Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிக்கான படை நடவடிக்கைக்கு தயார் நிலையில் பாதுகாப்புப் படை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Mon Jul 30 5:50:42 EEST 2007

வன்னிக்கான படை நடவடிக்கைக்கு தயார் நிலையில் பாதுகாப்புப் படை

கிழக்குப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த பாதுகாப்புப் படையினர் அடுத்து வன்னிப் பிரதேசத்தை மீட்டெடுக்கும் படை நடவடிக்கைக்கு ஆயத்தமாகி வருகின்றனர் என்று சிங்கள பத்திரிகை ஒன்று தகவல் வெளி யிட்டுள்ளது.

முதற்கட்டமாக இராணுவத்தினர் மேற்குக் கடலோர மன்னாரிலிருந்து கிழக்குக் கடலோர கொக்கிளாய் வரையிலான கடலோரத்தைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து சிறிய குழுக்களாக முன்னேறிச் சென்று முல்லைத்தீவு உட்பட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளப் படையினர் திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்நோக்கில் ஏற்கனவே ஓமந்தையிலிருந்து மன்னார் வரையில் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

ஓமந்தையிலிருந்து மணலாறு கொக்கிளாய் வரையிலான கிழக்குப் பிராந்தியத்துக்கென குடுமிமலையை மீட்டெடுத்த கமாண்டோ படையணியின் தளபதி தலைமையில் புதிய தாக்குதல் அணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னிப்பிரதேசத்தை மீட்டெடுக்கும் படை நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் தேவையான பணிப்புரைகளை வழங்குவதற்குமாக கூட்டுப்படைத் தளபதி எயார் ஷீப் மார்ஷல் பெரேரா மற்றும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் கடந்த 26 ஆம் திகதி வன்னிப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

`உதயன்

இதை நகைச்சுவை பகுதியில் இணைத்திருகலாமே கறுப்பி அக்கா .அத்துடன் தலைப்பை இப்படி மாற்றிவிடுங்கோ வன்னியில் படை நடவடிக்கை செய்து தற்கொலை செய்வதற்கு படையினர் தயாராக இருகின்றனர் என தெரியும் கால் வைக்கும் போது இவையளுக்கு

ஓமந்தையிலிருந்து மணலாறு கொக்கிளாய் வரையிலான கிழக்குப் பிராந்தியத்துக்கென குடுமிமலையை மீட்டெடுத்த கமாண்டோ படையணியின் தளபதி தலைமையில் புதிய தாக்குதல் அணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கமாண்டோ படையணி தலைவர் பெரிய ஹீரோவாக தெரிவார் ஏன் எனின் எதிர்தாக்குதல் இல்லாமல் பிடித்ததால் விரைவில் அவர் சீரோ என்பதை நிச்சயம் நிருப்பீப்பார்

இந்நோக்கில் ஏற்கனவே ஓமந்தையிலிருந்து மன்னார் வரையில் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

மட்டுபடுத்த பட்ட அளவில் சாவினை தழுவி கொண்டிருகின்றனர் என போட்டால் சிறப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இதை நகைச்சுவை என்று புறக்கணிக்க முயலிறதிலும் கிழக்கின் இராணுவ நடவடிக்கைகளின் வடிவங்களோடு இதை ஒப்பு நோக்குதல் நன்று.

கிழக்கிலும் இராணுவம் இரண்டு வகையில் முன்னேறியது. ஒன்று மரபு வழியில். அதற்கு உதவியாக இராணுவத்தின் அமெரிக்க பயிற்சி பெற்ற கமாண்டோ அணிகள் ஊடுருவல் வழிமுறைகளில் முன்னேறி எதிரியின் கவனத்தை சிதறிடிக்க.. மரபு வழி இராணுவம் இலகுவாக தனது இலக்கை அடைந்தது. உ+ம் வாகரை சமர்.

இதே முறைகளை அமெரிக்கப்படையின் வியட்நாம் போரிலும் பயன்படுத்தினர்.

கிழக்கில் உள்ளது போன்ற நிலை அல்ல வன்னியில் புலிகளின் நிலை. வன்னியில் ஏலவே இந்த வகை ஊடுருவல்கள் அனுரத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதுடன் புலிகளுடனான ஒரு சண்டையில் சுமார் 100 கமோண்டோ வீரர்களை பறிகொடுத்தனர். விளாத்திக்குளம் சமர் என்று நினைக்கிறம்.

ஆனால் இராணுவத்தில் ஆழ ஊடுருவும் அணிகள் மாங்குளம் வரை இன்னும் ஊடுருவக் கூடிய நிலை என்பதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது..! அது கமோண்டோ நகர்வுகளுக்கு உதவியாக அமையலாம்..! கமோண்டோ அணிகள் ஆழ ஊடுருவி ஒரு முக்கிய இலக்கை தாக்க முனையும் போது புலிகளின் கவனத்தை திசை திருப்பி மரபு வழி இராணுவத்தை இலகுவாக இழப்பின்றி இலக்கு நோக்கி நகர்த்தலாம் என்பது தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் வடிவங்களைப் பார்கையில் புலப்படுகிறது.

இராணுவம் வன்னியில் மேற்குக் கரையை கைப்பற்றி பூநகரியூடு யாழ் நகருக்கு இணைப்பை ஏற்படுத்துதல் அத்துனை சிரமமாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அது அவர்களுக்கு ஆபத்தான பின்விளைவுகளைத் தரம். ஆனால் அரசின் பிரச்சாரத்துக்கு நல்ல முதலாக அமையலாம்.

பார்ப்போம்.. போர் முனைகளைத் தீர்மானிக்க கூடிய சக்தி புலிப்படை அணிகளின் தாக்குதிறனிலும்.. புலனாய்வுத் திறனிலும் தான் அதிகம் தங்கியுள்ளது..!

Edited by nedukkalapoovan

உண்மைதான் நெடுக்ஸ் நீங்க சொல்லுவது புலிகளின் ராடர் நிலையை[ பெயர் மறந்து விட்டேன் அந்த முகாமின் ] கைபற்றும் நோக்கில் வந்த நூறு கொமாண்டோக்கள் பற்றியது என நினைகின்றேன் அந்த கொமாண்டோ அணி ஒருவரும் திரும்பவில்லை என நினைகின்ரேன்

உப்பிடித்தான் முன்னர் எல்லாம் இடங்களை பிடிப்பதுக்கு வான் பாதுகாப்போடு கடலாலை தரை இறக்குவது வழமையாக கொண்டு இருந்தனர்... அதுக்கு ஓயாத அலைகள் 1ன் முல்ல்லைதீவு தாக்குதலை முறையடிக்க அளம்பிலில் தரையிறக்க விட்டு கடலிலும் தரையிலும் இராணுவத்துக்கும் கடற்படைக்கும் கொடுத்த அடியுடன் அந்த போர் முறையே கை விட பட்டு விட்டது... !

எந்தவிதமான வளங்கல்களும், ஆதரவு களும் இல்லாது வரும் கொமாண்டோக்களின் செயறற்பாடுகளை முடக்குவது கடினம் இல்லை... இந்த கொமாண்டோக்களை காயப்படுத்தி விட்டாலே போதுமானது... இல்லை துரத்தி சுடுவதின் மூலம் ஓடவிட்டு பயங்காட்டி விடமுடியும்.... அச்சுறுத்தி விடுவது என்னும் போருக்குள் இது வரும்...

அடுத்தமுறை ஊடுருவும் போது வேண்டிய நேரம் எடுத்து பாதுகாப்பு நடவடிக்கை களை எல்லாம் கை கொண்டு தாக்குதல் இலக்குக்கு வர நிறய நேரத்தை எடுத்து கொள்வர்...

  • கருத்துக்கள உறவுகள்

முப்படைகளதும் தாக்குதல் தீவிரமடைகிறது வன்னியில் இயல்பு நிலை பெரிதும் பாதிப்பு

* உயர்தரப் பரீட்சை குறித்தும் அச்சம்

வன்னிப் பகுதியில் கடந்த சில தினங்களாக முப்படையினரதும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் அங்கு இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையிலும் 2 ஆம் தவணைப் பரீட்சை நடைபெற்ற நிலையிலும் தினமும் காலையிலும் நண்பகலிலும் வன்னியில் கடும் விமானத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

இந்த விமானத் தாக்குதலால் பாடசாலை மாணவர்கள் சிலர் படுகாயமடைந்ததுடன் பரீட்சை நிலையங்களிலிருந்து மாணவர்கள் தப்பியோடியுமுள்ளனர்.

க.பொ.த. பரீட்சை அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

வன்னியில் சகல பகுதிகளிலும் கடந்த வாரம் பல தடவைகள் இந்த விமானத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதேபோல் வன்னியை நோக்கி ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் தீவிரமடைந்துள்ளன.

யாழ். குடாநாட்டின் படைமுகாம்கள் பலவற்றிலுமிருந்து பூநகரி, பளை, ஆனையிறவு பகுதிகளை நோக்கியும் வவுனியாவில் பல்வேறு படைமுகாம்களிலிருந்து புளியங்குளம், பாலமோட்டை, மடுப் பகுதிகளை நோக்கியும் மன்னாரில் படைமுகாம்களிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கியும் மணலாறிலிருந்து நெடுங்கேணி மற்றும் அதனையண்டிய பகுதிகளை நோக்கியும் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இதேபோன்று முல்லைத்தீவு கடற்பரப் பிலும் மன்னார் கடற்பரப்பிலும் கடற்படை யினரின் நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளதுடன் பீரங்கித் தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன.

வன்னிக் கடற்பரப்பில் மீனவர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

முப்படையினரும் வன்னியில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திவரும் நிலையில் அங்கு இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.