Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பில் தமிழில் இருந்த வீதிப் பெயர் சிங்களத்தில் மாற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அத்துமீறியக் குடியேறியவர்களை அப்புறப்படுத்தி அங்கு சுமூக நிலையை ஏற்படுத்துக - ஜெயானந்த மூர்த்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீறாவோடை தமிழ் கிராமத்தில் அரச காணியில் அத்துமீறி குடியேறி வருபவர்களை உடனடியாக அப்புறப்படுத்தி அங்கு சுமூக நிலையை ஏற்படுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அரச அதிபர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக கல்குடா தொகுதியிலுள்ள தமிழ் கிராமங்களை நோக்கியும் தமிழ் பிரிவுகளிலுள்ள அரச காணிகளிலும் அண்மைக்காலமாக துரித கதியில் குடியேற்றங்கள் இடம் பெற்று வருகின்றன. குறிப்பாக நாவலடிச் சந்தி, புனாணை கிழக்குப் பகுதி, வாகனேரி போன்ற பகுதிகளில் திட்டமிட்ட முறையில் பல குடியேற்றங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் மிறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவிலும் கடந்த சில தினங்களாக மளமளவென அத்துமீறிய நிலையில் குடியேற்றங்கள் இடம் பெற்று வருகின்றன. இதனால் இப்பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த குடியேற்றங்களின் பின்னணியில் முஸ்லிம் அரசியல் வாதிகள் இருப்பதாக தமிழ் மக்கள் ஜெயானந்தமூர்த்தி எம்.பியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அத்துடன் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இக்குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாழைச்சேனை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்னாலும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இதையடுத்து இன்று திங்கட்கிழமை ஜெயானந்தமூர்த்தி எம்.பி. மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அரச அதிபரின் கவனததிற்குக் கொண்டு வநதார். இப்பிரதேசத்தில் இக்குடியேற்றத்தை நிறுத்தாவிட்டால் இரு இனங்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் அது பாரிய விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதையும் அவ்வாறான நிலை தோன்றாமல் இருப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் எடுத்துக் கூறியிருந்தார்.

கடந்த 90 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்கள் அரசில் வாதிகளின் பின்னணியில் இடம் பெற்று வந்தன. இதனால் எல்லைப் பகுதியிலுள்ள தமிழ் கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் இடம் பெயரவேண்டிய நிலை ஏற்பட்டது. அது மாத்திரமின்றி பல தடவைகளில் இதனால் கலவரங்களும் இடம் பெற்றன.

இந்நிலை கடந்த சில வருடங்களாக ஒய்ந்திருந்தபோதிலும் தற்போதை க்pழக்கின் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மேற்படி அத்துமீறிய குடியேற்றங்கள் இடம் பெற்று வருகின்றன.

இதேவேளை வாழைச்சேனை காகித கம்பனியின் உற்பத்தியை முடக்கி அதை மூடி விடுவதற்கும் திரை மறைவில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த காகித ஆலை பழமை மிக்க ஒரு உற்பத்தி நிறுவனம் எனவே இதை அபிவிருததி செய்ய வேண்டுமே தவிர மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என கைத்தொழில் அமைச்சருக்கு ஜெயானந்தமூர்த்தி எம்.பி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

-பதிவு

Edited by கந்தப்பு

'வேப்ப வெட்டுவான் வீதி' யின் பெயர் 'ராஜபத்திரன மாவத்தை' ஆகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட பதுளை செங்கலடி வீதியில. உள்ள இலுப்படிச்சேனை சந்தியில் தொடங்கிச் செல்லும் 'வேப்பவெட்டுவான்' வீதிக்கு 'ராஜபத்திரன மாவத்தை' என்று சிங்களப்பெயரிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாதம் 28ம் திததி தொப்பிகலவிற்குச் சென்ற பாதுகாப்பு அமைச்சசின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ இந்த வீதிக்கான புதிய பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார் என்றும் தெரிய வருகின்றது.

கிழக்கை சிங்களமயமாக்கும நோக்கிலேயே அரசு இவ்வாறு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்திருக்கும் த.தே.கூட்டமைப்பு இதற்குத் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் கூறியதாவது:

கிழக்கை முழுமையாகச் சிங்கள மயமாக்கும் முயற்சியில் அரசு மிகவும்தமீவிரமாக இறங்கியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக மட்டு. பதுளை-செங்கலடி வீதியில் உள்ள இலுப்படிச்சேனை சந்தியில் தொடங்கிச் செல்லும் வேப்பவெட்டுவான் வீதியை ராஜபத்திரன மாவத்தை என்று அரசு பெயர்மாற்றியள்ளது.

குடுமிமலைக்கு இம்மாதம் 28ம் திகதி விஜயம் செய்த கோட்டபயா இதற்கான பெயர்ப்பலகையைத் திரை நீக்கம் செய்து வைத்துள்ளார்.

இந்த வீதியின் ஊடாகக் குடுமிமலைக்கு சிங்களவர்களைக் கொண்டு வந்து, குடுமிமலைப் பகுதிகளில் அவர்களைக் குடியமர்த்தவே அரசு முற்படுகின்றது.

ஒரு வீதியின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்றால் அப்பிரதேசசபையினதும் மக்களினதும் அனுமதியைப் பெறப்படவேண்டும் என்பது விதி.

ஆனால், தமிழர் தாயகத்தில் அந்த விதியை முற்றாக மீறி அரசு செயற்படுவதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.

நன்றி : சுடர் ஒளி

வெற்றி வெற்றி கரிநாகத்தின் முதற் அரசியல் வெற்றி

மட்டக்களப்பில் உள்ள தமிழ் பெயரில் இருந்த ஒரு விதி தற்போது சிங்கள பெயரில் மாற்றப்பட்டு விட்டது........

இது கரிநாகத்தின் அரசியல் வாழ்க்கையில் முதற் வெற்றி

டக்கிளசின் பல அரசியல் வெற்றியில் இதுவும் ஒன்றாக இடம் பெறுகிறது...........

Street name changed from Tamil to Sinhala in Batticaloa[TamilNet, Tuesday, 31 July 2007, 11:08 GMT]

Veappavedduan Road located north of Iluppadichcheanai junction along Chenkaladi-Badulla road in Batticaloa has been renamed as Rajapathirana Mawatte, Saturday, civil society sources in Batticaloa said. Sri Lanka's Defense Secretary, Gothabaya Rajapakse, who visited Kudumpimalai (named Thoppigala in Sinhala) area ceremonially declared open the new name board, sources said.

Iluppadichcheanai junction is located 8 km from Chenkaladi towards Karadiyanaaru.

Tamil National Alliance (TNA) parliamentarians said late Corporal Rajapathirana was the first Sri Lanka Army (SLA) soldier to die in the battle to take Kudumpimalai from the Liberation Tigers and the road was named to honor him.

SLA soldiers razed the statue for LTTE's Lt.Col. Jeevan which stood at Iluppadichcheanai junction to the ground before installing the name board for the road, sources said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22880

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் தமிழில் இருந்த வீதிப் பெயர் சிங்களத்தில் மாற்றம்

[செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 17:50 ஈழம்] [ப.தயாளினி]

மட்டக்களப்பு இலுப்படிச்சேனை சந்தியில் தமிழில் இருந்த வீதிப்பெயரை சிங்களத்தில் மாற்றம் செய்து அதன் பெயர் பலகையை மகிந்தவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச திறந்து வைத்துள்ளார்.

இலுப்படிச்சேனை சந்திக்கு வடகே செங்கலடி-பதுளை வீதியில் வேப்பவெட்டுவான் வீதி அமைந்துள்ளது. இந்த வீதியின் பெயரை தற்போது ராஜபத்திரன மாவட்ட என்று மாற்றியுள்ளனர். அண்மையில் குடும்பிமலை பிரதேசத்துக்கு சென்றிருந்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் மகிந்தவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச, இப்பெயர் மாற்றப் பலகையைத் திறந்து வைத்துள்ளார்.

செங்கலடியிலிருந்து 8 கிலோ மீற்றர் தொலைவில் கரடியனாறு நோக்கியதாக இலுப்படிச்சேனை அமைந்துள்ளது.

குடும்பிமலையை ஆக்கிரமிக்க நடந்த மோதலில் இறந்து போன சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த முதலாவது நபரின் பெயர் கோப்ரல் ராஜபத்திரன என்றும் அதனால் அந்தப் பெயரை வீதிக்கு வைத்துள்ளனர் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிங்களப் பெயர் பலகையை வைப்பதற்கு முன்பாக இலுப்படிச்சேனை சந்தியில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் லெப். கேணல் ஜீவனின் உருவச்சிலையை சிறிலங்கா இராணுவத்தினர் சிதைத்துள்ளனர்.

http://www.eelampage.com/?cn=32831

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.