Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனிப் பெயர்ச்சி : பலன்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனிப் பெயர்ச்சி : பொதுப் பலன்கள்!

ஜோதிட ரத்னா டாக்டர கே.பி. வித்யாதரன்

2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிகழவுள்ள சனிப் பெயர்ச்சியால் நாட்டிலும், உலக நாடுகளிலும் என்னென்ன மாற்றங்கள், பாதிப்புகள் ஏற்படும் என்று ஜோதிட ரத்னா டாக்டர கே.பி. வித்யாதரன் கணித்துள்ளார்!

நிகழும் சர்வஜித்து ஆண்டு ஆடி 20 ஆம் நாள் (05.08.2007) ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணபட்சம் சப்தமி திதி, அசுவினி நட்சத்திரம், சூலம் நாம யோகம், பவம் நாம கரணம் கூடிய நேத்திரம், ஜீவன் மற்றும் சித்தயோகம் நிறைந்த நன்னாளில், செவ்வாய் ஓரையில், கதிருதய நேரம் உட்பட நண்பகல் மணி 12.09க்கு, பஞ்ச பட்சியில் வல்லூறின் வலிமை பொருந்திய வேளையில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசியின் சிம்மாசனத்தில் சனி பகவான் சென்று அமர்கிறார்.

05.08.2007 முதல் 25.09.2009 முடிய உள்ள காலம் முழுவதும் சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கொண்டு தனது சீரிய கதிர்களைச் செலுத்துவார்.

05.08.2007 முதல் 05.08.2008 முடிய மகம் நட்சத்திரத்திலும்

16.08.2008 முதல் 29.08.2009 முடிய பூரம் நட்சத்திரத்திலும்

30.08.2009 முதல் 25.09.2009 முடிய உத்திரம் நட்சத்திரத்திலும் சனி பகவான் சஞ்சாரம் செய்வார்.

25.12.2007 முதல் 18.3.2008 முடிய மற்றும் 9.1.2009 முதல் 19.5.2008 முடிய உள்ள காலகட்டங்களில் சனி பகவான் வக்கிர கதியில் செல்வார்.

உலகெங்கும் அதிரடி மாற்றங்களை இந்த சிம்மச் சனி ஏற்படுத்துவார். தொலை தொடர்புத் துறை அசுர வளர்ச்சியடையும். கிராம மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கும். அவர்களின் அடிப்படை வசதிகளும் பெருகும். பழமையான வைத்திய முறையை மக்கள் அதிகம் பின்பற்றுவார்கள். புதிய கோள்கள், நட்சத்திரங்கள் கண்டறியப்படும். நவகிரகங்களில் சூரியனின் உட்கருவின் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படும். இந்தியாவின் அண்டை நாடுகள் வலுவிலக்கும். உலகெங்கும் வாழும் இந்தியர்களின் தனித்திறமைகள் அதிகரிக்கும். பெரிய பதவிகளில் அமர்வார்கள். மறைமுக மதப்போர் மூளும்.நீரிழிவு நோய், பால்வினை நோய், புற்று நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஏழை, எளிய மக்கள் எங்கும் வலுவடைவார்கள். பணம் படைத்தவர்கள் தங்களது சொத்துக்களைக் காப்பாற்றிக்கொள்ள அதிகம் போராட வேண்டி வரும். அகிம்சை வழியில் செல்பவர்களுக்கு மக்கள் ஆதரவு கூடும். அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழுவார்கள். போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் அதிகரிக்கும். நாட்டை ஆள்பவர்கள் கடுமையான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். பல பிரபலங்களின் அந்தரங்கம் வெளிப்படும். முறையற்ற புணர்ச்சிகள் அதிகரிக்கும். பலர் வக்கிர புத்தியுடன் செயல்படுவார்கள்.

சாதி, இனக் கலவரங்கள் புது வடிவில் உருவாகும். காவல்துறை, இராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைச்சுமை அதிகமாகும். இந்திய எல்லையில் போர் அபாயம் உண்டாகும். அரசியலில் எதிரும், புதிருமாக இருந்தவர்கள் இணைவார்கள். தலைமை மாறும். பல அதிசயங்கள் அரசியலில் நடக்கும். அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவும். எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் பணியில் ஆளுபவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். சிலரை திருப்திப்படுத்த புதிய பதிவிகள் உருவாக்கப் படும்.புது மாநிலங்கள் உருவாகும்.

அயல்நாட்டு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இந்தியாவில் முதலீடு செய்யும். உலகின் தட்ப வெப்பநிலை மாறும். சூரியனின் அக்னி வீட்டில் சனி அமர்வதால், பூமியின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரிக்கும். மாவட்ட பருவ மாற்றங்களால் இயல்பான உணவு உற்பத்தி பாதிக்கும். காடுகள் தீப்பற்றி எரியும். மரப் பயிர்கள், மூலிகைப் பயிர்கள் செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள். கடல் சீற்றம், சுனாமி பயம் விலகும். ஆனால் நில நடுக்கம், மலைச்சரிவு, இவற்றால் பாதிப்புகள் அதிகரிக்கும். மந்த வாயுக்களாலும், தொழிற்சாலைக் கழிவுகளாலும் மேலும் சுற்றுப்புறச் சுகாதாரம் கெடும்.

வழிபாட்டுத் தலங்கள் வளர்ச்சியடையும்.ஆன்மிகவாதிக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏற்படவுள்ள சனிப் பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பாதிப்புகள் அதற்கான பரிகாரங்கள் ஆகியன ராசி வாரியாக தொகுத்து அளித்துள்ளோம்.

பிரபல சோதிடர் லயன் ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரண் இந்த சனிப் பெயர்ச்சிப் பலன்களை தொகுத்தளித்துள்ளார்

மேஷம் :

தும்பைப்பூ சிரிப்பும், பலரை வழி நடத்தி செல்லும் அளவிற்குப் பட்டறிவும், தடைகளை தாண்டி எடுத்த காரியங்களை முடிக்கும் திறனும் கொண்டவர்கள் நீங்கள்தான். இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்துக்கொண்டு பலவகைகளில் இன்னல்களை தந்துக்கொண்டிருந்த சனிபகவான் இப்பொழுது 5ம் வீட்டிற்கு அடியெடுத்து வைப்பதால் இனி எந்த வேலையையும் விரைந்து முடிப்பீர்கள்.

முகத்தில் தெளிவு பிறக்கும். மன வலிமை கூடும்.குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். குடும்ப வருமானம் உயரும். இங்கிதமாகப் பேசி கடினமான வேலைகளைக்கூட முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதிற்கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். அவர்களின் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். 2008 ஏப்ரல் மாதத்திலிருந்து பிள்ளைகளின் பிடிவாதம் தளரும்.

பொண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சிறப்பாக கல்யாணத்தை முடிப்பீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். அடிக்கடி உடல்நலத்திற்காக அதிகம் செலவு செய்ய நேரிட்டதே நிலையில் அக்கறைக் காட்டுங்கள். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல் போக்கு மறையும். கன்னிப்பெண்கள் சிந்தித்து செயல்படுவார்கள். காதல் கைகூடும். கல்யாணம் சிறப்பாக முடியும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

வெளிநாட்டிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்தெறிவீர்கள். அதிரடியான முயற்சிகளால் லாபம் உண்டு. வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வேலைச்சுமை அதிகரித்தாலும் விரைந்து முடிப்பீர்கள். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும்.

ஆக இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எல்லாவகையிலும் நல்ல பலன்களையே அள்ளித் தருவார்.

பரிகாரம்:

சென்னை ஸ்ரீகாளிகாம்பாளை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். எண்ணங்கள் ஈடேறும்.

ரிஷபம் :

பொதுவுடைமைச் சிந்தனையுள்ள நீங்கள் மற்றவர்களிடம் மனம் நோகாமல் பேசி பழகுவீர்கள். சுயகட்டுபாடு உள்ள நீங்கள், எவர் தடுத்தும் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்ந்து பலவகையில் முன்னேற்றங்களை கொடுத்து வந்த சனி பகவான் இப்போது சுகவீடான 4வது வீட்டுக்குள் நுழைகிறார். 4வது வீடென்றால் அர்த்தாக்ஷ்டமச்சனியாச்சே என்று பயப்படாதீர்கள்.

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியே சனிபகவான் தான். ஆகையால் உங்களுக்கு ஓரளவு நல்லதையே செய்வார். பழைய கடன் பிரச்சனை தீரும். பூர்வீகச் சொத்தை விற்று, வேறிடத்தில் சொத்து வாங்குவீர்கள். சகோதர, சகோதரிகளிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் கணவன் - மனைவிக்குள் சின்னச் சின்ன வாக்குவாதங்களும், மனஸ்தாபங்களும் வந்து போகும். ஒருவரையருவர் அனுசரித்துப் போவது நல்லது.

வயிற்றுவலி, கால்வலி வந்து செல்லும். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும், குடும்ப சூழ்நிலை புரிந்து நடந்துக் கொள்வார்கள். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். கன்னிப் பெண்கள் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். காதல் கசக்கும். வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் கவனம் தேவை. புது வாகனமும் வாங்கும் யோகமும் உண்டு. திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் அடிக்கடி உதவி கேட்டு வருவார்கள்.

சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். குலதெய்வப் பிராத்தனைகளை முடிப்பீர்கள். மாணவ - மாணவிகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் தொய்வு நிலை மாறும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையாட்களை அரவணைத்துச் செல்லுங்கள்.உணவு, மூலிகை வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் தனி நபர் விமர்சனத்தை தவிர்க்கவும். புது வேலை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. கலைஞர்கள் சிந்தித்து செயல்படுவார்கள்.

இந்த சனிப் பெயர்ச்சி மாற்றம் உங்களின் நிறைக்குறைகளை அலசி ஆராய்வதுடன்,அணுபவ அறிவையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம் :

திருத்தணி முருகப்பெருமானை சஷ்டி திதியில் சென்று கந்தசஷ்டி கவசம் பாடி வணங்குங்கள். மனநிறைவு பெருகும்.

மிதுனம்:

வெள்ளை மனசுக்காரரான நீங்கள், உண்மையே பேசி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். கலை நய சிந்தனையும், கடின உழைப்பால் எதையும் சாதித்துக் காட்டும் திறனும் கொண்டவர்கள் நீங்கள்தான். இதுவரை உங்களை படாதபாடு படுத்திவந்த சனி பகவான் உங்களை விட்டு முழுமையாக இப்போது விலகுகிறார். ராஜ யோகம் தரும் வீடான 3ஆம் வீட்டில் அமர்ந்து, சகல யோகங்களையும் உங்களுக்கு தரப் போகிறார்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிய சண்டை எல்லாம் வந்ததே! சிலர் தம்பதியர்கள் சந்தேகத்தால் பிரிந்தீர்களே! அந்த அவல நிலை இனி மாறும். ஒருவரை ஒருவர் இனி புரிந்து கொள்வீர்கள். சேமித்து வைத்த பணத்தில் சொந்த வீடு வாங்குவீர்கள். பழைய கடனை அடைப்பீர்கள். பிள்ளைப் பாக்கியம் உடனே கிடைக்கும். உங்கள் மகனின் போக்கில் நல்ல மாற்றம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும்.

சொந்த ஊரில் மதிப்பு கூடும். உடன் பிறந்தவர்களுக்கு தக்க சமயத்தில் உதவுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள். தோல் நோய் நீங்கும். கன்னிப் பெண்களுக்கு காதல் இனிக்கும். உயர் கல்வி பெறுவதில் இருந்த தடை நீங்கும். பெற்றோரின் ஆதரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அயல்நாடு பயணம் சென்று வருவீர்கள். மாணவ, மாணவிகளுக்கு இனி மறதி நீங்கும். தேர்வில் அதிக மதிப்பெண்களை குவிப்பார்கள்.

அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்வீர்கள். அனுபவம் மிக்க நல்ல வேலையாட்களெல்லாம் வந்து சேருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உணவு, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சம்பளம் கூடும். கலைஞர்களுக்கு அரசு விருது கிடைக்கும்.

இந்த சனி மாற்றம் அதிரடியான பல மாற்றங்களை தருவதுடன், பணப்புழக்கத்தையும் அள்ளித்தருவதாக அமையும்.

பரிகாரம் :

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ காலபைரவரை தேங்காய் தீபமேற்றி வணங்குங்கள். மனக்குழப்பங்கள் நீங்கும்.

கடகம் :

மலர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரித்து உதவும் குணமும், எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்களும் நீங்கள் தான். உங்கள் ராசிக்கு வாக்கு வீட்டில் சனி அமர்ந்து உங்களை ஆளப் போகிறார். எதிலும் தெள்ளத்தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குழப்பிக் கொண்டிருந்த நீங்கள் இப்பொழுது உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆனால் சனி பகவான் இப்போது வாக்கு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் வாக்கு வாதம், சின்னச் சின்ன சண்டை வந்து நீங்கும். ஆடை, ஆபரணம் சேரும். பிள்ளைகள் மீது இருந்த வெறுப்புணர்வு நீங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமையும். உங்கள் மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வராது என நினைத்துக் கொண்டிருந்த பணம் கைக்கு வரும்.

கன்னிப் பெண்களுக்கு உடல் உபாதைகள், மன உளைச்சல்கள் நீங்கும். காதல் இனிக்கும். கல்யாணம் முடியும். சனி 11வது வீட்டை பத்தாம் பார்வையால் பார்ப்பதால் மூத்த சகோதர வகையிலும், தாய்வழியிலும் கொஞ்சம் மனக் கசப்புகள் வந்து போகும். உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதைத் தவிர்க்கவும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை, ஆபரணங்களை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். எதிர்பாராத திடீர்ப் பயணங்களும், அயல்நாட்டுப் பயணங்களும் அதிகரிக்கும்.

மாணவ, மாணவிகள் ஒரு குறிக்கோளுடன் படிப்பீர்கள். வியாபாரத்தில் முன்பைவிட இப்போது அனுபவ அறிவு அதிகம் கிடைக்கும். வேலையாட்களின் போக்கை உணர்ந்து, அதற்கேற்ப அவர்களிடம் வேலை வாங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி தவறாகப் பேசியவர்களெல்லாம் உங்களின் நல்ல மனசைப் புரிந்து கொள்வார்கள். பாராட்டுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த சனி மாற்றம் கொஞ்சம் சங்கடங்களை தந்தாலும் அடிப்படை வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.

பரிகாரம் :

திருச்சி உச்சி பிள்ளையாரையும், தாயுமானவரையும் சென்று வணங்குங்கள். கவலைகளை போக்கி காசு பணத்தைத் தரும்

சிம்மம் :

கலகலப்பாக பேசி சிரிப்பத்துடன், மற்றவர்களின் இன்ப - துன்பங்களில் பங்கெடுப்பீர்கள். செயற்கறிய செயல்களையும் செய்துவிட்டு சாதாரணமாக இருப்பவர்களும் நீங்கள்தான். 5.8.2007 முதல் 25.9.2007 முடிய உள்ள காலத்தில் உங்கள் ராசிக்குள்ளேயே சனி அமர்ந்து உங்களை ஆளப் போகிறார். சனி இப்போது ஜன்மச் சனியாக வருகிறார்.

16.11.2007 முதல் உங்கள் ராசியின் மீதும், ராசியில் அமர்ந்திருக்கும் சனி, கேது ஆகிய கிரகங்களின் மீதும் குருவின் பாக்கியப் பார்வை வீழ்வதால் தடைகள் உடைபடும். தன்னம்பிக்கை துளிர்விடும். பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். எதிர்பாராத பண வரவு இனி உண்டு. கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். உடல் நலத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.அலட்சியமாக இருக்க வேண்டாம்.

ஜன்ம சனி வந்திருப்பதால் உப்பு சப்பில்லாத கசப்பு, துவர்ப்பு கொண்ட பத்தியச் சாப்பாடு போல சாப்பிடுவது நல்லது. பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. உங்கள் மகளின் கல்யாண விஷயம் குறித்து புலம்பிக் கொண்டிருந்தீர்களே! இனி நல்லபடியாக முடியும். மனைவிவழி உறவினர்களால் கொஞ்சம் அலைச்சலும், செலவும் இருக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளப் பாருங்கள். இளைய சகோதரரை அனுசரித்துப் போவது நல்லது. கன்னிப் பெண்களுக்கு திருமணம் சிறப்பாக முடியும். குலதெய்வ கோவிலுக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு,மரியாதை கூடும். மாணவர்கள் இனி அதிக மதிப்பெண் பெறுவார்கள்.பரிசு, பாராட்டும் கிடைக்கும்.

வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்தெறிவீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். வேற்று மதத்தினர், நாட்டினர் மூலம் புதுத் தொழில் தொடர்புகள் வந்தமையும். வேலையாட்களிடம் கொஞ்சம் கண்டிப்பாக இருங்கள். உத்தியோகத்தில் வரவேண்டிய சலுகையும், உயர்வும் தடையில்லாமல் இனி கிடைக்கும். கூடுதல் சம்பளத்துடன் வேறு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு புது வாய்ப்புகள் இனி தேடி வரும்.

இந்தச் சனி மாற்றம் கொஞ்சம் தொய்வு தந்தாலும், திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றலையும் தந்தமைவார்.

பரிகாரம் :

திண்டிவனம் அருகிலுள்ள ஸ்ரீ வக்ரகாளியம்மனை சென்று வணங்குங்கள். மனோபயம் விலகி தைரியம் பிறக்கும்

கன்னி :

எங்கும் எப்போதும் உண்மையே பேசும் நீங்கள், மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களிடம் நட்புறவாடும் குணமுடையவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நின்ற சனி 5.8.2007 முதல் 25.9.2009 முடிய விரையச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருந்து பலன் தருவார். இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் உங்களிடமிருந்த பய உணர்வு நீங்கும்.

பிள்ளைகளின் பிடிவாதக் குணம் நீங்கும். எதிர்த்துப் பேசியவர்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உங்கள் பையனுக்கு நல்ல வேலை கிடைக்கும். கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடுவார்கள். கணவன் - மனைவிக்குள் சந்தேகத்தின் பொருட்டு, சின்னச் சின்ன சண்டைகள் வரும். அதைப் பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டாம். உங்களின் தன, பாக்கியாதிபதியான சுக்ரனின் சாரத்தில் 16.8.2008 முதல் 29.8.2009 முடிய சனி செல்வதால் பண வரவு அதிகரிக்கும்.

வீடு, மனை வங்கிக் கடனுதவியுடன் வாங்குவீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களின் விவகாரங்களிலும் அத்துமீறித் தலையிட வேண்டாம். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். கன்னிப் பெண்களுக்கு பெற்றோரின் ஆதரவு உண்டு. காதலைத் தள்ளிப் போடுங்கள். பெரிய பதவிகள் உங்களைத் தேடி வரும்போது யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. நேரம் கிடைக்கும்போது தியானம் செய்யுங்கள். ஒருமுறை குலதெய்வ கோயிலுக்குச் சென்று வாருங்கள். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

மாணவ - மாணவிகள் கணிதம், அறிவியல் பாடங்களில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் நீண்ட நாளாக நினைத்திருந்த மாற்றங்களை உடனே செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு உண்டு. ரியல் எஸ்டேட், உணவு, எலக்ட்ரானிக்ஸ், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. போட்டிகள் கடுமையாக இருந்தாலும் ஈடுகொடுத்து வெற்றி பெறுவீர்கள். உத்யோகத்தில் மதிப்பு மரியாதைக் கூடும். சம்பள பாக்கி கைக்கு வரும். புதிய சலுகைகள் கிடைக்கும்.கலைஞர்களுக்கு வீண் வதந்திகள் வரும். சம்பளப்பாக்கி கைக்கு வரும்.

இந்தச் சனிப்பெயர்ச்சி உங்களை வெளியுலகுக்கு கொண்டு வருவதுடன், புதிய தொடர்புகளையும் அறிமுகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம் :

திருநள்ளாறு சனிஸ்வர பகவானை நளதீர்த்தத்தில் நீராடி சென்று வணங்குங்கள். சோகங்கள் நீங்கி எதிலும் மகிழ்ச்சி தங்கும்.

துலாம் :

கொடுத்துச் சிவந்த கைகளுடைய நீங்கள், எவரிடமும் உதவி கேட்டு கை நீட்ட மாட்டீகள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள். இதுவரை ராசிக்கு 10ம் வீட்டில் நின்ற சனி இப்பொழுது லாப வீட்டில் வந்தமர்வதால் உங்களை பலவகையில் முன்னேற்றப்படுத்துவார். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவருடன் வாக்கு வாதங்கள், வீண் சந்தேகம் எல்லாம் இனி நீங்கும். எதிலும் ஆர்வம் உண்டாகும்.

பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். உங்கள் மகளுக்கு திருமணம் முடியாமல் தடைபட்டதே, இனி நல்ல இடத்தில் வாழ்க்கைத் துணை அமையும். புது வேலை கிடைக்கும். இருந்தாலும் பிள்ளைகளின் ஸ்தானத்தைச் சனி பார்ப்பதால் அவர்களின் நடவடிக்கைகளின் மீது ஒரு கண் வைப்பது நல்லது. சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு.

சொத்து விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாகக் கலந்து யோசிப்பது நல்லது. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு தடைபட்ட கல்யாணப் பேச்சு வார்த்தைகள் இனி வெற்றியடையும். நண்பர்கள், உறவினர்களிடையே மதிப்பு, மரியாதை கூடும். மாணவ, மாணவிகள் வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். மதிப்பெண் உயரும். கவிதை, கட்டுரை, இலக்கியம், இசையில் ஆர்வம் பிறக்கும். உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உணவு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அயல்நாட்டுப் பயணங்கள் உண்டு. சமூக சேவையில் நாட்டம் அதிகரிக்கும்.

அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதுயுக்திகளை கையாளுவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். கம்ப்யூட்டர், மருந்து, உணவு வகைகளால் முன்னேற்றம் உண்டு. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். தொல்லை தந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். சம்பளம் உயரும். சலுகைகள் கிடைக்கும். புது வேலை தேடி வரும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். கலைஞர்களுக்கு நழுவிச் சென்ற வாய்ப்புகள் தேடி வரும்.

இந்தச் சனிப் பெயர்ச்சி தடைபட்ட பல வேலைகளை இனிதாக முடிக்கும் திறனையும், வசதி, வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம் :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை சென்று வணங்குங்கள். முடிந்தால்

விருச்சிகம் :

தன்மானம் மிக்க நீங்கள், எதிப்புகள் பல இருந்தாலும் கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். கடலளவு அன்பு கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு 10ம் வீட்டுக்குள் சனி பகவான் நுழைகிறார். நவம்பர் 2007 லிருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொங்கும். பிரிந்து வருந்தி வாடியவர் களெல்லாம் சந்தேகம் நீங்கி சந்தோஷமாகச் சேர்வீர்கள்.

கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுடன் வந்து கொண்டே இருந்தே, அந்த நிலை மாறி பரஸ்பரம் புரிந்துக்கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களால் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் கவுரம் கூடும். பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி அவ்வப்போது கவலைப்பட்டீகளே, இனி பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அவர்களால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும்.

தாயாரின் உடல்நிலை லேசாகப் பாதிக்கும். தாய்வழி சொத்துக்களைக் கவனமாகக் கையாள்வது நல்லது. சனி நான்காம் வீட்டைப் பார்ப்பதால் வாகனத்தை இயக்கும்போது கவனத்தைச் சிதறவிடாதீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். கன்னிப் பெண்கள் இனி திட்டவட்டமாக முடிவெடுப்பார்கள். திருமணம் நடக்கும். விலை ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வேற்று மதத்தினர், நாட்டினரால் திடீர் திருப்பங்கள் உண்டு. அவ்வப்போது தூக்கமின்மை வந்துபோகும். கணவர் வழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். டிரஸ்ட், சங்கம் தொடங்குவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது சுலபமாக முடியும்.

மாணவ, மாணவிகளுக்கு நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கடினமான பாடங்களில் கூட கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண் பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான சலுகைகளை நெருக்கடிகள் நீங்கும். வேலையாட்களுடன் இனி உபத்திரவம் இருக்காது. நட்பு நயமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். பங்குதாரர்களும் ஒத்துழைப்பு தருவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களை எதிரியாக நினைத்தவர் களெல்லாம் இனி வலிய வந்து நட்புறவாடுவார்கள். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

இந்தச் சனிப் பெயர்ச்சி உங்களை கொஞ்சம் அலைக்கழித்தாலும் இறுதியில் வெற்றியை தருவதாக அமையும்.

பரிகாரம் :

மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மனை வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். வறுமையைப் போக்கி வசதி வாய்ப்புகளை அள்ளித் தரும்.

தனுசு :

இனிமையாக பேசும் குணமும், எல்லோருக்கும் உதவும் மனசும், விட்டுக்கொடுத்துப்போகும் பெருந்தன்மையும் கொண்டவர்கள் நீங்கள்தான். இதுவரை அட்டமத்தில் நின்று கொண்டு உங்களுக்கு பல இன்னல்களை கொடுத்துவந்த சனிபகவான் 5.8.2007 முதல் 25.9.2009 முடிய 9ம் வீட்டில் அமர்ந்து இனி பல நல்ல செயல்களைச் செய்வார். முன் கோபம் நீங்கும். குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துப் போவீர்கள். உங்கள் வார்த்தையை அனைவரும் மதிப்பார்கள்.

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். உங்கள் மீது பாசமழை பொழிவார்கள். மகளுக்கு திருமணமும் நல்ல இடத்தில் முடியும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். கை நிறையச் சம்பாதிப்பார். குல தெய்வக் கோவிலுக்கு சென்று வருவீர்கள். வி.ஐ.பி.கள் இனி உதவுவார்கள். முன்கோபத்தால் அனைவரையும் பகைத்துக் கொண்டீர்களே, இனி இங்கிதமாகப் பேசி சாதிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையையும் மாற்றிக் கொள்வீர்கள். நீண்ட கால எண்ணமான வீடு வாங்கும் முயற்சி இப்பொழுது பூர்த்தியாகும்.

பெற்றோருடன், உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள், மனக் கசப்புகள் நீங்கும். கன்னிப் பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, உடல் வலி நீங்கும். கனவுத் தொல்லை விலகும்.நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் அவதூறாகப் பேசினார்களே! இனி வலிய வந்து பேசுவார்கள். வெளிநாட்டுப் பயணம் நல்ல விதத்தில் அமையும். மாணவ, மாணவிகளே! கெட்டவர்களுடன் சேர்ந்து பாதை மாறிப் போனீர்களே! இனி நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மந்தம், மறதி விலகும்.

வியாபாரத்தில் இதுவரையில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். கம்ப்யூட்டர், செல்போன் வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். பதவிகள், சலுகைகள் எல்லாம் உயரும். வருமானம் கூடும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கலைஞர்களே! கிசு கிசுத் தொல்லைகள், அவமானங்கள் நீங்கி பாராட்டுகள், பண முடிப்புகள் குவியும்.

இந்தச் சனிப் பெயர்ச்சி தடைகள், பணமுடக்கம், சோர்வுகளிலிருந்து விடுபட வைப்பதுடன் சந்தோஷ்த்தையும், நிம்மதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம் :

திருச்செந்தூர் முருகப்பெருமானை சென்று வணங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள். ஏமாற்றங்கள் நீங்கி எதிலும் வெற்றியுண்டு.

மகரம் :

தோல்விகளை கண்டு துவளாமல், விசையுறு பந்துபோல் மீண்டும் எழும் நீங்கள், கடினமாக உழைத்து முன்னேறுபவர்கள். இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அமரப் போகும் சனி அட்டமத்துச் சனியாக இருந்து செயல்படப் போகிறார். கணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்களும், மனஸ்தாபங்களும் இருந்து வந்ததே, இனி தொல்லைகளைக் குறைப்பார். ஒருவரையருவர் அனுசரித்துப் போகப் பாருங்கள். தாம்பத்யம் இனிக்கும்.

உங்கள் ராசியின் மீது சனியின் பார்வை இனி விலகும். எனவே உடல்நிலை சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். இருந்தாலும் இனி சனியின் மறைமுகத் தாக்குதல்கள் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். ஓரளவு பண வரவு உண்டு. அனாவசிய, ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். உடன் பிறந்தவர்களிடையே இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும். கன்னிப் பெண்கள் இனி சிந்தித்துச் செயல்படுவீர்கள்.

பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. காதல் விவகாரங்களில் நிதானம் தேவை. புதிய வேலை கிடைக்கும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். எந்த ஒரு முடிவையும் பலமுறை யோசித்துச் செயல்படப்பாருங்கள். கிடைக்கின்ற நேரங்களில் தியானம், யோகாசனம் செய்யப் பாருங்கள். புது நண்பர்களிடம் அளவாகப் பழகுங்கள். ஆடை ஆபரணங்கள் சேரும். வி.ஐ.பிகளின் உதவி கிட்டும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை வழக்கறிஞரின் ஆலோசனையின்றி முடிவெடுக்காதீர்கள்.

மாணவ-மாணவிகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிரடித் திட்டங்களைத் தீட்டுவீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். இரும்பு, எண்டர்பிரைஸ் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் விலகும். புது சலுகைகள் கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகள் வந்து அமையும். கலைஞர்கள் பரபரப்புடன் காணப்படுவீர்கள். வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.

இந்தச் சனி மாற்றம் இதுவரை இருந்த பேரிழப்புகளிலிருந்து உங்களை மீட்பதுடன், சமயோசிதமாக செயல்பட வைப்பதுடன்,மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம் :

பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகரை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். இழப்புகள் விலகி கேட்டதெல்லாம் கிடைக்கும்.

கும்பம் :

நாடி வந்தவர்களுக்குக்கெல்லாம் நல்லதையே செய்யும் குணமுடைய நீங்கள், யாருக்கும் தீங்கு எண்ணமாட்டீர்கள். கடமையுணர்வுடன் நடந்துக் கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு 7வது வீட்டுக்கு சனிபகவான் வருகிறார். அர்த்தாஷ்டமச் சனியாச்சே என்று பயப்படதேவையில்லை. உங்கள் ராசிநாதனான சனி உங்களுக்கு நல்லதைத்தான் செய்வார். காரியத்தடைகள் விலகும்.

கணவன் - மனைவிக்குள் மனம் விட்டுப் பேசி, பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வது நல்லது. மூன்றாவது மனிதரை மூக்கை நுழைக்க விடாதீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். உங்க பெண்ணுக்கு நல்ல வரன் அமையும். உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். அவ்வப்போது தலைவலி, வாயுக் கோளாறு வந்து போகும். மாமியாரிடம் அனுசரித்துப் போகப் பாருங்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தனி நபர் விமர்சனத்தை தவிர்க்கவும்.

நீண்ட நாளாகப் போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பிரியமானவர்களைச் சந்திப்பதன் மூலம் மன நிம்மதி கிட்டும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். தாய் வழி உறவினர்களிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து போகும். கன்னிப் பெண்களுக்கு தாயுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மாறும். கசந்த காதல் இனிக்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும். தந்தையின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தருவதாக அமையும். பணத்தட்டுப்பாடு ஓரளவு குறையும். வாகனத்தால் வீண் செலவுகள் வரக்கூடும். வாகனத்தை இயக்கும் போது கவனத்தைச் சிதற விடாதீர்கள்.

அயல்நாட்டிலிருப்பவர்களின் ஆதரவு கிட்டும். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளை இனி முழுமையாக முடிப்பீர்கள். மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். நல்ல நட்பு வட்டம் அமையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் சந்தர்ப்பம் அறிந்து செயல்படுவீர்கள். கொடுக்கல்&வாங்கலில் நிம்மதி ஏற்படும். அனுபவமிகுந்த வேலையாட்களும் இனி வந்து சேருவார்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றித் தவறாக நினைத்திருந்த மேலதிகாரி இப்பொழுது நட்புறவாடுவார்கள். திறமைகள் வெளிப்படும். சம்பளம் உயரும். கலைஞர்களுக்கு இனி புது வாய்ப்புகள் தேடி வரும். மூத்த கலைஞர்களின் பாராட்டுதலைப் பெறுவார்கள்.

இந்தச் சனிப் பெயர்ச்சி உங்களைத் தகுதியை வெளிப்படுத்துவதுடன், பணப் புழக்கத்தையும் தருவதாக அமையும்.

மீனம் :

கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், மற்றவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்பவர்கள். உங்களின் இராஜ யோக வீடான 6 ஆம் வீட்டில் வந்தமரும் சனிபகவான் இனி பல இன்ப அதிர்ச்சிகளை தருவார். தொட்டகாரியம் துளிர்க்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

குழப்பமான சூழலும், எதிலும் தடுமாற்றமான நிலையுமே நிலவியதே! அதிரடியானத் திட்டங்களை இனி அசுர வேகத்தில் எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டீர்களே, இனி குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக்கொள்வார்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். குடும்ப வருமானத்தைப் பெருக்க புதிய வழி முறைகளைக் கையாளுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குழந்தை இல்லையென வருந்திய தம்பதியர்களுக்கு இனி குழந்தை பாக்கியம் உண்டாகும்.

கன்னிப் பெண்கள் கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.கசந்த காதல் இனிக்கும். புதிய வேலை கிடைக்கும். மனதில் பல ஆசைகள் இருந்தும் அதனை நிறைவேற்ற முடியவில்லையே என அவ்வப்போது வருந்தினீர்களே! இனி ஒவ்வொன்றாக நிறைவேறும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். அறைகுறையான நின்ற கட்டிடப் பணிகளும் முழுமையடையும். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்னைகள் நீங்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களின் கனவுகள் நனவாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.தடைபட்டு வந்த குல தெய்வப்பிராத்தனைகளை இப்பொழுது நிறைவேற்றுவீர்கள்.

மாணவ-மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். ஆசிரியர்களின் அன்பைப் பெறுவீர்கள். விளையாட்டு, கவிதை, இலக்கியம் இவற்றில் வெற்றி பெறுவீர்கள்.வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, இரும்பு, எலக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபம் உண்டு. மறைமுகப் போட்டிகளைப் பந்தாடுவீர்கள். உத்யோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.மேலதிக

வெள்ளை மனசுக்காரரான நீங்கள், உண்மையே பேசி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். கலை நய சிந்தனையும், கடின உழைப்பால் எதையும் சாதித்துக் காட்டும் திறனும் கொண்டவர்கள் நீங்கள்தான். இதுவரை உங்களை படாதபாடு படுத்திவந்த சனி பகவான் உங்களை விட்டு முழுமையாக இப்போது விலகுகிறார். ராஜ யோகம் தரும் வீடான 3ஆம் வீட்டில் அமர்ந்து, சகல யோகங்களையும் உங்களுக்கு தரப் போகிறார்.

கறுப்பி அக்கா என்னை ஓவரா புகழுறீங்க எனக்கு வெட்கமா இருக்கு :P .................ஆமா அம்மா கூட சொன்னா நமக்கு ஏழரை சனி முடியுது என்று.............இன்றைக்கோ முடியுது...........அப்பாடா............பாவம

?? அவர் என்னோட ஏழரைவருசம் இருந்திருந்தால் அவர் தான் பாவம்...........ஆனாலும் பல இன்னல்கள் வந்தது தான் இல்லை என்று சொல்லமாட்டேன் ஆனா இதனால் தான் வந்தது என்று சொல்ல மாட்டேன்.............என்னவோ நான் ஸ்கேப் அடுத்து யாரிட்ட போகபோறார்...........அவைக்கு எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துகள்... :lol:

முக்கியமாக சுண்டலுக்கு....இன்றைக்கு கோவிலில போய் விழுந்து...விழுந்து கும்பிட்டு கொண்டிருந்தார்.....அட்வான்ஸ் விசஸ் 4 சுண்டல்.......... :P

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிட்ட இருந்து இப்ப என்கிட்ட வந்திட்டார்... :angry: :angry:

சுண்டு என்ன டென்சன் ஓ அவர் வந்திட்டார் தானே அப்ப டென்சன் தானா வரும் அது சரி தாங்கள் என்ன ராசி........... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும்.

நன்றி - வெப் உலகம்

இது மட்டும்தான் உண்மை.. மற்றது எல்லாம் சும்மா மூட நம்பிக்கை..

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளை மனசுக்காரரான நீங்கள்,

கறுப்பி அக்கா என்னை ஓவரா புகழுறீங்க எனக்கு வெட்கமா இருக்கு :P .................ஆமா அம்மா கூட சொன்னா நமக்கு ஏழரை சனி முடியுது என்று.............இன்றைக்கோ முடியுது..

ஜம்மு மிதுன ராசி போல இருக்கு.. நாமளும் அதே அதே!

என்ன எனக்கு உதிலை நம்பிக்கையில்லை.. .. :lol:

இது மட்டும்தான் உண்மை.. மற்றது எல்லாம் சும்மா மூட நம்பிக்கை..

அண்ணா சொன்னா சரியா தான் இருக்கு........... :P

கன்னி...

ஓ கன்னியா நீங்கள் ஒரு கன்னி என்று எனக்கு தெரியும் தானே........... :P

Edited by Jamuna

வெள்ளை மனசுக்காரரான நீங்கள்,

ஜம்மு மிதுன ராசி போல இருக்கு.. நாமளும் அதே அதே!

என்ன எனக்கு உதிலை நம்பிக்கையில்லை.. .. :lol:

நீங்களும் மிதுனமா..............ஏன் உதில நம்பிக்கை இல்லை தங்களுக்கு......... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் மிதுனமா..............ஏன் உதில நம்பிக்கை இல்லை தங்களுக்கு......... :P

கணனி விஞ்ஞான துறையிலை கல்விகற்றுக்கொண்டு இருக்கிறேன்.. உதை போய் நம்பினால் என்னுடைய கல்விக்கே துரோகம் இழைத்தவனாயிடுவேன்..

வெறும் மூட நம்பிக்கையன்றி வேறெதுவும் இல்லை..

இல்லையா?

அதனாலைதான்..

Edited by Kishaan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அக்கா என்னை ஓவரா புகழுறீங்க எனக்கு வெட்கமா இருக்கு :P .................ஆமா அம்மா கூட சொன்னா நமக்கு ஏழரை சனி முடியுது என்று.............இன்றைக்கோ முடியுது...........அப்பாடா............பாவம

?? அவர் என்னோட ஏழரைவருசம் இருந்திருந்தால் அவர் தான் பாவம்...........ஆனாலும் பல இன்னல்கள் வந்தது தான் இல்லை என்று சொல்லமாட்டேன் ஆனா இதனால் தான் வந்தது என்று சொல்ல மாட்டேன்.............என்னவோ நான் ஸ்கேப் அடுத்து யாரிட்ட போகபோறார்...........அவைக்கு எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துகள்... :lol:

முக்கியமாக சுண்டலுக்கு....இன்றைக்கு கோவிலில போய் விழுந்து...விழுந்து கும்பிட்டு கொண்டிருந்தார்.....அட்வான்ஸ் விசஸ் 4 சுண்டல்.......... :P

இதை நான் சொல்ல வில்லைங்க. நம்ம சோதிடர் தான் சொல்லியிருக்கிறார்.

அவர் சொன்னா என்ன சொல்லாவிட்டா என்ன யமுனா. உங்க மனசு வெள்ளை தான்.

கணனி விஞ்ஞான துறையிலை கல்விகற்றுக்கொண்டு இருக்கிறேன்.. உதை போய் நம்பினால் என்னுடைய கல்விக்கே துரோகம் இழைத்தவனாயிடுவேன்..வெறும் மூட நம்பிக்கையன்றி வேறெதுவும் இல்லை..இல்லையா?அதனாலைதான்..

ஓ நீங்க சொல்வதும் சரி தான் எனக்கும் இதில நம்பிக்கை இல்லை............ஆனா என்ன செய்ய அம்மா சொல்லுறா என்று செய்யிறது தான்............நான் தான் குழந்தை ஆச்சே........... :P

அவர் சொன்னா என்ன சொல்லாவிட்டா என்ன யமுனா. உங்க மனசு வெள்ளை தான்.

கறுப்பி அக்கா உண்மையாவா ............ரொம்ப நன்றி கறுப்பி அக்கா........... :lol:

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ நீங்க சொல்வதும் சரி தான் எனக்கும் இதில நம்பிக்கை இல்லை............ஆனா என்ன செய்ய அம்மா சொல்லுறா என்று செய்யிறது தான்............நான் தான் குழந்தை ஆச்சே...........

முதலிலை மோகன் அண்ணாட்டை சொல்ல வேண்டும், இந்த களத்தின் Bad words filtering option இல் குழந்தை என்ற சொல்லை தடைசெய்யசொல்லி.. :lol:

அப்பதான் யாராவது "குழந்தை" என்ன சொல்லை எழுதினால், அந்த சொல்லு இருக்கிற இடத்திலை "*****" என்று வரும்..

அப்பதான் நீங்கள் சரிவருவியள்.. :P

Edited by Kishaan

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி கறுப்பி. யாழில் இச் செய்தியைப் பதிவு செய்ததற்கு.

ஹாய் ஜம்மு! உங்களை விட்டுட்டு இப்ப நம்ம வீட்டு வாசலில நிக்கிறார். சுன்டலுடன் சேர்ந்து வரவேற்கிறேன். :lol::lol:

முதலிலை மோகன் அண்ணாட்டை சொல்ல வேண்டும், இந்த களத்தின் Bad words filtering option இல் குழந்தை என்ற சொல்லை தடைசெய்யசொல்லி.. :)

அப்பதான் யாராவது "குழந்தை" என்ன சொல்லை எழுதினால், அந்த சொல்லு இருக்கிற இடத்திலை "*****" என்று வரும்..

அப்பதான் நீங்கள் சரிவருவியள்.. :P

குழந்தை என்ற சொல்ல தடை செய்யலாம் ஆனா குழந்தைகளை தடை செய்ய முடியாதே.........நான் பேபி என்று வருவனே............. :P

அப்பவும் நாம சரிவரமாட்டோம்................இப்படி எல்லாம் சொன்னா எனக்கு அழுகை அழுகையா வருது........... :huh: ;)

ஹாய் ஜம்மு! உங்களை விட்டுட்டு இப்ப நம்ம வீட்டு வாசலில நிக்கிறார். சுன்டலுடன் சேர்ந்து வரவேற்கிறேன். :):huh:

உங்களுக்குமா............சுண்டுவுடன

ம் ஏழரைச்சனிக்கு பரிகாரம் அணுகவும்

தலைக்கு நூறு பவுண்ட்ஸ

ஜம்மு

ஆமாம் பரணி அண்ணா நல்லா இருக்கு அப்படியே பெயரை பரணியிஸ்வரகுருக்கள் என்று வைத்துவிட்டிங்க என்றா..........கெட்டப் நல்லா இருக்கும்........ :P

நீங்க பரிகாரம் பண்ணுங்க நான் கல்லாவை பார்த்து கொள்கிறேன்............. ;)

அடியவர்கள் உலக பிரசித்தி பெற்ற பரணியிஸ்வரகுருக்கள் இன்னும் 2 நாள் மட்டும் தான் யாழில் தங்கி இருந்து தன் சேவையை மற்றும் ஆசிர்வாதங்களை வழங்குவார் தாமதிக்காம இன்றே வாருங்கள் பரிகாரங்களை பெற........ :)

தொலை பேசி இலக்கம்- 98964502

ஜம்மு அப்படியே நம்ம ஆச்சிரமத்துக்கு அழைத்து செல்வோமா பரணியிஸ்வரகுருக்களை? :P

ஜம்மு உந்த நம்பர் வேலை செய்யல்லையே ;)

நிலா அக்காவின் சித்தம் அதுவேன்றா அப்படியே அழைத்து சென்று எங்கள் குருநாதரிடம் அறிமுகபடுத்துவோம்...........குரு என்ன சொல்கிறார் என்று பார்போம்........ :P

இது வேலை செய்யவில்லையோ உது சிட்னி நம்பர் தான் ஆனா என்ட நம்பர் இல்லை........... ;)

ஆகா எனக்கா இந்த மரியாதை நன்றி நன்றி

எல்லாம் அவன் செயல்

எல்லோரும் காசு கொடுத்தால் அது காட்டுவேன் இது காட்டுவேன் என்பார்கள். நான் சொல்லமாட்டேன் சொன்னால் அது நடக்காமல் விடாது

காசு தாருங்கள் கனவு காணுங்கள்

ஜம்மு ஏற்கனவே எனக்கு இந்த தொல்லைபேசி பாவிததுத்தான் பல லட்சம் செலவழிச்சு மருந்து எடுத்தனான் இப்ப நீங்கள் வேற இந்த தொழிலிற்கும் அதை பாவிச்சு பிறகு இன்னும் செலவழிக்க ஏலாது. அதனால் எல்லோரும் புறாவிடு தூதுதான். ம் புறாவை கறிக்கும் பாவிச்சதாப்போச்சு கடிதமும் பரிமாறியதாப்போச்சு

என்ன நான் சொல்றது

Edited by Paranee

எல்லாம் உங்களுக்கே தான் .............. :P

சொன்னால் நடக்காம விடாதோ அப்ப சொல்லாட்டி நடக்குமோ......... :P

அது என்ன காசு தாருங்கள் கனவு காணுங்கள் இது எனக்கு விளங்கவில்லை............நான் நல்லா கனவு காண்பேனே........... :lol:

ஏன் பரணி அண்ணா தொலைபேசியால என்ன பிரச்சினை ஏன் மருந்து எடுத்தனீங்க.............அட புறாவிடு தூது நல்லா தான் இருக்கு அதுவே பாவிபோம்..........சுவாமிகளே முதலில் உங்களுக்கு ஏதாவது குடிக்க வேண்டுமா........ ;)

ஆமாம் மந்திரியாரே உற்சாக பாணம் வேண்டும். எங்கே 23ம் பலி கேசி மன்னிக்கவும் புலிகேசி

காசு தாருங்கள் கனவு காணுங்கள் புரியவில்லை ஜம்மு

எல்லோரும் காசைக்கொடுத்து சிவலிங்கம் விபூதி தருவார்கள். நான் கனவைக்கொடுக்கின்றேன். எப்படி என் சாமர்த்தியம்

ம் தொலைபேசியால் பட்ட தொல்லை பெரிய தொல்லை அது பெரிய கதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்டைக்கு என்ரை மண்ணை விட்டு வெளிக்கிட்டனோ அண்டைக்கு புடிச்ச ஏழரைச்சனி இண்டைவரைக்கும் பிலாக்காய்ப்பால் மாதிரி என்னோடையே ஒட்டிக்கொண்டிருக்குதப்பா வருசாவருசம் எள்ளெண்ணெய் எரிச்சும் ஒரு பலனையும் காணேல்லையப்பா :angry: இருந்தாலும் இந்த சனிப்பெயர்ச்சி பலன்களை இஞ்சை கொண்டுவந்து பொருத்திவிட்ட எங்கடை கறுப்பிக்கு மெத்தப்பெரிய உபகாரம் B)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.