Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈராக் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முற்றிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று  - வார்த்தை தடுமாறி நகைக்க வைத்த புஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முற்றிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று  - வார்த்தை தடுமாறி நகைக்க வைத்த புஷ்

நாடொன்றின் தலைவரோ அன்றி முன்னாள் தலைவரோ என்ன  கூறுகிறார் என்பதை முழு உலகமே உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் என்பது எவரும் அறியாதது அல்ல.  அதிலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் வெளியிடும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியத்துவம் மிக்கதாக இருக்கும்.

No description available.

இந்நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்  அந்நாட்டு நேரப்படி  நேற்று புதன்கிழமை உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து அமெரிக்க டலஸ் பிராந்தியத்திலுள்ள தனது  உத்தியோகபூர்வ அலுவலகத்தில்  உரையாற்றிக் கொண்டிருந்தார். 

அவர் இதன்போது உணர்வுபூர்வமான கருத்துகளை முன்வைத்து ஆக்ரோஷமாக உரையாற்றினார்.

No description available.

இந்நிலையில் அவர் ஒரு கட்டத்தில் தன்னை மறந்து ரஷ்யாவின் உக்ரேன் மீதான  படையெடுப்பை ஈராக் மீதான படையெடுப்பு எனத் தவறுதலாக குறிப்பிட்டு ஈராக் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முற்றிலும் நியாயப்படுத்த முடியாத மிருகத்தனமான படையெடுப்பு எனத் தெரிவித்து அங்கிருந்தவர்கள் அனைவரையும் திகைப்பில் விழி பிதுங்க வைத்துள்ளார்.

No description available.

இந்நிலையில் உடனடியாக தனது தவறை உணர்ந்து கொண்டு தனது தலையைக் குலுக்கி தான் கூறியதை உடனடியாக மறுத்த  ஜோர்ஜ் டபிள்யூ புஷ், தான் உக்ரேனையே தவறுதலாக ஈராக் எனக் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.

அவர் இவ்வாறு கூறவும் அங்கிருந்தவர்கள் மத்தியில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.

2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பிற்கு உத்தரவிட்டதன்  மூலம் பலரதும் கண்டனத்திற்குள்ளாகியுள்ள ஜோர்ஜ் டபிள்யூ புஷ்,   தற்போது ஈராக் மீதான படையெடுப்பொன்றிற்கு தானே தவறுதலாக கண்டனம் தெரிவித்தமை குறித்து பலரதும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.

No description available.

 ஈராக்கிய  முன்னாள் தலைவர் சதாம் ஹ{ஸைனுக்கு அல் கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷால் ஈராக் மீதான படையெடுப்புக்கு  உத்தரவிடப்பட்டிருந்த நிலையில, அந்தக் குற்றச்சாட்டு  பொய்யானது என பின்னர் அறியப்பட்டது. ஈராக் போரில் அமெரிக்கா பங்கேற்றதால்  4,825 க்கு மேற்பட்ட  கூட்டமைப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.

 

https://www.virakesari.lk/article/127817
 

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

குற்றமுள்ள மனம் குறுகுறுக்கும் எனவும் எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிழைய திருத்தி விட்டு.. IRAQ TOO என்று தன்னைத் தானே குற்றம் கூறியதோடு.. 75 என்று தனது வயதையும் சொன்னார். ஞாபக மறதிக்கா.. சுடலை ஞானத்திறாக.. அப்படிச் சொன்னர் என்று தெரியவில்லை. ஆனால்.. புஷ் கடைசியில் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார்.. ஈராக் மீதான படையெடுப்பென்ற தனது தனி மனித முடிவு மோசமான வரலாற்றுத் தவறு என்று. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

ஈராக் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முற்றிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று  - வார்த்தை தடுமாறி நகைக்க வைத்த புஷ்

வாழ்நாள் முழுவதும் பொய் சொல்லி வாழ்பவர்களுக்கு வயது போகப்போக சொந்த வாயே உண்மைகளை சொல்லிவிடும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனை குற்றம் சாட்டும் புஸ் அணு ஆயுதங்கள் இருப்பதாக அந்நாட்டுக்குள் புகுந்து இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் அப்பாவி ஈராக்கிய மக்களை கொன்று குவித்தனர். அணு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர் ரஸ்யாவை பார்த்து உக்ரேனியர்களை கொல்கிறார்களாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.