Jump to content

இதய நாதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

இசையும் கதையுமாய் இணைந்து வரும் ஓர் தொடர்!.

காதல்" சொல்லிய காதல் - 1

என்றென்றும் என்னை நேசிப்பவனே,

நலமா நீங்கள் என்று கேட்க முடியவில்லை என்னால் அதற்குரிய தகுதி எனக்கு

இருக்கிறதா என்று புரியவில்லை. என்னை நேசித்த நெஞ்சம் இன்று என் தாயக

மண்ணை நேசித்து; மண் மீட்பிற்காய் தன்னை அர்பணித்துக்கொண்டதாய் என்று

கேள்விப்பட்டேனோ அன்றே என்னை நினைந்து வெட்கம் கொள்கின்றேன்.

முதல் முதலாய் என்னை நேசித்தவனை என்னால் நேசிக்க முடியவில்லை; ம்ஹீம்

'காதல்' படம் பார்த்த பின்னர் தான் அதன் காரணம் நான் என்று அறிய

முடிந்தது என்னால். எத்தனையோ காயங்கள் என்னை காய வைத்த போதெல்லாம்

உங்களின் ஈர நினைவுகள் தான் மருந்தெனக்கு.

"அவ சிரிச்சா இன்னும் ரொம்ப அழகா இருக்காடா" அதனால் அவ சிரிச்சுகிட்டே

இருக்கணும்" !..என்னை பார்த்து நீங்கள் சொல்லிய முதல் வசனம்.

"புன்னகை மின்னும் இதழா

பூவிழிப் பார்வை தனிலா எதிலே

விழுந்தேன் நான் என் சித்திரமே!

நட்சத்திரமே!. சொல்லடி! சொல்லடி

காதலைச் சொல்லடி!!"

எனக்கு கேட்டது பாதி தான் மீதியெல்லாம் உங்கள் நண்பர்கள் எனக்கு சொல்லியதுதான்.

நான் இருந்தால் அவர்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் என்று

நினைத்தவர்கள் மத்தியில் என் சந்தோசம் பற்றி நினைத்த முதல்

முதல்..முதல்வன் நீங்கள் தான். நீங்களே தான் ..என்ன செய்ய காதல்

வரவில்லையே எனக்கு?????????? உங்கள் மேல். அப்படி ஒன்று பூத்திருந்தால்

காத்திருந்தாவ்து உங்கள் கைப்பிடித்திருக்க மாட்டேனா?

என்ன செய்ய?!!! என் அக்காவின் வகுப்பு நீங்கள், உங்கள் முகத்தில் ஒரு

கனிவு இருக்குமே; அதை பார்த்துத்துத்தான் முதல்முதல் புன்னகைத்தேன்

எனக்கு தெரியவில்லையே; அது உங்கள் மனதில் காதல் மொட்டவிழ்க்கும் என்று

புரியவில்லையே இந்த பேதைப்பெண்ணிற்கு அப்போது. 'அதனால் தான் "பொம்பளை

சிரிச்சா போச்சு" அப்படின்ணூ சொல்றாங்களா?

உங்களோடு நான் பேசியதே இல்லை, பக்கத்து பக்கத்து வகுப்பு, அப்போது

நீங்கள் பார்க்கும் போதெல்லாம் கொஞ்சம் வெட்கம் பூக்கும் அவ்வளவு தான்.

பாடசாலையில் இருக்கும் போது உங்கள் நினனவாய் இருக்குமே தவிர, வீட்டில்

போய் சீருடை மாற்றும் போது உங்கள் நினைவு என்னை வதைக்கவே இல்லையே,

வாட்டவே இல்லையே, கழற்றும் சீருடையோடு அதுவும் கழன்று விடுமே,

உங்கள் தங்கை என் வகுப்பு படித்ததால் என்னைப்பற்றி அத்தனை விடயமும்

அறிந்து கொண்டீர்கள், ஆனால் உங்களைப்பற்றி எதுவும் அறியும் ஆர்வம்

வரவில்லையே எனக்கு. பாடசாலையில் கொஞ்சம் செல்வாக்கு எங்களுக்கு

இருந்ததால் உங்களுடன் பேசுவதை நான் தவிர்த்தேன் அது தவிக்க

வைத்திருக்கும் என்று நான் கொஞ்சமும் யோசிக்க வில்லையே, நான் பேசினால்

அது உங்களுக்கு பிரச்சனையாகிவிடுமே என்று தான்.

உங்கள் காதலை மறுத்தால்; பிறகு நீங்கள் பாடசாலை பக்கமே வரமாட்டீர்களே,

அதுவே எனக்குள் காதலை தூண்டிவிடாதா? !!..அதனால் தான் எதுவுமே

சொல்லத்தெரியவில்லை எனக்கு, என்ன இன்னும் ஒரு வருடத்தில் நீங்கள் பாடசாலை

விட்டு போய் விடுவீர்கள் என்பதாலும் நானும் வெளிநாடு " சென்று விடுவேன்

என்பதாலும் அதை பெரிது படுத்தவில்லை நான்.

இப்போதும் சொல்கிறேன் உங்கள் மேல் இன்றும் காதல் இல்லை எனக்கு; ஆனால்

என்னை மற்றவர்கள் நோகடிக்கும் போதெல்லாம் உங்களைத்தான் என் மனம்

நினைத்துக்கொள்கின்றது. எனக்குத்தெரியும் என்னை மண்மீதே நடக்க விடாமல்

தாங்கும் உங்கள் கைகள் எந்த நொடியிலும் என்னை புண்படுத்தாது என்று!...

அந்த நாள் நினைவிருக்கிறதா உங்களுக்கு,!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

'மறந்து போய் என்குடையை வகுப்பில் வைத்து விட்டு திரும்பி எடுக்க வந்த

போது. நான் வழமையாக இருக்கும் இருக்கையில் நீங்கள் அமர்ந்து என் மேசைமேல்

என் பெயரை எழுதிக்கொண்டு இருந்தீர்கள்; அதைப்பார்த்து விட்டு,,,எதுவும்

பேசாமல் ..

"என் குடை" இதுதான் உங்களோடு நான் பேசிய முதல் வார்த்தை..'என்ன

சொன்னீர்கள் தெரியும்ம்மா?

"குடை மட்டும் தானா? என்னால பேசமுடியவில்லைம்மா, கல்யாணம் என்ற ஒன்று

நடந்தால் அது உங்களோடு மட்டும்தான்"

இதற்குமேல் உங்களாலும் பேச முடியவில்லை"' எனக்கு வார்த்தையே

வரவில்லை...இன்று தான் பாடசாலைக்கு நான் வரும் கடைசி நாள் என்பதைக்கூட

உங்களுக்கு சொல்ல ஏனோ மனம் வரவில்லை எனக்கு,.....

'ஆட்டோகிராப்" பார்த்தபோது உங்கள் நினைவு வந்ததெனக்கு, சரி உங்களுக்கு

மகள் இருந்தால் என் பெயரை வைத்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன்;;;;

ஆனால் நீங்கள் என்னிடம் சொன்னதைப்போலவே இருப்பீர்கள் என்று !!!!!!! ஜயோ

அழுகை வருகிறது எனக்கு!..தாங்க முடியவில்லை..தாள முடியவில்லை,

உங்கள் மனதை கலைத்தது நான் தான்; அதற்குரிய தண்டனையைத்தான் இப்போது

அனுபவிக்கின்றேனே!..."எந்த தாக்கத்திற்கும் சமமானதும் எதிரானதுமான

மறுதாக்கம் உண்டு என்ற நீயுட்டனின் மூன்றாவது விதி எனக்கு நன்றே

புரிகிறது.

அந்த பள்ளிபருவத்தில் ஈர நினைவுகள்தான் வரண்ட என் மனதிற்கு

பூமழைத்தூறல்கள்'.. இன்னும் சொல்ல ஆசைதான் அந்த கணங்கள் சிலிர்க்க வைத்த

பொன் நிமிடங்கள்"..உங்களுக்கு நான் செய்த பாவத்தின் பரிகாரம் தான்

இப்படியாவது எழுதி என்னை ஆற்றிக்கொள்கின்றேன்.

என்றென்றும் நீங்கள் நேசிக்கும்,

.................................

  • Replies 88
  • Created
  • Last Reply
Posted

தமிழ்தங்கை அக்கா சூப்பரா இருக்கு காதல் கதை அப்படியே அதில ஊறிபோன மாதிரி ஒரு பீலிங் அப்படி எழுதி இருகிறீங்க கடைசியா முடிவு தான் கண்கலங்கிற மாதிரி வந்து செல்கிறது................ :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தமிழ்தங்கை அக்கா சூப்பரா இருக்கு காதல் கதை அப்படியே அதில ஊறிபோன மாதிரி ஒரு பீலிங் அப்படி எழுதி இருகிறீங்க கடைசியா முடிவு தான் கண்கலங்கிற மாதிரி வந்து செல்கிறது................ :D

வணக்கம் ஜம்மு, உங்க கிட்ட இருந்துதான் முதல் விமர்சனம் எதிர்பார்த்தேன். இன்னும் தொடரும்...!! காத்திருந்து சுவைக்கவும்! நன்றிகள் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதல் என்று வந்தால் காதலிக்கும் ஆண்கள் எல்லாம் தேவதாஸ் மாதிரித்தான் இருக்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதிபோல் உள்ளது! :mellow::D

Posted

சுவைக்க சொன்னீர்கள் கனக்கிறது..

காதல் நெஞ்சங்களின் பிரிவை என்னால் தாங்கமுடிவதில்லை இதயம் கனக்கும் இனம்புரியாத வேதனை தெரியும்..நினைவாலும்..செயலாலு

Posted

என்னை மன்னிச்சுடுங்கோ..... எனக்கு காதல் எண்டா எட்டா பகை... அதாலை கதையை பாதீலையே படிக்காமல் விட்டு விட்டன்...

சுவைக்க சொன்னீர்கள் கனக்கிறது..

காதல் நெஞ்சங்களின் பிரிவை என்னால் தாங்கமுடிவதில்லை இதயம் கனக்கும் இனம்புரியாத வேதனை தெரியும்..நினைவாலும்..செயலாலு

Posted

என்னை மன்னிச்சுடுங்கோ..... எனக்கு காதல் எண்டா எட்டா பகை... அதாலை கதையை பாதீலையே படிக்காமல் விட்டு விட்டன்...

ரொம்பத்தான் பீல் பண்ணுறீங்க.... ^_^ கெதீயிலை வீட்டில சொல்லி 55 வயது ஆக முன்னம் காலுக்கு ஒரூ க்காட்டூ போடு கொள்ளுங்கோ... எல்லாம் சரியா வரும்.... :D :P மெய்யாத்தான்னுங்கோ எல்லாம் சொந்த அனுபவம்....! :mellow:

அண்ணா நீங்கள் இதெல்லாம் பார்ப்பீங்கன்னு தெரியாம எழுதிட்டேனுங்கண்ணா..

வீட்ல போட்டுக்கொடுத்திடாதீங்க ..

அம்மா தொல்லை தாங்க முடியலிங்கோ...

Posted

மகள் இருந்தால் என் பெயரை வைத்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன்;;;;

ஆனால் நீங்கள் என்னிடம் சொன்னதைப்போலவே இருப்பீர்கள் என்று !!!!!!! ஜயோ

அழுகை வருகிறது எனக்கு!..தாங்க முடியவில்லை..தாள முடியவில்லை,

இதயத்தைத் தொட்டு சென்றுவிட்டது உங்கள் கதை. பள்ளிப்பருவ ஒருதலைக்காதல் இன்றும் அழியாமல் இருக்கின்றதா?

நல்லாக எழுதி இருக்கிறீங்க. உண்மைச் சம்பவம் எனில் வருந்துகின்றேன் தமிழ்த்தங்கையே.

மீண்டும் வரும் அங்கங்களோடு சந்ந்திக்கிறேன். நன்றி

Posted

அண்ணா நீங்கள் இதெல்லாம் பார்ப்பீங்கன்னு தெரியாம எழுதிட்டேனுங்கண்ணா..

வீட்ல போட்டுக்கொடுத்திடாதீங்க ..

அம்மா தொல்லை தாங்க முடியலிங்கோ...

சரி சரி பிழைச்சு போங்கோ....! :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

.கடவுள் பூமி வந்தால்.. மெய்யாக காதல் செய்யும் இரண்டு மனங்கள் இணைந்து வாழ வரங்கொடுங்கள் என்றுதான் கேட்பேன்..

(/quote]

நல்ல வரம்தான்...கேட்டு பாருங்கோ??? நடக்குதா என்று பார்ப்பம்.. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

"காதல்" சொல்லிய காதல் - 2

நல்லவனே, !,

சொல்லிய சொல்லின் ஓர் எழுத்தும் பிசகாமல் இன்றும் வாழ்பவனே,

எங்கிருந்தாலும் இன்றும் என் நினைவுக்குள் நிழலாடிப்போகின்றாயடா.

முதல் சந்திப்பு காதலில் மட்டுமல்ல..முதல்"..எந்த முதலும் மறக்க

முடியாது. உங்கள் ஊரின் பிரச்சனையால் எங்கள் ஊருக்கு இடம் பெயர்ந்து

வந்திருந்தீர்கள். மாணவர் தலைவர் என்ற முறையில் புதிதாக சேர்ந்தவர்கள்

பெயரை எல்லாம் எழுதிக்கொண்டிருந்தேன் எல்லோர் பெயரையும்

எழுதிக்கொண்டிருந்தேன் ஆனால் உங்கள் பெயரை எழுதும் போதுதான் நிமிர்ந்து

பார்த்தேன், அதனால் தான் புன்னகைத்தேன்.

"ஒரு புன்னகையால் கொள்ளை

செய்தாய்! பெண்ணே! காதல்

தீவென ஆனேன் கண்ணே!

கண்ணே!

ஓடிடும்மீனென கண்கள் சிக்கினேன்

காதல் தூண்டில்! என்னிடம்

ஏனடி மெளனம்?! நீ பேசினால்

தோன்றிடும் சொர்க்கம்! என் பக்கம்!

எல்லோரிலும் கொஞ்சம் வித்தியாசமாகவே நீங்கள் எனக்குத்தெரிந்தீர்கள்.

என்னால் மறக்கவே முடியாத அந்த முகம், முதல் பார்வை, அரும்பும் மீசை ஒரு

பெண்பிள்ளை போல ஒதுங்கி நீங்கள் நின்ற விதம். எனக்குள் சிரித்துக் கொண்டே

சென்று விட்டேன். அன்று வகுப்பில் எனக்கு உங்கள் முகம் தான் முன் வந்து

நின்றது. ஏனோ தெரியவில்லை.

படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி, குழப்படிகளிலும் சரி,,எங்கள்

அக்காவின் வகுப்புக்குத்தான் முதலிடம் அதனால் நாங்கள் அந்த

திக்குத்திரும்புவதே இல்லை. ஆனால் என்னை திரும்பிப்பார்க்க வைத்தது

நீங்கள் தான்.

காலையில் இறைவணக்கம், தேவாரம் சொல்லிக்கொடுப்பது எம் வழக்கம். என்

செயல்கள் ஒவ்வொன்றிற்கும் உங்கள் பாராட்டுக்கிடைக்கும் எனக்கு அது

பிடித்திருந்தது, "பாடி முடித்தவுடன் நல்ல குரல் என்ற உங்கள் விமர்சனம்.

யாருக்கும் கேட்டு விடக்கூடாதே என்ற மெதுவான உங்கள் குரல்,,எனக்கு

மட்டுமே கேட்டிருக்க வேண்டும் என்கின்ற என் தவிப்பு. யாருக்குத்தெரிந்ததோ

இல்லையோ உங்கள் தங்கை கவனித்து விட்டார்.

நான் எந்த இருக்கையில் அமர்கின்றேனோ அதற்குப்பக்கத்தில் உங்கள் தங்கைதான்

அமர்ந்து உங்களைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்.

நினைத்துப்பார்க்கின்றேன். "உங்களுக்கு கோவமே வராதாம்"..சிரிப்பாக

இருந்தது எனக்கு, 'உங்கள் கோவம் நான் பார்க்க வேண்டும் என்று

ஆசைப்பட்டேன். அதற்காக நான் செய்த குறும்பு!...

நினைவிருக்கிறதா??????

மறுமடலில் தொடர்கின்றேன்.

என்றென்றும் நீங்கள் நேசிக்கும்,

Posted

என்ன தமிழ்த்தங்கை இப்படி முடிச்சிட்டீங்களே.

சரி நீங்கள் செய்த குறும்புதான் என்னமோ? அதையும் நீங்கள் எழுத வாசிக்கும் ஆவலில் நிலா

Posted

எல்லோரிலும் கொஞ்சம் வித்தியாசமாகவே நீங்கள் எனக்குத்தெரிந்தீர்கள்.

என்னால் மறக்கவே முடியாத அந்த முகம், முதல் பார்வை, அரும்பும் மீசை ஒரு

பெண்பிள்ளை போல ஒதுங்கி நீங்கள் நின்ற விதம்..

ஆண்கள் பெண்பிள்ளை போல் ஒதுங்கி நிற்பதை உண்மையில் பெண்கள் விரும்புகின்றார்களா? சில பெண்களுக்கு (பல பெண்களுக்கு?)பெண்கள் போல் தலையை குனிந்து நடக்கும் ஆண்களை பிடிக்காதே?

நான் இன்னும் கதையை வடிவாக வாசிக்கவில்லை. வாசித்துவிட்டு மிச்சம் அறுக்கின்றேன்.. :P

இது தமிழ்தங்கையின் சொந்தக்கதை இல்லை தானே? :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் கதை அழகு.

காதல் கதை வாசிக்க நிறையவே பிடிக்கும் எனக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
எல்லோரிலும் கொஞ்சம் வித்தியாசமாகவே நீங்கள் எனக்குத்தெரிந்தீர்கள்.என்னா
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

காதல்" சொல்லிய காதல் - 3

நான் மறக்கவில்லை அது வேறு; ஆனால் நீங்கள் என்னை நினைத்துக்கொண்டே

இருக்கின்றீர்களே! " என்று இதை நீங்கள் வாசிக்க நேரிட்டால் நிச்சயம்

சொல்லக்கூடும்; அப்படி நீங்கள் சொல்வதாயே நினைத்துக்கொண்டு அந்த குறும்பை

நினைத்துப்பார்க்கின்றேன். எங்கள் விளையாட்டுப்போட்டி ஆரம்ப காலம் அது,

விளையாட்டு மைதானத்திற்கு வலைப்பந்து பயிற்சிக்காக வலைகட்டி

இருந்தீர்கள். அதே நேரம், எங்கள் வகுப்பு மாணவிகள் சேர்ந்து "நாம்

கூடைப்பந்து ஆடப்போகின்றோம் தயவு செய்து இடத்தை விட்டு போங்கள் என்று

சொல்ல, ....உங்கள் தங்கையிடம் வந்து கேட்டீர்கள்," யாரது ஆசிரியரின்

உத்தரவோடுதான் நாங்கள் வந்திருக்கிறோம் யார் உங்களை மைதானத்திற்குள்

வரச்சொன்னது?...வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தூரத்தில் நின்றேன் ..என்னை

கைகாட்டி உங்கள் தங்கை என்ன சொன்னார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது..

என்னிடம் நேரே வந்து.." உங்கள் கோவத்தைக் காட்டப் போகின்றீர்கள் என்று

நினைத்தேன். ..."ஆனால் நீங்களோ,,,." என்ன விளையாட போறீங்களா?

சொல்லியிருக்கலாமேடா, பசங்க தான் சும்மா சத்தம் போடுவாங்க!..அதை நான்

சமாளிக்கிறேன் என்று சொல்லிச்சென்றீர்கள், ...வைத்த கண் வாங்காது

உங்களையே பார்த்துகொண்டு இருந்தேன். உங்கள் நண்பர்கள்

உங்களை திட்டிச்சென்றதை பொறுக்க முடியவில்லை என்னால்.

உங்களிடம் பேசவில்லையே தவிர நான் உங்களுக்காக நிறைய பேசியிருக்கிறேன்.

வேறொரு சமயத்தில் உங்கள் நண்பர்களிடம் சொன்னேன். தவறு என்மீதுதான் என்று;

என்ன காரணமோ அவர்கள் ஒன்றும் எதிர்த்து சொல்லவில்லை.

ம்ஹீம். நீங்கள் தான் விளையாட்டு வீரனாச்சே..விளையாட்டு போட்டி ஆரம்பம்

என்றால் உங்கள் குழுவிற்கு நீங்கள்தானே முதல் நாயகன், அந்த நேரம் பார்க

வேண்டுமே உங்கள் முகத்தை, எத்தனையோ பேர் உங்களைப்பார்க்க நீங்கள்

என்னைப்பார்ப்பீர்கள் அதில் ஒரு பெருமிதம் எனக்கு, அப்போது வெட்கத்துடன்

ஒரு புன்னகை அவ்வளவு தான் உங்களுக்கு நான் தந்த பரிசு. என்னில்

உங்களுக்கு ஏன் இத்தனை அன்பு? இத்தனை காதல்? இத்தனை ஈர்ப்பு?

""ஏன் நேசித்தாய்? - எனை

சுவாசித்தாய்! காதலை என்னிடம்

ஏன் யாசித்தாய்?! (2)

என் மெளனம்

ஆயுதமாய் உனைக்கிழிக்க!.

மனம் தவித்து தவித்தே

நான் தவிர்க்க

ஏன் நேசித்தாய் எனை

சுவாசித்தாய்? (2)

ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் முதலாவதாய் வந்ததற்கு உங்களை எல்லோரும்

கட்டிப்பிடித்து சந்தோஷப்படுத்திக்கொண்டிருந

Posted

ஏண்டா,,,என்னோட பேசினாலே

உங்கள் தகுதி குறைந்து விடும் என்று நினைக்கிறீங்களா? நீங்கள் என்னோடு

பேசாமல் வேறு யாருடனுமே எனக்கு பேச பிடிக்கவில்லையே,

எனக்குத்தெரியும்..என்னை வெறுக்கவில்லை நீங்கள் ஆனால் ஏன்

விலகுகின்றீர்கள்? ஏன்? உங்களைத்தவிர வேறு யாருமே எனக்குள் இப்படி ஒரு

ஏக்கத்தை ஏற்படுத்தவில்லை. படிப்பில் என்னால் கவனம் செலுத்தமுடியவில்லை,

நீங்கள் தவிர்பது என்னை எத்தனை தூரம் என்னைத்தவிக்க வைக்கிறது என்பது புரியவில்லையா???

ஐயோ ரொம்ப பாவம் பா.

ஒரு வார்த்தையேனும் பேயிருக்கலாமே.

உங்கள் குறும்பு. ஹீஹீ

ஒஹோ இறுதியில் தடம் புரண்டிச்சுதோ? ம்ம் நல்லகாலம் அந்தண்ணா பாவம் தமிழ்த்தங்கை.

அப்புறம் என்னாச்சுங்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஐயோ ரொம்ப பாவம் பா.

ஒரு வார்த்தையேனும் பேயிருக்கலாமே.<<<

மலர்கள் பேசுமா? பேசினால் ஓயுமா? :(! குழந்தைகளின் கையில் இனிப்பைக் கொடுத்துவிட்டு பிடுங்கக் கூடாது! :huh: பேசிவிட்டுப் பேசாமல் போகும் நிலை வந்தால் அது கொடுமை!.அத்தனை கொடுமைக்காரி இல்லை என் கதாநாயகி :o

உங்கள் குறும்பு. ஹீஹீ<<

அச்ச்ச்ச்ச்ச்சோ என்னங்க நீங்க! என் குறும்பு என்றே முடிவு பண்ணியாச்சா?!!..கற்பனைகளில் காட்சியை ஓட விட்டுப்பாருங்கள்! :o

ஒஹோ இறுதியில் தடம் புரண்டிச்சுதோ? ம்ம் நல்லகாலம் அந்தண்ணா பாவம் தமிழ்த்தங்கை.

அப்புறம் என்னாச்சுங்க?

<<

மிகுந்த நன்றி வெண்ணிலா,

எந்த ஒரு படைப்பாளிக்கும் விமர்சனங்கள்தான் உரம் சேர்க்கும்!. அந்த வகையில் தங்களின் பின் ஊட்டம் எனக்கு ஊக்கம் தந்தது. நன்றிகள்!.

Posted

மலர்கள் பேசுமா? பேசினால் ஓயுமா? ! குழந்தைகளின் கையில் இனிப்பைக் கொடுத்துவிட்டு பிடுங்கக் கூடாது! பேசிவிட்டுப் பேசாமல் போகும் நிலை வந்தால் அது கொடுமை!.அத்தனை கொடுமைக்காரி இல்லை என் கதாநாயகி

ஓ உங்கள் கதாநாயகி கொடுமைக்காரி இல்லையா? ஹீஹீ பாவம் நாயகன் எவ்வளவு சந்தர்ப்பங்களில் வேதனைப் பட்டிருக்கிறார். ம்ம் பேசாமல் இருந்த கதாநாயகி சிரிக்காஆலும் இருந்திருக்கலாம்.

"சீறும் பாம்பை நம்பு

சிரிக்கும் பெண்னை நம்பாதே"

ஒரு வார்த்தை பேசி இருந்தால் இப்பாடல் என் பதிலில் வந்திருக்காது. ஹீஹீ

அச்ச்ச்ச்ச்ச்சோ என்னங்க நீங்க! என் குறும்பு என்றே முடிவு பண்ணியாச்சா?!!..கற்பனைகளில் காட்சியை ஓட விட்டுப்பாருங்கள்!

ம்ம் கற்பனைகளை மனதில் விட்டுதான் பார்த்தேன். அதாவது ஒரு கதை படிக்கும் போதே அவ் நிகழ்வுகளை மனசில் பதித்து தா படிப்பது வழக்கம். நாயகியின் சிரிப்பில் நாயகன்........................... ம்ம் பாவம் நண்பர்களிடமும் ஏச்சு வாங்கி.......................

ம்ம் கதையை தொடருங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

காதல்" சொல்லிய காதல் - 4

என்னவெல்லாம் யோசித்தேன் என்பதிலும் உங்களையே உங்களையே உங்களை மட்டுமே

என் நினைவுக்குள் வார்த்துவிட்டு போன உங்கள் வார்த்தைகளை நினைக்கின்றேனடா

சிதறிப்போன சில்லறையாய் உங்கள் எண்ணங்கள் ஒவ்வொன்றையும் என் கண்ணீர்

கம்பிகளில்தானே இப்போது என்னால் கோர்க்கமுடிகிறது. தாங்க மாட்டீர்கள்

நீங்கள், நான் தவிப்பதை நான் தத்தளிப்பதை, துடிப்பதை ம்ம்ஹீம் உங்களால்

தாங்கிக்கொள்ளவே முடியாது என்பது எனக்கு நன்கே தெரியுமடா!

ம்ம்ம்..சினிமாதான் காரணமென்றேனே, அதைச்சொல்லவேண்டாமா உங்களிடம்? !.."

அட நம்மை நம்பி பெரிய இடத்துபொண்ணு வந்திட்டா என்று தாங்கு தாங்கு

தாங்கென்று தாங்குவீர்கள், என்னை மஹாராணியாக வைத்திருப்பதற்காய் நீங்கள்

சேவகனாக அல்லவா இருப்பீர்கள், என் பாதம் முள்ளில் படக்கூடாது என்பதற்காய்

உங்கள் கைகளை எனக்கு விரிப்பீர்கள் இல்லை என்னை முதுகில் சுமப்பீர்கள்,

வெயில் என்மீது படக்கூடாது என்பதற்காய் நீங்கள் காய்வதா? அதை என்னால்

தாங்கிக்கொள்ள முடியுமா? என் வீட்டில் உங்களை அவமானப்படுத்தும் போது அதை

என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? !...இப்படி இப்படி எத்தனை எத்தனையோ

யோசித்தேன்.

என் பதின்மூன்று வயதில் வருவதையெல்லாம் யார் காதல் என்று

ஏற்றுக்கொள்வார்கள்? அதன் பெயர் வெறும் இனக்கவர்ச்சி???? !!! அதுதான்

நம்மவர்கள் சொல்லும் பெயர். உங்களின் 100% எந்த கலப்படமற்ற சுத்தமான

காதல் அந்த இனக்கவர்ச்சி என்ற பெயரில் அடிபட்டு போவதை எப்படிப்பொறுப்பது?

எத்தனை முறை என்னோடு பேசியிருப்பீர்கள் உங்கள் மூச்சு, ஏன் உங்களின்

நிழல் கூட என்மீது பட்டதில்லையே. நீங்கள் சொல்லியதே "உங்களை கல்யாணம்

பண்ணிக்கொள்ளவேண்டும் என்பதைத்தானே"...!..'காதலிக்கிறேன் என்று கூட

நீங்கள் சொன்னதில்லையடா, "தேவதையைக்கண்டேன்" படம் பார்த்த போது அதில்

தனுஷ் சொன்ன ஒருவிடயம் உங்களைத்தானே எனக்கு நினைவூட்டியது, "என்னோட wife

என்பான் திருமணம் பண்ணிக்கொள்ள முன்னரே, நம்பிக்கை இல்லாதவன் தான்

'காதலி' என்று சொல்வான் என்று தனுஷ் சொல்லும் போது அங்கு நான்

உங்களைத்தான் பார்த்தேன்.

உங்கள் நண்பர்கள் என்னைக்கடக்கும் போதும் நான் அவர்களை கடந்து செல்ல

நேரிட்ட போதும் உங்கள் பெயர் சொல்லித்தான் என்னை அழைப்பார்கள், ஏனோ கோவம்

வரவில்லை எனக்கு, அதுதான் எனக்குப்புரியவே இல்லை. வெளியில் பிடிக்காத

மாதிரி காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் இரசித்தேன் உங்கள் செயற்பாடுகள்

ஒவ்வொன்றும் பிடிக்கும் எனக்கு. எவ்வளவு சுத்தமாய் வருவீர்கள் ஒற்றை

நீற்றுப்பூச்சு நெற்றியில்; எப்போதும் புன்னகை மாறாத அந்த முகம், உங்களை

நினைத்து ஏங்கியவர்கள் எத்தனை பேர் என்பது எனக்குத்தெரியும். உங்கள் பார்வைக்காகத் தவம்

கிடந்தவர்கள் எத்தனை பேர் என்பதும் எனக்குத் தெரியும்.

"விறுவிறு என்று வந்துவிட்ட பின்னால் இத்தனையா,,இதற்குமேலும் யோசித்தேன்

நான். " 'சே இன்று வெள்ளிக்கிழமையாயிற்றே, இரண்டு நாளாக இனி

உங்களைப்பார்கவே முடியாதா? !..என்று முதல் முதல் ஒரு ஏக்கம்

எட்டிப்பார்த்தது எனக்குள்,

" என் நெனப்பில நீ வெதைச்சுப்போன

காதல் வெத! துளிர்க்குதோ!கொஞ்சம்

தளிர்க்குதோ! (2)

'பட படக்கும் பட்டாம் பூச்சி

விழிகளுக்குள் கதகதப்பாய்

இருக்குதய்யா காதல் நினைவுகள்"

எந்தத் திக்குப் பார்த்தாலும் உந்தன்

மொகம் தான்!.வந்து சேரக்கூடாதோ!

எந்தன் வாசல் தான்! (2)

உன் கருணை நெறைஞ்ச மொகம்

அதைக் காண்பதொரு சொகம்!(2)

" என் நெனப்பில நீ வெதச்சுப்போன

காதல் வெத! துளிர்க்குதோ!கொஞ்சம்

தளிர்க்குதோ! (2)

'சனிக்கிழமைகளில் எங்களுக்கு கணிதப் பாட

வகுப்பு இருக்கும் ஆனால் நீங்கள் வரமாட்டீர்களே, என்ன காரணமோ உங்கள்

வகுப்புத்தான் அன்று எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. தேடிப்பார்த்து

உங்களின் இருக்கையில் நான் அமர்ந்தேன். எங்க பசங்க எல்லாம் ஒரு மாதிரி

பார்த்தாங்க..என்ன நீங்க girls ன் பக்கம் இருக்காமல் எங்களின் பக்கம்

இருக்கீங்க ...அப்படி என்று.. ' இந்த இடம் தான் வசதியா இருக்கு black

board ம் கிட்டவா இருக்கு..என்றேன் ஒரு பெருமூச்சுடன் சம்மதித்தார்கள்.

என்ன ஆச்சரியம் அன்று விளையாடுவதற்காக மைதானத்திற்கு வந்திருந்தீர்கள்;

நான் உங்கள் இருக்கையில் இருப்பதை உங்கள் நண்பர்கள் கவனித்துவிட்டார்கள்

வகுப்பு முடிந்து வெளியில் வந்த போது ' உங்களின் பிரிய நண்பன் தான்

என்னிடம்வந்து கேட்டார்..என்ன நீங்க அவனை ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க,

உங்களுக்கு அவனைப்பிடிக்வில்லை என்றால் எதற்கு அவனோட இடத்தில்

இருக்கணும்?.." அவர் கேட்டுமுடிக்கவில்லை ஒற்றை வார்தையில் சொன்னேன்

.அந்த மேசையில் என் பெயர் எழுதியிருந்தது அதனால் இருந்தேன். சொல்லிவிட்டு

வந்து விட்டேன் உங்கள் நண்பர் உங்களிடம் சொன்னது தெளிவாய் கேட்டது

"பொண்ணுங்க பிடிக்கலை என்றாதாண்டா உடனே சொல்லிடுவாங்க; பிடிச்சிருக்கு

என்பதை மெதுவாத்தான் சொல்லுவாங்க..மனதை தளர விடாதடா என்ற உங்கள் நண்பனில்

பெண்கள் psychology...அடடா!..அடடா என்று எனக்குள் சிரித்துக்கொண்டே

சென்று விட்டேன். எனக்குள் இருந்த ஒரேபயம் அன்று சைக்கிள் நிறுத்தத்தில்

வைத்து நீங்கள் என்னுடன் பேசியதை யாரும் கண்டிருக்க கூடாது என்பது தான்

ஆனால் திங்கள் கிழமை ஒரு 11.00 மணியளவில் என்னை தலைமைஅதிபர் அழைக்கிறார்

என்று கேட்டு அவர் அறைக்குள் வந்தேன் அங்கு நீங்களும்

நின்றுகொண்டிருந்தீர்கள். அந்தக் கணம்.............

என்றென்றும் நீங்கள் நேசிக்கும்,

........................................

Posted

அட நம்மை நம்பி பெரிய இடத்துபொண்ணு வந்திட்டா என்று தாங்கு தாங்கு

தாங்கென்று தாங்குவீர்கள், என்னை மஹாராணியாக வைத்திருப்பதற்காய் நீங்கள்

சேவகனாக அல்லவா இருப்பீர்கள், என் பாதம் முள்ளில் படக்கூடாது என்பதற்காய்

உங்கள் கைகளை எனக்கு விரிப்பீர்கள் இல்லை என்னை முதுகில் சுமப்பீர்கள்,

வெயில் என்மீது படக்கூடாது என்பதற்காய் நீங்கள் காய்வதா? அதை என்னால்

தாங்கிக்கொள்ள முடியுமா? என் வீட்டில் உங்களை அவமானப்படுத்தும் போது அதை

என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? !...இப்படி இப்படி எத்தனை எத்தனையோ

யோசித்தேன்.

ஐயோ இபப்டியும் நினைக்கணுமா? உபப்டியெல்லாம் நடக்குமா? இனிமேல் பார்த்துதான் காதலிக்கணுமா? ஏழைகளை காதலிச்சால் இபப்டி தானா? ஐயோ

அட அட அட மேசை ல பெயர் எழுதி இருந்திச்சுதாம் நாயகி இருந்தாங்களாம்.

"பொண்ணுங்க பிடிக்கலை என்றாதாண்டா உடனே சொல்லிடுவாங்க; பிடிச்சிருக்கு

என்பதை மெதுவாத்தான் சொல்லுவாங்க..

ம்ம்ம்ம்ம் நல்லாக இருக்கு இந்த டயலொக்.

அட பாவமே. தலைமை ஆசிரியர் என்னங்க கேட்டார்? என்ன விசாரணை நடந்திச்சு? தமிழ்த்தங்கை தொடருமா....................... ம்ம் நாளை வரை நானும் ஏக்கத்தோடு.............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உடனுக்குடன் படித்து நீங்கள் அளிக்கின்ற உற்சாகம் உத்வேகம் தருகின்றது வெண்ணிலா!

மிகுந்த மகிழ்ச்சி. மிக விரைவில் அடுத்த பாகம் போடுகின்றேன். நிஜமாத்தான் "பெயர் "எழுதி இருந்திச்சு!..:lol:

Posted

உடனுக்குடன் படித்து நீங்கள் அளிக்கின்ற உற்சாகம் உத்வேகம் தருகின்றது வெண்ணிலா!

மிகுந்த மகிழ்ச்சி. மிக விரைவில் அடுத்த பாகம் போடுகின்றேன். நிஜமாத்தான் "பெயர் "எழுதி இருந்திச்சு!..:o

:lol: அப்போ நிங்கதான் நாயகியோ?

சில தினங்களுக்கு வரமுடியாது :D . நீங்கள் கதையை போடுங்கோ நன் வாற அண்டைக்கு முழுவதும் வாசிக்கிறேன் :P

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.