Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture1.png

உலகின் அதிவேக சூப்பர்சோனிக் பயணிகள் விமானத்தை உருவாக்கும் "பூம் ஓவர்சர் சூப்பர்சோனிக் (Boom Overture)" விமானத்தின் பிரச்சனைகள் இன்னும் முடிவடையவில்லை. பல பெரிய நிறுவனங்கள் இந்த சூப்பர்சோனிக் விமான திட்டத்திற்கான இன்ஜினை உருவாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்று அறிவித்தன.

செப்டம்பர் தொடக்கத்தில், ரோல்ஸ் ராய்ஸ்(Rolls Royce) இந்த திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்த பிரிட்டிஷ் நிறுவனத்தின் சிறந்த நிதி செயல்திறனுக்கு இத்திட்டத்தில் பங்கு பெறுவது உதவாது என காரணங்கள் சொல்லப்படுகிறது. அதை தொடர்ந்து, பிராட் & விட்னி(Pratt & Whitney), ஜி.இ ஏவியேஷன்(GE Aviation), ஹனிவெல்(Honeywell) மற்றும் சஃப்ரான் ஏர்கிராப்ட் என்ஜின்கள் (Safran Aircraft Engines) ஆகிய விமான எஞ்சின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் 'சூப்பர்சோனிக் விமான  திட்டத்தில் ஆர்வம் இல்லை' என்று தெரிவித்தன.

பூம் திட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என இத்திட்டத்தின் நிறுவனர் தெரிவித்தார். முன்னணி எஞ்சின் உற்பத்தியாளர்கள் 'பூம் ஓவர்சர் திட்டத்தில்' பங்கேற்க மறுத்தபோதிலும், பூம் நிறுவனம் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் உள்ளது. நிறுவனம் ஏற்கனவே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகியவற்றிலிருந்து மொத்தம் 35 விமானங்களுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. கலிபோர்னியாவில் ஒரு ஆலையை உருவாக்கவும், 2029-க்குள் பயணிகள் சேவையைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.

சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு சமீபத்தில் சூப்பர்சோனிக் விமானங்களை உருவாக்குவதற்கு கண்டனம் தெரிவித்தது, ஏனெனில் அவை சப்சோனிக் விமானத்தை விட ஒரு கி.மீக்கு ஒரு பயணிக்கு 7 முதல் 9 மடங்கு அதிக எரிபொருளை செலவழிக்கும் என தெரிவித்தது.  ஆனால் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஜெட் எரிபொருள் (SAF) மூலம் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை ஈடுசெய்யும் என்று பூம் நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், SAF இன் திறமையற்ற நுகர்வு இருக்கும் என்று சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் கட்டுப்பாட்டாளர் கூறுகிறார்.

பொறுத்திருந்து பார்க்கலாம்.

இணைத்திலிருந்து

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Why was the Concorde retired?

The Concorde’s retirement was due to a number of factors. The supersonic aircraft was noisy and extremely expensive to operate, which restricted flight availability. The operating costs required fare pricing that was prohibitively high for many consumers. The resulting financial losses led both British Airways and Air France to make New York City their only regular flight destination. Finally, in 2000 an Air France Concorde’s engine failure and subsequent crash killed all 109 people on board and 4 people on the ground. Many believe this event accelerated the retirement of the Concorde in 2003.  



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர் ஏற்றுக்கொண்ட கொள்கை வேறு நாம் ஏற்றுக் கொண்ட கொள்கை வேறு சுரக்கமாக முடித்திருக்கிறார்.
    • சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியில் இருந்து ஒருவரின் பெயர் முன்மொழியப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு  கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.   அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் அந்நபரின் பெயர் முன்மொழியப்படும் எனவும் நளின் பண்டார கூறியுள்ளார்.  சபாநாயகர் பதவிக்கு எதிர்கட்சி முன்மொழியவுள்ள நபர் - தமிழ்வின்
    • குத்தரிசிக் கஞ்சியா பச்சையரிசிக் கஞ்சியா?  (Paanch தலையில் கை வக்க்கப் போகிறார்  🤣) பிழைகளை மூடி மறைப்பவர்களாலும் பிழைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களாலும் , பிழைகளை நியாயப் படுத்துபவர்களாலும் அது முடியும்.  ஆனால் நடைமுறையில் வெள்ளையும் சொள்ளையுமாகத் திரிபவர்கள் மேற் கூறப்பட்டவர்களே. 
    • கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.   மேலும், எமது திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! - ஐபிசி தமிழ்
    • படு மோசமான கொலைகளுக்கும் அதை செய்த கொலைகாரர்களுக்கும்   கூட வக்காலத்து  வாங்கி அதை நி யாயப்படுத்துவது தான் அந்த அரிசிக்கஞ்சி. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.