Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

கடல் நீரை குடிநீராக்கும் கருவி : இந்திய விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு


Recommended Posts

பதியப்பட்டது

கடல் நீரை குடிநீராக்கும் கருவி : இந்திய விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு

உலகின் பல்வேறு நாடுகள் குடிநீர் பிரச்சினையில் சிக்கியுள்ள இந்த தருணத்தில், கடல் நீரை குடி நீராக்கி மாற்றுவதற்கான நவீன வழிகளை உருவாக்க, அமெரிக்காவில் உள்ள இந்திய விஞ்ஞானி கமலேஷ் ஸிர்க்கார் முயற்சித்து வருகிறார்.

இதற்கென்று "நானோ தொழில்நுட்ப" (னனொ டெச்னொலொக்ய்) முறையில் இயங்கும் ஒரு கருவியும் அவர் தயாரித்துள்ளார்.

சுத்தமான குடி நீரின் பற்றாக்குறையால் மக்கள் சுகாதாரமற்ற குடி நீரை பயன்படுத்துவதன் காரணமாக காளரா, டைஃபாய்ட் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகம் சிரமப்படும். மலச்சிக்கல் வரும் உலர்ந்துபோகும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சிறுநீரகத்தின் வழியே சென்றாக வேண்டும் இல்லாவிடில் பாக்டீரியாக்கள் அங்கேயே தங்கி விடும் முதுகு வலி, சிறுநீர் கழிக்கையில், எரிச்சல் என்று அனேக உபாதைகளை கொடுக்கும். சிறுநீரகத்தில் கல் அடைப்பு (Kஇட்னெய் ஸ்டொனெச்) நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க சுத்தமான தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

மழையை மட்டும் நம்பினால் வரும்காலத்தில் குடி நீர் பிரச்சினையை தீர்க்க முடியாது என்ற நிலையில் இனி கடலில் மட்டும் தான் போதுமான அளவிற்கு தண்ணீர் உள்ளது என்ற நிலைமை வந்துகொண்டிருக்கிறது!

கடல் நீரிலிருந்து உப்பு மற்றும் பல்வேறு பொருட்களை வெளியேற்றுவதற்கு "டி ஸலைனேஷன்" (Dஎசலினடிஒன்) என்ற முறை தற்போது பயன்படுத்தி வருகிறது. அதிக செலவு ஏற்படும் வகையிலான இந்த முறை தான் மத்திய கிழக்கு பகுதியிலுள்ள ஏராளமான நாடுகள் பயன்படுத்துகின்றன.

"டி ஸலைனேஷன்" முறையில் செலவு அதிகம் என்பது மட்டுமல்லாமல் இதற்கு வேகமும் குறைவு தான்.

நானோ தொழில்நுட்ப முறைப்படி கடல் தண்ணீரை வெகு விரைவாக சுத்திகரிக்க முடியும், இருப்பினும் செலவு ஏறத்தாழ டி ஸலைனேஷன் முறைக்கு சமமாகத்தான் வரும் என்கிறார் கமலேஷ் ஸிர்க்கார்.

கடந்த 20 வருடங்களாக உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தி வரும் "சவ்வினால் பிரித்தல்" (மெம்ப்ரனெ செபரடிஒன்) என்ற முறையை மேம்படுத்தும் வகையிலான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் இவர்.

வழக்கமான முறையிலிருந்து மாறாக இவர் நானோ தொழில் நுட்ப முறை பயன்படுத்துகிறார். அதனால் குறைந்த சமயத்தில் சுத்திகரிப்பு சாத்தியமாகும்.

அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி தொழில் நுட்ப கல்லூரியில் சவ்வு தொழில்நுட்ப மையத்தின் இயக்குநராக செயலாற்றும் திரு. கமலேஷ் ஸிர்க்கார் 1963 -ம் ஆண்டில் கொரக்பூர் ஐ.ஐ.டி.யிலிருந்து இளம்கலை பட்டம் பெற்றவர். பிறகு அமெரிக்காவில் உள்ள இல்லினோய்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து 1966 ம் ஆண்டில் முதுகலை பட்டமும், 1996 ம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார்.

இந்திய வேதியியல் விஞ்ஞானிகளின் பயிலகம் (Tகெ ஈன்டிஅன் ஈன்ச்டிடுடெ ஒf Cகெமிcஅல் ஏஙினேர்ச்) வழங்கும் சிறப்பு பேச்சாளருக்கான விருதை முதன்முறையாக பெற்றவர் இவர். வேதியியல் தொழில் நுட்பம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற விஷயத்தில் சென்னையில் நடந்த உலகளாவிய கருத்தரங்கத்தில் வைத்து இந்த விருதை பெற்றார்.

உலகெங்கும் குடிதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கடல்நீரை நானோ தொழில் நுட்ப முறையில் சுத்திகரிப்பதற்கான இவரது முயற்சிகள் வெற்றிபெறும் நாள் வரை நாமும் காத்திருப்போம்.

Posted

நீரை பெறுவதற்கு இப்படியும் ஒரு முறை உள்ளது. அதாவது வளியில் உள்ள நீராவியை குளிர்மைப்படுத்தி பெறுதல் - Atmospheric water generation

Operation.jpg

இதுபற்றி மேலதிகமாக அறிய இங்கே சொடுக்கவும்...

http://en.wikipedia.org/wiki/Atmospheric_water_generator

Posted

இயற்கையாகக் கிடைக்கும் குடிநீரில் உடலுக்குத் தேவையான கனியுப்புக்கள் உள்ளன.

கடல் நீரை ஆவியாகுவதன்ழூலம் கிடைக்கும் நீரில் கனியுப்புக்கள் இல்லை. இந்நீரைக் குடித்தால் ஏற்கனவே உடலில் உள்ள கனியுப்புக்கள் சிறுநீர் மூலம் வெளியேறி மிக ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதை எக்காரணம் கொண்டும் செய்ய மாட்டார்கள் என நினைக்கின்றேன். இராணுவமும் அதே நிலைகளில் இருக்கும். பல அனாவசிய அரச செலவுகளை அதிரடியாக குறைத்துக்கொண்டிருக்கும் அனுர தேவையில்லாத இராணுவ செலவுகளை குறைப்பாரா என அடுத்த வருடத்தில் பார்க்கலாம்.
    • புதுமைப் பெண்களடி . .........!  😍
    • மறவன்புலவும் சாவகச்சேரி ஏரியாதான் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 😂
    • ஓம்.  நான் கேட்ட கேள்விகளிலே இதற்கு பதில் இருக்கிறது 
    • வணக்கம் வாத்தியார் . .......! பெண் : அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் என் சிலம்பொலியும் புலம்புவதை கேள் பெண் : விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது பெண் : தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது பெண் : விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது பெண் : வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதில் ஏதும் இல்லாத கேள்வி ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புற பெண் : பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது பெண் : நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது பெண் : {தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை} (2) வேறென்ன நான் செய்த பாவம்.......! --- அழகு மலராட ---
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.