Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பக்கத்திவீடு குறுந்திரைப்படம் இணையதளத்தில் வெளிவந்துவிட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கத்திவீடு குறுந்திரைப்படம் இணையதளத்தில் வெளிவந்துவிட்டது.

http://www.bagavan.com/PakkathiVeedu/

வணக்கம்!

படத்தில் நடித்தவர்கள் மிகநன்றாக நடித்துள்ளனர். அவர்களிற்கு பாராட்டுக்கள்...

ஆனால்...

இப்படியும் கதை எழுதி படம் எடுப்பதா? படத்தின் மிக நன்றாக இருந்தது. கடைசியில் தமிழ் சினிமா ரேஞ்சில் கிளைமாக்சை கொண்டு வந்து இந்தஹ் குறும்படத்தை நாறடித்துள்ளார்கள்.

என்னங்க கனடா நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறும் அளவிற்கு அங்குள்ளவர்கள் காதில் பூவா வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்? இந்த கதை மூலம் சொல்லவரும் செய்தி என்ன? பக்கத்துவீட்டு காரனை நம்பி மோசம் போகாதே என்பதா? இதை சொல்வதற்கு கதையின் கிளைமாக்சை இவ்வளவு தூரம் நாறடிக்க வேண்டுமா?

படம் மிக அழகாக இருந்தது பார்ப்பதற்கு, ஆனால் இறுதிப்பகுதியை சொதப்பிவிட்டார்கள்.

அடுத்தபடத்தில் கதையிற்கு முக்கியத்துவம் கொடுக்கவும். தமிழ் சினிமாவை கொப்பிபண்ணும் வேலைகளிற்கு போகாவிட்டாலே படம் அரைக்கண்டத்தை தாண்டி வெற்றிபெற்றுவிடும்.

நன்றி!

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் ஐயா எதுக்கெடுத்தாலும் செல்ல வரும் செய்தியை தேடி அலைகிரீகள். செய்தி சொல்லாமல் பொழுதுபோக்கிற்கு படம் எடுத்தால் என்ன தப்பு. செய்தியோ அறிவுரையோ சொல்லிதான் படம் எடுக்க வேண்டும் என்று யார் உங்களுக்கு சொன்னது? இல்லாட்டில் எமது மக்கள் தான் அவளவு பின்தங்கியவர்களா யார் வேண்டுமானாலும் அறிவுரை சொல்வதற்கு. பக்கத்திவீட்டில் எந்த ஒரு செய்தியும் இல்லை தயவுசெய்து அதில் செய்தியை தேடாதீர்கள். உங்களுக்கு செய்திதான் தேவை என்றால் எமது உறுதி திரைப்படத்தை பாருங்கள். உறுதி முறைப்படி வைத்தியர்களின் உதவியோடு மன அழுத்த நோயைபற்றிய ஒரு விளிப்புணர்வை புலம் பெயர்ந்து வாழும் எம் மக்களிடையே கொண்டுவரும் நோக்குடன் எடுக்கப்பட்டது.

Edited by இணையவன்

அருமையயான வில்லன் தேர்வும் நடிப்பும் ஒளிப்பதிவும்...

கதை.... :rolleyes: கஸ்ரப்பட்டு எடுத்தீர்களோ... :P :rolleyes:

நான் நினைத்தேன்..தனுஜன் சொல்லிவிட்டார். எல்லாவற்றிலும் messaage தேடாதீர்கள். இருந்தால் உங்கள் அதிஸ்டம். இல்லாவிட்டால் அந்த படைப்பு தரும் அனுபவத்தை பெற முயற்சி செய்யுங்கள். குறும்படங்கள் மாத்திரமல்ல பெரிய படங்களும் செய்திகள் சொல்லவேண்டுமென அவசியமா? ஒரு அனுபவம் பெறுகிறீர்கள்.

ஒரு படைப்பாளி தனது குறும்படத்தை ஒரு பொறியிலிருந்து ஆரம்பிக்கிறான். ஒரு செய்தி, யாருக்கோ நடந்த ஒரு சம்பவம். அதை தனது பார்வையில் தருகிறான். இதை தூ என்று சொன்னது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை தந்தது. இப்படி சம்பவம் கனடாவில் நடக்குமா என்று கேட்டிருந்தீர்கள். கனடாவில் மாத்திரமல்ல பல நாடுகளிலும் இப்படி சம்பவங்கள் நடக்கின்றன.

THE PSYCHOPATH என்பவர்கள் மற்றவர்களுக்கு இழைக்கும் துன்பங்களுக்கு எந்த நேரத்திலும் மனம் வருந்தாதவர்கள்.. அவர்களுக்கு நாங்கள் சொல்லும் மனச்சாட்சி என்ற சங்கதியே இல்லை. தங்களை நல்லவர்கள் போல முகமூடி போட்டு மறைத்துக்கொள்வார்கள். அதைத்தான் அந்த பொய்ப்பல் உணர்த்தமுற்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

இனி செய்திக்கு வருவோமே.. சட்ட ரீதியாகத்தவிர வேறு அன்னியர்களிடம் எங்கள் நாலுசுவர்களுக்கிடையில் நடக்கும் விசயங்களை பங்கிடக்கூடாது என்று வைத்துக்கொள்ளலாமே.

தென்னிந்திய சினிமாவுக்கு இதை ஒப்பிடுகிறீர்களே. முக்கிய பாத்திரங்களில் நடித்த இருவரும் எவ்வளவு சிறப்பாக தங்கள் பாத்திரங்களை கொண்டு வந்தார்கள். அந்த பெண்ணின் அழுகை சிரீயல் நாயகிகள் அழும் போலியானதென அப்பட்டமாக தெரியும் அழுகை போன்றதா?

பக்கத்தி வீடா? பக்கத்து வீடுதானே ?

இந்தபடத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

:rolleyes:

Edited by Ponniyinselvan

வணக்கம்!

சரி, பொழுதுபோக்கிற்கு எடுத்ததாக சொன்னீர்கள். இந்தவகையில் பார்த்தால், மற்றவர்களிற்கு எப்படி தோன்றுகின்றதோ தெரியாது, ஆனால் படத்தை பார்த்து முடிந்ததும் எனக்கு வயிற்றை குமட்டியது.

நான் இதை நம்மவர்களின் படைப்பு, இதை ஊக்கப்படுத்தவேண்டும் என்பதால் தான் மினக்கட்டு வந்து பார்த்தேன். எனவே, ஆரம்பத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இன்னொரு வகையில் சொன்னால் பொழுதை போக்காட்டுவதற்காக இதை பார்க்கவில்லை. பொழுதை போக்காட்ட எனக்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன.

இவை எனது தனிப்பட்ட கருத்துக்கள்.

ஒரு படம் எடுப்பது எவ்வளவு கடினம் என எனக்கு நன்கு தெரியும். தங்கள் முயற்சியை நான் தூக்கி எறிவதாய் நினைக்க வேண்டாம். படைப்பாளிகளிற்கு வாழ்த்துக்கள்!

நன்றி!

நீங்கள் சொல்வது சரி, எம்மை போன்றவர்கள் இதை பார்த்திருக்க கூடாதுதான். தவறுக்கு வருந்துகின்றேன்..

எப்படியான விமர்சனம் வரவேண்டும் என எதிர்பார்த்தீர்கள்? இங்கு இதை ஒட்டும்போது நாங்கள் எமது கருத்துக்களை எழுதுவோம் என்று உங்களுக்கு தெரியும்தானே?

நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கலைஞன்

கலைஞன் என்ற புனை பெயரை வைத்துக்கொண்டு ஒரு கலையை பார்க்க உங்களுக்கு வயிற்றை குமட்டுகின்றது என்கின்றீர்களே? இது பொருத்தமாகவா இருக்கின்றது?

ஆயிரம் வேலைகள் இருக்க எங்களை ஊக்குவிப்பதற்காக பக்கத்திவீட்டை பார்த்தீர்கள் என்கின்றீகளே? ஊக்குவிக்கும் முறையா ஐயா இது? ஓரு கலையை விமசரிப்பது இப்பிடியா? இல்லை தெரியாமல் தான் கேக்கின்றேன் உங்களைப்போன்றவர்கள் இப்படங்களை பார்பதால் இப்படத்தை உருவாக்கிய கலைஞர்களுக்கு என்ன தான் ஊக்கம் கிடைக்கின்றது என்று கெஞ்சம் எடுத்துரைப்பிர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கலைஞன்

உங்கள் கருத்தை சொல்வதற்க்கு ஓரு முறை உள்;ளது என்பதைதான் உங்களுக்கு சொல்ல எத்தணிக்கின்றேன் தவிர பக்கத்திவீடு சரியென்றோ தங்களுடைய விமர்சனம் பிளையெண்டோ நான் சொல்ல வில்லை. உங்களுடைய வார்த்தை பிரையத்தால் எத்தனை போர் பக்கத்திவீட்டை பார்க்காமலே போயிருப்பார்களோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனுயன் அண்ணா..... கலைஞன் அண்ணா சொன்னதில என்ன தப்பிருக்கெண்டு எனக்கு தெரியல. குமட்டுது எண்டத குமட்டுது எண்டுதானே சொல்லேலும். வேற எப்பிடி சொல்லுறது. கடைசிக்காட்சி அப்படியான ஒரு காட்சிதானே? அது ஒரு அருவருப்பான காட்சிதானே......... அந்த படத்தில ஆளை வெட்டுற காட்சிய நேர காட்டேல எண்டாலும் கத்தி கழுவுறதும் ...... கடைசில கை தெரியுறதும் ..... பாக்கை மூடிக் கட்டுறதும்..... எங்களுக்குள்ள காட்சிய முழுமப்படுத்துதுதானே.... அப்ப பெரும்பாலான ஆக்களுக்கு அப்படியான குமட்டுற உணர்வு தான் வரும். அது நொர்மல். அதத்தான் கலைஞன் அண்ணா வெளிப்படுத்தியிருக்கிறார். அதில தப்பிருக்கிறதா எனக்கு தெரியல. அதோட அவர் படத்த தப்பு சொல்லேலயே. தனக்கு ஏற்பட்ட உணர்வத்தானே சொல்லியிருக்கார். நீங்க படத்த காட்டி கூடுதலான தமிழ் பெண்களிட்ட கேட்டு பாருங்கோ ....... அப்பிடித்தான் சொல்லுவினம். படத்துக்கு முதல் நீங்க இந்தப்படத்த எந்த வயது ஆக்கள் பார்க்கலாம்.... இளகின மனசான ஆக்கள் இதுகள பாக்கிறத தவிர்க்கிறது நல்லது எண்டு போட்டிருக்கலாம்.

கொலிவூட் படங்களோட ஒப்பிடேக்க இந்த காட்சி பெரிய பயங்கரமில்ல..... saw I & saw II பாத்தாக்களுக்கு இது தெரிஞ்சிருக்கும். அதப்போல Peter Jackson அ நிறையபேருக்கு தெரிஞ்சிருக்கும்.... The Lord of the Ring படத்த டைரக்ட் செய்தவர்..... கிங் கொங் படத்தையும் டைரக்ட் செய்தவர்.... அவரின்ர Braindead படம் பாருங்க.... படம் முழுக்க குமட்டல் காட்சிகள் தான்...... கலைஞன் அண்ணாக்கு recommend பண்றன்.... :D அந்த படத்த பார்த்திட்டு என்ன மெசேச் இருக்கெண்டு சொல்லுங்க...... :mellow:

மற்றும்படி ஹி ஹி ...... பக்கத்திவீடு படம் நல்ல திரில்லிங்கா இருந்தது. இப்பிடியான படங்கள் நிறைய பாத்ததாலயோ என்னவோ ஒரளவுக்கு இப்பிடித்தான் கதை போகப்போகுது எண்டு ஊகிக்க முடிஞ்சுது. கமரா கோணங்கள் நல்லா இருந்தது. லைட்டிங்கும் நல்லா இருந்தது. இப்பிடியான படங்கள் தமிழில வாறது நல்ல விசயம். அந்த அண்ணாட நடிப்பு நல்லா இருந்தது. ஆனா.... அந்த அக்கான்ர நடிப்பு பெருசா எடுபடல. அழுற நேரங்களில பதட்டபடுற நேரங்களில சரியான உணர்வ அந்த அக்கா வெளிப்படுத்தல. ஆனா முயற்சி செய்திருக்கிறா.... பாராட்டு சொல்ல வேணும். வீடு பாத்துக் குடுக்கிற அண்ணாவும் நல்லா நடிச்சிருக்கிறார்.......

படத்தில சில சின்ன சின்ன குறையள் இருக்குத்தான். ரைட்டிலில வாற அந்த மெல்லிய கோடுகள் போய் போய் வாற grain effect தொடந்தும் படம் முழுக்க வாறது எதுக்கு எண்டு விளங்கேல. அது போடவேண்டிய அவசயம் என்னெண்டும் விளங்கல.... சிலநேரம் அதுக்கு காரணம் ்ரக்கலாம்... ஆனா எனக்கு அந்த கோடு போய் போய் வாறது குழப்புற மாதிரி இருந்திச்சு....

சவுண்ட் விசயத்த இன்னும் கவனிச்சிருக்கலாம். இரைச்சல் தன்மை இருக்கு. மைக்ல filter போடேலயோ தெரியல. இல்லாட்டி சவுண்ட் எடிட்டிங்கில அத கொஞ்சம் ககவனிச்சிருக்கலாம் எண்ட நினைக்கிறன்..... மற்றது சில இடங்களில சவுண்ட் கூடிக் குறையுது....

சில இடங்களில கமரா மூவ்மென்ற்ஸ் smooth இல்லாத மாதிரி இருக்கு. அசைவு முடிஞ்சு நிப்பாட்டுற இடங்களில ஒரு சின்ன ஆட்டம் இருக்கிற மாதிரி தெரியுது.

படத்தில continuity பிழையள் சிலதுகளும் இருக்கு.

வீட்டுக்கு அந்த அண்ணா குடிவாறதுக்கு முதல் வீடு எப்பிடி இருந்ததோ (சுவத்தில இருந்த படங்கள்.... சோபா.... மேசை....எல்லாம் அந்தந்த இடத்திலயே வீடு மாறி அந்த அண்ணா வந்தபிறகும் இருக்கு. எல்லாம் பக்காவா கிளீனா இருக்கு.....

வாசலடில வீட்டுக்கு குடிவாறதுக்கு முதலே ரண்டு சோடி சப்பாத்து இருக்கு. (00:23 நிமிடத்தில)

அதப்பொல வீடு பாத்திட்டு போகேக்க அந்த வில்லன் அண்ணா சப்பாத்து போடாமல் சொக்சோட மட்டும் போறார். (2:45 நிமிடத்தில)

மற்றது அந்த அக்கா முதல் தடவை இந்த வில்லன் அண்ணான்ர வீட்டுக்குள்ள வரேக்க வாசலில நிறைய சப்பாத்துகள் இருக்கு. (13:50 நிமிடத்தில)

அதில நிறைய சப்பாத்துகள் அந்த அண்ணான்ர காலை விட பெரிய சப்பாத்துகள். (13:50 நிமிடத்தில)

அடிக்கடி வாசலக் காட்டுற நேரத்தில எல்லாம் சப்பாத்துகள் கூடி குறைஞ்சு இருக்கு.

ரண்டாம் தடவை அந்த அக்கா கதவ தட்டேக்க இந்த அண்ணா சோபால இருந்து எழும்பி போகேக்க வாசலில ரண்டு சோடி சப்பாத்து இருக்கும்...... படம் தொடங்கேக்க இருந்த மாதிரி..... அதே பொசிசனில. (15:26 நிமிடத்தில)

கிளைமக்ஸ் காட்சியில ஒரு இடத்தில கமரா ஸ்ரான்ட் இருக்கிறது தெரியுது. (19:48 நிமிடத்தில)

கிளைமக்ஸ் காட்சில அந்த அக்கா மயங்கி விழேக்க அவான்ர தலைக்கு பின்னால நிறைய வயருகளும் ஒரு வெள்ள ஸ்ரான்டும் இருக்கு..... அது முதல் அந்த இடத்தில இருக்கேல.... அநேகமாக லைட் ஸ்ராண்டா இருக்கலாம்....... (19:51 நிமிடத்தில)

தொடக்கத்தில (7:48 நிமிடத்தில) உள்ளுக்க ஒரு அலுமாரிக்கு மேல இருந்த அந்த மஞ்சள் லைட் .... பிறகு ஒரு இடத்தில (10:36 நிமிடத்தில) வெளில ஒரு ஸ்ராண்டில இருக்கு. சிலநேரம் அத அவர் இடம் மாத்தி வைச்சிருக்கலாம்....

இன்னொண்டு யன்னலுக்கு கிட்ட மேல தொங்கிக்கொண்டு நிக்கிற மணிக்கூடு. 9:09 நிமிடத்தில அந்த அண்ணா சோபால இருக்கேக்க ரைம் 1:25. கதவு தட்டுறது கேட்டு எழும்பி நடக்கேக்க நேரம் பொருத்தமில்லாமல் காட்டுது. அவர் போகேக்க கண்ணாடில மணிக்கூடு தெரியுது அதில பார்த்தால் தெரியும். பின்னுக்கு பாட்டு போய்க்கொண்டிருக்கிறதால தான் இந்த வித்தியாசம் தெரியுது.

எப்ப பாத்தாலும் அநேகமான லைட்டுகள் எரிஞ்சுகொண்டு இருக்கு...... இரவு பகல் பாராம....

இன்னொரு பிரச்சனையும் இருக்கு. reflection பிரச்சனை. உதாரணமா படத்தின்ர தொடக்கத்தில கதைச்சுக்கொண்டிருக்கேக்க வில்லன் அண்ணாவ கிட்டவா காட்டுவினம். அப்ப அவர் போட்டிருக்கிற கண்ணாடில படத்தில நடிக்காத ஒராள் தெரியுறார். (2:20 நிமிடத்தில) வேற இடங்களிலயும் இந்தக் பிரச்னை இருக்கலாம்....... இன்ரர்நெட்டில குவாலிட்டி இல்லாம இருக்கிறதால பெருசா தெரியல.

இதில சில பிழையள் முதல் தடவைல கண்டுபிடிச்சதுகள். மற்றது பிழை கண்டு பிடிக்கோணுமெண்டு கஸ்ரப்பட்டு திரும்ப ஒருக்கா போட்டு தேடிப் பிடிச்சதுகள். இந்த இந்த இடங்களில பிழையள் வருமெண்டு முந்தி ஒரு கட்டுரை வாசிச்ச ஞர்பகம் ... அதால அந்த இடங்கள தேடிப் பாத்தனான். உதாரணமா அந்த மணிக்கூட்டு விசயம் மற்றது கண்ணாடி விசயம். படம் திரில்லிங்கா போனதால இந்த பிரச்சனையள் ஒண்டையும் ஆக்கள் கவனிக்காயினம். ஆனா கூட உறுத்தினது அந்த சப்பாத்து விசயம். ஆனா என்னதான் கவனிச்சு எடுத்தாலும் எங்கயாவது ஒரு இடத்தில இப்பிடியான சின்ன பிழையள் வாறது தவிர்க்கெலாது தான்....

உண்மைல படம் எனக்கு பிடிச்சிருந்துது..... குவாலிட்டியாவும் இருந்துது..... காட்சிகள் அழகா இருந்தாலும் இந்த ரைப் திரில்லிங் படத்துக்கு இப்பிடியான rich ஆன லுக் தேவையா? திரில்லிங்க கூட்டுறதுக்கு சிலநேரம் இது தேவை பட்டிருக்கலாம் எண்டு நினைக்கிறன்.

கலைஞன் அண்ணா...... மெசேச்சுக்காக குறும் படம் எடுக்கணும் எண்டில்ல..... ஆனா மெசேச் இல்லாம குறும்படம் இருக்காது. அனுபவங்கள சம்பவங்கள அப்பிடியே காட்டுறதா கூடு இருக்கலாம். இந்தப் படத்தில சில மெசேச்சுகளும் இருக்கு.

2 வருசமா பழகியும் தன்ர மனுசிய புரிஞ்சு கொள்ள முடியாத கணவன்....

அவன்ர சந்தேக புத்தி...... ஆரோ சொன்னதெண்டு மனுசிய சந்தேகப்படுற புத்தி.... அதால வாற பாதிப்பு

மனுசிய அடிக்கிறது..... ஆணாதிக்கத் தன்மையள்.....

எங்கட மக்களிட்ட இருக்கிற உளவியல் பிரச்சனையள்....

தாழ்வு மனப்பான்மை...

அடுத்தவை சந்தோசமா இருக்கிறது பிடிக்காத தன்மை..... அத குழப்பிற தன்மை....

வெளிநாட்டில வாழுற எங்கட மக்களிட்ட இந்த பிரச்சனை இப்ப கூடியிருக்கு..... உளவியல் ரீதியான பாதிப்புகள் இதுகள்........

தவறான கணிப்புகள்..... உதாரணமா ஒராளின் வெளித்தோற்றத்த வச்சு அவர மதிப்பிடுற தன்மை.... அந்த பல்லும் கண்ணாடியும் வைச்சு அவர நல்லவர் அப்பாவி எண்டுதான் படம் பார்த்த நிறைய ஆக்கள் நினைச்சிருப்பினம்.....

இப்பிடி வேற மெசேச்சுகளும் இருக்கு... ஆனா நான் உளவியல் படிக்கிற மாணவி எண்டுறதால இந்த படத்திலயும் உளவியல தான் மெயினா வைச்சு எடுத்திருக்கிற மாதிரி இருக்கு.... இப்பிடியான சைக்கோ கரக்டருகள மையமா வச்சு தான் எடுத்திருக்கு....

லெனின் அண்ணாட உறுதி படமும் பாத்தனான்.... அதுவும் மன அழுத்தம் சம்மந்தமா தான் இருந்தது.... வெளிநாட்டில வாழுற எங்கட மக்களில நிறையபேர் உளவியல் ரீதியா பாதிக்கப்பட்டிருக்கினம்..... உளவியல் பாதிப்பெண்டோடன உடன ஸ்ரான்டட் பயித்தியங்கள தான் எங்கட ஆக்கள் நினைக்கிறது. அப்பிடியில்ல.... வெளில பார்க்கிறதுக்கும் பழகுறதுக்கும் ஒரு பிரச்சனையும் இல்லாத ஆக்கள் மாதிரி தெரியிற சிலபேர் திடீரெண்டு தற்கொலை செய்துகொள்ளுவினம்.... இதெல்லாம் உளவியல் தாக்கத்தின்ர வெளிப்பாடுதான்....

அதால மெசேச் இல்லையெண்டு சொல்லேலாது....

லெனின் அண்ணா... மற்ற கலைஞாகள் எல்லாருக்கும் என்ர பாராட்டுகள்.... நல்லா செய்திருக்கிறீங்க.... அடுத்த படத்துக்கு நான் காத்திருக்கிறன்....

புசுக்குட்டிக்குள் இவ்வளவு விசயம் இருக்கிதா? :D இது புசுக்குட்டியா அல்லது புலிக்குட்டியா? :mellow:

பி/கு: என்னை இளகிய மனசு ஆள் என்ற category இனுள் போட்டதற்கு நன்றி! B)

உங்களுக்கு முமட்டினா மூக்க பொத்திட்டு போறதுதானே எதுக்கு அதிலே இருந்து குமட்டுது குமட்டுது என்று கத்துறீங்க? உதாரணத்திற்க்கு பலர் மீன் சாப்பிடுவார்கள் சிலர் சாப்பிடமாட்டார்கள். அவர்களுக்கு மீன் மணம் குமட்டும். அதுக்காகா மீன் பக்கத்தில் இருந்து குமட்டுது குமட்டுது என்று அலறுவதால் மற்றவர்கள் உண்ணாமலா இருக்கிறார்கள். உங்கள்க்கு பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள்.

ஹிஹி அது மச்சக்கறி என்று முன்பே நமக்கு தெரியாது... இனி நாம மூக்கப்பொத்துறம்.. நீங்கள் தாராளமாக உண்ணுங்கோ.... :mellow:

.

படத்தில continuity பிழையள் சிலதுகளும் இருக்கு.

வீட்டுக்கு அந்த அண்ணா குடிவாறதுக்கு முதல் வீடு எப்பிடி இருந்ததோ (சுவத்தில இருந்த படங்கள்.... சோபா.... மேசை....எல்லாம் அந்தந்த இடத்திலயே வீடு மாறி அந்த அண்ணா வந்தபிறகும் இருக்கு. எல்லாம் பக்காவா கிளீனா இருக்கு.....

வாசலடில வீட்டுக்கு குடிவாறதுக்கு முதலே ரண்டு சோடி சப்பாத்து இருக்கு. (00:23 நிமிடத்தில)

அதப்பொல வீடு பாத்திட்டு போகேக்க அந்த வில்லன் அண்ணா சப்பாத்து போடாமல் சொக்சோட மட்டும் போறார். (2:45 நிமிடத்தில)

மற்றது அந்த அக்கா முதல் தடவை இந்த வில்லன் அண்ணான்ர வீட்டுக்குள்ள வரேக்க வாசலில நிறைய சப்பாத்துகள் இருக்கு. (13:50 நிமிடத்தில)

அதில நிறைய சப்பாத்துகள் அந்த அண்ணான்ர காலை விட பெரிய சப்பாத்துகள். (13:50 நிமிடத்தில)

அடிக்கடி வாசலக் காட்டுற நேரத்தில எல்லாம் சப்பாத்துகள் கூடி குறைஞ்சு இருக்கு.

ரண்டாம் தடவை அந்த அக்கா கதவ தட்டேக்க இந்த அண்ணா சோபால இருந்து எழும்பி போகேக்க வாசலில ரண்டு சோடி சப்பாத்து இருக்கும்...... படம் தொடங்கேக்க இருந்த மாதிரி..... அதே பொசிசனில. (15:26 நிமிடத்தில)

கிளைமக்ஸ் காட்சியில ஒரு இடத்தில கமரா ஸ்ரான்ட் இருக்கிறது தெரியுது. (19:48 நிமிடத்தில)

கிளைமக்ஸ் காட்சில அந்த அக்கா மயங்கி விழேக்க அவான்ர தலைக்கு பின்னால நிறைய வயருகளும் ஒரு வெள்ள ஸ்ரான்டும் இருக்கு..... அது முதல் அந்த இடத்தில இருக்கேல.... அநேகமாக லைட் ஸ்ராண்டா இருக்கலாம்....... (19:51 நிமிடத்தில)

தொடக்கத்தில (7:48 நிமிடத்தில) உள்ளுக்க ஒரு அலுமாரிக்கு மேல இருந்த அந்த மஞ்சள் லைட் .... பிறகு ஒரு இடத்தில (10:36 நிமிடத்தில) வெளில ஒரு ஸ்ராண்டில இருக்கு. சிலநேரம் அத அவர் இடம் மாத்தி வைச்சிருக்கலாம்....

இன்னொண்டு யன்னலுக்கு கிட்ட மேல தொங்கிக்கொண்டு நிக்கிற மணிக்கூடு. 9:09 நிமிடத்தில அந்த அண்ணா சோபால இருக்கேக்க ரைம் 1:25. கதவு தட்டுறது கேட்டு எழும்பி நடக்கேக்க நேரம் பொருத்தமில்லாமல் காட்டுது. அவர் போகேக்க கண்ணாடில மணிக்கூடு தெரியுது அதில பார்த்தால் தெரியும். பின்னுக்கு பாட்டு போய்க்கொண்டிருக்கிறதால தான் இந்த வித்தியாசம் தெரியுது.

எப்ப பாத்தாலும் அநேகமான லைட்டுகள் எரிஞ்சுகொண்டு இருக்கு...... இரவு பகல் பாராம....

இன்னொரு பிரச்சனையும் இருக்கு. reflection பிரச்சனை. உதாரணமா படத்தின்ர தொடக்கத்தில கதைச்சுக்கொண்டிருக்கேக்க வில்லன் அண்ணாவ கிட்டவா காட்டுவினம். அப்ப அவர் போட்டிருக்கிற கண்ணாடில படத்தில நடிக்காத ஒராள் தெரியுறார். (2:20 நிமிடத்தில) வேற இடங்களிலயும் இந்தக் பிரச்னை இருக்கலாம்....... இன்ரர்நெட்டில குவாலிட்டி இல்லாம இருக்கிறதால பெருசா தெரியல.

லெனின் அண்ணா... மற்ற கலைஞாகள் எல்லாருக்கும் என்ர பாராட்டுகள்.... நல்லா செய்திருக்கிறீங்க.... அடுத்த படத்துக்கு நான் காத்திருக்கிறன்....

இவ்வளவு அவதானிப்பு உள்ளவர் உதவி டைரக்டராக வருவதற்கு தகுதியானவர். லெனினிடம் சேர்ந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் பூனைக்குட்டி.

:lol:

Edited by Ponniyinselvan

எனது கருத்து

இது குறுந்திரைப்படமல்ல. படம்எடுத்தவர்களின் மனவியாதியின் பிரதிபலிப்பு. :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக்கங்களை விமர்சனத்திற்கு முன் வைக்கும்பொழுது எவ்வகையான விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கவேண்டும்.

வழமைபோல ஆகா ஓகோ என்றுதான் எல்லோரும் புகழ்வார்கள் என்ற எதிர்பார்போடு ஆக்கங்களை முன்வைத்தால் கொஞ்சம் கடினம்தான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்குட்டி

தங்களுடைய விமர்சனத்திற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள். தங்களுடைய விமர்சனம் இப்படத்தை உருவாக்க பாடுபட்டவர்கள் அத்தனை பேரையும் செனறடைய செய்வேன். இப்படி ஓரு விமர்சனம் போதும் லெனின் போன்றோருக்கு மேலும் படைப்புக்களை உருவாக்குவதற்க்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசால்

சண்டைக்கோழி மாதிரி இல்லாதற்க்கு பக்கத்திவீடு எடுத்தவர்களை மன்னித்துக்கொள்ளுங்கள். :lol:

எனது கருத்து

இது குறுந்திரைப்படமல்ல. படம்எடுத்தவர்களின் மனவியாதியின் பிரதிபலிப்பு. :angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிசான்

கண்டிப்பாக ஏற்றுக்கொள்கின்றேன், அதற்காக படைப்புக்களை உதாசினம் செய்பவர்களை சும்மா விட்டுவிடமாட்டேன். இது எனது தனிப்பட்ட கருத்து.

ஆக்கங்களை விமர்சனத்திற்கு முன் வைக்கும்பொழுது எவ்வகையான விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கவேண்டும்.

வழமைபோல ஆகா ஓகோ என்றுதான் எல்லோரும் புகழ்வார்கள் என்ற எதிர்பார்போடு ஆக்கங்களை முன்வைத்தால் கொஞ்சம் கடினம்தான்..

பூனைக்குட்டி,

படத்தைக் கவனமாகப் பார்த்து கருத்துக்களைக் கூறியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். யாழ் கருத்துக்களத்தில் நடந்த பட்டிமன்றத்தின்போதும் உங்கள் கருத்துக்களை அழகாகத் தொகுத்து வழங்கியிருந்தீர்கள். தொடர்ந்து கருத்துக்களத்துக்கு வாருங்கள். சீண்டல் கருத்துக்களைத் தவிர்த்து இதுபோன்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

தனுஜன்,

நல்ல ஆக்கத்தை இணைத்துள்ளீர்கள். உங்களுக்கு எம்மவர் படைப்புகள் மீது ஈடுபாடு உள்ளது தெரிகிறது. தொடர்ந்தும் யாழ் கருத்துக்களத்தில் இதுபோன்ற படைப்புக்களை அறிமுகப்படுத்துகிற போது ஏனைய உறுப்பினர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள முடியும். நம்மவரிடம் நம்மவர் படைப்புகள் பற்றிய தகவல்களைக் கொண்டுசேர்க்கமுடியும். எனவே இப்படியான படைப்புக்களையும், அவை தொடர்பான தகவல்களையும், அதனோடு தொடர்புடைய கலைஞர்கள் பற்றியும் எழுதுங்கள். பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிசான்

கண்டிப்பாக ஏற்றுக்கொள்கின்றேன், அதற்காக படைப்புக்களை உதாசினம் செய்பவர்களை சும்மா விட்டுவிடமாட்டேன். இது எனது தனிப்பட்ட கருத்து.

நான் யாவருமே இந்த படைப்பை உதாசீனம் செய்வதாக கருதவில்லை.. பொதுவாகவே எம்மவர்கள் படைப்புகள் என்றாலே ஒரு செய்தி சொல்லப்படும் என்ற எதிர்பார்ப்பு இருப்பது தவிர்க்கமுடியாது.. எனக்கும் அதே எதிர்பார்ப்புதான் இருந்தது.

அந்த எதிர்பார்ப்பு அங்கே நிறைவேற்றப்படாதாதால் ஏற்பட்ட ஆதங்கம்தான், அவ்வாறான கருத்தை அங்கே வைக்கவேண்டிய அவசியத்தை "கலைஞன்"க்கு கொடுத்திருக்கலாம்.. என்ன, "கலைஞன்"அதை கொஞ்சம் நாகரீக முறையில் தெரிவித்திருந்தால் நல்லா இருந்திருக்கும்..

அதே போன்று விமர்சனம் செய்பவர்கள் Negative ஆன விடயங்களை முன்வைப்பதுபோன்று, அதிலே நிச்சயமாக Positive ஆன விடயங்களும் இருக்கும்..

இரு விடயங்களையும் முன்வைக்கிறபொழுதுதான் அந்த விமர்சனம் முழுமை பெறுகிறது என்பது எனது கருத்து..

Edited by Kishaan

என்னங்க சொல்லுறீங்கள்? படைப்புக்களை உதாசினம் செய்பவர்களை சும்மா விட்டுவிடமாட்டீங்களா? யாருங்க உதாசீனம் செய்தாங்க? நீதிமன்றத்தில வழக்கு தாக்கல் செய்யபோறிங்களா? அல்லாவதுவிடில் வேறு ஏதாவது ஐடியா இருக்கா?

உங்களுக்கு விருப்பமான மாதிரி ரத்தமும், கத்தியும் காட்டுவீங்கள், பார்ப்பவர்கள் கையையும், வாயையும் பொத்திக்கொண்டு இருக்க வேணுமா?

படத்தில் காட்டப்பட்டவற்றை விட இந்த "தூ" என்ற வார்த்தை பிரயோகம் மோசமானது இல்லை. படத்தை காட்டி என்ன உணர்வு பார்ப்பவர்களின் மனதில் வெளிப்படவேண்டும் என நினைத்தீர்களோ அதுவே "தூ" என்ற ரூபத்தில் வெளிப்பட்டது. இதுக்கு ஏனுங்க உங்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருது?

நல்லாத்தான் படம் காட்டிறீங்க போங்க!

பக்கத்துவீடு குறும்படம் நானும் பார்த்தேன். இணைத்தமைக்கு நன்றி !:lol:

குறும்படத்தின் தலைப்பில் ஒரு சந்தேகம். " பக்கத்திவீடு" என்பது சரியா அல்லது "பக்கத்து வீடு" சரியா? கூடுதலாக நாம கதைக்கும் போது பக்கத்துவீடு எண்டுதானே கதைப்பம் அதுதான் கேட்டன். அல்லது "பக்கத்திவீடு" எண்டு குறும்படத்திற்கு தலைப்பு வைத்ததற்கு வேறு ஏதும் காரணம் இருக்கா?

Edited by அனிதா

ஒருவேளை பேச்சுத் தமிழிலை பெயர் வைச்சால் வித்தியாசமா இருக்கும் என்று நினைத்தார்களோ தெரியவில்லை... பேச்சுத் தமிழிலையும் "பக்கத்து வீடு" என்றுததானே சொல்லுறனாங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.