Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட்ட 3 பேருக்கு மரண தண்டனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கவி அரங்கில் தமிழீழ அரசவை கவி புதுவை அவர்கள் ஓடிபோனவர்கள் பற்றி ஒரு கவி பாடியிருந்தார் ஒரு சிலவரி ஞாபகம்..

ஓடி போனவர்கள்

பேடிகள் போன்றவர்

நாளை அவர்கள் திரும்பி வந்தால்

காறியே துப்புவோம்...என்ற பொருள்பட கவிதை போனது.

பின்னாளில் அதே புதுவை ஓடி அதே ஓடி போனவர்களை , எம் சொந்தங்களே உறவுகளே, வேரினை பிரிந்த விழுதுகளே என்றெல்லாம் கவி பாடினார் குறிப்பாக ஜெயசிக்குறு காலத்தில்.

பின்னாளில் ஐரோப்பாவிற்கு அவர் வந்திருந்தபோது வானொலி செவ்வியில் புலம்பெயர்ந்தவர்களின் உதவி போராட்டத்தை தாங்கி நிற்கிறது என்று கூறினார், வானலையில் வந்த ஒரு நேயர்  பழசை ஞாபகம் வைத்து புலம்பெயர்ந்தவர்பற்றி அவர் முன்னர் எழுதிய கவிதை பற்றி கேட்டார், 

அதற்கு கவிஞர் அது அந்தகால சூழ்நிலையில் எழுதப்பட்டது அதனை தற்காலத்துடன் ஒப்பிடகூடாது என்றார், ஆனால் முன்னாளைய அந்த வரிகளுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கபோவதில்லை என்பதில் உறுதியாக நின்றார் அதில் தவறில்லை அது கவிஞனுக்கே உரிய செருக்கு.

ஓடிபோனவர்களின் பங்களிப்பு இல்லையென்றால் எண்பதுகளின் இறுதியிலோ, தொண்ணூறுகளிலோ அல்லது தொண்ணூறுகளின் கடைசி ஜெயசிக்குறு சமருடனோ எம் தேச போராட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்திருக்கும்.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சக்கைகளுடனும், ஒரு சில எல் எம் ஜி , ஜிபிஎம்ஜி, ஒன்று இரண்டு எப்போது வேண்டுமானாலும் இயக்கத்தை நிறுத்திவிடும் பாதி துருப்பிடிச்ச 50 கலிபர் துப்பாக்கி , அலுமினிய சட்டிகளை உருக்கி செய்த வெறும் வெடி சத்தம் தவிர பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாத ஆறு இஞ்ச் ஷெல்கள், கணக்கு பாத்து பாத்து ஏவிய ஆர்பிஜி எறிகணைகள்,

இந்த முகாம் ராணுவ முன்னேற்றத்தை தடுத்த அதே சொற்ப ஆயுதங்களை அதிவேகமாக அடுத்த ராணுவ முகாமிலிருந்து முன்னேறியவர்களை தடுக்க மாறி மாறி நகர்த்திய நெருக்கடிகளை இலங்கையில் இரண்டு ராணுவங்கள் என்று சொல்லுமளவிற்கு விஸ்வரூபம் எடுக்க வைத்தது ஓடி வந்தவர்களின் உதவிகளே.

இறுதிபோரின் தோல்விக்கு காரணம் கண்டிப்பாக ஆட்பலம் இல்லை, ஒரு குறுகிய நிலப்பரப்பில் போராளிகள், துணைப்படைகள் ஆயுத பயிற்சி பெற்றவர்கள்என்று ஏறக்குறைய முப்பதினாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இருந்தார்கள் அந்த குறுகிய நிலப்பரப்பிற்கு அத்தனை ஆயிரம் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் எந்த வகையிலும் பற்றாக்குறையில்லை.

இறுதி போராட்டத்தை சாய்த்தது எதிரியிடமிருந்த கனரக ஆயுதங்களே, கிழக்கிலும் வன்னியிலும் மடிந்த பல ஆயிரம் போராளிகள் ராணுவத்தை அருகில் நெருங்காமலேயே எங்கோ இருந்து பொழியப்பட்ட எறிகணை மழையில் தொலைந்தவர்களே.

லண்டனில் நடந்த மாவீரர்நாள் உரையில் பாலசிங்கம் பேசினார், நேற்றுத்தான் பிரபாகரனுடன் பேசினேன், புலம்பெயர் மக்களுக்கு என்ன சொல்லுறது எதாவது சொல்லு, அதுக்கு தலைவர் சொன்னாராம் நீங்கள் செய்யும் உதவிகளுக்கு நன்றி, அரங்கம் அதிர்ந்தது.

அன்று தலைவர் என்ற மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர் அங்கிருந்து எதிர்பார்த்ததை தமது சக்திக்குட்பட்டும் சக்தியை மீறியும் பங்களிப்பாய் வழங்கிய ஓடி போனவர்கள் எந்த வகையிலும் இகழ்ச்சிக்குரியவர்களல்ல.

அவரே அப்படி சொன்னதில்ல ..அப்புறம் எதுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சீனாவும், பாகிஸ்தானும் பரம வைரிகள். அங்கே ஏலவே இருப்பது இந்தியாவுக்கு எதிரான நிரந்தர தளம்தான். அங்கே இலங்கை போல புதிதாக ஒரு பகைத்தளத்தை உருவாக்கும் ஆபத்து இல்லை.

நேபாளத்தில் இலங்கை போல் நாடு பிரியும் நிலை இருக்க இல்லை, கம்யூனிஸ்டுகள், பழமைவாதிகள் இரு தரப்பும் நாட்டின் ஒட்டு மொத்த ஆளுகைக்குத்தான் போராடினார்கள். இருப்பினும் அங்கே கூட இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்து பார்த்தால் “ அங்காலேம் பாடி, இங்காலேம் பாடி” என்பதாகவே இருந்தது.

அதேபோல் 1987 இல்  இலங்கையோடு செய்த ஒப்பந்தம் போன்றதொரு ஒப்பந்தத்தை 1950 லேயே நேப்பாளோடு இந்தியா செய்து விட்டிருந்தது.

ஆகவே நேப்பாள், இலங்கையில் இந்தியா நடக்கும் முறைக்கு என்னால் அதிக வேறுபாட்டை காண முடியவில்லை.

ஆனாலும் - பூட்டான், சீனா, ஆப்கானிஸ்தான், மாலைதீவு, சீனா, பங்காலதேஸ், பாகிஸ்தான் என ஒவ்வொரு அண்டை நாட்டோடும் இந்திய தனி தனியான அயலுறவு கொள்கைகளை கொண்டிருப்பதும் உண்மையே ஆகவே, நேப்பாளோடு செய்த, பங்களாதேசில் எடுத்த அணுகுமுறையை இலங்கையிலும் கட்டாயம் அச்சொட்ட எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் நாம் இருக்க முடியாது.

இந்தியாவின் அயலுறவு கொள்கை country specific but with certain common themes என நான் நினைக்கிறேன்.

அந்த வகையில் அமிருக்கு 83-84 இல் பார்த்தசாரதி, இந்திரா கூறியதே அவர்களின் இலங்கைக்கான கொள்கை.

என்பது என் கருத்து. 

நன்றி உங்கள் கருத்துக்கு.
இந்தியாவுக்கு இலங்கையோ அல்லது இலங்கைக்கு இந்தியாவோ வரலாற்று ரீதியாக இருந்ததில்லை. சுயநல நோக்கோடு சில உதவிகளை மாறி மாறி செய்திருக்கலாம். இஸ்ரேஸ்- அமெரிக்கா, இந்தியா - ரஸ்யா என்று நிறைய நட்பு நாடுகளை சொல்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

இங்கே அர்ஜூன் அண்ணா (புளட் சார்பாக டெல்லியில் பேச்சுவ்ஃஅர்த்தையில் பங்கெடுத்தவர்) என்பவர் முந்தி எழுதி இருந்தார்.

அவர்கள் (இந்தியா) எதையும் நேரடியாக சொல்லவே மாட்டார்கள். மிகவும் சுத்தி வளைத்து “தனி நாட்டை நாம் ஒரு போதும் ஆதரிக்க போவதில்லை” என்பதை தமக்கு கூறியதாகவும். கூட்டணி உட்பட பலருக்கும் இது சொல்லப்பட்டு அவர்கள் அதை கிரகித்து கொண்டதாயும்.

இலங்கை போரளிகள், (கட்சி தலைவர்களுக்கு சொல்லவா வேண்டும்) கூட கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்துள்ளது இந்தியாவின் அணுகுமுறை - ஆனால்  1987 ஒப்பந்தம் எழுதிய போது புலிகள் உட்பட எல்லாருக்கும் இந்தியாவின் இந்த நிலைப்பாடு ஐயம் திரிபுரா விளங்கி விட்டது என்றே கொள்ளலாம் என நினைக்கிறேன்.

77 தேர்தலில் கூட்டணி எடுத்த நிலைக்கும்,  78-87 இடையில் அமிர் உட்பட்ட தலைவர்களின் சுருதி மாற்றத்துக்கும் தனியே ஜப்பான் ஜீப்பும், எதிர்கட்சி தலைவர் பதவியும், கொழும்பு பிளட்டும் மட்டும் காரணி அல்ல, மிக பெரிய காரணி இந்தியாவின் அழுத்தம் என நான் நம்புகிறேன்.

ஆனால் இதில் மிக பெரிய சோகம் என்னவெனில் - 77 இல் மக்கள் முன் பெற்று கொண்ட ஆணையை ஏன் செயல்படுத்த முடியாது (தேர்தலின் பின்னான இந்திய அழுத்தம், நிலைப்பாட்டு விளக்கம்) என்பதை transparent ஆக மக்களிடம் எடுத்து சொல்லி, மன்னிப்பு கேட்கும் திராணி இந்த தலைவர்களுக்கு இல்லாமல் இருந்தது.

ஆகவே  வட்டு கோட்டையை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டு ஒற்றை ஆட்சி, மாவட்ட சபை, மாகாண சபை என லைன் மாறினார்கள். 

இயக்கங்கள் கூட இந்த காரணத்தை மக்கள் முன் விளக்காமல், விலை போய்விட்டார்கள், எட்டபன்கள், ஜப்பான் ஜீப் என அவர்கள் முன்னர் கூறிய அதே கதைகளை கூறி அவர்களை அவர்கள் உசுப்பேத்திய பாணியிலே போட்டு தள்ளுவதில்தான் கவனம் செலுத்தி உள்ளார்கள் போலுள்ளது (எனது அவதானம்).

அமிர்தலிங்கத்தை அருகில் இருந்து பார்த்து, அப்படி, இப்படி, பெரிய ஆளுமை என்றெல்லாம் பேசுபவர்களிடம் நான் கேட்பது எல்லாம், இந்திராவின் சந்திப்பு, மற்றும் அறிவிறுத்தலுக்கு பின், ஊருக்கு வந்து நிலைமையை மக்களிடம் விளங்கபடுத்தி, 77 ஆணை நடைமுறை சாத்தியமற்றது என தெளிவுபடுத்த அவர் ஏன் தவறினார் என்பதுதான்.

தலைவர் என்பவர் எப்போதும் populist ஆன மக்கள் நிலைப்பாட்டின் பின்னால் ஓடுபவர் அல்ல, சில சகயங்களில் மக்களுக்கு நிலைமையை தெளிவுபடுத்தி அவர்கள் நிலைப்பாட்டை, தன் நிலைப்பாட்டுக்கு மாற்றுவதும் தலைமைதுவம்தான்.

 A leader takes people where they want to go. A great leader takes people where they don't want to go, but ought to be.
என்பார்கள்.

ஒரு தலைவர் என்பவர் மக்கள் போகும் இடத்துக்கு அவர்களை இட்டுச் செல்பவர்.

ஒரு பெருந்தலைவர் என்பவர் மக்கள் போக விரும்பாத, ஆனால் போக வேண்டிய இடத்துக்கு அவர்களை இட்டுச்செல்பவர்.

பிகு

ஆனால் இதில் இந்த தலைவர்கள் மக்களிடம் உள்ளதை உள்ளபடி கூறி இருந்தாலும் அது வரலாற்றை அதன் போக்கை மாற்றி இருக்குமா என்பது சந்தேகமே.

எனெனெனில் 87 க்கு முன் சில இயக்கங்களும், 87க்கு பின் ஒரு இயக்கமும், இந்தியாவின் நிலைப்பாடு எப்படி இருந்தாலும், தம் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்திருந்தன.

எம்மை உசார் மடையர்கள் என்கிறீர்கள் ?

🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

நீங்கள் கூறியவை எல்லாவற்றுடனும் ஒத்து போனாலும் - இந்தியாவின் பயம் தமிழர் இந்தியாவுக்கு எதிராக போவோம் என்பதை விட, தமிழர் பிரிந்த பின் எஞ்சும் இலங்கை இந்தியாவிற்கு எதிரான ஒரு நிரந்தர தளம் ஆகிவிடும் என்பதுதான்.

அவர்கள் நலன் (அவர்கள் அப்படித்தானே பார்ப்பார்கள்) என்ற கோணத்தில் இருந்து பார்த்தால் - இது நியாயமான பயம்தான்.

இன்றைக்கு கூட இலங்கைக்கு உதவும் நாடுகளில் முதலிடம் இந்தியா எடுப்பதும் இதே பயத்தினால்தான்.

ஒரு கட்டத்தில் யாழ்கள நோக்கர்கள் பலர் இந்தியாவுக்கு இலங்கை பெப்பே காட்டி விட்டது, புலிகளின் அருமை இனித்தான் தெரியும் என்றெல்லாம் எழுதியதையும் தாண்டி, சீனாவே வரவேற்கும் அளவுக்கு இந்தியாவின் அணுகுமுறை (மேற்கின் அனுசரணையோடு) இலங்கையில் வென்று வருவதாக நான் உணர்கிறேன்.

78 ஜே ஆர் ஆட்சியின் பின் , இலங்கை எங்கே இருக்க வேண்டும் என இந்தியா விரும்பியதோ அந்த நிலைக்கு இலங்கையை கொண்டு வந்து விட்டது போல படுகிறது.

இப்போது இலங்கையில் அத்தனை தரப்பும் இந்தியாவில் தங்கி இருக்கும் நிலைதான்.

இது நீண்டகால நோக்கில் இந்தியாவின் இலங்கை அணுகுமுறைக்கு (அவர்கள் கோணத்தில்) கிடைத்த வெற்றி என கருத இடமுண்டு.

இனியும் இதே நிலைய தக்க வைக்க இந்தியா இலங்கயில் “உழைக்கும்” என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவின் அணுகுமுறை தோல்வியில் முடிவடைந்து, தற்போதைய  இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளி, முழங்காலில் இருத்தும் அளவுக்கு கொண்டுவந்தது மேற்குலகமே. 

இதுதான் என்னுடைய அவதானம். இலங்கையர் எல்லோரும் முழங்காலில் நின்று கெஞ்சும் நிலை கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. 

மேற்குலகு முதலில் எமக்குப் பாடம் படிப்பித்தது. தற்போது சிங்களத்திற்குப் பாடம் எடுக்கிறது. 

இங்கே எமக்குப் பாடம் படிப்பிக்கப்பட்டதை நாம் வசதியாக  மறந்துவிடுகிறோம்.  

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

நன்றி உங்கள் கருத்துக்கு.
இந்தியாவுக்கு இலங்கையோ அல்லது இலங்கைக்கு இந்தியாவோ வரலாற்று ரீதியாக இருந்ததில்லை. சுயநல நோக்கோடு சில உதவிகளை மாறி மாறி செய்திருக்கலாம். இஸ்ரேஸ்- அமெரிக்கா, இந்தியா - ரஸ்யா என்று நிறைய நட்பு நாடுகளை சொல்லாம்.

நீங்கள் சொல்வது போல நானும் முந்தி சிந்தித்து யாழில் கூட எழுதி உள்ளேன், அதாவது இலங்கை தமிழர்தான் இந்தியாவின் இயற்கையான துணைகள் (natural allies) என்று.

87 க்கு முன் எமது வீடுகளில் தொங்கிய   வட இந்திய  தலைவர்கள் படங்கள், பிள்ளைகளின் பெயர்கள் என பலதை சொல்லலாம். காந்தி, திலகர், நேரு, கோகலே, வினோபா என்றெல்லாம் சர்வ சாதாரணமாக பெயர் வைத்தார்கள். 

மறுவழமாக சிங்களவர் எப்போதும் இந்திய வெறுப்பு மனோநிலையிலே இருந்தார்கள். இந்திய-சீன, இந்திய-பாக் யுத்தங்களில் அவர்கள் எடுத்த நிலையும், தமிழர்கள் எடுத்தது போல் இந்திய ஆதரவு நிலை அல்ல. 

ஆனால் இந்த special relationship இலங்கை தமிழர் நாமாகவே கற்பனை செய்து கொண்ட ஒரு  வகை ஒருதலை காதல் என்றே இப்போ நான் நினைக்கிறேன்.

சிறிமா சாஸ்திரி ஒப்பந்தமாகட்டும், முதலாம் ஜேவிபி புரட்சியை அடக்க படைகளை அனுப்பியதாகட்டும், 1987 ஆகட்டும், 2009 ஆகட்டும், இந்தியா எம்மை natural alliance என பேணுவதை விட, இலங்கையை ஒரு strategic alliance ஆக பேணுவதையே முன்னிலை படுத்தி வந்துள்ளது.

இந்த அணுமுறை 1947 இல் இருந்து தொடர்கிறது, இனியும் மாறாது என்பது என் கருத்து.

15 minutes ago, Kapithan said:

இங்கே எமக்குப் பாடம் படிப்பிக்கப்பட்டதை நாம் வசதியாக  மறந்துவிடுகிறோம்.

எமக்கு பாடம் படிபிக்க பட்டது என்பதை ஏற்கவே நாம் தயாரில்லை. 

நீங்கள் சொல்லும் இலங்கையை முழங்காலில் இருத்தியது மேற்குலகே என்பதை நான் 100% ஏற்று கொள்கிறேன். ஆனால் நிச்சயம் இதில் இந்தியாவின் பங்கும் இருக்கிறது.

இப்போதும் கூட (ரஸ்ய நிலைப்பாட்டில் அண்மையில் ஜெய்சங்கள் கூறிய காட்டமன கருத்தின் பின்னும்) இந்தியாவை வெட்டி, இலங்கையில் ஆட மேற்கு தயாராக இல்லை என நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

பலர் தாம் தப்பினால் போதும் என்ற ஒரே காரணத்தில்தான் ஓடி வந்தார்கள்.

அது தான் உண்மையான நிலை.
அப்படி மேற்கு நாடுகளுக்கு வந்வர்கள் தனிதமிழ் நாடு என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்று மிக தெளிவாக உணர்ந்திருந்தும் இங்கிருந்து போர் முழக்கமிட்டு அங்குள்ள மக்களை உசுப்பிவிட்டது தவறு தானே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

ஒரு கவி அரங்கில் தமிழீழ அரசவை கவி புதுவை அவர்கள் ஓடிபோனவர்கள் பற்றி ஒரு கவி பாடியிருந்தார் ஒரு சிலவரி ஞாபகம்..

ஓடி போனவர்கள்

பேடிகள் போன்றவர்

நாளை அவர்கள் திரும்பி வந்தால்

காறியே துப்புவோம்...என்ற பொருள்பட கவிதை போனது.

பின்னாளில் அதே புதுவை ஓடி அதே ஓடி போனவர்களை , எம் சொந்தங்களே உறவுகளே, வேரினை பிரிந்த விழுதுகளே என்றெல்லாம் கவி பாடினார் குறிப்பாக ஜெயசிக்குறு காலத்தில்.

பின்னாளில் ஐரோப்பாவிற்கு அவர் வந்திருந்தபோது வானொலி செவ்வியில் புலம்பெயர்ந்தவர்களின் உதவி போராட்டத்தை தாங்கி நிற்கிறது என்று கூறினார், வானலையில் வந்த ஒரு நேயர்  பழசை ஞாபகம் வைத்து புலம்பெயர்ந்தவர்பற்றி அவர் முன்னர் எழுதிய கவிதை பற்றி கேட்டார், 

அதற்கு கவிஞர் அது அந்தகால சூழ்நிலையில் எழுதப்பட்டது அதனை தற்காலத்துடன் ஒப்பிடகூடாது என்றார், ஆனால் முன்னாளைய அந்த வரிகளுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கபோவதில்லை என்பதில் உறுதியாக நின்றார் அதில் தவறில்லை அது கவிஞனுக்கே உரிய செருக்கு.

ஓடிபோனவர்களின் பங்களிப்பு இல்லையென்றால் எண்பதுகளின் இறுதியிலோ, தொண்ணூறுகளிலோ அல்லது தொண்ணூறுகளின் கடைசி ஜெயசிக்குறு சமருடனோ எம் தேச போராட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்திருக்கும்.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சக்கைகளுடனும், ஒரு சில எல் எம் ஜி , ஜிபிஎம்ஜி, ஒன்று இரண்டு எப்போது வேண்டுமானாலும் இயக்கத்தை நிறுத்திவிடும் பாதி துருப்பிடிச்ச 50 கலிபர் துப்பாக்கி , அலுமினிய சட்டிகளை உருக்கி செய்த வெறும் வெடி சத்தம் தவிர பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாத ஆறு இஞ்ச் ஷெல்கள், கணக்கு பாத்து பாத்து ஏவிய ஆர்பிஜி எறிகணைகள்,

இந்த முகாம் ராணுவ முன்னேற்றத்தை தடுத்த அதே சொற்ப ஆயுதங்களை அதிவேகமாக அடுத்த ராணுவ முகாமிலிருந்து முன்னேறியவர்களை தடுக்க மாறி மாறி நகர்த்திய நெருக்கடிகளை இலங்கையில் இரண்டு ராணுவங்கள் என்று சொல்லுமளவிற்கு விஸ்வரூபம் எடுக்க வைத்தது ஓடி வந்தவர்களின் உதவிகளே.

இறுதிபோரின் தோல்விக்கு காரணம் கண்டிப்பாக ஆட்பலம் இல்லை, ஒரு குறுகிய நிலப்பரப்பில் போராளிகள், துணைப்படைகள் ஆயுத பயிற்சி பெற்றவர்கள்என்று ஏறக்குறைய முப்பதினாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இருந்தார்கள் அந்த குறுகிய நிலப்பரப்பிற்கு அத்தனை ஆயிரம் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் எந்த வகையிலும் பற்றாக்குறையில்லை.

இறுதி போராட்டத்தை சாய்த்தது எதிரியிடமிருந்த கனரக ஆயுதங்களே, கிழக்கிலும் வன்னியிலும் மடிந்த பல ஆயிரம் போராளிகள் ராணுவத்தை அருகில் நெருங்காமலேயே எங்கோ இருந்து பொழியப்பட்ட எறிகணை மழையில் தொலைந்தவர்களே.

லண்டனில் நடந்த மாவீரர்நாள் உரையில் பாலசிங்கம் பேசினார், நேற்றுத்தான் பிரபாகரனுடன் பேசினேன், புலம்பெயர் மக்களுக்கு என்ன சொல்லுறது எதாவது சொல்லு, அதுக்கு தலைவர் சொன்னாராம் நீங்கள் செய்யும் உதவிகளுக்கு நன்றி, அரங்கம் அதிர்ந்தது.

அன்று தலைவர் என்ற மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர் அங்கிருந்து எதிர்பார்த்ததை தமது சக்திக்குட்பட்டும் சக்தியை மீறியும் பங்களிப்பாய் வழங்கிய ஓடி போனவர்கள் எந்த வகையிலும் இகழ்ச்சிக்குரியவர்களல்ல.

அவரே அப்படி சொன்னதில்ல ..அப்புறம் எதுக்கு?

நீங்கள் எழுதியதில் தர்க்க நியாயம் இருக்கிறது ஆனால்.

1. புலம் பெயர் தேசத்தில் ஒரு மிக வலுவான  ஆதரவு, நிதி ஆதரவு கட்டமைப்பை நிறுவியபின் - அதன் பின்னும் அவர்களை ஓடி வந்தவர்கள் என தூற்றுவார்கள் என நினைப்பது கொஞ்சம் அப்பாவித்தனமானது. பாலா அண்ணை ஒரு மிகப்பெரும் இராஜதந்திரி என்பதற்கு நீங்கள் சொன்ன நிகழ்வு ஒரு சான்றே ஒழிய -அதை வைத்து ஓடி வந்தோராலும் ( கவனிக்க உம்) போராட்டம் தோற்கவில்லை என நிறுவ முடியாது.

2. ஓடி வந்தவர்களை நிச்சயமாக முடிந்தளவு பயன்படுத்திய அதேவேளை - மேலும் ஓடி வரக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள். மிக கடுமையாக பாஸ் நடைமுறையை 1990 இலேயே அறிமுகம் செய்து, பிணை நின்றவர்கள் கூட  பிரச்சனைக்கு ஆளாகும் நிலை இருந்தது.

இதை ஏன் இவ்வளவு இறுக்கமாக கடைப்பிடித்தார்கள்? காரணம் ஒரு இராணுவத்தின் அடிப்படையே ஆட் பலம்தாம். குறிப்பாக இலங்கை போன்ற ஒரு நிலம் பிடிக்கும் போரில். வெளிநாட்டு காசால் எவ்வளவு ஆயுதத்தை வாங்கினாலும்  களத்தில் நிற்க ஆள் இல்லாத போது எதுவும் செய்ய முடியாது.

3. பாஸ் நடைமுறையாலும் ஓட்டத்தை தடுக்க முடியாமல் போக, முதலில் குடும்பத்தில் ஒருவர், என கேட்டு பின்னர் கிழக்கிலும் அடுத்து வன்னியிலும் கட்டாய ஆட்சேர்புக்கு தள்ளப்பட்டார்கள்.

ஜெயசிக்குறு எதிர் சமரில் கிழக்கில் இருந்து மேலதிக ஆட்பலம் வந்திராவிட்டால் எதையும் சாதித்திருக்க முடியாது என்பதும்  யாவரும் அறிந்ததே.

4. உடல் வலுவுள்ள இளந்தாரிகள் எல்லாம் G7 நாடுகளின் பொருளாதாரத்தை  உயர்த்த மாடாய் உழைக்க, சிறார்களை படையில் சேர்கிறார் என்ற அவப்பெயரை அவர்கள் சுமக்கும் படி ஆயிற்று (இது போராட்டத்தை பாதித்த விதம் கணிசமானது).

5. இவ்வளவு ஏன்? தலைவர் சொன்னதாக பாலா அண்ணை சொன்னதை நினைவு கூறும் நீங்கள், அரியாலையில் இருந்து, முகமாலை வரை பின்வாங்கிய பின், யாழ்பாணத்தை மீட்க தலைவர் என்னத்தை மக்களிடம் கேட்டார் என்பதை எப்படி சுலபமாக மறந்தீர்கள்?

6. இறுதியுத்தம் நடந்த முறை, போர் முறை பற்றி நீங்கள் கூறியதெல்ல்லாம் சரியே, ஆனால் போதியளவு ஆட்பலம் இருந்திருப்பின், கிழக்கு படையணிகள் தந்திரமாக குறைக்கபப்ட்டபின், தனியே வன்னிக்குள் மாட்டுப்படும் நிலை வந்திராது. புதிய யுத்த அரங்குகளை ஓயாத அலைகள் பாணியில் திறக்க முனைந்தும், முடியாமல் போனது, கிழக்கு போராளிகள் எண்ணிகை குறைந்த பின், அந்த அளவு உயிர் இழப்புக்களை தாங்கும் ஆட்பல வலு அவர்களுக்கு இருக்கவில்லை என்பதே.

ஓடி வந்ததால் மட்டும் போராட்டம் தோற்றதாக யாரும் சொல்லப்போவதில்லை, ஆனால் சர்வதேசத்தில் போராட்டத்துக்கு ஏற்பட்ட பல அவதூறுகள் உட்பட, போராட்டம் தோற்று போனதற்கு மிக முக்கிய காரணிகளில் ஒன்று ஓடி வந்ததே.

இதை ஏற்காமல் தட்டி கழிப்பது எமது எஞ்சிய நாட்களை மன நிம்மதியோடு கழிக்க நிச்சயம் உதவும்…ஆனால் உண்மை வேறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.