Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 உலகக் கோப்பை போட்டி: எங்கு எப்போது நடைபெறுகிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை போட்டி: எங்கு எப்போது நடைபெறுகிறது?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கோப்பை

பட மூலாதாரம்,JONATHAN DIMAGGIO

இந்த வருடம் அக்டோபர் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் போட்டி அக்டோபர் 16ஆம் தேதியும், இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

டி20 உலகக் கோப்பையில் எத்தனை அணிகள் கலந்து கொள்கின்றன?

இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. அதில் 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

மீதமுள்ள நான்கு அணிகள் தகுதிப் போட்டியின் வழியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளன.

நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் குரூப் 1 மற்றும் குரூப் 2ஆக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் 1-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.

மீதமுள்ள இலங்கை, மேற்கு இந்திய தீவுகள், நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் ஒன்றோடு ஒன்று மோதும்.

டி20 உலகக் கோப்பை போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளன?

டி20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியாவில் ஏழு இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

சூப்பர் - 12 போட்டிகள் எப்போது தொடங்குகின்றன?

தொடரின் முதல் போட்டி இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சூப்பர் - 12 போட்டிகள் அக்டோபர் 22ஆம் தேதியிலிருந்து நடைபெறுகின்றன.

முதல் போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெறுகிறது.

இந்த இரு அணிகளும் 2021 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.

 

2021ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2021ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது

டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் சில முக்கிய போட்டிகள்

23 அக்டோபர் - இந்தியா Vs பாகிஸ்தான்

27 அக்டோபர் - இந்தியா Vs குரூப் 1 ரன்னர் அப்

30 அக்டோபர் - இந்தியா Vs தென் ஆப்ரிக்கா

நவம்பர் 2 - இந்தியா Vs வங்கதேசம்

நவம்பர் 6 - இந்தியா Vs குரூப் 2 வின்னர்

டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் எப்போது நடைபெறும்?

தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி சிட்னியில் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

இரண்டாம் அரையிறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.

https://www.bbc.com/tamil/sport-61789349

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

டி20 உலகக் கோப்பை போட்டி: எங்கு எப்போது நடைபெறுகிறது?

@கிருபன் இப்பவிருந்தே கேள்விக் கொத்துகளை தயாரிக்கும் வேலையை தொடங்குங்கள்.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

@கிருபன் இப்பவிருந்தே கேள்விக் கொத்துகளை தயாரிக்கும் வேலையை தொடங்குங்கள்.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

அதெல்லாம் ஏற்கனவே தயாரித்து வைத்தபடிதான் இருக்கிறது பிரியன்.......அந்த போனவருட ஷீட்டில் கேள்விகளை மட்டும் வைத்துக்கொண்டு பதில்களை அழித்துவிட்டால் போதும் என்று நினைக்கின்றேன்........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

@கிருபன் இப்பவிருந்தே கேள்விக் கொத்துகளை தயாரிக்கும் வேலையை தொடங்குங்கள்.

ஆகஸ்ட் மாதம் முடியப் பார்க்கலாம்!  இலையான் அடிப்பவர், ஈ ஓட்டுபவர் என்று 10 பேராவது வந்தால் உண்டு😀

3 hours ago, suvy said:

அதெல்லாம் ஏற்கனவே தயாரித்து வைத்தபடிதான் இருக்கிறது பிரியன்.......அந்த போனவருட ஷீட்டில் கேள்விகளை மட்டும் வைத்துக்கொண்டு பதில்களை அழித்துவிட்டால் போதும் என்று நினைக்கின்றேன்........!  😂

இந்த முறை Google form பாவிக்கலாமா என்று யோசிக்கின்றேன்🤔🫠

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆகஸ்ட் மாதம் முடியப் பார்க்கலாம்!  இலையான் அடிப்பவர், ஈ ஓட்டுபவர் என்று 10 பேராவது வந்தால் உண்டு😀

குறைந்தது 15 பேராவது வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

ஆகஸ்ட் மாதம் முடியப் பார்க்கலாம்!  இலையான் அடிப்பவர், ஈ ஓட்டுபவர் என்று 10 பேராவது வந்தால் உண்டு😀

இந்த முறை Google form பாவிக்கலாமா என்று யோசிக்கின்றேன்🤔🫠

ஆர் வந்தாலும் வழமை போல் வெல்லப்போவது என்னவோ நான் தானே.

3 hours ago, ஈழப்பிரியன் said:

குறைந்தது 15 பேராவது வருவார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஆர் வந்தாலும் வழமை போல் வெல்லப்போவது என்னவோ நான் தானே.

 

இப்ப இருந்தே கோவில் குளமாக திரிந்து நேர்த்தி வையுங்க.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பை  டி20 : கடைசி அணிகளாக நுழைந்த ஜிம்பாப்வே, நெதர்லாந்து!

zimbabwe-and-netherlands-qualify.webp

எட்டாவது டி20 உலகக்கோப்பை போட்டியில் கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வேயும், நெதர்லாந்தும் நுழைந்துள்ளன.
2022 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, 2021 போட்டியின் முடிவின்படி ‘டாப் 11’ அணிகளான இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகியவை நேரடியாக தகுதி பெற்றன. எஞ்சிய நான்கு நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் ஓமனில் நடந்த தகுதி சுற்று மூலம் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி பெற்றன. இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கு கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வேயும், நெதர்லாந்தும் நுழைந்தன. ஜிம்பாப்வேயில் நடந்த தகுதி சுற்றில் இந்த இரு அணிகளும் அரை இறுதியில் வெற்றி பெற்றதால் வாய்ப்பை பெற்றன. ஜிம்பாப்வே அணி 27 ரன்னில் பப்புவா நியூ கினியாவையும், நெதர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவையும் வீழ்த்தியது.
உலகக் கோப்பையில் விளையாடும் 16 நாடுகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக இரண்டாவது சுற்றில் (சூப்பர்-12) விளையாடும்.
முதல் சுற்றில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய 8 அணிகள் விளையாடும்.இதில் இருந்து 4 நாடுகள் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறும்.
கிரிக்கெட் உலகில் பரம வைரிகளாகக் கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கடந்த உலகக் கோப்பையைப் போன்று இந்த முறையும் ஒரே குரூப்பில்உள்ளன. அக்டோபர் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

https://minnambalam.com/t20-world-cup-netherland-zimbabwe-enters-lastly/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டி தொடங்கட்டும் நானும் ஒரு நாள் முதல்வரா வருவன்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2022 at 15:33, ஈழப்பிரியன் said:

@கிருபன் இப்பவிருந்தே கேள்விக் கொத்துகளை தயாரிக்கும் வேலையை தொடங்குங்கள்.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் பெரிய‌ த‌லைக‌ளை கொஞ்ச‌ நாளாக‌ யாழில் காண‌ வில்லை

 

கொஞ்ச‌ப் பேர் க‌ல‌ந்து கொண்டா போட்டி சூடு பிடிக்காது , என்னையும் ந‌ம்பி ஒரு ஜீவ‌ன் இருக்கு க‌ண்டிப்பாய் அவ‌ரையும் கூட்டிட்டு வ‌ருவேன் 😁😍🙏 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் பெரிய‌ த‌லைக‌ளை கொஞ்ச‌ நாளாக‌ யாழில் காண‌ வில்லை

 

கொஞ்ச‌ப் பேர் க‌ல‌ந்து கொண்டா போட்டி சூடு பிடிக்காது , என்னையும் ந‌ம்பி ஒரு ஜீவ‌ன் இருக்கு க‌ண்டிப்பாய் அவ‌ரையும் கூட்டிட்டு வ‌ருவேன் 😁😍🙏 

ஆகா பையா கண்டு ரொம்ப நாளாச்சு.

கிருபன் ஆயத்தமாகிக் கொண்டே இருக்கிறார்.

பையா அடிக்கடி இணைந்திருங்கள்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலக கோப்பை 2022 அக்டோபரில் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

டி20 உலகக் கோப்பை 2022

பட மூலாதாரம்,JONATHAN DIMAGGIO

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்குகிறது. போட்டியின் முதல் பந்தயம் அக்டோபர் 16ஆம் தேதியும், இறுதிப்பந்தயம் நவம்பர் 13ஆம் தேதியும் நடைபெறும்.

இந்த டி20 உலக கோப்பை தொடர்பான முக்கிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.

2022 டி20 உலக கோப்பையில் எத்தனை அணிகள் பங்கேற்கின்றன?

இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. முழு போட்டியும் குரூப் ஸ்டேஜ் மற்றும் சூப்பர்-12 என பிரிக்கப்பட்டுள்ளது.

முதலில் க்ரூப் ஸ்டேஜ் பற்றிப்பேசலாம். இந்த சுற்றில் இரண்டு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

ஏ பிரிவில் இலங்கை, நமீபியா மற்றும் இரண்டு தகுதிச் சுற்று அணிகள் உள்ளன. மறுபுறம், மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து மற்றும் இரண்டு தகுதிச் சுற்று அணிகள் B பிரிவில் உள்ளன.

இந்த இரு பிரிவிலும் முதல்-2 இடங்களை பிடிக்கும் அணிக்கு சூப்பர்-12ல் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

இப்போது சூப்பர்-12 நிலை பற்றி பேசலாம். இப்போட்டியின் சூப்பர்-12 சுற்றில் ஏற்கனவே 8 அணிகள் இடம்பிடித்துள்ளன. 2021 டி20 உலகக் கோப்பையின் டாப்-8 அணிகள் இவைதான்.

இந்த அணிகள் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம்.

இப்போது சூப்பர்-12ல், இந்த 8 அணிகளைத் தவிர, குரூப் ஏ மற்றும் குரூப் பி-யின் டாப்-2 அணிகளும் சேர்க்கப்படும். சூப்பர்-12 இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

குரூப்-1ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், குரூப் ஏ வெற்றியாளர் மற்றும் குரூப் 'பி'யில் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணியும் இருக்கும்.

குரூப்-2ல், இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், குரூப் பி வெற்றியாளர் மற்றும் குரூப் 'ஏ'யில் இரண்டாம் இடத்தைப்பெறும் அணியும் இருக்கும்.

2022 டி20 உலக கோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது?

இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவில் மொத்தம் ஏழு இடங்களில் போட்டிகள் நடைபெறும்.

முதல் சுற்றின் ஆறு பந்தயங்கள் ஜிலாங் நகரில் உள்ள கார்டினியா பார்க்கில் நடைபெறும். அதே நேரத்தில், போபார்ட்டின் பெலரீவ் ஓவல் மைதானத்தில் மொத்தம் ஒன்பது பந்தயங்கள் நடைபெறும், இதில் முதல் சுற்றின் ஆறு மற்றும் சூப்பர் 12 கட்டத்தின் மூன்று போட்டிகள் விளையாடப்படும்.

இது தவிர, மீதமுள்ள சூப்பர் 12 போட்டிகள் இந்த மைதானங்களில் நடைபெறும்:

• தி கப்பா, பிரிஸ்பேன்

• பெர்த் ஸ்டேடியம், பெர்த்

• அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

• சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி

• மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்

 

டி20 உலகக் கோப்பை 2022

பட மூலாதாரம்,JONATHAN DIMAGGIO

 

படக்குறிப்பு,

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

2022 டி20 உலக கோப்பையில் சூப்பர்-12 பந்தயங்கள் எப்போது தொடங்கும்?

போட்டியின் முதல் பந்தயம் இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குரூப் ஸ்டேஜ் போட்டி. சூப்பர்-12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கும்.

இந்த கட்டத்தின் முதல் பந்தயத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2021 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின என்பது நினைவுகூரத்தக்கது. இரண்டாவது பந்தயம் அக்டோபர் 22 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

2022 டி20 உலக கோப்பையில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் எப்போது நடக்கின்றன ?

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் முதல் பந்தயம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியாவின் முக்கியமான போட்டிகள் பின்வருமாறு:

• 23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான்

• 27 அக்டோபர்: இந்தியா vs குரூப் 1 ரன்னர் அப்

• 30 அக்டோபர்: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

• நவம்பர் 2: இந்தியா vs வங்கதேசம்

• நவம்பர் 6: இந்தியா vs குரூப்-2 வெற்றியாளர்

அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி எப்போது ?

முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர் 9ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இரண்டாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இறுதிப்பந்தயம் நவம்பர் 13 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இதன் மூலம் டி20 உலகக் கோப்பையின் புதிய வெற்றியாளரை கிரிக்கெட் உலகம் பெறும்.

2021 டி20 உலக கோப்பையின் முடிவு என்ன?

 

டி20 உலகக் கோப்பை 2022

பட மூலாதாரம்,JONATHAN DIMAGGIO

 

படக்குறிப்பு,

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

கடந்த ஆண்டு ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் 'பூவா தலையா'வை இழந்த நியூசிலாந்து அணி, கேப்டன் கேன் வில்லியம்சனின் 85 ரன்களின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பின்னர் மட்டை வீசிய ஆஸ்திரேலியா 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. டேவிட் வார்னர் 53 ரன் எடுத்தார். மிட்செல் மார்ஷ் அவுட்டாகாமல் 77 ரன் குவித்தார்.

இந்த போட்டியில் இந்தியாவால் அரையிறுதிக்கு கூட தகுதிபெற முடியவில்லை.

டி20 உலக கோப்பையை யார் எப்போது வென்றார்கள்?

முதல் டி20 உலகக் கோப்பை போட்டி 2007 செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்ட இதில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே அப்போது ஒரே குழுவில் இருந்தன.

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப்பந்தயம் ஜோஹேனஸ்பெர்கில் நடைபெற்றது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணியால் 19.3 ஓவர்களில் 152 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தானை 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதுவரை வெற்றி வாகை சூடிய நாடுகள்:

• T20 உலகக் கோப்பை 2007- இந்தியா

• T20 உலகக் கோப்பை 2009- பாகிஸ்தான்

• T20 உலகக் கோப்பை 2010- இங்கிலாந்து

• டி20 உலகக் கோப்பை 2012- வெஸ்ட் இண்டீஸ்

• T20 உலகக் கோப்பை 2014- இலங்கை

• டி20 உலகக் கோப்பை 2016- வெஸ்ட் இண்டீஸ்

• T20 உலகக் கோப்பை 2021- ஆஸ்திரேலியா

https://www.bbc.com/tamil/sport-62634261

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.