Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி

Featured Replies

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்.

இதில் 2-வதாக உள்ள வழக்கு இருதய நோய்களுக்கு அப்படியே பொருந்தும். ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் சொல்கிறhர் கள். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய வியாதிகளால் உயிhpழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் ஆகும். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிhpழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது. அதாவது 2 மடங்கு அதிகமாக...

சரி, கோபம் கொள்வதால் மாரடைப்பு எப்படி வருகிறது தெரியுமா?

கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். பிறகென்ன மாரடைப்பு தான். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை எரிப்பதற்கு முன் நீங்கள் அதை எரித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சுழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை மற்றும் பதிலி செய்கைகள் காரணமாக உண்டாகிறது. கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறhன். இதனால் தான் கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் விர்ரென அதிகாpத்தல்; எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

நீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றெhன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.

கோபத்தை குறைக்க 16 வழிகள் இதோ-

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.

7. மதம் சம்பந்தான பிடித்தமான ஸ்லோகன்களை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.

8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்

9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.

11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

13. கவனத்தை இசையில் திருப்புங்கள்.

14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.

15. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.

16. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P இதோ பருங்க ஜம்மு தனக்கு தானே அட்வைஸ் பண்ணிக்கிறாங்க :P

  • தொடங்கியவர்

:P இதோ பருங்க ஜம்மு தனக்கு தானே அட்வைஸ் பண்ணிக்கிறாங்க :P

ஓ பேபி வந்து உங்கள் மாதிரி ஆட்களிற்கு சொல்லி தாரோம் பாருங்கோ.............பிறகு இதை சொல்லிட்டேன் என்று கோவபடுறதில்லை................ :P

எனக்கு ரொம்ப ரொம்ப கெட்ட கோவம் வரும், இதெல்லாம் தாங்காது நமக்கு :)

  • தொடங்கியவர்

எனக்கு ரொம்ப ரொம்ப கெட்ட கோவம் வரும், இதெல்லாம் தாங்காது நமக்கு :)

கோபத்தில நல்ல கோபம்............கெட்ட கோபம் என்று வேற இருக்கோ.................... :P

பந்தி பந்தியா எழுதியே நம்ம கோபத்தை கிளறுறீங்க :angry: ..சுருக்கமா எழுதினா என்னவாம்? ;)

அன்புள்ள யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் அறிவது,

இது உங்கள் சொந்த ஆக்கமா அல்லது எங்காவது சுட்டதா?

சொந்த ஆக்கமாய் இருந்தால் குருநாதாதனின் பாராட்டுக்கள், இணையத்தில் சுட்டதாய் இருந்தால் இது போல நீங்களும் விரைவில் எழுத குருநாதனின் ஆசீர்வாதங்கள்..

கோபம் பற்றி எனது சில எண்ணங்கள்...

கோபப்பட்டு இருக்கும் சந்தர்ப்பங்களில் நாங்கள் முக்கியமாக சிந்தித்து எடுக்கவேண்டிய முடிவுகளை எடுக்கும்போது, அவை பல தடவைகளில் தவறான முடிவுகளாக அமைந்துவிடுகின்றன. ஏனெனில், கோபப்பட்டு உள்ள நிலையில் எம்மால் சரியாக சிந்திக்க முடியாது இருக்கின்றது.

அதிகளவில் உணர்ச்சி வசப்பட்டு கோபப்படும் சிலருக்கு மூளையில் இரத்தக்குழாய் வெடிப்பு - Brain Stroke வருவதாய் அறிந்துள்ளேன்.

கோபம் எமக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் எமது மனதில் உள்ள எதிர்பார்புக்களை அல்லது சமநிலையை சிதைக்கப்படுதலை தூண்டும் சம்பவங்களை அல்லது எண்ணங்களை நாங்கள் எதிர்கொள்ளல்.

எனவே கோபம் ஏற்படுதலை பிழை என்று கூட கூறமுடியாது. ஒருவன் அக்கிரமம் செய்யும்போது எமக்கு அவன் மீது கோபம் வருகின்றது. நாங்கள் பிழைவிடும்போது எமக்கே எம்மில் கோபம் வருகின்றது. நியாயபூர்வமான கோபங்களை அடக்கவேண்டும் என்று இல்லை. அவற்றை சரியான முறையில் பிரயோகித்து பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாம்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை.

ஆனால் கோபம் வந்தவுடன் என்ன செய்யிறது எண்டதையே மறந்து விடுறேன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் கோபம் வருகுது. நமக்கு வருகுதே இல்லையே. எல்லாரும் நம் கூட அநாவசியமாக எல்லாம் கோவிக்கிறாங்க.. நம்மால அவங்க கூட பதிலுக்கு கோவிக்க முடியல்லையே. கோவம் எப்படி உருவாக்கிறது என்று சொல்லுங்களன். அதுவும் கண் மண் தெரியாமல் வரனும் கோவம்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

கோபத்தை கட்டுபடுத்த யாழிற்கு வந்து புத்தனின் கோசிப்பை வாசித்து விட்டு போனீங்க என்றா சரி. :P

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.

ஹீஹீ

  • தொடங்கியவர்

பந்தி பந்தியா எழுதியே நம்ம கோபத்தை கிளறுறீங்க :angry: ..சுருக்கமா எழுதினா என்னவாம்? ;)

நாமளோ எழுதினோம் எழுதினவனை கேட்கவேண்டும் குட்டிமாமா.................. :P

  • தொடங்கியவர்

மிச்ச எல்லாருக்கும் நாளை விடை எழுதுறேன் நித்தா வருது இப்ப............ :P

  • தொடங்கியவர்

நல்ல கட்டுரை.ஆனால் கோபம் வந்தவுடன் என்ன செய்யிறது எண்டதையே மறந்து விடுறேன்

கோவத்தையே மறந்துவிட்டீங்க என்றா ஒரு பிரச்சினையும் இல்லை கறுப்பி அக்கா........... :rolleyes:

எல்லாருக்கும் கோபம் வருகுது. நமக்கு வருகுதே இல்லையே. எல்லாரும் நம் கூட அநாவசியமாக எல்லாம் கோவிக்கிறாங்க.. நம்மால அவங்க கூட பதிலுக்கு கோவிக்க முடியல்லையே. கோவம் எப்படி உருவாக்கிறது என்று சொல்லுங்களன். அதுவும் கண் மண் தெரியாமல் வரனும் கோவம்..! :lol:

தாத்தா...........தாத்தா உங்களுக்கு கோபமே வராதா ரொம்ப நல்லவரா இருகிறீங்க இந்த உலகத்தில இப்படி இருந்தா உங்களை வாழவே விடமாட்டாங்களே..............கோபம் வாரது என்றா உடனே கல்யாணம் ஒன்றே கட்டுங்கோ இல்லாட்டி காதலியுங்கோ பிறகு கோபம் என்ன............பீ.பீ எல்லாம் வரும்............ :P :rolleyes:

கோபத்தை கட்டுபடுத்த யாழிற்கு வந்து புத்தனின் கோசிப்பை வாசித்து விட்டு போனீங்க என்றா சரி. :P

அதை வாசித்தா தானே கோபம் சில பேருக்கு சரியா வரும் மாமோய்............. :D

ஹீஹீ

வெறி சொறி உங்க வாயை தான் பொத்த வேண்டும் பக்கத்தில் இருகிறவரின்ட வாயை பொத்த கூடாது........... :P .

Edited by Jamuna

  • தொடங்கியவர்

வணக்கம் குருவே இது சுட்டது தான் தொடர்ந்து வரும் காலங்களிள் உங்கள் ஆசிர்வாதத்தால் இப்படியான ஆக்கங்களை நானே தாரேன்...........உங்கள் வாழ்த்துகளிற்கு நன்றி............. :lol:

குருவே சின்ன சந்தேகம் நீங்க சொல்லி இருந்தீர்கள் கோபமாக இருக்கும் போது எடுக்கபடும் தீர்மானங்கள் யாவும் பிழையா செல்லும் என்று.............ஆனா என்னை பொறுத்தவரை நான் கூலா இருந்தா லொள்ளு பண்ணி கொண்டுதான் இருப்பேன் எப்ப கோபம் வருதோ அந்த நேரங்களிள் எல்லாம் நான் எடுக்கும் தீர்மானங்கள் எல்லாம் உச்சிக்கே கொண்டு சென்று இருகிறது என்றே சொல்லலாம் ஆகவே என்னை பொறுத்தவரை கோபத்தை அடக்காகம் வெளிகாட்டுறது நல்லது என்று நினைக்கிறேன்...........இதுவும் அழுகை போல ஒரு உணர்ச்சி தானே...கோபத்தை நேரடியாக காட்டிவிட்டால் அதன் பின் அமைதியாக இருக்கலாம் என்று நினைகிறேன்........... ;)

நன்றி குருவே.......... :rolleyes:

என்னை பொறுத்தவரை கோபத்தை அடக்காகம் வெளிகாட்டுறது நல்லது என்று நினைக்கிறேன்...........இதுவும் அழுகை போல ஒரு உணர்ச்சி தானே...கோபத்தை நேரடியாக காட்டிவிட்டால் அதன் பின் அமைதியாக இருக்கலாம் என்று நினைகிறேன்........... ;)

ஜம்மு நம்ம நினைப்பும் இப்படித்தான் பாருங்கோ.

ஆனால் எல்லா இடத்திலும் இதை நடைமுறைபப்டுத்த முடியுமா? :angry:

  • தொடங்கியவர்

ஜம்மு நம்ம நினைப்பும் இப்படித்தான் பாருங்கோ.

ஆனால் எல்லா இடத்திலும் இதை நடைமுறைபப்டுத்த முடியுமா? :angry:

நிலா அக்கா இந்த விசயத்தில நான் யார் என்று இருகிற இடம் பார்க்கமாட்டேன் யார் என்றும் பார்க்கமாட்டேன் கோபம் வந்தா..........அந்த இடத்திலேயே வெளிகாட்டிவிட்டுடுவன் பிறகு இருந்து யோசிப்பேன் நான் அப்படி செய்திருக்க கூடாது என்று...............மறு நிமிசமே போய் சாறி கேட்டுடுவன்........... <_<

9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

என்ன ஜம்மு...எத்தினை கிராம் கோவத்துக்கு எத்தினை லீற்றர் தண்ணி? :(

11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

கோவமா இல்லை கோவபடுத்துறவை வரீனம் எண்டாலே ஒரு லீற்றர் தண்ணியை எடுத்து குடிக்க வேணுமோ :o

14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.

இதுதான் கஷ்டமான விசயம். <_< ஹிஹி

Edited by பிரியசகி

  • தொடங்கியவர்

என்ன ஜம்மு...எத்தினை கிராம் கோவத்துக்கு எத்தினை லீற்றர் தண்ணி?

சகி அக்கா நல்ல காலம் எந்த தண்ணி என்று கேட்கவில்லை ;)

கோவமா இல்லை கோவபடுத்துறவை வரீனம் எண்டாலே ஒரு லீற்றர் தண்ணியை எடுத்து குடிக்க வேணுமோ

வந்து போனா பிறகும் குடிக்கலாம்...அது தான் பீ.பீ மாத்திரை போட்டுட்டு தண்ணி குடிக்கிறதை சொன்னேன். <_<

இதுதான் கஷ்டமான விசயம். : ஹிஹி

யாழில சரியான கஷ்டமான விசயம் இது தான்........... :P

நிலா அக்கா இந்த விசயத்தில நான் யார் என்று இருகிற இடம் பார்க்கமாட்டேன் யார் என்றும் பார்க்கமாட்டேன் கோபம் வந்தா..........அந்த இடத்திலேயே வெளிகாட்டிவிட்டுடுவன் பிறகு இருந்து யோசிப்பேன் நான் அப்படி செய்திருக்க கூடாது என்று...............மறு நிமிசமே போய் சாறி கேட்டுடுவன்........... :lol:

இதுவரையில் எவ்வளவு சாறி சேர்த்து வைச்சிருக்கிறியள்? <_<

  • தொடங்கியவர்

இதுவரையில் எவ்வளவு சாறி சேர்த்து வைச்சிருக்கிறியள்? <_<

எண்ணமுடியாதளவு இருக்கு அம்மாவிற்கு சொறி எல்லாம் சொல்ல மாட்டேன் தானே ஆனபடியா குறைய இல்லாட்டி நிறைய அவாவிற்கு தான் வர வேண்டுன் பிரண்ட்சுக்கு தான் கூட சாறி மற்றது தம்பிக்கு.......எனி இதயத்தில் வர போறவாவிற்கு.........பாவம் அவா ........... :lol: :P

எண்ணமுடியாதளவு இருக்கு அம்மாவிற்கு சொறி எல்லாம் சொல்ல மாட்டேன் தானே ஆனபடியா குறைய இல்லாட்டி நிறைய அவாவிற்கு தான் வர வேண்டுன் பிரண்ட்சுக்கு தான் கூட சாறி மற்றது தம்பிக்கு.......எனி இதயத்தில் வர போறவாவிற்கு.........பாவம் அவா ........... <_< :P

ஓ நீங்க சொறி இதை சொன்னியளா? நானும் ஏதோ சாறி என்று நினைச்சு எவ்வளவு வைச்சிருக்கிறியள் னு கேட்டுட்டு எனக்கும் உங்க கிட்ட வாங்கலாம் னு நினைச்சேன். சரி சர்

அச்சச்சோ வரப்போறவாக்கு இப்பவே பாவம் சொல்லுறார் ஜம்மு.

:P

  • தொடங்கியவர்

ஓ நீங்க சொறி இதை சொன்னியளா? நானும் ஏதோ சாறி என்று நினைச்சு எவ்வளவு வைச்சிருக்கிறியள் னு கேட்டுட்டு எனக்கும் உங்க கிட்ட வாங்கலாம் னு நினைச்சேன். சரி சர்

அச்சச்சோ வரப்போறவாக்கு இப்பவே பாவம் சொல்லுறார் ஜம்மு.

:P

நிலா அக்கா கொஞ்ச கூட நல்லா இல்லை சாறி வேண்டும் என்றா வாங்கி தாரேன் என்னிட்ட கேட்டா நான் சாரியா உடுக்கிறனான்............. :P

பின்னே எனக்கு கோபம் எப்ப வரும் எப்ப போகும் என்று யாருக்க் தெரியும்...........யாரும் என்ன சொன்னாலும் வடிவா தலையாட்டி போட்டு நான் நினைத்ததை தான் செய்யிறன்னான் அப்ப பாவம் தானே.......... <_<

நிலா அக்கா கொஞ்ச கூட நல்லா இல்லை சாறி வேண்டும் என்றா வாங்கி தாரேன் என்னிட்ட கேட்டா நான் சாரியா உடுக்கிறனான்............. :P

பின்னே எனக்கு கோபம் எப்ப வரும் எப்ப போகும் என்று யாருக்க் தெரியும்...........யாரும் என்ன சொன்னாலும் வடிவா தலையாட்டி போட்டு நான் நினைத்ததை தான் செய்யிறன்னான் அப்ப பாவம் தானே.......... :lol:

கோவம் என்பது ஒருவருக்கு இன்னொருவரால் தான் வரும். அப்படியா ஜம்மு? <_<

  • தொடங்கியவர்

கோவம் என்பது ஒருவருக்கு இன்னொருவரால் தான் வரும். அப்படியா ஜம்மு? <_<

அப்படி என்று சொல்ல முடியாது.............பரிட்சை செய்து கொண்டிருக்கும் போது அந்த நேரம் பார்த்து தெரிந்த விடை வராமே இருக்குமே அந்த நேரம் வருமே கோபம் அதை மாதிரி ஒரு கோபம் வரவேமாட்டுது பிறகு........ ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.