Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாய்லாந்தில்... 17 இடங்களில், குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள்

தாய்லாந்தில்... 17 இடங்களில், குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள்.

தெற்கு தாய்லாந்தில் இன்று 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்களினால் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

546d074b96c3ab8ece926652b70001648747920e-16x9-x0y0w1280h720.jpg

 

436ad23e14c1d926355d7eee78be6ce34353aba5.webp

220817021940-02-thailand-bomb-arson-attacks-0817-exlarge-169.jpg

220817021733-01-thailand-bomb-arson-attacks-0817-exlarge-169.jpg

S2O5SU4Q45OLNKODWS3DJTJL3A.jpg

J3PJMGR3NVPQNILW2HZLJAWX4M.jpg

PCM7BCSYQJMOJC4ZSW42QXFBMM.jpg

https://athavannews.com/2022/1295076

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்தில் பதற்றம்: 17 இடங்களில் குண்டுவெடிப்பு

தென் தாய்லாந்தில் புதன்கிழமை (17 ) குறைந்தது 17 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்களில் எழுவர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதல்கள் செவ்வாய்க்கிழமை (16 ) பின்னிரவுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டன. 

அவற்றில் சில குண்டு வெடிப்புத் தாக்குதல்கள், தீயை ஏற்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாநிலங்களில் உள்ள அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள், ஒரு பெட்ரோல் நிலையம் ஆகியவற்றைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் அந்நாட்டு பொலிஸாரும் இராணுவமும் வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

தாய்லாந்தின் தெற்குப் பகுதிகள் சிலவற்றில் பல ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.tamilmirror.lk/செய்திகள்/தயலநதல-பதறறம-17-இடஙகளல-கணடவடபப/175-302501

  • கருத்துக்கள உறவுகள்

நம்மாளு போன நேரம் அப்படி 

கோத்தா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நம்மாளு போன நேரம் அப்படி 

கோத்தா

அந்த நாட்டையும் றோட்டுக்கு கொண்டு வராமல் தூங்கார் எங்கள் கோத்தா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அந்த நாட்டையும் றோட்டுக்கு கொண்டு வராமல் தூங்கார் எங்கள் கோத்தா.

சிங்கப்பூர்… இரண்டு கிழமை விசா கொடுத்த படியால், தப்பீட்டுது.
தாய்லாந்து… மூன்று மாத விசா கொடுத்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

சிங்கப்பூர்… இரண்டு கிழமை விசா கொடுத்த படியால், தப்பீட்டுது.
தாய்லாந்து… மூன்று மாத விசா கொடுத்திருக்கு.

அவர்களுக்கு புரிந்த படியால் தான் அதுக்கு மேல தூக்கி எறிந்து விட்டார்கள் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அவர்களுக்கு புரிந்த படியால் தான் அதுக்கு மேல தூக்கி எறிந்து விட்டார்கள் 😂

இந்தியாவும், சீனாவும்… கெட்டிக்காரர். ஆளை… உள்ளுக்கே எடுக்கவில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்மாளு போன நேரம் அப்படி 

கோத்தா

ஓவரா ரிலாக்ஸ்ட் ஆக வேணாம். ஆள் திரும்பி வருது தெரியும்தானே🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஓவரா ரிலாக்ஸ்ட் ஆக வேணாம். ஆள் திரும்பி வருது தெரியும்தானே🤣

பல்லு புடுங்கப்பட்ட பாம்பு என்று நாம நினைக்கலாம்???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

பல்லு புடுங்கப்பட்ட பாம்பு என்று நாம நினைக்கலாம்???

அதே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.