Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போய்விடு அம்மா

Featured Replies

போய்விடு அம்மா

வ.ஐ.ச.ஜெயபாலன்

காலம் கடத்தும் விருந்தாளியாய்

நடு வீட்டில்

நள்ளிரவுச் சூரியன்

குந்தியிருக்கின்ற

துருவத்துக் கோடை இரவு.

எழுப்பிவிட்டுத் தூங்கிப்போன

கணவர்களைச் சபித்தபடி வருகிற

இணையத்துத் தோழிகளும் போய்விட்டார்.

காதலிபோல் இருட்டுக்குள்

கூடிக் கிடந்து

மலட்டு மனசில்

கனவின் கரு விதைக்கும்

தூக்கத்துக்கு வழிவிட்டு

எழுந்து போடா சூரியனே.

பாவமடா உன் நிலவும்

கணணியிலே குந்தி

இணையத்தில் அழுகிறதோ

மூன்று தசாப்தங்கள்

தூங்காத தாய்களது

தேசத்தை நினைக்கின்றேன்.

படை நகரும் இரவெல்லாம்

சன்னலோரத்துக் காவல் தெய்வமாய்

கால்கடுத்த என் அன்னைக்கு

ஈமத்தீ வைக்கவும் எதிரி விடவில்லை.

பாசறைகளை உடைத்து

உனக்குப் புட்பக விமானப் பாடை

இதோ எடுத்துக்கொள் அம்மா

என் கவிதையின் தீ

போய் வா.

புதை குழிகளின் மேல்

இடிபாடுகளின்மேல்

பறங்கிக்குப் பணியாத என்

மூதாதையரின் சுவடுகளில்

பாலகர் சிந்திய இரத்ததின்மேல்

நம்பிக்கைப் பசுமையாய்

மீந்திருக்கிற

பனந்தோப்புகளின்மேல்

ஆலயங்கள், மசூதிகள் நிமிரும்

எங்கள் கிராமங்களின்மேல்

ஒரு யூட்டோபியாவில் இருக்கிற

என் தேசத்தின் கனவுகளை

மீட்டுவர வேண்டும்.

visjayapalan@gmail.com

போய்விடு அம்மா

வ.ஐ.ச.ஜெயபாலன்

ஈழந்து தேசத்து

புல்வெளியில்

இரத்ததின் சாயத்தில்

புதைகுழியின் மரணத்தில்

உணர்வு வலி கொண்டு

இதய வலியோடு

உயிர் வலி தாங்கி

நிற்கும் அன்னையவள்

வலி எழுத்தில்

வடிக்க முடியா

உண்மை வலி

  • கருத்துக்கள உறவுகள்

புதை குழிகளின் மேல்

இடிபாடுகளின்மேல்

பறங்கிக்குப் பணியாத என்

மூதாதையரின் சுவடுகளில்

பாலகர் சிந்திய இரத்ததின்மேல்

நம்பிக்கைப் பசுமையாய்

மீந்திருக்கிற

பனந்தோப்புகளின்மேல்

ஆலயங்கள் மசூதிகள் நிமிரும்

எங்கள் கிராமங்களின்மேல்

ஒரு யூட்டோபியாவில் இருக்கிற

என் தேசத்தின் கனவுகளை

மீட்டுவர வேண்டும்

ஆகா என்ன அருமையான வரிகள்...நன்றியுடன்..

பாராட்டுகளும்...

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடத்தும் விருந்தாளியாய்

நடு வீட்டில்

நள்ளிரவுச் சூரியன்

குந்தியிருக்கின்ற

துருவத்துக் கோடை இரவு.

அழகான கவி வரிகள்.

நள்ளிரவுச் சூரியன் நாட்டிலிருந்து வடித்த கவிதையோ அழகு.

நல்லதொரு கவிதையை இங்கு இணைத்த மோகன் அண்ணாவிற்கு நன்றிகள்

கவிதையின் கனம் கண்டு

கண்விழி கலங்கி நின்றேன்

தூக்கத்துக்கு வழிவிட்டு

எழுந்து போடா சூரியனே.

பாவமடா உன் நிலவும்

கணணியிலே குந்தி

இணையத்தில் அழுகிறதோ

இணையத்தில் அழுவது யாருக்கும் கேட்கபோவதில்லை.............மிகவும் அருமையான ஒரு கவிதை இதை இங்கே இணைத்த மோகண் அண்ணாவிற்கு நன்றிகள்............அதில் இந்த வரிகள் என்னை மிகவும் கொள்ளை கொண்ட வரிகள்............. :)

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய கஜந்தி, வல்வைமைந்தன், கறுப்பி, பரணி, ஜமுனா தோழமையும் கவிதை ஈடுபாடுமுள்ள உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தோழன் சிவராமின் மரணத்துக்குப் பின்னர் மூன்றுதடவைகள் இலங்கை சென்றிருந்தபோதும் சென்றவருடம் நிலமை மிக மோசமாகியிருந்தது. அம்மா மரணப்படுக்கையில் என்னோடு பேசிய வார்த்தைகள் 'என்ன நடந்தாலும் வந்துவிட வேண்டாம்' என்பதுதான். எங்கள் தாய்களின் துயரம் கொடியது. அவளது மரணச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை. அவளது அஞ்சலியாக நான் எழுதி வருகிறவற்றுள் முக்கியமான கவிதை இது. எனது அம்மாவுக்கான காலத்தால் மறைந்திடுமோ அம்மா பாலமுதூட்டிட நீ காட்டிய வெண்ணிலவு என்ற பாடலை பின்வரும் முகவரியில் கேட்கலாம்.

http://tamil.sify.com/audio/fullstory.php?id=14465321

யாரவாது இப் பாடலின் வரி ஒலி வடிவங்களை யாழில் இணைத்தால் மகிழ்வேன்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய அம்மாவின் முதல் வருடநினைவுநாள் வருகிறது. இம்முறையும் கலந்துகொண்டு கண்ணீரில் கவலைகளைக் கரைக்கும்வாய்பை காலம் எனக்குத் தரவில்லை. அடுத்த முறை நிலைமை மேம்பட்டிருக்குமென நம்புகிறேன்.

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.