Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீன கப்பல், இலங்கைக்கு: தீவிர கண்காணிப்பில்... இந்திய கடற்படை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைவரும் சீன இராணுவ கண்காணிப்பு கப்பலால் கடும் அதிருப்தியில் இந்தியா

சீன கப்பல், இலங்கைக்கு: தீவிர கண்காணிப்பில்... இந்திய கடற்படை!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்வரும் 11ஆம் திகதி வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயற்கைக் கோள்கள், ரொக்கெட்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளைக் கொண்ட இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க வரும் கப்பல் (யுவான் வாங் – 5) இம்மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கப்பல் 750 கிலோமீட்டருக்கும் அதிகமான வான்வழி அணுகல் கண்காணிப்பு திறனைக் கொண்டுள்ளது, எனவே இது தென்னிந்தியாவில் உள்ள கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் போன்ற இந்திய அணு ஆராய்ச்சி மையங்களைக் கண்காணிக்கும் திறன் கொண்டது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட துறைமுகங்கள் உட்பட சீனாவால் கண்காணிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், இந்தியாவின் பல இடங்களில் இருந்து தகவல்களை சேகரிக்க சீனாவுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1293193

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கையை நெருங்கும் சீன கப்பல்! பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா?

மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன், கபிரியேல் தேவதாஸ்.  

  • கருத்துக்கள உறவுகள்

சீனா தனக்குப் போட்டியா அமெரிக்காவையும் அதன் கூட்டு நாடுகளையும் கவனிக்கிற அளவுக்கு வளர்ந்துவிட்டது.

ஹிந்தியா.. தனக்குத் தானே பிராந்திய வல்லரசுன்னு கனவு காண வேண்டியது தானே தவிர.. அதற்கு வாய்ப்பே இல்லை ராஜா.

ஹிந்தியாவின் தொடர் தவறான வெளிநாட்டுக் கொள்கைகள்.. குறிப்பாக விடுதலைப்புலிகளை இல்லாமல் செய்தல் உட்பட.. ஈழத்தமிழர்களை ஏமாற்றுதல் உள்ளடங்க.. ஹிந்தியாவை.. பிராந்திய அனாதையாக்கி உள்ளதே தவிர.. எதைக் கொட்டிக்கொடுத்தாலும் சிங்களம் வாங்குமே தவிர நிச்சயம் ஹிந்தியாவுக்கு விசுவாசமாக இருக்காது.

ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களில் தவறானவர்களை வைச்சு.. தவறான முடிவுகளை எடுத்ததால்.. ஹிந்தியா தனக்கான விசுவாசுகளை முற்றாக இழந்துவிட்டது பிராந்தியத்தில். 

ஹிந்தியா சீனாவுக்கு ஒரு எலிக்குஞ்சு போல. அது விளையாடிக்கிட்டே தான் இருக்கும். இவைக்கு வேதனை மட்டும் தான். காரணம்.. தவறான கொள்கை உடையோரை தவறான இடங்களில் அமர்த்திப் பூஜித்ததன் பலன். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளது. ஊடகங்களில் புளுகி அடித்து மக்களை மாயையில் வைத்திருக்கிறது. 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோட்டையில்தான்.... இந்திய,  சீன  யுத்தம் ஆரம்பிக்கப்  போகுது போலை இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

அம்பாந்தோட்டையில்தான்.... இந்திய,  சீன  யுத்தம் ஆரம்பிக்கப்  போகுது போலை இருக்கு. 

கால்களுக்கு இடையில் வால் உடன் சண்டை போடுவது யாராக இருக்கும்.Why Do Dogs Put Their Tails Between Their Legs? - Local Dog Walker

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

கால்களுக்கு இடையில் வால் உடன் சண்டை போடுவது யாராக இருக்கும்.Why Do Dogs Put Their Tails Between Their Legs? - Local Dog Walker

Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News  Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News

இப்ப சொன்னால்... வாற, நிவாரண உதவி  எல்லாம் நின்று விடும். 😂
எல்லாக்  கப்பலும் வந்து போன பின்.. சொல்கின்றேன். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News  Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News

இப்ப சொன்னால்... வாற, நிவாரண உதவி  எல்லாம் நின்று விடும். 😂
எல்லாக்  கப்பலும் வந்து போன பின்.. சொல்கின்றேன். 🤣

நோ... நோ.... நான் சீனாக்காரரை சொன்னேன்... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

நோ... நோ.... நான் சீனாக்காரரை சொன்னேன்... 

நீங்க, உசார் பார்ட்டி. 😂
பி.கு. கோசனின் கண்ணில், இந்தப் பதிவு படக் கூடாது. 😜 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனா...  மீண்டும் பிராந்தியத்தில், பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. - கூட்டமைப்பு குற்றச்சாட்டு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும்  கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

சீன கண்காணிப்பு கப்பல் யுவான்வாங்-5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்தது மீண்டும் பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மற்ற நாடுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டிகளில் தலையிடுவதில்லை என்றாலும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இராணுவப் பிரசன்னம் இந்தியாவுக்கு நியாயமான பாதுகாப்புக் கவலையை அளிக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னத்திற்கு இடம் கொடுப்பதன் மூலம் இலங்கை அதை வலியுறுத்தக் கூடாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்வரும் 11ஆம் திகதி வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயற்கைக் கோள்கள், ரொக்கெட்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளைக் கொண்ட இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க இம்மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ள கப்பல் (யுவான் வாங் – 5) 17ஆம் திகதி வரை நங்கூரமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2022/1293262

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.