Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி செயலகம், முற்றுகை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலகத்தை..  முற்றுகையிட்ட, போராட்டம்.

##############   #################   ##################

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பம் !

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தின் துாரநோக்கற்ற கொள்கைகள் மற்றும் தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுப்பதாக தெரிவித்தே போராட்டம் இடம்பெறுகின்றது.

இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், “முழு நாடும் அழிவில், பொறுத்தது போதும், ஒன்றாய் அணித்திரளுங்கள்” என்ற தொனிப்பொருளின் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

https://athavannews.com/2022/1272006

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பெரிசாய் டிவிட்டர்,பேஸ்புக்,யூரியூப் நியூஸ்களை நம்புறதில்லை சிறித்தம்பி. இது உண்மையோ எண்டொருக்கால் பாருங்கோ?

1 hour ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி செயலகத்தை..  முற்றுகையிட்ட, போராட்டம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் பெரிசாய் டிவிட்டர்,பேஸ்புக்,யூரியூப் நியூஸ்களை நம்புறதில்லை சிறித்தம்பி. இது உண்மையோ எண்டொருக்கால் பாருங்கோ?

குமாரசாமி அண்ணை… இந்தக் காணொளியை கேட்க எவ்வளவு சந்தோசமாக இருக்குது.
எமது தலைவரைப் பற்றி, சிங்களவன் புரிந்து கொண்ட அளவிற்கு….
சில   தமிழர்கள் புரிந்து கொள்ளாமல், காட்டிக் கொடுத்து….
போராட்டத்தை வலு இழக்க செய்து விட்டார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை… இந்தக் காணொளியை கேட்க எவ்வளவு சந்தோசமாக இருக்குது.
எமது தலைவரைப் பற்றி, சிங்களவன் புரிந்து கொண்ட அளவிற்கு….
சில   தமிழர்கள் புரிந்து கொள்ளாமல், காட்டிக் கொடுத்து….
போராட்டத்தை வலு இழக்க செய்து விட்டார்கள்.

வணக்கம் சிறித்தம்பி! மற்றவர்கள் அவலத்தில் நாம் சந்தோசப்பட்டால் எமக்கும் அவர்களுக்கும் வித்தியாசமில்லை. மக்கள் போராட்டம் ஒன்று அங்கே உதயமாகி உள்ளது. அதையிட்டு நீங்கள் சந்தோசப்படுவீர்கள். அதே போல் நானும்.

நீங்கள் முன்னொரு முறை கூறியது போல் மனித அழிவையும் வறுமையும் ஒன்றும் அறியா சின்னஞ்சிறு பாலகன்களின் அழிவையும் பார்த்து சந்தோசப்படும் இனம் நம் தமிழினமல்ல.

மாறாக எமக்கு தீங்கிழைத்த ஆட்சியாளர்கள் அவதிப்படும் போது சந்தோசப்படுவோம். இனியும் அதை செய்வோம். அது எந்த நாடாகினும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வணக்கம் சிறித்தம்பி! மற்றவர்கள் அவலத்தில் நாம் சந்தோசப்பட்டால் எமக்கும் அவர்களுக்கும் வித்தியாசமில்லை. மக்கள் போராட்டம் ஒன்று அங்கே உதயமாகி உள்ளது. அதையிட்டு நீங்கள் சந்தோசப்படுவீர்கள். அதே போல் நானும்.

நீங்கள் முன்னொரு முறை கூறியது போல் மனித அழிவையும் வறுமையும் ஒன்றும் அறியா சின்னஞ்சிறு பாலகன்களின் அழிவையும் பார்த்து சந்தோசப்படும் இனம் நம் தமிழினமல்ல.

மாறாக எமக்கு தீங்கிழைத்த ஆட்சியாளர்கள் அவதிப்படும் போது சந்தோசப்படுவோம். இனியும் அதை செய்வோம். அது எந்த நாடாகினும். 

குமாரசாமி அண்ணை…..
எமக்கு தீங்கிழைத்தவர்கள் அவதிப் படும் போது,
நாம் சந்தோசப் படக் கூடாது என்று…
ஒரு “குரூப்” எமக்கு “ரியூசன்” எடுத்துக் கொண்டு திரிகிறார்களே….. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை…..
எமக்கு தீங்கிழைத்தவர்கள் அவதிப் படும் போது,
நாம் சந்தோசப் படக் கூடாது என்று…
ஒரு “குரூப்” எமக்கு “ரியூசன்” எடுத்துக் கொண்டு திரிகிறார்களே….. 😂 🤣

வகுப்பெடுப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்வில் தங்களுக்கு பிடிக்காதவர்கள் வாழ்வில் அதை கடைபிடிக்கிறார்களா என்று ஆராய்ந்து பாத்தால் புரியும். அதன் நோக்கம் தங்களையும் பாத்து மற்றவர்கள் சந்தோஷப்படுவதை தவிர்ப்பதற்காக இந்த வகுப்பை எடுக்கக்கூடும். நாங்கள் ஒன்றும் ஞானியோ, கடவுளோ கிடையாது. எங்களுக்கு அடித்தவனுக்கு, அழிவைத்தந்து எம்மை ஏதிலியாக்கியவனுக்கு திருப்பி அடிக்க முடியவில்லை எங்களால்.  காலம் தீர்மானித்த  பின் நாம் சந்தோஷப்படடால்லென்ன? அழுதாலென்ன? அது நடத்தியே தீரும். அதை தடுக்க யாராலும் முடியாது. இந்த முடிவை  எழுதியவர்களும் அவர்களே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை…..
எமக்கு தீங்கிழைத்தவர்கள் அவதிப் படும் போது,
நாம் சந்தோசப் படக் கூடாது என்று…
ஒரு “குரூப்” எமக்கு “ரியூசன்” எடுத்துக் கொண்டு திரிகிறார்களே….. 😂 🤣

மே  18 ல் நாம் அழிந்தபோது சிங்களவர்கள் வெடியும் பால்சோறும் கொடுத்து கொண்டாடியவர்கள் காத்தான்குடியிலும் கொண்டாடியவர்கள் அப்போது எமக்கு இப்ப ரியூசன் எடுப்பவர்கள் என்ன செய்து கொண்டு இருப்பார்கள் ? இருந்திருப்பார்கள் ?எம்மை போல் தலை குனிந்து நின்றார்களா ? வெளியில் வந்து சொன்னால் நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

மே  18 ல் நாம் அழிந்தபோது சிங்களவர்கள் வெடியும் பால்சோறும் கொடுத்து கொண்டாடியவர்கள் காத்தான்குடியிலும் கொண்டாடியவர்கள் அப்போது எமக்கு இப்ப ரியூசன் எடுப்பவர்கள் என்ன செய்து கொண்டு இருப்பார்கள் ? இருந்திருப்பார்கள் ?எம்மை போல் தலை குனிந்து நின்றார்களா ? வெளியில் வந்து சொன்னால் நல்லது .

நிட்சயமாக இருக்காது. சிங்களவரோடு சேர்ந்து வெடி கொழுத்தி, பாற்சோறு உண்டு மகிழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள். அப்போ இந்த வகுப்பை அவர்களுக்கு எடுத்திருக்க வாய்ப்பில்லை. இப்போ தேவையாயிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நான் பெரிசாய் டிவிட்டர்,பேஸ்புக்,யூரியூப் நியூஸ்களை நம்புறதில்லை சிறித்தம்பி. இது உண்மையோ எண்டொருக்கால் பாருங்கோ?

அடடே இராணுவத்தினன், தேடுவது நம் தலைவரை! போகிற போக்கை பாத்தால் வெற்றி தூபிகள் இடிக்கப்பட்டு, சவேந்திர சில்வாவும் வெளிநாடுகள் தடைசெய்யப்பட்ட தளபதிகளும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நமது உற்பத்திகளை நியாய விலையில் பகிர்ந்தோம், மனம் பொறுக்கவில்லை சிதைத்தார்கள். இயற்கை தந்த வளத்தை பகிர மறுத்து அதை வைத்தே நிலங்களை பறித்தார்கள். இப்போ நாடு சுடுகாடு, வெளிநாட்டிடம் கடனுக்கும் சோத்துக்கும் பெரிய விலை கொடுத்து கையேந்துகிறார்கள். எப்படி போர் செய்தார்கள் என்பதையும் வெகுவிரைவில் எடுத்துரைப்பதோடு, குற்றவாளிகளையும் அடையாளம் காட்டுவார்கள். ராஜபக்ச குடும்பம் தலைதெறிக்க ஓடுமளவுக்கு விரட்டியடிக்கப்படுவார்கள். பழைய சண்டித்தனம் காட்டினால் தாங்களாகவே வலையில் விழுவார்கள்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing, people sitting, fire and outdoors

இது நேற்று கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்...
பாணுடன்,  ஒருவர் ஆவேசமாக கத்துகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

வயிறு பத்தியெரியுதே! அவர்களும் என்ன செய்வார்கள்? புலிகளை அழிக்கும்போது கொஞ்சம் பொறுத்திருந்து ஆதரவினை தாருங்கள், அவர்களை அழித்தபின் நான் நாட்டை கட்டியெழுப்புவேன் என்று ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி வாக்கு வேண்டி நாட்டை கொள்ளையடித்து, ஏழைகளின் வயிற்றில் அடித்து, தாங்கள் தங்களை பெருக்கிக்கொண்டார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டடோம் எனும் உண்மை தெரியும்போது வருவது ஆவேசமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.