Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture1.png

இன்றைய செய்தியில் இக்காணொளியை காண நேர்ந்தது. உயிரை பணையம் வைத்து 6000கி.மீ செல்வது எவ்வளவு ஆபத்தானது?

அதற்கு தமிழகம் வந்து சிலகாலம் தங்கிவிட்டு நிலைமை சரியானதும் நாடு திரும்பலாமே?

இங்கே வளம் இல்லைதான், ஆனால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லைதானே? 🤔

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, ராசவன்னியன் said:

அதற்கு தமிழகம் வந்து சிலகாலம் தங்கிவிட்டு நிலைமை சரியானதும் நாடு திரும்பலாமே?

இங்கே வளம் இல்லைதான், ஆனால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லைதானே? 🤔

 

அங்கே தானே சிக்கலே....

நம்ம கிட்ட வசதி இருந்தால், விசா எடுத்து வந்து, அகதியாக பதிந்தால், வெளியே இருக்கலாம். பிரச்சனை கிடையாது.

அப்படி அகதியாக இருந்து, வெளியே exit விசா எடுத்து வந்தாலும், மீண்டும் எந்த காலத்திலும் உள்ளே வர முடியாது, வேறு நாட்டு கடவு சீட்டு எடுத்தால் கூட. அப்படி ஒரு கெடு பிடி.

வசதி இல்லாவிடில், இப்படி படகில் கிளம்பி வந்தால், முகாமில் வருட கணக்கில் தங்க வேண்டியது தான். 

சரி நாட்டு நிலைமை பரவாயில்லை, திரும்புவோம் என்றால், சிக்கல், இலங்கை சிங்கள அரசின் தூதரகமும் கண்டு கொள்ளாது. வந்த வழியில் வெளியேற முனைந்து கைதாகி சிறப்பு முகாமில் வழக்கே இல்லாமல் வருடக்கணக்கில் வாடி இருந்து பெரும் போராட்டத்தின் பின்னர் இப்போது தான் 16 பேர் வெளியே வந்துள்ளனர்.

ஆக, உள்ளே வந்தால், ஒரு சிறைக்குள் புகும் நிலைதான். இலங்கை அரசும் கடவு சீட்டும் தராது. வந்த வழியே வெளியே போகவும் முடியாது.

இந்திய கடவுசீட்டு... குடியுரிமை....? உஸ்.... மூச். 🤫

1.3 பில்லியன் மக்கள் உள்ள நாட்டில்... குடியுரிமை சும்மா தர முடியாது என்றாலும், வடக்கே, வேறு நாட்டு மக்களுக்கு கொடுக்கப்படுவதும் நடக்கிறது.

ஆகவே, உயிரை கையில் பிடித்து, வேறு நாடு போனால், பிழைத்துக்கொள்ளலாம் என்ற ஒரு நப்பாசை தான்.

பனைமரக் காடே, பறவைகள் கூடே.... பிழைத்தால் வருகிறோம் என்று கிளம்புகிறார்கள். 🙏

  • இன்னோரு விடயம் என்னெவென்றால், இந்த பயணிகள், கிளம்பிப் போவது, நியூஸிலண்ட் நோக்கி. அந்த நாடு, அகதிகளை எடுக்கும். நடுவே நந்தி போல இருந்து, தங்கள் நாட்டுக்கு தான் வருகிறார்கள் என்று பிடித்து, திருப்பி அனுப்பி விடுகிறார்கள் Australians. அதுவே சிக்கல் தான்.
Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில்... இன்னுமொரு ஆபத்தும் உள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு கூட்டி செல்வதற்காக... 
ஒரு லட்ச ரூபாயிலிருந்து, பத்து லட்ச ரூபா வரை அற விடும் முகவர்கள்,

அவர்களின் பணத்தை பெற்றுக் கொண்டு... குறிப்பிட்ட கடற்கரையில், 
குறிப்பிட்ட  காத்திருக்கச்  சொல்லி விட்டு...
காவல் துறைக்கு... தகவலை கொடுத்து விடுகிறார்கள்.

அவுஸ்திரேயா போகும் வள்ளத்தை பார்க்காமலே, பணத்தை இழந்து.. 
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் ஆளாகின்றார்கள்.

பணம் வாங்கிய முகவர், பணத்துடன் தப்பி விடுவார்.
அந்தப் பணம் இவர்களுக்கு கிடைக்கப் போவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த ஆண்டு... அவுஸ்திரேயாவுக்கு செல்ல முயற்சித்து, பிடி பட்டவர்கள். 

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.