Jump to content

"வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆபத்து" - காப்புக்காடு அருகே புதிய கல்குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆபத்து" - காப்புக்காடு அருகே புதிய கல்குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

  • பிரசன்னா வெங்கடேஷ்
  • பிபிசி தமிழுக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

காப்புக்காடு

இயற்கை வளங்களை சுரண்டுவதற்காக எடமச்சி காப்புக்காட்டில் தடையை மீறி புதிய கல்குவாரிக்கான சுரங்கப் பணிகள் நடைபெறுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பழையசீவரம், திருமுக்கூடல், அருங்குன்றம், பழவேலி, மதூர், பட்டா, சிறுமையூலூர் என பல கிராமங்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. உரிய அனுமதி இல்லாமலும் பல எண்ணிக்கையில் கிரஷர்களும் குவாரிகளும் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத சூழ்நிலை

கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து வெளிவரும் தூசு, கிராமப் பகுதியினர் இடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் தூசு கலந்த காற்றை ஒவ்வொரு முறையும் சுவாசிப்பதால் சுவாசக் கோளாறு, தோல் நோய்கள், நுரையீரல் பாதிப்புகள் போன்ற பல பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனர். வீடுகளில் மட்டுமல்லாமல் விவசாய நிலங்களிலும் தூசு படிந்து விவசாயம் முற்றிலும் பாதிப்பு அடைந்துள்ளது. அத்தோடு பல்வேறு கல்குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்கு தொடர்ச்சியாக வெடிகள் வைப்பதனால் அதிர்வு ஏற்பட்டு வீடுகள் இடிந்து போவதும், சுவர்களில் விரிசல் விடுவதும், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

 

தூசு

காப்புக்காடு அருகேபுதிய கல் குவாரி?

நெற்குன்றம் கிராமத்தில் 5 ஏக்கரில் புதியதாக ஒரு கல்குவாரியும் அதன் அருகே மற்றொரு நான்கு கல்குவாரிகளும் அமையவுள்ளது. இந்த புதிய கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேரடியாக சென்று பல முறை மனு கொடுத்துள்ளனர்.

ஏரிகள் நிறைந்த ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரிக்கு அடுத்தபடியாக எடமச்சி கிராமத்தில் உள்ள ஏரி மிகப்பெரிய ஏரி. இந்த ஏரியை நம்பி ஆனம்பாக்கம், நெற்குன்றம், எடமச்சி, கணபதிபுரம், பொற்பந்தல், மாமண்டூர், பாலேஸ்வரம், சின்னாலம்பாடி, மெய்யூர் ஓடை என 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்

இந்தப் பகுதியில் கல்குவாரிகள் அமைந்தால் ஏரி முழுவதுமாக சேதமடையும், மேலும் காப்புக் காடுகள் முழுமையாக அழிக்கப்படும் என கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் முற்றிலும் அழியக்கூடிய நிலை உருவாகும் என அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

பட மூலாதாரம்,BABS PHOTOGRAPHY / GETTY IMAGES

உத்தரவை மீறி குவாரி அமைக்கும் பணி

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வழிகாட்டுதல்படி, வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி சரணாலய எல்லையில் இருந்து 5 கி.மீ. சுற்றளவு பகுதியிலிருந்து, 10 கி.மீ. சுற்றளவு வரை இயல்புநிலை 'சூழல் கூருணர்வு மண்டலமாக' உள்ளது. எனவே, வன உயிரின பாதுகாப்புச் சட்டம், 1972ன்படி, சரணாலயப்பகுதி மற்றும் 10 கி.மீ. என மொத்தம் 15 கி.மீ. சுற்றளவுப் பகுதியில், எவ்விதமான கல்குவாரி மற்றும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இல்லை என, சென்னை வன உயிரின கோட்டத்தின் வன உயிரின காப்பாளர் பிரசாந்த் காஞ்சிபுரம் கனிம வளத்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த நிலையில், எடமச்சி காப்புக்காடு அருகே பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் மீறி தற்பொழுது புதிதாக கல்குவாரி அமைக்கும் பணி நடைபெற்றதை அந்த கிராமப் பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

 

கல்குவாரி

94 வகையான உயிரினங்களுக்கு பேராபத்து

காப்புக் காடான எடமச்சி வனப்பகுதியில் 94 வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. காப்புக்காடு அருகே குவாரி அமைத்தால் அனைத்து உயிரினங்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்கிறார், EMAI சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் செயல் துவக்கத்திற்கான அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முருகவேல். மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது:

"வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல நாட்டில் இருந்து பறவைகள் வந்து இங்கு இனப்பெருக்கம் செய்து, சொந்த நாடு திரும்புவது வழக்கம். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரிக்கு நீர் ஆதாரமே எடமச்சி ஏரி தான். இந்த ஏரி தண்ணீர் தான் வேடந்தாங்கல் செல்கின்றது. அதுமட்டும் இல்லாமல், நெற்குன்றத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது.

 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

பட மூலாதாரம்,SAIKAT MUKHOOPADHYAY / GETTY IMAGES

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு உணவு எடமச்சி ஏரியும் அதன் அருகே உள்ள மலை மற்றும் காட்டுப் பகுதியிலிருந்துதான் கிடைக்கிறது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து இரைக்காக காலையில் வந்து இரைகளை தேடிவிட்டு மாலை நேரத்தில் மீண்டும் வேடந்தாங்கல் திரும்பும். எனவே, இந்த நெற்குன்றம், பாலேஸ்வரம், ஆனம்பாக்கம், மாமண்டூர் பகுதிகளில் புதிதாக கல்குவாரிகள் அமைத்தால், வேடங்தாங்கல் பறவைகள் சரணாலயம் நிரந்தரமாக மூடக்கூடிய அபாயம் ஏற்படும். அதுமட்டுமல்லாது, கல்குவாரியை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்படும். இயற்கை வளங்களும் அழியக்கூடிய நிலை உருவாகும். எனவே, புதிய கல்குவாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது" என்றார்.

 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

பட மூலாதாரம்,HARIKESH PK/GETTY IMAGES

இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு காப்புக்காடு ஒன்று அப்பகுதியில் இருக்கிறது என்பதையே மறைத்து புதியதோர் கல்குவாரிக்கு அனுமதி வழங்கியிருந்தார்கள், இதை எதிர்த்து தற்போது பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துத் தடை வாங்கி உள்ளோம் என்கிறார், ஓய்வு பெற்ற கர்னல் அர்ஜூன். மேலும் இவர் பிபிசி தமிழிடம் தெரிவித்ததாவது:

"எடமச்சி மலை மற்றும் அதன் ஏரியை நம்பி சுற்றுவட்டாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. பெரும்பாலான கிராம மக்கள் இந்த ஏரியை நம்பித்தான் இருக்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் கால்நடைகள் அதிகம் உள்ளன. தற்பொழுது கால்நடைகள் மேய்ச்சலுக்கு வரக்கூடிய இடத்தில்தான் புதிதாக கல்குவாரி அமைய இருக்கிறது. அதுவும் காப்புக்காட்டின் அடிவாரத்தில் அமையவுள்ளது. சட்டத்திற்கு எதிராக குவாரி அமைந்தால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும்.

 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

பட மூலாதாரம்,JAYBEE/GETTY IMAGES

பசுமை தீர்ப்பாயத்தில் புதிதாக குவாரி அமைப்பதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தேன். தற்பொழுது வழக்கு முடியும் வரை எந்தவிதமான சுரங்கப் பணிகளும் அங்கு மேற்கொள்ளக் கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது. இருப்பினும் மலை அடிவாரத்தில் சுரங்கப் பணிகளுக்கு தேவையான முதற்கட்ட பணிகளை தற்போது ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்பொழுது பணியை நிறுத்தி இருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் இதில் சிறப்பு கவனம் செலுத்தி இயற்கையை அழிக்கத் துடிக்கும் நபர்களிடமிருந்து கிராம மக்களை காப்பாற்ற முன்வர வேண்டும்" என்றார்.

ஒருபோதும் மாவட்ட நிர்வாகம் காப்புக்காடு அருகே புதிய கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்காது என்கிறார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி. மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது:

"சுரங்கத்திற்கு தேவையான அனுமதியை மாவட்ட நிர்வாகம் தான் வழங்க வேண்டும். அதேபோல், அங்கிருந்து கனிமங்களை எடுத்துச் செல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். காப்புக்காடு அருகே சுரங்கத்திற்கு ஒருபோதும் மாவட்ட நிர்வாகம் அனுமதி நிச்சயம் வழங்காது. தற்பொழுது சம்பந்தப்பட்ட இடத்தில் கல்குவாரி அமைப்பதற்கு தடை உள்ளது. அவ்வாறு இருக்க அங்கே எப்படி குவாரி அமைக்க முடியும்? இந்தப் பகுதியில் குவாரி அமையாது என்பது குறித்து கனிமவளத் துறையும் மாவட்ட நிர்வாகமும் பலமுறை சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு எடுத்துச் சொல்லி உள்ளோம்" என்றார்.

https://www.bbc.com/tamil/india-62046251

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில்…. அரசாங்கம் இயற்கையை பாதுகாக்கும்.
இங்கு அரசிடம் இருந்து… இயற்கையை பாதுகாக்க, மக்கள் போராட வேண்டி இருக்கு. 
இதற்குத்தான் அந்தந்த நாட்டை, மண்ணின் மைந்தர்களே ஆள வேண்டும்.

பிறத்தியான் வந்தால்… கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருப்பான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

மேற்கு நாடுகளில்…. அரசாங்கம் இயற்கையை பாதுகாக்கும்.
இங்கு அரசிடம் இருந்து… இயற்கையை பாதுகாக்க, மக்கள் போராட வேண்டி இருக்கு. 

இது வருத்தமான விடயம் தான்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1 பிரபா USA 105   வாழ்த்துக்கள் முதலமைச்வரே. கருணாநிதி மாதிரி கதிரையைப் பிடித்துக் கொண்டிருக்காமல் @goshan_che மாதிரி விட்டும் கொடுக்கணும்.  
    • @தமிழ்சூரியன்   வணக்கம் ஐயனே, "நான் தவழ்ந்த மண்" என்ற இறுவெட்டில் உள்ள சில பாடல்களிற்கு தாம் இசையமைத்ததாகக் கூறியுள்ளீர்கள். இவ்விறுவெட்டின் காலத்தை அறிந்துகொள்ளலாமா? நன்றி - நன்னிச் சோழன்    
    • இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி ஆரம்பத்தில் வேகமாக அடித்தாடினாலும், பின்னர் விக்கெட்டுகள் சரியத் தொடங்கி, 19வது கிறிஸ் ஜோர்டனின் ஓவரில் 4 விக்கெட்டுகளை, hat trick உள்ளடங்கலாக, இழந்து இறுதியில் 18.5 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.  பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஜொஸ் பட்லரின் நெருப்படியான ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களுடன், 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.  முடிவு:  இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளால்  வெற்றியீட்டியது.   இங்கிலாந்து அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 09 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம்,  இங்கிலாந்து (B1) வெற்றியீட்டியதால் அவுஸ்திரேலியா (B2) இப்போட்டியில் வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் கிடைக்கின்றன. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த இருவருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு A இல் இந்தியா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத இந்திய அணி வெல்லும் எனக் கணித்த @theeya க்குப் புள்ளிகள் கிடையாது. 49வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 105 2 ரசோதரன் 103 3 ஈழப்பிரியன் 97 4 சுவி 96 5 கோஷான் சே 95 6 கந்தப்பு 93 7 நந்தன் 93 8 நீர்வேலியான் 91 9 கிருபன் 90 10 எப்போதும் தமிழன் 90 11 P.S.பிரபா 89 12 குமாரசாமி 88 13 தமிழ் சிறி 88 14 வாத்தியார் 88 15 அஹஸ்தியன் 87 16 வாதவூரான் 86 17 நிலாமதி 85 18 வீரப் பையன்26 84 19 ஏராளன் 83 20 தியா 80 21 புலவர் 76 22 நுணாவிலான் 74 23 கல்யாணி 73
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.