Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

பண்டைய தமிழகத்தை காட்டும் வரைபடம்:

main-qimg-37c6df66b8d31949bd5747390f64791d.png

கடற்கலங்களுக்கு 200 பெயர்கள் இருப்பதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்! அவற்றினுள் என்னால் சேகரிக்கப்பட்ட 150+ பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன். படித்து மகிழவும்…. ஆனால் அதற்கு முன்னர் உருவோடுபவர்கள் பற்றி இவ்விடத்தில் நீங்கள் வாசிப்பது சிறிது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

→ கப்பல்கள் கட்ட வேண்டிய நேரங்களைப் பற்றி “நீகமசிகாமணி” என்னும் நூல் கப்பற்கலை பற்றி விவரித்துள்ளது.

  • கடற்றுறை - கடலின் கரையில் மக்கள் புழங்கும் & பொருள் வந்திறங்கும் இடம். - Old word for Harbour.

  • துறைமுகம் - அந்த கடற்றுறையின் முகப்பு. ஆனால் இன்று கடற்றுறை என்னுஞ் சொல் வழக்கிறந்து முகப்பினைக் குறித்த துறைமுகம் வழக்கிலுள்ளது

  • துறைமுகப்பட்டினம் - கப்பல்கள் நிறுத்திவைக்கப்படவும் மக்கள் அல்லது சரக்குகளை துறைமுகத்திலிருந்து நிலத்திற்கு கொண்டுசெல்கின்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துறைமுகங்களைக் கொண்டிருக்கும் கடற்கரை அல்லது கரையில் உள்ள இடவமைப்பாகும்

  • முன்துறை - கழிமுகத்துக்கு வெளியே அதிக நிறையுள்ள பொருட்களை மட்டும் இறக்கும் இடம்.

  • பெருந்துறைமுகம் - கழிமுகத்துக்கு உள்ளே பண்டகசாலை போன்ற இடங்கள் உள்ள இடம்.

  • தங்குதுறை - கப்பல் வந்து தங்கிச் செல்லும் கடற்றுறை

  • இறங்குதுறை - Jetty

  • உலர்துறை - dry docks

  • பதனம் - கலங்கள் காற்றினாலும் கொள்ளைக்காரராலும் சேதமின்றிப் பாதுகாப்பாய் இருக்குமிடம்

  • தோணித்துறை, நாவாய்த்துறை/நாவாந்துறை - தோணிகளை நிறுத்தவும் செலுத்தவும் வாய்ப்பான துறை... தற்காலத்து மீன் பிடித் துறைமுகங்கள் & நாயாற்றில் கடல்வேங்கை தாவளம் (முகாம்=urudu) இருந்த இடமும் இந்த வகையே!

  • மீனவர் - நீர்நிலை வேடுவர்

  • கடற்கலத்தை செலுத்துபவருக்கான பொதுச்சொற்கள் - (helmsman)

  1. மீகாமன்

  2. மீகான்

  3. ஓட்டி

  4. நீகான்

  5. கடற்பாய்ச்சி

  • படவன் - படகினை ஓட்டுவோன்

  • மண்டாடி - இவர் தொழில் நுணுக்கங்களை அறிந்தவர். இவரே மேலாப்பாச்சி எனவும் அழைக்கப்படுவார்

  • தண்டுக்காரன் - மரக்கலத்தை இயக்கத் தண்டுபிடிப்பவன், கொம்பால் கட்டுமரத்தை செலுத்துபவன்.

  • சம்மாடி - படகு/வள்ளத்தின் தலைவர்

  • தண்டையல்/தண்டயல்/தண்டல், மேந்தலை, நீயான் - (captain of the ship) தமிழர் கப்பற்கலை மரபில் கப்பல் தலைவர் ஆவார்.

    • திண்டேல்‌ - கப்பலைக்‌ கண்காணிப்பவன்‌ - boat swain

    • கலவர், கலாள், கம்மகாரர், பரவர், பரதர், பரதவர், நாவிகர், கடலர், திரையர் - (mariners, sailors, seaman, or seafarer) - கடற்கலங்களில் செலவாவோரிற்கான தமிழ்சொற்கள்.

    • கடலோடி - கடல் பற்றிய அறிவு கொண்ட நீண்ட காலம் கடலில் செலவாகக்கூடிய பரதர்.

    • ஆழ்கடலோடிகள் - ஆழ்கடல்களில் நீண்ட காலம் செலவாகக்கூடிய பரதர்.

    • மண்டாடி - கடல் நீர்வாடு பற்றிய அழ்ந்த அறிவு உள்ளவர்; நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர்.

    • கம்மாறுகாரர் (கம்மா + ஆறு + கடலான் என்பதின் சுருக்கம்) - மீன் பிடித்தலில் கெத்தானவன்.

    • முத்துக் குளிப்போர் - கடலில் மூழ்கி சங்கு, முத்து போன்ற கடலாழத்தில் உள்ளவற்றை அகழ்ந்தெடுப்போர்

    • தொள்ளாழியார் - கடல் ஆழி பற்றி நிறைந்த அறிவுடையவர்.

    • நுளையர் - தென்னை நாரில் இருந்து பாய்க்கயிறு திரிப்பவர்.

    • கழியர் - உப்பளவர்

    • கடல்கோலமிட்டாந்தான் - கடல் சூழ்ந்த நிலையிலும் மூழ்காதவன்

    • உச்சாணியார் - பாய்மரத்தின் மேல் இருந்து வேலை செய்யகூடியவர் .

    • மூப்பர், சேவை- மூத்த அதிகாரி

    • கம்மியர் - பொறியியல் அதிகாரி

    • காப்பு - கப்பலில் உள்ள ஆயுதங்களுக்குப் பொறுப்பதிகாரி

    • சுழியோடிகள் - சுழித்துக் கொண்டு ஓடும் வலிமையான சுழல் நீரின் அடியிலும் நீந்திச் செல்லும் திறன் படைத்தவர்கள்.

    • நீர்முழுகி - நீரில் முழுகுவோன் (diver)

    • ஓசுநன் - பாய்மரங்களை உயர்த்துபவன்

    • ஓடாவியார் - தோணி மற்றும் கப்பல்களை கட்டியவர்கள்.

    • துறைவன், கொண்கன்- என்றால் துறைமுக பரதவ தலைவன்.

    • சேர்ப்பன் - நெய்தனிலத் தலைவன்

    • புலம்பன் - கடற்கரைத் தலைவன்

    • அழிசி - காயல்(back water) அல்லது கழிமுகப்(delta) பகுதியின் தலைவன். இப்பெயர்கள் கூடுதலாக சேரர்களால் சூட்டப் பெற்றுள்ளன.

    • கலப்பத்துக்காரன்,கலப்பத்துஆள் - கலத்தின் நீக்கலடைப்பவன்.

    • சாலர் - போக்கூழாக என்னவென்றே தெரியவில்லை!

    • பண்டாரி - தோணியில் உள்ள சமையல்காரன்

    • பண்டாரிப் பெடியன்/ சுடுவான் பெடியன் - சிறுவயது பெடியள், பண்டாரிக்கும் வேலை செய்வொருக்கும் இடையிலான தொடர்பாள்.

    • கால் பங்காள் அ கால் பங்குவாங்கி - தோணியினுள் வேலை செய்வோரில் சுடுவான் பெடியளின் பதவி.

    • அரைப் பங்காள் அ அரைப் பங்குவாங்கி - தோணியினுள் வேலை செய்வோரில் பாய்மரமேறி பாய்மரம் அவிழ்த்து விடுவோரின் பதவி

    • முக்கால் பங்காள் அ முக்கால் பங்குவாங்கி - தோணியினுள் வேலை செய்வோரில் 12–12 மணிநேர வேலையினை சரியாகச் செய்யும் பருவம் வந்தோர்.

    • முழுப் பங்காள் அ முழுப் பங்குவாங்கி - தண்டலிடம் இன்னார் நிறைவாக வேலை செய்வார் என்ற மனநிறைவை பெற்றவர்.

 



  • படிக்கை, பட்டுவா, திடுல், பொறி , கைப்பந்தல், கடவு, தண்டாரம், சிமிலி, கடத்து, பத்தாசு, மாயிலி, ஏதல், கடத்து, பாரம், பாரகம், பதலை, நவாடா, இகுரி, சோங்கு, பாரதி, வள்ளியம், அம்பணம், ஆலாத்து, நாவம்‌, ஐவி, போழ்‌, நவ்வு/நவ்வி, கரைவலம், யானபாத்திரம், போதன்தொல்லை, சதா, தொள்ளம் / தொள்ளை - என்னவென்றே தெரியவில்லை!



  • Common name to all types of ships -கடற்கலம், யானம், ஆனம், நீரூர்தி

    • மரக்கலம் , மரக்கோவை - மரத்தால் செய்யப்பட்ட கலங்களுக்குப் பொதுவான சொல்.

    • பாய்மரக் கலம்- இச்சொற்கள் பாய்கட்டிய கலங்களுக்குப் பொதுச்சொல்லாக விளங்கின.

    • கட்டுப்படகு - பலகை கொண்டு கட்டிய படகு

    • கப்பல்கால், நடைப்படகு, கப்பல்நடைத் தோணி - பெரிய கப்பல்களிலிருந்து இறங்கியேற பயன்படும் படகு.

  •  Floater- பங்கிலம், பன்னாலம், தரம், படுவை, வகுத்திரம், பேலகம், யாதனம்.


  • ship - கப்பல், நாவாய், கலம்

    • கலப்பற்றுக்கலம் - நீக்கலடைக்கப்பட்டுள்ள கலம்

    • நெடுங்கப்பல் - நீளமான கப்பல்

    • இயந்திரம் - சக்கரங்கள் நடைமுறைப்படுத்தும் இயந்திர துடுப்புகள் கொண்ட கலப்பினக் கப்பல்.

      • கலம் - சோழர்காலத்துக் கல்வெட்டுகளில் கப்பல் என்னும் சொல்லின் பொருள் வரும் இடங்களில் இச்சொல்லே இடம்பெற்றுள்ளதால் இச்சொல்லின் பொருள் கப்பல் என்றே கொள்ள முடிகிறது.. பொதுச்சொல்லாக அல்ல.

ஆதாரம்: ——→நாகப்பட்டினம் முதல் சுவர்ண தீபம் வரை (பக்கம்: 111,112)

main-qimg-c5caedaa16ffdd64f2f0536710524c95.png

main-qimg-f08544e60061b140d765e8d5586a6be2.png

main-qimg-53d7cfee20494bd3bcd5270c7af796a2.png



சரி, வாருங்கள் இனி கடற்கலங்களைப் பற்றி பார்ப்போம்.

கீழ்க்கண்ட பண்டைய தமிழர்கள் உருவோட்டிய (sailing) கடற்கலங்களைப் பற்றி மேலும் காண விழைக்கில் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட இக் கொழுவியினைச் சொடுக்கவும். நான் இங்கு அதிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சில முக்கிய குறிப்புகளை மட்டுமே தருகிறேன். உங்களுக்கு எமது முன்னோர்கள் உருவோட்டிய இக்கடற்கலங்களைப் பற்றி அறிய ஆசை இருப்பின் மேற்கண்ட கொழுவியினைச் சொடுக்கி ஏனைய புலங்களைப் படிக்கவும்.

தமிழரிடம் இரு வகையான கடற்கலங்கள் இருந்ததாக கிரேக்கத்து கி.பி. 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிபிளஸ் கூறுகிறது என்கிறார் 'MEMOIRS OF THE ASIATIC SOCIETY OF BENGAL' என்ற 1918—1923 ஆண்டு கால நூலின் 7ம் பாகத்திலுள்ள ஒரு பகுதியை எழுதிய Hornell James அவர்கள். இவர் தன் பகுதியின் நான்காம் மடலத்தில் (PART IV.—THE CLASSES OF VESSELS EMPLOYED BY INDIANS IN ANCIENT DAYS PRIOR TO PORTUGUESE MARITIME DOMINANCE.) பக்கம் 215 & 216இல் இக்கடற்கலங்கள் தொடர்பிலான விளக்கத்தை தந்துள்ளார்.

Until we come to the days of Marco Polo and Ibn Batuta I know of no technical descriptions of the boats and ships used on the Indian coasts, except one by Pliny and the involved and difficult passage in the Periplus already quoted, where two Indian trading vessels called respectively sangara and kolandiophonta are mentioned, the former being large ‘monoxyla, which means literally that each vessel was formed from complete logs and not constructed of planks. I agree with Schoff ' in correlating the name with the Tamil sangadam, a double-canoe made from two great hollowed out tree trunks lashed together, in spite of the fact that this type of craft is never used nowadays for sea-going purposes, being restricted to rivers, estuaries and backwaters. The word, as well as the use of this form of canoe, is found throughout Dravidia ; on the Malabar coast the term appears as changaddam, in Kanara as jangala. The Polynesians when first seen by European voyagers employed sea-going double canoes of large size; to-day few exist and these of small dimensions only, the large ones being replaced by schooners of European design. If, as I believe, there is an infusion of Polynesian blood in the coastal population of South India, we can the more readily agree with the view that large double-canoes were employed in trade on the Coromandel coast at the time of the Periflus. The only alternative to this view is to consider the monoxlya making up a sangara, as the constituent logs of a cata- maran. But catamarans are never used as cargo carriers; they are exclusively fishing boats and this fact excludes them from identification with the description of them in the Periplus as “large vessels.”’

Kolandiophonta or kolandia as rendered probably more correctly by Schoff, des- cribed as vessels of great bulk employed for overseas voyages to Bengal and Malaysia (Chryse), must almost certainly have been two-masted vessels with pointed ends and probably equipped with a stout outrigger, counterparts of the present-day Sinhalese yatrva-oruwa (yatra-dhom in Tamil), but, unlike them, steered by quarter oars, the rudder not being then invented. I come to this conclusion partly because kolandia appears to be a Greek sailor’s rendering of the word kullan or kulla, the Tamil term both for a large outrigger fishing canoe and for the outrigger frame alone (kullan, the more correct and older form becomes shortened to killa in the corrupt speech of Tamil fishermen), and partly from Pliny’s account of the ships used in the seas between India and Ceylon. |

It is indeed a strange coincidence that this view of kolandia being outrigger vessels should receive valuable support from Pliny, who says, “the sea between the island of Ceylon and India is full of shallows not more than six paces in depth, but in some channels so deep that no anchors can find the bottom. For this reason ships are built with prows at each end, for turning about in channels of extreme narrownesse".

  1. சங்கடம் (Sangkara): வணிக கடற்கலம்

  • இது கங்கைக்கும் இமாலயத்திற்கும் இடைப்பட்ட பரப்பிற்கு சென்று வந்தது.

  • இதில் பெரியதும் சிறியதும் இருந்தன.

  • இவற்றை பாரிய நீளமான மரக்கட்டைகளை ஒன்றாக்க அடுக்கி உருவாக்குவர்.

2. குள்ளத்தோணி (Kolandiophonta/ kolandia): வணிக கடற்கலம்

  • இவை தற்காலத்து குள்ளாவை விட பெரியவையாக இருந்திருத்தல் வேண்டும். ஏறத்தாள சிங்களவரின் யாத்திரை தோணி அளவு உடையனவாக இருக்க வேண்டும்.

  • இவை வங்கத்திற்கும் மலேசியாவிற்கும் சென்று வந்தன.

  • இவை மிகப் பெரியன ஆகும்.

  • இவை தூம்புக்கட்டை கொண்டவையாகும்.

(இக்கற்கலங்களின் படிமங்கள் கீழே தரப்பட்டுள்ளன)


  • தங்கு - கடலில் தங்கிநின்று மீன்பிடித்து வருவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட கடற்கலம். இவற்றை தற்காலத்தில் "தங்கல் படகு" என்றும் அழைப்பர்.

  • பாசனம்- மீட்பிற்கு உதவும் கடற்கலம்

  • வங்கம் - வங்கத்திலிருந்து வந்த கலங்களைக் குறித்திருக்கலாம், வஞ்சி போன்று.

  • பண்ணை - கால்நடைகளை இடம்மாற்ற பாவிக்கப்பட்ட கடற்கலம் என்று கருதுகிறேன்.


  • சலங்கு/ சலங்கை: சலங்கு என்னும் பாய்மரக்கப்பல்கள் 3 முதல் 4 பாய்கள் கொண்டவையாகும்.

  • நடைச்சலங்கு - சலங்கிலிருந்து ஏற/ இறங்க சலங்கோடு கொண்டுசெல்லும் படகு

தீவுப்பற்றில் இக்கடற்கலம் தொடர்பான ஒரு நாட்டுப்புறப் பாடல் உள்ளது.

வல்வெட்டிதுறை பாய்மரக் கப்பல்களில்

வந்து குவியுது பண்டமடி

வாய் நிறையத் தின்று வெத்திலை போடலாம்

வாருங்கோ கும்மி அடியுங்கடி

வத்தை, சலங்கு, கட்டுமரம், தோணி,

வள்ளாங்கள் வந்து குவியுதடி

எத்தனை பண்டங்கள் ஏற்றி வரும்

எல்லாமே கொள்ளை லாபமடி

(தகவல் – கலாநிதி காறை செ.சுந்தரம்பிள்ளை)

வல்வை சிதம்பர கல்லூரி நூற்றாண்டு மலரிலிருந்து valvettithurai.org அவர்களால் எடுத்துப் பதியப்பட்ட தகவல்(https://www.valvettithurai.org/salanku-sailing-boat-from-valvettithurai-3986.html?date=1520101800)

"சலவர் என்பது கடலோடிகளையும், முத்துக் குளிப்பவர் களையும் குறிக்கும். சலங்குக்காரர் என்பவரும் முத்துக் குளிப்பவரே. சலாபம் என்பதும் முத்துக் குளித்தலையே குறிக்கும். நீராடுவாரைச் சலங்குடைவர் என்னும் பரிபாடல் (10:90) சலகை என்பது தோணியையும் சலஞ்சலம் என்பது வலம்புரிச் சங்கையும் (சீவக. 184) சலம் புகன்று என்பது மாறுபட்டுரைத்தலையும் (மதுரைக். 112) குறித்தல் அறியத்தக்கன." - செந்தமிழ் சொற்பிறப்பியல் களஞ்சியம், 6, ச முதல் த வரை


  • பட்டம் : புத்தளக் கடற்கரையில் பாவிக்கப்பட்ட கடற்கல வகை


  • உரு : இவை பண்டைய சேர நாட்டில் கட்டப்பட்டவை.. இவ்வகைப் தோணிகள் இன்றும் கேரளாவில் (பண்டைய சேர நாடு. சேர நாடும் தமிழகத்தின் ஒரு பகுதியே) பயன்பாட்டில் உள்ளது. இரண்டு பெரிய பாயும் ஒரு சிறீய பாயும் இதில் கட்டப்பட்டிருக்கும் .

உரு.jpg

படம்: கேரள உரு

தற்காலத்திற்கு கொஞ்சம் முந்திய காலம் வரையிலும் வட தமிழீழத்தின் வல்வெட்டித்துறையில் உரு கட்டப்பட்டுள்ளது.

உரு jaffna.jpg


  • தோணி/ யாத்திரை தோணி - படகை விடப் பெரியவை; கப்பலை விடச்சிறியவை. சரக்கு, மக்கள் போக்குவரத்துக்குப் பயன்பட்டது. .

    • இது இருப்பக்கமும் சமனான தூம்புக்கட்டையைக் (outrigger) கொண்டதாகும்.

    • தொடுவைவள்ளம்- அவசர காலத்திற்காக தோணியோடு இணைக்கப்பட்டிருக்கும் கடற்கலம்.

large.India-CoromandelCoast-vesselcalled

  • கள்ளத்தோணி - இத்தோணியின் பெயரின் பொருள் கடற்கொள்ளையர்களின் கடற்கலம் போல மிகவும் வேகமாக பயணிக்கக்கூடியது என்பதாகும்.

  • அளவுகள்:

  • மிகச்சிறிய முற்பாய்: 10 முழம்

  • நடுப்பாய் = 30 முழம்

  • கடைப்பாய் = 28 முழம்

கள்ளத்தோணி.jpg

கள்ளத்தோணி 2.png

  • முடுகு - நன்கு வேகமாகச் செல்லக்கூடிய தோணி

  • தாவடித்தோணி - எதிரியின் கலங்களை உடனடியாக நிறுத்தி அதிர்ச்சித் தாக்குதல் தொடுப்பதற்காக பயன்படும் தோணி


  • கலவம் - தோணியின் பாதி அளவுள்ள கடற்கலம். ஆனால் படகை விடப் பெரியது

கலவஞ்சேர் கழிக்கானல் (தேவா. 532, 4)


  • வேடி, வேடை - படகளவு தோற்றம் கொண்டது


  • மசுலா - இது சரக்குக் காவியாகவும் மீன்பிடி படகாகவும் பயன்பட்டது.

படவு, சலங்கு ..jpg

bow of - படவு, சலங்கு.png

'மசுலா-ன் அணியம்'


  • வஞ்சி- தற்போதைய சேர நாட்டில் உள்ள ஒருவகை கடற்கலம்

    large.vanji.jpg.e51733fda9276cefc26a46c9


  • பட்டை/ பாறு - அடிப்பகுதி தட்டையான கடலுக்கு கரைவலை எடுத்துச்செல்லப் பயன்படும் கடற்கலம். இது ஈழத்தில் பயன்பாட்டில் உள்ளது.

large.2038556313_--incolombooldbeforeind

படம்: மகாதல்புரம், கொழும்பு, சிலோன்


  • பட்டி, பட்டிகை, பட்டியாதனம்‌ -சரக்குக் காவப் பயன்பட்டது. இன்றும் மேற்கு வங்காளத்தில் இதே பெயருடன்(பட்டி ) பயன்பாட்டில் உள்ளது.

பட்டியானம், பட்டிகை, பட்டி.jpg

படம்: வங்கத்து பட்டி


  • பகடு - சொகுசுக் கடற்கலம்

  • அம்பி-இவை ஒவ்வொரு விலங்கினதும் தலையைப் போல முகப்பைக் கொண்டிருக்கும் கடற்கலம்.

    • பரிமுகவம்பி, அரிமுகவம்பி, கரிமுகவம்பி, ஆமுகவம்பி, அரவமுகவம்பி , ஓதிம அம்பி

different types of அம்பி.jpg


  • கட்டு வள்ளம் - கடற்கல வீடு (சேர நாட்டுப் படகு)

    • பெரிய கட்டுவள்ளம்

பெரிய கட்டுவள்ளம்.jpg

படம்: கேரளாவில் எடுத்தது

  • சுண்டான் வள்ளம்/ நிரை மாடம் -(சேர நாட்டுப் படகு) It has a pointed prow which stands four feet above the water and gives the impression of a beak.

    • வள்ளக் களி - வள்ளப் போட்டி

    • ஊடேறு படகு - படகுதாவு போட்டியில் ஒரேநாளில் முன் இறுதிநிலையும் பின் முதல்நிலையும் கண்ட படகு. (Sandwich-boat)

சுண்டான் வள்ளம்- நிரை மாடம்.jpg

படம்: கேரளாவில் எடுத்தது

  • இருட்டுக் கூதி/ வடக்கன் ஓட்டி -(சேர நாட்டுப் படகு) they were much faster and the pirates started using it in the lakes. It did not make much noise while moving over the waters.

  • பள்ளியோடம் - (சேர நாட்டுப் படகு) They have huge sterns which have the nose of the Palliyodams is much higher and helps it in moving much faster.

பள்ளியோடம்.jpg

படம்: கேரளாவில் எடுத்தது

  • வைப்பு (வெப்பு) வள்ளம் -(சேர நாட்டுப் படகு) Veppu vallams which was used to support the chundan vallams. It was also known as Parunth Vallam. All the items and food required for the soldiers in the Chundan vallam were carried by Veppu vallams for battles.

வைப்பு (வெப்பு) வள்ளம்.jpg

படம்: கேரளாவில் எடுத்தது

வைப்பு (வெப்பு) வள்ளம் 2.jpg

படம்: கேரளாவில் எடுத்தது

  • சுருளன் வள்ளம் -(சேர நாட்டுப் படகு) Churulans are very unique type of boats that are pushed through the water. Long and thin bamboo poles used to move the churulans in the water. The oars men use these bamboo poles and they push it down and move from front to back and again.

சுருளன் வள்ளம்.jpg

படம்: கேரளாவில் எடுத்தது

சுருளன் வள்ளம் 2.jpg

படம்: கேரளாவில் எடுத்தது

  • தெக்கன் ஓட்டி -(சேர நாட்டுப் படகு) Thekkan Oddy is a very beautiful boat with its nose like Churulan and its stern like Chundan. - women

தெக்கன் ஓட்டி.jpg

படம்: கேரளாவில் எடுத்தது


  • திமில் = இது இரு வகைப்படும்

    • கொடுந்திமில் - அணியம் நன்றாக மேல் நோக்கி வளைந்த மீன் பிடி திமில்.

    • வான்திமில்- வான் உயர்ந்த பாய் கொண்ட மீன்பிடித்திமில்.

  • வத்தை

பண்டகர்(Dr.) புளூ(blue) என்னும் ஆங்கிலேயர் வத்தையினை இவ்வாறு சித்தரிக்கின்றார்.

Dr. Blue Says,

"Vattai, are flat-bottomed, have a box-like transverse section and are near-wall-sided over much of their length.

"They range in size from around 13.72m long, with a beam of 2.13m and a depth of 1.37m, to the smallest vessels of c. 5.18m x 1.07m x 0.76m. However, irrespective of their size, they are all similar in shape with very high bows, and two or three masts each with a settee-lateen sail, a balan"

large.Vattai_0001.2.jpg.28c62ea178fa56de

large.Vattai_0002.jpg.be68aea996dd2f5aae

  • தன்னுதோணி, ஒத்தை, தன்னுவத்தை - சிறிய வத்தை

  • தூத்துக்குடியில் உருவோட்டிய மீன்பிடி தன்னுவத்தை

தூத்துக்குடியில் உருவோட்டிய இலகு மீன்பிடி கடற்கலன்.png

  • வத்தை- ஒரே ஒரு பாய் கொண்டது.

  • கீழுள்ளது தூத்துக்குடியில் உருவோட்டப்பட்ட(sail) இலகு சரக்குக் காவி வத்தை.

length: 34 அடி

beam :6¼ அடி

depth :2¾ அடி

தூத்துக்குடியில் உருவோட்டப்பட்ட(sail) இலகு சரக்குக் காவி கடற்கலன்..png

  • திருப்பலக்குடியில் உருவோட்டிய மற்றொரு வத்தை

திருப்பலக்குடியில் உருவோட்டிய மற்றொரு கடற்கலன்.png

நவீன கால வத்தைகள்:

large.vaththai.jpg.a3c837b9ece13c5f6e848

  • அதிரம்பட்டினத்தில் இருந்து உருவோட்டப்பட்ட(sail) பலகைக்கட்டு வத்தை. இதன் கடிசு மிகவும் நீளமானது (l= 34 அடி). இக்கடிசு மிகவும் வேறுபட்டது.

நீளமான கலவோடு(hull) & மூன்று பாய் கொண்டது. 5 பேர் வரையிலும் பாதுகாப்பாக பயணிக்கலாம்:

length: 18 - 37 அடி

beam : 2 - 3 அடி

depth : 2½ அடி

அதிரம்பட்டினத்தில் இருந்து உருவோட்டப்பட்ட(sail) தோணி..png

  • பாக்கு நீரிணையில் ஓடிய ஓர் வல வத்தை

    • length = 43 அடி

    • beam = 4½ அடி

    • depth 2½ அடி.

  • பாயின் உயரம்:

    • வலப்பாய் = 13 அரை அடி

    • நடுப்பாய் =22 அடி

    • கடைப்பாய் = 14 அரை அடி

கடிசு (balance board) - 17 அடி

வலவத்தை - வத்தையைப் போன்றே ஒடுங்கிய ஆனால் அதைவிட நீளமான உடலோடு(hull) மூன்று பாய் கொண்டது.png


  • கீழ்க்கரையில் உருவோட்டிய ஒரு வகையான கடற்கலம். இதன் வகை பெயர் தெரியவில்லை

இவற்றிற்கு தூம்புக்கட்டை (outrigger) இருந்தது.

கீழ்க்கரையில் உருவோட்டிய ஓர் கடற்கலன்..png

large.doubleoutrigger.jpg.27d7d5e84d2e61


  • ஆதிரம்பாக்கத்தில் ஓடிய பாய்மரம்கொண்ட ஓடம்

இது வலவத்தையை விடச்சிறியது.jpg


  • ஒருவு / ஒருஉ - எமது தீவில் மீன்பிடிக்க பாவிக்கப்படும் ஒருவகை கடற்கலங்களை குறிக்க பயன்படும் சொல். ஒருஉ என்பது ஒரே மரத்தில் கல்லப்பட்ட கடற்கலத்தை குறிக்கும். ஏறத்தாழ இது ஒரு வகையான ஓடமாகும்.

    • இச்சொற்களில் சிங்களவர் ஒரூ என்பதை பாவிக்கின்றனர். எனினும் தமிழ் அகராதிகளில் ஒருவு மற்றும் ஒருஉ என்பன கடற்கலத்தினை குறிக்கும் சொற்களாக குறிக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வகை கடற்கலங்கள் இன்று தமிழ்நாட்டில் வழக்கொழிந்துபோயிருந்தாலும் ஆங்கிலேயர் காலத்தில் பாவனை செய்யப்பட்டதிற்கான படச்சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையால் அவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

  • பிளாவு - ஒருஉ-ற்கு ஒரு தூம்புக்கட்டை போடப்பட்டிருந்தால் பிளாவு எனப்படும்.

large.8a40d-old-batticaloa-history.jpg.8

'பண்டைய மட்டக்களப்பு முகத்துவார வாயிலில் நிற்கும் பிளாவுக்கள்.'

large.TamilsKulla-imagefromJHornell1920I

படிமக்காலம்: ஏறத்தாழ 1920ம் ஆண்டு

  • குள்ளா - பிளாவின் பெரிய வடிவம் தான் குள்ளா . இக்கடற்கலம் தொண்டி அ கடற்கழிகளில் வலைபோட்டு மீன்பிடிக்கப் பயன்பட்டது. இது ஈழத்தில் பயன்பாட்டில் உள்ளது. சிலர் இதனை 'கரைவலை தோணி' எனவும் விளிப்பதுண்டு, ஈழத்தில்.

    large.KullaBoatsinTrincomael1945.jpg.d60

'திருமலை கடற்கரையில் குள்ளாக்களுடன் நிற்கும் தமிழர்'

  • பாதை, ஆஞ்செல்கை - தூம்புகட்டை இல்லாத இரு ஒருவுக்களின் மேல் தட்டை போன்ற அமைப்புள்ள கலம். இதை உள்ளூரில் பாவிப்பர். இதை பாலப்படகு என்றும் கூறுவர்.

large.ModernAnjchelkaiorPathai-Ferryacro

திருமலையில் மக்கள் நவீன கால பாதையினைப் பாவிக்கின்றனர், 1925ம் ஆண்டுகால படிமம்

large.Imageforreference-SinhaleseinBoatf

சிங்களப் பகுதி ஒன்றில் பண்டைய பாதையினை பாவிக்கின்றனர், 1900 கள்


  • அடுபுணை/ தோண வள்ளம் (tona vallam) - கடக்கு கடற்கலம்.

அடுபுணை- தோண வள்ளம்.jpg

படம்: கேரளாவில் எடுத்தது

  • கேவு வள்ளம்- மீன் பிடிக்க & காயல் மண் கொண்டுவரப் பயன்படும் வள்ளம். (length - 8 m –12 m) .

கேவு வள்ளம்.png

படம்: கேரளாவில் எடுத்தது

  • குறுவள்ளம் - ஒருவர் அல்லது இருவர் செலவாகும் வள்ளம்.

குறுவள்ளம்.png

படம்: கேரளாவில் எடுத்தது

  • கொச்சு வள்ளம்

கொச்சு வள்ளம்.jpg

படம்: கேரளாவில் எடுத்தது


  • உக்கடம் -முன் பக்கத்தில் அமர்ந்து செலுத்தும் ஒடம். 1–3 பேர் அளவில் செலவாகக் கூடிய ஓடம். ஆறு குளம் முதலியவற்றில் ஓடக் கூடியது.


  • Raft - ஓடம், கௌரிகை, அம்படலம், ஆது

    • பெரியது– 12 x 1.5 x 0.8 m,

    • சிறியது - 7 x 1 x 0.6 m

Raft - ஓடம், கௌரிகை, அம்படலம், தன்னுதோணி, ஆது.png


  • பஃறி - உள்ளூர் சுமை காவி

    • பஃறியர் - இக்கலத்தில் பயணிப்போர் இவ்வாறு அழைக்கப்பட்டனர்


  • உன்னம் - சிறியளவில் சரக்குக் காவப் பயன்பட்டது.

large.436174888_.jpg.cd20edc005dc500ea04


  • சம்பான், சம்மான், பாறு : இது கால்வாய்களில் பயணிக்க உதவும். குறிப்பாக எமது நாட்டில்.

    • இதை ஓட்டுபவரை சம்மானோட்டி> சம்மாட்டி எனப்படுவார்

large.t154-full.jpg.025d0496a36db346be5e

'வெள்ளவத்தையில் (1890) எடுக்கப்பட்ட படிமம். நிற்பவர்கள் தமிழர்களே'


  • செட்டி, ஓங்கல் = பெருமளவவு மூங்கில்கள் ஒன்றாக சேர்த்திக் கட்டப்பட்டு கொண்டு ஆறு ஏரி போன்றவற்றைக் கடக்கப்பயன்படும் கடற்கலம். இதில் சில நேரங்களில் பாய் இருக்கும். சில நேரங்களில் இருக்காது. இருப்பு அதன் இடத்தைப் பொறுத்து அமையும் .

செட்டி, சலசரம், ஓங்கல்.jpg

''படம் உதாரணத்திற்கு மட்டுமே''


கட்டுமரம், நாட்டுமரம்- 3–5 மரங்களைச் சேர்த்து கட்டி செய்யும் கடற்கலங்களுக்கான பொதுச்சொற்கள். (length 7–10 m)

  • ஒத்தனாமரம் - ஒருவர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய கட்டுமரம்

Half-page illustration of a Catamaran Postman published in the Illustrated London News, 1858.

  • மரப்புணை, கட்டுப்புணை: (boat catamaran) இக் கட்டுப்புணையானது ஈழத்தில் பயன்பாட்டில் உள்ளது. இது 2 மரங்கள் அடியில் போடப்பட்டு இரண்டு மரங்கள் மதில் போல கட்டப்பட்டிருக்கும்

மரப்புணை, கட்டுப்புணை 3 tree.jpg

  • இருமரம்:

large_adsa.jpg.50b0f94688e0919c9f7790ad8

  • சின்ன மரம் - 1–2 பேர் மீன் பிடிக்க செல்லும் மரம். இது 3 மரம் கொண்ட கட்டுமரமாகும். இதில் தூறிவலை கொண்டு செல்லப்பட்டது.

    • நீளம் - 21 அடி

      • அகலம் - 2 அடி 4 அங்குலம்

மடி, இருமரம், சின்ன மரம்.png

  • பெருமரம்- 2–3 பேர் கடலுக்கு செல்லும் கட்டுமரமாகும். இதில் தூறி, எடு மற்றும் பைந்தே ஆகிய வலைகள் கொண்டு செல்லப்பட்டன. இது 4 மரம் கொண்ட கட்டுமரமாகும்.

    • நீளம் - 25½ அடி

      • அகலம் - 3½ அடி

பெருமரம்.png

பெருமரம்.jpg

  • இருக்காமரம்- இது 5 மரங்கள் கொண்ட கட்டுமரமாகும். ஒவ்வொரு மரத்தின் அளவும் வேறுபடும்.. ஆனால் அதன் ஆப்பக்க மரத்தோடு ஈப்பக்க மரம் ஒத்திருக்கும். நடு மரம் மட்டும் நெடுத்திருக்கும்.

இருக்காமரம்.png

  • தூண்டில்மரம் (hook -catamaran) - இதுவும் 5 மரங்களைக் கொண்டதே... ஆனால் இருக்கா போன்று பக்க வாட்டு மரங்களின் நீளத்தில் பெரிய வேறுபாடில்லை

தூண்டில்மரம்.png

  • கோலம், கோலமரம் : (flying-fish catamaran). சூலை மட்டும் ஓகசுட்டில் மட்டுமே இக்கட்டுமரம் நீர்நிலைகளைல் நடமாடும். இது ஏழு மரம் கொண்ட கட்டுமரம் ஆகும். இரண்டு சிறிய பாய்கள் இதில் கட்டப்பட்டிருக்கும். இதில் 5–7 பேர் வரை பயணமாகலாம். 50 மைல் தொலைவு வரை இதில் பயணமாகலாம்.

    • LOA: 33 feet

    • beam at forward lashing: 4 feet

    • beam at aft lashing: 7 feet

    • forward yard: 29 feet

    • after yard: 21 1/2 feet

    • steering oar: 12 feet

    • forward leeboard: 10 1/2 feet

    • after leeboard: 9 feet

    • draft (boards up): 1 foot

கோலம், கோலமரம், கட்டுத்தோணி.jpg

கோலம், கோலமரம், கட்டுத்தோணி 2.jpg

  • கட்டுத்தோணி:

1895 madras | Rare image of Kattuthooni

  • மடி - இரட்டைக் கட்டுமரம்

Madi/ மடி- Origins and ethnological significance of Indian boat designs, J.Hornell  (13).jpg

  • நீள்மரம், மேங்கா- இது 7 அ 9 அளவில் பெரிய மரங்களை கொண்டு கட்டும் கடற்கலம். இது மேற்கண்ட கட்டுமரத்தைவிட நீளமானது. (length = 11- 13 m)

Neelmaram a Meengkaa.jpg

திருநெல்வேலி & கன்னியாகுமரிக் கட்டுமரம்:

  • கைதுமரம்: சிறியது (படம் கிடைக்கவில்லை)

    • அகலம்: - 9- 10 inch

    • நீளம்: 20 feet

  • கோக்காமரம்/ கோடாமரம்: பெரியது

    • அகலம்: - 9- 10 inch

    • நீளம்: 23 feet

கோக்காமரம்.png

large.655515_orig(1).jpg.342c3bfcb2f059e

கன்னியாகுமரி மாவட்டம் இடிந்தகரையில் எடுத்த படம்.


  • தேப்பை, பேடா, பேடம்- நாணல் போன்ற புற்களைக் கட்டி செய்தது


  • உடுப்பம்/உடுவை - ஆறுகளில் பாவிக்கப்படும் உடுவலை தாங்கிச் செல்லும் தெப்பம்

  • தவணை / கட்டுப்பானைத் தெப்பம்: raft or float for crossing rivers, especially one made of earthen pots and bamboos.

  • தெப்பம், அடித்தளப்படல் (length = 3-5 m)

நீள்மரம், மேங்கா.jpg

Modern:

தெப்பம், அடித்தளப்படல்.jpg


  • பரிசல்/ பரிசில்/ கோல்வள்ளம் / வட்டிகை/ கைப்பரிசு/ வல்லம் சட்டி/ சட்டித்தோணி- Coracle- வட்டவடிவ ஆற்றுக் கலம்.

பரிசல் - பரிசில் - கோல்வள்ளம் - வட்டிகை - கைப்பரிசு - வல்லம் சட்டி.jpg


  • மிதவை, மிதடி -நீந்துவோர் இடும் மிதவை. அக்கால மிதவைகள் பெரும்பாலும் தென்னக் கோம்பைகள் , மூங்கில்கள் ,முள்முருங்கை மரத் தண்டுகள், ஒதி மரத் தண்டுகள்!


உசாத்துணை:

படிமப்புரவு-

தொகுப்பு & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • Replies 72
  • Views 7.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மெட்ராஸ், 1880களில் படகுகள்

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மெட்ராஸ், 1898 இல் படகுகள்

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மெட்ராஸ், 18ம் நூற்றாண்டு மசுலா வகை கடற்கலம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தொகுப்பு. தொடர்ந்தும் இப்படியானவற்றைப் பதியுங்கள்.  ஆனால் விக்கியிலும் தெளிவான விளக்கங்கள் பலவற்றுக்கு இல்லை.

4 hours ago, நன்னிச் சோழன் said:
  • பரிசல்/ பரிசில்/ கோல்வள்ளம் / வட்டிகை/ கைப்பரிசு/ வல்லம் சட்டி- Coracle- வட்டவடிவ ஆற்றுக் கலம்.
  • மிதவை, மிதடி -நீந்துவோர் இடும் மிதவை. அக்கால மிதவைகள் பெரும்பாலும் தென்னக் கோம்பைகள் , மூங்கில்கள் ,முள்முருங்கை மரத் தண்டுகள், ஒதி மரத் தண்டுகள்!

மிதவை, மிதடி.jpg

  • தவணை / கட்டுப்பானைத் தெப்பம்:

raft or float for crossing rivers, especially one made of earthen pots and bamboos.

  • புணை - வலைக்கு இடும் மிதவை

 


 

இதற்கும் மேற்குறிப்பிட்டதுக்கும் என்ன தொடர்பு ???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நன்றி ஐயை🙏@மெசொபொத்தேமியா சுமேரியர்

----------------------------

😅😅

என்ன சொல்றது...

உளட்டிவிட விரும்பேல. உண்மையைச் சொல்லோனுமென்டால், எல்லாத்தையும் தொகுக்கேக்கில இவை மட்டும் எஞ்சியிருந்தது. அதனால் அவற்றிற்கு மட்டும் ஏன் தனிப்பதிவு எண்டுபோட்டு 'கும்பல்ல கோவிந்தா' என்டு எல்லாத்தையும் ஒன்டாப் போட்டுவிட்டன்.😁🐒

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்றவற்றைப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோறாவில் போடுவதுபோல் 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தேவையற்றவற்றைப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோறாவில் போடுவதுபோல் 😀

தங்கள் ஆலோசனைக்கு நன்றி ஐயை. கவனமெடுக்கிறேன்.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழ்நாட்டின் கீழ்வாலை பாறை ஓவியங்களில் கடற்கலம் ஒன்று

1000-500 கி.மு.

large.KeelavalaiRockpainting1000-500BCbo

large.KeelavalaiRockpainting1000-500BCbo

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழ்நாட்டின் ஆலங்குளம் அகழ்வாராச்சியில் கண்டெடுக்கப்பட்ட பானையோட்டிலிருந்த பண்டைய தமிழரின் கடற்கல ஓவியம் ஒன்று

காலம்: கி.மு.375

large.ALAGANKULAMPOTTERIES-ancienttamils

large.ALAGANKULAMPOTTERIES-ancienttamils

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பல்லவர் காசுகளில் தமிழரின் கடற்கலங்கள்

large.ancientTamilPallavadynastycoinswit

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பல்லவர் காசுகளில் தமிழரின் கடற்கலங்கள்

large.Tamilpallavacoinswithships(2).jpg.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பல்லவர் காசுகளில் தமிழரின் கடற்கலங்கள்

large.AncientTamilsshipswithmast-fromKan

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பல்லவர் காசுகளில் தமிழரின் கடற்கலங்கள்

large.Tamilpallavacoinswithships(1).jpg.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பல்லவர் காசுகளில் தமிழரின் கடற்கலங்கள்

large.AncientTamilsshipswithmast-fromKan

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பல்லவர் காசுகளில் தமிழரின் கடற்கலங்கள்

large.AncientTamilsshipswithmast-fromKan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பல்லவர் காசுகளில் தமிழரின் கடற்கலங்கள்


large.AncientTamilsshipswithmast-fromKan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பல்லவர் காசுகளில் தமிழரின் கடற்கலங்கள்

large.AncientTamilsshipswithmast-fromKan

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பல்லவர் காசுகளில் தமிழரின் கடற்கலங்கள்

large.AncientTamilsshipswithmast-fromKan

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பல்லவர் காசுகளில் தமிழரின் கடற்கலங்கள்

large.PictureCreditstoCoinsofPallava-R.K

படிமப்புரவு: Coins of Pallava- ஆர். கிருஸ்ணமூர்த்தி

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திருப்புடை மருதூர் கோவிலில் உள்ள சுவர் ஓவியங்கள் | 1400கள்

இதில் அரேபியர்களுடனான தமிழர்களின் குதிரை வாணிகம் பற்றி உள்ளது. படத்தில் தோன்றுபவர்கள் அரேபியர்களே

large.thamirabarani.jpg.0429c088b5b50b79

large.thiruppudaimaruthurshipimagestamil

large.shipimagesfromThiruppudaimaruthurt

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பரவு என்ற அடிபாட்டு கடற்கலம்

இவை கோழிகோடு சாமுதிரியின் கடற்படையால் பாவிக்கப்பட்டன. பரவலறியான குஞ்ஞாலி மரைக்காயரால் செலுத்தப்பட்டது.

large.IllustrationoftheBattleofCannanore

கண்ணூர் கடற்சமரில் (1501-1502) போர்த்துகீசிய நௌக்களையும் இஃவுஸ்தாக்களையும் எதிர்கொண்டு மூழ்கும் மரக்காயரின் 'பரவு'க்கள்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

L

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திருக்குன்றக்குடியிலுள்ள அழகிய நம்பி ராயர் கோவிலின் சுவரிலுள்ள கடற்கல சிற்பம் | 1600 கள்

large.AzhaguyaNambitempleinThirukurungud

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்த aquatint பொங்கோதம் (surf), சார்லஸ் கோல்டின் என்பவரின் sketch-பிறகு, ஹாசெல் என்பவரால் விளைவிக்கப்பட்டது. 1800 ஜனவரி 15 ஆம் தேதி இங்கிலாந்தில் பம்மி & கோ நிறுவனத்தால் அச்சிடப்பட்டு, 1806 ஆம் ஆண்டு ஜி & டபிள்யூ நிக்கோல் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த அச்சில், மதராஸ் ஆண்கள் கட்டுமரத்திரத்தின் ஒரு வகையான இருமரத்தில் அலைகளை உடைத்து உலாவுவதை சித்தரிக்கிறது.

large_adsa.jpg.50b0f94688e0919c9f7790ad8

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மெட்ராஸ் பொங்கோதம் | 08/1843

large.SB1843_Madras_x.jpg.e9e45b9e44f78d

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மெட்ராஸில் மசுலாக்கள் மற்றும் கட்டுமரங்கள் - 1807 ஆம் ஆண்டு சின்னேரி வரைந்த பேனா மற்றும் மை ஓவியம்.

large.SB1807_Madras_Chinney_BL.jpg.3a6e9

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.