Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவி விலகுகிறார் சவேந்திர சில்வா – புதிய இராணுவத் தளபதியாக விக்கும் லியனகே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என அரசாங்கம் கூறவில்லை – இராணுவத்தளபதி!

பதவி விலகுகிறார் சவேந்திர சில்வா – புதிய இராணுவத் தளபதியாக விக்கும் லியனகே!

இராணுவ தளபதி பதவியிலிருந்து ஜெனரல் சவேந்திர சில்வா, எதிர்வரும் 31ஆம் திகதி விலகவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக அவர் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

அதேநேரம், மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே எதிர்வரும் முதலாம் திகதி புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்கவுளள்தாக என இராணுவம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1283967

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவுக்கு காலம் சரியில்லை கயிறு இறுகுது. அல்லது ஷவேந்திராவுக்கா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

கோத்தாவுக்கு காலம் சரியில்லை கயிறு இறுகுது. அல்லது ஷவேந்திராவுக்கா? 

ஜனாதிபதி கோத்தாவின் அனுமதி பெறாமல், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா...
அமெரிக்கத் தூதுவரை சந்தித்ததை... ஜனாதிபதி விரும்பவில்லை.
அதிலிருந்து... இராணுவத் தளபதியை, பதவி விலகச் சொல்லி வற்புறுத்தி இருக்கலாம்.

எதுவாக இருந்தாலும், சவேந்திர சில்வாவுக்கு இழப்பு இல்லை.
அவர்... இனி நேரடியாகவே... அமெரிக்க தூதரகத்துக்குப் போய்...
கண்ணை கசக்கிக் கொண்டு நின்றால்...
குடும்பம் சகிதமாக அமெரிக்காவில், ராஜபோக வாழ்க்கை வாழ... 
அமெரிக்கத் தூதுவர், வசதி செய்து கொடுப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்

சவேந்திர அமெரிக்கா பயணம் ?

😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

சவேந்திர அமெரிக்கா பயணம் ?

😉

“கோத்தா கோ கம” போராட்டம் ஆரம்பிக்கவில்லை என்றால்…
இவரின் கடவுச் சீட்டை… நீதிமன்றத்தின் மூலம் முடக்கி இருப்பார்கள்.
இப்ப செய்யப் போனால்… அமெரிக்காவின் கண்டனத்திற்கும்
ஆளாக வேண்டி வரும் என்பதால், பேசாமல் இருக்கிறார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி கோத்தாவின் அனுமதி பெறாமல், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா...
அமெரிக்கத் தூதுவரை சந்தித்ததை... ஜனாதிபதி விரும்பவில்லை.
அதிலிருந்து... இராணுவத் தளபதியை, பதவி விலகச் சொல்லி வற்புறுத்தி இருக்கலாம்.

எதுவாக இருந்தாலும், சவேந்திர சில்வாவுக்கு இழப்பு இல்லை.
அவர்... இனி நேரடியாகவே... அமெரிக்க தூதரகத்துக்குப் போய்...
கண்ணை கசக்கிக் கொண்டு நின்றால்...
குடும்பம் சகிதமாக அமெரிக்காவில், ராஜபோக வாழ்க்கை வாழ... 
அமெரிக்கத் தூதுவர், வசதி செய்து கொடுப்பார். 

கோத்தா இதை விரும்புவாரா? ஏற்கெனவே சுவிஸுக்கு தப்பியோடியவர் பல விடயங்களை கோத்தாவுக்கு எதிராக கக்கியிருக்கிறார். அதனாலேயே மற்றொருவரை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க; ஷவேந்திரா அமெரிக்கா போனால் என்ன நடக்குமென்று எல்லோரும் அறிந்த விடயம் ஆனால் இப்போ விடயம் கைமீறிப்போய்விட்டது. அவரை தடுக்கவும் முடியாது, அடக்கவும் முடியாது. அதனால் வேறொரு பதவி கொடுத்து அமுக்க பார்ப்பார். என்ன இருந்தாலும் சேர்ந்து விளையாடியவர்கள் விலகி காட்டிக்கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பிழையான வழியில் விளையாடிவிட்டு ஆட்ட முடிவில்  மற்றவரை குறை சொல்லக்கூடாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

சவேந்திர சில்வாவுக்கு... இராணுவத் தளபதியை விட வேறு பதவி கொடுத்து 
வைத்திருப்பது என்றால்... பொன்சேகா மாதிரி, அரசியல்வாதியாக்க வேண்டும் 
அல்லது வெளிநாட்டு தூதுவர் பதவி... இரண்டும் கோத்தாவுக்கு ஆபத்தானது. 
புலிவாலை பிடித்த கதைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

வெளிநாட்டு தூதுவர் பதவி

ஏற்கெனவே அந்தபதவியிலிருந்து துரத்தியவர்கள், அங்கிருந்து களவாக ஓடிவந்தவர் இப்போ விருந்தாளியாக அழைப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சவேந்திர சில்வாவுக்கு... இராணுவத் தளபதியை விட வேறு பதவி கொடுத்து 
வைத்திருப்பது என்றால்... பொன்சேகா மாதிரி, அரசியல்வாதியாக்க வேண்டும் 
அல்லது வெளிநாட்டு தூதுவர் பதவி... இரண்டும் கோத்தாவுக்கு ஆபத்தானது. 
புலிவாலை பிடித்த கதைதான்.

அண்ணை,

வழமைபோல் தமிழ் செய்திதளம் பாதி செய்தியை முழுங்கி விட்டது.

சில்வா Chief of Defence Staff எனும் முப்படைகளின் பிரதானி ஆகிறார்.

இது ராங் அடிப்படையில் இராணுவ தளபதிக்கு மேலான பதவி. ஆனால் இந்த பதவிக்கு படைகளை வழிநடத்தும் operational command அதிகாரம் இல்லை.  இதுவரை இப்பதவியை சில்வா cover பண்ணி வந்தார். இப்போ நிரந்தரமாக போகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஓ…. தமிழ் செய்தி தளங்கள்… செய்திகளை,
தொடரும்… என்ற மாதிரி வெளியிடுகிறார்கள் போல் உள்ளது.

மகிந்த, ஜனாதிபதியாக இருந்த போது…. முப்படைகளின் தளபதியாக,
கோத்தபாய வகித்த பதவி  தானே அது.

அல்லது… இது வேறு பதவியா…

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

ஓ…. தமிழ் செய்தி தளங்கள்… செய்திகளை,
தொடரும்… என்ற மாதிரி வெளியிடுகிறார்கள் போல் உள்ளது.

மகிந்த, ஜனாதிபதியாக இருந்த போது…. முப்படைகளின் தளபதியாக,
கோத்தபாய வகித்த பதவி  தானே அது.

அல்லது… இது வேறு பதவியா…

இல்லை இது வேறுபதவி.

மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது கோட்ட வகித்த பதவி - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர். இப்போ கமால் குணரட்ண வகிக்கும் பதவி. 

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு அமைச்சின் (சிவிலியன் ) தர நிலையானது

ஜனாதிபதி - பாதுகாப்பு அமைச்சர் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் - பாதுகாப்பு அமைச்சின் செயளாலர் என்று அமையும். இதில் முதல் மூவரும் அரசியல்வாதிகளாயும், செயலாளர் அரசால் நியமிக்கபட்ட உத்தியோகத்தராயும் இருப்பர்.

படைத்துறை தர நிலையானது

முப்படை தளபதி (ஜனாதிபதி) - முப்படைகளின் பிரதானி - இராணுவ/கடல்/வான் படை தளபதிகள் என்று அமையும். இதில் ஜனாதிபதி தவிர்ந்த ஏனையோர் படைத்துறையில் கிரமமாக மேல் வந்த அதிகாரிகளாக இருப்பர்.

இவையிரெண்டும்தான் நிலையான கட்டமைப்பு. 

ஜனாதிபதி, பிரதமர், முப்படைகளின் பிரதானி, பாதுகாப்பு செயலர், மூன்று படைகளின் தளபதிகள், புலனாய்வு துறை அதிகாரி அடங்கிய குழுவே தேசிய பாதுகாப்பு கவின்சில்.

இந்தியாவை போல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவி இலங்கையில் இருப்பதாக தெரியவில்லை. 

* அநேகமாக ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சராயும் இருப்பார்.

* படைகளுக்கு உத்தரவிடும் இயலுமை ஜனாதிபதிக்கும், மூன்று தளபதிகளுக்கும் மட்டுமே இருக்கிறது என நினைக்கிறேன் (நிச்சயமாக தெரியாது). இந்த வகையில் சில்வாவுக்கு கொடுக்கபாட பதவி உயர்வு, அவரை படைகளுக்கு உதரவிடும் நிலையில் இருந்து அகற்றி உள்ளாதாயும் இருக்கலாம்.

(நன்றி - கேள்வி ஞானம் + கூகிள் ஆண்டவர்). 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

இல்லை இது வேறுபதவி.

மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது கோட்ட வகித்த பதவி - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர். இப்போ கமால் குணரட்ண வகிக்கும் பதவி. 

“முப்படைகளின் பிரதானி” என்ற பதவி… இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப் பட்டுள்ளதா?
இதனைப் போன்ற பதவி சில காலங்களுக்கு முன்…. இந்தியாவில் உருவாக்கப் பட்டது என நினைக்கின்றேன்.
அதன் பிரதானியாக இருந்தவர்… சில மாதங்களுக்கு முன், டெல்லியில் இருந்து சென்னை வந்து,
அங்கிருந்து… ஊட்டிக்கு, இராணுவ  உலங்கு வானூர்தியில் குடும்பமாக சென்று கொண்டிருந்த போது, விபத்துக்கு உள்ளாகி… அனைவரும் இறந்து விட்டனர்.
அந்தச் சம்பவத்தை நீங்களும் அறிந்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

முன்பு இப்படியான சம்பவங்கள் நடக்கும் போது… உடனே விழுந்தடித்து, புலி என்பார்கள்.
இப்போ…. பாகிஸ்தான்காரனை பார்க்கிறார்கள். தங்களில் பிழை என்றாலும்….
மற்றவனை சாட்டி, அரசியல் செய்தால் தானே… தாங்கள் தப்பி, வாக்குகளை அள்ளலாம். 😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

“முப்படைகளின் பிரதானி” என்ற பதவி… இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப் பட்டுள்ளதா?
இதனைப் போன்ற பதவி சில காலங்களுக்கு முன்…. இந்தியாவில் உருவாக்கப் பட்டது என நினைக்கின்றேன்.
அதன் பிரதானியாக இருந்தவர்… சில மாதங்களுக்கு முன், டெல்லியில் இருந்து சென்னை வந்து,
அங்கிருந்து… ஊட்டிக்கு, இராணுவ  உலங்கு வானூர்தியில் குடும்பமாக சென்று கொண்டிருந்த போது, விபத்துக்கு உள்ளாகி… அனைவரும் இறந்து விட்டனர்.
அந்தச் சம்பவத்தை நீங்களும் அறிந்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

முன்பு இப்படியான சம்பவங்கள் நடக்கும் போது… உடனே விழுந்தடித்து, புலி என்பார்கள்.
இப்போ…. பாகிஸ்தான்காரனை பார்க்கிறார்கள். தங்களில் பிழை என்றாலும்….
மற்றவனை சாட்டி, அரசியல் செய்தால் தானே… தாங்கள் தப்பி, வாக்குகளை அள்ளலாம். 😁

இப்போ Chief of Defence Staff என அழைக்கப்படும் இப்பதவி 1985 இல் இருந்து இலங்கையில் இருப்பதாக சொல்கிறார் விக்கியானந்தா. அப்போ General Officer Commanding என அழைக்கப்பட்டதாம்.

ஓம் இறக்கும் போது பிபின் ராவத் வகித்த பதவியும் இதுவே. பிரிதானியாவிலும் இந்த தர நிலை உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.