Jump to content

இதய நாதம்


Recommended Posts

Posted

வெண்ணிலா,

ரொம்ப்ப்பக் கவலைப்படுற மாதிரி இருக்கு; நிஜமாகவே இத்தனை ஆழமாக ஆசையோடு வாசிக்கும் உங்களுக்காகத்தான் உடனேயே பகுதி 6 ம் அவசர அவசரமாக எழுதிப்போட்டனான்.

அடுத்த பாகம் ஞாயிற்றுக்கிழமை போடுறன் சரியா? !!.

சரி சரி ஞாயிற்றுக்கிழமைக்கு போடுங்க. நானும் கொஞ்ச நாளைக்கு அவா கூட டூவாக இருக்கணும் ல.

நாயகியின் இடத்திலிருந்து நீங்கள் பாருங்கள். எங்கள் ஊரை நினைத்துப்பாருங்கள். இங்கிருக்கும் சுதந்திரம் அங்கு உண்டா?! 'ஒருபெண் வேறொரு சாதிக்காரனை கல்யாணம் பண்ணினால் அவளுடைய சகோதரிகளின் நிலமை என்ன?!

ம்ம் நினைச்சு பார்க்கிறப்போ நீங்க சொல்வது சரிதான். ஆனால் நாயகி ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே இதுதான் என் சூழ்நிலை. சோ என்னை நினைச்சுப் பார்க்காதீங்க னு ஒரு ஒரு வார்த்தை சொல்லி இருக்க்கலாமே.

நாயகி உலகமகா கொடுமைக்காரிதான்! வீட்டின் மானத்துக்காக உயர்ந்த உன்னத காதலைக் கூட தியாகம் செய்த அப்பாவிப்பெண்ணும் கூட!.

ஆமா ஆமா பெரிய தியாகம் தான். அப்பாவியா? அடடடா நாயகி அப்பாவியாம். நான் மட்டும் சந்திக்கணும் அவாவை............. :angry: :)

நாயகனையும் வாழ்க்கை முழுதும் அழ வைச்சு தானும் அழுது இப்ப என்னையும் அழ வைக்கிரவா அப்பாவியாம். செம ஜோக் :angry:

  • Replies 88
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆமா ஆமா பெரிய தியாகம் தான். அப்பாவியா? அடடடா நாயகி அப்பாவியாம். நான் மட்டும் சந்திக்கணும் அவாவை............. :angry: :)

நாயகனையும் வாழ்க்கை முழுதும் அழ வைச்சு தானும் அழுது இப்ப என்னையும் அழ வைக்கிரவா அப்பாவியாம். செம ஜோக் :angry:

Posted

ஆமா ஆமா பெரிய தியாகம் தான். அப்பாவியா? அடடடா நாயகி அப்பாவியாம். நான் மட்டும் சந்திக்கணும் அவாவை............. :angry: :)

நாயகனையும் வாழ்க்கை முழுதும் அழ வைச்சு தானும் அழுது இப்ப என்னையும் அழ வைக்கிரவா அப்பாவியாம். செம ஜோக் :angry:

ச்ச்ச்சோ ச்ச்ச்ச்சோ நிஜமாவே அழறீங்களா என்ன?!!..இதுதான் வாழ்க்கை வெண்ணிலா...திரையில் மட்டுமே சுபம் போடுவார்கள்...நிஜங்கள் இப்படித்தான்...என்ன செய்வது கதைக்கணும் என்றுதான் போனா...ஆனால்..

கதைக்கமுடியாதபடி விதி செய்த சதி :lol:

:P :P :P என்ன அக்கா அடுத்த கதை ல வாறதை இப்பவே சொல்லுறீங்க

ஒ கதைக்கல்லையா?

என்னது விது செய்த சதியா?

இதோடா... :( இவ்வளவு நாளும் அவா சதி செய்து கதைக்காம விட்டிட்டு இப்ப விதியாம் விதி :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

:P :P :P என்ன அக்கா அடுத்த கதை ல வாறதை இப்பவே சொல்லுறீங்க

<<

இல்லையே இதிலேயே கதைக்கணும் என்றுதானே வந்தா?!!

>>ஒ கதைக்கல்லையா?

என்னது விது செய்த சதியா?

இதோடா... :) இவ்வளவு நாளும் அவா சதி செய்து கதைக்காம விட்டிட்டு இப்ப விதியாம் விதி :angry:

<<

நாயகிமேல் இத்தனை கோவமா?!!...நீங்கள் கோவித்தால் கூட நாயகன் தாங்க மாட்டார்!!...

Posted

<<

நாயகிமேல் இத்தனை கோவமா?!!...நீங்கள் கோவித்தால் கூட நாயகன் தாங்க மாட்டார்!!...

அட பாவமே. நாயகி மேலை குறை சொன்னால் கோவிச்சிடுவாரோ? :)

நாயகனுக்கு வேறை வேலை இல்லை. :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அட பாவமே. நாயகி மேலை குறை சொன்னால் கோவிச்சிடுவாரோ? :lol:

நாயகனுக்கு வேறை வேலை இல்லை. :angry:

வெண்ணிலா,

உண்மையான நேசிப்பு கோவத்தைக் காட்டாது.

எதையோ எதிர்பார்த்தால் தானே ஏமாற்றம்? அந்த ஏமாற்றம் தானே

ஏக்கம்? அதுதானே கோவத்தின் முதல் தொடக்கம்.

உன்னை நான் நேசிக்கின்றேன் நீ நேசிக்காவிட்டாலும் கூட(நீ வருவாய் என- படத்தில் பார்த்திபன் சொல்வாரே)

அதுதான் நிஜமான காதல்!.

எந்த நிலையிலும் தான் நேசிப்பவளின் நெஞ்சம் வாடிவிடக்கூடாது என்று நினைக்கின்ற

ஓர் உன்னதக் காதலின் கதைதான் இது :)!!

ரொம்ப்பவும் அறுக்கிறேனோ? :()

Posted

வெண்ணிலா,

உண்மையான நேசிப்பு கோவத்தைக் காட்டாது.

எதையோ எதிர்பார்த்தால் தானே ஏமாற்றம்? அந்த ஏமாற்றம் தானே

ஏக்கம்? அதுதானே கோவத்தின் முதல் தொடக்கம்.

:P :P ஓ கோவத்துக்கான விளக்கம் அருமை. நன்றிகள் அக்கா

உன்னை நான் நேசிக்கின்றேன் நீ நேசிக்காவிட்டாலும் கூட(நீ வருவாய் என- படத்தில் பார்த்திபன் சொல்வாரே)

அதுதான் நிஜமான காதல்!.

ஓ கேட்டு வாங்குவது காதல் அல்ல, நான் உன்னை நேசிப்பேன் நீ நேசிக்காவிட்டாலும்................... அதுதானே. ஹீஹீ ஆமாம் நல்ல காதல் தான் அதுவும்

எந்த நிலையிலும் தான் நேசிப்பவளின் நெஞ்சம் வாடிவிடக்கூடாது என்று நினைக்கின்ற

ஓர் உன்னதக் காதலின் கதைதான் இது :)!!

ஆனால் பாருங்க அவள் வாடிட கூடாது என இவன் சாகிறானே அது தானுங்க எனக்கு பிடிக்கல்லை. எனக்கு விளங்குது நீங்க சொல்லுறீங்க அதுதான் வெண்ணிலா நிஜக்காதல் னு. ம்ம் சரி சரி :P ஆனால் நாயகியும் வீம்பு நாயகனும் பைத்தியம்.

இப்ப 2 பேர் மீதும் எனக்கு கோவம்.

ரொம்ப்பவும் அறுக்கிறேனோ? :()

அறுக்கிறியளோ இல்லையோ. கோவத்தோடு கூடிய அழுகையை வரவழைக்கிறியள். :angry: :lol:

சரிங்கோ அக்கா எனக்கு நித்தா வந்திடிச்சு. ஞாயிற்றுக்கிழமை அடுத்த மடலோடை சந்திப்பம்.

Posted

தமிழ்தங்கை கதை சொல்லிறன் எண்டு சொல்லிப்போட்டு என்ன நீங்கள் வெண்ணிலாவோட சேந்து அறுத்துக்கொண்டு இருக்கிறீங்கள்? உங்கட பாட்டு வாசிக்க நல்லா இருக்கு. சில வரிகள் ரெண்டு தரம் வரவேணும் என்று அடைப்புக்குறிக்கிள போட்டு இருக்கிறீங்கள். அப்ப உண்மையில பாடிப் பாடித்தானா கதை எழுதுறீங்கள்? கதையில் வருபவருக்கு பெயர் ஒன்றும் இல்லையா? அவருக்கு அப்போது எத்தின வயசு இருக்கும்? உங்களுக்கு 13 என்று எழுதி இருந்தீங்கள் போல. அவர் அப்போது ஏ.எல் படித்துக்கொண்டு இருந்தாரா? உங்கள் அக்கா இதுபற்றி உங்களுடன் ஒன்றும் கதைக்கவில்லையா? அக்காவின் வகுப்பு என்றால் அக்கா கட்டாயம் இதுபற்றி ஏதாவது உங்களிடம் கேட்டு அல்லது வீட்டில் முறைப்பாடு செய்து அல்லது சப்போர்ட் பண்ணி கதைத்து ஏதாவது செய்து இருப்பாவே? மேலும், அண்ணா தங்கச்சி மூலம் தூதுவிட்டு தனது காதல் சக்சஸ் ஆக வருவதற்கு முயற்சிகள் பல செய்து இருப்பாரே? தங்கச்சி - உங்கள் சினேகிதி தனது அண்ணாவை நீங்கள் துன்புறுத்துவது பற்றி கண்டுகொள்ளவில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தமிழ்தங்கை கதை சொல்லிறன் எண்டு சொல்லிப்போட்டு என்ன நீங்கள் வெண்ணிலாவோட சேந்து அறுத்துக்கொண்டு இருக்கிறீங்கள்? உங்கட பாட்டு வாசிக்க நல்லா இருக்கு. சில வரிகள் ரெண்டு தரம் வரவேணும் என்று அடைப்புக்குறிக்கிள போட்டு இருக்கிறீங்கள். அப்ப உண்மையில பாடிப் பாடித்தானா கதை எழுதுறீங்கள்? கதையில் வருபவருக்கு பெயர் ஒன்றும் இல்லையா? அவருக்கு அப்போது எத்தின வயசு இருக்கும்? உங்களுக்கு 13 என்று எழுதி இருந்தீங்கள் போல. அவர் அப்போது ஏ.எல் படித்துக்கொண்டு இருந்தாரா? உங்கள் அக்கா இதுபற்றி உங்களுடன் ஒன்றும் கதைக்கவில்லையா? அக்காவின் வகுப்பு என்றால் அக்கா கட்டாயம் இதுபற்றி ஏதாவது உங்களிடம் கேட்டு அல்லது வீட்டில் முறைப்பாடு செய்து அல்லது சப்போர்ட் பண்ணி கதைத்து ஏதாவது செய்து இருப்பாவே? மேலும், அண்ணா தங்கச்சி மூலம் தூதுவிட்டு தனது காதல் சக்சஸ் ஆக வருவதற்கு முயற்சிகள் பல செய்து இருப்பாரே? தங்கச்சி - உங்கள் சினேகிதி தனது அண்ணாவை நீங்கள் துன்புறுத்துவது பற்றி கண்டுகொள்ளவில்லையா?

<<

சரி சரி.....இனி அறுக்கவில்லை கலைஞா!! :rolleyes:

என்ன நீங்க!! இது தமிழ்தங்கையின் சொந்தக்கதைன்னே முடிவு பண்ணீட்டீங்களா?!! ச்சோ...

எழுத்து, பாடல், கதை அமைப்பு என்னுடையது என்று சொன்னேன். இப்படி குறுக்கு விசாரணை செய்தால் எப்படி?!!..அக்காவின் வகுப்பு என்றால் 15 வயசுதான். அதுசரி...இப்ப அவருக்கு எத்தனை வயசு இருக்கும் என்றால் நாயகியின் வயசையும் கண்டு பிடிச்சுப்போடுவீங்களே :rolleyes: !

ஒருவேளை இதை சம்பந்தப்பட்டவர்கள் வாசிக்க நேரிட்டாலும் என்றுதான் நாகரீகம் கருதி பெயரைச்சொல்லவில்லை. ஓமோம் பாடல்வரிகளைப் பாடிப்பாடித்தான் எழுதினேன். அவைகளை இரசித்து கருத்தை உள்வாங்கிப்பாடும் ஒருவர் கிடைத்தால் அதை ஒலி/ஒளியேற்றலாம். !

கலவன் பாடசாலையில் 'காதலா"...என்று கண்டுபிடிப்பது கஷ்டம் தான். எல்லோரும் எல்லோருடனும் பழகுவார்கள். நன்றாகக் கதைப்பார்கள். ஆக சந்தேகக்கண்ணோடு பார்ப்பவர்கள் குறைவு.

நாயகன் உயிரோடு இருக்கின்றாரா என்பது தெரியாது ஏனெனில் அவர் ஈழப்போராட்டத்தில் இணைந்துவிட்டார் என்பது அவர் தங்கை மூலம் கிடைத்த செய்தி!.

அண்ணன் தங்கை மூலம் எல்லாம் தூது விட்டு அதை பலருக்கும் தெரியப்படுத்துபவர் இல்லை. ஏனெனில் அவர் நேரடியாகவே நாயகியைக் கேட்ட படியால் அத்தோடு நாயகியும் மறுப்பை எந்த விதத்திலும் காட்டவில்லை என்பதால்...அது நிறைவேறுமா/ இல்லையா என்ற ஒரு அங்கலாய்ப்போடு போய்க்கொண்டிருந்தது.!. கதையை நன்றாக ஆழ்ந்து வாசிக்கின்றீர்கள் கலைஞா, அதற்காக என் பிரத்தியேக நன்றி!.

Posted

கதை நன்றாகப் போகின்றது நாட்டில் கூடுதலான பெண்களின் மன நிலையை படம் போட்டுக்காட்டுகின்றது.. வீட்டில் பயம் ... சமுதாயத்துக்கு பயம் ... ஏன் காதல் என்றால் ஏதோ கெட்ட வார்த்தை என்று எண்ணும் ஆக்களும் இருக்கின்றார்கள் ..! வரட்டுக் கெளரவம் ... வரட்டுப் பிடிவாதம் .....

இதனால் எத்தனையோ காதல்கள் கருவிலேயே சிதைக்கப் பட்டிருக்கின்றன.... பின்னர் காலம் போன பின் அதை நினைத்து ஏங்குவது.... அந்த நினைவுகளிலேயே மூழ்கி வேதனையுடன் இருந்து வருங்கால வாழ்வையும் தொலைப்பது.....இப்படி எத்தனையோ பேர் நடைமுறை வாழ்க்கையில் ...... :rolleyes:

அருமையான கதைக் கரு ! வாழ்த்துக்கள் தொடருங்கள்...... B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கதை நன்றாகப் போகின்றது நாட்டில் கூடுதலான பெண்களின் மன நிலையை படம் போட்டுக்காட்டுகின்றது.. வீட்டில் பயம் ... சமுதாயத்துக்கு பயம் ... ஏன் காதல் என்றால் ஏதோ கெட்ட வார்த்தை என்று எண்ணும் ஆக்களும் இருக்கின்றார்கள் ..! வரட்டுக் கெளரவம் ... வரட்டுப் பிடிவாதம் .....

இதனால் எத்தனையோ காதல்கள் கருவிலேயே சிதைக்கப் பட்டிருக்கின்றன.... பின்னர் காலம் போன பின் அதை நினைத்து ஏங்குவது.... அந்த நினைவுகளிலேயே மூழ்கி வேதனையுடன் இருந்து வருங்கால வாழ்வையும் தொலைப்பது.....இப்படி எத்தனையோ பேர் நடைமுறை வாழ்க்கையில் ...... :rolleyes:

அருமையான கதைக் கரு ! வாழ்த்துக்கள் தொடருங்கள்...... B)

உங்களின் ஆர்வம் தான் எங்களின் எழுத்துக்கு அருமருந்து! அடுத்த பகுதி இப்போதுதான் எழுதிக்கொண்டிருக்கின்றேன். நாளை இரவு அல்லது திங்கள் காலை போடுகின்றேன்.

மிகுந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இசையும் கதையுமாய் இணைந்து வரும் ஓர் தொடர்!.

காதல்" சொல்லிய காதல் - 7

தன்னை மட்டுமே முழுமையாக நேசிக்கும் ஒருவன் கிடைப்பதைவிட வேறு என்ன

வேண்டும் ஒரு பெண்ணுக்கு என்று! அன்று முழுதுமென்னை யோசிக்க வைத்தீர்கள்.

உங்களை விரும்புவதற்குரிய காரணங்கள் ஆயிரமாயிரமாய் ஆனால் வேண்டாம் என்று

விலகிச்செல்லவோ விலக்கிக்கொள்ளவோ எதுவுமே இல்லையே!..உங்கள் அன்பின் கனம்

தாங்கும் அளவிற்கு என் இதயம் விசாலம் இல்லை என்று வேண்டுமானால்

சொல்லலாம். இப்படியெல்லாம் எண்ணிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தேன்.

ஊர் அழுக்கையெல்லாம் தன் வாயேலேயே கழுவித்தள்ளூம் பக்கத்துவீட்டு அம்மா

வந்திருந்தார்.அவரை பார்த்தவுடனேயே புரிந்தது இன்று ஒரு புயல்

வீசப்போகிறது என்று; என்ன பேசினார்கள் என்றுபுரியவில்லை ஆனால் அம்மா

சொல்லிக்கொண்டிருந்தது மாத்திரம் காதில் கேட்டது.

'என்னுடைய பிள்ளைகளைப்பற்றி எனக்குத்தெரியும், நான் அவர்களுக்கு எந்த

கட்டுப்பாடும் வைக்கவில்லை. வீட்டு நிலமை தெரிந்த பிள்ளைகள் வேண்டாத

வம்புக்கெல்லாம் போக மாட்டார்கள். எப்போதும் அவர்கள் என் பிள்ளைகள் தான்.

!..."இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை எனக்கு" !...இத்தனை நம்பிக்கை

வைத்திருக்கும் என் தாயின் நம்பிக்கையை எப்படி சிதைப்பது..ஒரு

முடிவெடுக்கும் நிலமையில் இருக்கும் போதா

இப்படியெல்லாம்!..சே!...பட்டிமன்றத்தில் நடுவர் கூட கொஞ்சம் தடுமாறுவார்

எந்த பக்கம் தீர்ப்பு சொல்வதென்று !..!...என்னால் முடியவே இல்லை!.

உங்களைப்பார்த்த நாள் முதல் இன்று வரை நீங்கள் என்னை ஒருதடவையாவது

நோகடிக்கவில்லையா என்று சிந்தித்தேன். ..இல்லையே அப்படி ஒரு காரணமும்

கிடைப்பதாய் தெரியவில்லை!..அன்று என்னுடன் நீங்கள் பேசமாட்டீர்கள் என்று

சொன்னபோதே விலகி இருக்கலாமோ என்று தோன்றியது. என்ன பண்ண? "பார்த்தீபன்

சொன்னது போல் " விலக விலக புள்ளிதானே நீ எப்படி விஸ்வரூபம்" என்று தான்

எனக்கும் தோன்றியது!!!

என் கண்களுக்குள் எதற்கடா வந்து விழுந்தாய்? ஏன் இத்தனை அன்பையும்

மொத்தமாய் கொட்டினாய் என்னிடம்?! யாரிடம் கேட்பது? எங்கு போய் சொல்வது?

சரி வாழ்க்கை அதன் ஓட்டத்திலேயே ஓடட்டும் என்று என்னை ஆறுதல்

படுத்திக்கொண்டேன். அடுத்த நாள் கொஞ்சம் தெளிவோடு தான் வந்திருப்பதாய்

நினைத்துக்கொண்டேன். அன்றைய காலை இறைவணக்க கூட்டத்திற்கு போகும்வரை என்னை

நினைந்து நானே கொஞ்சம் பெருமைப்பட்டுகொண்டேன். ஆனால் எங்கே? எல்லோரும்

வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள்.

உங்களைப்ப்பார்க்கவே கூடாது என்று அந்த திசையிலேயே திரும்பாமல் கண்களை இறுக மூடிக்கொண்டேன்

ம்ம்ம்ம்ம்ம்..மூடிக்கொண்டது விழிகளைத்தானே தவிர! உங்கள் நினைவுகளை அல்ல

என்பது அப்போதுதான் எனக்குள் உறைத்தது. காலை வணக்கம் முடிந்து எல்லோரும்

கலைந்து சென்றார்கள். உங்கள் உடையைப்போலவே கலையாமல் இருந்தது உங்கள்

நினைவும் எனக்குள்.

கதாநாயகனே! என் கதாநாயகனே!

தொடாமலே தொட்டுச்சென்றாய்

இதயம்! கைகள் படாமலே!

உணரச்செய்தாய் காதல்! (2)

விழிகள் மூடிப்பார்க்கின்றேன்

நிறைந்தே நிற்கிறாய்!.இமைகள்

திறந்தும் பார்க்கின்றேன்!எங்கும்

தெரிகின்றாய்!

நீயே நீயே என்

காதல் தீவே!.என்னை

மறைத்துப்பார்த்தேன்

அங்கும் நீயே!. (2)

போ! போ! என்றேன்!

வந்து சேர்ந்தது காதல்

என்னிடம்!.வா! வா!

என்றேன் காதல்

ஏந்திச்செல்லுதே....உன்னிடம்

உன்னிடம்! உன்னிடம்!!.

நீயே நீயே என்

காதல் தீவே!.என்னை

மறைத்துப்பார்த்தேன்

அங்கும் நீயே!. (2)

வகுப்புக்குள் வந்ததும் வராததுமாய் உங்கள் தங்கை

சொன்னார்...நாளைக்கு எங்க அண்ணனோட Birthday," அவர் முடிக்க முன்;

"அதுக்கு !!..என்றேன் எனக்குதேவையில்லாத விடயம் போல!..இல்லை அண்ணாவிற்கு

ஏதாவது வாங்கிகொடுக்கணும் என்றுநினைச்சன் ஆனா உங்க சந்தா பணம் கட்டணுமே

அதற்ககுரியளவு பணம் தான் இருக்கு!..அப்படி என்று சொன்னதை என்னால்

ஏற்றுக்கொள்ள முடியவில்லை!..ஏனெனில் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்

என்று எனக்குபுரியவே இல்லை. நீங்கள் படிக்கும் வரை அதற்குரிய பணத்தை நான்

உங்களிடம் வாங்கவே இல்லையே ! உங்கள் அண்ணாவின் பிறந்தநாளை

எனக்குத்தெரியப்படுத்த வேண்டும் என்பது உங்கள் நோக்கம் என்பது

புரிந்தது. சரி...பணம் நான் கட்டுகின்றேன் நீங்க உங்க அண்ணாவிற்கு ஏதாவது

வாங்கிக்கொடுங்க என்று சொல்லிவிட்டு ,

என்னசெய்யலாம்? பரீட்சை வேறு நெருங்கிக்கொண்டிருந்தது. ஏதாவது

வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று உள்மனம் முரண்டு பிடித்தது. ஆனால்

கடைக்கு போக முடியுமா? எங்கே கண்டாலும் விசயம் வீட்டுக்கு போய்

விடுமே!..என்ன பண்ணுவது? !. !...உங்களுக்குள்ளும் ஆசை மூட்டாமல்

யாருக்கும் தெரியாமல் ம்ம்ம்ம்..ஒருவழியாய் கண்டுபிடித்துவிட்டேன்.

அதை..............

என்றென்றும் நீங்கள் நேசிக்கும்,

.............................

Posted

ஹீஹீ

என்ன பரிசு வாங்கி கொடுத்தாள் நாயகி? கவிதை வரிகள் அருமை.

கதாநாயகனே! என் கதாநாயகனே!

தொடாமலே தொட்டுச்சென்றாய்

இதயம்! கைகள் படாமலே!

உணரச்செய்தாய் காதல்! (2)

விழிகள் மூடிப்பார்க்கின்றேன்

நிறைந்தே நிற்கிறாய்!.இமைகள்

திறந்தும் பார்க்கின்றேன்!எங்கும்

தெரிகின்றாய்!

நீயே நீயே என்

காதல் தீவே!.என்னை

மறைத்துப்பார்த்தேன்

அங்கும் நீயே!. (2)

போ! போ! என்றேன்!

வந்து சேர்ந்தது காதல்

என்னிடம்!.வா! வா!

என்றேன் காதல்

ஏந்திச்செல்லுதே....உன்னிடம்

உன்னிடம்! உன்னிடம்!!.

நீயே நீயே என்

காதல் தீவே!.என்னை

மறைத்துப்பார்த்தேன்

அங்கும் நீயே!. (2)

Posted

தமிழ்தங்கை அக்காவின் மடல் எல்லாம் வாசித்தேன் அருமையாக வரையபட்டு இருகிறது............பேபிக்கு ஒரு சின்ன சந்தேகம் அதாவது இந்த வரியில் தான்....தன்னை மட்டும் நேசிக்கும் ஒருவன் என்றா அதன் அர்த்தம் என்ன அக்கா எனக்கு விளங்கவில்லை............ ;)

தன்னை மட்டுமே முழுமையாக நேசிக்கும் ஒருவன் கிடைப்பதைவிட வேறு என்ன

வேண்டும் ஒரு பெண்ணுக்கு என்று!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தமிழ்தங்கை அக்காவின் மடல் எல்லாம் வாசித்தேன் அருமையாக வரையபட்டு இருகிறது............பேபிக்கு ஒரு சின்ன சந்தேகம் அதாவது இந்த வரியில் தான்....தன்னை மட்டும் நேசிக்கும் ஒருவன் என்றா அதன் அர்த்தம் என்ன அக்கா எனக்கு விளங்கவில்லை............ ;)

எப்ப்படி செல்லக்குட்டி? இப்படியான சந்தேகம் எல்லாம் உங்களூக்கு வருது?!! :)!!

தனிமடலில் பதில் தாறன்..இல்லை என்றால்...கலைஞன் வந்து வை..வார்...:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இசையும் கதையுமாய் இணைந்து வரும் ஓர் தொடர்!.

காதல்" சொல்லிய காதல் - 8

அதை அதை எப்படி செயல் படுத்துவது என்பதுதான் எனக்கு தெரியவில்லை. அன்று

பாடசாலையும் விட்டாயிற்று, மாணவர் தலைவர் என்ற முறையில் நாம் தான்

எல்லாரும் போய்விட்டார்களா, என்பதையும் ஒவ்வொரு வகுப்பையும் கண்காணித்து

வருவதையும் பொறுப்பாய் கொண்டிருந்தோம். ஒரே படபடப்பு,

உங்கள் வகுப்பறையில் நுழைந்தேன். உங்கள் மேசையின் மீது "என்றும்

இனியவனுக்கு, பிறந்த நன்னாள் வாழ்த்துக்கள்" என்றென்றும்

வாழ்த்தும்....." என்று முடிவுபெறாத எங்கள் உறவைப்போலவே அதையும்

முடிக்காமல் chalk ஆல் எழுதுவிட்டு வந்தேன். அன்றுமாலை அம்மாவோடு

கோவிலுக்கு சென்றேன்; உங்கள் பெயரில் அர்ச்சனை செய்தேன் அதை அப்படியே

வாங்கிக்கொண்டு மறு நாள் காலை கொஞ்சம் வேளைக்கே பாடசாலை வந்து விட்டேன்.

அதை எப்படியும் உங்கள் மேசையில் வைத்துவிட வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான்

நினைவுகளில் சுழன்றடித்தது. உங்கள் வகுப்பு அறைக்குள் நுழைந்தால்,

உங்களைத்தவிர எல்லோரும் வந்திருந்தார்கள்,,அவர்களின் குழப்படி

பொறுக்காமலோ என்னவோ ஒரு பெண்பிள்ளைகளையும் காணவில்லை. "யார் எழுதினார்கள்

என்ற ஆராய்ச்சியில் எல்லோரும் ஈடுபட்டிருப்பதை காண முடிந்தது. வழமை போலவே

உங்கள் நண்பர் தான் என்னைப்பார்த்துவிட்டு "என்ன என்பது போல் கேட்டார்.

"இல்லை அக்காவை தேடி வந்தேன் என்று நீங்கள் எதிர்பார்த்த ஒரு

பொய்யைச்சொன்னேன்..அதை கேட்டு முடிக்க முன்னரே ...'டேய் நான் கண்டு

பிடிச்சிற்ற்ன் டா..யார் இதை எழுதி இருப்பாங்க என்று" !!..என்றார் என்னை

நோக்கி ஒருபார்வை வீசியபடி !..என் படபடப்பை கவனித்திருக்க

வேண்டும்...அதனால் அவரே சொல்லி முடித்தார்.."வேற யாரா இருக்கும் யாரோ

வாய் பேச முடியாதவங்க " என்றார். !..அப்பாடா என்றிருந்தது எனக்கு. அது

என்னவோ எனக்கு புரியவில்லை திரைப்படங்களீல்தான் Hero வுடன் ஒட்டிக்கொண்டு

ஒரு comedian இருப்பார்ஆனால் இங்கும் அப்படி என்று நினைக்க

என்னையறியாமலேயே சிரிப்பெனக்கு, சிரித்துக்கொண்டே சென்று விட்டேன்.

"உருகி உருகிக் கரைகின்றேன் உன்

காதல் தன்னிலே! இந் நிலவை

சுமக்கும் நீதான் என்றும் என்

வானமே!. (2)

தேடித் தேடிப் பார்த்தாலும்

இங்கில்லை ஒருவன்! என்

உயிரில் மனசில் நிறைந்த

நீயே என்றும் என் தலைவன்!

மழை பெய்து எழுப்பும்

மண் வாசம் போல்! காதல்

மழை கொண்டு உன் வாசம்

எனக்குள் எழுப்பினாய்!

காதல் கொண்டே காதல்

கொண்டே உனக்குள்

எனை வார்த்தாய்! என்

உணர்வினில் உனை சேர்த்தாய்!

மறக்கவும் முடியாமல் உண்மை

மறைக்கவும் முடியாமல்

பஞ்செனும் நெஞ்சால் காதல்

தீயை மூடினேன்!

உந்தன் அன்பை எந்த

நெஞ்சும் விஞ்சாது- காதல்

கொண்டே ஆளும் உன்னை!

யாரும் வெல்ல முடியாது!.

"உருகி உருகிக் கரைகின்றேன் உன்

காதல் தன்னிலே! இந் நிலவை

சுமக்கும் நீதான் என்றும் என்

வானமே!. (2)

காலை இறைவணக்கமும் தொடங்கும் நேரம் வந்தாயிற்று உங்களை காணவேயில்லை.." கடவுளே

இன்று நேரம் தவறி வந்து அடி வாங்க வேண்டுமா? "...ஏக்கம் தவிப்பு எல்லாம்

ஒருசேர வதைத்தது என்னை.

அப்பாடி 'இறைவணக்கம் தொடங்கும் மணி அடிக்கவும் நீங்கள் பாடசாலை வாசலில்

வந்து இறங்கவும் சரியாக இருந்தது. 'கோயிலுக்கு சென்றிருக்கிறீர்கள்

என்பது வழமையான உங்கள் நீற்றுப்பூச்சை விடவும் மேலதிகமான சந்தனம்

உணர்த்தியது. காலை வணக்கம் முடிந்து எல்லோரும் செல்ல முன்னர் உங்கள்

வகுப்பறைக்குள் நுழைந்தேன், அர்ச்சனை பிரசாதம் அத்தோடு நீங்கள்

நெடுநாளாய் வாங்க பிரியப்படும் ஊற்றுமைபேனா ஒன்றையும் வைத்து விட்டு ஓடி

வந்துவிட்டேன். இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது எனக்கு, எப்படி

எவ்வளவு வேகத்தில் இத்தனையும் செய்து முடித்தேனோ,!..என் வகுப்பில்

வந்தமர்ந்த பின் தான் உயிரே வந்தது போன்றதொரு உணர்வு. " உங்கள்

தங்கையிடம் கேட்டேன் '..என்ன பிறந்த நாளுக்கு என்ன

வாங்கிக்கொடுத்தீங்க?!! ஒரு "T-shirt" வாங்கினேன் ஆனா இன்னும்

அண்ணாவிற்கு கொடுக்கேல்லை; காலையில் எழுந்து கோயிலுக்கு போயிற்றார்

என்றார்.."ஓ அப்படியா என்று தெரியாதது போல கேட்டு விட்டு பாடத்தில் கவனம்

செலுத்த தொடங்கினேன்..இன்னமும் இரண்டு நாளில் இடைத்தேர்வு வந்துவிடும்.

"நிறைய படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு மனதை ஒருமுகப்படுத்தி

படிப்பில் கவனம் செலுத்தினேன்..எல்லாம் இடைவேளை வரும் வரை தான். இன்றாவது

இடைவேளைக்கு வெளியில் போகாமல் வகுப்பிலேயே இருந்து விட வேண்டும் என்று

தீர்மானித்து வகுப்பிலேயே இருந்து விட்டேன். அது எவ்வளவு பெரியதவறு!!..

ம்ம்ம்ம்ம்...என்னைதேடிக்கொண்

Posted

தமிழ்தங்கை அக்காவின் மடல் மறுபடி வந்க்டுவிட்டது நன்றாக காதல் இசை பரவி செல்கிறது................. :lol:

திரைப்படங்களீல்தான் Hero வுடன் ஒட்டிக்கொண்டு

ஒரு comedian இருப்பார்ஆனால் இங்கும் அப்படி என்று நினைக்க

என்னையறியாமலேயே சிரிப்பெனக்கு, சிரித்துக்கொண்டே சென்று விட்டேன்.

ஆனால் பாவம் அவன் காமெடியன் தான் எல்லாருக்கும் உதவி செய்வான் அக்கா................... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தமிழ்தங்கை அக்காவின் மடல் மறுபடி வந்க்டுவிட்டது நன்றாக காதல் இசை பரவி செல்கிறது................. :lol:

ஆனால் பாவம் அவன் காமெடியன் தான் எல்லாருக்கும் உதவி செய்வான் அக்கா................... :P

<<

ஜம்முவுக்கு மெய்யாலுமே இளகின மனசுதான்! :D

Posted

ஆஹா மேட்டர் இப்படி போகுதோ?

காதல் வந்துட்டுது நாயகிக்கு அதுதான் நாணுறா.

ஓ நல்ல பரிசாக கொடுத்திருக்கிறீங்க.

இசையும் அதுதாங்க கவி வரிகளும் சூப்பர். அதிலும் பெண் ஆண் வரிகள் என சேர்ந்த்தமை சூப்பர்.

அட நிறைய சொல்ல போக அப்புறம் என்னால் உங்களுக்கு தான் பிரச்சினை. பாய் பாய் அடுத்த மடலில் சந்திப்பம் அக்கா :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள். தொடருங்கள். :lol::D

Posted

தமிழ்த்தங்கை இன்றுதான் உங்கள் இதயநாதம் முழுவதும் வாசித்தேன்.

அருமையான கதைக் கரு . யதார்த்த வாழ்வில் ஒரு பெண்ணவளின் இதயநாதத்தை

அழகாக எடுத்துக் இயம்புகிறது உங்கள் கதை

தொடர்ந்து வாசிக்கும் ஆவலுடன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
தமிழ்த்தங்கை இன்றுதான் உங்கள் இதயநாதம் முழுவதும் வாசித்தேன். அருமையான கதைக் கரு . யதார்த்த வாழ்வில் ஒரு பெண்ணவளின் இதயநாதத்தை அழகாக எடுத்துக் இயம்புகிறது உங்கள் கதைதொடர்ந்து வாசிக்கும் ஆவலுடன்...
<<மிகுந்த நன்றிகள் ரசிகை அவர்களே!. அடுத்த பாகத்தோடு நிறைவடைகின்றது :lol:
வாழ்த்துக்கள். தொடருங்கள். :D:D
<<<தொடர்கின்றேன்...அதுக்காக 'சிரிச்சு'பயமுறுத்தணுமா? :D
Posted

உங்கள்

செயல்கள் மூலம் தான் விசுவரூபமாய் எனக்குள் நின்றீர்கள். வற்றாத

நீரூற்றாய் உங்கள் அன்பூற்று அது !..இதற்குத்தானா????????????????????!.

என்றென்றும் நீங்கள் நேசிக்கும், ................................................

நிறையக் கேள்விகளுடன் முடித்திருக்கின்றீர்கள் அடுத்த பகுதியில் கதை முடியும் போது மனம் கனக்கும் என நினைக்கிறேன் .... நல்ல முடிவாய் முடியுங்கள் <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இசையும் கதையுமாய் இணைந்து வரும் ஓர் தொடர்!.

காதல்" சொல்லிய காதல் - நிறைவு!

மழைவிட்டாலும் தூறல் விடாதாமே" உங்கள் அன்புத்தூறலில் நனைந்த நாளெல்லாம்

இப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். எப்படியும் வாழலாம்

என்றிருப்பவர்கள் மத்தியில் இப்படித்தான் வாழவேண்டும் என்ற உங்கள்

கொள்கை,நோக்கம், அதற்கேற்ற செயல்பாடு..எந்த பெண்ணிற்குத்தான் பிடிக்காது.

எனக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? . ஆனால் காதல் வந்தாலே கவிதை வரும்

என்பார்களே, உங்களுக்கு வந்த கவிதை ம்ம்..நினைக்க சிரிப்பாய் இருக்கிறது.

"பூக்களுக்கு புன்னகைக்கவே தெரியும், அதனால் தானோ நீ கூட பேசுவதில்லை"

என்ற உங்கள் கவிதை; எனக்கு இப்போது நினைத்தாலும் அதை மறக்கவே

முடியவில்லை. நல்ல காலம் நீங்கள் எழுதி விட்டு " இது கவிதை இல்லைங்க, ஏதோ

உங்களைப்பார்க பார்க ஏதோ தோணிச்சு" எழுதிட்டேன்." என்று என்னிடம்

காட்டினீர்கள், வாயிற்கும் வலிக்காமல், சொல்லுக்கும் வலிக்காமல்,

கேட்கும் எனக்கும் வலிக்க கூடாதென்ற உங்கள் கவனம், சொல்லாளும்

திறமை...இது எல்லாமே கவிதை ஆயிற்றே!..என்று மனதில் தோன்ற அதே நீங்கள்

விரும்பும் புன்னகையுடன் சென்று விட்டேன்.

"தொடருமா இந்த பந்தம்

ஏங்குதே எந்தன் நெஞ்சம்!

விரும்பியே ஏற்ற போதும்

காதல் படுத்துதே இந்தப்பாடு!

பெண்மையே! பெண்மையே!

உந்தன் மூச்சினில் வாழ்கின்றேனே!

உனக்கென உனக்கென தினம்

உருகினேன் நானே மானே!(2)

இதழ் விரிக்கும் புன்னகை -அடி

கொல்லுதே என்னையே!தலை

சாய்த்து நலம் கேட்பாய்!

தொலைந்ததே இதயமே!...ஏ..ஏ..ஏ..

குறும்புகள் குழைத்த குழந்தையின்

உருவமடி!! நீ என் செல்லமே!.

பேசும் விழிகளில் தானே

உணர்ந்தேன் பருவமே! ஏ..ஏ.ஏ.(2)

உன் கண்கள் தானடி என்

காதலின் இராச்சியம் உன்

கைகளில் சேரும் நாள்!

என் உயிரின் பாக்கியம்!.

தேவதை தேவதை தினம்

தினம் ஏன் வதை? காதலில்!

நோவதை கண்டுமா!..நீ

இரங்கவில்லை! சொல்லடி!!!....ஓ..ஓ.ஓ!!...

பெண்மையே! பெண்மையே!

உந்தன் மூச்சினில் வாழ்கின்றேனே!

உனக்கேன உனக்கனெ தினம்

உருகினேன் நானே மானே!!(2)

பரீட்சை தொடங்க இன்னும் ஒரு நாளே இருந்தது. பாடசாலையில் எல்லோருக்கும்

பரீட்சை பரபரப்பும், படபடப்பும், எல்லோரும் பரீட்சைக்கான ஆயத்தங்களில்

ஈடுபட்டிருந்தார்கள். எங்கள் வகுப்பையும் உங்கள் வகுப்பையும் சேர்த்து

இடைவெளிகள் விட்டு பரீட்சைக்கு ஏற்றாற்போல் ஒழுங்கு படுத்தினார்கள்.

மாணவர்களை கலந்து கலந்தே இருக்கைகளில் அமரவிடுவார்கள். எங்கள் வகுப்பு

மாணவி என்றால் அவருக்கு அடுத்த இடத்தில் உங்கள் வகுப்பு மாணவர் என்ற

ரீதியில் !..அச்சச்சோ தவறியும் நீங்கள் என்னருகில் இருந்து விடக்கூடாதென்று

இறைவனை வேண்டிக்கொண்டேன். பரீட்சை எழுத வேண்டுமல்லவா? !!!

யன்னல் அருகில் இருக்கவே எனக்குபிடிக்கும் அதே போல் நான் போய் யன்னல் அருகில் ஆசிரியரின்

அனுமதியோடு இருந்து விட்டேன்; நான் மனதில் நினைத்தது அறிந்தோ என்னவோ

நீங்கள் எனக்கு முன்னால் இருந்தீர்கள். அன்றைய நாள் ஒழுங்கு படுத்தலிலும்

அவரவர்க்குரிய இடங்களை கொடுப்பதிலும் கடுகதிவேகத்தில் பறந்து விட்டது.

அடுத்த நாள் பரீட்சை நாள், என்றும் போலவே விடிந்தது. எனக்கு முன்னால்

இருப்பதாலோ என்னவோ எனக்கு முன்னமே நீங்கள் வந்து விடுவீர்கள்.

'உங்கள் பேனா" என்று காட்டிக்கொண்டு எழுத அமர்ந்தீர்கள். ஒவ்வொரு பாட பரீட்சை

முடிவிலும், நல்லா எழுதினீங்களா என்று அக்கறையோடு கேட்பீர்கள்; "ஓம் "

என்று தலையாட்டிவிட்டு 'நீங்கள்" என்பது போல் பார்ப்பேன் அது

புரிந்தும்.."ம்" என்பீர்கள். நினைத்துப்பார்க்கிறேன். நினைவுகளை

ஒவ்வொன்றாய் கோர்த்து சேர்க்கின்றேன். சேர்த்தும் கோர்க்கின்றேன். எப்படி

ஆரம்பித்ததோ அதே வேகத்தில் பரீட்சையும் ஒருவழியாய் முடிந்தது. பெறு

பேறுகளை விட அதைத்தொடர்ந்துவரும் விடுமுறைதான் மனதை பிசைந்தது. ஒருமாதம்

பார்க்கவே முடியாதே.!..பார்க்கும் போதெல்லாம் பேசத்தோன்றுவதில்லை ஆனால்

பார்காத கணங்களெல்லாம் உங்களோடுதானே பேசிக்கொண்டிருக்கின்றேன்.

பெ: உன் திசையில் வீசாத தென்றலுக்காய்

தினமும் தவம் கிடந்தாய்!. என் திமிரை

எல்லாம் அன்பே! உன் காதலால்

உடைத்தாய்!.

கரும்பினை மொய்க்கும் எறும்பாய்

உன் நினைவுகள் மொய்க்க!.என்

மெளனத்தின் வார்த்தைகள் யாவும்

உந்தன் காதலைத் தேடுதே!

கண்களில் காதல் வைத்து

நெஞ்சினில் ஒளித்தேன்! உன்

அன்பினில் நனைந்தே பின்னே

காதலால் தவித்தேன்!. (2)

உன் ஆண்மையின் வீரத்தை

நேர்மையில் கண்டேன்! தாயின்

பரிவினை வார்த்தையில் கண்டேன்!

உன்னையே என்னிடம் கண்டேன்!

நான்! நான்! நான்!.(2)

இரவின் நீளம் கொல்லும்!உன்

நினைவோ தனிமையை வெல்லும்!

என்றும் என்னை அள்ளும் உன்

பேச்சே இனிக்கும் வெல்லம்!.(2)

பரீட்சை முடிந்து அடுத்த அடுத்த வாரங்களில் விடுமுறை வந்து விடும்போல இருந்தது.

நீங்கள் உங்கள் ஊருக்கு போவதாக உங்கள் தங்கை மூலம் அறிந்தேன்.

வந்தே விட்டது அந்த விடுமுறை நாள், என் வாழ்க்கையின் திசையே

மாற்றியமைத்தது அந்த ஒவ்வொரு நாளும். வெளிநாட்டிற்கு போவதற்கான

ஆயத்தங்கள் அத்தனையும் அந்த மாதத்திற்குள்ளேயே முடிந்தாகி விட்டது. விசா

வருவதற்காய் எல்லோரும் காத்திருந்தார்கள் வீட்டில். ஆனால் உங்கள் முகம்

பார்காமல்,பேசாமல் ! நான் தவித்த தவிப்பு, கொட்டிவிடவே முடியாது அந்த

வெந்துபோன வேதனை நாட்களை. ம்ம்ம்....ஒருவழியாய் விடுமுறைக்கும் விடுமுறை

கிடைத்தது, வந்ததும் வ்ராததுமாய் உங்களைத்தான் தேடின கண்கள்.

சொல்லிவிடலாமா!..அதைத்தாங்க முடியுமா உங்களால்? !!..எண்ணிய படியே போனது

அந்த நாள், மாணவ தலைவர் என்ற முறையில் முதல் நாள் எங்களுக்குரிய கடமைகள்

நிறைய இருந்தது. அடுத்த நாள்., நீங்கள் வந்தீர்கள். எனக்கு ஈச்சம்பழம்

பிடிக்கும் என்று உங்கள் தங்கைமூலம் அறிந்து எனக்காக கொண்டு வந்தீர்கள்.

வாங்குவதா விடுவதா? !!!..தெரியவில்லை சிறு தடுமாற்றத்தின் பின் உங்கள்

மனம் வாடிவிடக்கூடாதென்று அதை வாங்கினேன். !!!! ஏனோ தெரியவில்லை நிறைய

பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டே பேசாமல் நான் சென்று விட்ட காரணம்

என்ன? இன்றும் எனக்கு புரியவில்லை. ஆனால் என்ன பண்ண? என் பாடசாலையின்

கடைசி நாள். உங்களை பிரிய போகின்றேன் என்ற கவலையில் தான் எனது

குடையைக்கூட மறந்து வைத்து ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..எடுக்க வந்த போது நீங்கள்

என் இருக்கையில் !..."என் குடை"....எத்தனை பெரிய வார்த்தை இல்லையா இது?

!!..நான் நான் என்னை நினைத்து கவலை கொள்வதா? !!! காதல் சொல்லிய காதலை

உணர்ந்த பின் ஒவ்வொரு நினைவும் ஊற்றுப்பெருக்காய் !.....எத்தனையோ

ஈரநினைவுகள் என்னை காயவிடாமல் வைத்திருப்பதே உயிரூறும் உங்கள் நினைவுகளே

!. என்றும் என்னை நேசித்த முதல் உள்ளமாய் நீங்கள்

மட்டுமே!!!!!!!!!!!!!!!!!!

சொல்லியிருந்தால், நான் போவதை நீங்கள் அறிந்திருந்தால் , "என்னை

விட்டுவிட்டு போயிடுவீங்களா? " என்ற உங்கள் ஒற்றை வாக்கியத்தில் நான்

நொறுங்கி போயிருப்பேன். விட்டு விட்டுப் போயிருப்பேனா? !!!!!.தெரியவில்லை!

எந்த இறுக்கத்திலும் உங்கள் நினைவுகள் மட்டுமே இதயம் தடவும் தென்றலாய்

இதமாய் இருக்கின்றது. எத்தனையோ கஷ்டங்களைக் கடந்துவிட்டேன் அப்போதெல்லாம் உங்களின்

புன்னகை நிறைந்த முகம் தான் ஒரே ஒரு ஆறுதல்!

என் இதயத்தின் ஓரவழிகளில் ஈரமாய் இன்னும் கலந்திருப்பது

உங்களின் நினைவுகள் தான்! அது வற்றாது!! இன்றல்ல! என்றும்.

என் நினைவுகளுடனே ஊறிப்போய் இருக்கும் என்பது நிச்சயம்! சத்தியம்.

என்றென்றும் நீங்கள் நேசிக்கும்,

..................................

Posted

ஏதோ ஒரு மாதிரி முடிச்சிட்டீங்க. நிஜக்கதை என சொல்லி இருந்தீங்க அல்லவா? இப்போ இருவரும் எப்படி இருக்கின்றனர்?

உங்கள் கதையும் கவியும் ரொம்ப அழகுங்க. வாழ்த்துக்கள். ஆனால் இறுதிவரையில் நாயகன் நாயகி பெயரின்றியே கதை போயிடிச்சு.

மீண்டும் ஒரு கதையில் சந்திக்கலாம் என நினைக்கின்றேன். நன்றி அக்கா

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.