறுப்பி.

தென் தமீழத்தில் தந்திரோபாயப் பின்வாங்கலாக தமிழர் தரப்புப் பலத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தாலும், 2 இலட்சம் சிங்கள இராணுவத்தினரோடு போராட எம் மனித வளமும், பொருளாதார வளமும் நிச்சயம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து சமதரப்பாகவோ, பின்வாங்கலையோ செய்து கொண்டிருந்தால் போராட்டத்தின் காலம் இழுபட்டுச் செல்வதைத் தவிர்க்க முடியாது.

இறுதிப் போருக்கு விரைவுபடுத்த வேண்டுமானால் நாமும் அதற்குத் தயார் ஆகவேண்டும்.

அதையும் விட, பயங்கரவாதம் என்ற முத்திரையை அகற்ற வேண்டுமனால், அதற்குப் புலத்தமிழர்களின் பலத்தை சர்வதேசத்தில் நிருபிக்க வேண்டும். மற்றய அமைப்புக்களை ஒடுக்கிய சர்வதேசம், புலிகள் மீது அவ்வளவு கடுமைப் போக்குக்காட்டாமைக்குக் காரணம், புலத்தமிழர்களின் ஒன்றுபட்ட தமிழீழ ஆதரவும், ஆர்ப்பாட்டம், ஒன்றுகூடலும் ஒரு முக்கிய காரணம். துரோகக்கும்பல்களும், சிங்கள ஆதரவாளர்களும் புலத்தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தைக் குலைக்க முனைவதன் மறைமுக நோக்கமும் அதுவே தான். தமீழீழம் மீதான சர்வதேசத்தில் ஒலிக்கும் குரலை இல்லாது செய்வதன் மூலம், புலிகளையோ, போராட்டத்தையோ நசுக்கலாம் எனச் சிந்திக்கின்றார்கள். இதைப் புரிந்து கொண்டு எதிரிகளின் சூழ்ச்சிக்குள் அடங்காமல் இருப்பதே முக்கியமானது.

எனவே அதைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கும், உலகநாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும், நிச்சயம் எம் குரலை அதிகளவில் வெளிப்படுத்த வேண்டும். தமிழீழத்தை அங்கிகரிக்க வைப்பதற்கான தயார்படுத்தலாக அது அமையவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பியின் இரண்டாவது அரசியல் ஆய்விற்கு எனது பாராட்டுக்கள்.

ஆனால் இதிலுள்ள ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தியா தொடர்பான விடயங்களை நாங்கள் கவனமாக அணுக வேண்டும் என்பது எனது கருத்து. இந்தியாவின் ஆதரவுடன் தான் தமிழீழம் அமைய முடியும். தமிழ்நாட்டில் எமக்கு குறிப்பிட்ட அளவு ஆதரவு இருந்தாலும், இந்திய அரசியலில் ஈழத்தமிழருக்கு ஆதரவு ஏற்பட வேண்டும். அதுவரை போராடுவோம்.

இது எந்த அடிப்படையிலான கருத்து என விளங்கவில்லை எனக்கு. எட்டி நின்று பார்த்த காலம் போய் இந்தியா கூட நின்று எங்களுக்குக் குழி பறிக்கிற காலம் இது. இனி இந்தியா தமிழீழம் மலர உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது கனவு காண மட்டும் தான் பொருந்தும் என நான் நினைக்கிறேன். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்திய ஒருமைப் பாடு என்ற போர்வையினால் போர்த்தப் பட்ட பிரிவினைப் பயத்தினால் ஆளப் படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியோடு இணைந்ததாக அதன் சமுதாய அரசியல் வளர்ச்சி இல்லை.இந்த வளர்ச்சி வேகத்தில் சிறுபான்மை உரிமைகள் பற்றிப் பாரதத்தின் மனம் மாற இன்னும் ஐம்பது ஆண்டுகளாவது எடுக்கும். நான் நினைக்கிறேன் இனி நாம் இந்தியாவைத் தலையில் தூக்கி வைத்து அதற்கு இன்னும் இறுமாப்பேற்றுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மோதலும் வேண்டாம் காதலும் வேண்டாம் இந்தியாவுடன். ஆனால் இந்தியாவை விட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிகம் மனித விழுமியங்கள் மனித உரிமை போன்றவற்றைத் தழுவியதாக தமது வெளியுறவுக் கொள்கைகளை வகுக்கின்றன. அந்த நாடுகளுடன் நல்லுறவுகளைக் கடியெழுப்புவதில் தான் எமது அரசியல் வெற்றி தங்கியிருக்கிறது நீண்ட காலப் போக்கில்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து வருட யுத்த தயார்படுத்தல்களுடன் இருந்தும் இன்னமும் வலிந்த தாக்குதல்களை நடாத்திப் பிரதேசங்கள் எதனையும் தமிழர் படைகளாகிய புலிகள் கைப்பற்றவில்லையே என்ற ஆதங்கத்திலும், பிரதேசங்களைக் கைப்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையிலும் எழுதப்பட்டுள்ளது. எனினும் சாதகமற்றதாக மாறிவரும் சர்வதேசச் சூழலில் நமது போராட்டத்திற்கான ஆதரவு சக்திகளைத் திரட்டுவது தமிழர் கைகளிலேயே உள்ளது என்ற செய்தி எல்லோருக்கும் புரியவேண்டும். ஆர்ப்பாட்டங்கள், தமிழர்களை மட்டும் நோக்கிய ஒன்றுகூடல்கள், தமிழர்களை ஓர் அணியில் பலமுள்ளவர்களாகக் காட்டினாலும், இதனையும் விஞ்சி பிற நாடுகளின்/தரப்புக்களின் (குறிப்பாக தமிழக மக்களின்) ஆதரவு முழுமையாகத் திரட்டப்பட்டால்தான் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய சாத்தியம் உருவாகும்.

பிரதேசங்கள்மாறி மாறி கைக்குள் வருவதும் விடுபட்டுப் போவதும் தொடர்ந்தால் அரசியல் ரீதியில் முன்னேற்றம் கிட்டாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாய்ச் சொல்லில் வீரரடி என்ற பெயர் வராமல் இருந்தாலே போதும்.

இது எந்த அடிப்படையிலான கருத்து என விளங்கவில்லை எனக்கு.

விடுதலைப் புலிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவைப் புறக்கணித்தது கிடையாது. தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதியான கருத்துக்களும் அதையே எடுத்துக் காட்டுகின்றது.

ஆனையிறவைக் கைப்பற்றிய புலிகள் யாழ்ப்பாண நுளைவாயில்வரை சென்று, மேலும் முன்னேறாது, போர் நடவடிக்கைகளை நிறுத்தியது ஏன் என்பது பற்றி நாம் ஊகித்துக் கொள்லலாம். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியபோது உதவிக்கு வராத இந்தியா, நாற்பதாயிரம் சிங்கள இராணுவத்தினரை பாதுகாப்பாக வெளியேற்ற ஓட்டோடி வந்ததை மறந்துவிடக் கூடாது.

நோர்வே உட்பட எந்தவொரு பலமான நட்பு நாடுகளுமின்றி தமிழீழம் உதயமாவதை சிந்தித்துப் பார்ப்பது கடினம். தமிழீழம் தனிநாடாகப் பிரகடனம் செய்யப்பட்டால், இந்தியாவின் மறைமுக ஆதரவுகூட இல்லாத நிலையில், சிங்கள அரசினால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தடையை சமாளிப்பது சுலபமான காரியமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஆதரவு முக்கியம் என்றாலும், தற்பொழுது நாராயணன் போன்றவர்களின் ஆலோசனையில் இருக்கும் மன்மோகன் அரசினால், எமக்கு ஆதரவு கிடைக்குமா? அல்லது இந்தியாவில் எமக்கு ஆதரவான(????) ஆட்சி மாற்றம் வரும் வரை பொருத்திருக்க வேண்டுமா?.

எமது போராட்ட வரலாற்றில் இந்தியா எமக்கு இழைத்த கொடுமைகளே அதிகம். அதைப் புரிந்து கொள்ளாமல் இன்னமும் இந்தியா எமக்கு உதவும் உதவ வேண்டும் என்று எதிர்;பார்பது இலவு காத்த கிளியின் கதைதான். நாம் அனைத்து தமிழரும் ஒன்று சேர்ந்து எம் படைபலத்தையும் தலைவனின் கரத்தையும் பலப்படுத்துவோம். அதனால் நாம் பெறும் வெற்றிகள் ஒரு வேளை இந்திய அரசின் கவனத்தை எம் பக்கம் திருப்பக் கூடும். இந்திய அரசை குறை சொல்லி என்ன பயன்? தமிழகத்தில் இருக்கும் பல தமழிழ அரசியல் வாதிகளுக்கோ தமிழர்களுக்கோ எமது போராட்டம் எதற்கு எதைப்பற்றியது என்பதை அறியாத போது அவர்களை குறை சொல்லிப் பயனில்லை. முதலில் நாம் ஒன்று சேர்ந்து எமது இலட்சியங்களை வெல்ல முயல்வோம். அதன் பின் அவர்கள் தமது கொள்கைகளை தாமாக மாற்றிக் கொள்ள முன் வருவார்கள் என எதிhபார்கலாம்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசித்து கருத்துக்கள் முன்வைத்த அனைவருக்கும் நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.