Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் தேசிய இன பிரச்சினையை தீர்க்க தமிழ் தலைவர்கள் முயற்சிக்கவேண்டும்- விக்கிரமபாகு கருணாரத்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் தேசிய இன பிரச்சினையை தீர்க்க தமிழ் தலைவர்கள் முயற்சிக்கவேண்டும்- விக்கிரமபாகு கருணாரத்ன

Digital News Team 2022-07-25T14:43:59 
ரொஷான் நாகலிங்கம்

தேசிய இன பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியப் பிரச்சினை தொடர்பான தீர்வில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைகாணாமற் போனவர்கள் தொடர்பான நம்பிக்கை,  இராணுவ கையிருப்பில் உள்ள நிலங்களை மக்களுக்கு மீள  கையளித்தல் போன்ற விடயங்களை தனது அதிகாரத்தை கொண்டு தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரோத செயற்பாடுகள் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்து புதிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர்  விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.   

கேள்வி:நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருப்பது தொடர்பாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்இன்று இலங்கையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற தென்னிலங்கை தலைவர்களில் இனவாதமற்ற ஒரு தலைவராக ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார். தேசிய இன பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் கொண்ட ஒரு தலைவராகவும்  அவர் காணப்படுகின்றார். இத்தகைய அடிப்படை அம்சங்களை கருத்திற் கொண்டு நாம் 2015 இல் அவருடன்  இணைந்து இனவாதத்திற்கு எதிராகவும் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கவும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை பலப்படுத்தவும் ஒன்றிணைந்து செயற்பட்டோம்.எம்முடன் இடதுசாரி அமைப்புக்கள், தொழிற்சங்க அமைப்புக்கள்சிவில் செயற்பாட்டாளர்கள் என அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து செயற்பட்டனர். இதன்  விளைவாக 2015 ஜனவரி ஆம் திகதி நாட்டில் அமைதி புரட்சி ஏற்பட்டதுஆனாலும் பேரினவாதம் மிக மூர்க்கத்தனத்துடன் செயற்பட்டு எதிர்ப்புரட்சியை உருவாக்கி 2019 இல் கோதாபய ராஜபகஷவை பதவியில் அமர்த்தினர். இன்று அவர் விரட்டப்பட்டுள்ளார்.ஆனால் அவருக்கு இனவாதத்தை போதித்தவர்கள் நல்லவர்கள் போல் நடமாடுகின்றனர்.

கேள்வி:ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தாங்கள் முன்வைக்கும் ஆலோசனைகள்  என்ன?

பதில்: இந்த நாட்டின் மக்கள் மிக மோசமான அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் துயரைப் போக்க உடனடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்மேலும் தமிழ் தேசியப் பிரச்சினை தொடர்பான தீர்வில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் தமிழ் அரசியல்  கைதிகளின் விடுதலைகாணாமற் போனவர்கள் தொடர்பான நம்பிக்கைஇராணுவ கையிருப்பில் உள்ளநிலங்களை மக்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களை தனது அதிகாரத்தை கொண்டு தீர்க்க முயற்சிகளை மேறகொள்ள வேண்டும்மேலும் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரோத செயற்பாடுகள் தொடர்பான மக்களின்  எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்து புதிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கேள்வி:காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்  மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக

பதில்நவசமசமாஜக்கட்சி பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறது. இருதரப்பினரும் மேற்படி விடயங்கள்  தொடர்பாக கலந்துரையாடிஒரு தீர்மானத்துக்கு வந்திருக்க வேண்டும். காலி முகத்திடல் போராட்டக் களத்தில் பல தரப்புக்கள் காணப்படுகின்றனஎனவே ஒருமனதான தீர்மானத்தை எட்டுவது சிரமமான விடயமாகும்.எது எப்படியோ போராட்டக்காரர்களை வெளியேற்ற பாதுகாப்பு தரப்பினர் எடுத்த அணுகுமுறை மனிதாபிமானமற்றது என்றே நாம் கருதுகின்றோம்.

கேள்வி:தமிழ் தலைவர்களுக்கு தாங்கள் முன்வைக்கும் ஆலோசனை

பதில்:தென்னிலங்கை அரசியல் களத்தில் சம்பந்தப்படாமல் தனித்த பயணத்தில் தமிழ் தலைவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.மேலும் தமக்குள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் இவர்கள் தயார் இல்லாத நிலையில் உள்ளனர். தமிழ் மக்களுக்கான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற போராட்ட வழிமுறைகளை தவிர்த்து வேறு ஒரு பாதையிருப்பதாக தெரியவில்லை. இவர்கள் போராட்ட செயற்பாடுகளிலும் நாட்டமில்லாத நிலையில் தென்னிலங்கையில் தமக்குரிய நேச சக்திகளுடன் இணைந்து போராடுவதிலும் தயக்கம் காட்டுகின்றனர். வெறும் ஊடக சந்திப்புக்கள் மூலம் தமிழ்  மக்களுக்கான விடுதலையை ஒரு போதும் எட்ட முடியாது.

கேள்வி:தென்னிலங்கை எதிர் அணியினர் தொடர்பாக என்ன கூற விரும்புகின்றீர்கள்

பதில்:சகல எதிர் அணியினரும் பிரச்சினையை கூறுகின்றார்களே தவிர எவரும் அதற்கான தீர்வை முன்வைக்கவில்லைநாட்டின பொருளாதார நிலையை மீள கட்டியெழுப்புதல் தொடர்பாக இவர்களின் அறிவு ஞானம் காலம் கடந்த நிலையில் காணப்படுகிறது.தமிழ் தேசிய பிரச்சினை தொடர்பில் மெளனத்தைக் கடைப்பிடிக்கின்றனர்எல்லோரும் ரணில் விக்ரமசிங்கவை தாக்குவதில் ஒத்த நிலையில் உள்ளனர். இன்றைய இலங்கையில் அரசியல் பொருளாரதார பிரச்சினைகளுக்கான தீர்வில் எதிரணியினரிடம் விடையில்லாததால் ரணில் விக்ரமசிங்கவின்  புதிய ஜனனம் உருவாகியுள்ளது. இதன்  மூலம்  நாடு மாற்றமடையுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.Thinakkural.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
57 minutes ago, nochchi said:

ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் தேசிய இன பிரச்சினையை தீர்க்க தமிழ் தலைவர்கள் முயற்சிக்கவேண்டும்- விக்கிரமபாகு கருணாரத்ன

I do not need to talk about that' - Sampanthan | Tamil Guardian

விக்ரம் உமக்கு உது தேவையில்லாத வேலை. வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரும் 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் தேசிய இன பிரச்சினையை தீர்க்க தமிழ் தலைவர்கள் முயற்சிக்கவேண்டும்- விக்கிரமபாகு கருணாரத்ன

தென்னிலங்கை  இடதுசாரிகளின் தமிழர்களின் மனநிலையை நன்கு அறிந்தவர் ஆனால் பாவம் தமிழர் எதிர்ப்பு இனவாதம் எங்கிருந்து கிளம்புகிறது என்பதை இந்த கேம்ப்ரிட்ஜ்ல் படித்த விரிவுரையாலரால் புரிந்து கொள்ள முடியவில்லை போல் உள்ளது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.