Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கலைப்பும், யுத்த நிறுத்தத்தின் தோல்வியும்

அரசியல்த் தீர்வு குறித்து பண்டாரியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போராளிகளின் தலைவர்கள் இலங்கையரசின் ஒருதலைப்பட்சமான அறிவிப்புக் குறித்த தமது அதிருப்தியை வெளியிட்டனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை மேலும் சிங்களவர்களை உள்ளடக்கி விஸ்த்தரிப்பதான இலங்கையரசின் தாந்தோன்றித்தனமான முடிவு பண்டாரிக்கும் எரிச்சலை உணடுபண்ணியிருந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேசிவந்தனர். ஆனால், பகாமாஸில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ரஜீவிற்கும் ஜெயாரிற்கும் இடையிலான பேச்சுக்களைப் பாதித்துவிடும் என்பதற்காக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை விஸ்த்தரிக்கும் லலித்தின் அறிவிப்புக் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை பண்டாரியும் போராளிகளும் தவிர்த்தனர்.  மேலும், லலித்தின் இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் அறிந்திருந்தபோதிலும், அரசியல்த் தீர்வு குறித்தே அவர் அதிகம் அக்கறை கொண்டிருந்தமையினால், இந்த அறிவிப்புக் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள அவர் விரும்பியிருக்கவில்லை.

யுத்த நிறுத்த‌க் குழுவின் விஸ்த்தரிப்பினையடுத்து அது சிங்களவரின் நலன் பேணும் கருவியாக மாறிப்போனது. இக்குழுவில் பங்கேற்றிருந்த இரு தமிழ் உறுப்பினர்களும் என்னிடம் பேசும்போது தமது கருத்துக்களை குழுவிலிருந்த ஏனைய சிங்களவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று கூறியிருந்தனர். மேலும், இராணுவத்தினரின் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து தமிழ் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது அவர்கள் இராணுவத்தால் அச்சுருத்தப்பட்டிருந்தனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்பிலிருந்த சில சிங்களவர்கள் தமிழ் உறுப்பினர்களை நேரடியாகவே அச்சுருத்தவும் செய்தனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவென்பது தமிழர்களைப் பொறுத்தவரை செயற்றிறன் அற்றதாகவும், சிங்களவரின் நலன் காப்பதாகவும் மாறிப்போயிருந்தது. 

யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தோல்வியென்பது மார்கழி மாத நடுப்பகுதியில் உருவானது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த யாழ்க் கோட்டையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கான  கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதியினை போராளிகள் சுற்றிவளைத்து முற்றுகை நிலைக்குள் வைத்திருந்தனர். 

"எனது நண்பர் ஒருவரின் வாகனத்தில் யாழ் கோட்டை இராணுவ முகாம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். நான் கோட்டைப்பகுதியினை அண்மித்தபோது, வானில் திடீரென்று தோன்றிய இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தியொன்று கோட்டைப்பகுதியைச் சுற்றி வட்டமிடத் தொடங்கியது. சில நிமிடங்களில் எமது வாகனம் நோக்கித் தாழப்பறந்த உலங்குவானூர்தி எம்மீது சரமாரியான துப்பாக்கித்தாக்குதலை ஆரம்பித்தது. அப்பகுதியில் யாழ் வைத்தியசாலைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்படவே அவர் எம் கண்முன்னே இறந்து வீழ்ந்தார். இச்சம்பவம் எனக்குக் கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியது. இது ஒரு அப்பட்டமான யுத்த நிறுத்த மீறலாகும்".

"கூட்டாத்தில் நான் இச்சம்பவம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தேன். அங்கிருந்தோர் இது ஒரு சாதாரண விபத்து, அமைதியாகுங்கள் என்று என்னிடம் கூறினர். ஆனால் என்னால் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அங்கு பரிமாறப்பட்ட மதிய உணவை நான் நிராகரித்தேன். என்னால் இனிமேலும் இங்கு இருக்கமுடியாது. என்னை வெளியேற விடுங்கள் என்று அவர்களைப் பார்த்துக் கோபமாகக் கூறினேன்" என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் உறுப்பினரான பேராசிரியர் சிவத்தம்பி என்னிடம் கூறினார்.

UAV orthophoto of Jaffna Fort with GPR data outlined in red. | Download  Scientific Diagram

சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணக் கோட்டை

 ஆனால், பேராசிரியர் கோட்டையிலிருந்து வெளியேறுவதென்பது அப்போது சாத்தியப்படவில்லை. அப்பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட உலங்குவானூர்தி மீது கோட்டையைச் சுற்றி நிலையெடுத்து நின்ற போராளிகள் பதில்த்தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். யாழ்நகரப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போராளிகளின் நிலைகளில் இருந்து உலங்குவானூர்தி மீதான பதில்த்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. யாழ்க் கோட்டையினுள் கடமையாற்றிய சிங்களத் தளபதிகளில் ஒருவரான கப்டன் கொத்தலாவல பேராசிரியர் சிவத்தம்பிக்கு ஆதரவாக வந்தார். புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியாகவிருந்த கிட்டுவுடன் அடிக்கடி தொடர்புகளை மேற்கொண்டு வந்தவர்தான் இந்த கொத்தலாவல.

This is an interesting event in the history of warfare study ...

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட கொத்தலாவல, உடனடியாக கிட்டுவுடன் தொடர்புகொண்டு பேராசிரியரை பாதுகாப்பாக கோட்டையிலிருந்து வெளியே கொண்டுவர விரும்புவதாகக் கூறினார். இதனையடுத்து உலங்குவானூர்தி மீதான தாக்குதல் புலிகளால் உடனடியாக நிறுத்தப்பட்டது. பேராசிரியர் சிவத்தம்பியும் பாதுகாப்பாக கோட்டையிலிருந்து வெளியேறினார்.

"நான் அக்கணமே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து வெளியேறும் தீர்மானத்தை எடுத்தேன்" என்று பேராசிரியர் என்னிடம் பின்னாட்களில் தெரிவித்திருந்தார்.

கொழும்பு திரும்பிய சிவத்தம்பி, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான அபயசிங்கவிடம் தனது முடிவு குறித்து அறிவித்தார். தனது ராஜினாமாக் கடிதத்தினை ஜனாதிபதி ஜெயாரிடம் கையளிக்க விரும்புவதாக சிவத்தம்பி அபெயசிங்கவிடம் கூறினார். ஆனால், தன்னிடமே ராஜினாமாக் கடிதத்தை சிவத்தம்பி கையளிக்கவேண்டும் என்று அபெயசிங்க வற்புறுத்தியபோதும் சிவத்தம்பி அதனை மறுத்து விட்டார்.

"என்னை யுத்த நிறுத்தக் கண்கானிப்புக் குழுவில் அமர்த்தியது ஜனாதிபதியே, ஆகவே அவரிடமே எனது இராஜினாமாவைக் கையளிப்பேன்" என்று சிவத்தம்பி கூறினார். 

"கண்காணிப்புக் குழுவின் செயலாளரும் நானே, ஆகவே கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி என்னைப் பணித்திருக்கிறார்" என்று அபெயசிங்க பதிலளித்தார்.

 ஆனால், ஜெயாருக்கே தனது கடிதத்தை நேரடியாகச் சமர்ப்பித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிவத்தம்பி உறுதிபூண்டிருந்தார்.

 பின்னர் யுத்த நிறுத்தக் குழுவில் அங்கம் வகித்த இரண்டாவது தமிழ் உறுப்பினரான சிவபாலனையும் அழைத்துக்கொண்டு நீதிபதி சி. மாணிக்கவாசகரைச் சந்திக்கச் சென்றார் சிவத்தம்பி. நீதிபதி மாணிக்கவாசகர் அப்போது யாழ் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றி வந்தார். பல்கலைக்கழகத்திலிருந்து ஜனாதிபதி ஜெயாருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மாணிக்கவாசகர், "பேராசிரியர் சிவத்தம்பி உங்களுடன் பேசவிரும்புகிறார்" என்று கூறி தொலைபேசியை சிவத்தம்பியிடம் கையளித்தார்.

தொலைபேசியை வாங்கிக்கொண்ட சிவத்தம்பி இவ்வாறு கூறினார், "கெளரவ ஜனாதிபதி அவர்கள் எமது கடமையினை மிகுந்த அவதானத்துடன் கையாள்வது அவசியமானது. எமது கடமையினை சரியாகச் செய்ய எம்மை அனுமதிக்காவிட்டால் இலங்கை இப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு எமக்குக் கிடைத்திருக்கும் இந்த இறுதிச் சந்தர்ப்பம் இல்லாது போய்விடும்" என்று கூறிவிட்டு தொலைபேசியினைத் துண்டித்துக்கொண்டார். இதேவகையான கருத்துக்களையே அவர் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அனைத்துக் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருந்தார்.

மறுநாள் டிக்ஷிட்டைச் சந்தித்த பேராசிரியர் சிவத்தம்பி தனது இராஜினாமா குறித்து அவரிடம் தெரிவித்தார். "நீங்கள் கவலைப்பட வேண்டாம், எல்லாம் சரியாகிவிடும்" என்று டிக்ஷிட் அவரிடம் கூறினார். யுத்த நிறுத்தம் குறித்தே டிக்ஷிட் அவ்வாறு கூறினார். ஆனால், டிக்ஷிட்டின் குரலில் இருந்த கசப்பான தொனியை சட்டென்று சிவத்தம்பி கண்டுகொண்டார். தாம் எவ்வகைப்பட்ட ஆளும்வர்க்கத்துடன் பேரம்பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை இந்தியா மெதுமெதுவாக உணரத் தொடங்கியிருந்தது.

இத்துடன் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதுடன் எல்லாமே முடிந்துபோனது. இக்குழு அமைக்கப்பட்டிருந்த காலத்திலிருந்து ஜனாதிபதிக்கு அது கையளித்த ஒற்றை அறிக்கையில், தமிழ்ப் பிரதிநிதிகளின் பிரதிநித்துவம் இன்மையினால் கண்காணிப்புக் குழு தொடர்ந்து இயங்குவதில் அர்த்தமில்லை என்று கூறியிருந்தது. கண்காணிப்புக் குழுவின் உடைதலோடு யுத்த நிறுத்தமும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.

போராளிகள், இராணுவம் ஆகிய இரு தரப்புமே யுத்த நிறுத்தம் தோல்வியடைய வேண்டும் என்று விரும்பியிருந்தனர். யுத்த நிறுத்த காலத்தில் இருதரப்புமே தம்மைப் பலப்படுத்தி ஆயுதமயமாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். தமிழர் மீதான யுத்தம் மூலம் அவர்களின் பிரச்சினையினைத் தீர்க்க ஜெயார் உறுதிபூண்ட அதேவேளை, அதனை எதிர்கொள்வதற்குத் தமிழ் மக்களைத் தயார்ப்படுத்துவதில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார்.

அனீத்தா பிரதாப்புடன் புரட்டாதியில் பேசியிருந்த பிரபாகரன், யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி அரசாங்கம் தம்மைப் பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும்வேளை, தாமும் அச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொள்வது அவசியமானது என்று தெரிவித்திருந்தார். இக்காலத்தில் யாழ்க்குடாநாட்டின் அனைத்து இராணுவ முகாம்களையும் சுற்றிவளைத்துக்கொண்ட புலிகளும் ஏனைய போராளிகளும் இராணுவத்தின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தி வந்தனர்.

பகமாசில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பிய ரஜீவிடம், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்த சிங்களவர்களின் எண்ணிக்கையினை ஒரு தலைப்பட்சமாக அரசாங்கம் அதிகரித்துக்கொண்டது தொடர்பான தமது கண்டனத்தை போராளிகளின் தலைவர்கள் முன்வைத்தனர். ஜெயவர்த்தன நம்பப்பட முடியாதவர் என்று ரஜீவிடம் அவர்கள் வலியுறுத்தினர். "யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதறடிப்பவர் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வைத் தருவதாகக் கூறும் எந்த ஒப்பந்தத்தையும்  நடைமுறைப்படுத்துவார் என்று நம்புவீர்கள்?" என்று அவர்கள் ரஜீவிடம் வினவினர்.

யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் குறித்து தில்லிப் பத்திரிக்கையாளர் ஒருவர் பிரபாகரனிடம் வினவியபோது எரிச்சலடைந்த அவர் பின்வருமாறு கூறினார், 

Vip1.jpg

"எந்தக் கண்காணிப்புக் குழு குறித்து நீங்கள் பேசுகிறீர்கள்? இதுவரை ஒரு அறிக்கையினைத் தன்னும் இக்குழுவினரால் பிரசுரிக்க முடிந்திருக்கிறதா? ஜெயவர்த்தனவின் காட்டாட்சியில் அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் அவரது இராணுவ மிருகங்களின் யுத்த நிறுத்த மீறல்களில் ஒன்றைத்தன்னும் இக்கண்காணிப்புக் குழுவினால் இதுவரை விசாரிக்க முடிந்திருக்கிறதா? உண்மையென்னவென்றால், எமது மீனவர்களைக் கொல்வதற்காக ஜெயவர்த்தன இக்காலப்பகுதியில் பல பீரங்கிப் படகுகளை சிங்கப்பூரிடமிருந்து கொள்வனவு செய்திருக்கிறார். உண்மையென்னவென்றால் பேச்சுக்கள் நடைபெற்றுவரும் அதே காலப்பகுதியில் மேலும் மேலும் தமிழ் மக்களை அவர் கொலைசெய்துவருகிறார். அவரது இராணுவமும், கடற்படையும், விமானப்படையும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தே வருகின்றனர்" என்று கூறினார்.

போராளிகளின் தலைவர்கள் கார்த்திகையில் ரஜீவிற்கு அனுப்பிய தமது கடிதத்தில், தமிழ் மக்களை ஏமாற்றி அழிக்கும் ஜெயாரின் கைங்கரியத்தின் ஒரு அங்கமே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உருவாக்கம் என்றும் விமர்சித்திருந்தனர்.

  • Thanks 1
  • Replies 619
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை இராணுவம் சிங்கள இராணுவமாகவே இருக்கும். வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது, விரும்பினால் மட்டக்களப்பு மாவட்டம் வட மாகாணத்துடன் இணையலாம் ‍- ஜெயார் ஜெயவர்த்தன‌
 

Mani Shankar Aiyar's profile of Rajiv Gandhi as a 'misunderstood PM': Babri  to Shah Bano, Bofors to Punjab, Assam accords | Political Pulse News - The  Indian Express

யுத்த நிறுத்தம் தோல்வியடைந்து வரும் நிலையிலும் கூட, பிரச்சினைக்கான தீர்வு குறித்து செயற்படுவதில் தில்லி ஈடுபட்டு வந்தது. தில்லி ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதில் ரஜீவும் பண்டாரியும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். திம்புப் பேச்சுக்களில் ஈடுபட்ட ஆறு போராளிகள் அமைப்புக்களின் தலைவர்களை தில்லி ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக தன்னை வந்து சந்திக்குமாறு ரஜீவ் கோரியிருந்தார். தில்லி ஒப்பந்தம் குறித்த அவர்களின் கருத்தினை அறிந்துகொண்டு பின்னர் கொழும்புடன் பேசுவதே அவரது எண்ணம்.

பேச்சுவார்த்தைகளின் அணுசரணையாளர் என்கிற ரீதியில் இரு தரப்புக்களையும் பேரம்பேசலில் ஈடுபட வைப்பதென்பது இயலாத காரியம் என்பதை திம்புப் பேச்சுக்களின் அனுபவத்திலிருந்து இந்தியா கற்றுக்கொண்டிருந்தது. விட்டுக்கொடுப்புக்களுக்குப் பதிலாக முரண்பாட்டுப் போக்கினையே அனுசரணையாளர் எனும் இந்தியாவின் பங்கு திம்புப் பேச்சுக்களில் ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, அணுசரணையாளர் எனும் அதுவரை தான் கடைப்பிடித்த போக்கினைக் கைவிட்டு பேச்சுக்களின் நடுவர் எனும் நிலையினைக் கைக்கொண்டு இரு தரப்புடனும் நேரடியாகப் பேசி, அழுத்தங்களைப் பிரயோகித்து இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை கண்டறிந்து, இரு தரப்பையும் இணங்கவைக்கும் சக்தி எனும் நிலைக்கு இந்தியா தன்னை உயர்த்திக்கொண்டது.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும், புளொட் அமைப்பும் ரஜீவின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட நிலையில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைமைகள் தலைமறைவாகியிருந்தனர். ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும் டெலோ அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்ட புரட்டாதி 2 ஆம் நாளன்று இரவு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு தலைவர்களான அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் தில்லிக்குப் பயணமாகினர். தில்லியில் ரஜீவுடனும், பண்டாரியுடனும் அவர்கள்  தில்லி ஒப்பந்தம் குறித்த ஆழமானபேச்சுக்களில் ஈடுபட்டனர். தில்லி ஒப்பந்தம் குறித்த அமிரினதும், சிவசிதம்பரத்தினதும் கருத்துக்களை ரஜீவ் அறிந்துகொள்ள விரும்பினார்.   அதற்குப் பதிலளித்த அவர்கள் இருவரும் தில்லி ஒப்பந்தம் மூன்று முக்கிய விடயங்களில் திருப்திகரமானதாக இருக்கவில்லை என்று கூறினர். தமிழரின் தாயகம், காணி தொடர்பான அதிகாரப் பகிர்வு, சட்டம் ஒழுங்கு தொடர்பான அதிகாரப் பகிர்வே அவை மூன்றும் என்று அமிரும், சிவசிதம்பரமும் ரஜீவ்டம் தெரிவித்தபோது, தமது ஆட்சேபணைகளை எழுத்தில் தன்னிடம் வழங்குமாறு ரஜீவ் அவர்களிடம் தெரிவித்தார்.

சென்னை திரும்பிய அமிரும், சிவசிதம்பரமும் ரஜீவிற்கு எழுதிய கடிதத்தில் தாம் குறிப்பிட்ட மூன்று விடயங்கள் குறித்து தமிழர்கள் விட்டுக்கொடுப்பிற்குத் தயார் இல்லை என்று கூறியிருந்ததோடு தில்லி ஒப்பந்தம் குறித்த ஆட்சேபணைகளையும் வெளிப்படுத்தியிருந்தனர். 

அவர்கள் குறிப்பிட்ட ஆட்சேபணைகள் வருமாறு,

ஆடி 26 ஆம் திகதி ரஜீவிற்கு தாம் அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டதற்கு அமைய தமிழர்களின் தாயகம் தொடர்பாக கூட்டணியின் தலைவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர்,

1. தமிழரின் பிரச்சினைக்குரிய எந்தத் தீர்வும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை ஏற்றுக்கொண்டதாக அமைந்திருத்தல் வேண்டும். சுதந்திரத்திற்குப் பின்னர் பதவியில் இருந்த அனைத்துச் சிங்கள அரசாங்கங்களும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களூடாக தமிழரின் தாயகத்தைச் சிதைத்து, அதன் எல்லைகளை மாற்றியமைப்பதில் முன்னெடுப்புடன் செயற்பட்டே வருகின்றன. பலஸ்த்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் செய்துவரும் குடியேற்றங்களுக்குச் சற்றும் சளைக்காத வகையிலும், தமிழ் மக்களினது தொடர்ச்சியான எதிர்ப்பிற்கு மத்தியிலும், ஒவ்வொரு பிரதமரும் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பின்னரும் தமிழரின் தாயகச் சிதைப்பென்பது நீண்டுகொண்டே செல்கிறது.

இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும், காணியதிகாரம் என்பது நிச்சயம் தமிழருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழர் தாயகத்தில் சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த காணியதிகாரம் தமிழரிடம் இருப்பது இன்றியமையாதது என்றும் தெரிவித்தனர்.

2. சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் குறித்து பேசும்போது, தில்லி ஒப்பந்தத்தின்படி மாநிலங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் பொலீஸ் அதிகாரம் எந்தவிதத்திலும் போதுமானதல்ல என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஒரு மாநிலத்தின் பொலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து காவல்த்துறையினரும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று அவர்கள் கோரினர். 

3. தமிழ் மக்களின் பாதுகாப்பும், நலனும் முக்கிய விடயங்களாக மாறியிருப்பதாகச் சுட்டிக் காட்டிய அவர்கள், தமிழரின் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு மூன்று விடயங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கோரினர். அவையாவன,

வடக்குக் கிழக்கிலிருந்து இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்வது. ஐந்து வருடங்களுக்கொருமுறை மாநிலங்களின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஜனாதிபதியும், மாநில முதலமைச்சரும் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுப்பது.

இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பின்பொழுது நாட்டின் இனவிகிதாசாரத்தின் அடிப்படையிலேயே ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதுடன், தமிழ் இராணுவத்தினருக்கான ரெஜிமெண்ட் ஒன்றும், முஸ்லீம் இராணுவத்திற்கான ரெஜிமெண்ட் ஒன்றும் தனித்தனியாக இராணுவத்தினுள் உருவாக்கப்பட வேண்டும். 

தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடமிருந்து தில்லி ஒப்பந்தம் குறித்த கருத்துக்களை எப்படியாவது பெற்றுக்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் பொதுவான கோரிக்கையினை சிங்களத் தலைவர்களின் பார்வைக்கு முன்வைக்க ரஜீவ் முயன்று வந்தார்.

S. Thondaman, Sr. with MGR

தொண்டைமான் தனது பூர்வீக வாசஸ்த்தலம் அமைந்திருக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தின் மூனா புதூரிற்கு அடிக்கடி வந்துபோவதை வழமையாகக் கொண்டிருந்தார். அவரது வருகையினை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி,  ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் தொண்டைமானைப் பேசவைத்து, தன்னை வந்து சந்திக்க அவர்களை இணங்கச் செய்வதே ரஜீவின் நோக்கம். இதனை செயற்படுத்தும் பணி ரொமேஷ் பண்டாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், போராளிகளின் தலைவர்களைச் சந்திக்க தொண்டைமான் எடுத்த முயற்சி தோல்வியடையவே அவர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஐயும், மின்வளத்துறை அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனையும் புரட்டாதி 6 ஆம் திகதி சந்தித்துவிட்டுச் சென்றார்.

 இதற்கு முன்னர், புரட்டாதி 5 ஆம் திகதி ஜெயாரைச் சந்தித்த தொண்டைமான் மறுநாளான புரட்டாதி 6 ஆம் திகதி முதலமைச்சர் ராமச்சந்திரனைத் தான் சந்திக்கவிருப்பதாக அறிவித்தார். 

"தில்லி ஒப்பந்தம் குறித்து எம்.ஜி.ஆரி இடம் நான் என்ன கூறட்டும்?" என்று ஜெயாரிடம் வினவினார் தொண்டைமான்.

அதற்குப் பதிலளித்த ஜெயார், தில்லி ஒப்பந்தம் இறுதியானது என்று தான் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும், ஆனால் அதனை அடிப்படையாகக் கொண்டு பேச்சுக்களில் ஈடுபட முடியும் என்று தான் கருதுவதாக எம்.ஜி.ஆர் இடம் சொல்லுங்கள் என்றும் கூறினார். ஜெயாரின் செய்தியை எம்.ஜி.ஆர் இடம் அப்படியே தெரிவித்துவிட்டு பண்ருட்டியைச் சந்தித்த தொண்டைமான், தமிழ்நாட்டில் தலைமறைவாகியிருந்த ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடம் ரஜீவைச் சென்று சந்திக்குமாறு கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துவிட்டு இந்துப் பத்திரிக்கைக்குப் பேட்டிகொடுத்த தொண்டைமான், "தில்லி ஒப்பந்தமே இறுதியானது அல்ல. பேச்சுவார்த்தைக்கான அடிப்படை ஆவணமே அது. இருதரப்பும் இணங்கும்பட்சத்தில் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்து மாற்றங்களைச் செய்து இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையினை அடைய  முடியும்" என்று கூறினார்.

இதேவேளை, இலங்கை ராணுவத்தினரின் அடக்குமுறைகளைக் கட்டுப்படுத்தி வைக்குமாறு இலங்கையரசாங்கத்தினை இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்தனர். அதேவேளை போராளிகளிடம் தமது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு கோரிய இந்திய அதிகாரிகள், குறிப்பாக புலிகளிடம் பேசும்போது இராணுவத்தினர் மீதான கண்ணிவெடித்தாக்குதல்கள், தொடரணி மீதான பதுங்கித் தாக்குதல்களையும் நிறுத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

தமிழர்களின் பிரச்சினையில் மிகவும் காத்திரமான முறையில் பங்களிக்கும் எண்ணத்துடன் தில்லி அந்நாட்களில் இயங்கிக்கொண்டிருந்தது. புரட்டாதி 7 ஆம் திகதியிலிருந்து 14 வரையான காலப்பகுதியில் டிக்ஷிட் தில்லிக்கு அழைக்கப்பட்டு ஆலோசனைகளில் ஈடுபடுத்தப்பட்டார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தில்லி ஒப்பந்தம் குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஆராய ஜெயாரின் சகோதரர் ஹெக்டர் ஜயவர்த்தனவும் தில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார். புரட்டாதி 10 இலிருந்து 13 வரை அவர் தில்லியில் தங்கியிருந்தார். தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தில்லி ஒப்பந்தம் குறித்து மேலதிகப் பேச்சுக்களை நடத்தவே ஹெக்டர் வரவழைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தனர்.

தில்லியில் பண்டாரியுடனும், இந்திய அரசியலமைப்பு நிபுணர் பாலகிருஷ்ணனுடனும் பேச்சுக்களில் ஈடுபட்ட ஹெக்டர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட மூன்று முக்கிய விடயங்களானதமிழரின் தாயகம், அதனை நிர்வகிக்கும் அதிகாரம் மற்றும் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியன குறித்து கலந்துரையாடினார். 

தமிழரின் தாயகம் குறித்த கேள்வியொன்றின்போது, வடக்கையும் கிழக்கையும் இணைத்துக்கொள்ளும் வழிமுறை ஒன்று பற்றி ஆராய்வது குறித்து ஹெக்டரிடம் வினவினார் பண்டாரி. ஆரம்பத்தில் வடக்கையும் கிழக்கையும் இணைப்பது குறித்த எந்தப் பேச்சுக்களுக்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக மறுத்த ஹெக்டர் பின்னர் ஜெயாருடன் தொலைபேசியில் கலந்துரையாடிவிட்டு, மாவட்ட அபிவிருத்திச் சபைகளே அடிப்படை அதிகாரப் பகிர்வு அலகுகளாக இருக்கும் என்றும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டம் விரும்பினால் வட மாகாண சபையுடன் இணைந்து இயங்க முடியும் என்றும் கூறினார்.

காணியதிகாரம் குறித்த கலந்துரையாடல்களின்போது, இதுகுறித்த பேச்சுவார்த்தையில் தமது அரசாங்கம் நெகிழ்வுத்தன்மையினைக் கடைப்பிடிக்கும் என்று ஹெக்டர் கூறினார். ஆனால், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டபோது, இலங்கையரசாங்கம் எந்த விட்டுக்கொடுப்பையும் மேற்கொள்ளாது என்று கடுமையான தொனியில் அவர் பேசினார். இலங்கை இராணுவத்தில் இனவிகிதாசார அடிப்படையில் ஆட்களை இணைத்துக்கொள்வதை திட்டவட்டமாக மறுத்த ஹெக்டர், தமிழ் மற்றும் முஸ்லீம் ரெஜிமெண்டுக்கள் என்கிற பேச்சிற்கே இடமில்லை என்று பிடிவாதமாக நின்றார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஜீவைச் சந்தித்த தலைவர் பிரபாகரன்

Prabakaran-May-1987-300x225.jpg

ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் புரட்டாதி 18 ஆம் திகதி தில்லியை வந்தடைந்தனர். அங்கு ஐந்து சுற்றுப் பேச்சுக்களை அவர்கள் நடத்தினர். இரு சுற்றுப் பேச்சுக்கள் ரொமேஷ் பண்டாரியுடனும், ரஜீவ் காந்தியுடன் 90 நிமிட பேச்சுவார்த்தையும், இந்திய வெள்யுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இரு சுற்றுப் பேச்சுக்களும் அவர்களால் நடத்தப்பட்டன. 

ரஜீவ் காந்தியுடனான ஈழத்தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களின் பேச்சுக்கள், ரஜீவின், தன்னை வந்து உடனடியாகச் சந்திப்பதற்கான கோரிக்கைக்கு தம்மால் ஏன் உடனடியாகப் பதிலளிக்க முடியாது போனது என்பதற்கான பிரபாகரனின் விளக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. ரஜீவின் கோரிக்கை விடுக்கப்பட்ட நாட்களில் தான் வட இலங்கையில் இருந்ததாகவும், பாலசிங்கத்தை இந்தியா நாடுகடத்தியிருந்ததாகவும் பிரபாகரன் ரஜீவிடம் தெரிவித்தார். அத்துடன் ரஜீவ் தன்னை வந்து சந்திக்குமாறு கோரிக்கை விடுத்த நாட்களின்போதும் பிரபாகரன் வட இலங்கையிலேயே தொடர்ச்சியாகத் தங்கியிருந்தார். பாலசிங்கத்தை இந்தியா நடுகடத்தியமையினை தான்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றும், அதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவே தான் ரஜீவின் கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

"நான் உங்களை வந்து சந்திப்பதை தவிர்க்க விரும்பவில்லை. உண்மையைச் சொல்வதானால் உங்களைச் சந்திக்கவே நான் விரும்பியிருந்தேன். அதனாலேயே இன்று நான் வந்திருக்கிறேன்" என்று தன்னைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டு நின்ற ரஜீவிடம் பிரபாகரன் தெரிவித்தார்.

 பின்னர், பாலசிங்கத்தை நாடுகடத்தும் இந்தியாவின் முடிவினை அவர் தவறென்று சுட்டிக் காட்டினார். திம்புப் பேச்சுக்களிலிருந்து வெளிநடப்புச் செய்வதாக தானும், ஏனைய ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுமே முடிவெடுத்த‌தாகவும், பாலசிங்கம் செய்தது அம்முடிவினை பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த தமிழர் தரப்பினருக்கு அறியத் தந்தது மட்டும்தான் என்றும் பிரபாகரன் கூறினார். "அது எம்மால் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவு. பாலசிங்கம் அம்முடிவினை பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த எமது பிரதிநிதிகளுக்கு அறியத் தந்தார்" என்று பிரபாகரன் கூறினார். 

"தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனைகளையும் திட்டமிடல்களையும் செய்வது நானே. ஆங்கில மொழியில் எனக்கிருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலால், பாலசிங்கமே எனது சிந்தனைகளை வெளியே கொண்டுவருவார். எனது முடிவுகளில் அவர் தலையிடுவதில்லை" என்று பிரபாகரன் ரஜீவைப் பார்த்துக் கூறினார்.

எம்.ஜி.ஆர் உடனனான பேச்சுக்களின்போது தாம் தெரிவித்த அதே கருத்துக்களையே ரஜீவுடனான சந்திப்பின்போதும் போராளிகளின் தலைவர்கள் வெளிப்படுத்தினர். குறிப்பாக இராணுவ அடக்குமுறைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருந்த‌ உப்புச் சப்பற்ற தீர்வு என்பன குறித்து அவர்கள் ரஜீவிடம் தமது ஆட்சேபணையினைத் தெரிவித்தனர். தமிழர்களின் தாயகக் கோரிக்கையினை நிராகரிக்கும் நோக்குடன் தமிழரின் தாயகத்தின் ஒரு பகுதியான கிழக்கு மாகாணத்தில் இருந்து அவர்களை நிரந்தரமாகவே அடித்து விரட்டிவிட்டு, தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலினை முற்றாக மாற்றியமைக்க இலங்கையரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையொன்றினையும் அவர்கள் ரஜீவிடம் சமர்ப்பித்தனர்.

போராளிகளின் தலைவர்களுடன் பேசிய ரஜீவும் பண்டாரியும், இலங்கையரசாங்கத்துடன் தாம் தொடர்ந்து பேசப்போவதாகவும், போராளிகளும் தமது பக்க தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். "ஆரம்ப ஆவணத்துடன் மீண்டும் வந்து சந்தியுங்கள்" என்று போராளிகளிடம் ரஜீவ் கூறினார்.

ரஜீவிடம் பேசிய பிரபாகரன், கடந்த கால அனுபவங்களூடாகவும், சரித்திரத்தினைப் பார்ப்பதூடாகவும் ஜெயவர்த்தன நேர்மையான தீர்வொன்றிற்கு ஒருபோதும் வரப்போவதில்லை என்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியும் என்று கூறினார். தான் அமைதியை விரும்பும் ஒரு மனிதர் என்று உலகிற்குக் காட்டவே நாடகமொன்றினை அவர் நடத்திக்கொண்டிருக்கிறார் என்று பிரபாகரன் மேலும் தெரிவித்தார். ஜெயாரை நம்பவேண்டாம் என்று ரஜீவை எச்சரித்த பிரபாகரன், அவர்குறித்து மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழரின் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு ஒன்றினை அடைவது குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்திய அரசாங்கத்தைப் பாராட்டிய பிரபாகரன், தமிழர் விரும்பும் தீர்வினை அடைய இந்தியா இன்னும் அதிகமாக உழைக்கவேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

தமிழர்களின் பிரச்சினைக்கான உண்மையானதும், தர்க்கரீதியானதுமான தீர்வு தமிழ் ஈழம் என்று தான் உறுதியாக நம்புவதாக ரஜீவிடமும் அங்கிருந்த ஏனைய இந்திய அதிகாரிகளிடமும் பிரபாகரன் கூறினார். இந்தியா மீது தான் வைத்திருக்கும் மரியாதையின் நிமித்தமே ஈழத்திற்கு மாற்றீடான தீர்வு குறித்து ஆராய  ஏற்றுக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார். ஈழத்திற்கு மாற்றீடான தீர்வாக் தான் எதிர்பார்ப்பது பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழர்கள் தம்மைத்தாமே ஆளும் முற்றான அதிகாரத்தைக் கொண்டதாக அமைதல் வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால், தமிழர்கள் தம்மைத்தாமே ஆளும் அதிகாரத்தினை சிங்கள தேசம் ஒருபோதும் வழங்கப்போவதில்லை என்பது தனக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் கூறினார்.

சென்னையிலும், தில்லியிலும் தான் தங்கியிருந்த நாட்களை தர்மலிங்கம் மற்றும் ஆளாளசுந்தரம் ஆகியோரின் படுகொலைகளில் புலிகள் இயக்கத்திற்கு பங்கேதும் இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லும் செயற்பாடுகளுக்காகவும் பிரபாகரன் பயன்படுத்திக்கொண்டார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தர்மலிங்கத்தையும், ஆளாளசுந்தரத்தையும் நாம் கொல்லவில்லை. ஆனால், ஆனந்தராஜாவை நாமே கொன்றோம், அதற்கான அவசியம் எமக்கு இருந்தது ‍- தலைவர் பிரபாகரன்
63f10327500efb001dbe59b2.jpg

இந்தியாவில் பிரபாகரன் தங்கியிருந்த நாட்களில் "சண்டே" பத்திரிக்கை அவரைப் பேட்டி கண்டிருந்தது.

 கேள்வி : தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு முன்னாள் உறுப்பினர்களை புலிகள் இயக்கம் கொலை செய்ததா? இந்திய உளவுத்துறையினர் அவர்களை நீங்களே கொலை செய்ததாக நம்புகிறார்களே?

 பிரபாகரன் : நாம் அவர்களைக் கொல்லவில்லை. ஆனால் இந்திய உளவுத்துறையினர் அப்படியான முடிவிற்கு வந்தால் நாம் என்ன செய்ய முடியும்? அவர்கள் கொல்லப்பட்டவுடனேயே நாமே அவர்களைக் கொன்றதாக இலங்கையரசாங்கம் எம்மீது குற்றஞ்சாட்டியவேளை நாம் உடனடியாகவே அதனை மறுத்திருந்தோம். ஈழத்தேசிய விடுதலை முன்னணியும் இப்படுகொலைகளில் தமக்குப் பங்கில்லை என்று அறிவித்திருந்தது. இந்திய உளவுத்துறை இக்கொலைகளை நாமே புரிந்ததாகக் கூறினாலும்கூட யாழ்ப்பாணத்து மக்களுக்கு இதனைச் செய்தது யாரென்பது நன்றாகவே தெரியும். சாட்சிகள் எதனையும் தேடாது, கண்மூடித்தனமாக இந்திய உளவுத்துறை இக்கொலைகளை நாமே செய்ததாக நம்புகின்றது என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால், இக்காலப்பகுதியில் நான் தலைமறைவாகியிருந்தேன், அதனை மனதிற்கொண்டே இக்கொலைகளை எனது இயக்கம் செய்ததாக இந்திய உளவுத்துறை நினைக்கிறது போலும்.

இதனை நாங்கள் செய்திருந்தால், அதனை உடனடியாகவே உரிமை கோரியிருப்போம். எமது செயலுக்கான காரணங்களையும் நாம் தெளிவாகக் குறிப்பிட்டிருப்போம். எமது விசாரணைகளின் ஊடாக ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவிடத்தே அவருக்கான தண்டனையினை நாம் நிறைவேற்றுவோம். ஆகவே, நாம் இக்கொலைகளைப் புரிந்திருந்தால் நிச்சயம் அதற்கான காரணமும் எம்மால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். ஒரு பேச்சிற்கு ஆளாளசுந்தரத்தை நாமே கொன்றிருந்தால், அதற்கான காரணத்தை நிச்சயமாக வெளிப்படுத்தியிருப்போம். ஆனால், அவரைக் கொல்லவேண்டும் என்கிற எந்தத் தேவையும் எமக்கு இருக்கவில்லை. யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக அவர் இருந்த நாட்களில் பெருமளவு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டு வந்ததனால் அவருக்குச் சில தண்டனைகளை நாம் முன்னர் வழங்கியிருந்தோம். அவரது முறைகேடுகளை நாம் ஆதாரத்துடன் நிரூபித்திருந்தோம். அவரது முறைகேடுகள் தொடர்பான பல ஆவணங்கள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் எரியூட்டப்பட்டபோது சேர்ந்தே எரிக்கப்பட்டு விட்டன.

யாழ் பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை நாம் தண்டித்தோம். ஆனந்தராஜாவைக் கொன்றவர்களைப் பற்றிய தகவல்களைத் தருவோருக்கு ரூபாய் ஐந்துலட்சங்களைத் தருவதாக இலங்கையரசாங்கம் அறிவித்தபோதே அவருக்கும் இலங்கையரசாங்கத்திற்கும் இடையே இருந்த நட்பினை யாழ்ப்பாண மக்கள் அறிந்துகொண்டனர். அவரை நாம் கொன்றதற்கான காரணத்தைத் தமிழ் மக்கள் முற்றாக உணர்ந்துகொண்டதனால் அக்கொலை குறித்து அவர்கள் பேசவில்லை. இலங்கை இராணுவம் எமது மக்களை தினமும் கொன்று குவித்துக்கொண்டும், இளைஞர்களைச் சகட்டுமேனிக்குக் கைதுசெய்து சித்திரவதை செய்துகொண்டும், எமது பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிக்கொண்டும், எமது சொத்துக்களை எரித்து நாசம் செய்துகொண்டும் இருந்த நாட்களில் அதே இராணுவத்துடன் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை நடத்த ஆனந்தராஜா திட்டமிட்டு வந்தார். அவரால் திட்டமிடப்பட்டு வந்த கிரிக்கெட் போட்டியினை ஒரு பிரச்சாரப் பொருளாக முன்வைத்து, "தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்துடன் மிகவும் தோழமையுடன் பழகுகிறார்கள், அவர்களுடன் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுகிறார்கள், ஆனால் தமிழர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்று பொய்யான பிரச்சாரத்தோடு தமிழ்ப் பயங்கரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்று உலகிற்குக் காட்ட இலங்கையரசாங்கம் முயன்று வந்ததை நாம் அறிவோம். ஆகவேதான் அவரை அகற்றவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. 

கேள்வி : அவர்கள் இருவரையும் உங்கள் இயக்கத்தில் உங்களின் சொல்லிற்குக் கட்டுப்படாத ஒரு பிரிவினர் கொன்றிருக்கச் சந்தர்ப்பம் இருக்கின்றதா?

பிரபாகரன் : நிச்சயமாக‌ இல்லை. எனது அனுமதியின்றி புலிகள் இயக்கத்தில் எதுவுமே நடப்பதில்லை.

 சண்டே பத்திரிகைக்குப் பேட்டியளிக்கு முன்னர் பிரபாகரன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு உறுப்பினர்களான யோகேஸ்வரனையும், தங்கத்துரையையும் சந்தித்தார். ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் புலிகள் இயக்கம் கொல்லவில்லை என்பதை அவர்களிடம் உறுதிப்படுத்தினார். குறிப்பாக, தர்மலிங்கம் மீது தான் மிகுந்த அபிமானம் கொண்டிருந்தவன் என்றும், அவரது கொலை தன்னை கவலைப்படச் செய்துள்ளதாகவும் பிரபாகரன் அவர்களிடம் கூறினார். 

யோகேஸ்வரனையும், தங்கத்துரையையும் தான் சந்தித்தது குறித்தும் சண்டே பத்திரிக்கையுடனான பேட்டியின்போது பிரபாகரன் பகிர்ந்துகொண்டார்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை நான் சந்தித்துப் பேசினேன். இவ்விரு கொலைகளையும் நாம் செய்யவில்லை என்பதை அவர்களிடம் உறுதிப்படுத்தினேன். எம்மிடமிருந்து அவ்வாறான தண்டனைகள் அவர்களுக்கு வழங்கப்படாது என்றும் அவர்களிடம் நான் கூறினேன். ஆளாளசுந்தரத்திற்கு நான் அச்சுருத்தும் தண்டனையொன்றினை முன்னர் வழங்கியிருந்தோம் என்பதற்காக நாம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு  எதிரானவர்கள் என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது என்று அவர்களிடம் தெரிவித்தேன். 

ஆனாலும், அவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையிலான இடைவெளி அச்சமூட்டும் வகையில் வளர்ந்துவருவதை அவர்களிடம் தெரிவித்தேன். தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தை அவர்கள் கைவிட்டு வேறு வழியில் சென்றுகொண்டிருப்பதனை தமிழினத்திற்கெதிரான துரோகம் என்று இளைய தலைமுறையினர் கருதுகிறார்கள். மேலும், தமிழ் மக்களுடன் இருந்து, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்காது, வெளியிலிருந்து அவர்கள் தமது அரசியலைச் செய்துவருவதால் அவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையிலான இடைவெளி இன்னும் இன்னும் அதிகரித்துச் செல்கிறது.  தமிழ் ஈழத்திற்கான நியாயத்தன்மையில் இருந்தும், அவசியத்திலிருந்தும், தவிர்க்கவியலாத் தன்மையிலிருந்தும் தம்மை அவர்கள் அந்நியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடமிருந்து தம்மை மேலும் மேலும் அவர்கள் அந்நியப்படுத்தும் இடத்து, இளைய தலைமுறையினரிடமிருந்து அதற்கான எதிர்வினையினை அவர்கள் சந்திக்கவேண்டி ஏற்படுகிறது. யதார்த்தம் என்னவென்றால், நான் ஈழத்தைக் கைவிட்டாலும் அவர்களைப்போன்றே தண்டனைக்கு உட்படுத்தப்படுவேன் என்பதுதான். 

சண்டே பத்திரிக்கையின் நிருபரான அனீத்தா பிரதாப் தொடர்ந்தும் பிரபாகரனிடம் சில கேள்விகளைக் கேட்டார். அவற்றில் ஒன்றுதான் பாலசிங்கத்தை நாடுகடத்தும் தனது தீர்மானத்தை இறுதி நேரத்தில் இரத்துச் செய்ய ரஜீவ் எண்ணியிருந்தார் என்றும், ஆனால் இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் புலிகளே கொன்றதாக இந்திய உளவுத்துறை ரஜீவிடம் தெரிவித்தபோது, நாடுகடத்தும் தீர்மானத்தை இரத்துச் செய்வதை ரஜீவ் கைவிட்டார் என்றும் கூறி இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று பிரபாகரனைக் கேட்டார்.

 இக்கேள்விக்கான பதிலை, இந்திய உளவுத்துறையின் தவறான ஆய்வினைச் சுட்டிக்காட்ட பிரபாகரன் பாவித்தார்.

"எமக்கும் இப்படுகொலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், நாமே அவர்களைக் கொன்றதாகக் கற்பனை செய்துகொண்டு, பாலசிங்கத்தை நாடுகடத்தும் முயற்சியில் இந்திய அரசாங்கம் தீர்மானமாக  இருந்திருந்தால், அது அவர்களின் பாரிய தவறேன்றே நான் நம்புகிறேன். இக்கொலைகளுக்காக எம்மைத் தண்டிக்கவேண்டிய எந்தத் தேவையும் இல்லை. இவ்வாறான தவறான தகவல்களை ரஜீவிற்கு வழங்கிய இந்திய உளவுத்துறையினைத்தான் அவர் தண்டித்திருக்கவேண்டும். குறைந்தது இவ்வாறான தவறுகளை ரோ எதிர்காலத்தில் செய்வதில் இருந்தாவது அவர்களைத் தடுக்க முடியும்" என்று பிரபாகரன் பதிலளித்தார். 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஜீவின் சமாதான முன்னெடுப்புக்களை தனது இராணுவ முன்னெடுப்பினால் தோற்கடித்த ஜெயார்

தலைவர் பிரபாகரன் தில்லியில் ரஜீவையும் பண்டாரியையும் சந்தித்தமை, முன்னாள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளுடன் தமக்குச் சம்பந்தமில்லை என்று வெளிப்படையாக தெளிவுபடுத்தியமை, தமிழர் தாயகத்தில் அரசின் ஆயுதப்படைகளும் ஊர்காவற்படையும் தமிழ் மக்கள் மீது நடத்திவரும் படுகொலைகள், தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கியிருந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை என்பன ரஜீவ் காந்தியின் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டை மாற்றி தமிழர் சார்பாக சாய்க்கத் தொடங்கியிருந்தன‌ . 

ரஜீவின் இந்த மனமாற்றம் புரட்டாதி 27 ஆம் திகதி அவர் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரியத் தொடங்கியிருந்தது. அங்கு பேசிய ரஜீவ், "பஞ்சாப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளை இலங்கைத் தமிழர் விடயத்தில் இலங்கையரசு கைக்கொள்ள வேண்டும்.தமிழரின் பிரச்சினைக்கு குறுகிய அரசியல்த் தீர்வினை வழங்கமுடியாது. நீண்டகால, நிலைத்து நிற்கும் தீர்வு குறித்து இலங்கையரசு சிந்திக்க வேண்டும். இது ஒரு அரசியல்ப் பிரச்சினை. இப்பிரச்சினையினை இராணுவ ரீதியில் தீர்க்க முனைவது பிரச்சினையினை இன்னும் இன்னும் ஆளமாக்கவே வழிவகுக்கும்" என்று கூறினார்.

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணலாம் என்று நம்பிய ரஜீவ் தொடர்ந்து அது தொடர்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தரப்பு தனது ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். ஐப்பசி மாத நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "நான் உங்களிடம் கேட்ட அடிப்படை ஆலோசனைகள் எங்கே?" என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியினை நோக்கி அவர் கேள்விகளை முன்வைத்தார்.

மேலும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையரசு தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று ஜெயார் மீதும் ரஜீவ் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்குப் பயணமான பண்டாரி, ஜெயாரைச் சந்தித்து ரஜீவ் காந்தியும் தானும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினருடன் தாம் நடத்திய பேச்சுக்கள் குறித்து விளக்கமளித்தார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, வடக்குக் கிழக்கில் தமிழர்களுக்கான தன்னாட்சிப் பிராந்தியம் ஒன்றினை வழங்க இலங்கையரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட போராளிகள் தயாராக இருப்பதாகக் கூறினார். 

ஐப்பசி மாதத்தில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் அறிவிக்கப்படவிருந்த விடயம் ஒன்றிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாகவே பண்டாரியின் கொழும்பு விஜயம் அமைந்திருந்தது. இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் காந்தி சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த அறிவிப்பினூடாக உலக அளவில் இந்தியாவின் நிலையினை உயர்த்தலாம் என்று அவர் நம்பியிருந்தார்.

ஆனால், ஜெயார் தனது சொந்தத் திட்டத்தை ஏற்கனவே தீர்மானித்துவிட்டார் என்பதனை இந்தியர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. இந்தியாவைப் பலவீனப்படுத்தி, போராளிகளுக்கும் இந்தியாவிற்குமிடையே பகைமையினை உருவாக்குவதே ஜெயாரின் திட்டம். அத்துடன், பகாமாசில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தனது இராணுவத் தீர்விற்கான ஆயுத தளபாட உதவிகளை அங்கு வரும் அரசுத் தலைவர்களிடம் பெற்றுக்கொள்வதும் அவரது இன்னுமொரு நோக்கமாக இருந்தது.

புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்கு பண்டாரி மேற்கொண்ட பயனம் எந்தப் பலனையும் இந்தியாவிற்கோ ஈழத்தமிழருக்கோ கொடுக்கவில்லை. பண்டாரியின் விஜயத்தைப் பாவித்து தனது புத்திரனான ரவியும் அவரது மனைவியும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா வாய்ப்பொன்றை ஜெயார் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த சுற்றுலாவின் போது ரஜீவ் காந்தியையும் சந்திக்க ரவி ஜெயவர்த்தன பணிக்கப்பட்டார். ரஜீவுடனான பிரத்தியேகச் சந்திப்பில் இந்தியாவில் தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், முகாம்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் ரஜீவிடம் காட்டுவதும் ரவி ஜெயவர்த்தனவின் நோக்கங்க‌ளில் ஒன்று.

இவற்றிற்கு மேலாக, தனது மகனும் பாரியாரும் இந்தியாவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கி, விருந்தினராக கெளரவித்தமைக்காக ரஜீவிற்கு நன்றிகூறி கடிதம் ஒன்றையும் ஜெயார் அனுப்பினார். பகாமாசில் ரஜீவுடன் நடக்கவிருந்த பேச்சுக்களுக்கு உகந்த சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டே ஜெயார் தனது கடிதத்தை வரைந்திருந்தார்.

 ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி,

"..................யுத்த நிறுத்தம் அமுலாக்கப்பட்டத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்களும், ஆயுதங்களும், வெடிபொருட்களும் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். ராமேஸ்வரம், கலீமியர் முனை, நாகபட்டினம், வேதாரணியம் ஆகிய தமிழ்நாட்டின் கரைகளில் இருந்தே இக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன”.

 “உங்களின் கரையோர ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்தி, இக்கடத்தல்களை உங்களால் தடுக்க முடிந்தால் அது எமது நாட்டிற்கு நீங்கள் செய்யும் அரிய சேவையாக நாங்கள் கருதுவோம். இன்று நாங்கள் முகங்கொடுத்துவரும் பயங்கரவாதத்தை முற்றாக அழிப்பதற்கு அது பெரும் உதவியாக இருக்கும். எமது இரு நாடுகளும் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதன் மூலமும், கண்காணிப்பை அதிகப்படுத்துவத‌ன் ஊடாகவும் இன்று நடந்துவரும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல்களை முற்றாகத் தடுத்துவிட முடியும். இப்பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாரிய நிதிவளமும், காலமும் எமக்குத் தேவைப்படுகிறது. இச்செயற்பாடுகளை நீங்கள் ஆதரித்தால், இதுகுறித்து மேலும் பேசுவதற்கு எனது கடற்படைத் தளபதியையும் இன்னும் சில அதிகாரிகளையும் உங்கள் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். பகாமாசில் சந்திக்கலாம் என்ற விருப்புடன் விடைபெறுகிறேன்...." என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

மிகவும் தந்திரமான முறையில் ஜெயாரினால் வரையப்பட்ட இக்கடிதத்தின் மூலம், இன்னும் இருவாரங்களில் நடக்கவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் ரஜீவ் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ரஜீவ் காந்தியின் அரசியல்த் தீர்விற்கான முன்னெடுப்புக்களை தனது இராணுவத் தீர்விற்கான பேச்சின்மூலம் ஜெயார் ஒரேயடியாக அடித்துப் போட்டிருந்தார். 

பண்டாரியுடனான மூன்றாம் கட்டப் பேச்சுக்களுக்கான கார்த்திகையில் தில்லி வந்திருந்த பிரபாகரன் ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பேட்டியொன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதி கீழே.

கேள்வி : இன்று இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலையினை நீங்கள் எவ்வாறு கணிப்பிடுகிறீர்கள்?

பிரபாகரன் : இலங்கையில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலை மிகவும் கொதிநிலையில் இருக்கிறது. தமிழர் தேசம் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை முகம்கொடுத்து நிற்கிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை இலங்கை அரச படைகள் தொடர்ச்சியாக அரங்கேற்றியவண்ணம் இருக்கின்றார்கள். படுகொலைகள், சித்திரவதைகள், கைதுகள், பாலியல் வன்புணர்வுகள், உடமையெரிப்புக்கள் என்று முற்றான இனவழிப்பை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலிருந்து வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தநிறுத்தம் எனும் போர்வையினைப் பாவித்து கொடூரமான அடக்குமுறையினையும், இராணுவ அதிகாரத்தையும், அழிவுகளையும் எம் மக்கள் மீது இலங்கையரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இன்று ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதச் சிங்கள இனவெறியர்களின் ஒற்றை நோக்கம் தமிழர்களை இராணுவ ரீதியில் அடக்கி அடிமை கொள்வதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அமைதிவழியில் தீர்வினை வழங்கும் எந்த நோக்கமும் அவர்களிடத்தில் இல்லை. இலங்கையரசின் இந்த மனோநிலையே தற்போதைய சூழ்நிலையினை மிகவும் ஆபத்தான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

கேள்வி : தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கையரசாங்கத்திற்கும் இடையே தற்போது நடந்துவரும் பேச்சுக்கள் குறித்து உங்களின் கருத்து என்ன?

 பிரபாகரன்: இந்தச் சமாதானப் பேச்சுக்கள் என்பதே ஒரு பயனுமற்ற காலத்தை விரயமாக்கும் செயற்பாடாகும். உலகத்தை ஏமாற்ற ஜெயவர்த்தன அரசினால் போடப்பட்டிருக்கும் நாடகமே இப்பேச்சுவார்த்தைகள். தான் சமாதானத்தில் விருப்புக்கொண்டவராக ஜெயார் தன்னைக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர் சமாதானத்திற்கு எதிரானவர். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத்தக்க எந்தத் தீர்வினையும் அவர் இதுவரையில் முன்வைக்கவில்லை. சமாதானப் பேச்சுவர்த்தைகள் என்கிற போர்வையின் கீழ் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனக்கொலையொன்றினை தனது இராணுவத்தைக் கொண்டு அவர் நடத்தி வருகிறார் என்பதே உண்மை.

கேள்வி : ஆகவே, யதார்த்தத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன என்று கருதுகிறீர்களா?

 பிரபாகரன்: பேச்சுக்கள் இதுவரையில் எந்தப் பலனையும் கொடுப்பதில் தோல்வியில் முடிவடைநிதிருக்கின்றன என்பதை என்னால் கூறமுடியும்.

 கேள்வி : அப்படியானால் சமரசம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் சாத்தியம் இப்போது இல்லை என்று கூறுகிறீர்களா?

 பிரபாகரன் : அது சில காரணிகளில் தங்கியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்......

 கேள்வி : அக்காரணி இந்தியாவின் நிலைப்பாடு என்று கூறுகிறீர்களா?

 பிரபாகரன் : ஆம், ஒருவகையில்

 

1986 ஆம் ஆண்டு தை மாதமளவில், ஜெயாருடனான தொடர்பாடல்களில் தோல்வியடைந்தவராக ரஜீவ் தன்னை உணர்ந்துகொண்டார். 1985 ஆம் ஆண்டு மார்கழி ஆரம்பப்பகுதியில் நடைபெற்ற முதலாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜெயவர்த்தன ரஜீவை முற்றாகத் தோற்கடித்திருந்தார்.

  • Like 1
  • Thanks 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

யுத்தநிறுத்த காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒபரேஷன் கிறீன் அரோ நடவடிக்கை
 

Trincomalee

புரட்டாதி மாதத்தின் நடுப்பகுதியில் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி திருகோணமலை மாவட்டத்தில் ஒப்பரேஷன் க்றீன் அரோ (Operation Green Arrow) எனும் பெயரில் வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றினை இலங்கை இராணுவம் முன்னெடுத்திருப்பதாகக் கூறினர். போராளிகளை இன்னும் மூன்று மாத காலத்திற்கு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை நீட்டிக்குமாறு வலியுருத்தி வந்த ரோ அதிகாரிகளிடம் பேசிய அவர்கள், உலகையும், இந்தியாவையும் ஏமாற்றவே ஜெயவர்த்தன பேச்சுக்களில் ஈடுபட விரும்புவது போல பாசாங்கு செய்கிறார் என்றும், உண்மையிலேயே யுத்தம் ஒன்றின் மூலமே தமிழர்களின் பிரச்சினையினை அவர் தீர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறினர்.

திருகோணமலை மாவட்டத்திலிருந்து தமிழர்களை முற்றாக வெளியேற்றும் நோக்கிலேயே இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களில் இருந்து அவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வருவதனால் அதனைத் தடுத்து, தமிழ் மக்களைக் காப்பற்ற தாம் நடவடிக்கையில் இறங்கவேண்டியது அவசியம் என்றும் அவர்கள் கூறினர்.

இராணுவத்தினரின் தாக்குதலை திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து வழிநடத்திய தேசிய பந்தோபஸ்த்து அமைச்சர் லலித் அதுலத் முதலி, பத்திரிக்கையாளரிடம் பேசும்போது, "இப்பகுதியில் தொற்றுநோய்போல பரவியிருக்கும் பயங்கரவாதிகளைத் தேடியழித்து வருகிறோம்" என்றும், "பயங்கரவாதிகளை இங்கிருந்து விரட்டி வருகிறோம்" என்றும் கூறினார்.

லலித் மேலும் பேசும்போது, திருகோணமலையைச் சுற்றியும், வடமத்திய மாகாணத்தின் வடக்கு எல்லைகளிலும் இராணுவத்தால் நடத்தப்படும் தாக்குதல் தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஊடுருவலில் இருந்து இப்பகுதிகளை விடுவிக்கவே நடத்தப்படுவதாக அவர் கூறினாலும், இப்பகுதியில் அமைந்திருக்கும் பல தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்களை அப்புறப்படுத்துவதே இத்தாக்குதலின் உண்மையான நோக்கம் என்பதை அவர் வெளிப்படுத்த மறுத்திருந்தார். 

1940 ஆம் ஆண்டுகளில் இருந்து சிங்கள அரசுகளால் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நன்கு கொள்மையப்படுத்தப்பட்ட, அரச ஆதரவிலான சிங்கள மயமாக்கலுக்கு ஜெயவர்த்தன அரசாங்கத்தின் பங்களிப்பாக தமிழர் தாயகத்தின் வடமாகாண‌ எல்லைகளின் நீளத்திற்கு நன்கு ஆயுதம் தரிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளை  அமர்த்துவதென்பது அமைந்தது. சிங்கள இனவாதிகளின் இந்நோக்கம் இன்றுவரை வடக்குக் கிழக்கில் உயிர்ப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறதென்பது இங்கு நினைவுகொள்ளத் தக்கது. இதன்மூலம் தமிழ் மக்களை வெகுவாகப் பலவீனப்படுத்தி, ஈற்றில் முற்றான ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரவே தொடர்ந்துவரும் சிங்கள் ஆட்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர். 

Home Guards near Padaviya 1999 Sri Lanka

வவுனியா மாவட்டத்தில் தமிழ்க் கிராமங்களை அகற்றி உருவாக்கப்பட்டிருக்கும் பதவியா எனும் தனிச்  சிங்களக் கிராமத்தின் சிங்கள ஊர்காவல்ப் படையினர் - 1999 ஆம் ஆண்டு.

Mannar-District-Lands-belonging-to-Tamil-villagers-of-Kondachchikuda-occupied-by-the-SLN-Silavathurai-2.jpg

சிங்கள குடியேற்றக்காரர்களுக்கு பக்கபலமாக நிற்கும் ஆக்கிரமிப்பு இராணுவம் ‍- சிங்களக் குடியேற்றக் கிராமம் ஒன்றில் அமர்த்தப்பட்டிருக்கும் இராணுவத்தின் கவச வாகனம், 1999

Vavuniya-District-North-A-Buddhist-Makara-Thorana-styled-gateway-to-the-newly-cleared-Sinhala-settlement-re-named-Bogaswewa-1.jpg

தமிழர் தாயகத்தில் சிங்கள பெளத்த மயமாக்கல்

1940 களின் ஆரம்பத்தில் குடியேற்றத் திட்டங்கள் எனும் பெயரில் தெற்கில் கணியற்ற சிங்களவர்களை கிழக்கு மாகாணத்திலும், வட மாகாணத்தில் தென் எல்லைகளிலும் சிறப்பான‌ நீர்வசதியும், செழிப்பான வளமும் கொண்ட நிலங்களில் அரசு குடியேற்றத் தொடங்கியிருந்தது. ஆனால், ஆரம்பக் குடியேற்றங்களின் வெற்றியினால் உற்சாகமடைந்த சிங்கள அரசுகள், பின்னர் வந்த வருடங்களில் இக்குடியேற்றங்களை இப்பிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கவும், தமிழர்களின் இருப்பைப் பலவீனமாக்குவதற்காகவும் பாவிக்கலாயினர். இவ்வாறான குடியேற்றங்களில் மிகவும் பாரிய முன்னெடுப்புக்களுடன் நடத்தப்பட்ட குடியேற்றங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட கல்லோயாக் குடியேற்றம், திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட அல்லை மற்றும் கந்தளாய் சிங்களக் குடியேற்றங்கள், வவுனியா மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட பதவியா சிங்களக் குடியேற்றம் என்பவற்றைக் குறிப்பிட்டுக் கூற முடியும். இக்குடியேற்றங்கள் உருவாக்கப்படுவதே தமிழரின் இருப்பை பலவீனப்படுத்துவது எனும் நோக்கில்த்தான் என்று சிங்கள அரசுகள் திட்டமிட்டு செயற்பட்டு வந்தமையினால் இதுகுறித்த தமிழரின் எதிர்ப்பை தெற்கின் அரசுகள் தொடர்ச்சியாக உதாசீனம் செய்தே வந்திருந்தன.

Sinhala Colonisation

சிங்களக் குடியேற்றம்

 The Galoya Valley Scheme & the People who made it a Reality | Thuppahi's  Blog

கல்லோயா சிங்களக் குடியேற்றத்தின் உருவாக்கம்.

gal-oya-11-the-island.jpg?ssl=1

கல்லோயா சிங்களக் குடியேற்றத்தின் பிதாமகர்கள் திட்டமிடலின்பொழுது ‍- டி எஸ் சேனநாயக்கவுடன் சிங்கள இனவாத அதிகாரிகள்

PURANA GAMA' unveiled today | Page 3 | Daily News

வவுனியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் பதவியா சிங்களக் குடியேற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் புரண‌ கம ‍ சிங்களவர்கள் இப்பகுதியில் புராதன‌ காலத்திலிருந்து வாழ்ந்துவருவதாக வரலாற்றை மாற்றியெழுதும் சிங்களவர்கள் 

தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்களக் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்துவேன் என்று தமிழர்க்கு வாக்குறுதியளித்து அவர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்தன தனது ஆட்சிக்காலம் நெடுகிலும் செய்தது தமிழர் மீது திட்டமிட்ட இராணுவத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டதுதான்.

தமிழர் மீதான ஜெயவர்த்தனவின் முதலாவது இனவாதத் தாக்குதல்கள் 1977 ஆம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்டன. இத்தாக்குதலின்பொழுது சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்துவந்த பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவழித் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். இவ்வாறு அடித்துவிரட்டப்பட்ட பல இந்திய வம்சாவழித் தமிழர்களில் ஒருபகுதியினர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஏற்கனவே பாதுகாப்பாகக் குடியேறி வாழ்ந்துவந்த தமது உறவினர்கள் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டனர். தமிழ் மக்களின் ஒருபகுதியினரான இம்மக்களின் அவலங்களினால் அனுதாபம் கொண்ட பல தமிழ் தொழில் வல்லுனர்கள், சமூக சேவையாளர்கள், தமிழ் அரச உத்தியோகத்தர்கள் போன்றோர் இம்மக்களை வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதிகளில் குடியேற்றினர். தமிழர் தாயகத்தின் இதயப்பகுதி நோக்கி முன்னேற எத்தனித்து வந்த சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கும் நோக்கிலேயே மலையகப்பகுதியில் இருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட தமிழர்களை இம்மாவட்டங்களில் எல்லைகளில் குடியேற்ற இவர்கள் முடிவெடுத்தனர். இந்த நடவடிக்கைகள் 1982 ஆம் ஆண்டுவரை நடந்து வந்தன.

1982 ஆம் ஆண்டளவில் தமிழ் ஆயுத அமைப்புக்கள் தோற்றம்பெறத் தொடங்கியிருந்தன. இராணுவம் மீதான தமிழ்ப் போராளிகளின் தாக்குதல்கள் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்திருந்தன. தமிழர்களுக்கென்று தனியான சுதந்திர நாடொன்று தேவை என்கிற கோஷம் வலுபெறத் தொடங்கியிருந்தது. 1982 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கு பொலீஸாரும் இராணுவத்தினரும் வழங்கிய தகவல்களின்படி வவுனியா மாவட்டத்தில் தமிழ்ப் போராளிகளின் செயற்பாடுகள் அதிகரித்துவருவதாகக் கூறப்பட்டிருந்தது. தமிழ் சமூக ஆர்வலர்களால் வவுனியா மாவட்டத்தில் மலையகத் தமிழ் மக்களைக் குடியேற்றி உருவாக்கப்பட்ட காந்தியம் பண்ணையில் தமிழ் ஆயுத அமைப்புக்களின் செயற்பாடு அதிகரித்துக் காண‌ப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.  ஆகவே தமிழ் ஆயுத அமைப்புக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு காந்தியம் பண்ணையிலிருந்து மலையகத் தமிழர்கள் முற்றாக விரட்டியடிக்கப்பட்டு, இப்பண்ணைகள் அழிக்கப்படுவதும், இப்பகுதிகளின் தெற்கின் சிங்களவர்களைக் குடியேற்றி வடக்கு நோக்கிய சிங்கள விரிவாக்கம் முடுக்கிவிடப்படுவதும் அவசியம் என்றும் அவர்கள் ஜெயாரிடம் வலியுறுத்தினர்.

Edjt9_kXgAkunFV.png 

இதனையடுத்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சரானா ஜனதிபதி ஜெயார், காணி மற்றும் மகாவலி அமைச்சரான காமிணி திசாநாயக்கா ஆகிய இருவரும் இணைந்து வடக்குக் கிழக்கிலிருந்து மலையகத் தமிழர்களை முற்றாக அப்புறப்படுத்தும் தமது நோக்கத்திற்கான அடித்தளத்தினை இதுதொடர்பான பிரச்சாரங்களை சிங்கள மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் உருவாக்கிக்கொண்டனர்.

 

Edited by ரஞ்சித்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனியார் ஊடகங்களை தனது இனவழிப்பிற்கும், சிங்களக் குடியேற்றங்களுக்கும் பிரச்சார இயந்திரங்களாக்கிய ஜெயார்

பிரதான தொடரிலிருந்து சற்று விலகி அக்காலத்தில் ஜெயவர்த்தனவும், காமிணி திசாநாயக்கவும், லலித் அதுலத் முதலியும் தமது இன ஒதுக்கல் கொள்கைகளுக்கு ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதுபற்றிச் சற்று விளக்கலாம் என்று நினைக்கிறேன். தாம் செய்ய நினைத்த அனைத்து தீவிரச் செயற்பாடுகளுக்கும் சண், தி ஐலண்ட் மற்றும் அதனோடிணைந்த சிங்கள இனவாதப் பத்திரிக்கைகளை அவர்கள் பயன்படுத்த முடிவெடுத்தனர். அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட எதிர்க்கட்சிக்குச் சார்பான பத்திரிக்கைகளை எதற்காகப் பயன்படுத்துகிறீர்கள் என்று ஒருமுறை லலித் அதுலத் முதலியிடம் கேட்டேன். அதற்குப் பதிலளித்த லலித், "டெயிலி நியூஸ் எமது பத்திரிக்கை. ஆகவே டெயிலி நியூஸோ அல்லது தினமினவோ இவ்வாறான செய்திகளைக் காவி வந்தால் அவற்றினை நாமே வழங்கியதென்பஎன்பதை மக்கள் உடனடியாக அறிந்துகொள்வார்கள். ஆகவேதான் சண், தி ஐலண்ட் போன்ற பத்திரிக்கைகளைப் பயன்படுத்துவதென்று முடிவெடுத்தோம்" என்று கூறினார்.

இக்காலப் பகுதியில் ஜெயாரும் அவரது இரு சகாக்களும் தி ஐல‌ண்ட் பத்திரிக்கையின் பீட்டர் பாலசூரிய, ஞாயிற்றுக்கிழமை பதிப்பான ஐலண்ட் பத்திரிக்கையின் ஜெனிபர் ஹென்ரிக்கஸ், மற்றும் சண்டே பத்திரிக்கை மற்றும் அதன் ஞாயிற்றுக்கிழமை பதிப்பு ஆகியவற்றின் மூத்த பத்திரிக்கையாளர்களான அநுர குலதுங்க, ரனில் வீரசிங்க ஆகியோரையும்  தமது பிரச்சாரச் செயற்பாடுகளுக்காகப் பாவித்துக்கொண்டனர். 

1982 ஆம் ஆண்டு கார்த்திகை 28 ஆம் திகதி வெளிவந்த சண்டே பத்திரிக்கையின் ஞாயிற்றுக்கிழமை பதிப்பிலும் அதன் சகோதரச் சிங்களப் பத்திரிக்கைகளிலும் ஜெயாரும் காமிணியும் முன்னெடுத்த இனவாதம் கடை விரித்திரிந்தது. காந்தியம் அமைப்பைக் கடுமையாகச் சாடிய இப்பத்திரிக்கைகள் "நாடற்ற" மலையகத் தமிழர்களை எல்லையோரக் கிராமங்களில் குடியேற்றுவதாகவும், பின்னர் அக்கிராமங்களை பயங்கரவாதிகள் மறைந்திருந்து பயிற்சி எடுக்கவும், பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பாவித்து வருவதாக அவை செய்தி வெளியிட்டிருந்தன. "பயங்கரவாதிகள் நாடற்ற மலையகத் தமிழர்களைக் கொண்டு மனித வேலி ஒன்றினை அமைத்து வருகின்றனர்" என்று அவை தலைப்பிட்டிருந்தன. 

Trinco_divisions_ethnic_pattern_2007.jpg

சிங்கள இராணுவத்தினரும், காவல்த்துறையும் காந்தியம் பண்ணைகளைச் சுற்றிவளைத்துச் சோதனையிடவும், அவற்றினை அழித்து, அங்கிருந்தோரை விரட்டவும் தேவையான களநிலையினை இப்பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள் உருவாக்கிக் கொடுத்திருந்தன. 1983 ஆம் ஆண்டு, பங்குனி மாதமளவில் இப்பண்ணைகளை முற்றாகத் துடைத்தழிக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்காக ஒரு உத்தியினை சிங்கள இராணுவமும் காவல்த்துறையும் பாவித்தன. முதலில் மலையக மக்கள் வாழ்ந்துவந்த காந்தியம் பண்ணையின் பகுதியினை இராணுவம் சுற்றிவளைக்கும். பின்னர் அங்கிருப்பவர்களை பொலீஸார் வீதிக்கு இழுத்து வருவர். எங்கே கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்பதனை அறிவிக்காது பஸ்களில் ஏற்றப்படும் இந்த மலையகத் தமிழர்கள் இரவோடிரவாக மலையகத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு வீதிகளில் இறக்கிவிடப்படுவர்.  

பங்குனி 14 ஆம் திகதி இந்த துடைத்தழிக்கும் நடவடிக்கைக்கு இன்னுமொரு பரிணாமம் சேர்த்துக்கொள்ளப்பட்டது. திருகோணமலைக்கு மேற்காக 25 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் பன்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த மலையக மக்களின் 16 கொட்டகைகளுக்கு சிறிலங்கா பொலீஸார் தீமூட்டினர். தொண்டைமான் இதுபற்றிக் கேள்விப்பட்டபோது நானும் அவருடன் கூடவிருந்தேன். செய்தியைக் கேட்ட தொண்டைமான் கொதித்துப் போயிருந்தார். ஜெயவர்த்தனவின் கட்டளைகளின்படியே பொலீஸார் இவற்றைச் செய்கிறார்கள் என்பது அவருக்கு நன்கு புரிந்தது. அதனால் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவரால் செய்ய முடிந்ததெல்லாம் பத்திரிக்கை அறிக்கையொன்றினை வெளியிடுவது மட்டும்தான்.

1983 ஆம் ஆண்டு சித்திரை மாதம் வவுனியாவில் இயங்கிவந்த காந்தியம் அலுவலகம் இழுத்து மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அவ்வமைப்பின் ஸ்த்தாபகர்களான வைத்தியர் ராஜசுந்தரம் மற்றும் எஸ் ஏ. டேவிட் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டனர். ஜூலை இனப்படுகொலைகளில், 25 ஆம் திகதி இன்னும் 53 தமிழ் அரசியற்கைதிகளுடன் வைத்தியர் ராஜசுந்தரமும் சிங்களச் சிறைக் காவலர்களாலும், கைதிகளாலும் கொல்லப்பட்டார். டேவிட் வெலிக்கடைச் சிறைப் படுகொலையிலிருந்து உயிர் தப்பினார். மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு பின்னர் வேறு தமிழ்க் கைதிகளுடன் மாற்றப்பட்ட அவர் மட்டக்களப்புச் சிறையுடைப்பின்போது அங்கிருந்து தப்பித்து இந்தியாவைச் சென்றடைந்தார்.

colonisation.gif

1983 ஆம் ஆண்டு ஆடி மாதமளவில் மலையகத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் அடாவடித்தனங்கள் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டன. பண்ணைகளில் இருந்து பெரும்பாலான மலையகத் தமிழர்களை அரசு விரட்டியடித்திருந்தது. இப்பகுதிகளில் பெருமளவிலான தெற்குச் சிங்களவர்களைக் குடியேற்றும் நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டின் தமிழினப் படுகொலைகள் இச்சிங்களக் குடியேற்றங்களைத் தற்காலிகமான‌ தேக்க நிலைக்கு கொண்டுவந்தன.

DSS-Planning.webp?ssl=1

தமிழர்களின் தனிநாடான ஈழத்திற்கான அவர்களின் கோரிக்கையினை முற்றாக அழித்துவிடுவதற்கான சூழ்ச்சித் திட்டம் 1983 ஆம் ஆண்டு பங்குனி மாத‌த்தில் கொழும்பு மகாவலி அமைச்சிலேயே போடப்பட்டது. தமிழீழத்தின் அடிப்பகுதியை முற்றாக உடைத்தெடுக்கும் நோக்கத்துடன் தமிழர் தாயகத்தை சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதன் மூலம் மூன்று பிரிவுகளாகச் சிதைப்பதென்று அங்கு திட்டமிடப்பட்டது. அச்சிங்களக் குடியேற்றத் திட்டங்களாவன, மாதுரு ஓயாக் குடியேற்றத் திட்டம், வலி ஓயா (மணலாறு) சிங்களக் குடியேற்றம் மற்றும் மல்வத்து ஓயா சிங்களக் குடியேற்றம் என்பனவே அவை மூன்றுமாகும். சிங்களத்தில் ஓயா எனப்படுவது ஆற்றினைக் குறிக்கும். இந்த மூன்று ஆற்றுப்படுக்கைகளின் ஓரங்களில், செழிப்பான தமிழர் தாயகத்தில் சிங்களவர்கள் அரச முனைப்புடன் குடியேற்றப்பட்டார்கள்.

DS-44.jpg?ssl=1

தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எல்லையிலேயே மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. மாதுரு ஓயா ஆற்றினையண்டி உருவாக்கப்படும் சிங்களக் குடியேற்றத்தினூடாக திருகோணமலை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பு முற்றாக அறுத்தெறியப்பட்டிருக்கிறது. வெலி ஓய சிங்களக் குடியேற்றம் திருகோணமலை மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் இடையே இருக்கும் நிலத்தொடர்பை மிகவும் பலவீனமாக்கும் வகையில் அரசால் உருவாக்கப்பட்டது. மல்வத்து ஓய சிங்களக் குடியேற்றம் மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியூடாக ஊடறுத்துச் செல்கிறது. மன்னார் மாவட்டத்தின் தென்பகுதிகளை வட மாகாணத்திலிருந்து பிரித்தெடுக்கும் நோக்கத்துடனேயே இக்குடியேற்றம் அரசால் உருவாக்கப்பட்டது. இம்மூன்று சிங்களக் குடியேற்றங்களும் முற்றுபெற்ற பட்சத்தில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களும், சிங்களவர்களால் அரிக்கப்பட்ட மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் வடக்கு எச்சங்களும் மட்டுமே வட மாகாணத்தில் எஞ்சியிருக்கின்றன.

975.ht4_.jpg

வெலி ஓய நீர்ப்பாசணக் கால்வாய்

 

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழினப் படுகொலை முடிந்த கையோடு மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத் திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது. ஆனால் மகாவலி அமைச்சில் பணிபுரிந்த அதிகாரிகளின் ஆர்வக் கோளாரினால் அவ்விடயம் வெளித்தெரிய வந்ததையடுத்து அது தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. சிங்களவர்களைக் குடியேற்றுவது தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையினைப் பலவீனப்படுத்தவே என்று அதிகாரிகள் வெளிப்படையாகப் பேசி வந்தமை இந்தியாவின் எதிர்ப்பையும், சர்வதேசத்தில் அதிருப்திகளையும் ஏற்படுத்தி விட்டிருந்தது.  அவமானப்பட்டுபோன ஜெயார் இக்குடியேற்றங்களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று காட்டத் தலைப்பட்டார். ஆனால், முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றினை வெலி ஓய எனும் சிங்களக் குடியேற்றமாக மாற்றும் திட்டம் முழுமூச்சுடன் ஜெயாரினால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது.

1983 ஆம் ஆண்டு புரட்டாதி 30 ஆம் திகதி சீனாவின் தலைநகர் பீஜிங்கிலிருந்து பாக்கிஸ்த்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் பயணம் செய்த அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் கொழும்பில் தங்கி ஜெயாருடன் தேநீர் அருந்தினார். இந்திய புலநாய்வுத்தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் வெயின்பேர்கரின் ஜெயாருடனான சந்திப்பு இலங்கைக்கு ஆயுத உதவிகளைச் செய்வது தொடர்பாகவே அமைந்திருந்தது. இலங்கைக்கு நேரடியான ஆயுத வழங்கலைச் செய்வதில் அமெரிக்க அரசாங்கம் சங்கடப்படுவதாக வெயின்பேர்கர் ஜெயாரிடம் தெரிவித்திருக்கிறார். ஆகவே, இலங்கைக்குத் தேவையான ஆயுதங்களை இஸ்ரேலின் ஊடாகவோ அல்லது பாக்கிஸ்த்தானூடாகவோ தன்னால் செய்துகொடுக்கமுடியும் என்று அவர் ஜெயாரிடம் உறுதியளித்திருக்கிறார். அமெரிக்காவின் ஆயுத உதவி உறுதியாக்கப்பட்டதையடுத்து வெலி ஓயாத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க ஜெயவர்த்தன முடிவெடுத்தார்.

See the source image

அமெரிக்காவினால் செய்யப்படவிருக்கும் ஆயுத உதவிகளுக்குப் பிரதியுபகாரமாக இலங்கை சில விடயங்களை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று ஜெயாரிடம் கோரினார் வெயின்பேர்னர். அவையாவன, இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளி மீள ஆரம்பிப்பது, வொயிஸ் ஒப் அமெரிக்கா வானொலிச் சேவையினை இலங்கையில் ஆரம்பிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது, திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு வழங்குவது. இம்மூன்று விடயங்கள் தொடர்பான பேரம்பேசல்களுக்கு அமெரிக்க அதிபர் ரீகனின் ஆலோசகர் வேர்னன் வோல்ட்டர்ஸ் இலங்கைக்கு வருவார் என்றும் வெயின்பேர்னர் ஜெயாரிடம் தெரிவித்தார்.

ஆனால், வெயின்பேர்னரோ ஊடகங்களுடன் பேசும்போது தனது பயணத்திற்கான காரணத்தை திரித்துக் கூறினார். இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சினை ஒரு அரசியல்ப் பிரச்சினையென்றும், அதனை அரசியல் ரீதிய்ல் மட்டுமே தீர்க்கமுடியும் என்று அமெரிக்கா நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் உதவியுடன் தமிழர் பிரச்சினையினை இலங்கை அரசியல்த் தீர்வினூடாகத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று தான் ஜெயாரிடம் வேண்டுகோள் விடுத்த‌தாகவும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் ஆயுத உதவியினால் உற்சாகமடைந்த ஜெயவர்த்தன உடனடியாக செயலில் இறங்கினார். 1983 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் தனது பாதுகாப்புச் செயலாளரான அசோக டி சில்வாவை இணைந்த அரச படைகளின் விசேட நடவடிக்கைகள் கட்டளை மையம் எனும் புதிய பாதுகாப்புப் பிரிவை உருவாக்குமாறு பணித்தார். இக்கட்டளை மையத்தினூடாக முப்படைகளையும், பொலீஸாரையும் ஒரே கட்டளைப் பீடத்தின் கீழ் கொண்டுவர ஜெயாரினால் முடிந்தது. கடற்படைத் தளபதி அசோக டி சில்வா இக்கட்டளை மையத்தின் இணைப்பதிகாரியாகவும், மகாவலி அமைச்சின் மேலதிகச் செயலாளர் பண்டாரகொட கட்டளை மையத்தின் உதவி இணைப்பாளராகவும் ஜெயாரினால் நியமிக்கப்பட்டனர். பண்டாரகொட திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் அம்மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களை துரித கதியில் நடத்திவந்தமையினைப் பாராட்டும் முகமாகவே ஜெயாரினால் அவருக்கு விசேட கட்டளை மையத்தில் உயர் பதவியொன்று வழங்கப்பட்டது. 

destroyed_villages.jpg

ஜெயாரின் பணிப்பின் பேரில் விசேட கட்டளைப் பணியகத்தை உருவாக்கிய அசோக டி சில்வா, அப்பணியகத்திற்கு இரண்டு முக்கிய பணிகள் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். முதலாவது பணி, "வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதிகளுக்கெதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது". இரண்டாவது, "இந்த மாவட்டங்களில் இடம்பெறும் குடியேற்றங்கள் மற்றும் சிவில் நிர்வாக சேவைகளை மேற்பார்வை செய்வது".

அதே பத்திரிக்கையாளர் மாநாட்டில் பண்டாரகொடவும் பங்குபற்றியிருந்தார். தொடர்ந்து பேசிய அசோக டி சில்வா, விசேட கட்டளைப் பணியகத்தின் படைகளின் முதலாவது நடவடிக்கை பயங்கரவாதிகளை குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து விரட்டியடிப்பதுதான் என்று கூறினார். அவர் குறிப்பிடும் விசேட நடவடிக்கை குறித்து மேலதிக தகவல்களை ஊடவியலாளர்கள் அவரிடம் கேட்க முட்பட்டபோது, "இராணுவ இரகசியங்களை வெளியே சொல்லமுடியாது" என்று கூறித் தவிர்த்துவிட்டார். ஆனால் சண் மற்றும் தி ஐலண்ட் பத்திரிக்கைகளில் தேவையானளவு விபரங்களுடன் இந்த விசேட நடவடிக்கை பற்றிய விடயங்கள் அரசால் கசியவிடப்பட்டிருந்தன.  

ஐப்பசி 7 ஆம் திகதி சண்டே ஐலண்ட்டில் வெளிவந்த பீட்டர் பாலசூரியவின் தலைப்புச் செய்தி இவ்வாறு கூறியது, "காந்தியம் அமைப்பினரால் குடியேற்றப்பட்ட சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் விரைவில் வெளியேற்றப்படவிருக்கிறார்கள்". "தெற்கில் காணியற்ற சிங்களவர்களைக் குடியேற்றவென உலக வங்கியின் உதவியோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் 500 ஏக்கர்களில் தெரிவுசெய்யப்பட்டிருந்த காணிகளில் கடந்த இரு வருடங்களாக சட்டவிரோதமாகக் கூடியேறி வாழ்ந்துவரும் 50 மலையகத் தமிழ்க் குடும்பங்களை அரசாங்கம் அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துவருவதாக" அச்செய்தி கூறியது. வவுனியா அரச அதிபரால் தெரிவுசெய்யப்பட்ட காணியற்ற விவசாயிகளை இந்நிலங்களில் குடியேற்றுவது சட்டவிரோத மலையகத் தமிழ்க் குடியேற்றவாசிகளால் இதுவரையில் தடைப்பட்டிருந்ததாக அச்செய்தி மேலும் கூறியது.

ஜெயவர்த்தனவின் தமிழர்களைத் தோற்கடிக்கும் செயற்பாடுகளுக்கு உற்ற துணை வழங்கியவரும், தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதை ஒரு கொள்கையாகவே கொண்டிருந்தவருமான காமிணி திசாநாயக்க ஜெயாரின் ஆலோசனையின் பெயரில் உருவாக்கப்பட்ட இணைந்த படைகளின் விசேட கட்டளைப் பணியகத்தைப் பெரிதும் நியாயப்படுத்தியதுடன், அதனை பலப்படுத்தும் காரியங்களிலும் ஈடுபடலானார். 

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மலையகத் தமிழர்கள் குடியேறி வாழும் இடங்களைப் பார்த்து வரவென தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான அதிகாரியான கருணாதிலக்கவை 1983 ஆம் ஆண்டு ஐப்பசி 10 ஆம் திகதி அம்மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார். கருணாதிலக்க காமினிக்கு வழங்கிய அறிக்கையில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெருமளவான காணிகளில் பிரஜாவுரிமையற்ற மலையகத் தமிழர்கள் குடியேறி வாழ்ந்துவருவதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தக் குடியேற்றங்களால் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

சண், தி ஐலண்ட் ஆகிய பத்திரிக்கைகள் காந்தியம் பண்ணைகளில் இருந்து தமிழர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கைகளுக்காக சிங்கள மக்களைத் தூண்டிவிடும் பிரச்சார நடவடிக்கைகளில் இறங்கின. 1983 ஆம் ஆண்டு ஐப்பசி 17 ஆம் திகதி வெளிவந்த சண் பத்திரிக்கை, "பிரஜாவுரிமையற்ற மலையகத் தமிழர்கள் வடக்குக் கிழக்கில் சட்டவிரோ காணி பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று ஓலமிட்டிருந்தது. அப்பத்திரிக்கையின் முதலாம் பக்கத்தின் காற்பகுதி இம்மலையகத் தமிழ் மக்களின் குடியேற்றத்தினை விமர்சிக்கும் விதமாகவே அமைந்திருந்தது. "பொலீஸாரும், படையினரும் இக்குடியேற்றங்களால் பாதுகாப்பு அச்சுருத்தல் ஏற்படப்போகிறது என்று அஞ்சுகின்றனர்", "அரச சார்பற்ற நிறுவனங்கள் பெருமளவு நிதியினை இச்சட்டவிரோதக் குடியேற்றங்களுக்காக வாரியிறைக்கின்றனர்", "மனித வேலியமைத்து ஈழத்தின் எல்லைகளைக் காத்துக்கொள்ள பிரிவினைவாதிகள் எத்தனிக்கிறார்கள்" என்கிற தலைப்புக்கள் கொட்டை எழுதுக்களுடன் முதற்பக்கத்தை அலங்கரித்திருந்தன.

வவுனியாவில் இடம்பெற்ற‌ விடயங்களை திகதி அடிப்படையில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருந்தது, "கூட்டம் கூடமாக பிரஜாவுரிமையற்ற மலையகத் தமிழர்கள் தொண்டைமானின் மிக இழிவான செயலினால் வடக்குக் கிழக்கின் பல பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் காந்தியம் போன்ற பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அரச சார அமைப்புக்கள் நாடற்ற மலையகத் தமிழர்களைப் பொறுப்பேற்று யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின்  எல்லையோரக் கிராமங்களில் தமக்கென்று பாதுகாப்புப் பிரதேசம் ஒன்றினை மனித வேலி கொண்டு உருவாக்கி வருகின்றன‌ர். இதுவரையில் சுமார் 10,000 நாடற்றவர்கள் இப்பகுதிகளில் குடியேறி உள்ளதுடன் இவர்களுக்கான நிதியினை நோர்வேயின் ரெட்பாணா, ஜேர்மன் அமைப்பு, கத்தோலிக்கத் திருச்சபையினால் நடத்தப்படும் செடெக் மற்றும் சர்வோதய ஆகிய அரசுசாரா அமைப்புக்கள் வழங்கிவருகின்றன" என்றும் கடுமையாகச் சாடியிருந்தது.

 

  • Thanks 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல்நாள் சமாதானம் பற்றியும், இரண்டாம் நாள் போரின் மூலம் தமிழர்களை அடிமைப்படுத்துவது பற்றியும் ஆலோசனைகளில் ஈடுபட்ட ஜெயவர்த்தன‌

J R Jayewardene - Alchetron, The Free Social Encyclopedia

மலையக மக்களை சட்டத்திற்குப் புறம்பாக எல்லையோரங்களில் தமிழர்கள் குடியேற்றிபவருகிறார்கள் என்கிற விசமத்தனமான அறிக்கையினை அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் அமைச்சர்கள் எதிர்த்தார்கள். இதற்கெதிராக தொண்டைமான் காட்டமான அறிக்கையொன்றினை வெளியிட்டதுடன், அமைச்சர் தேவநாயகம் மறுநாளான 18, ஐப்பசி 1983 இல் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினையும் கூட்டியிருந்தார். தொண்டைமானின் அறிக்கை தொடர்பாகவும், தேவநாயகத்தின் பத்திரிக்கையாளர் மாநாடு தொடர்பாகவும் டெயிலி நியூஸிற்காக நான் செய்திகளை தயாரித்திருந்தேன். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அரசு சாரா அமைப்புக்களும் பலநூற்றுக்கணக்கான நாடற்ற மலையகத் தமிழர்களை எல்லையோரக் கிராமங்களில் குடியேற்றிவருவதாக அறிக்கைகள் வெளிவந்ததை தொண்டைமான் கடுமையாகச் சாடியிருந்தார். சிங்களப்பகுதிகளில் பெருந்தோட்டங்களில் வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்கள் மீது 1977 ஆம் ஆண்டு சிங்களவர்கள் நடத்திய தாக்குதல்களாலேயே அப்பகுதிகளில் வாழ்ந்துவந்த பல தமிழர்கள் தமது பாதுகாப்புக் கருதி வடக்குக் கிழக்கிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவருவதாக அவர் கூறினார். மேலும், அக்காலப்பகுதியில் தான் அரசாங்கத்துடன் இணைந்திருக்கவில்லை என்பதையும்  குறிப்பிட்டிருந்த தொண்டைமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எக்கட்டத்திலும் மலையகத் தமிழர்களை வடக்குக் கிழக்கில் குடியேற்றுவதில் பங்கெடுத்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், அரசாங்கத்தால் கைவிடப்பட்ட தமிழ் அகதிகளை அரசு சாரா அமைப்புக்களே பராமரித்து வருவதனால் அவர்களுக்கு தனது நன்றியையும் தொண்டைமான் தெரிவித்தார். அண்மையில் காந்தியம் பண்ணைகளில் இருந்து மலையகத் தமிழர்களை அடாத்தாக அரசாங்கம் விரட்டியடித்தமை மனித நேயத்திற்குப் புறம்பான செயல் என்றும் கண்டித்தார்.

அரசாங்கத்தின் கொள்கைக்குப் புறம்பாகச் சென்று மக்களைக் குடியேற்றுவதில் அதிகாரிகள் கடைப்பிடித்துவரும் போக்கு தவறானது என்றும் அவர் கண்டித்தார். மலையகத் தமிழர்களை மீளக் குடியேற்றுவதற்குப் பதிலாக அவர்களை வேண்டப்படதாகவர்களைப் போன்று மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அதிகாரிகள் நடத்திவருவதாக அவர் விமர்சித்தார். மேலும் காந்தியம் பண்ணைகளில் இருந்த மலையகத் தமிழர்களை இராணுவத்தினரும், பொலீஸாரும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டே விரட்டியடித்தார்கள் என்றும் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தார்.

தேவநாயகம் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தமிழரின் தாயகத்தில் எந்தப் பகுதியிலும் மலையக மக்களை மனிதக் காப்புச் சுவர்களாக தமிழர்களோ அரசியட் கட்சிகளோ குடியேற்றவில்லை என்று,  இதுகுறித்து வந்தபத்திரிக்கை அறிக்கைகளைத் திட்டவட்டமாக மறுத்தார். சண் பத்திரிக்கையில் விசமத்தனமாக வெளியிடப்பட்ட அறிக்கையினை பொறுப்பற்ற ஊடக தர்மம் என்று கடிந்துகொண்ட அவர், சர்வதேசத்தில் மதிப்பிற்குரிய அமைப்பாக இயங்கும் அரசு சாரா அமைப்பொன்றின்மீது வேண்டுமென்றே களங்கத்தை ஏற்படுத்தும்  முயற்சியே இதுவென்றும் குறிப்பிட்டார். தமிழர் தாயகத்தில் மலையகத் தமிழர்கள் குடியேறுவதை சட்டத்திற்கு முரணான குடியேற்றம் என்று கூப்பாடு போடும் தெற்கின் பத்திரிக்கைகள், கிழக்கின் மாதுரு ஓயாப் பகுதியில் தமிழரின் நிலங்களில் சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேற்றப்படுவதை, அங்கு நடைபெற்றுவரும் நில அபகரிப்பை  ஒருபோதும் கண்டிப்பதில்லை என்றும் அவர் கூறினார். தனது தொகுதியான கல்க்குடாவில் நிகழ்த்தப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்களில் இருந்து அதனைக் காப்பற்ற தனது அமைச்சர்களோடு முரண்படும் போக்கினை தேவநாயகம் கொண்டிருந்தார். மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம் தேவநாயகத்தின் கல்க்குடா தொகுதியிலேயே அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத் தக்கது. 

காமிணி திசாநாயக்க தமிழ் அமைச்சர்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதுகுறித்து மோதுவதென்று முடிவெடுத்தார். தனது தொகுதியான நுவரெலியாவில் இருந்தே தொண்டைமானும் தெரிவுசெய்யப்பட்டு வருவதால், அவரை தனது அரசியல் எதிரியாகக் கணித்தே காமிணி தனது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆகவே, தொண்டைமான் தனது மலையக மக்களின் நலன்கள் குறித்து மட்டுமே கவலைப்படுவதாகவும், நாட்டின் பாதுகாப்புக் குறித்து தொண்டைமானுக்கு அக்கறையில்லை என்றும் வெளிப்படையாகக் கூறினார். மேலும் வவுனியாவிலும், மட்டக்களப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் பயங்கரவாதிகளின் பயிற்சிமுகாம்களாக மாற்றப்பட்டு வருவதாக அவர் கூறினார். மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பயங்கரவாதிகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் தேவநாயகத்தின் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க தனது ஊடக நண்பர்களான சண் பத்திரிக்கையை காமிணி நாடினார். மறுநாள் (19/10/1983) வெளிவந்த சண் பத்திரிக்கைச் செய்தியில் மாதுரு ஓயா குடியேற்றத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை பிரஜைகளான மக்கள் அரசாங்கத்திற்கு முறைப்படி வரிகட்டும் மக்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வவுனியாவில் குடியேற்றப்பட்டு வரும் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்கள் என்றும் அச்செய்தி குறிப்பிட்டிருந்தது. மாதுரு ஓயாவில் குடியேறும் சிங்களவர்களை இலங்கையின் பிரஜைகள் என்று குறிப்பிட்டதன் ஊடாக சிங்களவர்கள் இந்த நாட்டில் எப்பகுதியிலும் குடியேறும் உரிமையினைக் கொண்டிருப்பதாக காமிணி திசாநாயக்கவினால் சண் பத்திரிகைக்குக் கொடுக்கப்பட்ட செய்தி கூறியிருந்தது.

தனது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களின் கவலைகளை ஜெயவர்த்தன உதாசீனம் செய்தார். மலையகத் தமிழர்களை காந்தியம் பண்ணைகளில் இருந்து அடித்துவிரட்டுவது எனும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த அவர் உறுதிபூண்டார். அமெரிக்க அதிபர் ரீகனின் தொடர்பாடலதிகாரியான வேர்னன் வோல்ட்டார்ஸ் ஊடாக இஸ்ரேலியர்களுடனான தொடர்பினை தனது மகன் ரவியின் மூலம் ஜெயவர்த்தன ஏற்படுத்திக்கொண்டார்.

கார்த்திகை 7 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த வேர்னன் வோல்ட்டர்ஸ் மறுநாள் 8 ஆம் திகதி ஜெயவர்த்தனவுடன் நீண்டநேரம் பேச்சுக்களில் ஈடுபட்டார். பேச்சு முழுதும் இஸ்ரேலினூடாக இராணுவ உதவிகளை இலங்கைக்கு எப்படிப் பெற்றுக்கொடுப்பது என்பதாகவே இருந்தது. இப்பேச்சுக்களில் லலித் அதுலத் முதலியும், ரவி ஜெயவர்த்தனவும் பிரசன்னமாகியிருந்தனர். அதேவேளை ஜெயாரின் அழைப்பின்பேரில் கார்த்திகை 7 ஆம் திகதி கொழும்பு வந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் பார்த்தசாரதி ஜெயாருடன் சமாதான முயற்சிகள் குறித்து நீண்ட பேச்சுக்களில் ஈடுபட்டார். அதேவேளை இஸ்ரேலியர்களின் இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை எப்படி முற்றாக அழித்துவிடுவது என்பதுபற்றிய பேச்சுக்களிலும் ஜெயவர்த்தன ஈடுபட்டிருந்தார். தமிழர்களின் பிரச்சினைக்கான அடிப்படைத் தீர்வாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்று தான் முன்வைத்த தீர்வினை எப்படி மெருகூட்டுவது என்று பார்த்தசாரதியிடம் விளக்கிய ஜெயார், இரண்டிற்கு மேற்பட்ட மாவட்டங்களை இணைக்கலாம் என்றும் பேசினார். முதல்நாளில் சமாதானம் குறித்தும், அடுத்த நாளில் போரில் தமிழர்களை எவ்வாறு தோற்கடிக்கலாம் என்பது குறித்தும் பேசுமொரு ஜனாதிபதியை நம்பி தமிழர்கள் எப்படிப் பேச்சுக்களில் ஈடுபடுவது என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவரான பாலக்குமார் சென்னையில் கார்த்திகை 9 ஆம் திகதி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது கேள்வியெழுப்பியிருந்தார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்களுக்கெதிரான யுத்தத்தின் புலநாய்வு வலையமைப்பை உருவாக்கிக் கொடுத்த இஸ்ரேலின் மொசாட் அதிகாரிகள்

undefined

அன்றிரவு கொழும்பில் தன்னிடம் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் துருவித் துருவிக் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் இருந்து வேர்னன் வோல்ட்டர்ஸ் தப்பிக்க எத்தனித்தார். ஜெயாருடனான தனது பேச்சுக்கள் குறித்த இந்தியப் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளைச் சற்றும் கணக்கில் எடுக்காத வோல்ட்டர்ஸ், தமிழரின் பிரச்சினையில் இந்தியாவின் பார்த்தசராதியின் முயற்சிகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், இலங்கை ஜனாதிபதி இனப்பிரச்சினையினை தீர்த்துக்கொள்ளும் அனைத்து திட்டங்களையும் கைவசம் கொண்டிருந்தார் என்றும் காட்டமாகக் கூறினார். திருகோணமலை துறைமுக எண்ணெய்க் குதங்களை குத்தகைக்கு எடுக்கப்போகிறீர்களா? என்கிற கேள்விக்கும், நான் திருகோணமலைப் பக்கமே போகப்போவதில்லை, ஆனால் இலங்கை மக்களின் சரித்திரம் பற்றி அறிந்துகொள்ள கண்டிக்குச் சென்றிருந்தேன் என்று கூறினார்.

 ஆனால் திருகோணமலை துறைமுக குத்தகை விவகாரம் குறித்து வோல்ட்டர்ஸ் ஜெயாருடன் பேசியிருந்தார். அத்துடன் அமெரிக்காவின் வானொலி நிலையத்திற்கான ஜெயாரின் சம்மதத்தையும் கையொப்பத்துடன் அவர் பெற்றுக்கொண்டார். இதற்கான பத்திரங்களை அவர் அமெரிக்காவிலிருந்து தயாரித்த்துக் கொண்டு வந்திருந்தார். மூன்றாவதாக வோல்ட்டர்ஸ் ஒரு விடயத்தையும் நிறைவேற்றிக்கொண்டார். அதுதான் இலங்கையில் இஸ்ரேலுக்கான இராஜதந்திர அந்தஸ்த்தினை வழங்குவது. அதற்கும் ஜெயார் சம்மதம் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீதான தனது யுத்தத்திற்கு அமெரிக்காவின் சாதகமான நிலைப்பாட்டு மாற்றத்தினால் மிகுந்த உற்சாகமடைந்த ஜெயார் தனது இராணுவ ரீதியிலான தீர்வினை முன்னெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடலானார். தனது இராணுவத்தினருக்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக இஸ்ரேலிய மொசாட் அதிகாரிகளை ஐரோப்பாவில் சந்திக்க தனது மந்திரிசபைச் செயலாளர் ஜி.வி.பி. சமரசிங்கவை ஜெயார் அனுப்பி வைத்தார். அம்மாத இறுதியில் இஸ்ரேலிற்கும், இலங்கைக்குமான இராணுவ உதவிகளுக்கான ஒப்பந்தம் ஐ நா சபை அமர்வுகளுக்காக ஜெயாரின் பயணத்தின்போது  கைச்சாத்திடப்பட்டது. 

இஸ்ரேலுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. தைமாதத்தில் இஸ்ரேலுடன் தமது அரசாங்கம் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திவருவதாக ஜெயார் சபையில் அறிவித்தபோது அவரது அமைச்சரவையில் இருந்த இரு முஸ்லீம்களான மொகம்மட்டும், ஹமீதும் அதற்கு தமது ஆட்சேபணையினை வெளியிட்டனர். இஸ்ரேலுக்கான இராஜதந்திர அந்தஸ்த்தை இலங்கை வழங்குவது குறித்து முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு தாம் வழங்கிவந்த நிதியுதவியினை சவுதி அரேபியாவும் குவைத்தும் நிறுத்திக்கொண்டன. உள்நாட்டில் முஸ்லீம்களால் ஏற்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை மிக இலகுவாக ஜெயாரினால் நசுக்க முடிந்தபோதும், இந்தியாவையும், ஏனைய முஸ்லீம் நாடுகளையும் அவரால் உதாசீனப்படுத்த முடியவில்லை. ஆகவே வேறு வழியின்றி இஸ்ரேலுக்கான முழுத் தூதரக அந்தஸ்த்தினை வழங்குவதென்ற தனது உடன்பாட்டில் இருந்து பின்வாங்கிய ஜெயார், கொழும்பில் இயங்கிவரும் அமெரிக்க தூதரகத்திற்குள் இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவு எனும் அலுவலகத்தை திறப்பதற்கு அனுமதியளித்தார்.

இஸ்ரேலிய நலன் காக்கும் அலுவலகம் வைகாசி 1984 இல் உருவாக்கப்பட்டது. அதனது முதலவாது அதிகாரியாக டேவிட் மட்நாய் நியமிக்கப்பட்டார். ஆவணி 1984 இல் இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட்டின் ஆறு அதிகாரிகள் இலங்கைக்கு வந்தனர். இவர்களின் வழிநடத்துதலில் தமிழர்களுக்கெதிரான உளவு வலையமைப்பை இலங்கை இராணுவம் உருவாக்கிக் கொண்டது.

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் பெளத்தர்களின் எச்சங்களைத் தமதென்று உரிமைகோரி, தமிழர் தாயகத்தில் சிங்கள பெளத்த குடியேற்றங்களை முடுக்கிவிட்ட இனவாதிகள்

2024-09-12%20Trincomalee.png

தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலையில் அமைக்கப்பட்டுவரும் சிங்கள பெளத்த விகாரை

ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் தமிழரின் தாயகக் கோட்பாட்டினை, அதன் அடிப்படையினைச் சிதைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்க, அவரது அரசின் கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சராகவிருந்தவரும் ஜெயாரினால் இனவாதம் கக்குவதற்காக களமிறக்கப்பட்டவருமான சிறில் மத்தியு, வடக்குக் கிழக்கை சிங்கள - பெளத்த தாயகமாக மாற்றும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியிருந்தார். சிங்கள பெளத்த வெறி தலைக்கேறிய, நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த, சிங்கள சாதிய அமைப்பில் இடைநிலை மற்றும் சிறில் மத்தியூவின் சாதியான கரவா வகுப்பிலிருந்து வரும் பல கல்விமான்கள் வடக்குக் கிழக்கில் பெளத்த எச்சங்கள் என்று தாம் கருதுபவற்றை மீள உருவாக்கி அவற்றைச் சுற்றி சிங்கள மக்களைக் குடியேற்றும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வரலாயினர். இவ்வாறு அவர்களால் அடையாளம் காணப்பட்ட பலவிடங்களில் புதிதாக விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு அவற்றைச் சூழவும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். ஆனால் இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புராதன பெளத்த எச்சங்கள் தமிழ் பெளத்தர்களுக்குச் சொந்தமானவை என்றும், ஒருகாலத்தில் தமிழர்களில் ஒரு பகுதியினர் பெளத்தர்களாக இருந்தனர் என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட சரித்திரத் தகவல்கள் இருந்தபோதிலும், இந்தச் சிங்களக் கல்விமான்களால் இந்த உண்மை வேண்டுமென்றே மறைக்கப்பட்டு வந்தது.  

r/Eelam - Before After

வவுனியா வடக்கில் தமிழ் பெளத்தர்களின் புராதனச் சின்னமொன்றும் சிங்கள மயமாக்கப்பட்டு வரும் காட்சி

தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகள் அசோகச் சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்து 13 ஆம் நூற்றாண்டின் சோழர் காலம் வரைக்கும் தமிழ் பெளத்தர்கள் வாழும் பகுதியாக இருந்திருக்கிறது. இதனால் இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் பெளத்த தமிழர்கள் உருவாக இது காரணமாக அமைந்திருந்தது. தமிழ் பெளத்தர்களின் பிரசன்னமும், ஆதிக்கமும் அநுராதபுர காலத்து மன்னராட்சியின் அவைகளிலும் கணிசனமான அளவு காணப்பட்டு வந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தில் சோழ பெளத்தர்கள் என்று அழைக்கப்பட்ட தமிழ் பெளத்தர்களுக்கும் சிங்கள பெளத்தர்களுக்கும் இடையே பல மோதல்கள் இடம்பெற்று வந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

975.ht5_.jpg

தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் இருக்கும் இராஜராஜ நூதணசாலையில் வைக்கப்பட்டிருக்கும் 14 ‍ 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை

பெளத்த நூல்களும், ஓலைகளும் பாளி மொழியிலேயே எழுதப்பட்டு வந்தமையினால், தமிழ் பெளத்தர்களால் உருவாக்கப்பட்ட நூல்களை சிங்கள‌ பெளத்தர்களின் நூல்கள் என்று உரிமை கோருவது பெளத்த இனவாதிகளுக்கு வசதியாகிப் போயிற்று. தமிழ் பெளத்தர்களால் சிங்கள மொழிக்கும் அதன் இலக்கணத் திருத்தத்திற்கும் ஆற்றப்பட்ட பணி மகத்தானது என்பதைப் பறைசாற்றச் சான்றுகளும் இருக்கின்றன.தமிழ் பெளத்தர்களால் எழுதப்பட்ட வீரசோலியம் எனும் நூலில் காணப்படும் பல இலக்கணத் திருத்தங்கள் சிங்கள இலக்கணப் பயன்படுத்தலில் எங்கும் பரவிக் கிடக்கின்றன.

 சோழர் காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழர் தாயகத்தில் வளர்ந்துவந்த சைவ மதத்தின் தாக்கத்தால் அக்காலத்தில் காணப்பட்ட தமிழ் பெளத்தர்களின் விகாரைகள் அழிக்கப்பட்டு சைவர்களின் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வரலாயின. இதனையே மத்தியூவும் அவரது இனவாத நண்பர்களும் சிங்கள பெளத்தர்களின் விகாரைகள் அழிக்கப்பட்டு, சைவ ஆலயங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக சாதாரணச் சிங்கள மக்களிடையே பெரியளவில் பிரச்சாரம் செய்து வந்தனர். பெளத்த மதத்தினை விரும்பாத தமிழர்கள் புராதண பெளத்த விகாரைகளை அழித்து சைவக் கோயில்களை நிர்மாணித்து வருவதால், அக்கோயில்களை இடித்து, அங்கே மீளவும் பெளத்த விகாரைகளை அரச செலவில் நிர்மாணிப்பது என்பது அவசியமாகிறது என்று தமது செயற்பாட்டிற்கு நியாயம் கற்பித்து வந்தனர் மத்தியுவும் அவரது சகபாடிகளும். இவ்வாறு மீள் நிர்மாணம் செய்யப்பட்ட புதிய விகாரைகளைச் சுற்றித் தவறாது சிங்கள மக்களை அவர்கள் குடியேற்றி வந்தனர்.

UNP%20LG%20Manifesto%202018.jpg

ரணிலின் நல்லிணக்க அரசாங்கத்தால் 500 மில்லியன் செலவில் தமிழர் தாயகத்தில் உருவாக்கப்பட்ட‌ 1000 விகாரைகள் திட்டம் ‍ இன்றும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

சிறில் மத்தியூவின் பெளத்த சிங்களக் குடியேற்றங்களுக்கு சிங்கள ஊடகங்கள் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்து வந்ததுடன் சிங்கள தமிழ் இனங்களுக்கிடையிலான பிணக்கிற்கு மத ரீதியிலான இன்னொரு களம் ஒன்றினையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனூடாக பெளத்த சைவ மோதல் ஒன்றிற்கான களமுனை திறக்கப்பட்டலாயிற்று. அரச மரத்தின் கிளை ஒன்றினை தமிழர் ஒருவர் தறிப்பதாகப் பிரச்சாரப்படுத்தப்பட்ட நிகழ்வொன்று, பெளத்த மதச் சின்னங்களை தமிழ்ப் பயங்கரவாதிகள் அவமதித்து வருகிறார்கள் என்கிற தொனியில் சிங்கள ஊடகங்களால் தொடர்ச்சியாகப் பாவிக்கப்பட்டு வந்தது.

தமிழர் தாயகத்தில் பெளத்த எச்சங்களைத் தேடும் சிங்கள இனவாதிகளின் நடவடிக்கைகள் அரசியல் புதையல்களைத் தேடும் முயற்சியாக அன்று காணப்பட்டது. இதன் அடிப்படையிலேயே சிங்கள இனவாதிகள், தமிழர்களின் தாயகத்தின் ஒரு அங்கமான கிழக்கு மாகாணத்தில் புராதண சிங்கள பெளத்த நாகரீகம் காணப்பட்டதகாக் கூறி, அதனைத் தமது தாயகம் என்று உரிமை கோரி, அங்கு மீண்டும் பெளத்த விகாரைகளையும் சிங்களக் குடியேற்றங்களையும் உருவாக்குவதில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறு செய்வதனால் சைவத் தமிழர்கள் மீது அது செலுத்தப்போகும் தாக்கத்தினை சிங்கள அரசியல்வாதிகளோ, கல்விமான்களோ சற்றேனும் உணரமறுத்துவந்தமை பெரு வருத்தத்தினை எனக்கு ஏற்படுத்தியிருந்தது.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

குரந்தன் ஐய்யனார் ஆலயத்தை சிங்கள பெளத்த விகாரையாக்க ஒன்றுசேர்ந்த சிறில் மத்தியூ, முல்லைத்தீவு இராணுவம் மற்றும் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை நிர்வாகம் - சட்டர்டே ரிவியூ கட்டுரை

220612_Kurunthurmalai_protest_2.jpeg

சிங்கள பெளத்த இனவாதிகளின் திட்டத்தினை தமிழர்கள் நன்கு அறிந்தே இருந்தனர். சிங்கள அரசுகளால் நிதியளிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த சிங்கள பெளத்த மயமாக்கலினை அவர்களால் எதிர்க்க முடியவில்லை. இயலாமையும், ஆத்திரமும் அவர்களை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது.  1982 ஆம் ஆண்டு, ஆவணி மாதம், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிக்கையான சட்டர்டே ரிவியூ வில் வெளிவந்த கட்டுரை ஒன்றினை இங்கு பதிகிறேன். சைவத் தமிழர்களின் கவலைகள் இக்கட்டுரையில் பரவிக் கிடந்தது. பிரபாகரன் சிங்கள பெளத்த மயமாக்கலினை எதிர்க்கத் துணிந்தபோது தமிழர்கள் அவரின் பின்னால் நின்று ஆதரவளிக்கத் தொடங்கினர்.

 "தமிழர்கள் செறிந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தின் குரந்தன் மலைப் பகுதி மிகவும் அமைதியான ஒரு பிரதேசம். இங்கே சைவ மற்றும் பெளத்த மதத்தின் புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன‌. ஆனால் வெகுவிரைவில் கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சினால் இப்பகுதி தனியே சிங்க‌ள பெளத்தர்களுக்கான ஏக வணக்கஸ்த்தலமாகவும், ஒரு சிங்களக் குடியேற்றமாகவும் மாற்றப்படப் போகின்றது".

 "இவ்வமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் முன்னாள் பொதுக் கூட்டுத்தாபன நிர்வாக அதிகாரியும், ஐக்கிய தேசியக் கட்சியின் பலம்பொருந்திய தொழிற்சங்கத்தின் தலைவருமான முக்கியஸ்த்தர் ஒருவர், இச்சிங்கள மயமாக்கல்த் திட்டத்தினை முன்னெடுத்து வருகிறார். அவருக்குத் துணையாக பெருமளவு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு வருகின்றனர்".

 "இப்பகுதியில் இருந்து 20 மைல்கள் தொலைவில் இருக்கும் ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருக்கும் ஓட்டுத்  தொழிற்சாலையில் பணிபுரியும் பல பணியாளர்கள் இப்புதிய விகாரை நிர்மானப் பணிகளில் அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வமைச்சின் கீழ் வழங்கப்படுள்ள பல வாகனங்களும், ஏனைய வளங்களும் விகாரை நிர்மாணத்திற்கு அமைச்சால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன".

"கடந்த கார்த்திகை மாதத்திலிருந்து இப்பகுதியில் காணப்பட்டு வந்த பல சைவ ஆலயங்களின் எச்சங்களை இராணுவத்தினர் அங்கிருந்து அகற்றி தமது வாகனங்களில் ஏற்றிச் செல்வதை இப்பகுதி மக்கள் பார்த்திருக்கின்றனர். வன்னிப்பகுதித் தமிழர்களால் தமது குலதெய்வம் என்று வணங்கப்பட்டு வரும்  குரந்தூர் ஐய்யனார் ஆலயம் அமைந்திருக்கும் குரந்தன் மலைப்பகுதி, நாகஞ்சோலை எனும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் விகாரைக் கட்டுமான‌ப் பணிகள் பல மாதங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அருகிலிருக்கும் ஓட்டுத்தொழிற்சாலையில் பணிபுரியும் பல ஊழியர்கள் இக்கட்டுமானப் பணிகளில் அரசால் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். விகாரை அமைக்கும் பணிகளை மிகவும் இரகசியமாகப் பேணிவரும் அரசு, இதுகுறித்து தகவல்கள் வெளியே கசிவதையும் தடுத்து வருகிறது".

 "இதனையடுத்து இப்பகுதியில் வாழும் தமிழர்கள் சிலர் விகாரை கட்டுமானம் நடக்கும் பகுதியில் சைவர்களின் சூலம் ஒன்றினை நாட்டி, அதனைச் சூழ குடில் ஒன்றினையும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் முல்லைத்தீவு இராணுவ முகாமில் கடமையாற்றிக்கொண்டு, விகாரை கட்டுமானத்திலும் பங்கெடுக்கும் இராணுவத்தினர், அச்சூல‌த்தை பிடுங்கி எறிந்துள்ளதுடன், குடிலையும் அழித்திருக்கிறார்கள். மேலும் இப்பகுதியில் வாழ்ந்துவந்த தமிழர்களை இராணுவம் அடித்து விரட்டியுள்ளதுடன், பல தமிழ் இளைஞர்களையும் கைதுசெய்து இழுத்துச் சென்றிருக்கின்றது. அத்துடன், வனப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இவ்விகாரைக்கான கட்டுமானப் பொருட்களை இலகுவாக எடுத்துச் செல்லும் நோக்கில் ஒட்டுசுட்டானிலிருந்து விகாரை அமைக்கப்பட்டு வரும் நாகஞ்சோலை வனப்பகுதி வரைக்கும் புதிய தார் வீதியொன்றும் அரசால் இடப்பட்டு வருகிறது".

“தமிழரின் தாயகமான இப்பகுதியில் சிங்கள பெளத்தர்களுக்கென்று ஏகமாகக் கட்டப்பட்டு வரும் விகாரையின் மூலம் மூன்று முக்கிய‌ விடயங்களை கைத்தொழில், விஞ்ஞான அலுவல்கள் அமைச்சு செய்துவருகிறது.

 1. இப்பகுதியில் காணப்பட்டு வந்த வரலாற்றுச் சான்றுகளை முழுமையாக அழித்தன் ஊடாக வரலாற்றினைக் கண்டறிய எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய அனைத்து முகாந்திரங்களையும் அடியோடு இல்லாதொழித்திருக்கிறது.

2. இப்பகுதியில் சரித்திர காலம் தொட்டு வாழ்ந்து வரும் தமிழர்கள் இங்கிருந்து விரட்டப்பட்டு அவர்களின் நிலங்கள் புதிய சிங்களக் குடியேற்றக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.

3. இங்கு காணப்பட்ட சைவ ஆலயங்களின் எச்சங்கள் முற்றிலுமாக பிடுங்கி எடுக்கப்பட்டு, பத்திரமாக அகற்றப்பட்டு, இப்பகுதியில் சைவர்கள் வாழ்ந்ததற்கான சாட்சியங்கள் அடியோடு இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றது.  

ஆனால் இவை எல்லாவற்றினைக் காட்டிலும் மிகுந்த அச்சந்தரும் செயற்பாடொன்று நடப்பில் இருக்கும் அரசின் கீழ் மிக மூர்க்கமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதுதான் முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழரின் இருப்பிற்கான தொடர்ச்சி பாரிய திட்டமொன்றின் ஊடாக சிதைக்கப்பட்டு வருகின்றமை".

 "வவுனியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் பதவியா சிங்கள் குடியேற்றம் கிழக்கு நோக்கி விஸ்த்தரிக்கப்பட்டு கொக்கிளாய்க் குளம் நோக்கி விரிவடைந்து வருகிறது. இப்பகுதியில் இருந்து வட கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு இராணுவ முகாம் மற்றும் வட மேற்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஒட்டுசுட்டான் தொழிற்சாலை ஆகிய இரு பிரதான அரச அமைப்புக்களின் அழுத்த‌ங்களினால், அண்மைய காலங்களில் தமிழர் தாயகத்தின் ஏனைய இடங்களில் நடைபெற்றதைப் போன்று, பதவியாவில் பொங்கிவழியும் சிங்களவர்களின் எண்ணிக்கை இப்பகுதிவரை நீட்டிப் பரவப்படப்போகின்றது என்பது நிதர்சனமாகிறது".

 "இது நடக்கும் பட்சத்தில் இம்மூன்று மாவட்டங்களிலும் வாழும் தமிழர்களுக்கிடையிலான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்படப் போகின்றது. இது தனியே தமிழர் தாயகத்தைக் கூறுபோட்டுவிடும் என்பதற்கு அப்பால், இப்பகுதிகளில் இனிவரும் காலங்களில் நடக்கப்போகும் சிங்களக் குடியேற்றங்களை எதிர்க்கும் திராணியும் இப்பகுதிவாழ் தமிழர்களிடத்தில் இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றது".

என்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.

Edited by ரஞ்சித்
ஒட்டுசுட்டான்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியில் சிங்களச் சிறைக்கைதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட குடியேற்றம்

Manalaaru_Mullai_divisions.jpg

தமிழர்களின் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களை சிங்கள பெளத்த தாயகம் என்றும் நிறுவும் நோக்கத்திற்காக தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சு மட்டுமன்றி, அதனுடன் தொடர்புபட்ட் ஏனைய அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்றும் வளங்களைப் பாவித்து வந்தார். ஆனால் ஜெயவர்த்தனவின் திட்டமான தமிழர் தாயகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைப் பூரணமாக இராணுவமயப்படுத்துவதற்கு அவருக்கு பெருமளவு நிதியும், வளங்களும் தேவைப்பட்டது. 1983 ஆம் ஆண்டின் தமிழினத்தின் மீதான இனவழிப்பு அரசின் நிதியிருப்பை வெகுவாகப் பாதித்திருந்தது. திறைசேரி முற்றாகக் காலியாகியிருந்தது. ஆகவே "தெற்கில் ஏற்பட்டுவரும் கலவர நிலையினை கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதியில் வாழும் நிலமற்ற சிங்கள மக்களை வட கிழக்குப் பகுதியான வெலி ஓயவில் குடியேற்ற நிதியுதவி" என்கிற போர்வையில் குடியேற்றங்களை இராணுவமயப்படுத்தும் தனது திட்டத்திற்கு உலக வங்கியிடம் கோரிக்கை ஒன்றும் ஜெயாரின் அரசால் முன்வைக்கப்பட்டது.

kokkulaay_map.jpg

ஜெயாரின் நோக்கத்தினை நடைமுறைப்படுத்தும் திட்டம் ஒன்று குறித்து நான் அறிந்திருந்தேன். மகவலி அபிவிருத்தித் திட்டத்தில் "L" பிரிவில் பணப்பயிர்களான மரமுந்திரிகை மற்றும் சோயா ஆகிய‌வற்றைப் பயிரிடுவதற்கான ஆலோசனைகளை வழங்கவென்று இரு இஸ்ரேலிய விவசாய நிபுணர்களை அரசு அமர்த்தியது.  அவர்களுள் ஒருவர் ஜெருசலேம் பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். மற்றையவர் சோயா பயிற்ச்செய்கையில் இஸ்ரேலின் நெகேவ் பாலைவன பயிர்ச்செய்கைத் திட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர். ஆனால் 1984 ஆம் ஆண்டு கென்ட் மற்றும் டொலர் குடியேற்றப் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதலினால் இம்முயற்சி கைவிடப்பட்டது.

1984 ஆம் ஆண்டு பங்குனி 24 ஆம் திகதி லலித் அதுலத் முதலி தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். இணைந்த படைகளின் கட்டளை மையத்திற்கு வழங்கப்பட்ட கடமையினை அவர் பொறுப்பெடுத்தார். வைகாசி முதலாம் வாரத்தில் அவர் மாங்குளத்திற்குச் சென்றிருந்தார். வவுனியாவில் மலையகத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டிருந்த பகுதிகளுக்கு வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் ஆர்தர் ஹேரத்தையும் லலித் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றார். அவரது பயணத்தை பதியும் அரச ஊடகவியலாளராக நானும் அவருடன் சென்றிருந்தேன். தமிழ் தொழிலதிபர்களால் அமைக்கப்பட்ட பல பண்ணைகளில் இரு பண்ணைகளான கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளுக்கும் நாம் சென்றோம்.  லலித்தின் விஜயத்தின் பின்னர் ஓரிரு மாதங்களிலேயே அங்கு குடியேறி வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்களை அரசு அடித்து விரட்டியிருந்தது.

ஜெயாரின் மகனான ரவி ஜெயவர்த்தனவும் அவரது அணியினரும் எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருந்தனர். ரவி ஜெயவர்த்தன ஆனி 21 இலிருந்து ஆடி 1 ஆம் திகதிவரை இஸ்ரேலிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இஸ்ரேலினால் பலஸ்த்தீனர்களின் தாயகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எல்லையோரக் கிராமங்கள் அனைத்திற்கும் அவர் சென்று பார்வையிட்டார். மேற்க்குக்கரையில் ஆயுதமயப்படுத்தப்பட்டிருக்கும் யூதக் குடியேற்றவாசிகளையும் அவர் சந்தித்தார். யூதக் குடியேற்றங்களை உருவாக்குவதில் இஸ்ரேலிய அரசுகள் கைக்கொண்ட நடைமுறையினை நன்கு அறிந்துகொண்டதுடன், பலஸ்த்தீன ஆயுத அமைப்புக்களின் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள யூதக் குடியேற்றவாசிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பயிற்சிகள் மற்றும் ஆயுதங்கள் குறித்தும் அவர் அறிந்துகொண்டார்.

சட்டர்டே ரிவியூவில் வந்த அறிக்கையின்படி, இஸ்ரேலுக்கு ரவி ஜயவர்த்தனவும் அவரது குழுவினரும் மேற்கொண்ட விஜயத்திற்குப் பின்னர் பதவியா பகுதியில் மிக மும்முரமான சிங்களக் குடியேற்றங்கள ஏற்படுத்தப்படலாயின. பலஸ்த்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து இஸ்ரேல் செய்துவரும் அவசர அவசரமான யூதக் குடியேற்றங்களுக்கு ஒப்பான பாணியில் இச்சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட ஆரம்பித்தன. 1984 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கொழும்பில் இடம்பெற்ற அரச மற்றும் பாதுகாப்பு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டமொன்றில் வவுனியா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்துவந்த பதவியாவை அநுராதபுர மாவட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பிரதேசத்தின் நிர்வாகம் இணைந்த பாதுகாப்புப் படைகள் கட்டளைத் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், தமிழர்கள் இப்பகுதிக்குள் நுழைவதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டது.

NCP_Anuradhapura_district.jpg

இப்பிரதேசமும் வலி ஓய என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது ஒரு புதிய பெயர் அல்ல. மணல் ஆறு எனும் தமிழ்ப் பெயரின் நேரடிச் சிங்கள மொழிபெயர்ப்பே இந்தப் பெயர் ஆகும். மணல் என்பது சிங்களத்தில் வலி என்றும், ஆறு என்பது ஓய என்றும் அழைக்கப்படுவது தெரிந்ததே. 

மலையகத் தமிழர்கள் குடியேறி வாழ்ந்துவந்த பகுதிகளுக்குள் ஐப்பசி 1984 இல் நுழைந்த சிங்கள அதிகாரிகளும், இராணுவத்தினரும் அங்கிருந்து அவர்களை உடனடியாக வெளியேறவேண்டும் என்று அச்சுருத்தினார்கள். பல தமிழ்க் குடியேற்றவாசிகள் இராணுவத்தினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். அவர்களின் குடிசைகள் எரியூட்டப்பட்டதுடன், பயிரிடப்பட்ட நிலங்களும் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டன. இவ்வாறே கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் குடியேறி வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்களும் அடித்து விரட்டப்பட்டனர்.

1984 ஆம் ஆண்டு,ஐப்பசி மாதம் 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமாணி அறிவிப்பின்படி கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டதுடன் அவை திறந்தவெளிச் சிறைச்சாலைகளாக மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்துப் பத்திரிக்கையாளர்களுடன் சில நாட்களின் பின்னர் பேசிய லலித் அதுலத் முதலி, திறந்தவெளிச் சிறைச்சாலை ஒன்றிற்கான நிலம் ஒன்று நெடுங்காலமாகத் தேடப்பட்டு வந்ததாகவும், தற்போது அதற்கான நிலம் இவ்விரு பண்ணைகளிலும் கிடைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெல்கொடவினால் அறிமுகப்படுத்தப்பட்ட கைதிகளுக்கான முன்மாதிரியான திறந்தவெளிச் சிறைச்சாலைத் திட்டம் குறித்து லலித் கிலாகித்துப் பேசினார். சிறைச்சாலைகளில் நன்நடத்தையினை வெளிக்காட்டும் கைதிகளுக்கு அரச காணிகளில் குடியேறி தமது வாழ்க்கையினை தமது குடும்பங்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கும் திட்டமே அதுவாகும். ஆனால் இத்திட்டத்திற்கான காணிகளைத் தொடர்ச்சியாக‌ சிறைச்சாலைகள் அமைச்சு கண்டுபிடிப்பதில் இருந்த சிக்கலினால் இத்திட்டம் சில காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.  ஆகவே கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் ஆதுமீறி ஆக்கிரமித்து நின்ற மலையகத் தமிழர்களை தம்மால் விரட்டியடிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பண்ணைகளில் 150 சிங்களக் கைதிகளையும் அவர்களின் குடும்பங்களையும் குடியேற்றப்போவதாக லலித் அதுலத் முதலி அறிவித்தார்.

975.ht7_.jpg

பதவியா சிங்களக் குடியேற்றத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் சிங்கள இராணுவ கொமாண்டோ அணி 

 ஆனால் திறந்த சிறைச்சாலை எனும் திட்டத்தினூடாக சிங்கள அரசு செய்ய நினைப்பது தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியினை அரச ஆதரவில் சிங்களமயப்படுத்துவதுதான் என்பதை தமிழர்கள் மிகவும் தெளிவாக உணர்ந்துகொண்டார்கள். இக்காலப்பகுதியில் சர்வகட்சி மாநாட்டிற்காக கொழும்பில் தங்கியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரான அமிர்தலிங்கம் அரசின் இந்தத் திட்டத்தினை கடுமையாகக் கண்டித்தார். பி பி சி இன் தமிழ்ச்சேவைக்கு அவர் வழங்கிய செவ்வியில், "இந்த திறந்த சிறைச்சாலைத் திட்டம் தெற்கின் எங்கோ ஒரு பகுதியில் உருவாக்கப்பட்டிருந்தால் நாம் மகிழ்ச்சியடைந்திருப்போம். ஆனால் தமிழர் தாயகத்தின் இதயப்பகுதிக்குள் அப்பட்டமான சிங்களக் குடியேற்றத்தினை திறந்தவெளிச் சிறைச்சாலை எனும் போர்வைக்குள் அரசு நடத்துகிறது" என்று கூறினார்.

மலையகத் தமிழர்களை அடக்குமுறையினைப் பாவித்து பலவந்தமாக கென்ட் - ‍ டொலர் பண்ணைகளில் இருந்து அரசும் இராணுவமும் அடித்துவிரட்டியதை தொண்டைமானும் கடுமையாகக் கண்டித்திருந்தார். தனது கண்டனத்தை அமைச்சரவையில் அவர் பதிவுசெய்தார். 

தமிழர் தாயகத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் அப்பட்டமான சிங்களக் குடியேற்றம் தமிழர்களைப் பெரிதும் கோபப்பட வைத்திருந்தது. சென்னையில் இதுகுறித்து அறிக்கையொன்றினை வெளியிட்ட ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலக்குமார், "இது ஒரு முற்றான ஆக்கிரமிப்பு" என்று கூறியிருந்தார். ஏனைய போராளி அமைப்புக்களும் இதுகுறித்த தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தன. ஆனால் பிரபாகரன் மெளனமாக இருந்தார். அவர் தனது போராளிகளை இதற்கான பதிலை வழங்குவதற்குத் தயார்ப்படுத்தியிருந்தார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரின் தாயகத்தைக் கூறுபோட்டு, அவர்களின் வளங்களைச் சூறையாடவே அமைக்கப்பட்ட சிங்கள‌க் குடியேற்றங்கள் 

A Buddhist temple under construction on the site of a destroyed Hindu temple, on private Tamil land in Kokkilai.

கொக்கிளாய் சிங்கள‌க் குடியேற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பெள‌த்த விகாரை

 

வவுனியா மாவட்டத்தின் பதவிய பகுதியில் ஜெயவர்த்தனவின் அரசாங்கம் நடத்திவரும் அவசர அவசரமான சிங்கள் குடியேற்றங்கள் குறித்த தமது அதிருப்தியினைத் தெரிவிக்க அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஜெயவர்த்தனவையும், லலித் அதுலத் முதலியையும்  கார்த்திகை மாதம் 13 ஆம் திகதி சந்தித்தனர். நடைபெற்றுவரும் சிங்களக் குடியேற்றத்தினை உடனடியாக நிறுத்துமாறு அவர்கள் கோரினர். இக்குடியேற்றம் முன்னெடுக்கப்படுவதால் தமிழர்கள் அடைந்துவரும் மனதளவிலான பாதிப்புக்களை அவர்கள் எடுத்துரைத்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் செல்வாக்கு தமிழ் மக்கள் மத்தியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருவதையும் ஜெயாரிடம் அவர்கள் எடுத்துரைத்தனர். "இந்த அரசாங்கத்துடன் எதற்காகப் பேசி வருகிறீர்கள்? என்று தமிழ் மக்கள் எங்களிடம் கேட்கிறார்கள்" என்று அமிர்தலிங்கம் ஜெயாரிடம் தெரிவித்தார்.

ஜெயாருடனான சந்திப்பிற்குப் பின்னர் கடுந்தொனியில் ஒரு கடிதத்தையும் முன்னணியினர் ஜெயவர்த்தனவிற்கு அனுப்பினர். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் குடியேற்றப்பட்டிருக்கும் சிங்களச் சிறைக்கைதிகளும், சிறைக் காவலர்களும் அருகிலிருக்கும் தமிழ்க் கிராமங்களுக்குள் நுழைந்து தமிழர்களை துன்புறுத்தி வருவதாக அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர். தமிழ்க் கிராமங்களுக்குள் நுழையும் சிங்களைச் சிறைக்கைதிகள் அக்கிராமங்களைக் கொள்ளையிட்டு வருவதாகவும், வீடுகளும் உடமைகளும் அவர்களால் அழிக்கப்பட்டு வருவதாகவும், பல தமிழ்ப் பெண்களை இவர்கள் பாலியல் வன்புணர்வு செய்துவருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். பாலியல் வன்புப்ணர்வுகள் தொடர்பான குறிப்பில் ஒவ்வொரு சம்பவமும் விலாவாரியாக முன்னணியினரால் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் முன்னணியினரின் எந்த வேண்டுகோளையும் ஜெயார் கண்டுகொள்ளவில்லை. மேலும் அவரது அமைச்சர்களால் முல்லைத்தீவுக் கரையோரப்பகுதிகளில் சிங்கள மீனவக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்காக 1,000 வீடுகளைக் கட்டப்போவதாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டபோது தமிழ் மக்கள் மேலும் கொதித்துப் போயினர். மீன்பிடி அமைச்சரான பெஸ்ற்றஸ் பெரேரா, இந்த ஆயிரம் வீடுகளும் கொக்கிளாய் நாயாறு ஆகிய தமிழ்க் கிராமங்களிலேயே அமைக்கப்படவிருப்பதாக அறிவித்தார்.

தமிழர் தாயகத்தில் சிங்கள அரசாங்கம் செய்யவிருக்கும் கைங்கரியம் பெஸ்ற்றஸ் பெரேராவின் முல்லைத்தீவுச் சிங்களக் குடியேற்றத் திட்ட அறிவிப்பினூடாக வெட்ட‌ வெளிச்சமாகியது. வலி ஓய சிங்களக் குடியேற்றத்தினூடாக தமிழ் மக்களின் வளமான பயிர்ச்செய்கை நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமிக்க முல்லைத்தீவு கரையோரத்தில் திட்டமிடப்பட்டிருக்கும் சிங்கள மீனவக் குடியேற்றங்களால் தமிழரின் மீன்பிடி வளமும் சிங்களவர்களால் சூறையாடப்படும் நிலை உருவாக்கப்பட்டிருந்தது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"கென்ட் ‍ டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எம்மைத் துன்புறுத்தி வந்த சிங்களக் காடையர்களே, மாறாக அப்பாவிச் சிங்கள மக்கள் அல்ல" -  ‍ தமிழ் மக்கள் 

Kokkulaay_Sinhala_Buddhicisation_11_points.jpg

ஜெயவர்த்தனவினதும் அவரது இனவாத அமைச்சரவையினதும் திட்டங்களுக்கான பதிலை 1984 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 30 ஆம் திகதி பிரபாகரன் வழங்கினார். நன்கு ஆயுதம் தரித்த, பயிற்றப்பட்ட 50 புலிகள் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் நோக்கி இரு பேரூந்துகளில் பயணமாகினர். ஒரு அணியினர் கென்ட் பண்ணை மீது தாக்குத‌ல் நடத்த, மற்றைய அணி டொலர் பண்ணை மீது தாக்குதலை நடத்தியது. கென்ட் பண்ணை மீதான தாக்குதலில் 29 சிங்களக் கைதிகள் கொல்லப்பட டொலர் பண்ணையில் மேலும் 33 கைதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 62 பேரில் மூவர் சிறைக்காவலர்கள்.

மறுநாளான மார்கழி 1 ஆம் திகதி லோரன்ஸ் தலைமையிலான புலிகளின் அணியொன்று கொக்கிளாயிலிருந்து வெளியே நாள் ஒன்றிற்கு இருமுறை பயணம் செய்யும் எல்ப் ரக வாகனம் ஒன்றைக் கடத்திக்கொண்டு கொக்கிளாயில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றம் நோக்கிப் பயணித்தனர். அப்போது மாலை 6:30 மணி. சில சிங்கள மீனவர்கள் ஆங்காங்கே வீதிகளில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர். சிலவிடங்களில் பெண்களும், சிறுவர்களும் வீதிகளில் காணப்பட்டனர். எல்பில் வந்த புலிகள், அங்கு நின்ற சிங்களக் குடியேற்றக்காரர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். மனுவேல் அந்தோணி, அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோரும் வீதியில் நின்ற கூட்டத்தில் அடங்குவர். சூடுபட்டு கீழே வீழ்ந்த அந்தோணி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். அவரது ஒன்பது வயது மகனுக்கும் சூட்டுக் காயம் ஏற்பட்டது. அவரைக் காவிக்கொண்டு அந்தோணியின் மனைவி படகுகள் நோக்கி ஓடினார். ஆனால் மகனைக் காப்பாற்ற முடியவில்லை.  இத்தாக்குதலில் 14 சிங்களக் குடியேற்றக்காரர்கள் கொல்லப்பட்டதுடன் இன்னும் நால்வர் காயமடைந்தனர். பின்னர் அங்கிருந்து அகன்ற புலிகள் 15 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த நாயாறு சிங்கள மீனவக் குடியேற்றம் நோக்கிச் சென்றனர்.

இரவு 8:30 மணியளவில் நாயாறு குடியேற்றத்தை புலிகளின் அணி சென்ற‌டைந்தது. அங்கு காணப்பட்ட மக்கலின் கொஸ்ட்டா வின் பலசரக்குக் கடைக்குச் சென்ற புலிகள் துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். அருகிலிருக்கும் தமிழ்க் கிராமங்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டு வந்த சிங்களக் காடையர்களின் தலைவியாக‌ மக்கலின் விளங்கினார். எல்ப் வாகனத்தில் இருந்து பாய்ந்திறங்கிய புலிகள் கடைக்குள் கிர்ணேட்டுக்களை வீசி எறிந்தனர். மகலினை புலிகள் தேடினர், ஆனால் அவர் இருக்கவில்லை, தலைமறைவாகிப் போயிருந்தார். ஆகவே மக்கலினின் இரு புதல்விகளான மேரி திரேசா மற்றும் மேரி மார்கரெட் ஆகியோரைப் புலிகள் சுட்டனர். அங்கு நடைபெற்ற தாக்குதலில் நால்வர் கொல்லப்பட மேலும் இருவர் காயமடைந்தனர்.

கொக்கிளாயில் புலிகள் தாக்குதல் நடத்தியபோது பல சிங்களக் குடியேற்றக்காரர்கள் கடலை நோக்கி ஓடியதுடன், படகுகளுக்குள்ளும், அவற்றின் பின்னாலும் ஒளிந்துகொண்டனர். பின்னர் நடந்த விசாரணைகளின்போது நள்ளிரவு வரை சிங்களவர்கள் படகுகளுக்குப் பின்னால் ஒளிந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சிலர் ஆறு கிலோமீட்டர்கள் கால்நடையாக புல்மோட்டையூடாக திருகோணமலை மாவட்டத்திற்குள் பிரவேசித்து இராணுவத்தினருக்கு தாக்குதல் குறித்துத் தெரிவித்தனர். கொக்கிளாய் நோக்கி விரைந்துசென்ற இராணுவ அணிமீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. வீதியின் அருகிலும், மதகுகளின் கீழும் மறைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன.

நாயாறு குடியேற்றக் கிராமத்தின்மீது தாக்குதல் நடந்தபோது அங்கிருந்த சிங்களக் குடியேற்றக்காரர்கள் அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர்.மறுநாள் காலை இராணுவத்தினர் அவர்களைக் கண்டு மீட்கும்வரை அவர்கள் காடுகளுக்குள்ளேயே மறைந்திருந்தனர். இத்தாக்குதலில் காயப்பட்ட சிங்களவர்களை அநுராதபுர வைத்தியசாலைக்கும், குருநாகல் வைத்தியசாலைக்கும் இராணுவம் அழைத்துச் சென்றது.

திருகோணமலைக்கும், முல்லைத்தீவிற்கும் இடையிலான கரையோரப் பகுதிகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களில் மிகவும் வடக்காக அமைந்திருப்பது கொக்கிளாய் சிங்கள மீனவக் குடியேற்றமாகும். இங்கு குடியேற்றப்பட்டிருக்கும் சிங்களவர்கள் நீர்கொழும்பு, சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

புலிகளின் தாக்குதலில் முதன்முதலாக சிங்களவர்கள் கொல்லப்பட்ட இச்சம்பவம் குறித்து நான் விலாவாரியாக முன்னர் எழுதியிருந்தேன். அரசால் சேகரிக்கப்பட்ட இத்தாக்குதல் குறித்த ஆவணங்கள், மற்றும் இத்தாக்குதல் குறித்து அமைச்சரவையில் அங்கத்துவம் கொண்டிருந்த அமைச்சர் தொண்டைமானின் கருத்துக் குறித்தும் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். இரு காரணங்களுக்காக இச்சம்பவங்கள் நான் இங்கே மீளவும் பதிவிடுகிறேன். முதலாவது, இச்சம்பவங்கள் நடைபெற்ற காலக் கிரகத்தின் அடிப்படையில் பதிவது. இரண்டாவது இத்தாக்குதல் குறித்த தமிழ் மக்களின் மனவோட்டத்தினைப் பதிவது.

தொண்டைமான் இத்தாக்குதல்களை வரவேற்றிருந்தார். அவ்வாறே எனக்குத் தெரிந்த ஒவ்வொரு தமிழரும் இதனை வரவேற்றிருந்தனர். கொல்லப்பட்டவர்களை அப்பாவிச் சிங்கள மக்கள் என்று அவர்கள் கருதவில்லை. தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்தி, தினம் தோறும் சித்திரவதை செய்துவந்த காடையர்களே கொல்லப்பட்டிருப்பதாக அவர்கள் கருதினர். அது மட்டுமல்லாமல் ஜெயவர்த்தன, லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, ரவி ஜெயவர்த்தன ஆகிய இனவாதிகளின் கொடூரங்களுக்கான பதிலடியாகவும் இதனை அவர்கள் பார்த்தனர்.

கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்களினூடாக, தம்மை தனியான தேச மக்களாக தமிழர்கள் உறுதியாக நம்பத் தலைப்பட்டனர். ஒரு இனமாக தாம் உயிர்தப்பி வாழ்வதென்றால், சிங்கள ஆக்கிரமிப்பிற்கெதிராகத் தாம் திரண்டெழுந்து போராட‌ வேண்டுமென்று அவர்கள் நம்பத் தொடங்கினர். இதனை செய்வதற்குப் பிரபாகரனைத் தவிர அவர்களுக்கு வேறு எவரும் இருக்கவில்லை.

  • Thanks 3
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெலி ஓய சிங்களக் குடியேற்றத்தைப் பாதுகாக்க தனியான படைப்பிரிவொன்றினை உருவாக்கிய ஜெயவர்த்தன‌

 

கென்ட், டொளர் பண்ணைகள் மற்றும் கொக்கிளாய், நாயாறு மீனவக் குடியேற்றங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள் தள்ளியிருந்தன. வட மாகாணத்தின் எல்லைகளில் இஸ்ரேலிய பாணியில் பாரிய இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் ஜெயவர்த்தனவின் எண்ணத்திற்கு இத்தாக்குதல்கள் பெரும் அச்சுருத்தலாய் மாறியிருந்தன. கடுமையான தாக்குதல் ஒன்றின் மூலம் ஜெயவர்த்தனவின் திட்டத்தின் அடித்தளத்தையே புலிகள் புரட்டிப் போட்டிருந்தனர். 

புலிகளின் தாக்குதல்களையடுத்து ஏற்பட்ட சிங்கள அகதிகள் எனும் புதிய பிரச்சினையினையடுத்து தனது குடியேற்றத்திட்டத்தினை ஜெயவர்த்தன அப்போதைக்குக் கிடப்பில் போட்டார். பதவிய பகுதியில் குடியேறி வாழ்ந்துவந்த சிங்கள விவசாயிகளும், திருகோணமலை - முல்லைத்தீவு கரையோரங்களில் குடியேறியிருந்த சிங்கள மீனவர்களும் தமது சொந்த ஊர்களுக்கே திரும்பத் தொடங்கியிருந்தனர். தமது கைகளில் எடுத்துக்கொண்ட பொருட்களையும், குடும்பங்களையும் அழைத்துக்கொண்டு அவர்கள் வீடு திரும்பத் தொடங்கினர். 

See the source image

ரவி ஜெயவர்த்தன

 

பதவிய பகுதிக்கு விரைந்துசென்ற ரவி ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் சிங்கள மக்கள் அப்பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறிச் செல்வதை செய்வதறியாது பார்த்துக்கொண்டு நின்றனர். வெளியேறிக்கொண்டிருந்த சிங்களக் குடியேற்றக்காரர்களுடன் பேசிய ரவி ஜெயவர்த்தன, அவர்களின் குடியேற்றப் பண்ணைகளுக்குத் தம்மால் பாதுகாப்பு வழங்கமுடியும் என்றும், அவற்றைக் கைவிட்டுச் செல்ல வேண்டாம் என்றும் கேட்கத் தொடங்கினார். சிங்கள தேசியத்தைக் காப்பதற்காகவாவது அவர்கள் அங்கு தொடர்ச்சியாக தங்கி வாழவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், தமது குடும்பங்களின் பாதுகாப்புத் தொடர்பான தமது கரிசணையினை சிங்களக் குடியேற்றக்காரர்கள் ரவி ஜெயவர்த்தனவிடம் தெரிவித்தனர். "புலிகள் எங்களைத் தாக்குகிறார்கள், ஆகவே இங்கே தொடர்ந்து வாழ்வது பாதுகாப்பானது அல்ல" என்பதே அவர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது. அவர்களுக்குப் பதிலளித்த ரவி ஜயவர்த்தன, "இராணுவத்தினர் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்" என்று கூறவும், "புலிகள் வந்தபோது இராணுவத்தினரே முதலில் ஓடித்தப்பினார்கள்" என்று சிங்களக் குடியேற்றக்கார‌ர்கள் அவரிடம் தெரிவித்தனர்.

பின்னர் கொழும்பில் ரவி ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் கூட்டம் ஒன்றினை ஒழுங்குசெய்தனர். கென்ட் மற்றும் டொளர் பண்ணைகள் மீதான தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தாக்கம் பற்றி அவர்கள் ஆராய்ந்தனர். இப்பகுதிகளில் இருந்து சிங்களக் குடியேற்றக்காரர்களின் வெளியேற்றமானது தமது குடியேற்றத் திட்டங்களுக்கு ஏற்ப‌ட்ட பின்னடைவு என்று அவர்கள் முடிவுசெய்தனர். தமிழ் ஆயுதக் கிளர்ச்சியை வட மாகாணத்திற்குள் மட்டுமே மட்டுப்படுத்திவிட உலக வங்கியின் ஆதரவில் தாம் மேற்கொண்டுவந்த சிங்களக் குடியேற்றத் திட்டம் புலிகளின் தாக்குதலினால் தடைப்பட்டு விட்டதை அவர்கள் உணர்ந்துகொண்டனர். இத்தாக்குதலின் மூலம் இந்தியாவின் முன்னாலும், சர்வதேசத்தின் முன்னாலும் தமது திட்டம் அம்பலப்படுத்தப்பட்டு விட்டதையும் அவர்கள் உணரத் தலைப்பட்டனர். 

SL-Gunasekera.jpg

எஸ்.எல்.குணசேகர

 

தேசிய பாதுகாப்புச் சபையும் புலிகளின் தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தாக்கம் குறித்து விரிவாக ஆரய்ந்தது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் தமிழர் தாயகத்தில் தீவிரமான சிங்களக் குடியேற்றங்களை தொடர்ந்து முன்னெடுப்பது என்று அது முடிவெடுத்தது. புலிகளின் தாக்குதலால் காயப்பட்டுப் போயிருந்த சிங்களத் தேசியத்தின் மனக்கிடக்கையினை மீளவும் கட்டியெழுப்ப அது முடிவெடுத்தது. சிங்களக் குடியேற்றக்காரர்களின் மனோதிடத்தை மீளவும் உசுப்பேற்றி, அவர்களைத் தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் குடியேற்றவென்று பேர்பெற்ற சிங்கள இனவாதிகளான எஸ்.எல்.குணசேகர மற்றும் தவிந்த சேனநாயக்க ஆகியோரினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை தமது அடிப்படை ஆவணமாகக் கொண்டு செயற்படுத்த தேசிய பாதுகாப்புச் சபை முடிவெடுத்தது. 

Major_General_Janaka_Perera.jpg

ஜானக பெரேரா

 

குணசேகரவின் அறிக்கை இரு விடயங்கள் குறித்துப் பேசியிருந்தது.  இவற்றுள் முதலாவது சிங்களக் குடியேற்றக்காரர்களுக்கு இராணுவப் பயிற்சியினை வழங்கி ஆயுதமயப்படுத்துவது. இரண்டாவது மணலாறு (வலி ஓய) பிராந்தியத்தில் இராணுவப் படைப்பிரிவொன்றினை நிரந்தரமாகவே நிலைநிறுத்துவதுடன், சிங்களக் குடியேற்றங்களைப் பாதுகாக்கவென சிறிய இராணுவ முகாம்களை சங்கிலிபோல அப்பகுதியில் நிறுவுவது. இந்த ஆலோசனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட தேசிய பாதுகாப்புச் சபை, மணலாற்றில் படைப்பிரிவின் தலைமையகத்தை நிறுவியதுடன், அப்பகுதியைச் சுற்றி சிறிய இராணுவ நிலைகளையும் கென்ட் பண்ணையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் சங்கிலி போன்ற அமைப்பில்  உருவாக்கியது. இராணுவத்தின் முன்னாள் பிரதானியான ஜானக பெரேரா இப்புதிய படைத் தலைமையகத்திற்கு கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன், அவரது பெயரில் ஜனகபுர எனும் புதிய சிங்களக் குடியேற்றக் கிராமம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. அவரது மனைவியான கல்யாணியின் பெயரில் கென்ட் பண்ணை "கல்யாணிபுர" என்று அழைக்கப்பட‌, அவரது மகனான சம்பத்தின் பெயரில் இன்னொரு புதிய சிங்களக் குடியேற்றமான "சம்பத்நுவர" உருவாக்கப்பட்டது.  

சிங்களக் குடியேற்றக்காரர்களை பயிற்சியளித்து, ஆயுதமயமாக்கும் வேலைகள் 1985 ஆம் ஆண்டு, தை மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. ரவி ஜெயவர்த்தனவும் அவரால் உருவாக்கப்பட்ட  சத் செவன எனும் அமைப்பும் இந்த நடவடிக்கையில் இறங்கினர். இதற்கான நிதியினை அரசாங்கமே வழங்கியது. சத் செவன அமைப்பினரால் பதவிய பகுதியில் இருந்து திருகோணமலை மாவட்டத்தின் கொமரன்கடவல பகுதிவரையான சிங்களக் குடியேற்றங்கள் ஆயுதமயப்படுத்தப்பட்டன. சித்திரை மாதத்தின் இறுதிப்பகுதியில் மண்லாற்றின் அனைத்துச் சிங்களக் குடியேற்றங்களும் முற்றாக ஆயுதமயமாக்கப்பட்டுவிட்டன.

1985 ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் இப்பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த அனைத்துச் சிங்களக் குடியேற்றங்களும் பூரண இராணுவமயப்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால், கிராமங்களை முற்றாக இராணுவமயப்படுத்தியபோதும் அப்பகுதிகளின் வாழ்ந்துவந்த சிங்கள குடியேற்ற விவசாயிகளுக்கு அது நம்பிக்கையினை வழங்கவில்லை. மாறாக சிங்கள தமிழ் இனங்களுக்கிடையேயான பகைமையினையே அது வளர்க்க உதவியிருந்தது. பூரண ஆயுத மயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களினால் இப்பகுதிகளில் தமிழ்ப் போராளிகளின் செயற்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கின. இதனால் இலங்கை இராணுவத்தின் ஒரு முற்றான படைப்பிரிவே இப்பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பினை எடுத்துத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான புலிகளின் தாக்குதல்

தமிழர் தாயகத்தின் எல்லைகளில் உருவாக்கப்பட்டு வந்த சிங்கள குடியேற்றக் கிராமங்களினால் பல எதிர்பாராத , விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாயின. இவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை இக்குடியேற்றங்களை எப்படியாவது தடுத்தே தீருவது என்கிற தமிழ்ப் போராளி அமைப்புக்களின் உறுதியான நிலைப்பாடு, போராளிகளின் நிலைப்பாட்டிற்கு எதிராக இராணுவத்தினர் தமிழ் மக்கள் மீது நடத்திய படுகொலைகள், இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலைகளினால் ஏற்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் பாரிய இடப்பெயர்வுகள், தமிழ் மக்கள் சர்வதேசமெங்கிலும் அகதிகளாக அடைக்கலம் புகுந்தமை, தமிழர் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டமை, போராளி அமைப்புக்களில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தமை என்பவற்றோடு, சிங்களக் குடியேற்றவாசிகளை எப்பாடுபட்டாவது பாதுகாத்தே தீருவோம் என்று அரசும் இராணுவமும் சிங்கள மக்களுக்கு உறுதிவழங்கியமையினையும் குறிப்பிட முடியும்.

தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களால் அக்காலத்தில் வெளியிடப்பட்டு வந்த அறிக்கைகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளில் ஏற்பட்டு வந்த நுட்பங்கள், அவர்களின் போராட்டக் களத்தின் விரிவாக்கம் ஆகியவை சிங்களக் குடியேற்றங்களுக்கெதிராகப் போராடுவது எனும் அவர்களின் உறுதிப்பாட்டினை எடுத்தியம்பியிருந்தது.

1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இந்தியாவிலிருந்து வெளிவந்த தி ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பிரபாகரன் வழங்கிய செவ்வியில் குடியேற்றங்களுக்கெதிரான தனது உறுதியான நிலைப்பாடு குறித்து அவர் பேசியிருந்தார்.

கேள்வி : தமிழர்களின் மாவட்டமான திருகோணமலையிலிருந்து தமிழ மக்களை விரட்டியடித்துவிட்டு அப்பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்ற அரசாங்கம் முனைந்துவருவதாகக் கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

பிரபாகரன் : இதனை எதிர்த்துப் போராடுவதைத்தவிர வேறு வழிகள் எமக்கு இல்லை. அவர்களின் திட்டங்களைத் தோற்கடிக்க எம்மால் ஆன அனைத்து வழிகளிலும் போராடுவோம்.

1984 ஆம் ஆண்டின் மூன்றாம் வாரத்தில் சென்னையில் தங்கியிருந்த தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களை சட்டர்டே ரிவியூ பத்திரிக்கையின் ஆசிரியரான காமிணி நவரட்ண சந்தித்தபோது, சிங்களக் குடியேற்றங்களுக்கெதிராகப் போராடுவது எனும் தமது உறுதிப்பாடு குறித்து அவர்கள் தெளிவாகக் கூறியிருந்தனர். புலிகள், .பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்களின் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்தித்த காமிணி நவரட்ண, அரசாங்கத்திற்கும் போராளித் தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தையினை ஒழுங்குசெய்வதனூடாக தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வொன்றை உருவாக்க முனைந்திருந்தார். கொழும்பில் ஜெயவர்த்தனவையும், லலித் அதுலத் முதலியையும் சந்தித்து விட்டே அவர் சென்னைக்குப் பயணமாகியிருந்தார். ஜெயாரின் விருப்பத்தின்பேரிலேயே நவரட்ணவின் பயணம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததாக அரசியல் அவதானிகள் அன்று தெரிவித்திருந்தனர்.

நவரட்ணவுடன் பேசிய போராளிகளின் தலைவர்கள் அரசியல்த் தீர்வுகுறித்து ஜெயாருடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் கூறினர். இதன்பின்னர் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காமிணி நவரட்ண, ஜெயவர்த்தனவுடன் அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதற்கு எந்தப் போராளித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக நான் நினைக்கவில்லை, ஆனால் அவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான உகந்த சூழல் ஏற்படுத்தப்படவேண்டும் என்று அவர்கள் கேட்கின்றனர் என்று கூறினார்.

தமிழர்களுக்கான தீர்வினை இராணுவ ரீதியில் வழங்கவே ஜெயவர்த்தன முழுமூச்சுடன் முயன்றுவருவதாக நவரட்ணவிடம் தெரிவித்த போராளிகள், ஜெயார் விரும்பியபடி தாமும் அதே பாணியிலேயே அவருக்குப் பதிலளிக்கக் காத்திருப்பதாகக் கூறினர். நவரட்ணவுடனான சந்திப்பின் பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் பேசிய பாலசிங்கம், "எம்மை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது எனும் யதார்த்தத்தினை அரசாங்கம் உணர்ந்துகொள்ளும்வரை அதன் மீதான இராணுவத் தாக்குதல்களை நாம் தீவிரப்படுத்துவோம்" என்று கூறினார்.

மாசி 13 ஆம் திகதி போராளிகளின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அன்றிரவு இலங்கை இராணுவத்தின் முகாம் ஒன்றின்மீது புலிகள் தாக்குதல் தொடுத்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது ஆர்.பி.ஜீ க்கள், மோட்டார்கள் மற்றும் கிர்ணேட்டுக்கள் கொண்டு சுமார் 100 போராளிகள் அடங்கிய புலிகளின் அணி தாக்குதலில் ஈடுபட்டது. சுமார் நான்கு மணித்தியாலங்கள் நீடித்த இத்தாக்குதலில் இராணுவத்தினரில் 106 பேரைத் தாம் கொன்றுவிட்டதாகவும், தமது தரப்பில் 16 போராளிகள் வீரமரணம் எய்தியதாகவும் சென்னையில் புலிகள் அறிவித்தனர். இத்தாக்குதலினால் சிங்களவர்கள் அச்சமடையக் கூடும் என்று அஞ்சிய அரசாங்கம் இத்தாக்குதலை மூடி மறைக்க எத்தனித்தது. ஆகவே இத்தாக்குதல் குறித்து பாதுகாப்பு அமைச்சு விடுத்த அறிக்கையில் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் பயங்கரவாதிகளில் 14 பேரைத் தாம் கொன்றுவிட்டதாகவும் கூறியிருந்தது.

ஆனால் கொக்கிளாய்ச் சண்டையின் முக்கியத்துவம் குறித்து இராணுவ ஆய்வாளர்களும், விமர்சகர்களும் பேசியிருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கெதிராகப் போராடுவது எனும் தமிழ்ப் போராளிகளின் உறுதிப்பாட்டை, குறிப்பாக புலிகளியகத்தின் உறுதிப்பாட்டையே கொக்கிளாய் இராணுவ முகாம் மீது அவர்கள் நடத்திய தாக்குதலின் வீரியமும், அவர்கள் பயன்படுத்திய உத்திகளும் சுட்டிக் காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் கொக்கிளாய்ச் சமரை முழு அலவிலான ஆயுத மோதல் என்றும் அவர்கள் கணித்தனர். மிக அண்மையில் உருவாக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் கட்டியமைக்கப்பட்டிருந்த கொக்கிளாய் இராணுவ முகாமையே தமது இலக்காக புலிகள் தேர்ந்தெடுத்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

கொக்கிளாய்ச் சண்டையில் ஈடுபட்ட புலிகளின் அணி இத்தாக்குதலுக்கென்று பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததுடன், பலவகையான ஆயுதங்களையும் இத்தாக்குதலின்போது பாவித்திருந்தது. முற்றான இராணுவச் சீருடையில் காணப்பட்ட புலிகள், தம்முடன் உணவுப் பொட்டலங்கள், குடிநீர், மருந்துப்பொருட்கள் என்பவற்றையும் எடுத்து வந்திருந்தனர். இரவுநேரத்தில் பார்க்கும் வசதி கொண்ட கண்ணாடிகள், நவீன கே 47 வகை இரக தானியங்கித் துப்பாக்கிகள், எம் 16 ரைபிள்கள், மோட்டார்கள், உந்துகணைச் செலுத்திகள் போன்ற ஆயுதங்கள் புலிகளால் பாவிக்கப்பட்டன. மேலும் சண்டையின்போது எதிரியைத் தேடுவதற்கான தேடும் விளக்குகளையும் அவர்கள் கொண்டுவந்திருந்தனர்.

சண் பத்திரிக்கை இத்தாக்குதலை பத்தோடு பதினொன்றாவதாக கூறிக் கடந்து செல்லவில்லை. மாறாக பாரிய இராணுவ முகாம் ஒன்றினை நேருக்கு நேர் எதிர்த்து அழிக்க புலிகள் நடத்திய தாக்குதல் என்று வர்ணித்தது. தேசிய பாதுகாப்புச் சபைக்கு இத்தாக்குதல் குறித்து விளக்கமளித்த ரவி ஜயவர்த்தன புலிகளின் இத்தாக்குதல் மிகவும் மூர்க்கத்தனமான நேரடிச் சண்டையாக இருந்ததாகவும், இதன்மூலம் அவர்கள் மிகவும் திறமையான எதிரியாக வளர்ந்திருப்பது தெளிவாகிறது என்றும் கூறியிருந்தார். மாசி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய ஜெயார், கொக்கிளாய் தாக்குதலின் மூலம் இலங்கையின்  ஆயுதப்போரின் குணாதிசயம் மாற்றப்பட்டிருக்கிறது என்று கூறினார். 

அன்றிலிருந்து தொடர்ச்சியாகப் போராடிவரும் புலிகள் இயக்கம், 2000 ஆம் ஆண்டில் ஜெயாரினால் 1985 ஆம் ஆண்டிலிருந்து சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழரின் தாயகத்தின் குறிப்பிடத்தக்களவு பிரதேசத்தினை விடுவிக்கும் வல்லமையினைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. 2002 இல் பிரபாகரனின் தளபதியாகவிருந்த கருணா குறிப்பிடும்போது, பதவியாவரை எம்மால் செல்லக்கூடிய பலம் இருந்தது ஆனால் தலைவர் அதனைச் செய்யவேண்டாம் என்று கூறிவிட்டார் என்று கூறியிருந்தார். தமது போராடும் அணிகளைப் பரவலாக்கி, செறிவைக் குறைப்பதை விரும்பாததானாலேயே தலைவர் அதனைச் செய்யவில்லை என்றும் கருணா ஊடகவியலாளர்களிடம் கூறினார். சில தமிழ் இராணுவ ஆய்வாளர்கள் இன்னும் சில விடயங்களைக் கூறியிருந்தனர். வெலி ஓயவில் இராணுவத்தினரின் ஒரு பகுதியை முடக்கிவைத்திருப்பதன் மூலம் அரசாங்கத்தின் பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரிக்கவைப்பதும் பிரபாகரனின் நோக்கமாக இருக்கலாம் என்று அவர்கள் கருதினர்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கச் சபதம் எடுத்த பிரபாகரனும், தமிழினத்தையே பயங்கரவாதிகள் என்று அடையாளம் கண்ட லலித் அதுலத் முதலியும்

கென்ட் மற்றும் டொலர் குடியேற்றப் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல் குறித்து தொண்டைமான் மகிழ்வடைந்திருந்தார் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். சில தினங்களுக்குப் பின்னர் இன்னொரு தமிழ் அமைச்சரான தேவநாயகமும் இதே விதமான உணர்ச்சியை வெளியிட்டிருந்தார். ஆனால் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்துவந்த தமிழர்கள் மத்தியிலும் இத்தாக்குதல் வரவேற்பினைப் பெற்றிருந்தது என்று கூறுவதுதான் சரியானது. தமிழ் நாட்டில் இத்தாக்குதல் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டிருந்தது. சில பத்திரிக்கைகள் இத்தாக்குதலை தலைப்புச் செய்தியாகக் காவி வந்தன. 

என்னைப்பொறுத்தவரையில் கென்ட், டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல் விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான மைல்க்கற்களில் ஒன்று என்று கூறுவேன். இத்தாக்குதல் தமிழரின் உள்ளக்கிடக்கையான "தனியான தேசத்திற்குரியவர்கள் நாங்கள்" எனும் உணர்வினை வெளிப்படுத்தியிருந்தது. 1983 ஆம் ஆண்டின் தமிழின அழிப்பின்போது வெளிப்படாத இந்த உணர்வு கென்ட் , டொலர் பண்ணைகள் மீதான தாக்குதலின்போது பீறிட்டுக் கிளம்பியிருந்தது. 83 ஆம் ஆண்டு இனப்படுகொலை தமிழர்களுக்குத் தமது தாயகம் வடக்குக் கிழக்குத் தான் எனும் உணர்வினை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இலங்கையின் வடக்குக் கிழக்கில் மட்டுமே தாம் பாதுகாப்பாக வாழமுடியும் என்கிற உணர்வினை 83 இனக்கொலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. ஆனால் வலி ஓயாச் சிங்களக் குடியேற்றத்தினூடாக தமிழ மக்களின் பாதுகாப்பான தாயக உணர்வினை சிங்களவர்கள் அழிக்கக் கங்கணம் கட்டியிருப்பது அவர்களுக்குப் புரிந்தது. அன்றிலிருந்து தமது தாயகத்தைக் காக்கவேண்டிய தேவையும், உணர்வும் தமிழர்களிடையே பரவி வளர ஆரம்பித்திருந்தது.  

கென்ட், டொலர் பண்ணைகள் மீதான தாக்குதலினூடாக தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டிருப்பதை தமிழ் மக்கள் உணர்ந்துகொண்டனர். நான் முன்னைய அத்தியாயங்களில் குறிப்பிட்டிருந்ததைப் போல, 1974 ஆம் ஆண்டின் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சிங்களப் படைகளால் படுகொலைசெய்யப்பட்ட ஒன்பது அப்பாவித் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கான வீரன் ஒருவனைத் தமிழர்கள் தேடிக்கொண்டிருந்தனர். துரையப்பா அரங்கில் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்ட உலகத்தமிழர் ஆராய்ச்சி மாநாட்டிற்கான அனுமதியை இரத்துச் செய்வதனூடாக அன்றைய படுகொலைகளுக்கான சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்த அல்பேர்ட் துரையப்பாவை பிரபாகரன் தண்டித்தபோது அவரை தமது வீரனாக தமிழ மக்கள் அன்று கண்டனர். அவ்வாறே தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்பைச் சிதைப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றமான வலி ஓயவை அழிப்பதற்குத் தமக்கென்று ஒரு படைத்தளபதி தேவையென்பதை தமிழ் மக்கள் உணர்ந்தனர். அதனைச் செவ்வணே நிறைவேற்றி வைத்த பிரபாகரனை தமிழ் மக்கள் விரும்பி ஆதரிக்கத் தொடங்கினர். 

சிங்களக் குடியேற்றங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்த அதேவேளை, சிங்கள மக்களை அது ஆத்திரங்கொள்ள வைத்தது. அப்பாவிச் சிங்கள மக்களைப் புலிகள் படுகொலை செய்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். 1996 ஆம் ஆண்டு மாசிமாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் புலிகளால் செய்யப்பட்ட படுகொலைகள் எனும் பட்டியலை வாசித்த அன்றைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அநுருத்த ரத்வத்த, அரசால் பதிவுசெய்யப்பட்ட சிங்கள மக்கள் மீதான படுகொலைகளின் 1984 ஆம் ஆண்டிலிருந்து 1996 வரையான பட்டியல் என்று அதனை முன்வைத்திருந்தார். தமிழ்ப் போராளி அமைப்புக்களால் சிங்கள மக்கள் மீது நடத்தப்பட்டதாக அரசு கூறும் தாக்குதல்களை மட்டுமே அப்பட்டியல் கொண்டிருந்தது. கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்களோடு இப்பட்டியல் ஆரம்பமாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து கொக்கிளாய், நாயாறு சிங்கள மீனவக் குடியேற்றங்கள் மீதான தாக்குதலும், 1985 வைகாசியில் அநுராதபுரம் மீதான புலிகளின் தாக்குதலும் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 ஆனால் உண்மையென்னவென்றால், கென்ட், டொலர் பண்ணைகள் மீதான தாக்குதலுக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் பலநூற்றுக்கணக்கான அப்பாவித்தமிழர்கள் சிங்கள அரச படைகளாலும், ஆயுதமயப்படுத்தப்பட்ட சிங்களக் காடையர்களாலும் படுகொலைசெய்யப்பட்டே வந்துள்ளனர். அன்று பாராளுமன்றத்தில்  ரத்வத்தையால் முன்வைக்கப்பட்ட பட்டியல் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்கள் குறித்து எதனையும் வெளிப்படுத்தவில்லை. ஆண்டாண்டு காலமாக கொல்லப்பட்ட அனைத்துத் தமிழர்களையும் பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்த்துவிடும் அரசாங்கங்களின் கங்கரியத்தையே அநுருத்த ரத்வத்தையின் பட்டியலும் செயற்படுத்தியிருந்தது. 

கொல்லப்படும் அப்பாவித் தமிழர்களை அரசாங்கம் பயங்கரவாதிகளாகவே கருதும் என்கிற அரசின் நோக்கத்தினை கென்ட் , டொலர் பண்ணைகள் மீதான தாக்குதலின் பின்னர் பாராளுமன்றத்தில் பேசும்போது லலித் அதுலத் முதலி வெளியிட்டார்.


"யார் பயங்கரவாதி? துப்பாக்கியைப் பயன்படுத்துபவன் பயங்கரவாதியா அல்லது துப்பாக்கியைப் பயன்படுத்துபவனுக்கு அருகில் நின்று ஆதரவு கொடுப்பவன் பயங்கரவாதியா? சிங்களவர்களைக் கொல்வதற்காக துப்பாக்கியை வைத்திருப்பவனுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுப்பவனும் பயங்கரவாதியன்றோ? இராணுவ நடமாட்டத்தைக் கண்காணித்து, பயங்கவாதிகளுக்கு தகவல் கொடுத்து, அந்தப் பக்கம் போகவேண்டாம், இராணுவம் நிற்கிறது என்று கூறுபவனும் பயங்கரவாதிதானே?" 

Edited by ரஞ்சித்
spelling
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கென்ட், டொலர் குடியேற்றங்கள் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கலாக நூற்றுக்கணக்கான தமிழர்களைப் பலியிட்ட சிங்கள இராணுவம் 
 

கென்ட், டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்கள் நடைபெற்ற மறுநாளே தமிழ் மக்கள் மீதான தனது பழிவாங்கல்த் தாக்குதல்களையும், அவர்களின் பூர்வீக வாழிடங்களிலிருந்து அவர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஆரம்பித்தது.

வவுனியா தடைமுகாம் படுகொலை

வவுனியா இராணுவத் தடை முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 20 தமிழர்களை இராணுவம் சுட்டுக் கொன்றது. தப்பியோட எத்தனித்தபோது அவர்களைத் தாம் சுட்டுக் கொன்றதாக இராணுவம் கூறியது. ஆனால் இப்படுகொலையினை விசாரித்த மனிதவுரிமைச் சபை உள்ளிட்ட இன்னும் சில மனிதவுரிமை அமைப்புக்கள் இராணுவம் கூறிய படுகொலைகளுக்கான காரணத்தை முற்றாக நிராகரித்திருந்தன. இப்படுகொலைகள் நேரடியாகப் பார்த்த சாட்சிகளைப் பேட்டிகண்டவேளை, அடைத்துவைக்கப்பட்டிருந்த 20 தமிழர்களையும் முகாமின் எல்லைக்குக் கொண்டுசென்ற இராணுவத்தினர், அவர்களைத் தப்பியோடுங்கள் என்று கட்டளையிட்டதாகவும், அவ்வாறு இளைஞர்கள் தப்பியோடும்போது பின்னாலிருந்து அவர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிருக்கிறார்கள். 

வவுனியா, நெடுங்கேணிப் பகுதிகள் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழர்களைப் புலிகள் என பெயரிட்ட லலித் அதுலத் முதலி

புலிகளின் தாக்குதல் நடைபெற்ற மறுநாள் இராணுவத்தினரும், விமானப்படையினர் நடவடிக்கையில் இறங்கினர். மார்கழி 1 ஆம் திகதி காலை வானில் தோன்றிய விமானப்படையின் உலங்குவானூர்திகள் தமிழ்க் கிராமங்களான வவுனியா மற்றும் நெடுங்கேணி மீது சரமாரியான இயந்திரத் துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்டதுடன், குண்டுகளையும் வீசினர். பதவியா சிங்களக் குடியேற்றத்தின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த பராக்கிரமபுர இராணுவ முகாமிலிருந்தும், வவுனியாவில் அமைந்திருந்த இணைந்த கூட்டுப்படைகளின் படைப்பிரிவிலிருந்தும் புறப்பட்ட இராணுவத்தினர் தேடியழிக்கும் தாக்குதலை ஆரம்பித்தனர். அன்று மாலை தமது இராணுவ நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட்ட லலித் அதுலத் முதலி, கென்ட், டொலர் பண்ணைகள் மீதான தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தேடியழிக்கும் நடவடிக்கைகளைத் தாம் ஆரம்பித்திருப்பதாகக் கூறினார். மேலும் தப்பியோடும் பயங்கரவாதிகள விமானப்படையினர் வானிலிருந்து கண்காணித்து அவர்களை தாக்கி அழித்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மார்கழி 2 ஆம் திகதி வெளிவந்த சண்டே ஒப்சேர்வர் மற்றும் வீரகேசரிப் பத்திரிக்கைகள் தேசிய பாதுகாப்பு அமைச்சினால் தமக்கு வழங்கப்பட்ட தாக்குதல் தொடர்பான செய்திகளை வெளியிட்டிருந்தன. அதன்படி 68 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 42 பேர் காயப்படுத்தப்பட்டதாகவும், மேலும் 35 பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறி 145 தமிழ் மக்களுக்கான கணக்கினைக் காட்டியிருந்தன. சிங்கள மக்களுக்கு தேசிய பாதுகாப்பு அமைச்சு வழங்கிய செய்தியில், "நாம் அவர்களில் இன்னும் பலரைக் கொன்றிருக்கிறோம்" என்பதாகும்.   

வீரகேசரி இன்னும் இரு செய்திக் குறிப்புகளை மேலதிகமாக வெளியிட்டிருந்தது. பத்திரிக்கையின் மாகாணச் செய்தியாளர்களினூடாக இச்செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. வவுனியா நிருபர் அனுப்பியிருந்த செய்தியின்படி விமானப்படையினர் வவுனியாவிலும், நெடுங்கேணிப்பகுதியிலும் தமிழ் மக்கள் குடியிருப்புக்கள் மீதே தாக்குதலை நடத்தியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அனைவரும் அப்பாவித் தமிழ் மக்களே என்றும் அச்செய்தி கூறியது.

திருகோணமலை மாவட்டத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள்

திருகோணமலை மாவட்டத்திலிருந்து வந்த செய்தியறிக்கையில் இராணுவத்தினருடன் இணைந்துகொண்ட சிங்களக் காடையர்கள் அருகிலிருந்த தமிழ்க் கிராமங்களுள் நுழைந்து படுகொலைகளில் ஈடுபட்டதாகக் கூறியது. திருகோணமலையில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அனைவருமே அப்பாவித் தமிழ் மக்களே என்றும் அச்செய்திக் குறிப்புக் கூறியது. 

இராணுவத்தினரின் பழிவாங்கும் தாக்குதல்கள் குறித்து ஆரய்ந்திருந்த மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்ககழக ஆசிரியர்கள் அமைப்பு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் சட்டர்டே ரிவியூ ஆகியவையும் வீரகேசரிப் பத்திரிக்கைச் செய்தியினை உறுதிப்படுத்தியிருந்தன. 

இராணுவத்தினரின் தமிழ் மக்கள் மீதான பழிவாங்கும் தாக்குதல்களையடுத்து அமிர்தலிங்கம் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியிடம் இதுகுறித்து முறையிட்டிருந்தார். இதனையடுத்து ரஜீவின் வேண்டுகோளிற்கு அமைவாக இத்தாக்குதல்கள் குறித்து ஆராயவென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மூதுருக்கான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவருமான தங்கத்துரையை அப்பகுதிக்கு அனுப்பி வைத்தது. 

இக்காலப்பகுதியில் வெளிவந்த இந்த அறிக்கைகளும், இவற்றைத் தொடர்ந்து வெளிவந்த இன்னும் இரு அறிக்கைகளும் 1984 ஆம் ஆண்டு மார்கழி மற்றும் 1985 மார்கழி ஆகிய காலப்பகுதிகளில் திருகோணமலை மாவட்டத்தின் தமிழ்க் கிராமங்கள் மீது அரச படைகளும், சிங்களக் காடையர்களும் நடத்திய தாக்குதல்கள் குறித்துப் பேசியிருந்தன. திரு விஜயரட்ணம் என்பவரால் மண‌ல் ஆறு எனும் தலைப்பில் எழுதப்பட்ட புத்தகத்தின் 23 ஆம் அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் அமரவயல் எனும் புராதனத் தமிழ்க் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த சில விடயங்களையும், குருநாதன் என்பவரால் எழுதப்பட்ட தென்னைமரவாடி எனும் இன்னொரு தமிழ்க் கிராமம் மீது நடத்தப்பட்ட படுகொலைகளின் தொகுப்பிலிருந்து சில விடயங்களைப்  பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

பதவியா சிங்களக் குடியேற்றத்தால் விழுங்கப்பட்ட தமிழ்க் கிராமம் அமரவயல்

கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளுக்கும் பதவியா சிங்கள்க் குடியேற்றத்திற்கும் நடுவே அமைந்திருந்த தமிழர் கிராமமான அமரவயல் பகுதியிலிருந்து 1984 ஆம் ஆண்டு மார்கழி 2 ஆம் திகதி தமிழ் மக்கள் இராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்டனர். சரித்திர காலம் தொட்டு தமிழர்களின் விளைச்சல் மிக்க விவசாயக் காணிகள் அமைந்திருந்த அமரவயல் பகுதி பதவியாக் குடியேற்றத்துடனும், கென்ட் , டொலர் பண்ணைகளுடனும் இணைக்கப்பட்டு தெற்கிலிருந்து சிங்களக் குடியேற்றவாசிகளால் நிரப்பப்ப‌ட்டது.  அமரவயலைப் போன்றே அப்பகுதியைச் சுற்றியிருந்த இன்னும் பல தமிழ்க் கிராமங்களும் தமிழ்நீக்கம் செய்யப்பட்டு அதே நாட்களில் சிங்களக் குடியேற்றங்களுக்குள் உள்வாங்கப்பட்டன. 

செம்மலையிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்ட தமிழ் மக்கள் (2+)

தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்களில் செம்மலையும் ஒன்று. அன்று காலை செம்மலைப் பகுதிக்கு வந்த இராணுவ ஜீப் வண்டியொன்று அங்கிருப்பவர்களை உடனடியாக அங்கிருந்து ஓடித் தப்புமாறும் இல்லாதுவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்றும் அறிவித்தது. ஜீப் வண்டியிலிருந்த இராணுவத்தினர் அங்கிருந்த மக்கள் மீது உடனடியாகக் கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். இரு தமிழ் மக்கள் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டு விழ ஏனையோர் ஓடத் தொடங்கினர். அக்கிராமம் முழுவதும் இரு நாட்களுக்கு அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் உயிர்காக்க ஒளித்திருந்தது. தமிழர்களை செம்மலையிலிருந்து விரட்டியடித்த இராணுவத்தினரும், சிங்களக் காடையர்களும் கிராமத்திற்குள் நுழைந்து, தமிழர்களின் வீடுகளையும், வயற்குடில்களையும் கொள்ளையிட்டு விட்டு எரியூட்டினர்.தமது வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்பட்டதை செய்வதறியாது பார்த்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் தமது புராதன வாழிடத்தைக் கைவிட்டு முல்லைத்தீவு நோக்கி நடக்கத் தொடங்கினர். 

ஒதியாமலைப் படுகொலைகள் (32+)

திருகோணமலை மாவட்டத்தின் இன்னொரு தமிழ்க் கிராமமான ஒதியாமலை மீதும் இராணுவத்தினரும், சிங்களவர்களும் அதேநாள் தாக்குதல் நடத்தினர். அத்தாக்குதல் மிகவும் குரூரமானது. 

மார்கழி 1 ஆம் திகதி மாலை பதவியா இராணுவ முகாமிலிருந்து இராணுவ வாகனங்கள் வந்திறங்கிய இராணுவத்தினரும், சிங்களக் காடையர்களும் கிராமத்தின் முகப்பில் அமைந்திருந்த ஊர்க்காவலன் ஆலயத்தின் முன்னால் கூடினர். அன்றிரவு முழுதும் ஆலயத்தில் தங்கியிருந்த சிங்களத் தாக்குதல் அணி மறுநாள் காலை கிராமத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டது.  பின்னர் கிராமத்தினுள் புகுந்து இளவயது ஆண்களைக் கைதுசெய்து இழுத்துவந்து கிராமத்தின் சனசமூக நிலையக் கட்டிடத்திற்குள் அனைவரையும் வரிசையில் நிற்கவைத்துச் சுற்றுக் கொன்றது. படுகொலையினை நிறைவுசெய்துவிட்டு முகாம் திரும்புகையில் ஐந்து வயதான தமிழர்களை அவ்வணி இழுத்துச் சென்றது. சுமார் இரு வாரங்களுக்குப் பின்னர் கென்ட் பண்ணைக்கருகில் உழவு இயந்திரத்துடன் சேர்த்து எரிக்கப்பட்ட நிலையில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 

ஒதியாமலைப் படுகொலைகள் நடந்த மறுநாள் அப்பகுதிக்குச் சென்ற முல்லைத்தீவு அரசாங்க அதிபரும், பிரதான மருத்துவ அதிகாரியும், கிராமத் தலைவரும் கொல்லப்பட்ட 27 தமிழர்களின் உடல்களைக் கண்டனர். அங்கு வருகை தந்த அதிகாரிகள் சாட்சியங்களைப் பதிவுசெய்ய, கிராமத் தலைவரும் உறவினர்களும் கொல்லப்பட்ட தமிழர்களை அடையாளம் காண, ஏனைய அதிகாரிகள் அவர்களின் பெயர் விபரங்களைப் பதிவுசெய்துகொண்டபின்னர் அவற்றிற்கு தீமூட்டி இறுதிக் கிரியைகளை நடத்தினர். இப்படுகொலைகளில் பலியான தமிழர்கள் அனைவரையும் பெயரிட்டு, பயங்கரவாதிகள் என்று மறுநாள் இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

தென்னைமரவாடிப் படுகொலைகள் (24+)

கொக்கிளாய், நாயாறு சிங்கள் குடியேற்றங்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கலாக மார்கழி 3 ஆம் திகதி மற்றுமொரு படுகொலையினை இலங்கை இராணுவம் முன்னெடுத்தது. திருகோணமலை மாவட்டத்தின் மிகவும் வடக்கான பகுதியில் அமைந்திருக்கும் இன்னொரு புராதன தமிழ்க் கிராமமான தென்னைமரவாடி மீது இராணுவத்தின் கவனம் திரும்பியிருந்தது. அன்று காலை கிராமத்தினுள் நுழைந்த கண்ணில் அகப்பட்ட 13 ஆண்களை வரிசையில் நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றனர். பின்னர் கிராமத்திலிருந்தவர்களை அச்சுருத்திய இராணுவம் உடனடியாக அனைவரையும் அங்கிருந்து வெளியேறி ஓடிவிடுமாறு கட்டளையிட்டது. இதனையடுத்து அங்கிருந்த 200 தமிழர்களும் அங்கிருந்து வெளியேறி முல்லைத்தீவு மாவட்டத்தின் பொன்னகர் பகுதியில் சென்று அடைக்கலம் தேடிக் கொண்டனர். அதேநாள் கொக்கிளாய், நாயாறு பகுதிகளுக்கருகில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட இராணுவம் அங்கிருந்த மேலும் 12 தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து சுட்டுக் கொன்றது. 

செம்மடுப் படுகொலைகள் (எண்ணிக்கை தெரியவில்லை)

மார்கழி 4 ஆம் திகதி இன்னும் இரு கொடூரமான படுகொலைகளை சிங்கள இராணுவமும் சிங்களக் காடையர் அணியும் நடத்தின. கென்ட், டொலர் பண்ணைகளில் இருந்து 16 கிலோமீட்டர்களில் அமைந்திருக்கிறது புராதன தமிழ்க் கிராமமான செம்மடு. அன்று காலை செம்மடு கிராமத்தினுள் புகுந்த இராணுவமும் காடையர்களும் ஒரு வயோதிபப் பெண்மணியையும், சில சிறுவர்களையும் மட்டுமே விட்டுவிட்டு ஏனையோர் அனைவரையும் இழுத்துச் சென்றது. ஆனால் இதுகுறித்த கேள்விகள் எழுந்தபோது அக்கிராமத்திற்குள் தாம் நுழையவே இல்லை என்று இராணுவம் மறுத்தது. ஆனால் இழுத்துச் செல்லப்பட்ட கிராம வாசிகள் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. சட்டர்டே ரிவியூ மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியவற்றின் அறிக்கைகளின்படி அன்று இழுத்துச் செல்லப்பட்ட தமிழர்களும் அனைவரையும் இராணுவம் கொன்றுவிட்டதாக அறிய முடிகிறது. 

முருங்கனில் சிங்கள் காடையர்கள் அரங்கேற்றிய நரவேட்டை (107+)

மார்கழி 4 ஆம் திகதியின் இரண்டாவது தமிழினப் படுகொலை மன்னாரின் முருங்கன் பகுதியில் நடைபெற்றது. இராணுவ வாகனம் ஒன்றின் மீது போராளிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு இராணுவத்தினன் கொல்லப்பட இன்னும் அறுவர் காயமடைந்தனர். தமது சகாக்களில் ஒருவன் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கற் தாக்குதலில் ஈடுபட்ட தள்ளாடி முகாமின் இராணுவக் காடையர்கள் 107 தமிழ் மக்களைப் படுகொலை செய்தனர். இப்படுகொலைகள் குறித்த விலாவாரியான அறிக்கையொன்றினை சட்டர்டே ரிவியூ வெளியிட்டிருந்தது. 

இப்படுகொலைகள் குறித்து முழுமையான விபரங்களை சர்வதேசக் குற்றவியல் ஆயத்தின் வேர்ஜினியா லியரியும் வெளியிட்டிருந்தார். இவ்வறிக்கைகளின் அடிப்படியில் அன்று நடந்த கொடூரம் குறித்து செய்திகளை வெளியிட்டிருந்தன. 

தாக்குதலில் ஈடுபட்ட் அனைத்து இராணுவத்தினரும் மிகுந்த போதையில் காணப்பட்டனர். கண்ணிவெடித் தாக்குதல் நடைபெற்ற பகுதியின் வீதியின் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்குக் காணப்பட்ட வீடுகளும், கடைகளும் அவர்களால் தீமூட்டப்பட்டன. வீடுகள் தீயிடப்படுமுன் அவற்றினுள் நுழைந்த இராணுவத்தினர் அங்கிருந்த அனைவரையும் சுட்டுக் கொன்றனர்.அப்பகுதியில் நடைபெற்றுவந்த தாக்குதல்களையடுத்து உப தபால் அலுவலகத்திற்குள் பலர் ஓடித் தஞ்சமடைந்திருந்தனர். அங்கும் வந்த இராணுவத்தினர் உள்ளிருந்த அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு அலுவலகத்திற்கும் தீமூட்டினர். நடந்துகொண்டிருக்கும் படுகொலைகளை அறியாது அப்பகுதியூடாக வந்த பஸ் வண்டிகளும் மறிக்கப்பட்டு, உள்ளிருந்த தமிழர்கள் கீழே இறக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் அப்பிரதேசத்தின் வயற்காணிகளில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகளில் உயிர் தப்பியவர்களை செவ்விகண்டபோது, "நான்கு மணித்தியாலம் நடந்த கோரத் தாண்டவம்" என்று அப்படுகொலைகளை அச்சம் மிக வர்ணித்திருந்தனர். இலங்கையின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளின் வரிசையில் முருங்கன் படுகொலையும் மிகவும் முக்கியமானது என்றால் அது மிகையில்லை. 

படுகொலைகளுக்கான சாட்சியங்களைக் கொண்டு சென்றதற்காகக் கொல்லப்பட்ட மெதடிஸ்த்த பாதிரியாரின் குடும்பம்

ஆனால் மன்னாரில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவத்தின் படுகொலைகள் முருங்கனுடன் மட்டுமே அன்று நின்றுவிடவில்லை. அந்நாட்களில் மேலும் பல படுகொலைகளை அவர்கள் அரங்கேற்றியிருந்தனர். முருங்கன் படுகொலை நடைபெற்று ஒரு சில நாட்களுக்குப் பின்னரும், 1985 ஆம் ஆண்டு தை மாதத்தின் முதலாம் வாரத்திலும் இவை நடத்தப்பட்டன. இத்தாக்குதல்களில் முதலில் பலியானவர்கள் முருங்கன் மெதடிஸ்த்த திருச்சபையின் போதகர் ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம், அவரது சிங்கள மனைவி பிரிஜ்ஜெட், அவர்களின் வாகனச் சாரதி மற்றும் அவர்களுடன் கொழும்பு நோக்கி டட்சண் பிக்கப் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த மேலும் இருவர் என ஐவரைச் சிங்கள இராணுவம் வழிமறித்துச் சுட்டுக் கொன்றது. போதகர் தன்னுடன் முருங்கன் படுகொலைகள் தொடர்பான ஒளிநாடாக்கள், கண்ணால்க் கண்ட சாட்சியங்களின் வாக்குமூலம் மற்றும் படுகொலைகளின் ஆதாரங்களான புகைப்படங்கள் ஆகியவற்றை தன்னுடன் கொழும்பிற்குக் கொண்டு சென்றதாக அறியக் கிடைக்கின்றது. தமது படுகொலைகள் வெளியே தெரிவதைத் தடுக்க இன்னும் அப்பாவிகள் ஐவரைச் சிங்கள இராணுவம் படுகொலை செய்தது. ஆனால் வழமை போலவே போதகரின் படுகொலைக்கும் தமக்கும் தொடர்பேதும் இல்லை என்று அரசாங்கம் கையை விரித்தது.  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வங்காலையில் குருவானவர் மேரி பஸ்ட்டியானைச் சுட்டுக் கொன்று, உடலருகில் ஆயுதங்களைப் பரவிப் புகப்படம் எடுத்து, பின்னர் உடலைக் காணாமலாக்கிய சிங்கள இராணுவம் 

மன்னாரில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவக் காடையர்கள் நடத்திய இரண்டாவது படுகொலை தை மாதம் 5 ஆம் திகதி வங்காலையில் இடம்பெற்றது. வங்காலை புனித ஆன் தேவாலயத்தின் பங்குக் குருவானவர் மேரி பஸ்ட்டியானும் கூடவிருந்த இன்னும் எட்டுத் தமிழ் மக்களும் அன்றிரவு சிங்கள இராணுவக் காடையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படுகொலை குறித்த அறிக்கையொன்றினை தைமாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் வெளியிட்ட ஆயர்களின் தலைவரும், சிலாபம் மறைமாவட்டத்தில் ஆயருமான மார்க்கஸ் பெர்ணான்டோ, 38 வயதான குருவானவர் மேரி பஸ்ட்டியான் தனது பங்கு அறையினுள் இருந்தவேளை அங்கு சென்ற இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறினார். தேவாலயம் ஒன்றினுள் தனது மதப் பணிகளை ஆற்றிவந்த குருவானவர் மீது வேண்டுமென்றே இராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொலை என்று இதனை அவர் வர்ணித்திருந்தார். 

மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் தோமஸ் செளந்தரநாயகமும் இப்படுகொலையினை அறிக்கையொன்றின் ஊடாகக் கண்டித்திருந்தார். "வங்காலையில் 6 ஆம் திகதி காலை, இறைபணியாற்றிக்கொண்டிருந்த வேளை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட 38 வயதான இளங்குரு மேரி பஸ்ட்டியான் அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவ்வறிக்கை  கூறியது.

ஆனால், தகவல் வழங்கும் திணைக்களத்தினூடாக குருவானவரின் படுகொலை குறித்து பாதுகாப்பு அமைச்சு வழங்கிய அறிக்கை இப்படுகொலை தொடர்பாக முற்றிலும் மாறுபட்ட செய்தியொன்றினைக் கூறியது. அமைச்சின் அறிக்கையின்படி, "இரவு 11 மணியளவில் ஆலயச் சுற்றாடல்ப் பகுதியினை இராணுவம் சுற்றிவளைத்த வேளை, அங்கிருந்து இராணுவத்தினர் மீது பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐந்து பயங்கரவாதிகள் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டனர். பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையின் போது இடையில் அகப்பட்டு ஒரு குருவானவரும் பெண்ணொருவரும் கொல்லப்பட்டனர்" என்று கூறியது. 

ஆனால், லலித் அதுலத் முதலி இப்படுகொலை குறித்துப் பேசும்போது, பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையினை முற்றாக மறுத்திருந்தார். குருவானவர் மேரி பஸ்ட்டியானின் உடல் அங்கு கண்டெடுக்கப்படவில்லை என்றும், மாறாக அவரது ஆலயத்தில் துப்பாக்கிகளும் குண்டுகளும் காணப்பட்டதாகவும், ஆகவே அதனைப் பயங்கரவாதிகள் தமது தளமாகப் பாவித்திருப்பது உறுதியாகிறது என்றும் வாதிட்டார். 

எனினும் அரசால் இப்படுகொலை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையினை கத்தோலிக்கத் திருச்சபை முற்றாக நிராகரித்தது. "ஆலயத்தினைச் சுற்றிவளைத்த இராணுவத்தினரின் அணியொன்று அதன்மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. ஆலயத்திலிருந்து இராணுவத்தினரை நோக்கி எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை. மேலும் ஆலயத்தில் பெண்ணொருவர் அப்போது இருக்கவில்லை. குருவானவரின் பெயரிற்குக் களங்கம் கற்பிக்கவே பெண்ணொருவருடன் குருவானவர் இருந்ததாக அரசாங்கம் காண்பிக்க முயல்கிறது. மேலும் அங்கு ஆயுதங்களும், குண்டுகளும் காணப்பட்டன என்று அரசாங்கம் கூறுவது உண்மைக்குப் புறம்பானது" என்று கத்தோலிக்கத் திருச்சபை தனது கண்டன‌ அறிக்கையில் கூறியிருந்தது. 

மேலும் கொல்லப்பட்டவர்களிடையே குருவானவர் மேரி பஸ்ட்டியானின் உடல் காணப்படவில்லை என்று லலித் அதுலத் முதலி கூறியதையும் கத்தோலிக்கத் திருச்சபை மிகக் கடுமையாகச் சாடியிருந்தது. குருவானவர் மேரி பஸ்ட்டியான் இத்தாக்குதலில் கொல்லப்படவில்லையென்றும், படகேறி இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று அதுலத் முதலி தொடர்ச்சியாகக் கூறி வந்திருந்தார். கத்தோலிக்கக் குருவானவர் ஒருவரை தனது இராணுவம் கொலை செய்திருக்கும் செய்தி சர்வதேசத்தில் வெளிப்படுமிடத்து தனது அரசாங்கம் மீதான சர்வதேச அதிருப்தி தோன்றுவதைத் தடுக்கவே குருவானவர் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக லலித் அதுலத் முதலியினால் வேண்டுமென்றே இக்கதை புனையப்பட்டு, மீண்டும் மீண்டும் அரச ஊடகங்களில் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டில் பேசிய ஆயர்கள், குருவானவர் அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டதற்கான கண்ணால்க் கண்ட சாட்சிகள் இருப்பதாகவும், அரசாங்கம் இப்படுகொலை குறித்து நடத்திய விசாரணையின் விபரங்களை வெளியிட மறுத்து வருவது கண்டனத்திற்குரியது என்றும் கூறியிருந்தார்கள். 

சர்வதேச மன்னிப்புச்சபை இப்படுகொலை தொடர்பாக சுதந்திரமான விசாரணையொன்றினை நடத்தியது. அவ்விசாரணைகளின் அடிப்படியில் வெளியிடப்பட்ட‌ அறிக்கை வருமாறு,

"இதுவரையில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் எடுக்கப்பட்ட முயற்சிகளின்படி குருவானவர் மேரி பஸ்ட்டியான் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்கான எந்தச் சாட்சியங்களும் இல்லை. இதுவரை மேரி பஸ்ட்டியான் அவர்களது உடல் கண்டெடுக்கப்படவில்லையாயினும், அவர் ஆலயத்தில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டிருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் எம்மிடம் இருக்கின்றன. தை மாதம் 5 ஆம் திகதி நள்ளிரவிற்கும், 6 ஆம் திகதி அதிகாலைக்கும் இடையிலான நேரத்தில் ஆலயத்தைச் சுற்றி வளைத்துக்கொண்ட இலங்கை இராணுவத்தினர், குருவானவரின் வாசஸ்த்தலத்தின் பின்புறத்தினூடாக உள்ளே நுழைந்து அவரது பெயரைக் கூறி வெளியே வருமாறு அழைத்திருக்கின்றனர். தனது பெயரைக் கூறி இராணுவத்தினர் அழைப்பதைக் கேட்ட குருவானவர் மேரி பஸ்ட்டியான் முன்னே வரவும், வாசஸ்த்தலத்தின் விறாந்தைப் பகுதி யன்னல்களூடாக இராணுவத்தினர் அவரைச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர் . குருவானவர் கொல்லப்பட்ட பல மணிநேரத்திற்குப் பின்னர் அவரது உடலை இழுத்துச் சென்று அருகிலிருந்த மகளீர் பாடசாலையின் படிக்கட்டுக்களில் எறிந்து, அவரைச் சுற்றி ஆயுதங்களையும், இன்னும் சில வெடிபொருட்களையும் பரவி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் 6 ஆம் திகதி காலை தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து வெள்ளை நிற வானில் வந்திறங்கிய இன்னொரு தொகுதி இராணுவத்தினர் குருவானவரின் உடலை எடுத்துச் சென்றனர்" என்று கூறப்பட்டிருந்தது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் மக்கள் மீதான அரச‌ அடக்குமுறைகளினால் தமிழ் போராளி அமைப்புக்களில் இணைந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள்

 

தமிழ் மக்கள் மீது அரச இராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட மிக கொடூரமான படுகொலைகளோ அல்லது தமிழ் மக்கள் தமது தாயகப்பகுதிகளில் இருந்து பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டமையோ தமிழ்ப் போராளிகளைச் சோர்வடையச் செய்யவில்லை.  அவர்கள் இராணுவத்திற்கும், பொலீஸாருக்கும் எதிரான கண்ணிவெடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தத் தொடங்கினார்கள். மார்கழி 18 ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 8 பொலிசாரும் வாகனச் சாரதியும் கொல்லப்பட்டனர். மறுநாளான மார்கழி 19 ஆம் திகதி பதவியா குடியேற்றத்திற்கு அண்டிய பகுதியில் இரு இராணுவ வாகனங்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் இரு அதிகாரிகளும் இரு படை வீரர்களும் கொல்லப்பட்டனர். 

 இராணுவத்தினர் மீதான தாக்குதல்களுக்கு பதிலளிக்க யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் புதிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவம் நடத்திய சுற்றிவளைப்பில் 1000 தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். மட்டக்களப்பில் 400 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் திருகோணமலையில் தமிழர்களை மிகவும் மோசமாக அரசு நடத்தியிருந்தது.

ஒலிபெருக்கிகள் ஊடாக அறிவித்தல் ஒன்றினை மேற்கொண்ட இராணுவம் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைந்திருந்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாற்றுக் கேணி, காயடிக்குளம், கோட்டைக் கேணி, நாயாறு மற்றும் அளம்பில் ஆகிய பகுதிகளில் வசித்துவரும் தமிழர்களை 24 மணித்தியாலத்திற்குள் அங்கிருந்து வெளியேறிச் செல்லவேண்டும் என்று  கட்டளையிட்டது. இக்கிராமங்களில் இருந்து வெளியேறிய தமிழ் மக்கள் முல்லைத்தீவு நோக்கி இடம்பெயர்ந்து சென்றதுடன் அங்கு அமைக்கப்பட்ட அகதி முகாம்களிலும், கோயில்களிலும் தஞ்சமடைந்தனர். 

தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்திய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இதனைத் தவிர வேறு தெரிவுகள் அரசாங்கத்திடம் இல்லையென்று கூறியதுடன், பயங்கரவாதிகளுக்கெதிராக ரொக்கெட்டுக்கள், விமானக் குண்டுகள் மற்றும் நடுத்தர ஆட்டிலெறி எறிகணைகள் ஆகியவற்றையும் பாவிப்பது அவசியம் என்று கூறினார். 

தனது அறிக்கைகள், பேச்சுக்கள் ஆகியவற்றி லலித் அதுலத் முதலி தொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் சொல்லி வந்தார். அதுதான் போர்க்களத்தில் இராணுவம் திறமையாகச் செயற்பட்டு வருகிறது எனும் விடயம். புதுவருட தினத்தில் அவர் நாட்டு மக்களுக்கு வழங்கிய செய்தியில், "நாம் வென்று கொண்டு வருகிறோம், பயங்கரவாதிகளை அடிபணியவைப்பதில் வெற்றிபெற்று வருகிறோம்" என்று கூறினார். அக்காலப்பகுதியில் இராணுவத்தின் ஆட்பல எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டது. 12,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கெதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். இவர்கள் பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் திறமையாகப் பயிற்றப்பட்டவர்கள் என்றும் நவீன ரக ஆயுதங்களை அவர்கள் போரில் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். 

அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட விசேட பொலீஸ் கொமாண்டோ படைப்பிரிவான விசேட அதிரடிப்படையினரின் முதலாவது அணிக்கான பயிற்சிகளை ரவி ஜெயவர்த்தன ஒழுங்கு செய்திருந்தார். மேலும் 1985 ஆம் ஆண்டு தை முதலாம் வாரத்தில் அறிவித்தல் ஒன்றினை மேற்கொண்ட ஜெயார், மணலாற்றில் அமைக்கப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றத்தினைப் பாதுகாக்க 50 முதல் 100 வரையான சிங்கள ஊர்காவற்படையினரைத் தான் ஈடுபடுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

அரசாங்கம் தனது படையினரின் எண்ணிக்கையினையும், பலத்தையும் அதிகரித்து வந்த அதேவேளை போராளிகளும் தம்மைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டு வந்தனர்.இராணுவ ஆய்வாளரான தாரகி சிவராமின் கூற்றுப்படி அக்காலத்தில் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் கையே ஓங்கியிருந்தது என்று கூறமுடியும். 1983 ஆம் ஆண்டு தமிழர் மேல் நடத்தப்பட்ட இனக்கொலை, அதனைத் தொடர்ந்து வந்த ஏனைய படுகொலைகள், தமிழர்களை அவர்களது தாயகத்தில் விரட்டியடித்தமை போன்ற நடவடிக்கைகளால் போராளி அமைப்புக்களில்  இணையும் தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. 

"ஒரு பூனையும், ஒரு மணியும் சில உத்திகளும்" என்கிற தலைப்பில் 1997 ஆம் ஆண்டு சித்திரை 20 ஆம் திகதி தாரகி அவர்கள் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன்படி 1983 ஆம் ஆண்டு தமிழினக் கொலைக்கு முன்னர் வரை அடிப்படை ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டிருந்த தமிழ்ப் போராளிகளின் எண்ணிக்கை வெறும் 800  பேர்தான் என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் 1984 முதல் 1985 வரையான காலப்பகுதியில் தமிழ்ப் போராளி அமைப்புக்களில் போர்க்களத்திற்கு அனுப்பப்படக்கூடிய இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை 44,800 ஆகக் காணப்பட்டதாக தாரக்கி குறிப்பிடுகிறார். அவரது கணிப்புப்படி ஒவ்வொரு அமைப்பிலும் இருந்த போராளிகளின் எண்ணிக்கை பின்வருமாறு குறிப்பிடபட்டிருந்தது. அக்காலப்பகுதியில் பெரிய அமைப்பாக விளங்கிய புளொட்டின் தமிழ்நாட்டு பயிற்சி முகாம்களில் பயிற்சிகளின் ஈடுபட்டிருந்தோரின் எண்ணிக்கை 6,000, அதேவேளை வடக்குக் கிழக்கின் பல பயிற்சிமுகாம்களிலும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தோரின் எண்ணிக்கை 12,000. டெலோ அமைப்பின் 4,000 போராளிகள் தென்னிந்திய பயிற்சிமுகாம்களில் பயிற்றப்பட்டு வந்தவேளை வடக்குக் கிழக்கில் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தோரின் எண்ணிக்கை 2,000. சுமார் 7,000 போராளிகளைக் கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அணியில் 1500 பெண்போராளிகளும் காணப்பட்டனர். புலிகள் அமைப்பில் 3,000 இற்கும் குறைவான போராளிகள் காணப்பட்ட அதேவேளை ஈரோஸ் அமைப்பில் 1800 போராளிகள் சேர்ந்திருந்தனர்.  மீதமானவர்கள் சிறிய ஆயுதக் குழுக்களில் அங்கத்தவர்களாக இருந்தனர். 

1983 ஆம் ஆண்டு இனக்கொலை பல தமிழ் இளைஞர்களை சினங்கொண்டு ஆயுத அமைப்புக்களில் இணைய உந்தித் தள்ளியிருந்தது. இவ்வாறு ஆரம்பத்தில் இணைந்துகொண்டவர்கள் வடக்கையும், தெற்கையும் சேர்ந்தவர்கள். தமிழ் மக்கள் மீதான படுகொலைகள், கைதுகள், சித்திரவதைகள், பலவந்தமான வெளியேற்றங்கள் ஆகியவை கிழக்கு மாகாணத்திலிருந்தும் இளைஞர்களை ஆயுத அமைப்புக்களில் இணைந்துகொள்ள உந்தியிருந்தது.  

தமிழ்ப் பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட அரசு முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினைப் பலப்படுத்தவே உதவின என்பதனை அரசு அன்று உணர்ந்துகொள்ளவில்லை. ஆகவே 1985 முதல் 1986 வரை தனது பாணியில் படுகொலைகள், கைதுகள், சித்திரவதைகள், பலவந்தமான வெளியேற்றங்கள் என்று பல்வேறு கொடூரங்களைத் தமிழ் மக்கள் மீது அது கட்டவிழ்த்து வந்தது.

 

  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • இதேபோல் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால், நாய்க்கடி, விசர் நாய்க்கடிகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்படுதல் , கும்பல் கும்பலாய் அலையும் நாய்களால் தொரத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் சைக்கிள்களில் திரிவோர் குப்புற விழுந்து முழங்கால் பெயர்தல்,  உணவின்றி வத்தலும் தொத்தலுமாய் அலையும் நாய்களையும், ஒழுங்கைகள் தெருக்களில் கூட்டமாய் அலையும் நாய்களால் போக்குவரத்து பாதிக்கப்படலையும் தவிர்க்கலாம். நாய்களை முற்றாக அழிக்க தேவையில்லை இனப்பெருக்கலை மட்டுப்படுத்தினால் நாய்களினதும்  நமதும் எதிர்காலத்துக்கு சிறப்பு.
    • PadaKu TV     சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.          
    • நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.    சுரண்டவில்லை 
    • சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
    • டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை. அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.