Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெ­ரிக்க கூடைப்­பந்­தாட்ட வீராங்­க­னையை விடு­விக்க ரஷ்ய ஆயுத கடத்­தல்­கா­ரரை விடு­விக்க அமெ­ரிக்கா சம்­மதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெ­ரிக்க கூடைப்­பந்­தாட்ட வீராங்­க­னையை விடு­விக்க ரஷ்ய ஆயுத கடத்­தல்­கா­ரரை விடு­விக்க அமெ­ரிக்கா சம்­மதம்

போதைப்­பொருள் குற்­றச்­சாட்டில் ரஷ்ய சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள அமெ­ரிக்­காவின் கூடைப்­பந்­தாட்ட வீராங்­கனை பிரிட்­டனி கிறை­னரை விடு­விப்­ப­தற்­காக, 25 வருட சிறைத்தண்டனை ரஷ்ய ஆயுதத் தரகர் விக்டர் பௌட்டை கைதிகள் பரி­மாற்ற முறையில் விடுவிப்­பது குறித்து அமெ­ரிக்கா ஆராய்ந்து வரு­கி­றது.

Britney_griner_with_wife_cherelle_watson

31  வய­தான பிரிட்னி கிறைனர் அமெ­ரிக்­காவின் மிகப் பிர­ல­மான கூடைப்­பந்­தாட்ட வீராங்கனைகளில் ஒருவர். 2 தட­வைகள் ஒலிம்பிக் தங்கப் பதக்­கங்­களை வென்­றவர் என்­பது குறிப்பி­டத்­தக்­கது.

ரஷ்ய சிறை­க­ளி­லுள்ள பிரிட்னி கிறை­ன­ரையும் முன்னாள் கடற்­படை அதி­காரி போல் வெலனையும் கைதிகள் பரி­மாற்ற முறையில் விடு­விக்க அமெ­ரிக்க முயற்­சிக்­கி­றது.

 52 வய­தான போல் வெலன் கன­டாவில் பிறந்­தவர். கனடா, அமெ­ரிக்கா, பிரிட்டன், அயர்­லாந்து ஆகிய நாடு­களின் பிர­ஜா­வு­ரி­மையைக் கொண்­டுள்­ளவர் அவர். 2018 டிசெம்­பரில் உளவு பார்த்த குற்றச்­சாட்டில் ரஷ்­யாவில் கைது செய்­யப்­பட்டார். போல் வெல­னுக்கு 16 வருட சிறைத்­தண்­டனை விதித்து 2020 ஆம் ஆண்டு ரஷ்ய நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

brittney_griner_-_AFP_2.jpg

பிரிட்னி கிறீ­ன­ருக்கும் போல் வெல­னுக்கும் பதி­லாக ரஷ்­யாவின் விக்டர் பௌட்டை விடு­விக்கும் திட்­டத்­துக்கு அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் அங்­கீ­காரம் அளித்­துள்ளார் என சிஎன்என் தெரிவித்­துள்­ளது. பல மாதங்­ளாக நடை­பெற்ற உள்­ளக விவா­தங்­களின் பின் இத்­திட்­டத்­துக்கு ஜனா­தி­பதி பைடன் அனு­ம­தி­ய­ளித்­துள்ளார் என சிஎன்என் தெரி­வித்­துள்­ளது.

பிரிட்னி கிறீனர் மற்­றும் போல் வெலன் விடு­தலை உட்­பட பல விட­யங்கள் குறித்து ரஷ்ய வெளிவி­வ­கார அமைச்சர் சேர்ஜி லவ்­ரோ­வுடன் தான் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­தாக அமெ­ரிக்க ராஜாங்க செய­லாளர் அன்­தனி பிளின்கன் நேற்­று­முன்­தினம் செய்­தி­யா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார். யுக்ரைன் மீதான ரஷ்ய படை­யெ­டுப்பின் பின்னர் ரஷ்ய, அமெ­ரிக்க வெளி­வி­வ­கார அமைச்சகர்களுக்கு இடையில் பேச்­சு­வார்த்தை நடை­பெ­ற­வுள்­ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்­பி­டத்­தக்­கது.

Viktor_Bout_afp.jpg

52 வய­தான விக்டர் பௌட், சோவியத் ஒன்­றி­யத்தின் முன்னாள் இரா­ணுவ அதி­காரி ஆவார். ரஷ்ய, போர்த்­துகல், பிரெஞ்சு, பார­சீகம், ஆங்­கில மொழி­களில் தேர்ச்சி பெற்­றவர். ரஷ்ய இரா­ணு­வத்தின் மொழி­பெ­யர்ப்­பா­ள­ரா­கவும் பணி­யாற்­றிய அவர், 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்­றியம் கலைக்கப்­பட்ட பின்னர் சரக்கு விமானப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­களை ஸ்தாபித்தார்.

அவ்­வி­மா­னங்கள் மூலம் கிழக்கு ஐரோப்­பிய நாடு­க­ளி­லி­ருந்து, ஆபி­ரிக்கா மற்றும் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு ஆயு­தங்­களைக் கடத்­தி­ய­தாக அவர் மீது குற்றம் சுமத்­த­மப்­பட்­டது. தடைசெய்யப்பட்ட அமைப்­பு­க­ளுக்கு  ஆயுத விற்­பனைத் தடை­களை மீறி ஆயு­தங்­களை விநியோ­கித்­த­தா­கவும் அவர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது.

இண்­டர்போல் அறி­வித்­த­லை­ய­டுத்து, 2008 ஆம் ஆண்டு தாய்­லாந்து வைத்து பயங்­க­ர­வாத குற்றச்சாட்­டு­களின் பேரில் அந்­நாட்டு பொலி­ஸாரால் விக்டர் பௌட் கைது செய்­யப்­பட்டார். ரஷ்யாவின் எதிர்ப்­பையும் மீறி 2010 ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வுக்கு அவர் நாடு கடத்­தப்­பட்டார்.  அவரின் கைது சட்­ட­வி­ரோ­த­மா­னது என ரஷ்யா கூறி­யது.

அமெ­ரிக்க பொது­மக்­க­ளையும், அதி­கா­ரி­க­ளையும் கொல்­வ­தற்கு சதி செய்­தமை, பயங்­க­ர­வாத அமைப்­புக்கு உதவி வழங்­கி­யமை முத­லான குற்­றச்­சாட்­டுகள் அவர் மீது சுமத்­தப்­பட்­டன. 2011 ஆம் ஆண்டு அவர் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­ட­துடன், 25 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. 2012 ஆம் ஆண்டு முதல் இலினோய்ஸ் மாநி­லத்­தி­லுள்ள சிறை­யொன்றில் விக்டர் பௌட் அடைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில், விக்டர் பௌட்டை விடு­விப்­பதன் மூலம், கூடைப்­பந்­தாட்ட வீராங்­கனை பிரிட்னி கிறை­ன­ரையும் போல் வெல­னையும் ரஷ்­யா­வி­லி­ருந்து விடு­வித்துக் கொள்ள அமெ­ரிக்க முயற்­சித்து வரு­கி­றது.

பிரிட்னி கிறைனர்

6 அடி 9 அங்­குல உய­ர­மான பிரிட்னி கிறைனர், 2016, 2020 ஆம் ஆண்­டு­களில் ஒலிம்பிக் கூடைப்­பந்­தாட்­டத்தில் தங்­கப்­ப­தக்கம் வென்­றவர்.

Brittney_Griner_25.jpg

ஒலிம்பிக் போட்டி, அமெ­ரிக்க தேசிய கல்­லூரி விளை­யாட்டுச் சங்­கத்தின் சம்­பி­யன்ஷிப் போட்­டிகள், சர்­வ­தேச கூடைப்­பந்­தாட்டச் சம்­மே­ள­னத்தின் போட்டி, மகளிர் கூடைப்­பந்­தாட்டச் சங்­கத்தின் போட்டி போன்ற அனைத்து முக்­கிய போட்டிக­ளிலும் முத­லிடம் பெற்;ற 11 வீராங்­க­னை­களில் ஒருவர் பிரிட்னி கிறைனர்.

கடந்த பெப்­ர­வரி மாதம் ரஷ்­யா­வுக்கு அவர் சென்­ற­போது அவரின் பயணப் பையில், ஹாஷ் ஒயில் எனும் கஞ்சா எண்ணெய் இருந்­தமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இது ரஷ்­யாவில் தடை­செய்­யப்­பட்ட பொரு­ளென்­பதால் பிரிட்னி கிறைனர் ரஷ்ய அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டார். தான் குற்­ற­வாளி என அவர் கடந்த 7 ஆம் திகதி ஒப்­புக்­கொண்டார். எனினும், சட்­டங்­களை மீறும் எண்ணம் தனக்கு இல்லை எனவும், அப்­பொருள் தனது பய­ணப்­பைக்குள் வந்­தமை தற்­செ­ய­லா­னது எனவும் அவர் கூறினார்.

ஒரு­பா­லின சேர்க்­கை­யா­ள­ரான பிரிட்னி கிறைனர், தனது சக கூடைப்­பந்­தாட்ட வீராங்­க­னை­யான குளோறி ஜோன்­சனை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஐ.வி.பி. முறையில் குளோறி ஜோன்சன் இரட்டைக் குழந்தைகளை பிரசிவித்தார். 2016 ஆம் ஆண்டு குளோறியும் பிரிட்னியும் விவாகரத்து செய்தனர். குழந்தைகளுக்காக குளோறிக்கு நிதியுதவி வழங்குமாறு பிரிட்னிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019 ஆம் ஆண்டு சார்ளி வட்சன் எனும் பெண்ணை பிரிட்னி கிறைனர் திருமணம் செய்துகொண்டார். 2019 ஆம் ஆண்டு சார்ளி வட்சன்  தனது பெயரை சார்ளி அப்பெண் கிறைனர் என  மாற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/132439

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 இப்பிடியே  ஸ்னோடனையும் வைச்சு பேரம் பேசுங்கப்பா? 😁

Facebook Jadi Meta, Snowden: Jangan Lihat Namanya, Lihat Perbuatannya

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

பிரிட்னி கிறீ­ன­ருக்கும், போல் வெல­னுக்கும் பதி­லாக ரஷ்­யாவின் விக்டர் பௌட்டை விடு­விக்கும் திட்­டத்­துக்கு அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் அங்­கீ­காரம் அளித்­துள்ளார் என சிஎன்என் தெரிவித்­துள்­ளது. பல மாதங்­ளாக நடை­பெற்ற உள்­ளக விவா­தங்­களின் பின் இத்­திட்­டத்­துக்கு ஜனா­தி­பதி பைடன் அனு­ம­தி­ய­ளித்­துள்ளார் என சிஎன்என் தெரி­வித்­துள்­ளது.

இது, நல்ல கதையாக... இருக்கு.  😮
அமெரிக்கா இரண்டு பேரை, ரஷ்யா விடுவித்தால்... 
ரஷ்யாவின் ஒரு ஆளை... அமெரிக்கா விடுவிக்குமாம்.
ஒரு தலைக்கு, ஒருவரை மட்டுமே விடுவிப்பது தான் முறை. 
அமெரிக்கா... பேய்க் காட்டலுக்கு, ரஷ்யா ஏமாறக் கூடாது. 
மாண்பு மிகு  புட்டின், இதை சும்மா விடுவார், என்று.. நினைக்கிறான் வெள்ளைக்காரன். 😁

  • கருத்துக்கள உறவுகள்

விக்டர் பெளட் புலிகளுக்கும் ஆயுதம் கடத்தியவராம்.
அவரது தொழிலே அது தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, தமிழ் சிறி said:

இது, நல்ல கதையாக... இருக்கு.  😮
அமெரிக்கா இரண்டு பேரை, ரஷ்யா விடுவித்தால்... 
ரஷ்யாவின் ஒரு ஆளை... அமெரிக்கா விடுவிக்குமாம்.
ஒரு தலைக்கு, ஒருவரை மட்டுமே விடுவிப்பது தான் முறை. 
அமெரிக்கா... பேய்க் காட்டலுக்கு, ரஷ்யா ஏமாறக் கூடாது. 
மாண்பு மிகு  புட்டின், இதை சும்மா விடுவார், என்று.. நினைக்கிறான் வெள்ளைக்காரன். 😁

மாண்புமிகு பெரு மதிற்பிற்குரிய புட்டின் அவர்கள் முன்னாள் உளவாளி ஆவார். அவரிடம் அமெரிக்காவின் நரித்தனங்கள் பலிக்காது. ரஷ்யாவை சிதறடித்து அந்த நாட்டின் கனிமள வளங்களை சூறையாடுவதே மேற்குலகின் நோக்கம்.(பரம்பரை தொழில் அதுதானே) அதனை தடுக்கவே செலென்ஸ்கி போன்ற காக்கைவன்னிய கும்பலை அழிக்க நினைக்கின்றார்.:cool:

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

இது, நல்ல கதையாக... இருக்கு.  😮
அமெரிக்கா இரண்டு பேரை, ரஷ்யா விடுவித்தால்... 
ரஷ்யாவின் ஒரு ஆளை... அமெரிக்கா விடுவிக்குமாம்.
ஒரு தலைக்கு, ஒருவரை மட்டுமே விடுவிப்பது தான் முறை. 
அமெரிக்கா... பேய்க் காட்டலுக்கு, ரஷ்யா ஏமாறக் கூடாது. 
மாண்பு மிகு  புட்டின், இதை சும்மா விடுவார், என்று.. நினைக்கிறான் வெள்ளைக்காரன். 😁

அது வேறு ஓண்டும்மில்லை. 

இப்படி ஆளிண்ட ஆள் உளவாளியளை பிடிச்சு, பிடிச்சு விளையாடுவது வல்லூறு அரசுகளின் ஒரு வகை பொழுது போக்கு.

ஆனா உக்கிரேன் மீதானா ரஸ்ய ஆக்கிரமிப்பு நேரம் நடந்த சில விடயங்கள், தான்மைமிகு புட்டின் அவர்களை சினம் கொள்ள செய்து விட்டது.

வந்த கோபத்தில் எவனையாவது புடிச்சு உள்ள போடணும் எண்டு சன்னதமாடினாலும்…பிடிச்சு போட ஒரு உளவாளியும் சிக்கல்ல😆.

உளவாளி இல்லாட்டி என்ன, கிடைத்தவரை லாபம், ஒரு “உழைப்பாளியையாவது” பிடிச்சு உள்ள போடுவோம் எண்டு உள்ளே தள்ளபட்டவர்தான் ரஸ்யாவில் உள்ள ஒரு அணிக்காக 2014 முதல் தொழில் முறையாக விளையாடி வரும் இந்த பிரிட்டனி.

இப்போ போல் லெவன் என்ற அமெரிக்க உளவாளியை, தனது சக முன்னாள் உளவாளி, இந்நாள் மாபியாகாரரான விக்டரை மீட்க பரிமாற்றம் செய்கிறார்.

சும்மா ஏன் பிரிட்டனிக்கி வச்சு சோறு போடுவான் என்ற நல்லெண்ணத்தில் (🤣), அங்காடிகளில் தள்ளுபடி சலுகையில் விற்பது போல “ஒன்று வாங்கினால், இன்னொன்று இலவசம்” என்கிறார் தான்மை.மிகு புட்ஸ் அவர்கள்🤣.

 

 

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.