Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிட்னிகோசிப் 28

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தமிழ் மாணவர்களிற்கு சில போட்டிகளை அவுஸ்ரெலியா தமிழ்பட்டாதரிகள் சங்கம் நடத்தியது (அவுஸ்ரேலிய தமிழ் பட்டமில்லாத சங்கதிற்கு நான் தான் தலைவர்) :P அதில் எழுதுபோட்டி,உரையாடல்போட்டி,வ

முதலில் எனக்கு ஒரு டவுட் அதாவது அவுஸ்ரெலிய தமிழ் பட்டாதரிகள் சங்க ஆட்கள் எல்லாம் அவுஸ்ரெலியாவில தான் பட்டம் பெற்றவை ......................பார்த்தா சிலர் தான் அப்படி பிறகு எப்படி அது அவுஸ்ரெலிய பட்டாதாரிகள் சங்கம் என்று வரும் இதை முதலில் எனக்கு தெளிவுபடுத்துங்கோ................... :lol:

அது பட்டம் இல்லாத சங்கம் தாங்கள் நடத்துறீங்களோ புத்து மாமா நானும் வந்து ஜோயின் பண்னுவா :P ..........ஆமாம் சரியா சொன்னீங்க ஊரில டாக்டர்மார் எவ்வளவு பில்டப் காட்டூவீனம் இங்கே வந்த புதிதில் வைத்தியசாலைக்கு போன போது நர்ஸ் எல்லாம் இருக்க தக்க டாக்டர் வந்து கூப்பிட்டு கொண்டு போக எனக்கு ஆச்சரியாம இருந்தது பிறகு பழகிட்டு.........இந்த முறை கட்டாயம் ஊரிலையும் வந்தா அரைவாசி பிரச்சினை குறையும்....நான் சொன்ன பிரச்சினை நான் பெரிசு நீ பெரிசு என்ற பிரச்சினை............. :o

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன பிள்ளையளுக்கு அப்பிடி சொல்லி வழக்கிறதிலை தப்பு இல்லை எண்டு தான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் வழர்ந்து 9ம் 10ம் வகுப்புகளுக்கு வரும்போது அவர்களுக்கு பிடித்த பாடத்தை பொறுத்து சில துறைகளை சிபார்சு செய்யலாம்.

சின்ன பிள்ளையளா இருக்கும் போது அப்படி சொல்லி வளர்த்தால் அவர்களுக்கு ஒரு இலக்கை நோக்கி தங்கள் சிந்தனை செயற்பாடுகளை நகர்த வேண்டும் என அறிவார்கள். அப்படி இல்லாது விடின், அவர்களின் சிந்தனைகள் விசித்திரமாக இருக்கும் (அதற்காக அப்பிடித்தான் இருப்பர்கள் எண்டு இல்லை, ஆனால் விசித்திரமான சிந்தனை). உதாரணத்துகு எனக்கு தெரிந்த ஒரு 5 வயது சிறுவன் சொல்லுவான், தான் வளர்ந்து ice cream வான் வேண்டி ஓடுவானாம், காரணம் அவனது பெற்றோர் அவனை அதிகம் ice cream உண்ண விடுவதில்லை. இன்நெரு சிறுவன் வளர்ந்து McDonald's இல் வேலை செய்வானாம் காரணம் அதிகம் happy meal சாப்பிடலாமாம்.

அதனால அவர்களுக்கு உள்ள தெரிவுகளை அறியப்படுத்தும் போது தகுதியான தெரிவுகளை அறியப்படுத்து வதில் தப்பில்லையே. இலங்கையில் மட்டுமல்லாது பல நாடுகளில் வைத்திய தொழில் பிரபல்யம். இங்கு கனடாவில் மருத்துவக்கல்லூரிக்கு தெரிவாது இலகுவான விடயம் அல்ல. அப்பிடி தெரிவானாலும் குறைந்தது 7-8 வருடங்கள் எடுக்கும். இங்கு வைத்தியர்களுக்கு மிகவும் தட்டுபாடு அதனால் நல்ல டிடான்ட்.

இலங்கையிலும் மருத்துவரா வரவேனும் எண்டு பிள்ளையளுக்கு சொல்றதால இங்கை சொல்லக்கூடாது எண்டில்லை. அவர்களுக்கு உள்ள தெரிவுளை தெரிவிக்கும் போது சிறந்தாதாக தெரிவிக்கலாம். ஆனால் அவர்கள் வளரும் போது திணிக்காது அவர்கள் விரும்பிய துறையை தெரிவு செய்ய உதவ வேண்டும்.

Edited by Sabesh

எனக்கு தெரிந்த ஒரு 5 வயது சிறுவன் சொல்லுவான், தான் வளர்ந்து ice cream வான் வேண்டி ஓடுவானாம், காரணம் அவனது பெற்றோர் அவனை அதிகம் ice cream உண்ண விடுவதில்லை. இன்நெரு சிறுவன் வளர்ந்து McDonald's இல் வேலை செய்வானாம் காரணம் அதிகம் happy meal சாப்பிடலாமாம்.

ஹாஹா. சின்னப்பிள்ளைகள் என்றாலே உப்படித்தானே. நானும் உப்படித்தான். ஹீஹீ

ஊரில டாக்குடர்,எஞ்சினியர்,வக்கீல்

கணக்காளர் இவைகள் தான் பிரபலமான உத்தியோகம்,புலத்தில் மட்டும் டாக்குத்தர் உத்தியோகம் மட்டும் தான் சிறந்து என்று நாங்களே சிறுவர்களிற்கு புகட்டுகிறோம்,விஞ்ஞானிகள்,ஆர

??ய்ச்சியாளர்கள் என்று பல நல்ல தொழில்கள் இருந்தும் எம்மவர்களிற்கு இந்த டாக்குத்தர் தொழில் தான் பெரிசா தெரியுதுங்கோ

புத்து மாமா வைத்தியர் சேவை உன்னதமானது என நினைக்கிறார்கள்.

மருத்துவர் கடவுளுக்கு சமம என நினைப்பவர்களும் உளர். சின்ன வயசில் நினைப்பது பெரிதான பின் நடக்கும் என்பது அரிது. ரென்சன் ஆகாதீங்க.

அதுசரி உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் என்னவாக வருவார்கள்?

புத்தன் கூறியது மிகவும் சரியே. எமது தமிழ்ப் பெற்றோர்களில் பலருக்கு டொக்டர், இன்ஞினியர், எக்கவுண்டனைத் தவிர வேறு தெரியாது. வளர்ந்து வரும் எமது இளைய சமுதாயமும் அவர்களின் வழியையே பின்பற்றி வருகிறார்கள். சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும் துறையில் சிறந்து விளங்கவேண்டுமெனச் சொல்லி வருவதே சிறந்தது. இப்போதிருக்கும் தலைமுறையினர் தமது வாழ்நாளில் 2-3 வேலைகளை மாற்றுகிறார்கள் எனவும் வளர்ந்து வரும் தலைமுறை, தங்கள் வாழ்க்கையில் 4-5 தடவைகள் தமது துறைகளை மாற்றுவர் எனவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் தேர்ந்தெடுத்த துறை, அவர்களுக்குப் பிடிக்காமல் போவதேயாகும். முக்கியமாக தமிழ்ப்பிள்ளைகளுக்கு என்னென்ன துறைகள் இருக்கிறதென முழுமையாகத் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும், அத்துறைகளைச் சேர்ந்தவர்களுடனான பரிச்சயம் கிடைப்பதில்லை. இதனால், அத்துறைகளிலுள்ள நன்மை, தீமைகள் தெரியவருவதில்லை.

வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற்றவர்கள், கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தி, தங்கள் துறைகளைப் பற்றி எடுத்துரைப்பதன் மூலம் எமது இளைய சமுதாயத்தினர் வௌ;வேறு துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கலாம். இதனை தனிக்கருத்தரங்குகளில் மட்டும் செய்யாமல், தமிழ்ப்பாடசாலைகளில் நடக்கும் நிகழ்வுகளில் நடத்தினால் கூடிய பயனைத் தரும். பெற்றோருக்கும் இதனைப் பற்றிய தெளிவு வரும். முதலில் பெற்றோரின் அறியாமையைப் போக்கவேண்டும். பெற்றோர் தமக்குத் தெரிந்ததைத் தான் பிள்ளைகளுக்குச் சொல்லமுடியும். அவர்களுக்கே தெரியாமல் இருக்கும்போது, அவர்கள் என்ன செய்யமுடியும்? ஆனால் வளர்ந்து வரும் சமுதாயம் தமது சிறுவயதில் இப்படியான எண்ணங்கள் இருந்தாலும், வளர்ந்த பின்னர், தமக்குப் பிடித்த பாடங்களையே கூடுதலாகப் படிக்கிறார்கள். இருந்தாலும் துறைகள் பற்றிய அவர்களுடைய தெளிவின்மையால் ஒரு குறுகிய துறைகளுக்குள்ளேயே இன்னும் நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

9 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்தானே அப்படித்தான் சொல்வர்கள் பெற்றோரின் மூக்கு நுழைப்பு நிறையவே இருக்கும்.

15 வயதைக் கடக்கட்டும் இந்த நிலைமை மாறிவிடும் . தாங்களே தங்கள் விருப்பத்தின் பேரில் படிப்பைத் தொடர்வார்கள் தற்கால சிறுவர்கள்.

என்ன செய்வது டொக்டருக்கு படி படி எண்டு பெற்றோர் கூறுவது - டொக்டராய் வராட்டியும் (apo)அப்போவாவது வரட்டும் எண்டுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபேஷ்,வெண்ணிலா,ஜம்முபேபி,தமி

Edited by இணையவன்

சின்ன பிள்ளைகளை இதை தான் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கட்டளை இடுவது உங்களை பொறுத்தவரை சிறந்தது என்று நினைகிறீங்களா நிலா அக்கா............ :D

"வளரும் பிள்ளையை சிறுவயது விளையாட்டில் தெரியும்" இப்படி சொல்லுவார்களே. உது தெரிந்துதான் சில வீட்டில் பெண் குழைந்தைகளுக்கு பொம்மை வாங்கி கொடுப்பார்கள் விளையாட. ஆண்களுக்கு கார் ஸ்டெதர்ஸ்கோப், கார் இப்படியான விளையாட்டு பொருட்கள் வாங்கி கொடுக்கிறவர்களோ என்னமோ

ஆனால் சிறு வயதில் சொல்லிக்கொடுப்பது மனசில் ஆழ பதியும் என்பார்கள். அப்படி நினைச்சுதான் பெற்ரார் அப்படி சொல்லிக்கொடுக்கிறது. ஆனால் பிள்லைகள் வளர்ந்த பின் நண்பர்கள் சூழல் இபப்டி சுற்றுப்புறம் மாத்திடுமே. :P

"வளரும் பிள்ளையை சிறுவயது விளையாட்டில் தெரியும்" இப்படி சொல்லுவார்களே. உது தெரிந்துதான் சில வீட்டில் பெண் குழைந்தைகளுக்கு பொம்மை வாங்கி கொடுப்பார்கள் விளையாட. ஆண்களுக்கு கார் ஸ்டெதர்ஸ்கோப், கார் இப்படியான விளையாட்டு பொருட்கள் வாங்கி கொடுக்கிறவர்களோ என்னமோ

ஆனால் சிறு வயதில் சொல்லிக்கொடுப்பது மனசில் ஆழ பதியும் என்பார்கள். அப்படி நினைச்சுதான் பெற்ரார் அப்படி சொல்லிக்கொடுக்கிறது. ஆனால் பிள்லைகள் வளர்ந்த பின் நண்பர்கள் சூழல் இபப்டி சுற்றுப்புறம் மாத்திடுமே. :P

அப்ப பேபிகளிற்கு ஸ்டெலஸ்கொப் வாங்கொ கொடுத்தா டாக்டர் ஆகிடுவீனமா அக்கா..............ஆனாலும் பெற்றோர்கள் வறுபுறுத்தி படிப்பிப்பதால் எதுவித நன்மையும் இல்லை என்று தான் நினைக்கிறேன்..........அந்த பாடத்தில் சலிப்பு அடைவார்கள் என்று நினைகிறேன்.......... :P ;)

ஆனா சுற்றுபுறம்,நண்பர்கல் எல்லாம் மாற்றும் என்று சொன்னது சரி ஆனா என்னை சொல்லவில்ல தானே நிலா அக்கா.......... ;)

சரி... அவர்களின் ஆசை அப்படியே இருக்கட்டும். ஆனால் அவுஸ்திரேலியாவில் டாக்குத்தராக வருவது என்பது அவ்வளவு இலகுவான காரியம் இல்லையே! பொதுவாக எல்லா நாடுகளிலும் இதே நிலமை தான். எனது மருமகளுடன் உரையாடியபோது [அவ படிப்பில் மிகவும் கெட்டிக்காரி] அவுஸ்திரேலியா பல்கலைக் கழகங்களில் மருத்துவத் துறையில் அனுமதி பெறுவது எவ்வளவு கடினம் என அறிந்துகொண்டேன்.

பிள்ளை டாக்குத்தராக வரவேண்டும் என நினைப்பது எமது சமூகத்தில் மட்டுமல்ல பொதுவாக எல்லா சமூகங்களிலும் இந்தநிலமை காணப்படுகின்றது.

ஆனால், டாக்குத்தராக வாழ்பவர்களில் எத்தனை பேர் உண்மையில் தமது வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கின்றார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.

குருவே டாக்குட்டராக வருவது மட்டும் தான் கடினமான காரியம் என்று சொல்ல முடியாது ஏனைய துறைகளும் கடினம் என்பது என் பார்வை...................ஒவ்வொருவருடைய விருப்பத்தை பொருத்து தான் தேர்வு அமைய வேண்டும்..............பொறியியல் படிக்க விருப்பமான ஒருவனை டாக்டருக்கு படிக்க வறுபுறுத்தினா அவனால் அது முடியாது அதை போல் வற்புறுத்தி ஒன்றும் செய்ய முடியாது என்பது என் கருத்து................

அத்துடன் அவுஸ்ரெலியாவை பொறுத்தவரை அநேக வெள்ளையர்கள் பிற பாடங்களிற்கி அனுமதி கிடைத்தாலும் அதை விடுத்து அவர்களிற்கு பிடித்த ஜேர்னலிசம் அப்படி என்று படிபார்கள் ஆனா இந்த படிப்புகள் எமது சமூகத்தில் ஒரு கீழ்தரமான பார்வையில் பார்கிறார்கள் என்றே சொல்லுவன்...........ஆனால் அவர்கள் அதனை விருப்பமாக படிகிறார்கள் என்று கூறலாம்............ :D

  • கருத்துக்கள உறவுகள்

குருவே டாக்குட்டராக வருவது மட்டும் தான் கடினமான காரியம் என்று சொல்ல முடியாது ஏனைய துறைகளும் கடினம் என்பது என் பார்வை...................ஒவ்வொருவருடைய விருப்பத்தை பொருத்து தான் தேர்வு அமைய வேண்டும்..............பொறியியல் படிக்க விருப்பமான ஒருவனை டாக்டருக்கு படிக்க வறுபுறுத்தினா அவனால் அது முடியாது அதை போல் வற்புறுத்தி ஒன்றும் செய்ய முடியாது என்பது என் கருத்து................

அத்துடன் அவுஸ்ரெலியாவை பொறுத்தவரை அநேக வெள்ளையர்கள் பிற பாடங்களிற்கி அனுமதி கிடைத்தாலும் அதை விடுத்து அவர்களிற்கு பிடித்த ஜேர்னலிசம் அப்படி என்று படிபார்கள் ஆனா இந்த படிப்புகள் எமது சமூகத்தில் ஒரு கீழ்தரமான பார்வையில் பார்கிறார்கள் என்றே சொல்லுவன்...........ஆனால் அவர்கள் அதனை விருப்பமாக படிகிறார்கள் என்று கூறலாம்............ :unsure:

வற்புறுத்தினா தப்புதான். கறுப்பி சொன்ன மாதிரி அத இங்கை சரிப்பட்டு வராது. ஊரில தான் பிள்ளை ஏ.எல் இல கலைத்துறை படிக்க விரும்பினாலும் பெற்றோரின் வற்புறுத்தலினால் விஞ்ஞானத்துறை படிப்பினம். இங்கை என்னத்தை தான் பெற்றோர் சொன்னாலும் பிள்ளையள் ஒரளவுக்கு தாங்கள் விரும்பியதை படிப்பார்கள்.

என்னதான் விருப்பத்திற்காக மட்டும் தான் பட்டபடிப்பு படிக்கிறேன் எண்டு விதண்டாவாதம் சொன்னாலும் தொழில் வாய்புக்களைப் பற்றி ஆராயாமல் படிப்பது முட்டாள் தனம் என்பது எனது கருத்து. எம்மவர் சிலர் sociology போன்ற துறைகளில் படிப்தை அறிந்திருக்கிறேன். அவர்களின் கருத்து மற்றைய தமிழ் ஆக்கள் படிக்காத வித்தியசமா படிக்க வேணுமாம். இதுகும் விதண்டாவாதமே.

வித்தியாசமான துறைகளைத் தேர்ந்தெடுப்பது விதண்டாவாதம் அல்ல. ஒருசிலர் அப்படி இருக்கலாம். அதோடு, இப்போது புலம்பெயர் நாடுகளில் படித்தவர்களுக்கு ஒவ்வொரு துறையைப் பற்றியும் அநேகமாகத் தெரிந்திருக்கும் (படித்து முடித்தபின்). அதன்பின்னர்தான், வேறு துறையை எடுத்துப் படித்திருக்கலாமோ என அங்கலாய்ப்பார்கள். ஒருசிலர், பிடிக்காவிட்டாலும் வாழ்க்கையில் செட்டிலாகவேண்டுமென்பதால் தொடர்ந்து அந்தத் துறையிலேயே பணியாற்றுவார்கள் அல்லது கிடைக்கும் வேலையில் அமர்ந்து விடுவார்கள். எனக்குத் தெரிந்த பலர், தாங்கள் படித்த துறையை விட வேறு துறையில்தான் வேலை செய்கிறார்கள். ஓரளவு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்ததும் அதிலேயே அமர்ந்து விடுகிறார்கள். இதற்குக் காரணம் சபேஸ் குறிப்பிட்டதுபோல, வேலைவாய்ப்பைப் பற்றித் தெரியாமல் துறைகளைத் தேர்ந்தெடுப்பதுதான். சில பிள்ளைகள், பெற்றோரின் விருப்பத்திற்காக அந்தத் துறையைப் படித்தாலும், தமது சொந்தக் காலில் நிற்கும்போது, அவர்கள் திரும்ப தாம் விரும்பிய துறையைப் படிப்பதும் நிகழ்ந்து வருகிறது.

வெளிநாடுகளில் டொக்டராக வருவதற்கான மேல்படிப்பிற்குக் குறைந்தது பத்துவருடங்களாவது வேண்டும். அதிலும் அந்தந்த நாடுகளிலேயுள்ள பல்கலைக்கழகங்களில் படிப்பது மிகவும் கடினம். பலர், கரிபியன் தீவுகளுக்குச் சென்றுதான் படிக்கிறார்கள். அதிலும் பலர் தேறிவருவதில்லை. அங்கு தனியாக இருந்து படிப்பதால், உல்லாச கேளிக்கைகள், போதைவஸ்து போன்றவற்றுக்கு அடிமையாவதே அதிகம் நிகழ்கிறது.

என்னைப் பொறுத்தவரை, வளர்ந்துவரும் பிள்ளைகளை பல துறைகளுக்கும் அவர்களை அறிமுகப்படுத்தவேண்டும். அவர்களுக்கு எந்தத்துறை மிகவும் பிடித்திருக்கிறதோ, அந்தத் துறையில் ஊக்குவிப்பதே சிறந்ததாகும். அதனை விடுத்து, பெற்றோரின் விருப்புகளை அவர்களின்மீது திணிப்பதன் மூலம், அந்தப் பிள்ளையின் மனதை நோகடிப்பது மட்டுமின்றி, அவரின் திறமையையும் மழுங்கடித்து, படிப்பின்மீது வெறுப்பு வரச் செய்கின்றார்கள்.

வற்புறுத்தினா தப்புதான். கறுப்பி சொன்ன மாதிரி அத இங்கை சரிப்பட்டு வராது. ஊரில தான் பிள்ளை ஏ.எல் இல கலைத்துறை படிக்க விரும்பினாலும் பெற்றோரின் வற்புறுத்தலினால் விஞ்ஞானத்துறை படிப்பினம். இங்கை என்னத்தை தான் பெற்றோர் சொன்னாலும் பிள்ளையள் ஒரளவுக்கு தாங்கள் விரும்பியதை படிப்பார்கள்.

என்னதான் விருப்பத்திற்காக மட்டும் தான் பட்டபடிப்பு படிக்கிறேன் எண்டு விதண்டாவாதம் சொன்னாலும் தொழில் வாய்புக்களைப் பற்றி ஆராயாமல் படிப்பது முட்டாள் தனம் என்பது எனது கருத்து. எம்மவர் சிலர் sociology போன்ற துறைகளில் படிப்தை அறிந்திருக்கிறேன். அவர்களின் கருத்து மற்றைய தமிழ் ஆக்கள் படிக்காத வித்தியசமா படிக்க வேணுமாம். இதுகும் விதண்டாவாதமே.

சபேசன் மாமா சொன்னது போல தொழில் துறைகல் தெரிந்து படிப்பது தான் காலதிற்கு சிறந்தது என்பது என்னுடைய கருத்தும்..............வித்தியாசமான துறைகளை தேர்தெடுக்கலாம் ஆனா அந்த துறையில் உள்ள வேலைவாய்புகள் உதாரணமாக நீண்டகாலத்தில் அந்த படிபிற்குள்ள தொழில் வாய்புகள் என்பவற்றை முக்கியம் கடைபிடிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.............. :D

பிள்ளைகள் விரும்பிய துறையை தான் படித்தாலும் பெற்றோர்கள் புலத்தில் இருப்பவர்களும் அவனை பாரு அவன் டாக்குட்டருக்கு படிகிறான் என்று அடிகடி கூறுவீனம் இதை நான் கண்டுகொண்டிருகிறேன் இது அந்த பிள்ளைக்கு எரிச்சலை விளைவிக்கும் வண்ணம் இருக்கும்....அதை பெற்றோர்கள் குறிப்பாக எங்கள் சமூகத்தில் அந்த பிரச்சினை கூடுதலாக இருகிறது அவர்கள் தவிர்க்கும் போது பிள்ளைகளுக்கு பூரண சுகந்திரம் கிடைக்கும் என்று நினைகிறேன்.......... :lol:

அதன்பின்னர்தான், வேறு துறையை எடுத்துப் படித்திருக்கலாமோ என அங்கலாய்ப்பார்கள். ஒருசிலர், பிடிக்காவிட்டாலும் வாழ்க்கையில் செட்டிலாகவேண்டுமென்பதால் தொடர்ந்து அந்தத் துறையிலேயே பணியாற்றுவார்கள் அல்லது கிடைக்கும் வேலையில் அமர்ந்து விடுவார்கள். எனக்குத் தெரிந்த பலர், தாங்கள் படித்த துறையை விட வேறு துறையில்தான் வேலை செய்கிறார்கள். ஓரளவு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்ததும் அதிலேயே அமர்ந்து விடுகிறார்கள்.

தமிழச்சி அக்கா சொன்னது போல படித்த துறையை விடுத்து வேறு துறையில் வேலையாற்றுவார்கள் இதை நான் அநேகரில் கண்டிருகிறேன்........தமிழச்சி அக்கா நீங்க எந்த துறை..........ஆனா எந்த துறையில படித்தாலும் கட் அடித்து போட்டு சுற்றுறது சுகம் தான் அக்கா.......... :P :P :lol: ;)

நானும் சிறுவயதாக (தாயகத்தில்) இருக்கும்போது, எக்கவுண்டிங் படிப்பதாகத்தான் இருந்தேன். யூனிக்குப் போவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருவர், புத்தன் கூறியது போலவே எனக்கும் கூறினார். அத்தோடு, பாடசாலையிலும் உளவியல் சம்பந்தமான ஒரு பாடத்தைப் படித்தபோது, உளவியல் நிபுணர்களின் கருத்துக்கள் பிடித்திருந்தது. அதில் மனம் மாறி, உளவியல் துறையில் படிக்கிறேன். எனக்கு அறிவுரை கூறியவருக்கு நான் எனது வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக நினைக்கிறேன். அவர் மட்டும் அதனைக் கூறாது விட்டிருந்தால், நானும் மற்றவர்களைப் போல்தான் இருந்திருப்பேன். அதிலும் ஒரு விடயம் என்னவென்றால், அவர் கூறியபோது 10 இளையவர்கள் இருந்தார்கள். அதில் நான் மட்டும்தான் வேறு துறையைத் தேர்ந்தெடுத்தேன். மற்றவர்கள் எல்லோரும் மேற்கூறிய துறைகளைத் தான் தேர்ந்தெடுத்தார்கள். இளைய சமுதாயம் மாறுவதற்கு இன்னும் ஒரு சகாப்தம் தேவையென நினைக்கிறேன்.

நீங்கள் உளவியல் துறையில் படிகிறீர்களா மிக்க நல்லது எம் சமூகத்தில் குறிபாக தமிழ் சமூகத்தில் இருந்து எத்தனை மாணவர்கள் இந்த துறையில் படிகிறார்கள் அக்கா..............உங்களை முதலில் பாராட்ட வேண்டும் வித்தியாசனாமன துறையை பயமில்லாம தெரிவி செய்து படிததிற்கு............பல மாணவர்களிற்கு முதல் பிரச்சினை பயம் அதாவது இந்த துறையில் படித்தால் சித்தி அடைவோமா என்ற ஒரு நிலைபாடு இருக்கும் இதை பற்றி நீங்க என்ன நினைகிறீங்க................. ;) B)

இளையசமூகம் என்று குறிபிடும் போது எம் சமூகம் என்று சொல்லாம் அத்துடன் ஆசியர்களையும் இந்த கட்டகரிகுள் கொண்டு வரலாம் என்று நினைகிறேன்.............மற்றைய இந்த பிரச்சினை குறைவு என்பது என் பார்வை........... :lol:

பாராட்டுக்கு நன்றி யமுனா. முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை என்பது எனது கருத்து. அதனால், கஸ்டப்பட்டாலும் படித்து முடிக்கவேண்டும் என்ற கொள்கையோடுதான் அதனைத் தேர்ந்தெடுத்தேன். நீங்கள் சொல்வதுபோல், உளவியல் கொஞ்சம் கடினம்தான். காரணம், அதற்கு ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். இதுவும் பயாலஜியும் ஒன்று என்றே கூறலாம். அத்தனை வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளன. அதோடு, உளவியல் டிகிரியோடு வேலை எடுப்பது கடினம். மாஸ்ரர்ஸ் அல்லது பிஹெச்டி செய்தால்தான் நல்ல வேலையில் அமர முடியும். விவாகரத்து, பெற்றோர், பிள்ளைகளுள் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால் உளவியல் இன்றியமையாத ஒன்றாக மாறிக் கொண்டு வருகிறது. உளவியலாளர்களிடம் சென்று வருவதென்பது தமிழ் சமூகத்தினரிடையே இப்போது சாதாரண விடயமாகிவிட்டது. தாயகத்தில்கூட இந்த நிலைமை வரத்தொடங்கிவிட்டது.

நான் இளைய சமுதாயம் எனக் குறிப்பிடுவது, எமது இளைய சமுதாயத்தையே. வேற்று இனத்தவரைப் பற்றிக் கதைப்பதாக இருந்தால் வேற்றினத்தவர் எனக் குறிப்பிடுவேன். தமிழிச்சியாக இருக்கும் நான் எனது கருத்தை தமிழர்களுக்குத் தமிழில் தரும்போது, எமது சமுதாயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதனால்தான், 'எமது' எனக் குறிப்பிடுவதில்லை.

உளவியார்களிடம் தற்போது தமிழ் சமூகம் சென்று வருவது பாராட்டதக்கது என்று நினைகிறேன் சில காலங்களிற்கு முன் எம்மவர்கள் அங்கே செல்ல கூட தயங்கிய நிலை இருந்தது,தற்போது இது ஒரு முன்னேற்றம் என்று தான் நினைக்கிறேன்.......... :(

தமிழிச்சியாக இருக்கும் நான் எனது கருத்தை தமிழர்களுக்குத் தமிழில் தரும்போது, எமது சமுதாயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதனால்தான், 'எமது' எனக் குறிப்பிடுவதில்லை

அத்துடன் உங்களின் இந்த கருத்து மிகவும் பிடித்து கொண்டது........... :D

உளவியலாளர்களிடம் செல்வது சிறந்ததுதான். ஆனால் எமது மக்கள், பிரச்சனைகள் முற்றிப் போனபின்பே உளவியலாளர்களிடம் செல்கிறார்கள். அதனால் அவர்களது பிரச்சனைகளுக்கு முடிவு கிடைப்பது குறைவு. கண்கெண்ட பின் சூரியநமஸ்காரம் செய்வது போலத்தான் இதுவும். இப்போது அவர்கள் செல்லத் தொடங்கியிருப்பது, நமது சமூகத்தில் பிரச்சனைகள் அதிகமாகி விட்டது என்பதையே காட்டுகிறது. மக்களிடையே வாழ்வைப் பற்றிய தெளிவின்மையே இதற்குக் காரணம் என நினைக்கிறேன். வளர்ந்து வரும் சமுதாயமாவது, தமது வாழ்மை நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அவர்கள் செல்லத் தொடங்கியிருப்பது, நமது சமூகத்தில் பிரச்சனைகள் அதிகமாகி விட்டது என்பதையே காட்டுகிறது.

தமிழச்சி அக்கா ஒரு கால கட்டத்தில் உளவியாளர்களிடம் போக தயக்கம் காட்டின எம் சமூகம் இன்று போகிற நிலைக்கு வந்திருக்கீனம் அது ஒரு நல்ல விடயம் தான் மற்றது உளவியாளர்களிடம் தற்போது எம்மவர்கள் வருவதை வைத்து சமூகத்தில் பிரச்சினை கூடிட்டு என்று கருதுகோள் எடுக்க முடியாது தானே ஏன் என்றா முந்தி தயங்கி இருந்தார்கள் இன்று அவர்கள் தயக்கம் இல்லாம வெளிவரும் போது பிரச்சினைகள் அதிகரித்த மாதிரி தெரியும் ஆனா முன்னரும் அப்படியான பிரச்சினைகள் எங்களை அறியாமல் நடந்திருக்கலாம் தானே இதை பற்றி என்ன நினைகிறீங்க...........இந்த துறையில் உங்களுக்கு அநுபவம் கூட இருக்கும் எனக்கு கொஞ்சம் கூட இல்லை ஆகையால் சில நேரம் எனது கருதுகோள் பிழையாகவும் இருக்கலாம்................ :lol:

யமுனா, வருத்தம் வந்தால்தான் வைத்தியரிடம் செல்வோம். அதுபோல்தான், எமக்குப் பிரச்சனைகள் வந்தால்தான் உளவியலாளர்களிடம் செல்வோம். தாயகத்தில், பிரச்சனைகள் இருந்தனதான். ஆனால், அங்கு விவாகரத்து, பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையேயான பிரச்சனைகள் என்பன பூதாகாரமாக இருந்ததில்லை. ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளில் இப்பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. இதற்குக் காரணம் மக்கள் வாழ்வைப் பற்றிய விழிப்புணர்வின்றி இருப்பதுதான். பிள்ளைகளுக்காக ஓடியோடி உழைக்கும் அவர்கள், பிள்ளைகளோடு செலவழிக்கும் நேரம் மிகவும் குறைவே. இதனால்தான் பெற்றோர்-பிள்ளைகளுக்குள் மனவேற்றுமை (misunderstandings) அதிகமாக உள்ளது. உளவியலாளர்களிடம் எம்மக்கள் செல்வதற்கு மேற்கூறியவையே முக்கிய காரணங்களாகின்றன.

பிள்ளைகளுக்காக ஓடியோடி உழைக்கும் அவர்கள், பிள்ளைகளோடு செலவழிக்கும் நேரம் மிகவும் குறைவே. இதனால்தான் பெற்றோர்-பிள்ளைகளுக்குள் மனவேற்றுமை (misunderstandings) அதிகமாக உள்ளது. உளவியலாளர்களிடம் எம்மக்கள் செல்வதற்கு மேற்கூறியவையே முக்கிய காரணங்களாகின்றன.

நீங்கள் சொல்வது போல வேலை என்று உழைத்து பிள்ளைகளை கவனிக்காம விடும் சந்தர்பம் அதிகம் நிச்சயமாக........இதனை தவிர்க்க என்ன நடவடிக்க மேற்கொள்ளளாம் புலத்தை பொறுத்தவரை வேலை பளு என்பதும் முக்கியமான ஒரு விடயம் இப்படியான இயந்திர வாழ்வில் பிள்ளைகள் மன உளைச்சளிற்கு உள்ளாகாம எவ்வாறு இரண்டையும் கொண்டு செல்லமுடியும் என்று நினைகிறீங்க?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.