Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச தினம் இன்று ! சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச தினம் இன்று ! சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்கள்

By VISHNU

29 AUG, 2022 | 07:25 PM
image

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று செவ்வாய்க்கிழமை (30), சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் மூலம் தமக்கான நீதி வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் வடக்கு - கிழக்கின் 8 மாவட்டங்களிலும் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் இறுதிக்கப்பட்டப்போரின்போது காணாமலாக்கப்பட்ட தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் பல வருடங்களாகத் தொடர்ச்சியாகக் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

குறிப்பாக வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியவகையில் மாபெரும் போராட்டங்கள் நடாத்தப்பட்டிருக்கின்றன. 

அதன்படி இன்று செவ்வாய்கிழமை வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய 5 மாவட்டங்களிலும் கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களிலும் கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்தார்.

வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதுடன் அவ்விசாரணைகள் மூலம் தமக்கான நீதியைப் பெற்றுத்தரவேண்டும் என்று வலியுறுத்தியும் இனிவருங்காலங்களில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளகப்பொறிமுறைகள் எவற்றையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சுட்டிக்காட்டியுமே இக்கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 அதேவேளை வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் கவனயீர்ப்புப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் (29) 2000 நாட்கள் பூர்த்தியடைந்துள்ளது.

எனவே அதனுடன் இணைந்ததாக வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையும் முன்னிட்டு இன்று முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் ஏனைய போராட்டங்களை விடவும் விசேடமானதாக அமையும் என்றும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்தார். 

அதன்படி முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பிலும், கிளிநொச்சியில் கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாகவும், யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாகவும், வவுனியாவில் குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவும், திருகோணமலையில் பிரதேச செயலகம் முன்பாகவும் ஏனைய மாவட்டங்களில் வழமையான இடங்களிலும் இன்றைய தினம் மேற்படி கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/134624

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்!

By VISHNU

30 AUG, 2022 | 04:54 PM
image

கே. குமணன்

முல்லைத்தீவில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  இன்று (30) புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்றுள்ளது.

d1c863f7-2686-4db1-b7b0-1ad1a2016a22.jpg

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம் இன்றோடு 2000 நாட்களை எட்டுகின்றதை அடையாளப்படுத்தும் வகையிலும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

f1035acf-c320-4d3f-a684-ff79f53e3736.jpg

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி புதுக்குடியிருப்பு நகரம் வரை சென்று அங்கு நிறைவடைந்தது. 

c40dca15-86f6-4ce5-bb51-d6ce0ee7e40e.jpg

இந்த பேரணியில் காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன், சிவநேசன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/134700

cf62f7bf-0f65-4872-a0cc-38848182f302.jpg

af1b24d8-47ca-4875-a4c8-38fdf2d9e803.jpg

c5a76794-35f7-48e8-b5b5-7e1f2ce51dfd.jpg

a25d7aed-1f51-4b05-b88a-371298474212.jpg

a266ef57-8269-4492-8fbe-7024402c5503.jpg

1466d665-79ad-48d1-a1c4-ff572c15e9c3.jpg

282a38cb-dffe-47c7-8812-806b0a8bbf08.jpg

990e128a-a6ba-4586-8b16-084a67b6c0f7.jpg

78c576dd-5303-4bb2-8e64-787b1a1878cf.jpg

84a157a1-a199-4ce0-9cb1-fdc31cd5844f.jpg

6f4173ef-7aef-4d05-92f6-eeb1cea4f205.jpg

31f25231-66fd-4404-adf4-9f94a5357f4b.jpg

1dac530a-fd40-4943-b08f-60e8c0d0c271.jpg1d9d7872-db16-4165-8b55-04e6a63da787.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்ட பேரணி

By VISHNU

30 AUG, 2022 | 04:52 PM
image

(கே.பி.சதீஸ்)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியாவில் பேரணி ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. 

IMG_20220830_112511_2.jpg

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதி கோரியே குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. 

Videoframe_20220830_131043_com.huawei.hi

குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு வவுனியா நகரின் ஊடாக பழையபேருந்து நிலையத்தினை அடைந்திருந்ததுடன் அவ்விடத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

IMG_20220830_112435.jpg

இதேவேளை குறித்த பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் படங்களை தாங்கியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர். 

IMG_20220830_104909.jpg

இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன் மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

IMG_20220830_104716.jpg

IMG_20220830_104649.jpg

IMG_20220830_103953.jpg

IMG_20220830_103921.jpg

IMG_20220830_103545.jpg

https://www.virakesari.lk/article/134697

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி ஏராளன் ........! 

  • கருத்துக்கள உறவுகள்

தமது அன்புக்குரியவர்களின் திருவுருவப்படங்களை ஏந்தியிருக்கம் காட்சியைப் பார்க்கும்போது கண்ணீர்வருவதைத்தடுக்க முடியவில்லை. தற்பெருமை பேசியவாறு கையாலாகதவர்களாக இருக்கின்றோம் உறவுகளே மன்னித்துவிடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.