Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெலாரஸ் வழியாக ரஷ்யப் படைகள்  உக்ரைன் தலைநகர் நோக்கி நகர்வு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெலாரஸ் வழியாக ரஷ்யப் படைகள் 
உக்ரைன் தலைநகர் நோக்கி நகர்வு!!

வெளியேறும் மக்களால் 
🔴உக்ரைன் தலைநகரில் 
பெரும் வாகன நெரிசல்!

அதிபர் மக்ரோன் இன்று
நாட்டுக்கு விசேட உரை!

🔴உலக பங்குச் சந்தைகள் சரிவு
எண்ணெய், எரிவாயு விலைகள்
என்றுமில்லாதவாறு எகிறின!!!

நேட்டோவின் பதில் நடவடிக்கை
நாளைய கூட்டத்துக்குப் பின்பே!

உக்ரைனின் முக்கிய இராணுவ இலக்கு
களை மட்டும் நவீன ஏவுகணைகளால் தாக்கி அழித்தபடி ரஷ்யப் படைகள் மிக
வேகமாக நாட்டின் தலைநகரம் அமைந்
துள்ள வடக்குப் பகுதி நோக்கி முன்னேறி வருகின்றன. 

தாக்குதல் ஆரம்பித்து 24 மணிநேரத்துக்
குள் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தலை
நகர் கீவ் அமைந்துள்ள பிராந்தியத்தின்
எல்லைப்பகுதியை அண்மித்துவிட்டன
என்று செய்தி வெளியாகியிருக்கிறது.

பெலாரஸ் நாட்டில் இருந்து நுழைந்த
ரஷ்யப் படை அணி ஒன்று கிராட் ஏவுக
ணைத் (Grad missiles) தாக்குதல்களை
நடத்தியவாறு முன்னேறி கீவ் பிராந்தியத்
தின் விளிம்பில் உள்ள ஹொஸ்டோமெல் விமானத் தளத்தை (Hostomel Airport) நெருங்கியுள்ளது. அந்தப்பகுதியில் கடும்சண்டை மூண்டுள்ளதாகவும் அடை
யாளம் தெரியாத ஹெலிக்கொப்ரர்கள்
சில வான்பரப்பில் தென்படுவதாகவும்
ஏஎப்பி செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

ஹொஸ்டோமெல் விமான நிலையம்
(Hostomel Airport) உலகின் மிகப் பெரிய
வர்த்தக வான் தளம் ஆகும். அதேசமயம் உலகின் மிகப் பெரிய'மிரியா' (Mriya) 
எனப்படும் சரக்கு விமானத்தின் இறங்கு
தளமாகவும் உக்ரைன் இராணுவத்தின் பிரதான வான் தளமாகவும் விளங்குகின்
றது என்பது கவனிக்கத்தக்கது. அந்தத்
தளம் ரஷ்யப் படைகள் வசம் வீழ்ந்தால்
அது உக்ரைனுக்குப் பெரும் இராணுவப் பின்னடைவாகவும் கீவ் நகருக்கு அச்சுறு
த்தலாகவும் மாறும்.

இதேவேளை, இதுவரையான தாக்குதல்
களில் ஜம்பதுக்கு மேற்பட்ட சிவிலியன்
கள் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன்
அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. 
சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யக் ஹெலிக்கொ
ப்ர்ர் ஒன்றின் வீடியோ காட்சி சமூகவலை
தளங்களில் வெளியாகியுள்ளது. ரஷ்யா
வின் ஆறு விமானங்களைச் சுட்டு வீழ்த்தி
யிருப்பதாக உக்ரைன் இராணுவம் தெரி
வித்துள்ளது. 

இதேவேளை, இன்று காலை முதல் 
உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து பெரும் மக்கள் இடம்பெயர்வு ஆரம்பித்து
ள்ளது. வெளியேறிச் செல்வோரது வாகன அணிகளால் பிரதான தெருக்
களில் மிகப் பெரும் நெரிசல் நிலைமை
காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்
கின்றன.

எங்கே செல்வது என்ற முடிவு தெரியாம
லேயே பலரும் தலைநகரை விட்டுத் தற்
காலிகமாக வெளியேறிச்செல்கின்றனர்.
அவர்களில் பெரும் எண்ணிக்கையான
வர்கள் மேற்கே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நோக்கியே படையெடுத்து
வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

நகரில் உள்ள செய்தியாளர்களது தகவல்
களின் படி, வான் தாக்குதல்களை எதிர்
பார்த்து நகரவாசிகள் நிலத்தடி ரயில்
நிலையங்களில் பதுங்கியுள்ளனர் என்று
சொல்லப்படுகிறது. தொடர்ந்தும் நகரில்
சைரன் சத்தங்களைக் கேட்க முடிகிறது.
நகரின் மையப்பகுதிகள் ஆள் அரவம்
இன்றி வெறிச்சோடியுள்ளன.

ரஷ்யாவின் தாக்குதல்களை அடுத்து 
உலகெங்கும் முக்கிய பொருளாதார சக்
திகளான நாடுகளில் பங்குச் சந்தைகள்
பெரும் சரிவைக் காட்டியுள்ளன. எரிவாயு,
மசகு எண்ணெய் விலைகள் என்றும் இல்
லாதவாறு உச்ச அளவை எட்டியுள்ளன.

ரஷ்யாவுக்கு எதிராக மேற்கு நாடுகள்
விதித்த தடைகள் போதுமானவையாக
இல்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தி
யில் நேட்டோ நாடுகளின் தலைவர்கள்
வெள்ளிக்கிழமை அவசரமாகக் கூடுகின்
றனர். கூட்டாக எடுக்க வேண்டிய அடுத்த
கட்ட நடவடிக்கைகளை அங்கு அவர்கள்
தீர்மானிப்பர் என்று தெரிவிக்கப்படுகி
றது.

பிரான்ஸின் தேசிய பாதுகாப்புச் சபை
இன்று காலை அவசரமாகக் கூடியது. 
போர் நிலைவரம் தொடர்பாக அதிபர்
மக்ரோன் அமைச்சர்கள் மற்றும் அதிகா
ரிகளோடு கலந்தாலோசனைகளை நடத்
தினார். அதன்பிறகு நண்பகலில் அவர்
நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவரது உரையின் விவரங்கள் மற்றும் பிந்திய செய்திகள் அடுத்த பதிவில்.
----------------------------------------------------------------------
              -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                      23-02-2022-16.00 Pm

 

https://www.facebook.com/1328781225/posts/10228655781202639/?d=n

  • கருத்துக்கள உறவுகள்

நாளை வெள்ளிக்கிழமை… நேட்டோ நாடுகளின் கூட்டத்தில்,
ரஷ்சியாவிற்கு எதிராக, என்ன முடிவு எடுக்கின்றார்கள் என்று அறிய ஆவல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

RT (Russia today) செய்தி சனல் ரஷ்யா நிதி வழங்கும் ரஷ்யாவின் ஆங்கில ஊடகம்… யூரியூப்பில் இவர்களின் வீடியோவில் யுத்ததின் இன்னொரு பக்கத்தை பார்க்கலாம்.. மேற்கத்தைய நாடுகள் எப்போதும் தம்மை நியாயப்படுத்தும் செய்திகளையே வெளியிடும்.. எனவே யுத்ததின் மற்ற பக்கத்தை இந்த சனல் ஊடாக பார்க்கலாம்.. ரஷ்யா ஆதரவு உக்ரைன் மக்கள் இதை ரஷ்யா ஆக்கிரமிப்பு எண்டு சொல்வதை கடுமையாக கண்டிக்கிறார்கள்.. தாங்கள் எப்போதும் ரஷ்யராகவே தம்மை உணர்வதாகவும் ரஷ்யா தமது பிரதேசத்தை சுதந்திர நாடாக அங்கிகரித்ததை மகைழ்ச்சியுடன் ஆதரிப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.. ரஷ்யாவின் இந்த உதவியை தம் வாழ்நாளில் ஒருபோதும் மறக்கமாட்டோம் என்று தெரிவிக்கிறார்கள்..

மேற்கத்தைய ஊடகங்கள் சாரை சாரையாக உக்ரைன் மக்கள் போலாந்துக்கு வருவதையே காட்டுகின்றன… ஆனால் ரஷ்ய மொழி பேசும் உக்ரைன் மக்கள் சாரை சாரையாக ரஷ்யா நோக்கி செல்வதை RT காட்டுகிறது.. இதை எந்த மேற்கத்தைய ஊடகமும் காட்டவில்லை..

தமிழ் மொழி பேசும் இலங்கை மக்களுக்கு தாம் வாழும் பகுதிகளில் தமிழ் ஈழம் தனியாக பிரிந்து சென்று உருவாக்க எவ்வளவு நியாயம்கள் உள்ளதோ அவ்வளவு நியாயம்களும் ரஷ்யா மொழி பேசும் உக்ரைன் மக்களுக்கும் தமது பிரதேசத்தில் தனிநாடு அமைக்க இருக்கிறது..

சுதந்திரம் பெற்ற இரண்டு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரண் அடைந்த உக்ரைன் படைவீரர்கள்...
 

 

Responding to calls to ban news channel RT, Boris Johnson said that the UK would be ‘as bad as Russia’, if this happened. 

 

 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

நாளை வெள்ளிக்கிழமை… நேட்டோ நாடுகளின் கூட்டத்தில்,
ரஷ்சியாவிற்கு எதிராக, என்ன முடிவு எடுக்கின்றார்கள் என்று அறிய ஆவல்.

வேறை என்ன   வழமை போல பொருளாதார தடைதான்.....😁


அமெரிக்கன் தன்ரை வியாபாரத்துக்காக தீ மூட்டி விட்டு குளிர் காய்கின்றான்😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.