Jump to content

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

தற்போது மிகவும் அவசியாமானது என்னவென்றால் பதற்றத்தினைத் தணித்து, நம்பிக்கையினை ஏற்படுத்துவதுதான். சம்மந்தப்பட்ட‌ அனைத்துத் தரப்பினரும் எவ்வித அச்சமும் இன்றி, ஒருவரில் ஒருவர் நம்பிக்கை கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வுடன் தமக்கிடையே இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலையொன்று உருவாகவேண்டும் என்பதே எனது விருப்பம்

இந்த புரிந்துணர்வு இன்னும் தான் வரவில்லை.

முன்னரைவிட விரிவடைந்தே செல்கின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 613
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைத் தீர்க்க விரும்பிய இந்திரா

ஜெயார் தூதனுப்பிய ஹெக்டர் ஜெயவர்த்தனவின் விஜயத்தின் பின்னர் இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிடுவதென்று முடிவாகியது. இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட‌ இந்திய அதிகாரிகள், "ஒன்றுபட்ட இலங்கைக்குள்" தமிழருக்கான தீர்வொன்றையே பிரதமர் இந்திரா கோருவதாக குறிப்பிடச் சொன்னார்கள். சுதாரித்துக்கொண்ட இலங்கையதிகாரிகள், "ஒன்றுபட்ட" இலங்கை எனும் பதத்தினை நிராகரித்து "ஓற்றை நாடான" எனும் பதத்தினை பாவிக்கக் கோரினர். நிலைமை சிக்கலடைவதை அவதானித்த இலங்கைக் குழுவின் தலைவர் ஹெக்டர், தன்னுடன் வந்திருந்த அதிகாரிகளை அடக்கி வாசியுங்கள், இந்திராவின் வாயால் நாம் விரும்பாத சொற்களை வரப்பண்ணாதீர்கள் என்று கட்டுப்படுத்தினார். இந்திரா தனது எண்ணத்தை கூறும் அதிகாரத்தை நாம் கேள்விகேட்கக் கூடாது என்று கூறினார் அவர். இதனை ஜெயாரின் ஆலோசகரான பேர்ணாட் திலகரட்ணவும் ஆதரித்தார். 

அன்று மாலை இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திரா உரையாற்றினார். ஜெயாரின் விசேட பிரதிநிதி ஹெக்டர்  இந்தியா வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அவருடனான பேச்சுக்களில் இலங்கையில் நடந்துவரும் சம்பவங்கள் குறித்த இந்திய மக்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கரிசணை குறித்து தான் தெரிவித்ததாக கூறினார். மேலும், தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வினை ஆராய ஜெயவர்த்தன ஆடி மாதத்தில் கூட்டவிருந்த சர்வகட்சி மாநாடு குறித்தும் பேசிய இந்திரா, அம்மாநாடு நடவாது போனமை குறித்தும் குறிப்பிட்டார். 

"அவர்கள் என்னிடம் முன்வைத்த தீர்வுக்கான யோசனைகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர்களிடம் தெரிவித்தேன். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இந்தியா முன்வைக்கும் பரிந்துரைகளை ஆராய இலங்கை ஆயத்தமாக இருப்பதாக என்னிடம் கூறினார்" என்று தெரிவித்தார்.

 Image9.gif

இந்திரா காந்தி

"பேச்சுவார்த்தைகள் ஊடாக தமிழ் மக்களும் அரசாங்கம் சுமூகமான தீர்வுகுறித்துக் கலந்துரையாட முன்வரவேண்டும் என்று நான் எனது விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்தேன். இப்பேச்சுவார்த்தைகள் வெற்றியளிப்பதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யக் காத்திருப்பதாகவும் அவர்களிடம் கூறினேன். இரு நாடுகளுக்கும் இருக்கும் பாரம்பரிய உறவு முறையினை அடிப்படையாகக் கொண்டு இந்தியா செய்ய விரும்பு உதவிகள் குறித்த நன்றியை இலங்கை ஜனாதிபதி என்னிடம் தெரிவித்திருக்கிறார். எமது உதவிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்" என்றும் தெரிவித்தார்

ஆவணி 12 ஆம் திகதி லோக்சபாவில் இந்திரா வெளியிட்ட அறிக்கை இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டின் அடிப்படையினைத் தெளிவாகக் காட்டியிருந்தது.

இந்திராவின் அறிக்கயில் குறிப்பிடப்பட்டிருந்த அடிப்படை இலக்கணங்கள் இவ்வாறு இருந்தன, 

1. பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தமிழருக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும்.

2. வழங்கப்படும் தீர்வு தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்துபவையாக இருக்க வேண்டும்.

 மேலும், வெளி மத்தியஸ்த்தத்தின் உதவியினூடாகவே தீர்வு எட்டப்படல் வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

இந்திரா காந்தியின் காலத்திலிருந்தே ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தும் தீர்வு காணப்படல் வேண்டும் என்றே இந்தியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது.

 

ஜெயார் அனுப்பிய பிரதிநிதி இலங்கை மீண்டபோது பல அமைச்சர்கள் இந்திராவினால் பாவிக்கப்பட்ட "ஒன்றுபட்ட இலங்கை" எனும் பதத்திற்கெதிரான தமது கடுமையான ஆட்சேபணையினை வெளியிட்டார்கள். குறைந்தது "ஒன்றுபட்ட இலங்கை" எனும் பதத்தினைப் பாவிக்கும்போது இலங்கையின் கரிசணைகளையாவது அறிக்கையினுள் உள்வாங்கியிருக்க வேண்டும் என்று அவர்கள் விமர்சித்தார்கள். ஆனால், தனது முடிவில் தீர்க்கமாக நின்ற ஹெக்டர், இந்தியாவின் கொள்கைகளை அவர்கள்தான் முடிவெடுக்கமுடியும், இலங்கையர்கள் அல்ல என்று கூறிவிட்டார். 

See the source image

தமிழர் மீதான அரச ஆதரவுடனான தாக்குதல் முடுக்கிவிடப்பட்ட நாளான ஆடி 25 ஆம் திகதி அமிர்தலிங்கமும் ஏனைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வவுனியாவில் நின்றிருந்தார்கள். மன்னாரில் நடைபெற்ற தமது வருடாந்த மாநாட்டில் இலங்கையரசுடன் பேரம்பேசலில் ஈடுபடுவது இல்லை என்று முடிவெடுத்தார்கள். வவுனியாவில் இருக்கும்போது ஆவணி 29 ஆம் திகதி இந்திராவிடமிருந்து அமிர்தலிங்கத்திற்குச் செய்தியொன்று வந்திருந்தது. "இந்தியாவுக்கு வாருங்கள், உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்" என்பதே இந்திராவிடமிருந்து வந்த அந்தச் செய்தி.    ஆனால், அமிர்தலிங்கத்தால் வவுனியாவை விட்டு வெளியேற முடியவில்லை. வழியில் சிங்களவர்கள் அவரை அடையாளம் கண்டுவிட்டால் அவர் கொல்லப்படுவது உறுதி எனும் நிலைமை காணப்பட்டது. ஆகவே, இந்தியத் தூதர் சத்வால் ஊடாக தான் இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருமாறு அவர் கேட்டுக்கொண்டார். அமிர்தலிங்கம் மட்டுமல்லாமல் அவருடன் சிவசிதம்பரமும், சம்பந்தனும் கூடவே தில்லிக்குப் பயணமாவதற்கான ஏற்பாடுகளை சத்வால் செய்துகொடுத்தார்.

ஆவணி 6 ஆம் திகதி வவுனியாவில் கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆறாவது திருத்ததினூடான இலங்கைக்குள் தனியான நாடொன்றினை உருவாக்க முயலமாட்டோம் என்கிற சத்தியப்பிரமாணத்தை செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்தனர். ஆனால், அரச அதிகாரிகளான தமிழர்கள் இச்சத்தியப்பிரமாணம் குறித்து தமது விருப்பத்தின்படி முடிவெடுக்கலாம் என்று கூறிவிட்டனர்.

இந்த விடயம் புலிகளின் உயர்பீடத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை என்று பிரபாகரன் கருதினார். இச்சத்தியப்பிரமாணம் எந்த அர்த்தமும் கொண்டிருப்பதாக அவர் நினைக்கவில்லை. புதிய அரசியலமைப்பின் மேல் சத்தியப்பிரமாணம் செய்யும் தமிழ் அதிகாரிகள் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதை எதுவும் தடுக்கப்போவதில்லை என்று அவர் கூறினார்.  இச்சத்தியப்பிரமாணத்தை ஒரு பிரச்சினையாக்குவதன் மூலம் அரச அதிகாரிகளும் அவர்களது குடும்பங்களும் ஏற்கனவே முகம்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக இன்னொரு பிரச்சினையாக இதனை உருவாக்க வேண்டாம் என்று அவர் கூறினார். தெற்கில் பணிபுரிந்துவந்திருந்த பல தமிழ் அதிகாரிகள் கலவரத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. "எமது முடிவுகள் மூலம் அவர்களை வீதியில் நாம் எறிந்துவிடக் கூடாது" என்று அவர் உறுதியாகக் கூறினார். 

 See the source image

கந்தசாமி பத்மநாபா

 ஆனால், பத்மாநாபாவின் அமைப்பான ஈ.பி.ஆர்.எல் எப் வித்தியாசமான நிலைப்பாட்டினை எடுத்தது. சிங்கள அதிகாரத்துக்கெதிரான தமிழரின் நிலைப்பாட்டை அடையாள வழியிலாவது தமிழர்கள் காட்டவேண்டும் என்று பத்மநாபா கூறினார். அரசின் ஆறாவது திருத்தச் சட்டத்தின்மேல் சத்தியப்பிரமாணம் செய்து பதவியை நீடிக்க வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு இல்லை என்று அவர் வாதிட்டார்.   ஈரோஸ் மற்றும் புளொட் அமைப்புக்கள் இதுகுறித்து எந்த முடிவினையும் எடுக்க மறுத்துவிட்டன. இவ்வமைப்புக்களின் தலைவர்கள் அப்போது தமிழ்நாட்டில் தங்கியிருந்தனர்.

பத்மநாபாவின் முடிவினை ரமேஷ் தலைமையில் சிறிய போராளிக் குழுவொன்று நடைமுறைப்படுத்தியது. இந்தக் குழுவில் இருந்த ஏனையவர்களின் பெயர்கள், சுபத்திரன், மோகன், சுதன், குமார், இந்திரன் மற்றும் இளங்கோ. அரச அலுவலகங்களுக்குள் நுழைந்த இவர்கள் அங்கிருந்த ஆவணங்களைக் கிழித்தெறிந்தார்கள். ஒரு பொலீஸ் ஜீப் உடபட சில அரச வாகனங்களை அவர்கள் எரியூட்டினார்கள்.

ஆனால், ஈ.பி.ஆர். எல். எப் இன் அரசுக்கெதிரான இந்தச் செயற்பாடுகள் எந்த விளைவினையும் ஏற்படுத்தவில்லை. தமிழ் அதிகாரிகளைப் பொறுத்தவரையில் தமது பணிகளைத் தக்கவைப்பதே முக்கிய கரிசணையாக இருந்தது. லேக் ஹவுஸ் நிறுவனமும் தமது ஊழியர்களை ஆறாவது திருத்தச் சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுக்கும்படி கேட்டிருந்தது. எனது படிவத்தில் கையொப்பமிட்டு எனது ஆசிரியரிடம் கையளித்தேன். கையொப்பமிட்ட எவருமே அதன்பின்னர் இந்த சத்தியப்பிரமாணம் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

 மிகக்கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் அமிர்தலிங்கம் கொழும்பை வந்தடைந்தார். மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னிருக்கையில் அமர்ந்தே அவர் கொழும்பு வந்து சேர்ந்தார். கொழும்பில், இந்தியத் தூதரக அதிகாரிகளினால் அவர் பொறுப்பெடுக்கப்பட்டார். ஆவணி 11 ஆம் திகதி அவர் சென்னைக்குப் பயணமானார். அமிர்தலிங்கத்தை வரவேற்கவென தில்லியிலிருந்து வந்திருந்த இந்திய உள்நாட்டு விவகார அமைச்சர் பி.வெங்கடசுப்பையா மற்றும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கே. எஸ். பாஜ்பாய் ஆகியோர் சென்னையில் அமிரைச் சந்தித்தனர். எதிர்க்கட்சியான ஜனதாக் கட்சியின் இரா செழியனும் அங்கு இருந்தார்.

சென்னையில் அன்றிரவு தங்கிய அமிர்தலிங்கம் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனையும் தி.மு.க வின் தலைவர் மு கருநாநிதியையும் சென்று சந்தித்தார். மறுநாளான ஆவணி 12 ஆம் திகதி சென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்தில் கிளம்பிச் சென்றார்.

ஹைதரபாத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவும் அமிருடன் பயணத்தில் இணைந்துகொண்டார். விமானத்தில் பயணித்தவாறே அமிரும் நரசிம்மராவும் சம்பாஷணையில் ஈடுபட்டனர். தில்லியில் விமான நிலைய கேட்போர் கூடத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த நரசிம்மராவோ, அமிரை அங்கே அழைத்துச் சென்றார். கூடிநின்ற பத்திரிகையாளர் முன்னிலையில் அமிர் பேசினார்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திராகாந்தி இல்லாமல் போனது இலங்கைக்கு பெரியதொரு வரப்பிரசாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்திராகாந்தி இல்லாமல் போனது இலங்கைக்கு பெரியதொரு வரப்பிரசாதம்.

அப்படியில்லை அண்ணா, இந்திரா கூட சிங்களவர்களின் நலன்களைப் பாதிக்காத வகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள்த்தான் தீர்வொன்றினைக் கோரமுடியும் என்று அமிர்தலிங்கத்திற்குக் கூறியிருக்கிறார். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சுதந்திரதின விழாவில் விசேட அதிதியாக வரவேற்பளிக்கப்பட்ட அமிர்தலிங்கம்

Prime Minister Indira Gandhi on I-Day, Indira Gandhi, Akalis demand, Indira Gandi Independence Day speech, Forty Years Ago, Akalis plan ‘kam roko, akalis rail rok, Shiromani Akali Dal, Dy LS Speaker G Lakshmanan resignation, indian express news

இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுக்களின்போது ஏற்பட்ட தோல்விகளையடுத்தே தமிழ் மக்கள் தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்தார்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் அமிர்தலிங்கம். 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் அடிப்படையில் பிரிந்துசெல்வதென்று முடிவெடுத்திருந்தபோதிலும், ஜெயாருடன் பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்வுகாண்பதற்கு தமிழர்கள் தீவிரமாக முயன்று வந்ததாக அவர் கூறினார். ஆயுத அமைப்புக்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் தீர்வினை ஏற்றுக்கொள்ள தாம் முன்வந்திருந்ததாகவும் அவர் கூறினார். ஆனால், அதிகாரங்களோ, போதிய நிதிவளமோ அற்றநிலையில் மாவட்ட சபைகள் பிரியோசனமற்ற ஒரு தீர்வென்பதை தாம் உணர்ந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.மாவட்ட சபைகளுக்கான அதிகாரத்தையும், நடத்துவதற்கான நிதியையும் கேட்டபோது நாம் தாக்கப்பட்டோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்தியாவும், சர்வதேச சமூகமுமே இன்று எம்மைக் காக்கமுடியும் என்று பத்திரிக்கையாளர்களைப் பார்த்துக் கூறினார் அமிர். ஜெயவர்த்தன மீதும் அவரது அரசாங்கத்தின் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையினை முழுமையாக இழந்துவிட்டோம். அவர்களுடன் பேசுவதில் இனிப்பயனில்லை. தமிழர்களை அழிக்கவே அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார். ஆவணி 14 ஆம் திகதி அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் சம்பந்தனும் இந்திராகாந்தியைச் சென்று சந்தித்தனர். இந்திராவின் ஆலோசகர் கோபாலசாமி பார்த்தசாரதி மற்றும், இந்திராவின் செயலாளர் பி. சி. அலெக்ஸாண்டர் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். இலங்கையில் நிலவும் சூழ்நிலை குறித்து இரண்டுமணி நேரம் அவர்கள் பேசினார்கள். பின்னர், தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அத்தீர்வில் இந்தியா வகிக்கப்போகும் பாத்திரம் குறித்தும் பேசப்பட்டது.

தமிழர்களின் பிரச்சினை தொடர்பான சுருக்கமான சரித்திரத்தை இந்திராவுக்கு
விளக்கினார் அமிர். அகிம்சை வழியில் தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களும் அதன் தோல்வியும் அவருக்கு உணர்த்தப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் வாழ்வதே இன்று அவர்கள் முன்னாலிருக்கும் உடனடித் தேவை என்று அவர் கூறினார். "சுய அதிகாரம் மிக்க சமஷ்ட்டிக் கட்டமைப்பு ஒன்றினையே நாம் கோரினோம். அது மறுக்கப்பட்டதனாலேயே தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்தோம்" என்று அவர் கூறினார். 

தமிழரின் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளை இந்திரா முன்வைத்தார். இலங்கையைப் பிரிப்பதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அவர்களிடம் திட்டவட்டமாகக் கூறினார் . ஒன்றுபட்ட இலங்கைக்குள், தனிநாட்டிற்குக் குறைவான சுய ஆட்சி உள்ள பிராந்தியங்கள் எனும் அடிப்படையில் தமிழர்கள் தீர்வொன்றினைக் கோரமுடியும் என்று அவர்களிடம் கூறினார் இந்திரா. "உங்களின் முதலாவது கோரிக்கையான சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வுக்கே செல்லுங்கள், இந்தியா உங்களுக்கு ஆதரவாக நிற்கும்" என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் தெரிவித்தார்.

Image11.gif

என்னுடன் பின்னர் பேசிய சம்பந்தன், இலங்கையின் தமிழர் ‍- சிங்களவர் பிணக்கில் இந்தியா எத்தரப்பையும் ஆதரிக்காது என்று இந்திரா தம்மிடம் உறுதிபடக் கூறியதாகச் சொன்னார். சிங்களவர்களின் நலன்களைப் பாதிக்காதவகையில் தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்றினை வழங்குவது மட்டுமே இந்தியாவால் செய்யக்கூடியதும், செய்யவிரும்புவதும் என்று இந்திரா அமிர்தலிங்கம் தலைமையிலான‌ குழுவினரிடம் கூறியிருக்கிறார். இலங்கையில் சுய கெளரவத்துடனும், பாதுகாப்புடனும் தமிழர்கள் வாழ்வதை உறுதிப்படுத்த தன்னால் முயற்சியெடுக்க முடியும் என்றும் இந்திரா கூறியிருக்கிறார். பெரும்பான்மையினரான சிங்களவர்களின் நலன்களைப் பாதிக்காத வகையிலேயே இதனைச் செய்யவேண்டியிருக்கும் என்று அவர் இப்பேச்சுக்களின்போது வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். 

இந்தியாவின் இந்த பரிந்துரைகளை உடனடியாகவே ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கம், வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்திசெய்யப்பட்டாலே போதும் என்று இந்திராவிடம் தெரிவித்தார். தமிழர்களின் அபிலாஷைகள் என்று தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சியினால் அறியப்பட்ட விடயங்களை 1956 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற சமஷ்ட்டிக் கட்சியின் மாநாட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறிய அமிர்தலிங்கம் அதுகுறித்து இந்திராவுக்கு விளங்கப்படுத்தினார்,

தமிழர்களுக்கான தேசம், தமிழர்களுக்கான தாயகம், சுயநிர்ணய உரிமை மற்றும் குடியுரிமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தமிழர்களின் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் விளங்கப்படுத்தினார். 

பின்னர் ஜெயார் தூதனுப்பிய ஹெக்டர் ஜயவர்த்தனவுடனான தனது பேச்சுக்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் விளங்கப்படுத்தினார் இந்திரா. மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்த ஜெயவர்த்தன இணங்கியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார் அவர். ஆனால், இத்திட்டம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானது அல்ல என்று ஹெக்டரிடம் ஏற்கனவே இந்திரா தெரிவித்திருந்தார். அதனையடுத்து ஏனைய தீர்வுகள் குறித்து ஆராய ஜெயார் இணங்குவதாக இந்திராவிற்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே மீண்டும் அனைத்துக் கட்சி மாநாடொன்றினைக் கூட்டப்போவதாக ஜெயார் அறிவித்திருந்தார். இதன் பின்னணியில், ஜெயார் உத்தேசித்திருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க விரும்புகிறீர்களா என்று அமிர் தலைமையிலான தூதுக்குழுவினரைப் பார்த்துக் கேட்டார் இந்திரா. 

இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், மன்னாரில் நடைபெற்ற த.ஐ.வி. மு யினரின் வருடாந்த மாநாட்டில் இலங்கையரசாங்கத்துடன் இனிமேல் பேசுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டதாகக் கூறினார். எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அவர் ஒவ்வொரு முறையும் கூறுவார், ஆனால் அவற்றினை ஒருபோதுமே அவர் நடைமுறைப்படுத்த மாட்டார் என்று ஜெயார் குறித்து இந்திராவிடம் கூறினார் அமிர்தலிங்கம். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஜெயவர்த்தனவுடன் 11 மாதங்களாகத் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைகளை ஜெயவர்த்தன எப்படி தனக்குச் சார்பாகக் கையாண்டார் எனும் விடயத்தை இந்திராவுக்குத் தெரியப்படுத்தினார் அமிர். 

"கடந்த காலத்தில் இலங்கையரசுடன் செய்துகொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் அனைத்தையும் அவர்கள் கைவிட்டு விட்டதால், அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையினை நாம் முற்றாக இழந்துவிட்டோம்" என்று அமிர் கூறினார். பதிலளித்த இந்திரா, தானும் ஜெயவர்த்தனவை நம்புவதில்லை என்று தெரிவித்தார். ஆனால், பேச்சுவார்த்தைகளுக்காக ஜெயார் விடுக்கும் அழைப்பினை தமிழர்கள் தவறவிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். "நான் முன்னர் கூறியதுபோல, இப்பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை மேசையினூடாகவே எட்டப்பட முடியும்" என்று மீண்டும் கூறினார் இந்திரா. இந்திராவின் நிலைப்பாட்டைப் பாராட்டிய அமிர்தலிங்கம், பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்கான இணக்கத்தினைத் தெரிவித்தார்.

Image12.gif

 அமிர்தலிங்கத்தின் திடீர் மனமாற்றத்தையும், பேச்சுக்களில் கலந்துகொள்ளும் இணக்கத்தையும் இந்திரா பாராட்டினார். மறுநாளான ஆவணி 15 இல் நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் சிறப்பு அதிதியாக அமிர்தலிங்கத்தை அழைத்தார் இந்திரா. இந்தியாவின் செங்கோட்டைக்கு கெளரவமாக அழைத்துச் செல்லப்பட்ட அமிர்தலிங்கம், வெளிநாட்டு அரச அதிபர்களுக்கு இணையான வவேற்பினையும், உபசரிப்பையும் பெற்றுக்கொண்டார். அங்கு கலந்துகொண்ட அரச அதிபர்களில் அமிர்தலிங்கம் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். செங்கோட்டையிலிருந்து இந்திய நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திரா இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக சிங்களவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்தார். அது ஒரு இனக்கொலை என்று அவர் வர்ணித்தார். தமிழர்கள் சுயகெளரவத்துடனும், பாதுகாப்பாகவும் வாழ இந்தியா உதவும் என்றும் கூறினார்.

Edited by ரஞ்சித்
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

ஆவணி 15 இல் நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் சிறப்பு அதிதியாக அமிர்தலிங்கத்தை அழைத்தார் இந்திரா. இந்தியாவின் செங்கோட்டைக்கு கெளரவமாக அழைத்துச் செல்லப்பட்ட அமிர்தலிங்கம், வெளிநாட்டு அரச அதிபர்களுக்கு இணையான வவேற்பினையும், உபசரிப்பையும் பெற்றுக்கொண்டார். அங்கு கலந்துகொண்ட அரச அதிபர்களில் அமிர்தலிங்கம் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். செங்கோட்டையிலிருந்து இந்திய நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திரா இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக சிங்களவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்தார். அது ஒரு இனக்கொலை என்று அவர் வர்ணித்தார். தமிழர்கள் சுயகெளரவத்துடனும், பாதுகாப்பாகவும் வாழ இந்தியா உதவும் என்றும் கூறினார்.


அன்றே இந்த அரசியல் தலைமைகள் ஆயுதஅமைப்புகளையும் இணைத்து ஒரு அரசியல் திட்டத்தை தயாரித்து ஒரு சமஷ்டித்தீர்வுக்கான ஆவணமாக இந்திரா அவர்களிடம் கையளித்து யே.ஆருக்கு அனுப்பியிருந்தால், யே.ஆரை மாவட்டசபையிருந்து மாற்றியோசிக்க வைத்திருக்கலாம் அல்லது பிடிவாதமாக இருப்பின் இந்தியாவிடம் பந்தைத் திருப்பிவிட்டிருக்கலாம். கையாலாகத அரசியற் தெளிவற்ற தலைமைகள். இன்றும்மாறாது அதே அச்சில், காலச் சுழற்சியில் வந்து நிற்கிறது. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் உணர்வார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரின் அவலங்களை தன‌து அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த நினைத்த கருநாநிதி

 

இந்திய சுதந்திரதின விழாவில் இந்திரா ஆற்றிய உரையும், அமிர்தலிங்கத்திற்கு அளிக்கப்பட்ட கெளரவமும் ஜெயாரைக் கோபத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றது. ஆகவே, தனது அரச ஊடகங்களை இந்திராவிற்கெதிராகவும், இந்தியாவுக்கெதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்குமாறு பணித்தார். ஜெயாரின் ஆணைப்படி அரச ஊடகங்கள் இந்திராவின் நம்பகத்தன்மையினையும் அவரது பக்கச்சார்பின்மையினையும் வெகுவாகக் கேள்விகேட்டு விமர்சித்திருந்தன. இந்தியாவைச் சண்டியர் என்று விளித்த இந்த ஊடகங்கள் சிறிய நாடான இலங்கையின் கைகளை மடக்கி வைக்கப் பார்ப்பதாக குற்றம் சுமத்தின. அமிர்தலிங்கத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதையினையும், இந்திரா காந்தியின் காட்டமான உரையினையும் அவை வெகுவாக விமர்சித்தன. 

ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ தனது நிலைப்பாட்டில் சற்றுத் தளர்வுப் போக்கினைக் கடைப்பிடிக்க விரும்பியது. தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமிர்தலிங்கம், "இந்திரா காந்தியுடனான பேச்சுக்களின் பின்னர் நிலைமை மாறிவிட்டது" என்று தெரிவித்தார். இந்தியாவின் நல்லெண்ண உதவிகளின்மூலம் அடிப்படை மாற்றங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன என்று அவர் கருத்து வெளியிட்டார். 

மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அமிர்தலிங்கம் கூறினார். அரசாங்கமானது தனிநாட்டிற்கு நிகரான சாத்தியப்படக்கூடிய மாற்றுத்தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் தமது தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட்டு விட்டு அதனைப் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார். காத்திரமான மாற்றுத்தீர்வொன்றினை அரசு முன்வைக்கும் பட்சத்தில், தாம் அதனை தமிழ் மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களை அதற்கு இணங்கவைக்கப்போவதாகவும் அவர் கூறினார். மாற்றுத்தீர்வு எப்படி இருக்குமென்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், அது சமஷ்ட்டி அடிப்படையிலான , தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய தீர்வாக அமையவேண்டும் என்று கருத்து வெளியிட்டார்.

அப்படியான மாற்றுத்தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் இந்தியா கட்டாயம் ஒரு தரப்பாக தீர்வுவிடயத்தில் பங்களிப்புச் செலுத்தவேண்டும் என்றும் கூறினார். நல்லிணக்க உதவிகளைச் செய்யும் நிலையிலிருந்து செயற்றிறன் கொண்ட மூன்றாவது தரப்பாக இந்தியா தன்னை முன்னகர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு உதாரணமாக சர்வதேச பிணக்குகளளில் அமெரிக்காவின் மத்தியஸ்த்தத்துடன் இடம்பெற்ற காம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா அளிக்கும் பங்கிற்கு நிகராக தமிழரின் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு இருக்கவேண்டும் என்று அவர் கூறினார். மேலும், இலக்கு ஒன்று எட்டப்படுவதற்கு இந்தியா உத்தரவாதம் வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அமிர்தலிங்கம் முன்வைத்த அனைத்துப் பரிந்துரைகளையும் ஜெயார் முற்றாக நிராகரித்தார். ஊடகங்களுக்குப் பேசிய ஜெயார், இந்தியா அடக்கி வாசிப்பதே இப்போதைக்குத் தேவையானது என்று கூறினார். தேவைப்பட்டால் நாம் இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினை நாடுவோம், இப்போதைக்கு வேண்டாம் என்று அவர் கூறினார்.

தில்லியிலிருந்து திரும்பிய அமிர்தலிங்கத்தை உணவெழுச்சியினால் உந்தப்பட்ட தமிழ்நாடு வரவேற்றது. "ஈழத்திற்கான யாத்திரை" எனும் பெயரில் நெடுமாறனினால் ஆவணி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட‌  பேரணி தோல்வியில் முடிவடைந்தது. ஆனாலும், 8 நாட்களாக, 1700 கிலோமீட்டர்கள் தூரம் நடைபவணியாக வந்த 5,000 ஈழ ஆதரவாளர்களின் முயற்சியினால் மொத்தத் தமிழ்நாடுமே உணர்வுகொண்டு எழுந்து நின்றது. ஈழத்தில் பாதிக்கப்பட்டுவரும் தமது உறவுகளுக்காக உணர்வுடன் திரண்ட ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் இந்தப் பேரணியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது உணர்வினை வெளிப்படுத்தினர். பிரபாகரனை நேசித்த மக்களைக் கொண்டவையும், அவர் சிறிதுகாலம் வாழ அடைக்கலம் கொடுத்தவையுமான‌ இரு பழமை மிக்க நகரங்களான மதுரைக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலேயே இந்தப்பேரணி நடைபெற்றிருந்தது.

 praba-nedumaran.jpg?w=780

பிரபாகரனுடன் நெடுமாறன் ‍ 80 களின் இறுதிப்பகுதியில்

ஒரு தொகை மீன்பிடிப் படகுகள் மூலம் பாக்கு நீரிணையைக் கடந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்வதே நெடுமாறனின் நோக்கமாக இருந்தது. கொழும்பும், தில்லியும் நெடுமாறனின் இந்த முயற்சியினால் கடுமையான நெருக்கடியச் சந்தித்தன. தனது சிறிய கடற்படையை உசார்ப்படுத்திய ஜெயார், பாக்கு நீரிணையைக் கடக்கும் படகுகள் அனைத்தையும் தடுத்துவிடும்படி ஆணையிட்டார். இது தேவையற்ற மோதலை உருவாக்கிவிடும் என்று அஞ்சிய தில்லி, நெடுமாறனின் முயற்சியைத் தடுத்து நிறுத்தியது. எம் ஜி ஆருடன் பேசிய இந்திரா காந்தி, நெடுமாறன் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதை நிறுத்தும்படி கோரினார். நெடுமாறனுக்கு மீன்பிடிப் படகுகளை வழங்குவதைத் தடுத்ததன் மூலம் அவரின் முயற்சியை முறியடித்தார் எம்.ஜி.ஆர். தனது காவல்த்துறையைக் கொண்டு தமிழ்நாட்டின் கரையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகளை அகற்றினார். இந்தியாவின் சுதந்திர தினமான ஆவணி 15 ஆம் திகதி இராமேஸ்வரத்தின் கரையை வந்தடைந்த நெடுமாறனின் பேரணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் யாழ்ப்பாண செல்வதற்கென்று இரு ஓட்டை விழுந்த‌ படகுகள் மட்டுமே அக்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அவற்றின் ஒன்றில் ஏறிக்கொண்ட நெடுமாறன், அதன்  உரிமையாளரைப் பார்த்து படகினை யாழ்ப்பாணம் நோக்கிச் செலுத்துமாறு கோரினார். நெடுமாறனின் கோரிக்கயினை வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்ட அந்த உரிமையாளரினால் கடலில் சிறிது தூரம் மட்டுமே செல்ல முடிந்தது. படகின் அரைப்பகுதிக்கு நீர் நிரம்பிவிட, வேறு வழியின்றி படகு மீண்டும் கரையை வந்தடைந்தது. 

தனது முயற்சியைத் தடுத்து நிறுத்தியது எம்.ஜி.ஆர் என்பதை நெடுமாறன் உடனடியாக உணர்ந்துகொண்டார். ஆத்திரம் மேலிட, "எம்.ஜி.ஆரே இதனைச் செய்ததது. என்னைக் கைது செய்யுங்கள், கைதுசெய்யுங்கள்" என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற பொலீஸாரைப் பார்த்துக் கோபத்துடன் கத்தினார் நெடுமாறன்.

Image13.gif

கருநாநிதியும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.அன்பழகனும் தமிழ்நாட்டில் பெருகிவந்த ஈழ ஆதரவு சூழ்நிலையினை தமக்குச் சார்பாகப் பாவிக்க எண்ணினர். ஆகவே, தமிழ்நாட்டுச் சட்டசபையில் தாம் வகித்த பதவிகளைத் திறந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கப்போவதாகக் கூறினர். ஆனால், தொழிநுட்பக் கோளாறுகள் இருப்பதாகக் கூறி அவர்கள் இருவரினதும் இராஜினாமாக் கடிதங்களை ஏற்றுக்கொள்ள சபாநாயகர் மறுத்துவிட்டார். ஆனால், சட்டசபை அமர்வுகளை புறக்கணித்து வந்த இவர்கள் இருவரும், இந்திய மத்திய அரசு வங்கதேசப் பிரச்சினையில் வங்காளிகளுக்குச் சார்பாக நடந்துகொண்ட போதும்,  ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு தனிநாடு காண உதவவில்லை என்று குற்றஞ்சாட்டினர். தமிழர் பிரச்சினை தொடர்பாக தில்லிக்குப் போதிய அழுத்தத்தினைக் கொடுக்கவில்ல என்று எம்.ஜி.ஆரையும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். தி.மு.க வுக்குச் சார்பான பத்திரிக்கைகள், எம்.ஜி. ஆர் ஒரு மலையாளி என்பதாலும், இலங்கையின் கண்டியில் பிறந்ததாலும் அவர் ஈழத்தமிழருக்கு அனுதாபம் காட்டவில்லை என்று எழுதியிருந்தன.  

தன்மீதான விமர்சனத்தினால் ஆத்திரப்பட்ட எம்.ஜி.ஆர் சர்வகட்சி மாநாடு ஒன்றினைக் கூட்டி தில்லிக்கு அழுத்தம் கொடுக்க எண்ணினார். தி.மு.க இக்கூட்டத்தைப் புறக்கணித்திருந்தது. ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதோடு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தில்லி தலையிடவேண்டும் என்று கோரி தீர்மானம் ஒன்றினையும் நிறைவேற்றியது. 

அமிர்தலிங்கம் ஆவணி 16 ஆம் திகதி சென்னைக்குத் திரும்பினார். சென்னை திரும்பியதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சென்று சந்தித்தார். பின்னர் கருநாநிதியைச் சந்திக்க விரும்பினார். ஆனால், தன்னைச் சந்திக்கும் முன்னர் எம்.ஜி.ஆரை அமிர்தலிங்கம் சென்று சந்தித்தமை கருநாநிதிக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, தன்னைச் சந்திக்கவேண்டும் என்று அமிர்தலிங்கம் கேட்டபோது, தான் திருச்சியில் மூன்றுநாட்கள் தங்கியிருப்பதால், தன்னால் அமிர்தலிங்கத்தைச் சந்திக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டார். ஆகவே, திருச்சிக்குச் சென்ற அமிர்தலிங்கம் கருநாநிதியைச் சந்தித்து அவரைச் சாந்தப்படுத்தினார்.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரகு தொடருங்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை ஆக்கிரமிக்க இந்திரா காந்தி விரும்பாதது ஏன்?

2610ins1.jpg

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் மென்மையான போக்கு தமிழ்நாட்டில் கடுமையான அதிருப்தியைத் தோற்றுவித்து வருவதை இந்திரா உணரத் தலைப்பட்டார். ஆகவே வேறு வழியின்றி ஜெயவர்த்தனவுடன் தொடர்புகொண்டு அழுத்தம் கொடுக்க எண்ணிய அவர் ஆவணி 17 ஆம் திகதி மீண்டும் அவரை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டார். ஜெயாருடன் பேசும்போது இந்தியா ராணுவ ரீதியில் இலங்கையில் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்து வருவதாகக் கூறினார். ஆகவே, தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகுறித்த பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிப்பதன் மூலமே தமிழ்நாட்டின் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று ஜெயாரிடம் கூறினார் இந்திரா. இதற்காக தனது பிரத்தியேக ஆலோசகரான பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பிவைப்பதாகவும், தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதில் இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவர் உதவுவார் என்றும் தெரிவித்தார்.

இந்திராவின் தொலைபேசி அழைப்பு வந்தபோது இலங்கையில் இருந்த இந்தியப் பத்திரிக்கையாளர் ஒருவருக்குச் செவ்வியொன்றினை வழங்கிக்கொண்டிருந்தார் ஜெயார். இந்திரா பார்த்தசாரதியின் பெயரைப் பரிந்துரைத்தபோது தன்னைப் பேட்டி கண்டுகொண்டிருந்த இந்தியப் பத்திரிக்கையாளரைப் பார்த்து, "யார் இந்தப் பார்த்தசாரதி?" என்று ஜெயார் கேட்டார். அவர் 73 வயதுடைய, பிரதமருக்கு வெளிவிவகாரங்கள் தொடர்பாக ஆலோசகராக இருப்பவர் என்றும், அரசாங்கத்தின் கொள்கை வகுக்கும் ஆணைக்குழுவின் முக்கிய உறுப்பினர் என்றும், சென்னையைத் தளமாகக் கொண்டியங்கும் ஆங்கிலப் பத்திரிக்கையான ஹிந்து குழுமத்தின் குடும்ப உறுப்பினர் என்றும் பதில் வந்தது. மறுநாள் , ஆவணி 18 ஆம் திகதி லோக்சபாவில் பேசிய இந்திரா, "நேற்று, நான் மீண்டும் இலங்கையின் அதிபர் ஜெயவர்த்தனவுடன் தொலைபேசியில் உரையாடினேன். ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு எனது தூதுவரையும் இன்னும் சில அதிகாரிகளையும் அனுப்புவதாக அவரிடம் கூறினேன். எனது கோரிக்கைகளை ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டார். அதன்படி, எமது மூத்த இராஜதந்திரியான சிறி ஜி.பார்த்தசாரதி அவர்களை முக்கியமானதும், சிக்கலானதுமான இந்த நடவடிக்கைக்காக வருகிற வாரம் கொழும்பிற்கு அனுப்பிவைக்கவுள்ளேன்" என்று கூறினார்.

undefined

கோபாலசாமி பார்த்தசாரதி

தற்போது எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், வங்கதேசப் பிரச்சினையின்போது தனது இராணுவத்தை அனுப்பி அம்மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்த இந்திராவை, இலங்கையில் தனது இராணுவத்தை அனுப்பமுடியாமல்த் தடுத்தது எது? என்பதுதான். தனது எதிரியான பாக்கிஸ்த்தானைப் பலவீனப்படுத்த வங்கதேசப் பிணக்கில் இராணுவ ரீதியில் தலையீடு செய்யவேண்டிய தேவை இந்திராவுக்கு இருந்தது. வங்கதேசத்தை விடுவித்ததன் மூலம் ஏக காலத்தில் இந்தியாவின் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வரக்கூடிய இராணுவ தாக்குதல்களை கிழக்கில் நிரந்தரமாகவே தடுத்துவிடக்கூடிய சந்தர்ப்பம் இந்தியவுக்கு இந்தியாவுக்குக் கிடைத்தது. ஆகவேதான் இந்தியா கிழக்கு பாக்கிஸ்த்தானைப் பிரித்தெடுத்து வங்கதேசத்தை உருவாக்க உதவியது. ஆனால்,  இலங்கையினை ஆக்கிரமிப்பதன் மூலம் இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்புப் பலவீனப்படும் நிலை இருந்தது. ஆகவேதான், இந்திரா அதனை எப்படியாவது தவிர்க்க முடிவெடுத்தார்.

இந்திராவின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கை தொடர்பாக பின்வரும் விளக்கத்தினை அவருக்கு வழங்கியிருந்தார்கள்,

"நீங்கள் இலங்கையில் ஈழம் எனும் தனிநாட்டை உருவாக்க உதவினீர்கள் என்றால், இலங்கையில் இரு நாடுகளான சிறிலங்காவும், ஈழமும் இருக்கும். ஈழம் எனும் தமிழ்ப் பிரதேசம் இந்தியாவுக்கு நட்பாக இருந்தாலும், சிறிலங்கா எனும் நாடு இந்தியாவின் நிரந்தர எதிரியாக மாறிவிடும். அதன்பின்னர் இந்தியாவுக்கு எதிரான வெளிநாடுகள் சிறிலங்காவைத் தமது தளமாகப் பாவிப்பதற்கு அது கதவுகளைத் திறந்துவிடும். இது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுருத்தலாக மாறும். இலங்கையில் இந்தியாவுக்கெதிரான நாடுகள் களம் அமைப்பதனைத் தடுக்கவேண்டுமென்றால், இலங்கை ஒருநாடாக இருப்பதிலேயே அது தங்கியிருக்கிறது. ஆகவே, இலங்கை மீது இராணுவ நடவடிக்கை எதனையும் எடுக்கவேண்டாம்" என்று அவர்கள் இந்திராவுக்கு ஆலோசனை வழங்கினர். 

இதனையடுத்து இந்திரா அரசியல் விவகார ஆணைக்குழு, அரசியல்க் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடன் தனது ஆலோசகர்கள் வழங்கிய அறிவுருத்தல்கள் தொடர்பாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இந்தக் கலந்துரையாடல்கள் மற்றும் இவற்றின் மூலமான முடிவுகள் குறித்து அரசியல் ஆய்வாளரான கலாநிதி பாபனி சென் குப்தா கூறுகையில் "இவையே இந்திராவின் போதனைகள் அல்லது பிராந்தியப் பாதுகாப்புக் குறித்த இந்திராவின் போதனைகள்" என்று நாளடைவில் அழைக்கப்படலாயின என்று கூறுகிறார்.

குப்தா மேலும் கூறுகையில்,

தென்னாசியாவின் நாடொன்றில் இடம்பெறும் உள்நாட்டு விவாகரங்கள் எதிலும் தலையிடுவதில்லை எனும் கொள்கையினையே இந்தியா கொண்டிருக்கிறது. மேலும், வேறு நாடுகளும் இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை இந்தியா எதிர்க்கிறது. இந்தியாவின் நலன்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் வகையில் இப்பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டிலாவது வெளிநாடொன்று தலையிடுமாக இருந்தால் இந்தியா அதனை ஒருபோதும் சகித்துக்கொள்ளப்போவதில்லை. ஆகவே, இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் சென்று இப்பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாடும் வெளிநாடொன்றில் இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்வதையும் இந்தியா சகித்துக்கொள்ளாது.

ஆனால், தென்னாசியாவில் உள்ள எந்தவொரு நாடாவது உள்நாட்டில் நடக்கும் தீவிரமான பிணக்கொன்றினைத் தீர்ப்பதற்காகவோ அல்லது மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்திற்குச் சவால்விடும் வகையிலான கிளர்ச்சியை அடக்கவோ தன்னைச் சுற்றியிருக்கும் தென்னாசிய நாடுகளிடமிருந்து, குறிப்பாக இந்தியாவிடமிருந்து உதவியினைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறான சூழ்நிலைகளின்போது குறிப்பிட்ட அந்த நாட்டின் அரசாங்கம்,இந்தியாவைத் தவிர்த்து பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளிடம் உதவியினைக் கோருவது இந்தியாவிற்கு எதிரான, அதன் நலன்களுக்குப் பாதகத்தினை விளைவிக்கும் செயற்பாடுகளாக இந்தியாவினால் கருதப்படும். 

இந்தியா இலங்கை விவகாரத்தில் இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபடாமைக்கான காரணம், அப்பிராந்தியத்தில் இலங்கை இராணுவ உதவிகோரிய நாடுகள், இலங்கையில் தலையிடக்கூடாதென்றும், தானும் தலையிடப்போவதில்லையென்றும் கூறியிருந்தது. இந்தியாவின் கோரிக்கையினை மீறி எவராவது தலையிட்டால் இந்தியா அதனைப் பொறுத்துக்கொள்ளாது என்றும் மிரட்டியிருந்தது. ஆகவேதான், பேச்சுவார்த்தைகளுக்கான நல்லெண்ண உதவிகளைத்தவிர வேறு எதனையும் தமிழர்களுக்குச் செய்வதற்கு இந்தியா முன்வரவில்லை.

சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் (1990) கொழும்பில் நடைபெற்ற வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான கருத்தரங்கில் பேசப்பட்ட ஒரு விடயம் குறித்து இங்கே குறிப்பிட விரும்புகிறேன் . ஜெயவர்த்தன‌ அரசாங்கத்தின் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் முயற்சிகளை எதிர்கட்சித் தலைவரான அநுர பண்டாரநாயக்க  கடுமையாக விமர்சித்திருந்தார். "நீங்கள் ஆயுதங்களைக் கேட்டீர்கள், ஆனால் எதனையுமே உங்களால் பெற்றுக்கொள்ளமுடியவில்லை" என்று அவர் கூறினார். இடைமறித்த அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி,  "ஆம், நாங்கள் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியா எமது முயற்சிகளை முட்டுக்கட்டை போட்டு முறியடித்துவிட்டது. நாம் ஆயுதங்களைக் கேட்ட நாடுகளைத் தொடர்புகொண்ட இந்தியா, "நாம் இலங்கையை ஆக்கிரமிக்கப்போவதில்லை, ஆகவே நீங்கள் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கவேண்டிய எந்தத் தேவையும் இல்லை" என்று கூறியிருந்தது. இந்திய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளவே ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றோம், ஆனால் இந்தியா எம்மை ஆக்கிரமிக்கப்போவதில்லையென்று எமக்கு தெரிந்ததன் பின்னர் அந்த நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டிய தேவை எமக்கு இல்லாமல்ப் போய்விட்டது" என்று  கூறினார்.

1983 ஆம் ஆண்டின் ஜூலை இனக்கலவரங்களே தமிழரின் விடுதலைப் போராட்டத்திலும், இலங்கையின் சரித்திரத்திலும் முக்கிய திருப்பங்களாக இருந்தன. அதேபோல, ஆவணி மாதத்தின் முதல் 17 நாட்களும் எதிர்காலத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் அனுபவிக்கக் கூடிய சுதந்திரத்தின் அளவைத் தீர்மானித்தன என்று கூற முடியும். இந்தச் சுதந்திரம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினால் கட்டுப்படுத்தப்பட்டது  மட்டுமன்றி, இந்திராவின் போதனைகளின் அடிப்படையில் தமிழர்களுக்கான தீர்வாக இந்தியா முன்னெடுத்த செயற்பாடுகளாலும் தீர்மானிக்கப்பட்டது என்றால் அது மிகையில்லை.

 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பான இந்திராவின் இரட்டை வழிக் கொள்கை

Indira Gandhi, Karachi Protest, Tamil United Liberation Front (TULF), Bihar Ministry, Maharashtra Floods, editorial, Indian express, opinion news, indian express editorial,

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் கடைசி 10 நாட்களும், ஆவணி மாதத்தின் முதல்ப் 17 நாட்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கும், இலங்கையின் சரித்திரத்திற்கும் எந்தளவிற்கு முக்கியத்துவம் மிக்கதாக அமைந்ததோ அதேயளவு முக்கியத்துவத்தை ஆவணி மாதத்தின் இரண்டாவது பகுதியும் பெற்றுக்கொண்டது. அக்காலத்தில்த்தான் இந்திரா காந்தி இலங்கை தொடர்பான தனது இரட்டை வழிக்கொள்கையினை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருந்தார். வெளிப்படையான இராஜதந்திர செயற்பாடுகள் மற்றும் தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கான மறைமுக ஆயுத உதவியும் பயிற்சிகளும் இக்காலப்பகுதியிலேயே தோற்றம்பெற்றன. 

இந்திராவின் இந்த இருவழி செயற்பாடுகளுக்கு எதிராக ஜெயாரும் தனது பாணியில் மூன்றுவழி காய்நகர்த்தல்களை இக்காலத்தில்  செய்யத் தொடங்கினார். பேச்சுவார்த்தைகள் என்று காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் பலமான இராணுவ இயந்திரத்தைக் கட்டமைத்துக்கொள்வதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வது. தமிழ் மிதவாதிகளை தொடர்ந்தும் பலவீனப்படுத்துவது. தமிழ்ப் போராளிக் குழுக்களை அந்நியப்படுத்துவது. தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒரு பயங்கவாதப் போராட்டமாக சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்வது. இறுதியாக தமிழ் ஈழத்தின் அடிப்படை பலப்பிரதேசத்தை இல்லாமலாக்குவது என்பனவே இந்திராவின் காய்நகர்த்தல்களை முறியடிக்க ஜெயார் முன்னெடுத்த செயற்பாடுகள் என்றால் அது மிகையில்லை. 
 

இந்திரா காந்தி தனது வெளிப்படையான இராஜதந்திர நகர்வினை ஆவணி 17 ஆம் திகதி தான் ஜெயாருக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்பினூடாக ஆரம்பித்துவைத்தார். பிரெஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியாவின் (Press trust of India) பத்திரிக்கையாளரான தர்மராஜா, ஜெயாரை செவ்விகாணும் குழுவில் அன்று இடம்பெற்றிருந்தார். இந்திரா, ஜெயாரை தொலைபேசியில் அழைத்தபோது ஜெயாரின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை, உணர்ச்சிகளை தம்மால் காணக்கூடியதாக இருந்ததாக அவர் கூறினார். "அந்த வயோதிபர் மிகுந்த சினத்துடன் காணப்பட்டார், ஆனால் இந்தியாவை அவரால் எதுவுமே செய்யமுடியாது என்கிற இயலாமை அவரின் முகத்தில் தெரிந்தது. தனது சினத்தையும், இயலாமையினையும் ஒன்றுகூட்டி பின்வருமாறு அவர் பேசினார், " நாம் ஒரு சிறிய நாடு. இவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்துதான் ஆகவேண்டும். எங்களைப்போன்ற சிறிய நாடுகள் எல்லாமே இவ்வாறான அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதென்பதே அவர்களின் விதியாகிப் போய்விட்டது" என்று கூறினார்".

அன்று அங்கு குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து, "இந்திரா என்னுடன் பேசிய விடயத்தை பாராளுமன்றத்தில் கூறுவேன் " என்று கூறினார். அதன்படி அடுத்தவாரம் , புதன்கிழமை, ஆவணி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசினார். இந்தியா மத்தியஸ்த்தத்தில் ஈடுபடப்போகிறதென்று ஜெயார் கூறியவேளை அங்கிருந்த அமைச்சர்களான காமினி ஜயசூரிய, காமிணி திசாநாயக, பிரேமதாச மற்றும் ரஞ்சித் அத்தப்பத்து ஆகியோர் உடனடியாக அதனை எதிர்த்தார்கள்.

இவர்களுள் காமிணி ஜயசூரியவே மிகுந்த ஆவேசத்துடன் காணப்பட்டார். "நாம் இந்தியாவின் நல்லெண்ண மத்தியஸ்த்தத்தினை ஏற்றுக்கொள்வோமென்றால், நாம் கெளரவத்துடன் வீதிகளில் நடமாட முடியாது" என்று அவர் சினங்கொண்டு கூறினார்.

ஜயசூரியவின் பேச்சு ஜெயாரை உசுப்பேற்றியிருக்க வேண்டும், "முன்னாள்ப் பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்க இந்தியாவின் மத்தியஸ்த்தம் வேண்டும் என்று கோருகிறார். பயங்கரவாதிகளுடன் பேசுங்கள், பார்த்தசாரதியை அழைத்து ஆலோசனையில் ஈடுபடுங்கள் என்று அவர் கேட்கிறார். ஆனாலும் அவரால் வீதிகளில் தாராளமாக நடந்துசெல்ல முடிகிறதே?"  என்று ஆவேசத்துடன் கேட்டார் ஜெயார்.

2568.jpg

செல்லையா இராஜதுரை

பிரேமதாதாச பேசும்போது தமிழரின் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்றும், அதனை தம்மால் பார்த்துக்கொள்ளமுடியும் என்றும், இந்தியாவின் தேவையற்ற மத்தியஸ்த்தம் இலங்கையின் இறையாண்மையினை மீறும் செயல் என்றும் கூறினார். "நாம் நேரடியாகத் தமிழர்களுடன் பேசலாம், அவர்களின் பிரச்சினைக்கான தீர்வினை நாமே கண்டறியலாம். இந்தியா தலையிடுவதற்கு இங்கே எதுவும் இல்லை, அவர்கள் இதற்கு வெளியே இருப்பதே நல்லது" என்று கூறினார். பின்னர் பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்த அரசுத்தரப்பு தமிழர்களான தேவநாயகம் மற்றும் இராஜ‌துரை ஆகியோரைப் பார்த்து, "இங்கிருக்கும் இவர்களுடன் நாம் பேசி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம்" என்று கூறினார். பிரேமதாசா தம்மைப் பார்த்துக் கூறியதற்கு வேடிக்கையாகப் பதிலளித்த தேவநாயகம், "அப்படியானால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கேட்பதைக் காட்டிலும் அதிகமாக நான் கேட்டுவிடுவேன்" என்று கூறினார். 

பாராளுமன்றத்தில் இந்திய மத்தியஸ்த்தத்திற்குத் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்த எதிர்ப்பினைச் செவிமடுத்துவிட்டு இறுதியாகப் பேசிய ஜெயார், தான் பாரத்தசாரதியின் விஜயத்திற்குச் சம்மதம் தெரிவித்து விட்டதாக சபையில் அறிவித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுவார்த்தைகளை பார்த்தசாரதி இந்தியாவில் ஆரம்பித்துவிட்டார் என்று கூறிய ஜெயார், மறுநாள் அவர் இலங்கைக்கு வருகிறார் என்பதையும் கூறினார்.

பாரத்தசராதியை இந்திரா இந்த நடவடிக்கைகளுக்குத் தெரிவுசெய்வதற்கு சில காரணங்கள் இருந்தன. இந்திராவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆலோசகர் என்பதைவிடவும், பேரம் பேசலில் மிகச் சிறந்த இராஜதந்திரியாகவும் அவர் திகழ்ந்தார். பிணக்குகளின்போது சிறந்த தீர்வுகளை வழங்கிய அனுபவம், அரசியலமைப்பில் அவருக்கு இருந்த தேர்ச்சி, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழராக அவரால் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயலாற்ற முடியும் என்பதுடன் தமிழகத் தலைவர்களும் அவரின் தீர்மானங்களை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்கிற காரணமும் இந்திராவுக்கு பார்த்தசாரதியே இதற்குப் பொறுத்தமானவர் என்று எண்ண வைத்திருந்தது. பார்த்தசாரதி இதற்கு முன்னர் காஷ்மீர், மிசோரம் மற்றும் வியட்நாமியப் பிணக்குகளின்போது தீர்வுகளை வழங்கும் அதிகாரியாகவும் செயற்பட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கசப்பான காட்சிகளை காணவேண்டி இருக்கு.

தொடருங்கள் ரஞ்சித்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக எதனையும் எனால்த் தரமுடியாது ‍ பாரத்தசாரதியிடம் திட்டவட்டமாகக் கூறிய ஜெயார்

492.ht2_.gif

தமிழர்களின் சட்டபூர்வமான கோரிக்கைகளை, அவர்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய தீர்வு நோக்கி ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை அழுத்துவதற்காகப் பணிக்கப்பட்ட பார்த்தசாரதி உடனேயே செயலில் இறங்கினார். முதலாவதாக, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை தில்லிக்கு அழைத்து அவர்களின் பக்க நியாயங்களைக் கேட்டறிந்தார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமிர்தலிங்கம் தமிழரின் பிரச்சினையில் இந்தியாவின் மத்தியஸ்த்தத்தை வரவேற்பதாகக் கூறியதுடன் இந்திரா காந்தி இந்தியப் பாராளுமன்றத்தில் பாவித்த சொற்பிரயோகமான "ஒன்றுபட்ட இலங்கைக்குள்" எனும் பதத்தை ஏற்றுக்கொள்வதில் தனக்கு ஆட்சேபனைகள் ஏதும் இல்லையென்றும் கூறினார். பிரிவினைக்கெதிரான இந்தியாவின் நிலைப்பாட்டினை தான் விளங்கிக்கொள்வதாகவும், ஆகவே இந்தியாவின் மத்தியஸ்த்தத்துடன் முன்வைக்கப்படும் மாற்றுத்தீர்வொன்றினைப் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும், அதுவரையில் தனிநாட்டிற்கான கொள்கையினைக் கைவிடப்போவதில்ல என்றும் தெரிவித்தார். மேலும், தமிழர்கள் மீது மேலும் தாக்குதல்கள நடப்பதைத் தடுக்க இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பி உதவ வேண்டும் என்று வெளிப்படையாகவே இந்தியாவைக் கேட்டுக்கொண்டார். 

"தமிழர்கள் இலங்கையைக் கூறுபோட விரும்பவில்லை. சிங்களக் காடையர்களின் அக்கிரமங்களும், அரசாங்கத்தின் கொள்கைகளுமே இலங்கையைக் கூறுபோட எத்தனிக்கின்றன" என்று அமிர்தலிங்கம் கூறினார். "நாம் கேட்பதெல்லாம் தமிழர்களையும் சமவுரிமை உள்ள பிரஜைகளாக வாழவிடுங்கள் என்பதைத்தான்" என்ற் அவர் மேலும் கூறினார். 

 

பின்னாட்களில் என்னுடன் பேசிய அமிர்தலிங்கமும், நீலன் திருச்செல்வமும் பார்த்தசாரதியுடனான தமது கலந்துரையாடல்கள் பயனுள்ளதாக அமைந்ததாகக் கூறினார்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் பேசிய பார்த்தசாரதி, "தற்போது தனிநாட்டிற்கான மாற்றுத்தீர்வுக்கு நீங்கள் இணங்கியிருக்கிறீர்கள், அப்படியானால் நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வின் அடிப்படைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை நீங்கள் முன்வைக்கவேண்டும்" என்று கேட்டார். "அதனை தெளிவாகச் சொல்லுங்கள், அதுவே உங்களின் பேரம்பேசலின் நிலையாக இருக்கவேண்டும்" என்றும் கூறினார்.

பார்த்தசாரதி பேரம்பேசலின் அடிப்படைகளை இவ்வாறு வரையறை செய்தார், 

1. தமிழர்கள் முன்வைக்கும் தீர்வு உள்நாட்டின் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கவேண்டும், சூழ்நிலைகளின் உணர்வுகளால் உந்தப்பட்ட தீர்வாக அமையலாகாது. 

2. தனிநாட்டுக் கோரிக்கையினைக் காட்டிலும் குறைவான நிலையினை அது கொண்டிருக்கும் அதேவேளை, தமிழர்களின் அபிலாஷைகளையும் அது பூர்த்திசெய்வதாக அமைதல் வேண்டும். 

3. தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் உணர்வுரீதியாக கட்டமைக்கப்படலாகாது என்பதுடன், அவை சிங்களவர்களின் உணர்வுகளையும் பாதிக்காது அமைதல் அவசியம். 

4. தமிழர்கள் முன்வைக்கும் தீர்வு இலங்கையின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பூகோள
உறுதிப்பாடு ஆகியவற்றினை எந்தவகையிலும் பாதிக்கக்கூடாது.

பார்த்தசாரதியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட முன்னணியினர் இருநாட்களின் பின்னர் தமது தீர்வுடன் வந்து அவரை மீண்டும் சந்தித்தனர். ஆனாலும், அவர்கள் முன்வைத்த தீர்வு பார்த்தசாரதியைத் திருப்திப்படுத்தவில்லை. "பிராந்தியங்களின் ஒன்றியம்" என்று முன்னணியினர் பாவித்த சொற்பதத்தை பார்த்தசாரதி நிராகரித்தார். இச்சொற்பதம் முற்றான சமஷ்ட்டி அமைப்பொன்றினை நோக்கி செல்லும் சாத்தியத்தைக் கொண்டிருப்பதனால் சிங்களவர்கள் நிச்சயமாக இதனை எதிர்ப்பார்கள் என்று அவர் கூறினார். டட்லியுடனான செல்வாவின் பேச்சுக்களின்போது பிராந்தியங்கள் எனும் சொற்பதத்தினை டட்லி ஏற்றுக்கொண்டிருந்தமையினால், அதனையே முன்னணியினர் பாவிக்கவேண்டும் என்று அவர் கூறினார். பின்னர், முன்னணியினர் தமது உத்தேச தீர்வு நகலில் இருந்து "பிராந்தியங்களின் ஒன்றியம்" எனும் சொற்பதத்தினை நீக்க அழுத்தம்கொடுத்து அதனை நீக்கிவிட்டார். மேலும், இலங்கையின் இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு, ஒற்றுமை ஆகியவற்றினை மீறமாட்டோம் எனும் கூற்றினையும் முன்னணியினரை அழுத்தி  நகலில் சேர்த்துக்கொண்டார்.

 மேலும், முன்னணியின் தலைவர்களுடன் பேசிய பார்த்தசாரதி, தமிழர்கள் தமது பிராந்தியங்களின் விவகாரங்களில் மட்டுமே கரிச்ணை கொள்ளாது மத்திய அரசாங்கத்தின் விவகாரங்களிலும் பங்கெடுத்து தேசிய அபிவிருத்தியிலும் பங்களிப்பைச் செலுத்தவேண்டும் என்றும் கூறினார். அத்துடன் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற இராணுவம், பொலீஸ் மற்றும் பொதுச் சேவைகள் ஆகியவற்றிலும் தமிழர்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பிரதிநிதுத்துவத்தைக் கோரலாம் என்றும் அறிவுரை வழங்கினார்.

தனது அழுத்தங்களுக்கமைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தயாரித்துக் கொடுத்திருந்த "தமிழர்களின் கோரிக்கை" நகலை எடுத்துக்கொண்டு ஆவணி 25 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தார் பார்த்தசாரதி. அன்று மாலையே அவர் ஜெயவர்த்தனவைச் சென்று சந்தித்தார். ஜெயவர்த்தனவுடனான பேச்சுகளின்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் தான் மேற்கொண்ட பேச்சுக்கள் குறித்து விளக்கிய பார்த்தசாரதி, முன்னணியினர் தன்னிடம் கொடுத்திருக்கும் தமிழர்களின் பேரம்பேசலின் நிலை குறித்த உத்தேச நகல் குறித்தும் விபரித்தார். மேலும், தான் கொண்டுவந்த நகலை ஜெயாரிடம் கையளித்த பார்த்தசாரதி, அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தன்னிடம் அறியத்தருமாறும் கேட்டுக்கொண்டார்.

பார்த்தசாரதியிடம் பேசிய ஜயவர்த்தன, தமிழர்களுக்கிருக்கும் பிரச்சினை குறித்து 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்களின்போது தொண்டைமானின் உதவியுடன் இடம்பெற்ற‌ தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுக்களின்போதே தனது அரசாங்கம் அறிந்துகொண்டுவிட்டதாகக் கூறினார். ஆகவே, இப்பிரச்சினைகளைக் களையும் நடவடிக்கைகளினை தனது அரசாங்கம் நடமுறைப்படுத்திவருவதாக அவர் குறிப்பிட்டார். தமிழர்கள் மீதான ஜூலைக் கலவரத்தின் பின்னணியினை பார்த்தசாரதிக்கு விளக்கிய ஜெயார், இவற்றுக்கான மூல காரணம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், தமிழ்ப் பயங்கரவாதிகளும், இடதுசாரிகளும்தான் என்று அவர் குற்றஞ்சாட்டினார். தானோ, தனது அரசாங்கமோ, நாட்டுமக்களோ நாடு பிரிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவதும், அவற்றினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் அப்பால் வேறு எந்த விட்டுக் கொடுப்பினையும் செய்ய தனது அரசாங்கம் தயாரில்லை என்று கூறிய ஜெயவர்த்தன, தனது அரசின் பேரம் பேசலின் நிலைகூட அதுதான் என்று உறுதியாக பாரத்தசாரதியிடம் கூறினார்.  ஜெயாருடனான சந்திப்பினையடுத்து, எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த சிறிமாவைச் சந்திக்கச் சென்றார் பார்த்தசாரதி. இலங்கையின் ஒருமைப்பாட்டை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறிய சிறிமா, சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றின்மூலம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்கிற கருத்தையும் முற்றாக நிராகரித்தார். 

492.ht3_.gif

சிறிமாவைச் சந்தித்த பின்னர் இரண்டாவது முறையாகவும் ஜெயாரைச் சந்திக்கச் சென்றார் பார்த்தசாரதி. அவர் சிறிமாவைச் சந்தித்ததையும், சிறிமா அவரிடம் கூறியதையும் அறிந்துவைத்திருந்த ஜெயார், பார்த்தசாரதியைப் பார்த்து, "இப்போது, தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதுகுறித்த சிங்களவரின் நிலைப்பாட்டினைத் தெளிவாக உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார். அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் பொறுத்தவரையில் தமிழரின் பிரச்சினை தொடர்பாக ஒரே நிலைப்பாடிலேயே இருந்தார்கள். அதாவது, எக்காரணத்தைக் கொண்டும் இலங்கையின் ஒருமைப்பாட்டினை விட்டுக்கொடுக்க முடியாது என்பதே அது. இதுவே சிங்கள மக்களின் பேரம்பேசலின் அடிப்படையாகவும் இருந்தது. பார்த்தசாரதியிடம் பேசிய ஜெயார், "தமிழர்களுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக வேறு எதனையும் நான் தரப்போவதில்லை, இதுவே எனது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு" என்று மீண்டும் உறுதியாகக் கூறினார்.

மேலும், "அரசியல் அமைப்பில் விசேட சரத்துக்களைச் சேர்ப்பதனூடாக தமிழர்களுக்குத் தீர்வெதனையும் வழங்குவதை சிங்கள‌ மக்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள். நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான திட்டங்களினூடாக மட்டுமே தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வையும் நாம் கண்டறிய வேண்டும்" என்றும் ஜெயார் பார்த்தசாரதியிடம்  தெரிவித்தார். ஜெயவர்த்தனவின் நிலைப்பாட்டினைத் தெளிவாக உணர்ந்துகொண்ட பார்த்தசாரதி, ஆவணி 26 ஆம் திகதி தனது கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக நண்பரான பீட்டர் கியுனுமென்னைச் சந்தித்தவேளை தமிழரும் சிங்களவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று தாம் கருதும் விடயங்களில் மிகவும் வேறுபாடான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், தத்தமது நிலைப்பாடுக‌ள் குறித்து ஆளமான மனோவியாதியினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார். "இவர்களுக்கிடையில் பொதுவான தளம் ஒன்றினை என்னால்க் காண முடியவில்லை" என்று தனது கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக நண்பர்களான டி சாரம் மற்றும் ராஜு குமாரசாமி ஆகியோருடன் பேசும்போது சலித்துக்கொண்டார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

பின்னாட்களில் என்னுடன் பேசிய அமிர்தலிங்கமும், நீலன் திருச்செல்வமும் பார்த்தசாரதியுடனான தமது கலந்துரையாடல்கள் பயனுள்ளதாக அமைந்ததாகக் கூறினார்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் பேசிய பார்த்தசாரதி, "தற்போது தனிநாட்டிற்கான மாற்றுத்தீர்வுக்கு நீங்கள் இணங்கியிருக்கிறீர்கள், அப்படியானால் நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வின் அடிப்படைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை நீங்கள் முன்வைக்கவேண்டும்" என்று கேட்டார். "அதனை தெளிவாகச் சொல்லுங்கள், அதுவே உங்களின் பேரம்பேசலின் நிலையாக இருக்கவேண்டும்" என்றும் கூறினார்.

பார்த்தசாரதி இலங்கைப் பிரச்சனையில் தொடர்ந்தும் இருந்திருந்தால் நிலமை வேறுவிதமாக இருந்திருக்கும் என இதுவரை எண்ணியிருந்தேன்.

இவரை எடுத்தது தான் இந்தியா தமிழர் தரப்புக்கான மோதலும் உருவாக காரணம்.இவர் இருந்திருந்தால் இப்படி ஒரு மோதல் உருவாகி இடியப்ப சிக்கலாக மாறியிருக்காது என்றல்லவா கணித்திருந்தேன்.

தொடருங்கள் ரஞ்சித்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளை முக்கியமான, தவிர்க்கமுடியாத சக்தியாக ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கம்
 

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏதாவதொரு பொதுவான தளம் ஒன்றினைக் கண்டறிவதே தனது தலையாய கடமை என்று பார்த்தசாரதி தீர்மானித்தார். இந்தப் பொதுவான தளத்தினைக் கண்டறியும் தனது முயற்சியில் சில அரசியல்வாதிகளை அவர் சந்திக்க நேர்ந்தது. அமைச்சர்கள் தொண்டைமான், லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, லங்கா சமசமாஜக் கட்சியின் கொல்வின் ஆர் டி சில்வா, பேர்னார்ட் சொய்சா, கம்மியூனிஸ்ட் கட்சியின் பீட்டர் கியுனுமென் ஆகியோரே அவர்கள்.

ஜெயவர்த்தனவுடனான மூன்றாவதும் இறுதியுமான சுற்றுப் பேச்சுக்களின்போது மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவது குறித்து மட்டுமே அவர்கள் பேசினார்கள். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களைப் பலப்படுத்துவது குறித்தும் அப்போது ஆராயப்பட்டது. மேலதிகமாக‌ சந்திப்புக்களை நீங்களே ஒழுங்குசெய்யுங்கள் என்று பார்த்தசாரதியிடம் கூறிய ஜெயார், அதற்கான கால எல்லையினையோ அல்லது திகதியினையோ வழங்குவதைச் சாதுரியமாக மறுத்துவிட்டார். 

தில்லி திரும்பும் வழியில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ராமச்சந்திரைச் சென்று சந்தித்தார் பார்த்தசாரதி. அவ்வேளை பாரத்தசாரதியின் கொழும்பு விஜயம் தொடர்பாக தமிழக சட்டசபையில் மிகவும் காரசாரமான விவாதம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. தனது சட்டசபைப் பதவியை சில வாரங்களுக்கு முன்னர் இராஜினாமாச் செய்திருந்த தி.மு.க வின் கருநாநிதி, எம்.ஜி.ஆரின் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை முடுக்கிவிட்டிருந்தார்.   மக்கள் முன் பேசிய கருநாநிதி, ஜெயவர்த்தனவுடன் பேசுவதில் பயனில்லை, வங்கதேசப் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு தீர்த்து வைத்ததைப் போன்று இலங்கையிலும் தலையிட்டு தீர்வொன்றினை வழங்குவதன்மூலமே தமிழரைப் பாதுகாக்க முடியும் என்று கூறினார். ஆனால், இப்பிரச்சினையில் இந்திரா காந்தியின் நிலைப்பாட்டை ஆதரித்து நின்ற எம்.ஜி.ஆர், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமே இப்பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.

தமிழ்நாட்டுக் காவல்த்துறையின் புலநாய்வுப்பிரிவான கியூ பிராஞ்ச் எனப்படும் அமைப்பினை கருநாநிதியின் செயற்பாடுகள் குறித்துக் கண்காணிக்குமாறு பணித்த எம்.ஜி.ஆர், தமிழ் போராளி அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறும் பணித்தார். அவர் கேட்டுக்கொண்டதன்படியே பொலீஸாரும் செய்துகொடுத்தனர்.

SriSabaratnam-LeaderTELOkilledon06May1986.jpg

சிறி சபாரட்ணம்

 இலங்கையில் தமிழர் மீதான வன்முறைகள் வெடித்துக் கிளம்பியபோது தமிழ் போராளி அமைப்புக்களின் பிரசன்னம் தமிழ்நாட்டில் இருந்தது. நெடுமாறனுக்கும் அவரது கட்சியான காமராஜர் காங்கிரஸுக்கும் புலிகள் நெருக்கமாக இருந்தனர். பிரபாகரன் உட்பட புலிகளின் பெரும்பாலான தலைவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தனர். சென்னையில் அவர்களுக்கென்று முறையான அலுவலகம் கூட அக்காலத்தில் இருக்கவில்லை. டெலோ அமைப்பு தி.மு.க கட்சிக்கு நெருக்கமாக இருந்தது. தமிழ்நாட்டில் அக்காலத்தில் தங்கியிருந்த டெலோ அமைப்பின் தலைவர் சபாரட்ணம் கருநாநிதியை அடிக்கடி சந்தித்துவந்தார். புளொட் அமைப்பு அ.தி.மு.க அமைச்சரான எஸ் சோமசுந்தரத்தின் ஊடாக எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது. சென்னையில் தங்கியிருந்த உமாமகேஸ்வரன் தமிழ்நாட்டு அரசின் சலுகைகளை அனுபவித்து வந்ததோடு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் தங்கும் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.  இதற்கு மேலதிகமாக தமிழ்நாட்டில் புளொட் அமைப்பின் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்க நிலங்களும் தமிழ்நாட்டு அரசினால் உமாமகேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்டன. ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இயங்கிவந்த நக்சலைட்டுக்களுடன் , குறிப்பாக கோதண்டராமனின் மக்கள் போர்ப் படையினருடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி வைத்திருந்தது. அவ்வமைப்பின் தலைவர் பத்நாபா யாழ்ப்பாணத்திலேயே அக்காலத்தில் தங்கியிருந்தார்.

hfgbdtsydmn-621x414-800x445

ஆந்திராவின் நக்சலைட்டுக்கள் ‍- மக்கள் போர்ப்படை

பார்த்தசாரதி பின்னர் கருநாநிதியைச் சந்தித்தார். இலங்கையில் நிலவும் சூழ்நிலை பற்றி அவரிடம் விளக்கிய பார்த்தசாரதி, இலங்கையின் இனங்களுக்கிடையே சுமூகமான நிலையினைத் தோற்றுவிப்பதென்பது மிகவும் சிக்கலான, உணர்வுரீதியான பிரச்சினை என்று கூறினார். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நிதானத்துடனும், மிகுந்த பொறுப்புணர்வுடனும் இவ்விடயம் குறித்து பேசவும் செயற்படவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "இங்கு உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லும் அங்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்" என்றும் அவர் எச்சரித்தார்.

கொழும்பில் தான் நடத்திய கலந்துரையாடல்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசிய பார்த்தசாரதி, பிரதமர் இந்திரா காந்தியுடனான பேச்சுக்களுக்காக அவர்களை தில்லி வருமாறு அழைத்தார். இந்தச் சந்திப்பு புரட்டாதி 5 ஆம் திகதி இடம்பெற்றது. 1984 ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டிற்காக கொழும்பு வந்திருந்த அமிர்தலிங்கம் என்னுடன் பேசும்போது, "அது ஒரு சுவாரசியமான, அறிவூட்டும் சந்திப்பாக அமைந்திருந்தது" என்று கூறியிருந்தார்.

இச்சந்திப்பின்போது இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையினை இந்திரா காந்தி மீளவும் உறுதிப்படுத்தியதாக அமிர் என்னிடம் கூறினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்கள் தம்மைத் தாமே ஆள்வதற்கான உரிமையினைத் தான் பெற்றுத்தருவேன் என்று தன்னிடம் உறுதியளித்ததாக அமிர் என்னிடம் கூறினார். "நீங்கள் உங்களின் தனிநாட்டுக் கோரிக்கையினை முற்றாகவே கைவிட்டு விடுங்கள்" என்று தம்மிடம் இந்திரா உறுதியாக கூறியதாகவும் அமிர் குறிப்பிட்டார்.

சுமார் இரண்டுமணிநேரமாக த.ஐ.வி மு தலைவர்களுடன் கலந்துரையாடிய இந்திராவும் அவரது ஆலோசகர்களான பார்த்தசாரதியும், அலெக்ஸாண்டரும், உலகில் வேறு பகுதிகளில் நடந்துகொண்டிருந்த விடுதலைப் போராட்டங்கள் பற்றி தமக்கு விளக்கமளித்ததாக அமிர் கூறினார். அந்த நாடுகளில் தீர்வுகளாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும், அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர். இதன்போது அலெக்ஸாண்டர் இந்திய ஒன்றியப் பிராந்திய அமைப்புக் குறித்துப் பிரஸ்த்தாபித்திருக்கிறார். அதனை உடனடியாக நிராகரித்த இந்திரா, அது முடியாது, வேண்டுமென்றால் இந்தியாவின் மாநிலங்கள் அனுபவிக்கும் அதிகாரங்களை நாம் உதாரணமாகக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

 த.ஐ.வி. மு தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்த இந்திரா, அதற்கு முதல்நாள் கருநாநிதி சென்னையில் ஆற்றிய உரையொன்றினை மேற்கோள் காட்டி, "உங்களின் தனிநாட்டுக் கோரிக்கையினால் இப்போது நடந்திருக்கும் விபரீதத்தைப் பார்த்தீர்களா? இனி, தி.மு.க வினரும் தனித்திராவிட நாடு கோரிப் போராடப் போகிறார்கள்" என்று கடிந்துகொண்டிருக்கிறார். கருநாநிதி தனது பேச்சில், "தி.மு.க கட்சி தனித் தமிழ்நாட்டிற்கான கோரிக்கையினை 1962 ஆம் ஆண்டு கைவிட்டிருந்தாலும் கூட, தனிநாட்டிற்கான தேவை இன்னமும் அப்படியே இருக்கிறது" என்று பேசியிருந்தார். இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்திரா காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லையென்றும் அவர்  விமர்சித்திருந்தார். "தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போது இங்கு ஒரு நாய்கூட ஏன் என்று கேட்கவில்லை" என்று கருநாநிதி பேசியிருந்தார்.

இந்திராவுடனான பேச்சுக்களின் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமிர்தலிங்கம் தனது கட்சி இந்திய மத்தியஸ்த்தத்துடன் இலங்கை அரசாங்கத்தோடு பேசும் என்று கூறினார். "பார்த்தசாரதியின் முயற்சியினால் தமிழரின் பிரச்சினைக்கான தீர்வொன்றினைக் காண்பதற்கான சாதகமான சூழ்நிலையொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது" என்றும் அமிர் கூறினார்.  "பேச்சுவார்த்தைகளுக்கான அனுசரணையாளர் எனும் நிலையிலிருந்து இந்தியா தன்னை செயற்பாடு மிக்க மத்தியஸ்த்தராக உயர்த்திக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் கொழும்பிலோ நிலைமை மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்திய மத்தியஸ்த்தத்தினை எப்படியாவது உதறிவிட ஜெயவர்த்தன உறுதிபூண்டிருந்தார். குறிப்பாக பார்த்தசாரதியின் முயற்சியைத் தடம்புரள வைப்பதே அவரது முதன்மையான நோக்கமாக இருந்தது. ஆகவே, வழமைபோல தனது கட்டுப்பாட்டிலிருந்த ஊடகத்துறையினை அவர் இதற்காக முடுக்கிவிட்டார். பார்த்தசாரதி மீது இருவகையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். முதலாவது, அவர் ஒரு தமிழர் ஆதலால் தமிழர்களுக்குச் சார்பாகவே அவர் முன்வைக்கும் தீர்வு இருக்கப்போகிறது என்பதால், நடுநிலையான, ஹிந்திபேசும் வட இந்தியர் ஒருவரை இந்திரா மத்தியஸ்த்தராக நியமிக்கவேண்டும் என்று கோரிக்கையினை முன்வைத்தார். இரண்டாவது, பார்த்தசாரதி முயன்றுவரும் தமிழர்களுக்கான சுயாட்சியுள்ள பிராந்தியசபைகளை சிங்களவர்கள் முற்றாக நிராகரித்துள்ளதனால் அதனைப் பற்றிப் பேச முடியாது என்று அவர் வாதிட்டார்.  சிங்களவர்கள் வழங்க தயாராக இருப்பது மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மட்டும்தான் என்றும் அவர் ஊடகங்களூடாக சமிக்ஞைகளை வெளியிட்டு வந்தார். இதற்கு மேலதிகமாக, தனது பிரதமரான பிரேமதாசாவை களத்தில் இறக்கிய ஜெயார், "மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக ஒன்றையும் கொடுக்கமாட்டோம்" என்கிற தொனியில் கடுமையான பிரச்சாரங்களையும் முடுக்கிவிட்டார்.

இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினைத் தடுக்க ஜெயார் மூன்றுவழி தடத்தினைக் கையாண்டார். அவற்றுள் ஒன்றுதான் பார்த்தசாரதி மீதான தாக்குதல்கள். இதுகுறித்து பின்னர்வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். இந்த அத்தியாயத்தில் இந்திரா காந்தி கைக்கொண்டிருந்த இரட்டை வழிமுறை குறித்துப் பார்க்கலாம். 

dimbugala.JPG

மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத்தில் ஆயுதம் தரித்த சிங்களவர்களுடன் குடியேற்றத்திட்டத்தின் பிதாமகன் திம்புலாகல பிக்கு - 1984
 

அதில் முதலாவது பார்த்தசாரதியின் முன்னெடுப்புக்கள்.  

பார்த்தசாரதி மீதான ஜெயாரின் விஷமத்தனமான தாக்குதல்கள், மட்டக்களப்பு சிறையுடைப்பு, தமிழ் மிதவாதிகளைப் பலவீனப்படுத்தும் ஜெயாரின் நடவடிக்கைகள், மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம் ஆகியவை பார்த்தசாரதியின் முன்னெடுப்புக்கள் குறித்த அரசாங்கத்தின் கவனத்தையும், இந்தியா மற்றும் தமிழ்த் தலைமைகளின் கவனத்தையும் திசை திருப்பி விட்டிருந்தது.பார்த்தசாரதியின் முயற்சிகள் இவற்றினால் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தன. புரட்டாதி , ஐப்பசி ஆகிய மாதங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் அமிர்தலிங்கம் உட்பட த.ஐ.வி.மு யினருக்கு ஒரு உண்மையினை உணர்த்தியிருந்தன. அதாவது தமிழ் மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் செல்வாக்கு படிப்படியாக தேய்ந்துவருவதுடன், போராளிகளுக்கான ஆதரவு தமிழ் மக்களிடையே அதிகரித்து வருகின்றது என்பதுமே அது. ஆகவே, தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைந்துகொள்வதில் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கிருக்கும் முக்கியமானதும், தவிர்க்கமுடியாததுமான‌ பாத்திரத்தினை அமிர்தலிங்கம் உணரத் தொடங்கினார்.

ஐப்பசி மாதத்தின் இறுதிப்பகுதியில் அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையொன்றில் போராளி அமைப்புக்கள் தொடர்பாக அமிர்தலிங்கம் அதுவரையில்  கொண்டிருந்த நிலைப்பாடு மாறத்தொடங்கியிருந்தது தெரிந்தது. இந்திய மத்தியஸ்த்துடன் பேச்சுக்களில் ஈடுபட ஜெயவர்த்தன விரும்பாத பட்சத்தில் தான் போராளிகளுடன் பேச வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், "தமிழருக்கான தீர்வு குறித்து ஜெயவர்த்தன த.ஐ.வி. மு யினருடன் பேச விரும்பினால், அவர் முன்வைக்கும் தீர்வு விடுதலைப் புலிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும்" என்றும் அவர் கூறினார். 

இதுவே போராளி அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை முதன்மையான அமைப்பாக அமிர்தலிங்கம் ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பமாகும். அக்காலத்தில் புளொட் அமைப்பே போராளி அமைப்புக்களில் அதிகளவு உறுப்பினர்களைக் கொண்டிருந்ததுடன் டெலோ அமைப்பு இந்தியாவுக்கு நெருக்கமானதாகவும் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. அன்றிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் முன்னணி இயங்குசக்தியாக உருவெடுத்தது.

இந்தச் சூழ்நிலை உருவாவதற்கு இந்தியாவும் இன்னொரு காரணம். இனிவரும் அத்தியாயத்தில் இந்திரா காந்தி செயற்படுத்தி வந்த இரண்டாவதும், மறைவானதுமான பாதையாகிய தமிழப் போராளி அமைப்புக்களுக்கான பயிற்சி மற்றும் ஆயுத உதவிபற்றிப் பேசலாம். தமிழர் மீதான கலவரங்களைத் தொடர்ந்து சில நாட்களில் இலங்கை சென்று திரும்பிய இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவோ இந்திரா காந்தியிடம் இலங்கைச் சூழ்நிலை குறித்து விளக்கியபோதே தமிழ் போராளி அமைப்புக்களுக்கு உதவுவது என்னும் முடிவினை இந்திரா எடுத்திருந்தார். இந்திராவுக்கு ஜெயவர்த்தன அனுப்பிய "காதல்த் தூது" இந்திராவை உடனடியாக இந்த இரண்டாவது பாதையினை எடுக்கத் தூண்டியிருந்தது. "கிழட்டு நரி" என்று இந்திராவினாலும் அவரது ஆலோசகர்களாலும் அழைக்கப்பட்ட ஜெயவர்த்தனவை அடிபணிய வைக்க ஒரேவழி அவரது அரசாங்கத்தை தடம்புரளச் செய்வதுதான் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். ஆகவே, ஜெயார் மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்க தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பயனபடுத்தலாம் என்கிற முடிவிற்கு அவர்கள் வந்தார்கள்.

தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு தான் வழங்கும் பயிற்சி மற்றும் ஆயுத உதவிகளை அமிர்தலிங்கத்திற்கு இந்தியா மறைத்தே வந்திருந்தது. ஆனாலும், போராளிகள் ஆக்ரோஷத்துடன் செயற்பட்டுவருவதையும், ஜெயாரின் அரசாங்கம் தன்னையும் தனது கட்சியையும் பலவீனப்படுத்த பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருப்பதையும் அவர் அறிந்துகொண்டார்.  ஆகவேதான், புரட்டாதி 5 ஆம் திகதி தில்லிச் சந்திப்பிலிருந்து தமிழ்நாடு திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய அமிர்தலிங்கம் போராளி அமைப்புக்கள் தமிழின விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கத் தொடங்கியிருப்பதாகவும், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வீரரான பகத்சிங் இனை ஒத்த பாகத்தினை அவர்கள் வகிப்பதாகவும் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.  ஜெயவர்த்தன குறிப்பிடுவதுபோல தமிழ்ப் போராளிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று அவர் கூறினார். தமிழ் மிதவாதத் தலைவர்களை பலவீனப்படுத்தி அவர்களை அடிபணியவைப்பதும், தமிழ்ப் போராளி அமைப்புக்களை சர்வதேசத்தில் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து அவர்களை இராணுவ ரீதியில் முற்றாக அழிப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டு செயற்ப‌ட்டுவந்த ஜெயவர்த்தனவுக்கு அமிர்தலிங்கம் கொடுத்த பதிலடியாகவே அவரின் இந்தக் கூற்று அமைந்திருந்தது.

Edited by ரஞ்சித்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் நலன்களுக்காக ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழருக்கான தீர்வினைத் தேடிய இந்திரா
amirthalingam_indira_gandhi.jpg

பார்த்தசாரதியின் முயற்சிகளை முறியடிக்க ஜெயவர்த்தன மேற்கொண்டுவந்த செயற்பாடுகள் அமிர்தலிங்கத்தையும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினையும் ஒரு மூலைக்குள் முடக்கிவிட்டன. ஐப்பசி மாதத்தில் ஐரோப்பாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமிர்தலிங்கத்தை எதிர்கொண்ட புலம்பெயர் தமிழர்கள் இந்திய மத்தியஸ்த்தத்தினூடாக இலங்கையரசுடன் பேசுவதற்கு அமிர்தலிங்கம் சம்மதம் தெரிவித்ததற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இலங்கையில் இராணுவ ரீதியில் தலையீடு செய்வதற்கு இந்திராவை வற்புறுத்தவில்லை என்று அமிர்தலிங்கம் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. மேலும், ஜெயவர்த்தன தனது இராணுவத்தைப் பலப்படுத்தி இன்னொரு ஜூலைக் கலவரத்தினை கட்டவிழ்த்துவிட சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் அவர்மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

 ஐப்பசி 17 ஆம் திகதி தனது ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய அமிர்தலிங்கம் தன்னைச் சந்தித்த புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளை இந்திராவுடன் பகிர்ந்துகொண்டார். அதற்குப் பதிலளித்த இந்திரா அமிர்தலிங்கத்தையும் அவருடன் பயணித்த சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன ஆகியோரையும் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், வேறு எதனையும் பேச அவர் மறுத்துவிட்டார். ஆனால், தமிழ்த் தலைவர்களைத் தனியாகச் சந்தித்த பார்த்தசாரதி, இந்தியாவின் உண்மையான கவலையினை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார். அயல்நாடுகளை அச்சுருத்தும் வல்லரசாக தான் கருதப்படுவதை இந்தியா விரும்பவில்லை. தென்னாசியாவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட  வல்லரசாக பார்க்கப்படுவதையே இந்தியா விரும்புகிறது. ஆகவே இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா கொண்டிருக்கும் ஒரே கொள்கை சமாதான முயற்சிகளுக்கான நல்லெண்ண உதவிகளை வழங்குவதுதான் என்று விளக்கிய பார்த்தசாரதி, இந்தியாவின் இந்த நல்லெண்ணம் சர்வதேசத்தில் திருப்தியினை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார். "தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதில் ஜெயவர்த்தனவுக்கு இந்தியா செய்துவரும் உதவிகளை எவரும் கேள்விகேட்க முடியாது. அதாவது, அவர்கள் எமது பிராந்திய வல்லமையினை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள். எங்களுக்குச் சற்று அவகாசம் தாருங்கள், உங்களுக்கான உரிமைகளை நாம் பெற்றுத் தருவோம்" என்று அவர் கூறினார்.

ஐப்பசி 17 ஆம் திகதிய கூட்டத்தின்பின்னர் இந்திராவின் கரிசணை மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பாகக் குவிந்திருந்தது. முதலாவது, ஒன்றுபட்ட இலங்கையினுள் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பது. தொடர்ச்சியான நீண்ட கலந்தாலோசனைகளின் பேறாக இரு விடயங்கள் அவரது கவனத்திற்க் கொண்டுவரப்பட்டன. அரசியலைப்பில் ஆறாவது சட்டத் திருத்தம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மற்றும் பார்த்தசாரதியின் முயற்சிகளை மீள முன்னெடுப்பது ஆகியவையே அவ்விரு விடயங்களும் ஆகும். 

ஆறாவது திருத்தத்தின் மேல் சத்தியப்பிரமாணம் செய்ய முன்னணியினர் தொடர்ந்தும் மறுத்தே வந்தனர். மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஐப்பசி 20 ஆம் திகதிக்குள் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யாதவிடத்து அவர்கள் தமது பாராளுமன்றப் பதவிகளை இழக்கும் அபாயம் உருவாகியிருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது பாராளுமன்ற பதவிகளை இழப்பதென்பது தமிழர்களை இலங்கை அரசிடமிருந்து மேலும் அந்நியப்படுத்திவிடும் நிலையினை உருவாக்கியிருந்தது. ஆகவே இதனைத் தடுக்க பார்த்தசாரதியினூடாக தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்றினை வழங்கவேண்டிய தேவை இந்திராவுக்கு இருந்தது. பார்த்தசாரதி தனது முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கு ஜெயார் மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்கவேண்டிய அவசியமும், அதனூடாக ஜெயாரே பார்த்தசாரதியை பேச்சுக்களுக்கு அழைக்கவைக்கும் சந்தர்ப்பங்களினை ஏற்படுத்தவேண்டிய தேவையும் இருந்தது. 

இந்திராவின் கரிசணைக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டாவது விடயம் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பு. அமிர்தலிங்கமே இந்த சிங்கள ஆக்கிரமிப்புக் குறித்து இந்திராவிடம் முதன்முதலில் அறியத் தந்திருந்தார். இதுகுறித்து பிறிதொரு அத்தியாயத்தில் பார்க்கலாம்.

8th India-Sri Lanka Joint Exercise – Mitra Shakti 21

 எந்த மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை அன்று (1984) இந்தியா எதிர்த்ததோ, அதே மாதுரு ஓயாவில் இலங்கை விசேட படைகளுக்குப் பயிற்சியளிக்கும் இந்திய ராணுவம் - 2021

மூன்றாவது, இந்திராவின் வெளியுறவுக் கொள்கையின் பரிமாணங்கள். இந்தியாவுக்கெதிரான சக்திகளை இலங்கையில் அனுமதிப்பது இந்தியாவைப் பொறுத்தவரை தமக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே அது கருதியது. ஆகவேதான், இந்தியாவுக்கெதிரான நாடுகளிடமிருந்து இலங்கை ஆயுதக் கொள்வனவில் ஈடுபட முயன்றபோது இந்தியா இதுகுறித்து அதிக அக்கறை காட்டியது. இங்கிலாந்தும் அமெரிக்காவும் இந்தியாவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்க தயங்கியபோதும், அமெரிக்கா இலங்கையைத் தனது செல்வாக்கு வட்டத்தினுள் வைத்திருக்கவே விரும்பியது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வொயிஸ் ஒப் அமெரிக்கா ‍ வானொலி அஞ்சல் நிலைய அமைப்பும்  சர்ச்சையும்

Iranawila, Sri Lanka Relay Site

1983 ஆம் ஆண்டு ஆவணி 13 ஆம் திகதி அமெரிக்காவுடன் புதியதொரு வானொலி பரிவர்த்தனை நிலையம் ஒன்றினை உருவாக்கும் ஒப்பந்தத்தில் இலங்கை கைசாத்திட்டமையானது இந்தியாவுக்குக் கடுமையான எரிச்சலையூட்டியது. பாரிய பரப்பளவில் பகிரப்படக்கூடிய 500 கிலோவொட் மற்றும் 250 கிலோவொட் சிற்றலைவரிசை டிரான்ஸ்மிட்டர்களை இவ்வொப்பந்தத்தின்மூலம் அமெரிக்கா இலங்கையில் நிர்மானிக்க வழிபிறந்தது.  இப்புதிய வானொலி நிலையத்தினூடாக மொத்த இந்திய உபகண்டம், அரபுலகம், சீனாவின் சில பகுதிகள், சோவியத் ஒன்றியத்தின் மத்திய ஆசிய பகுதிகள், அப்கானிஸ்த்தான், ஈரான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளுக்கு தனது வானொலிச் சேவையினை அமெரிக்காவினால் விஸ்த்தரிக்க முடிந்திருந்தது. இந்த வானொலி நிலையத்தை அமைப்பதன் மூலம் தனது பிரச்சாரத்தை அமெரிக்கா முடுக்கிவிட எண்ணியது. 

492.ht8_.gif

இந்த வானொலி நிலையத்தினை இலங்கையில் இருக்கும் இரண்டாவது அமெரிக்க இராணுவத் தளம் என்று இந்திரா வர்ணித்தார். அவரைப் பொறுத்தவரை திருகோணமலைத் துறைமுகம் இலங்கையில் இருக்கும் அமெரிக்காவின் முதலாவது தளமாகக் கருதப்பட்டது.

ஆகவே, இதுதொடர்பான தனது அதிருப்தியினை இந்தியா இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் தெரியப்படுத்தியது. ஆனால் இந்தியாவின் அதிருப்தியினை நிராகரித்த இலங்கை வெளிவிவகார அமைச்சகம் இவ்வொப்பந்தம் 1951 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவுடன் வருடந்தோறும் புதுப்பிக்கப்பட்டுவரும் ஒப்பந்தமேயன்றி, புதிய ஒப்பந்தம் கிடையாது என்று அது கூறியது.

இலங்கையின் நியாயத்தை ஏற்க மறுத்த இந்தியா அமெரிக்காவிற்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த ஒரே வானொலி நிலையம் இதுவே என்றும், இதன்மூலம் இப்பிராந்தியத்தில் இருக்கும் ஏனைய ஒலிபரப்பு நிலையங்களை இதனால் தடுக்க முடியும் என்றும், செய்மதிகளுடனான தொலைத் தொடர்பையும் இந்த நிலையம் முடக்கிவிடும் வல்லமையினைக் கொண்டிருப்பதாகவும் கூறியது.  இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில். "அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கப்படவிருக்கும் இந்த வானொலி அஞ்சல் நிலையத்தின் மூலம் இந்திய உபகண்டத்தையும் அருகிலிருக்கும் பல நாடுகளையும் அதனால் இலகுவாக தனது பிரச்சார வீச்செல்லைக்குள் கொண்டுவரமுடியும்" என்று கூறியது. சோவியத் ஒன்றியமும் இந்த வானொலி நிலையம் குறித்து கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இந்தியா வெளியிட்ட அறிக்கை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, அமெரிக்காவின் இரண்டாவது தளமே இந்த வானொலி நிலையம் எனும் இந்திரா காந்தியின் கூற்றுப்பற்றி அவரிடம் வினவப்பட்டது. அதற்குப் பதிலளித்த அப்பேச்சாளர், "அது சாதாரண இராணுவத் தளமன்று, அதனைக் காட்டிலும் ஆபத்தானது" என்று கூறினார். பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குத் தயாராகவே வந்திருந்த அவர், தான் கொண்டுவந்த  வோஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகைச் செய்தியொன்றின் பிரதிகளை அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் விநியோகித்தார். மரே மார்டர் எனும் பத்திரிக்கையாளரால் வழங்கப்பட்ட இந்தக் கட்டுரை "நிக்கொலொயிடிஸின் ஒப்பந்தம்" என்கிற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. நிக்கொலொய்டிஸ் என்பவர் வொயிஸ் ஒப் அமெரிக்கா நிறுவனத்தின் உப தலைவர் என்பதுடன் "நாம் சாதாரண ஊடக நிறுவனம் அல்ல, எமது நோக்கமே பிரச்சாரம் செய்வதுதான்" என்றும் வெளிப்படையாகக் கூறிவந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

நிக்கொலெயிட்ஸின் அறிக்கையின்படி வொயிஸ் ஒப் அமெரிக்கா நிறுவனம் அது இயங்கும் பிராந்தியங்களில் உள்ள உள்நாட்டு மொழிகளிலேயே நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தது. அவ்வறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு கூறுகிறது, "இந்த நாடுகளில் ஆளும்வர்க்கத்திற்கும் சாதாரண மக்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டினை நாம் ஊக்குவிக்க வேண்டும். மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகள், மோசமான நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல்கள், மக்களின் தேவைகளுக்கு அரசுகள் முக்கியத்துவம் வழங்காமை, அடக்குமுறைகள், கலாசார வேறுபாட்டுப் பிணக்குகள், மத ரீதியிலான பிணக்குகள் குறித்து நிச்சயம் வொயிஸ் ஒப் அமெரிக்கா பேசும்" என்று கூறப்பட்டிருந்தது.

 ஆகவேதான், இந்திரா காந்தி இந்த உத்தேச வானொலி நிலையத்தினை அமெரிக்காவின் இரண்டாவது தளம் என்று கூறினார் என்று அப்பேச்சாளர் நியாயப்படுத்தினார். அமெரிக்காவின் சிந்தனைகளை, கொள்கைகளை இந்த வானொலி நிலையத்தினூடாக அமெரிக்கா பிரச்சாரப்படுத்தவிருப்பதால் இதனை ஒரு பிரச்சாரத் தளமாக இந்திரா கருதுகிறார் என்றும் அவர் பேசினார்.

ஆனால், இலங்கையரசு முழுமூச்சுடன் இந்த புதிய வானொலி அஞ்சல் நிலையக் கட்டுமாணப் பணிகளை முடுக்கிவிட்டது. இதற்கென நாத்தாண்டியாவின் இரணவிலப் பகுதியில் இருந்த 800 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட தென்னந் தோப்பு ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியிலும் கட்டுமாண முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையுடன் வொயிஸ் ஒப் அமெரிகா வானொலி அஞ்சல் நிலைய ஒப்பந்தத்தினைச் செய்துகொண்டதன் பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் கஸ்பர் வெயின்பேர்கர் அவர்கள் 1983 ஆம் ஆண்டு ஐப்பசி முதலாம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்தார். வேறொரு நாட்டிற்கான பயணத்தின்போது தேநீர் அருந்துவதற்காகவே கஸ்பர் இலங்கை சென்றார் என்று அவரின் பயணத்தின் கனதியை குறைத்துக் காட்ட அமெரிக்கா முயன்றபோதும் கொழும்பில் இருந்த இந்திய உயர்ஸ்த்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகள் கூறும்போது, அமெரிக்காவிடம் இலங்கை கேட்ட இராணுவ உதவிகளை அமெரிக்கா இந்தியாவின் அழுத்தத்தினையடுத்து வழங்க மறுத்த விடயம் குறித்துக் கவலையடைந்திருந்த ஜெயவர்த்தனவை ஆறுதல்ப்படுத்தவே அவர் இலங்கை வந்ததாகக் கூறினர்.  கொழும்பில் கஸ்பர் தங்கியிருந்தபோது இலங்கையின் கோரிக்கையான இராணுவ உதவிகள் குறித்தும் ஆராயப்பட்டதாக இந்திய அதிகாரிகள் கூறினர். ஆனாலும், ஜெயவர்த்தன சலிப்படைந்து காணப்பட்டார். அவர் தொடர்ந்தும் அமெரிக்கா தன்னைக் கைவிட்டு விட்டதாகக் குற்றஞ்சாட்டியபடி இருந்தார்.

Edited by ரஞ்சித்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திற்கு மாற்றீடான தீர்வை முன்வைத்தால் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடத் தயார் ‍-  அமிர்தலிங்கமும் உமா மகேஸ்வரனும்

492.ht7_.gif

லெப்டினன்ட் ஜெனரல் வேர்னன் வோல்ட்டர்ஸ்

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் நிபுணராக விளங்கிய லெப்டினன்ட் ஜெனரல் வேர்னன் வோல்ட்டர்ஸ் எனும் இராணுவ அதிகாரியை ஜெயவர்த்தனவைச் சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் அனுப்பிவைத்தார். இந்திரா காந்தி அமிர்தலிங்கத்தைச் சந்தித்த ஐப்பசி 17 ஆம் திகதிக்கு சில நாட்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் ராணுவ அதிகாரி இலங்கைக்குப் பயணமானார்.அமெரிக்காவின் மூலோபாயத் திட்டமிடல் மற்றும் உளவு அமைப்பின் திறமையான அதிகாரி என்று போற்றப்பட்ட வேர்னன் வோல்ட்டர்ஸ், ஜனாதிபதி ரீகனுக்காக பல நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செய்தவர் எனும் மரியாதையினைப் பெற்றிருந்தவர். ஆகவே, இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளின் சூத்திரதாரியே இந்த அதிகாரிதான் என்று இந்திய அதிகாரிகள் கருதினர். 

ஜெயவர்த்தனவுடன் பல மணிநேர தனிப்பட்ட உரையாடல்களில் வேர்னன் வோல்ட்டர்ஸ் பங்குகொண்டார். பிற்காலத்தில் ஜெயவர்த்தனவின் சுயசரிதையினை எழுதிய கே.எம்.டி சில்வா மற்றும் ஹவார்ட் ரிக்கின்ஸ் ஆகியோருடன் பேசும்போது இந்தியாவுடனனான தொடர்பாடல்களுக்கான பாதை அமெரிக்காவைப் பொறுத்தவரை மிகவும் குறுகலானது என்று தான் ஜெயாரிடம் கூறியதாகத் தெரிவித்திருந்தார்.

ஜெயவர்த்தனவின் சுயசரிதையில் மேலும் சில தகவல்களை வோல்ட்டர்ஸ் வழங்கியிருந்தார். ஜெயாருடனான ஆலோசனைகளின்போது தான் தமிழ்ப் பிரிவினைவாதிகளுடனும், இந்தியாவுடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்படி ஜெயாரிடம் கேட்டுக்கொண்டதாக வோல்ட்டர்ஸ் கூறியிருந்தார். மேலும், இலங்கையின் நிலைமைகள் மேலும் மோசமடைந்துசென்றால், இந்தியா இராணுவ ரீதியில் தலையிடுவதற்கான சாத்தியம் இருப்பதாக தான் ஜெயாரிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

ஆனால் ஜெயாரை ஆசுவாசப்படுத்தவே தனது உயர் இராணுவ அதிகாரியை அமெரிக்கா அனுப்பி வைத்ததை இந்தியா நம்ப மறுத்தது. இந்த அதிகாரியின் வருகை குறித்து அன்றைய இந்தியத் தூதுவர் ஜே.என்.டிக்ஷித் பின்வருமாறு தனது சுயசரிதைப் புத்தகத்தில் எழுதுகிறார்,

"தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியாவில் வழங்கப்பட்டுவரும் பயிற்சிகள், ஆயுத உதவிகள் குறித்து வோல்ட்டர்ஸ் ஜெயவர்த்தனவிடம் விலாவாரியாக விபரித்தார். மேலும், இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தொடர்பாடல் முகவராகச் செயற்பட அமெரிக்கா விரும்புவது குறித்தும் பேசினார். இஸ்ரேலிடமிருந்து இராணுவத் தளபாடங்களையும், புலநாய்வு உதவிகளையும் இலங்கை பெற முயன்று வருகிறது. மேலும், இந்தியா தொடர்பான புலநாய்வுத் தகவல்களைச் சேகரிக்க இலங்கையினை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளமாகப் பாவிப்பதும் வோல்ட்டார்ஸின் இன்னொரு நோக்கமாகும். அத்துடன் இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளின் முன்னாள் இராணுவ வீரர்களை இலங்கை இராணுவத்தில் கூலிப்படையினராக உள்வாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அவர் ஒத்துக்கொண்டார். இந்த விபரங்களை இலங்கையிலிருக்கும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் ஊடாகவும் வோஷிங்க்டனில் இருக்கும் தகவலறிந்த வட்டாரங்கள் ஊடாகவும் உறுதிப்படுத்தியிருக்கிறது" என்று எழுதுகிறார். 

ஐப்பசி 17 ஆம் திகதி அமிர்தலிங்கத்துடனான சந்திப்பினையடுத்து ஊடகங்களிடம் பேசிய இந்திரா, இலங்கையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இழக்கும் அபாயகரமான சூழ்நிலை உருவாகி வருவதாகக் கூறினார். தாம் ஒத்துக்கொண்ட விடயங்களிலிருந்து பின்வாங்கும் இலங்கையரசு, பேச்சுவார்த்தைகளை வேண்டுமென்றே பிற்போட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டினார். ஆகவே, பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கும் பொருட்டு தான் பார்த்தசாரதியை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்போவதாகக் கூறினார்.

இந்திரா காந்தி இந்த அறிவிப்பினை வெள்கியிட்டவேளை, பார்த்தசாரதியை இரண்டாவது தடவையாக பேச்சுக்களுக்கு அழைக்கும் முடிவினை ஜெயார் எடுத்திருக்கவில்லை. ஆனால், இந்தியத் தூதுவர் சத்வால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஹமீதைத் தொடர்புகொண்டு இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களுக்கு பார்த்தசாரதியை ஜெயவர்த்தன அழைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வோல்ட்டர்ஸின் அறிவுரைக்கு அமைவாக, பாரத்தசாரதியை இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களுக்கு அழைக்க ஜெயவர்த்தன சம்மதித்தார்.  

பார்த்தசாரதியை இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களுக்கு அழைக்கும்படி தொண்டைமானும் ஜெயாரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். பார்த்தசாரதியின் அழைப்பின்பேரில் தொண்டைமான் ஐப்பசி 10 திகதியிலிருந்து 20 ஆம் திகதிவரை இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்த நாட்களில் தொண்டைமான் இந்திரா காந்தி, நரசிம்ம ராவோ, எம்.ஜி.ஆர், கருநாநிதி மற்றும் புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் ஆகியோரைச் சந்தித்தார். மேலும், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோருடனும் தொடர்ச்சியான கலந்தாலோசனைகளில் அவர் ஈடுபட்டார்.

இந்திரா காந்தி, நரசிம்ம ராவோ மற்றும் பார்த்தசாரதி ஆகியோருடனான தொண்டைமானின் பேச்சுவார்த்தைகள் முக்கியமானவையாகக் காணப்பட்டன. இனப்பிரச்சினை தொடர்பாக தொண்டைமான் காத்திரமான பங்கின ஆற்றவேண்டும் என்று இந்திரா தன்னிடம் கோரியதாக அவர் என்னிடம் கூறினார். தமிழர்களை பிரித்தாளும் ஜெயாரின் சதிக்கெதிராக தமிழர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்று இந்திரா தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார். தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒரு அமைப்பாக ஒன்றிணையும் முயற்சிக்கு தான் ஆதரவளிக்க ஒத்துக்கொண்டதாகவும் அவர் கூறினார். மேலும், ஈழத்திற்கு மாற்றீடான, அதேவேளை தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய தீர்வுகுறித்தும் இந்திரா தன்னிடம் வினவியதாகவும் கூறினார்.

"ஒன்றிணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களில், தம்மைத்தாமே ஆள்வதற்கான தீர்வொன்றினை வழங்கும் பட்சத்தில் தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள்" என்று தான் இந்திராவிடம் கூறியதாக அவர் என்னிடம் தெரிவித்தார். தனது பரிந்துரையினை வரவேற்ற இந்திரா இதுகுறித்து அனைவருடனும் தொடர்ந்து பேசுமாறு தன்னை கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். "நான் இதனையே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகவும் வரிந்து கொண்டேன்" என்று அவர் மேலும் கூறினார். 

 இந்திராவிடம் தான் பேசிய விடயங்கள் தொடர்பாக தில்லியில் தன்னைச் சந்தித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் மற்றும் சென்னையில் தன்னைச் சந்தித்த உமா மகேஸ்வரன் ஆகியோரிடம் தொண்டைமான் பேசினார். தொண்டைமானின் நிலைப்பாடு தொடர்பாக அமிர்தலிங்கமும் உமா மகேஸ்வரனும் திருப்தி தெரிவித்திருந்தார்கள்.

உமா மகேஸ்வரனுடனான தனது சந்திப்பை பலரும் அறியும்வகையில் நடத்த தொண்டைமான் விரும்பினார். இச்சந்திப்புக் குறித்து சென்னைப் பத்திரிக்கையாளர்களுக்கு அறியத்தந்த தொண்டைமான், சந்திப்பின் பின்னர் பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றினையும் ஒழுங்கு செய்தார். உமா மகேஸ்வரன் எனும் போராளித் தலைவரை ஜெயாரின் அரசாங்கத்தின் அமைச்சர் என்கிற வகையில் அல்லாமல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்கிற வகையிலேயே தான் சந்தித்ததாகக் கூறினார். ஈழத்திற்கு மாற்றீடான தீர்வினை இலங்கையரசு முன்வைக்குமிடத்து அதனை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக உமா தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

மேலும், ஈழத்திற்கு மாற்றீடான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை இலங்கையரசு முன்வைக்குமிடத்து, ஈழக் கோரிக்கையினைக் கைவிட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஐப்பசி 22 ஆம் திகதி இலங்கை திரும்பிய தொண்டைமான், மறுநாள் ஜெயாரைச் சந்தித்து  தில்லியிலும் சென்னையிலும் இனப்பிரச்சினை குறித்து நிலவும் சூழ்நிலையினை விலாவாரியாக விளக்கினார். தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை கொண்டுவர பார்த்தசாரதியை மீளவும் பேச்சுக்களுக்கு அழைக்குமாறு ஜெயாரைக் கேட்டுக்கொண்டார். மிதவாத தமிழ்த் தலைமைகளும், உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பும் ஈழத்திற்கு மாற்றீடான தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடத் தயாராக இருப்பதாக ஜெயாரிடம் கூறினார் தொண்டைமான். ஒன்றிணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியுள்ள கட்டமைப்பு ஒன்றே தமிழர்கள் எதிர்பார்க்கும் ஈழத்திற்கு மாற்றீடான தீர்வாக இருக்கும் என்று ஜெயாரிடம் அவர் தெரிவித்தார்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டைமான் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாடு

S. Thondaman, Sr. with Indira Gandhi

கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த தனது அமைச்சகத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை தொண்டைமான் கூட்டினார். அவரது ஊடக ஆலோசகர் என்கிற வகையில் அம்மாநாட்டினை ஒழுங்குசெய்வதற்கு என்னையும், அவரது சட்டச் செயலாளரான அமரசிங்கம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்லச்சாமியையும் அவர் அழைத்திருந்தார்.இந்த மாநாட்டினை ஒழுங்கு செய்ததன் நோக்கமே சிங்கள மக்களுக்கு இந்தியாவும் தமிழ்நாடும் அண்மையில் நடந்த தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் குறித்துக் கடுங்கோபத்தில் இருப்பதையும், பார்த்தசாரதியுடனனான பேச்சுக்களை மீண்டும் ஜெயவர்த்தன ஆரம்பிக்காத பட்சத்தில் இந்தியா இராணுவ ரீதியில் இலங்கையில் தலையிடும் எனும் செய்தியையும் சொல்வததுதான். தொண்டைமான் இதனைக் கச்சிதமாக நடைமுறைப்படுத்தினார்.

S. Thondaman, Sr. with MGR

 இந்த மாநாட்டில் பங்குகொண்ட பெரும்பாலான சிங்களப் பத்திரிக்கையாளர்கள் சினத்துடன் காணப்பட்டனர். இவர்களுள் பெரும்பாலானோர் தொண்டைமானின் மீது கடும் அதிருப்தி கொண்டிருந்தனர். தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான புளொட்டின் தலைவர் உமா மகேஸ்வரனைச் சந்தித்தது மற்றும் சிங்கள மக்களுக்கெதிராக தமிழர்களை ஒருங்கிணைப்பது ஆகிய குற்றச்சாட்டுக்களை அவர்மீது அவர்கள் சுமத்தினர். மேலும், இவற்றினைச் செய்ததன் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் பொறுப்புணர்வைத் தட்டிக்கழித்து அவர் செயற்பட்டிருப்பதாகவும் அவர்கள் வசைபாடினர்.  

இந்தியாவுக்கான தனது பயணம் குறித்த விளக்கத்தினை தொண்டைமான் வழங்கியபின்னர் அவரிடம் முன்வைக்கப்பட்ட முதலாவது கேள்வி இப்படி அமைந்திருந்தது.

கேள்வி : தொண்டைமான் அவர்களே, நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களையும், உமா மகேஸ்வரனையும் சந்தித்ததாகக் கூறியிருந்தீர்கள். ஆனால், தனிநாட்டுக் கோரிக்கையினை அவர்கள் கைவிடும்வரை முன்னணியினருடனோ அல்லது எந்தப் பயங்கரவாத அமைப்புடனோ பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்று அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அப்படியாயின், நீங்கள் அமைச்சரவைத் தீர்மானத்தை மீறிவிட்டீர்கள் என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா?

தொண்டைமான் : நான் இந்தப் பயணத்தை அமைச்சரவை உறுப்பினராக மேற்கொள்ளவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் என்கிற வகையிலேயே இப்பயணத்தை மேற்கொண்டேன். ஆகவே அமைச்சரவை உறுப்புரிமையினை மீறினேனா என்கிற கேள்விக்கு இங்கே இடமில்லை.

கேள்வி : ஆனால், இந்தப் பிரச்சினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கோ அல்லது மலையகத் தமிழருக்கோ எந்த விதத்திலும் சம்பந்தப்படாத விடயமாயிற்றே?

தொண்டைமான் : இது தமிழர்கள் சம்பந்த‌ப்பட்ட விடயம். நான் ஒரு தமிழன்.

கேள்வி : இந்தியப் பத்திரிக்கைச் செய்திகளின்படி நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனும், பயங்கரவாத அமைப்புகளுடனும் அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்குவது குறித்துப் பேசியிருக்கிறீர்கள், இது உண்மைதானா?

தொண்டைமான் : பொதுவான வேலைத்திட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், நாம் பொதுவான இலக்குக் குறித்துப் பேசினோம். தீவிரவாத சிங்கள அமைப்புக்களும் அரசாங்கமுமே எம்மை இந்த நிலைக்கு இழுத்து வந்திருக்கின்றன. எமக்குப் பொதுவான ஒரு அடையாளத்தினைத் தந்தவர்களும் அவர்களே. 1948 ஆம் ஆண்டும் பெரும் எண்ணிக்கையான மலையகத் தமிழர்களை அரசு நாடற்றவர்களாக்கியது. 1956 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் மொழி உரிமையினை அப்போது இருந்த அரசு இரத்துச் செய்தது. தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் மூலம் தமிழர்களின் வாழ்தலுக்கான பாதுகாப்பு மறுதலிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் பாதுகாப்பாகவும், உரிமைகளுடனும் வாழ்தல் என்பதே எமது பொது இலட்சியமாக மாறியிருக்கிறது. தமது பொது இலட்சியம் பற்றித் தமிழர்கள் கூடிப் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது ? 


மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் எம்மால் தீர்மானிக்கப்பட்டதற்கமைய இறக்கப்பட்ட தமிழ்ப் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்தியாவின் கோபம் குறித்த கேள்வியொன்றினைக் கேட்டார்.

கேள்வி : இங்கு நடந்த வன்முறைகள் குறித்த இந்தியாவின் பிரதிபலிப்பு எவ்வாறு அமைந்திருந்ததாக நீங்கள் உணர்கிறீர்கள்? தமிழர் மீதான வன்முறைகளை அவர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள்? 

தொண்டைமான் : கடந்த 40 வருடங்களில் இந்தியா இவ்வளவு தூரத்திற்கு உணர்வுரீதியாக எழுந்ததை நான் பார்க்கவில்லை. நான் சென்ற இடமெல்லாம் மக்கள் மிகுந்த கவலையுடனும், ஆத்திரத்துடனும் என்னுடன் பேசினார்கள். அரசாங்கத்தில் நான் தொடர்ந்தும் பங்காளியாக இருப்பது குறித்து அவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டார்கள். தமிழர்களை முற்றாக அடக்கி ஒடுக்கி, ஈற்றில் நசுக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பாகமே இந்தத் தாக்குதல்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.  

இதன்போது குறுக்கிட்ட சிங்கள பத்திரிக்கையாளர் ஒருவர் சென்னைக்கும் புது தில்லிக்கும் இடையே பிளவு ஒன்றினை உருவாக்கும் நோக்கில் கேள்வியொன்றினைக் கேட்டார். 

கேள்வி : திரு தொண்டைமான் அவர்களே, இந்த உணர்வு ரீதியான வெளிப்பாடு சென்னையில் மட்டும்தான் காணப்பட்டதா அல்லது தில்லியிலும் இது தெரிந்ததா? 

தொண்டைமான் : தமிழ்நாட்டிலேயே இந்த உணர்வு அதிகமாகக் காணப்பட்டதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், தில்லியில் அவர்கள் தமிழ்மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்துக் கவலை கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் கருதினால், நீங்கள் தவறிழைக்கிறீர்கள் என்று பொருள். ஏனென்றால், தில்லியிலும் கடுமையான ஆத்திரமும் கரிசணையும் இது தொடர்பாகக் காணப்படுகிறது என்பதே உண்மை. நான் தில்லியில் கேள்விப்பட்டது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் உயர் அதிகாரியொருவர் என்னுடன் பேசும்போது, "தமிழர்கள் மீதான படுகொலைகள் நடந்துகொண்டிருக்கும்போது அரசாங்கம் தனது கண்களை இறுக மூடிக்கொண்டிருந்ததாக நாங்கள் நம்புகிறோம். ஆகவே, தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிங்களவர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தும்போது இந்திய மத்திய அரசும் கண்களை மூடிக்கொண்டிருப்பதே சரியான செயலாகும்" என்று என்னிடம் கூறினார். 

பின்னர் சில நொடிகள் மெளனமாக இருந்துவிட்டு தொண்டைமான் பின்வருமாறு கூறினார்,

"தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? சிங்களவர்கள் பூரணை நாட்களில் ஓய்வாக இருந்து மத வழிபாடுகளில் ஈடுபட்டுவிட்டு மறுநாளே படுகொலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஏனென்றால், ஆடி 23 ஆம் திகதி பூரணை நாள்,  மறுநாள் ஆடி 24 ஆம் திகதியே தமிழர்கள் மீதான படுகொலைகள் ஆரம்பித்தன" என்று அவர் கூறினார்.  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுக்கான இராணுவப் பயிற்சி

ஜெயவர்த்தனவை இந்திரா காந்தி எப்போதுமே கிழட்டு நரியென்றே அழைத்து வந்தார். இந்திராவைப் பொறுத்தவரை ஜெயவர்த்தனா நம்பப்படமுடியாதவராகக் காணப்பட்டார். ஜெயவர்த்தன தொடர்பான இந்திராவின் கணிப்பீடுகள் அவரது நெருங்கிய தோழியான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தகவல்கள் ஊடாக உருவாக்கப்பட்டது. ஏனென்றால், ஜெயவர்த்தனவின் அரசியல் சூழ்ச்சிகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டவர் சிறிமாவோ என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கு மேலாக, இந்திராவினால் புதிதாக அமைக்கப்பட்ட விசேட பாதுகாப்பு புலநாய்வுத்துறைப் பிரிவும் ஜெயார் குறித்த தகவல்களை இந்திராவுக்குத் தொடர்ச்சியாக வழங்கிவந்தது. அமைச்சரவையின் பாதுகாப்புச் செயலகம் என்று அறியப்பட்ட இந்த அமைப்பிற்கு "மூன்றாவது புலநாய்வு அமைப்பு" என்று இன்னொரு பெயரும் இருந்தது.

492.ht5_.gif

ரமேஷ்வர் நாத் காவோ

ஜெயவர்த்தனவை எப்போதும் நம்பமுடியாது என்பதை இந்திரா நன்கு உணர்ந்திருந்தார். ஆகவே, அவரை இரு வேறு வழிகளில் கையாள்வது என்று அவர் முடிவெடுத்தார். முதலாவது வெளிப்படையான இராஜதந்திர வழி. மற்றையது மறைமுகமான வழி. இராஜதந்திர வழி பற்றி முன்னைய அத்தியாயங்களில் நாம் பார்த்திருந்தோம். பேச்சுவார்த்தைகளுக்கு அணுசரணை வழங்குவதன் மூலம் தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு ஜெயவர்த்தனவை இராஜதந்திர ரீதியில் அழுத்துவதே அது. தமிழர்கள் மீதான தாக்குதல்களையடுத்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவோ ஜெயவர்த்தனவோடும், ஹமீதோடும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். பின்னர் இப்பேச்சுவார்த்தைகள் குறித்து இந்திராவிடம் பேசும்போது தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைக் காட்டிலும் அவர்களை இராணுவ ரீதியில் அடக்கி, அடிபணியவைப்பதிலேயே ஜெயாரின் அரசாங்கம் உறுதியாக நிற்பது தெரிகிறது என்று கூறியிருந்தார்.  இவ்வாறான மதிப்பீட்டையே இந்திராவின் புதிய புலநாய்வு அமைப்பின் அதிகாரியான கொழும்பில் தங்கியிருந்த ரமேஷ்வர் நாத் காவோவும் இந்திராவிடம் தெரிவித்திருந்தார்.  அமெரிக்கா, பாக்கிஸ்த்தான், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஜெயவர்த்தன ஆயுதங்களை கொள்வனவு செய்தமையானது இவர்களின் கணிப்பீடு சரியானதுதான் என்பதை உறுதிபடுத்தியிருந்தது.

புதிய புலநாய்வு அமைப்பின் தலைவரான காவோவே இந்திராவின் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகராகவும் கடமையாற்றி வந்தார். ஜெயவர்த்தன எடுக்கும் எந்த ஒரு இராணுவத் தீர்வும் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுருத்தலை ஏற்படுத்தும் என்றும், அது இந்திராவுக்கு அரசியல் ரீதியிலான பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் நாத் இந்திராவிடம் கூறினார். பாதுகாப்பு அச்சுருத்தல் என்று அவர் குறிப்பிட்டது இலங்கையில் தமது சகோதரர்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழ்நாட்டு மக்கள் இறங்குவதால் ஏற்படக் கூடும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்தியா ராணுவ ரீதியாக இலங்கையில் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுப்பெற்று வந்ததோடு, அவ்வாறு இந்தியா தலையிடாதவிடத்து தமிழ்நாட்டுத் தமிழர்களே நேரடியாக இவ்விடயத்தில் இறங்கும் அபாயம் இருப்பதாகவும் இந்திராவிடம் தெரிவிக்கப்பட்டது. அப்படியான தருணத்தில், தமிழ்நாட்டு மக்களின் உணர்வெழுச்சியை மத்திய அரசாங்கம் அடக்க முற்படும்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் தளம் பலவீனப்பட்டுப் போகும் என்றும் அவரிடம் கூறப்பட்டது.  

இவையனைத்தையும் விட முக்கியமாக இன்னொரு விடயம் நாத்தினால் இந்திராவிடம் முன்வைக்கப்பட்டது. அதுதான் இந்தியாவின் எதிரிகள் பெருமளவில் இலங்கையினுள் கால்பதிக்கும் சூழ்நிலை உருவாகிவருகிறது என்பது. அமெரிக்க, இங்கிலாந்து புலநாய்வு அமைப்புக்களுக்கு மேலதிகமாக பாக்கிஸ்த்தான் மற்றும் இஸ்ரேல் புலநாய்வு அமைப்புக்களும், இந்நாடுகளின் இராணுவ அதிகாரிகளின் பிரசன்னமும் இலங்கையினுள் உருவாகலாம் என்று இந்திராவின் ஆலோசகர்கள் அவரிடன் கூறினர். ஆகவே, இதனைத் தடுப்பதற்கான ஒரே வழி ஜெயவர்த்தன மீது இராஜதந்திர ரீதியிலான அழுத்தத்தினைப் பிரயோகித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வொன்றினை எட்டுவது. இது சாத்தியமற்றுப் போகும் பட்சத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களைப் பாவித்து ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவது.

மூன்றாவது புலநாய்வு அமைப்பின் இருவழித் திட்டத்தினை இந்திரா முழுமையாக ஏற்றுக்கொண்டார். ஆவணி 17 ஆம் திகதி மூன்றாவது தடவை யாகவும் ஜெயவர்த்தனவுடன் தொலைபேசியில் பேசிய பின்னர், இந்த இருவழித் திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்குமாறு தனது புலநாய்வு அதிகாரிகளை இந்திரா பணித்தார். தனது வெளிப்படையான இராஜதந்திர நகர்வுகளை செய்துவரும் அதேவேளை, மறைமுகமான நடவடிக்கைகளை முற்றாக மூடி மறைத்தது இந்திராவின் அரசாங்கம். இந்திரா காந்தியும், அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓரிரு அதிகாரிகளும் மட்டுமே இந்த இரகசியத் திட்டம்பற்றிய தகவல்களை வைத்திருந்தனர்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயாரை பேச்சுவார்த்தை மேசைக்கு வரவழைக்கவே ஆயுதப் போராட்டம், தனிநாட்டிற்காக அல்ல ‍ - இந்திரா 

19 November 2017 marked the birth centenary of former prime minister Indira Gandhi. Photo: HT

போராளிகளுக்கு இராணுவப் பயிற்சியினை வழங்கும் இந்திராவின் மறைமுகமான திட்டத்திற்கு உறுதியான நோக்கம் ஒன்று இருந்தது. தமிழ்ப் போராளி அமைப்புக்களிடமிருந்து இந்திரா எதிர்பார்த்த ஒரே விடயம் ஜெயவர்த்தனவை பேச்சுவார்த்தை மேசைக்குத் தள்ள வைப்பதே அன்றி அதற்கு மேல் வேறு எதுவும் இல்லை. இந்தத் திட்டத்தின் பிரதான திட்டமிடலாளர்களில் ஒருவர் சென்னையிலிருந்து வெளிவரும் புரொன்ட் லைன் சஞ்சிகைக்கு செவ்வியொன்றினை வழங்கியபோது, 

"ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஜெயவர்த்தனவை பேச்சுவார்த்தை முயற்சிக்குக் கொண்டுவர முடியும் என்று இந்திரா நம்பியதாலேயே தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சியினை வழங்கும் முடிவினை எடுத்தார். தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியதன் ஒரே நோக்கம் இலங்கை அரசாங்கத்தின் தலையினைக் கொய்வதல்ல, மாறாக தமிழர்களின் பின்னால் இந்தியா எனும் பெரிய சக்தி இருக்கிறது எனும் செய்தியினை இலங்கை அரசாஙத்திற்கு உணர்த்தவே" என்று கூறினார்.

பெரும்பாலான போராளி அமைப்புக்களின் தலைவர்கள் இந்தியாவின் இந்தக் கொள்கை பற்றி அறிந்தே இருந்தார்கள். பிரபாகரன் இதுகுறித்து மிகத் தெளிவான பார்வையினைக் கொண்டிருந்தார். புலிகளின் அரசியல் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் புரொண்ட் லைன் சஞ்சிகைக்குப் பேட்டியளித்தபோது, 

"இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் ஒரே நோக்கம் இலங்கையரசாங்கம் தனது அழுங்குப் பிடியில் இருந்து இறங்கி வந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்வரை போராளிகள் ஊடாக ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது. அவ்வாறு இலங்கையரசு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டதும், போராளிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவது" என்று கூறினார்.

L40001.jpg 

புலிகளின் தலைவர்கள், சிறுமலை பயிற்சி முகாம், திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, 1985 ஆம் ஆண்டு ‍ வே.பிரபாகரன் (இடமிருந்து 3 ஆவது), பொட்டு அம்மான்(வலதுபுறமிருந்து முதலாவது)

தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு இராணுவப் பயிற்சியினை வழங்கவும், ஆயுதங்களைக் கொடுக்கவும் திட்டத்தினை வரையுமாறு மூன்றாவது புலநாய்வு அமைப்பைப் பணித்த இந்திரா, உடனடியாக இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துமாரும் உத்தரவிட்டார். இந்தியாவில் ஏற்கனவே இருவேறு புலநாய்வு அமைப்புக்கள் இயங்கிவந்த நிலையில், இந்திராவினால் புதிதாக அமைக்கப்பட்ட நாத்தின் அமைப்பு "மூன்றாவது அமைப்பு" என்று அழைக்கப்படலாயிற்று. இந்தியாவின் முதலாவது புலநாய்வுச் சேவையான புலநாய்வுப் பிரிவு 1953 ஆம் ஆன்டிலிருந்து இலங்கையினுள், இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் எனும் போர்வையில் இயங்கி வருகிறது. 

baloch.jpg

1968 ஆம் ஆண்டு சீக்கியப் பிரிவினைவாதப் போராளிகளுக்கு பாக்கிஸ்த்தான் உளவுப்பிரிவு பயிற்சியும் ஆயுதமும் வழங்க ஆரம்பித்ததை இந்திய புலநாய்வுத் துறை (முதலாவது அமைப்பு)  கண்டுபிடிக்கத் தவறியதையடுத்து அதன்மீதான நம்பிக்கையினை இந்திரா இழந்திருந்தார். காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுடன் இரு போர்களில் ஈடுபட்டிருந்த பாக்கிஸ்த்தான், சீக்கியர்கள் தனிநாடு ஒன்றினை உருவாக்க உதவுவதன் மூலம் இந்தியாவைப் பலவீனப்படுத்த கங்கணம் கட்டியிருந்தது. இதனைத் தடுப்பதற்கு செயலில் இறங்கிய இந்திரா அமெரிக்க, இங்கிலாந்து புலநாய்வுப் பிரிவுகளுக்கு நிகரான புலநாய்வுக் கட்டமைப்பொன்றினை உருவாக்குமாறு தனது பாதுகாப்பு ஆலோசகராக அப்போது பணியாற்றி வந்த ரமேஷ்வர் நாத் காவோ வைப் பணித்தார். இந்தியாவின் இரண்டாவது புலநாய்வுப் பிரிவான ரோ 1968 ஆம் ஆண்டு இந்தியாவின் வெளியகப் புலநாய்வுப் பிரிவாக உருவாக்கப்பட்டது. அதன் ஆரம்பகால நோக்கமே பாக்கிஸ்த்தானிலிருந்து வரும் அச்சுருத்தலைச் சமாளிப்பதுதான். பிற்காலத்தில், ஜெயவர்த்தனவின் அரசாங்கம் அமெரிக்காவின் பக்கம் சாயத் தொடங்கியதையடுத்து ரோவின் பார்வை இலங்கை மீதும் திரும்பியது. பிரதம மந்திரியின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே ரோ அமைப்பு இயங்கியது. காவோ இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ரோவின் கட்டமைப்பும், செயற்பாடுகளும் பாராளுமன்றத்திடமிருந்தும் மறைக்கப்பட்டு இருந்தன. கட்டுப்பாடற்ற வளங்கள் அதற்கு வழங்கப்பட்டன.

mukti-bahini3.jpg

1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற வங்கதேசப் பிரச்சினையில் ரோ மிக முக்கியமான பங்கொன்றினை ஆற்றியிருந்தது. வங்கதேசத்தின் பலமான முக்திபாகினி ஆயுத அமைப்பு உட்பட பல போராளி அமைப்புக்களுக்கு ரோ ஆயுதப் பயிற்சியினை வழங்கியது. தற்போது 8000 ஆண் , பெண் உளவாளிகளைக் கொண்ட பெரும் உளவுக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் ரோ, சுமார் 40 சர்வதேச நாடுகளில் இயங்கி வருகிறது. மிக அண்மைக்காலமாக ஆப்கானிஸ்த்தானில் இயங்கும் தலிபான்கள் மற்றும் அல்‍கொய்தா தீவிரவாதிகள் குறித்த புலநாய்வுத் தகவல்களை அமெரிக்கா தலைமையில் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நடவடிக்கைக்கு ரோ  வழங்கிவருகிறது.  ஆப்கானிஸ்த்தானில் இயங்கும் தீவிரவாதிகளின் முகாம்கள் தொடர்பான வரைபடங்கள், தீவிரவாதத் தலைவர்களின் புகைப்படங்கள், பாக்கிஸ்த்தானிற்குள் செயற்பாட்டுவரும் தீவிரவாதிகளின் முகாம்கள், அல்கொய்தா அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லாடனின் நடமாட்டங்கள் மற்றும் அவரது தாக்குதல்த் திட்டங்கள் குறித்த தகவல்களையும் ரோ அமைப்பு அமெரிக்க புலநாய்வு அதிகாரிகளுக்கு வழங்கிவருகிறது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை ஆக்கிரமிக்குமாறு கோரிய எம்.ஜி.ஆரும் அவரை வழிக்குக் கொண்டுவந்த இந்திராவும்

ரோ அமைப்பு உருவாக்கப்பட்ட நாள்முதலே இலங்கை தொடர்பான விடயங்களை அது கையாளத் தொடங்கியது. வங்கதேச உருவாக்கத்தில் பாக்கிஸ்த்தானுடனான போரின் பின்னர் கொழும்பில் தனது செயற்பாடுகளைப் பலப்படுத்தியது ரோ. இந்தியாவுடனான போரின்போது பாக்கிஸ்த்தானிய குண்டுவீச்சு விமானங்கள் கொழும்பில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பும் வசதிகளை இலங்கையரசு செய்து கொடுத்தபோதும், அமெரிக்காவின் கப்பற்படை இலங்கையை அண்மித்த இந்துசமுத்திரத்தினூடாக பிரவேசித்தபோதும் தனது தென்கோடியின் பாதுகாப்புப் பலவீனப்பட்டிருப்பதை இந்திரா உணர்ந்துகொண்டிருந்தார். அன்றிலிருந்து இந்தியா கொழும்புமீது தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டே வந்தது. இந்தியாவின் கொழும்பு மீதான இந்தக் கண்காணிப்பென்பது 1977 ஆம் ஆண்டு ஜெயார் ஜனாதிபதியாகப் பதவியேற்று அமெரிக்காவின் பக்கம் சாயத் தொடங்கியதும் இன்னமும் அதிகமானது. இப்படியான பின்னணியிலேயே 1983 ஆம் ஆண்டு தமிழர் மீதான இனவன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டது.

 492.ht2_.jpg

கிரிஷ் சந்திரா சக்சேனா

 

1983 ஆம் ஆண்டு ஜூலையில் தமிழர் மீதான படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது ரோ வின் துணை இயக்குனரான மத்தியு ஏபிரகாம் கொழும்பிலேயே நின்றிருந்தார். கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில்  அமைந்திருந்த இந்தியத் தூதுவராலயத்திற்கு ஆடி 25 ஆம் திகதி காலை அவர் காலி வீதியால் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவரைத் தமிழர் என்று எண்ணிய சிங்களக் காடையர்கள் அவரை வழிமறித்துத் தாக்கத் தொடங்கினர். அவர் பயணம் செய்த கார் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டு எரிக்கப்பட்டது. காரினுள் இருந்து வெளியே இழுத்து வீசப்பட்ட அவர்மீது காடையர்கள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். தான் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேள, "நான் தமிழன் அல்ல, நான் ஒரு இந்தியன்" என்று அவர் அலறத் தொடங்கினார். அவர் ஒரு இந்தியர் என்பதை அறிந்துகொண்டதும் அவர்மீதான தமது தாக்குதலை சிங்களக் காடையர்கள் மேலும் உக்கிரமாக நடத்தத் தொடங்கினர்.  இத்தாக்குதலின்போது மத்தியூ மிகவும் கடுமையான காயங்களுக்கு உள்ளானார். தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விரிவான அறிக்கையொன்றினை அவர் தில்லிக்கு அனுப்பிவைத்தார். அப்போது ரோவின் இயக்குநராக இருந்த சக்சேனா, மத்தியூ தனக்கு அனுப்பிவைத்த தாக்குதல் தொடர்பான அறிக்கை மற்றும் தமிழ்நாட்டில் எழுந்துவந்த உணர்வெழுச்சியான சூழ்நிலை தொடர்பான அறிக்கை ஆகியவற்றினை இந்திரா தலைமையில் நடைபெற்ற உயர் பாதுகாப்புக் கூட்டமொன்றில் சமர்ப்பித்தார். இதற்கு மேலதிகமாக இந்திய புலநாய்வுத்துறையின் (அமைப்பு 1) தகவல்களும் அங்கே விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் இந்தியாவின் சமாதானத் தூதுவர் பார்த்தசாரதியும் பிரசன்னமாகியிருந்தார்.  

இந்த உயர் பாதுகாப்பு கூட்டத்தின் நோக்கமே தமிழ்நாட்டில் உருவாகிவரும் உணர்வெழுச்சியான சூநிலையினை எவ்வாறு தடுப்பது அல்லது ஆற்றுவது என்பதாகவே இருந்ததாக இக்கூட்டத்தில் அன்று பங்கேற்றிருந்த அதிகாரியிருவர் என்னிடம் தெரிவித்தார். "பதற்றமான சூழ்நிலையினால் ஏற்படப்போகும் பாதிப்பைக் குறைப்பதுதான் எமது ஒரே நோக்கமாக இருந்தது. தான் புதிதாக சேர்த்துக்கொண்ட தமிழ்நாட்டின் பங்காளிக் கட்சியான அ.தி.மு.க வின், குறிப்பாக எம்.ஜி.ஆரின் அரசியல் இருப்பையும்,  தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு இருக்கும் அரசியல்த் தளத்தைத் தக்கவைத்துக்கொள்வதுமே இந்திராவின் கரிசணையாக அன்று இருந்தது"  என்று அவர் கூறினார். 

தமிழ்ப் போராளிகளைப் பயிற்றுவித்து அவர்களுக்கு ஆயுத உதவிகளை வழங்கி இலங்கையினுள் அனுப்பிவைக்கும் தனது முடிவு உறுதியாக்கப்பட்டதும் இந்திரா அதனை உடனடியாக தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு அறியத் தந்தார். ஜெயவர்த்தனவைக் கையாள தான் எடுத்திருக்கும் இருவழிக் கொள்கை பற்றியும் எம்.ஜி.ஆரிடம் அவர் விளக்கினார். ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அதேவேளை தமிழ்ப் போராளிகளைத் தாம் பயிற்றுவிக்கப்போவதாக இந்திரா கூறியபோது எம்.ஜி.ஆர் இதற்கு தனது அதிருப்தியை வெளியிட்டார். போராளிகளைப் பயிற்றுவித்து அவர்களுக்கு ஆயுத உதவிகளை வழ‌ங்குவது மட்டுமே  தமிழ்நாட்டுத் தமிழர்களைத் திருப்திப்படுத்திவிடாது என்று அவர் இந்திராவுடன் தர்க்கித்தார். இலங்கையை ஆக்கிரமித்து தமிழர்களைக் காக்குமாறே தமிழ்நாட்டுத் தமிழர்கள் கோருகிறார்கள் என்று இந்திராவிடம் அவர் கூறினார். 

"சரி, நீங்கள் கோருவதுபோல் நாம் இலங்கையை ஆக்கிரமிப்பதாகவே வைத்துக்கொள்வோம், அப்படியானால் தெற்கில், சிங்களவர்கள் மத்தியில் வாழும் தமிழர்களின் நிலை என்னாகும்?" என்று அவர் எம்.ஜி.ஆரிடம் வினவினார்.

L30002.jpg 

தமிழ்நாடு, சேலம் மாவட்டம், களத்தூர்க் கிராமத்தில் இயங்கிய புலிகளின் பயிற்சிப் பாசறை 1985

 L20001.jpg

புலிகளின் சிறுமலை பயிற்சிப் பாசறை , திண்டுக்கல் மாவட்டம் 1985

பின்னர், காமிணி திசாநாயக்கவின் அண்மைய உரையொன்றினை மேற்கோள் காடிய இந்திரா, "நாம் இலங்கையை ஆக்கிரமித்தால் இலங்கை இராணுவம் தமிழர்களைக் கொல்லும், குறிப்பாக பெண்களையும் சிறுவர்களையும் அது வேட்டையாடும். இதை தமிழ்நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்" என்று அவர் எம்.ஜி.ஆரிடம் கோரினார். 

(தனது தொழிற்சங்க கூட்டமொன்றில் ஆவணியில் பேசியிருந்த காமிணி திசாநாயக்க, "இந்தியா எம்மீது ஆக்கிரமிப்பை மேற்கொள்ள குறைந்தது 24 மணித்தியாலங்களவது எடுக்கும். அந்த 24 மணித்தியாலத்தினுள் அனைத்துத் தமிழர்களையும் நாம் கொன்றுவிடலாம்" என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது).

 இதனையடுத்து இந்திராவின் சிந்தனையினை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர், தனது நெருங்கிய சகாவான மின்சார வளத்துறை அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை அழைத்து இந்திராவின் கருத்தினை மக்களிடையே பிரச்சாரப்படுத்தும்படி பணித்தார். வைகாசி 2000 இல் சென்னையிலிருந்து வெளிவரும் நியூஸ் டுடே எனும் பத்திரிக்கையில் இந்த நிகழ்வு குறித்த‌ பதிவொன்றினை வெளியிட்டிருந்தார். 

தனது விசேட புலநாய்வுப் பிரிவின் அதிகாரிக‌ளை அழைத்த இந்திரா தனது மறைமுக வழியான தமிழ்ப் போராளிகளைப் பயிற்றுவித்து ஆயுதம் வழங்குவது எனும் திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்த திட்டம் ஒன்றினை வகுக்கும்படி பணித்தார். இந்த அமைப்போ இலங்கைப் பிரச்சினையினைக் கையாள்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பல்ல. ஜூலை இனக்கலவரம் ஆரம்பிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னரே இந்த அமைப்பு இந்திராவால் உருவாக்கப்பட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியிலேயே இதனை அவர் உருவாக்கியிருந்தார்.  விசேட புலநாய்வு அமைப்பு என்கிற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இந்தியாவின் பஞ்சாப், காஷ்மீர், ராஜஸ்த்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் நடந்துவந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்காகவே உருவாக்கப்பட்டிருந்தது. இந்த விசேட புலநாய்வு அமைப்பு காவோ எனும் அதிகாரியினால் வழிநடத்தப்பட்டது. பிரதமரின் செயலக இயக்குநர் சங்கரன் நாயர் மற்றும் ரோவின் இயக்குநர் சக்சேனா ஆகியோர் இந்த விசேட புலநாய்வுப் பிரிவிற்கு உதவிபுரிந்து வந்தனர். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கென்று கொள்கைகள் இல்லை, இந்தியா நாம் என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறதோ அதனை நாம் செய்துகொடுப்போம் ‍- சிறீசபாரட்ணம்
 

இந்திராவினால் அமைக்கப்பட்ட மூன்றாவது புலநாய்வு அமைப்பின் மூன்று பிரதான தலைவர்களான காவோ, சக்சேனா மற்றும் சங்கரன் நாயர் ஆகியோர் இலங்கையைத் தடம்புரளவைக்கும் திட்டத்தினை வகுக்கத் தொடங்கினர். தமது நடவடிக்கைக்கு  "சிறிலங்கா ஒபரேஷன்" என்று அவர்கள் பெயரிட்டனர். அவர்களின் திட்டத்தின் சாராம்சமே தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சியளிப்பது, ஆயுதங்களை வழங்குவது மற்றும் நிதியினை வழங்குவது. இந்த நடவடிக்கைக்குப் பொறுப்பாக‌ அமைச்சரவைச் செயலகத்தின் மேலதிக செயலாளர் எஸ் சந்திரசேகரன் எனப்படும் இலங்கைப் பிரச்சினையில் நன்கு பரீட்சயமான அதிகாரி நியமிக்கப்பட்டார். 

L30001.jpg

சேலம் மாவட்டம், களத்தூரில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பயிற்சிமுகாம் - 1985

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ரோவிடம் கையளிக்கப்பட்டது. ஆகவே, இலங்கைக்கான தனது திட்டத்தினை செயற்படுத்த விசேட பிரிவொன்றினை ரோ அமைத்துக்கொண்டது. கொழும்பில் இந்தியத் தூதராக முன்னர் செயலாற்றி வந்த ரொமேஷ் சண்முகம் இந்த விசேட பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். சென்னையில் இயங்கிவந்த ரோவின் கிளைக்கு உன்னிகிருஷ்ணன் பொறுப்பாக இருந்தார். புலநாய்வுப் பிரிவின் சென்னைக் கிளைக்கு கார்த்திகேயன் என்கிற அதிகாரி பொறுப்பாக இருந்தார். 1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் நடைபெறும்வரைக்கும் சென்னையில் செயற்பட்டுவந்த தமிழ்ப் போராளி அமைப்புக்கள் குறித்து உன்னிகிருஷ்ணன் அதிகம் அக்கறை காட்டியிருக்கவில்லை. ஆனால், தமிழர் மீதான கலவரத்தின் பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்து வந்த தந்தை செல்வாவின் மகனான சந்திரகாசன் மற்றும் கொழும்பில் வியாபாரங்களை நடத்தி இனக்கலவரத்தில் அவற்றினை இழந்து இந்தியா மீண்டிருந்த பல இந்திய வர்த்தகர்களுடன் மட்டுமே உன்னிகிருஷ்ணன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.  கார்த்திகேயனோ தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்க‌ளுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார்.

சந்திரகாசன் சென்னைக்கு குடிபெயர முன்னமே இந்தியாவின் உளவுத்துறையான ரோவுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்று பரவலான செய்திகள் அக்காலத்தில் வெளிவந்திருந்தன. மேலும், தமிழ் ஆயுத அமைப்புக்களுடனும் அவர் தொடர்பில் இருந்தார். குறிப்பாக டெலோ அமைப்பின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருடன் மிக நெருங்கிய தொடர்புகளை அவர் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்ட காலத்தில் அவர்களுக்காக நீதிமன்றில் வாதாடியிருக்கிறார்.  குட்டிமணி மற்றும் தங்கத்துரையின் மரணங்களுக்குப் பின்னர் டெலோ அமைப்பின் தலைவராக பொறுப்பேற்ற சிறி சபாரட்ணத்துடனும் அவர் மிக நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். 

தி.மு. வின் தலைவரான கருநாநிதியுடன் தொடர்பில் இருந்த சந்திரகாசன் பின்னாட்களில் கருநாநிதிக்கும் டெலோ அமைப்பின் சிறி சபாரட்ணத்திற்கும் ஏற்பட்ட நெருங்கிய தொடர்பிற்குக் காரணமாக இருந்தவர்.

டெலோ அமைப்பிற்கு அப்பால், புளொட், புலிகள், ஈரோஸ் மற்றும் .பி.ஆர்.எல்.எப் ஆகிய அமைப்புகளுடனும் அவருக்குத் தொடர்பிருந்தது. பாண்டி பஜார் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே ஏற்பட்ட பகைமையினை தணிக்கும் நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

இந்தியாவின் திட்டத்தினை போராளிகளுக்கு அறியத் தருவதற்காக சென்னையில் ரோ அமைப்பிற்குப் பொறுப்பாகவிருந்த உன்னிகிருஷ்ணன் சந்திரகாசனை நாடினார். சபாரட்ணத்துடனான தனது நெருக்கமான தொடர்பினால் அவருக்கே இந்தியாவின் திட்டத்தினை முதன்முதலாக அறிவித்தார் சந்திரகாசன். சிறிசபாரட்ணமும் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பாவித்துக்கொண்டார். சிறிசபாரட்ணமும், டெலோவின் இன்னொரு தலைவரான ராசுப்பிள்ளையும் உன்னிக்கிருஷ்ணனை நேரடியாகச் சந்தித்து இந்தியாவின் திட்டத்தின்படி ஆயுதப் பயிற்சியினை மேற்கொள்ள தாம் விரும்புவதாகத் தெரிவித்தனர். டெலோ தலைவர்கள் தன்னை வந்து சந்தித்ததையடுத்து உன்னிகிருஷ்ணன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். டெலோ அமைப்பின் வளைந்துகொடுக்கும் நெகிழ்வுத்தனமையே இதற்குக் காரணமாக இருந்ததாக உன்னிகிருஷ்ணன் பின்னர் தெரிவித்திருந்தார். புளொட் அமைப்பின் தத்துவார்த்தமான பார்வையோ அல்லது புலிகள் இயக்கத்தின் அதீத தேசிய ரீதியான சிந்தனைகளோ அற்றிருந்த டெலோ அமைப்பினை தமது திட்டத்திற்கேற்பக் கையாள்வது மிகவும் இலகுவானது என்று உன்னிகிருஷ்ணனும் ரோ அதிகாரிகளும் உணர்ந்துகொண்டனர். .பி.ஆர்.எல்.எப் அமைப்பினை தூரத்திலேயே வைத்திருக்க ரோ விரும்பியது. மார்க்ஸிஸ சிந்தனையும் இந்திய நக்சலைட்டுக்களுடனான அவ்வமைப்பின் நெருக்கமும் இந்திய அதிகாரிகளை முகம் சுளிக்க வைத்திருந்தன. ஈரோஸ் அமைப்புப்பற்றி ரோ அதிகம் பொருட்படுத்த விரும்பவில்லை. தர்க்கங்களில் மட்டுமே ஈடுபடும் அமைப்பாக அக்காலத்தில் ஈரோஸ் செயற்பட்டு வந்ததனால் அவ்வமைப்பை சட்டை செய்யவேண்டிய தேவை ரோவிற்கு இருக்கவில்லை.  

1985 ஆம் ஆண்டு சிறிசபாரட்ணத்தைப் பேட்டி கண்ட புரொண்ட் லைன் சஞ்சிகை அவ்வியக்கத்தை ரோ முதலாவதாகத் தெரிவுசெய்ததற்கான காரணம் பற்றி வினவியிருந்தது. அதற்குப் பதிலளித்த சிறி சபாரட்ணம், "நாம் சித்தார்ந்த கொள்கைகளிலோ தேசியவாதக் கொள்கைகளிலோ நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. இந்தியா நாம் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறதோ அதனைச் செய்ய நாம் தயாராக இருக்கிறோம், அவ்வளவுதான்" என்று கூறியிருந்தார்.

ஈரோஸ் அமைப்பின் தலைவர்களான அருட்பிரகாசமும், சங்கர் ராஜியும் என்னுடன் பேசும்போது இந்தியாவின் திட்டம் குறித்து பலநாட்கள் தாம் அமைப்பிற்குள் விவாதித்து வந்ததாகக் கூறினர். அவ்வமைப்பின் லண்டன் கிளையின் தலைவர் இந்தியாவின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இந்தியாவின் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தமது குறிக்கோளான தமிழ் ஈழத்தை அடைய முடியாது போய்விடும் என்கிற விவாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த ஈரோஸ் அமைப்பின் ஏனைய தலைவர்கள் இந்தியாவின் சலுகைகளை ஏற்றுக்கொள்ள விரும்பினர். அவர்கள் தலைமைக்கு அனுப்பிய செய்தி என்னவெனில்,"இந்தியா தரவிரும்பும் சலுகைகளை ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லாதுவிட்டால் நாம் அழிந்துவிடுவோம்" என்பதாகும்.

492.ht6_.gif

.ஆர்.அருட்பிரகாசம்

ஈரோஸ் அமைப்பின் நடைமுறையான எந்த விடயத்தையும் தர்க்கித்தே முடிவெடுப்பது என்பதை அவ்வமைப்பின் யாழ்ப்பாணப் பிரிவு தூக்கியெறிந்தது. நாம் உயிர்வாழ‌வேண்டுமென்றால் இந்தியாவின் உதவிகளைப் பெறுவதே சரியானது என்று அது கூறியது. அமைப்பின் இளைஞர்கள் சிங்கள அரசினை எதிர்த்து ஆயுதப்போராட்டத்தில் இறங்கவேண்டும் என்று விரும்பினார்கள். நீங்கள் இந்தியாவின் சலுகைகளை ஏற்றுக்கொண்டு ஆயுதப் பயிற்சிக்கு இணங்கவில்லையென்றால் இளைஞர்கள் ஈரோஸ் அமைப்பைக் கைவிட்டு விட்டு டெலோ அமைப்பில் சென்று சேர்ந்துவிடுவார்கள் என்று யாழ்ப்பாணப் பிரிவு தலைமையிடம் தெரிவித்தது.

அதன் பின்னர் இந்தியாவின் திட்டம் குறித்து அறிந்துகொள்ள இந்திய  உளவுத்துறையுடன் அருட்பிரகாசம் தொடர்புகொண்டபோது ஈரோஸ் அமைப்பை பயிற்சித் திட்டத்தில் இணைந்துக்லொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் பின்னர் தனது நண்பரும் இந்தியாவில் ரஸ்ஸிய தூதராகப் பதவிவகித்தவருமான அதிகாரியுடன் தொடர்புகொண்ட அருட்பிரகாசம் இந்தியா தமது இயக்கத்தையும் ஆயுதப் பயிற்சித் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கோருவதாகக் கூறினார்.  அவரும் இந்தியா விரும்புவதையே நீங்களும் செய்யுங்கள் என்று கூறினாராம்.

இதன் பின்னர் ஈரோஸ் அமைப்பு சங்கர் ராஜியையும் சந்திரனையும் உன்னிக்கிருஷ்ணனைச் சந்திக்க அனுப்பியது. இந்தியாவின் பயிற்சித் திட்டத்தை ஏற்றுக்கொண்ட இரண்டாவது தமிழ்ப் போராளி அமைப்பு ஈரோஸ் என்பது குறிப்பிடத் தக்கது.

 சந்திரகாசன் தொடர்புகொண்ட மூன்றாவது போராளி அமைப்பு புளொட் ஆகும். ஆனால், ரோ தன்னுடன் நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கவேண்டும், சந்திரகாசனூடாக அல்ல என்று உமா மகேஸ்வரன் முரண்டு பிடித்தார். சந்திரகாசன் குறித்து ஏனையவர்களுடன் பின்னாட்களில் பேசிய உமா மகேஸ்வரன், "அவர் ஒரு அமெரிக்க சி.. ஏஜெண்ட்" என்று கூறியிருக்கிறார். பின்னர் சந்திகாசன் அருட்பிரகாசத்தையும் வேலுப்பிள்ளை பாலகுமாரையும் உமாவிடம் அனுப்பி இந்தியத் திட்டத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு கோரியிருக்கிறார். ஆரம்பத்தில் முரண்டுபிடித்த உமா பின்னர் பயிற்சியை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டிச்சேரியில் பிரபாகரனுக்கும் ரோ அதிகாரிகளுக்கும் இடையே நடந்த இரகசியக் கூட்டம்

பிரபாகரனும் பத்மநாபாவும் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். புலிகளுக்கென்று சென்னையில் அலுவலகம் எதுவும் இருக்கவில்லை. பேபி சுப்பிரமணியம், நேசன் உள்ளிட்ட வெகு சில போராளிகளே அப்போது சென்னையில் தங்கியிருந்தார்கள். பெரும்பாலான போராளிகள் மதுரையில் அமைக்கப்பட்டிருந்த பயிற்சிமுகாமிலேயே தங்கியிருந்தார்கள். பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிச் செல்லும்போது பெருமளவு போராளிகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார். புலிகளின் போராளிகளின் மொத்த எண்ணிக்கை 50 ஐக் காட்டிலும் சற்றுக் குறைவாகவே அன்று காணப்பட்டது. ரோ கேட்டுக்கொண்டதற்கிணங்க சந்திரகாசன் பேபி சுப்பிரமணியத்திடம் இந்தியாவின் திட்டம் பற்றிக் கூறினார். பின்னர் அச்செய்தியை பேபி சுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த பிரபாகரனுக்கு அறியத் தந்தார்.    

இந்தியாவின் திட்டத்தினை அறிந்த பிரபாகரன் கடுங் கோபம் கொண்டார். செயலிழந்து காணப்பட்ட போராளி அமைப்புக்களை தனது தேவைக்காக இந்தியா இயக்க நினைப்பதாக அவர் உணர்ந்தார். 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் டெலோ அமைப்பு எந்தவித இராணுவத் தாக்குதல்களிலும் தன்னை ஈடுபடுத்தியிருக்கவில்லை. ஈரோஸ் அமைப்பு விவாதங்களுக்கப்பால் செயற்பாடுகளில் இறங்க விரும்பியிருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் வசித்துவந்த கல்விமான் ஒருவர் என்னுடன் பேசுகையில், "ஈரோஸ் அமைப்பு தானும் எதையும் செய்யப்போவதில்லை, செய்பவர்களையும் விடப்போவதில்லை" என்று சலித்துக்கொண்டார்.

தனது அதிருப்தியை ரோ விடம் தெரிவித்த பிரபாகரன், சந்திரகாசனூடாக அல்லாமல் ரோ தன்னுடன் நேரடியாகவே இதுபற்றி பேசியிருக்கலாம் என்ற கருத்தையும் முன்வைத்தார்.

(2008 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப்போரில் இலங்கை அரசுக்குச் சார்பாகவும், புலிகளின் அழிப்பினை நியாயப்படுத்தியும் சந்திரகாசன் செல்வநாயகம் வழங்கிய செவ்வி இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது. ரோவின் திட்டத்தின்படி பரந்தன் ராஜனையும் கருணாவையும் இணைத்து புலிகளுக்கெதிரான நாசகார வேலைகளை ஒருங்கிணைத்த சதியில் இவரும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.)

http://www.srilankaguardian.org/2008/03/we-are-better-off-without-ltte.html

659-the-organisation-for-eelam-refugees-rehabilitation--oferr--founder-s-image-IMG_7674.jpg

புலிகளின் வைரியும் ரோவின் நெருங்கிய தோழருமான சந்திரகாசன்

மேலும், இந்தியாவின் திட்டத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையினை சரிவர ஆய்வுசெய்து தனக்கு அறிவிக்க நம்பிக்கையான ஒருவரை பிரபாகரன் தெரிவுசெய்தார். ஆகவே, லண்டனில் அப்போது தங்கியிருந்த அன்டன் பாலசிங்கத்தை தொலைபேசியில் அழைத்த பிரபாகரன் உடனடியாக சென்னைக்குச் சென்று அங்கு ஏற்பட்டிருக்கும் புதிய திருப்பங்கள் குறித்துக் கண்டறியுமாறு கேட்டுக்கொண்டார். லண்டனில் பாலசிங்கம் தங்கியிருந்த தொடர்மாடிக் குடியிருப்பு தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தது. மதில்மேற் பூனையாக அதுவரை இருந்த பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் அப்போது ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவினையும் தெரிவிக்கத் தொடங்கியிருந்தனர். இவ்வாறான புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பெருமளவு பணம் வந்து சேரத் தொடங்கியது. சில புலம்பெயர் தமிழர்கள் லண்டனை விட்டு இலங்கை சென்று போராளிகளுடன் தம்மையும் இணைத்து போராட‌ ஆயத்தமானார்கள். 

BalaNAdele.jpg

அன்டன் பாலசிங்கமும் அடேலும்

ஆவணி மாதத்தின் இறுதிப் பகுதியில் பாலசிங்கமும் மனைவி அடேலும் சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்கள். அவர்களை வரவேற்க வெள்ளை வேட்டியுடனும் மண்ணிற மேற்சட்டையுடனும் சென்றிருந்த பேபி சுப்பிரமணியம் அவர்கள் இருவரையும் வூட்லாண்ட் ஹோட்டலில் தங்கவைத்தார். அங்கிருந்து பாலசிங்கமும் அடேலும் "தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழரின் விடுதலைப் போராட்டமும்" எனும் தலைப்பில்  நீண்ட துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டனர். இப்பிரசுரத்தின் நோக்கம் புலிகளின் குறிக்கோள்கள், அவர்களின் அரசியல் சித்தார்த்தம் ஆகியனவற்றை மக்களுக்குப் புரியவைப்பது மற்றும் போராட்டத்திற்கான நிதியினை சேகரிக்க மக்களின் உதவியை நாடுவது என்பதாகவே இருந்தது. புரட்டாதி மாதத்தின் நடுப்பகுதியில் பாலசிங்கமும் அடேலும் அங்கிருந்து கிளம்பி சாந்தோம் பகுதியில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இரு அறைகளைக்கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பிற்குள் வாழத் தொடங்கினார்கள்.

சாந்தோம் குடியிருப்பிற்கு பாலசிங்கம் தம்பதிகள் குடிபுகுந்து சில நாட்களுக்குள் தமிழ்நாடு உளவுத்துறையைச் சேர்ந்த ஜம்போ குமார் என்பவர் பாலசிங்கத்தின் சென்னை வருகையின் காரணத்தைக் கண்டறிய அவரைச் சந்திக்கச் சென்றார். பின்னர், விசேட புலநாய்வுத்துறையின் உதவி அத்தியட்சகர் அலெக்ஸாண்டரை பாலசிங்கத்திற்கு ஜம்போ குமார் அறிமுகம் செய்துவைத்தார். அலெக்ஸாண்டர் ஊடாக பாலசிங்கத்திற்கு ரோவின் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. பாலசிங்கத்துடன் தொடர்புகொண்ட ரோ அதிகாரிகள் பயிற்சித் திட்டத்தில் புலிகளும் இணையவேண்டும் என்கிற கோரிக்கையினை முன்வைத்தனர்.

ரோவின் பயிற்சித் திட்டம் குறித்து பிரபாகரனே சென்னைக்கு நேரடியாக வந்து முடிவெடுக்க வேண்டும் பால‌சிங்கம் விரும்பினார்.ஆகவே, பிரபாகரனை உடனடியாக சென்னைக்கு வருமாறு அவசரச் செய்தியொன்றினை அவர் அனுப்பினார். மேலும், புலிகள் இந்தியாவின் திட்டத்தை ஏற்காது விடில் அவர்கள் இந்தியாவால் கைவிடப்படும் நிலைக்கு உள்ளாவார்கள் என்றும், இந்தியாவுடன் நெருக்கமாவது அவசியம் என்றும் அவர் பிரபாரகனிடம் கூறினார். 

பாலசிங்கத்தின் செய்தியும் வேண்டுகோளும் வன்னியில் புலிகளின் பயிற்சி முகாமொன்றில் கூடிய புலிகளின் உயர்பீட உறுப்பினர்களிடையே ஆளமாக விவாதிக்கப்பட்டது. உயர் பீடத்தின் ஒரு பிரிவினர் இந்தியாவின் திட்டம் குறித்த தமது சந்தேகங்களை வெளியிட்டனர். பிரபாகரன் சென்னைக்கு வரும்போது அவரைக் கைதுசெய்வதற்காகத்தான் ரோ நாடகம் ஆடுகின்றதா என்று அவர்கள் கேள்வியெழுப்பினர். பாண்டிபஜார் துப்பாக்கிச் சண்டையில் பிணையில் விடப்பட்ட பிரபாகரன் இரகசியமாக இந்தியாவை விட்டு இலங்கைக்கு வந்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஆகவே, பாலசிங்கத்திடமிருந்து மேலதிகமான தகவல்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் முடிவெடுக்கலாம் என்று அவர்கள் தீர்மானித்தார்கள்.

ரகுவும் மாத்தையாவும் மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள மதுரைக்குச் சென்றார்கள். பாலசிங்கமும் அடேலும் அவர்களைச் சந்திக்க மதுரைக்குச் சென்றார்கள். பிரபாகரன் தமிழ்நாட்டிற்குச் செல்வது பாதுகாப்பானதா என்று பாலசிங்கத்திடம் வினவினார் மாத்தையா. அதற்குப் பதிலளித்த பாலசிங்கம் ரோ தன்னை ஏமாற்றுவதற்காகவே இதனைச் செய்வதாக தான் நம்பவில்லை என்று கூறினார். மேலும், பிரபாகரனுக்கு வழங்கப்பட்ட பிணையினை அவர் உதாசீனம் செய்தமையானது தமிழ்நாட்டு அரசாங்கத்தின் பிரச்சினையே அன்றி மத்திய அரசாங்கம் அதுகுறித்து சற்றேனும் கவலைப்படவில்லை என்றும் பாலசிங்கம் தெரிவித்தார். போராளிகளுக்கான இராணுவப் பயிற்சியை வழங்குவது எனும் முடிவு மத்திய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டதென்பதும், இந்திரா காந்தியே பிரத்தியேகமாக இதனைக் கேட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மாத்தையா மற்றும் ரகுவுடன் பேசிய பாலசிங்கம் இந்தியாவின் பயிற்சித் திட்டம் குறித்த தகவல்களை விளக்கத் தொடங்கினார்.

ஆனால், மாத்தையாவோ ரகுவோ இந்தியாவின் பயிற்சித் திட்டம் குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்தும் வெளியிட்டு வந்தனர். இப்பயிற்சித் திட்டத்திற்கான கோரிக்கையே பிரபாகரனை இந்தியாவிற்கு வரவழைத்துக் கைதுசெய்வதற்காக ரோ நடத்தும் நாடகம் என்பதில் அவர்கள் விடாப்பிடியாக நின்றிருந்தனர். அதன்பின்னர், பிரபாகரனுக்கு நேரடியாக கடிதம் ஒன்றினை எழுதிய பாலசிங்கம் அவரை சென்னைக்கு வருமாறு வேண்டிக்கொண்டார்.  அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் அப்போது காணப்பட்ட சூழ்நிலை பொலீஸார் பிரபாகரனைக் கைதுசெய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் வாதிட்டார். தனது மதிப்பீட்டில் நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டிற்குப் வருமாறு பிரபாகரனை அவர் கேட்டுக்கொண்டார்.

பாலசிங்கத்தின் மதிப்பீட்டை நம்பிய பிரபாகரன் தமிழ்நாட்டிற்கு சென்றார். பாண்டிச்சேரியில் இரகசிய கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. இக்கூட்டம் குறித்து அடேல் தனது புத்தகமான "சுதந்திர வேட்கை" இல் பின்னர் பதிவிட்டிருந்தார்,

3392864.jpg

"அன்றிரவு பாலாவும், நானும் எமது மெய்ப்பாதுகாவலர்கள் சிலரும் கார் ஒன்றில் ஏறி பாண்டிச்சேரி நோக்கிய நீண்ட பயணத்தை மேற்கொண்டோம். புலிகளின் தலைவர்களுக்கு ரோ வின் மூத்த அதிகாரிகளுக்கும் இடையே நடக்கப்போகும் இரகசியக் கூட்டம் அது. குறிக்கப்பட்ட நேரமொன்றில் பிரபாகரனுக்கும், பாலாவுக்கும் ரோவின் மூத்த அதிகாரிகளுக்கும் இடையே அந்த முக்கியமான கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து எமது அறைகளுக்குத் திரும்பிய தம்பியினதும் பாலாவினதும் முகங்களில் தவழ்ந்த‌ புன்னகை அக்கூட்டம் வெற்றிகரமாக நடந்திருப்பதை எமக்குச் சொல்லியது".

இக்கூட்டம் குறித்த மேலதிகத் தகவல்களை நாராயண் சாமி தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

டெலோ போன்ற மாற்று போராளி அமைப்புக்களுக்கு பயிற்சி நிலையங்களை ரோ முதன்முதலாக வழங்கியமை குறித்து பிரபாகரன் இயல்பாகவே கோபமடைந்திருப்பார் என்பதை ரோ அதிகாரிகள் எதிர்பார்த்தே கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். ஆகவே, பிரபாகரனைச் சந்தித்தபோது, அவரை ஆசுவாசப்படுத்தும் முகமாக ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட 7.62 மி.மீ லுகார் கைத்துப்பாக்கியை அவருக்குப் பரிசாக அளித்தனர்.

World War I era Luger pistol.

அக்கூட்டத்தில் பங்கேற்ற ரோ அதிகாரிகளுக்கு நெருக்கமானவராக நாரயணன் சாமி இருந்தமையினால் இக்கூட்டம் குறித்த தகவல்களை அவரும் அறிந்திருந்தார்.

சமாதானப் பொறி எனும் நூலை எழுதிய இந்தியப் பத்திரிக்கையாளரான சூரியநாராயணா பிரபாகரனுடனான நேர்காணல் ஒன்றின்போது பாண்டிச்சேரியில் இடம்பெற்ற இரகசிய கூட்டம் நடந்த இடம், நேரம் பற்றிய தகவல்களைக் கேட்டிருந்தார். பாண்டிச்சேரியில் கூட்டம் நடைபெற்றதை ஒத்துக்கொண்ட பிரபாகரன் ஏனைய விடயங்கள் குறித்த தகவல்களை வழங்க மறுத்துவிட்டார். சூரியநாராயணனின் பதிவின்படி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தோ எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தோ தான் பிரபாகரனிடம் வினவவில்லை என்றே தெரிவித்திருந்தார்.

நான் அறிந்தவகையில் பாண்டிச்சேரிக் கூட்டம் புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியிலேயே நடைபெற்றிருக்க வேண்டும். அக்காலத்தில் டெலோ மற்றும் ஈரோஸ் அமைப்புக்களின் போராளிகள் பயிற்சிகளை ஏலவே ஆரம்பித்து விட்டிருந்தனர். ஈரோஸின் சங்கர் ராஜியுடன் தொடர்புகொண்ட ரோ , 300 போராளிகளை புரட்டாதி மாதத்தின் முதல்வாரத்தில் தமிழ்நாட்டில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட முகாமிற்கு அழைத்துவருமாறு பணித்தனர். அங்கிருந்து தொகுதிகளாக அவர்கள் தில்லிக்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்தே அவர்களுக்கான பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டது. ஏனைய போராளி அமைப்புகளுக்கான பயிற்சிகளும் இவ்வாறே ஒழுங்குசெய்யப்பட்டன. போராளி அமைப்புக்கள் தத்தமது போராளிகளை தமிழ்நாட்டில் இருக்கும் பயிற்சி முகாம்களுக்கு அழைத்துச் செல்ல, ரோ அவர்களை தில்லிக்குக் கொண்டுசென்றது.

NABA.jpg

பத்மநாபாவும் சுரேஷ் பிரேமச்சந்திரனும்

இந்தியாவின் பயிற்சித் திட்டத்திற்குள் இறுதியாக உள்வாங்கப்பட்ட அமைப்பு .பி.ஆர்.எல்.எப் ஆகும். இந்தியாவில் இயங்கிவந்த மார்க்ஸிஸ்ட் , நக்சலைட் அமைப்புக்களுடன் .பி.ஆர்.எல்.அப் அமைப்பிற்கிருந்த நெருக்கத்தையடுத்து இந்தியா அவர்களை தள்ளியே வைத்திருந்தது. இந்தியா குறித்துக் கடுமையான விமர்சனங்களை பத்மநாபா கொண்டிருந்தார் என்பதை ரோ அறிந்தே இருந்தது. இந்தியா ஒரு முதலாளித்துவ நாடென்றும் ஆகவே இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தனியான தமிழர் நாடொன்று உருவாவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காதென்றும் பத்மநாபா வாதிட்டு வந்தார். மேலும், சோவியத் ஒன்றியத்தின் கொள்கைகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார்.

சென்னையில் .பி.ஆர்.எல்.அப் இயக்கத்தின் அலுவலகத்திற்குப் பொறுப்பாகவிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தியாவின் பயிற்சித் திட்டம் குறித்து அறிந்தபோது பதற்றமடைந்தார். ஆகவே, பத்மாநாபாவை உடனடியாக சென்னைக்கு வருமாறு அவர் அழைத்தார். இந்தச் சந்தர்ப்பத்தினை தமது இயக்கம் பயன்படுத்தத் தவறினால் அது தமது கைகளை விட்டு நிரந்தரமாகவே நழுவிச் சென்றிவிடும் என்று பேசி பத்மநாபாவை இணங்கச் செய்தார். பின்னர் பத்மநாபாவையும் அழைத்துக்கொண்டு உன்னிகிருஷ்ணனைச் சந்திக்கச் சென்றார். தமது இயக்கத்தால் வெளியிடப்பட்டு வந்த ஈழ முழக்கம் எனும் சஞ்சிகையின் சில பிரதிகளைத் தம்முடன் எடுத்துச் சென்றிருந்த அவர்கள் அவற்றினை உன்னிகிருஷ்ணனிடம் காட்டி, சோவியத் ஒன்றியத்திற்கு ஆதரவாக அதில் வெளிவந்த சில ஆக்கங்களை சுட்டிக்காட்டி தாம் சோவியத் ஒன்றியத்திற்கோ இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல என்று நிரூபிக்க முனைந்தனர். ரோ அதிகாரிகள் வேண்டா வெறுப்பாக .பி.ஆர்.எல். எப் அமைப்பையும் பயிற்சித் திட்டத்தில் ஏற்கச் சம்மதம் தெரிவித்தனர். அதற்குப் பதிலாக, இந்தியாவில் செயற்பட்டுவரும் நக்சலைட் அமைப்புக்களுடனான தொடர்புகளை அவ்வமைப்பு கைவிட்டு விட வேண்டும் என்று ரோ விதித்த நிபந்தனையினை பத்மநாபாவும் ஏற்றுக்கொண்டார்.

 

Edited by ரஞ்சித்
சந்திரகாசன் செல்வநாயகம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தியப் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு - புலிகளும் ஏனைய விடுதலை அமைப்புக்களும்

 

புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியளவில் ஐந்து போராளி அமைப்புக்களும் இந்திய பயிற்சித் திட்டத்தினுள் இணைக்கப்பட்டிருந்தனர். இலங்கையிலிருந்து போராளி அமைப்புக்கள் தமது முதலாவது தொகுதிப் போராளிகளை தமிழ்நாட்டிற்கு அழைத்துவருவதற்கு இருவாரகால அவகாசத்தினை மட்டுமே ரோ வழங்கியிருந்தது. 

"குறைந்தது 300 போராளிகளையாவது இருவார காலத்தினுள் சேர்த்து தமிழ்நாட்டிற்கு அழைத்துவருமாறு நாம் கேட்கப்பட்டோம். டெலோ அமைப்பிடம் குறைந்தது 500 போராளிகளையாவது அழைத்துவரவேண்டும் என்று ரோ கோரியிருந்ததை நாமும் அறிந்துகொண்டோம்" என்று ஈரோஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சங்கர் ராஜி கூறினார்.

ரோவினால் கேட்டுக்கொண்டதற்கமைய டெலோவும் ஈரோஸும் உடனடியாக இதனை யாழ்ப்பாணத்திலிருந்த தமது போராளிகளுக்கு அறியத் தந்தனர். இந்தச் செய்தி யாழ்ப்பாணமெங்கும் காட்டுத்தீயைப்போல பரவியது. "இந்தியா எமக்குப் பயிற்சியளிக்கப்போகிறது" என்பதே இளைஞர்கள் மத்தியில் அப்போது பேச்சாக இருந்தது. 

ஜூலைக் கலவரத்தினூடாக யாழ்ப்பாணத்தில் பெருமளவில் வந்து சேர்ந்திருந்த  ஆத்திரம் கொண்ட இளைஞர்கள் மத்தியிலும் இந்தச் செய்தி பரவத் தொடங்கியது. வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவந்த தமிழ்க் குடும்பங்கள் ஒரே இரவில் அவர்களின் வாழிடங்களில் இருந்து பிடுங்கி எறியப்பட்டு, உடுத்த உடையுடன் உயிரை மட்டுமே காத்துக்கொள்ள ரயில்களிலும், கப்பல்களிலும் தமது தாயகம் நோக்கி ஓடிவந்திருந்தனர். கொழும்பு, கண்டி, குருநாகலை, அநுராதபுரம், காலி மற்றும் தெற்கின் மாத்தறை ஆகிய பகுதிகளிலிருந்து இவர்கள் விரட்டப்பட்டிருந்தார்கள். வெறுங்கைகளுடன், வாழ்நாளில் சேர்த்த சொத்துக்களையெல்லாம் இழந்து ஆத்திரமும், உறுதியும் மட்டுமே மீதமாயிருக்க தாயகம் மீண்டிருந்தார்கள்.

"ஆம், நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம், ஆனால் எங்கள் கெளரவத்தை மட்டும் இழக்கவில்லை" என்று 22 வயது நிரம்பிய இளைஞர் ஒருவருடன் அகதிகள் முகாமில் பேசும்போது கூறினார். கண்டியில் நெடுங்காலமாக வாழ்ந்துவந்த கதிர்காமர் குடும்பத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் தொடர்ந்து பேசும்போது, "எனது பாட்டி எங்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கேதான் அவரது சகோதரி இருக்கிறார். யாழ்ப்பாணத்திற்கு நான் செல்வது இதுவே முதல்முறையாகும். எங்கள் வேர்களைத் தேடி நாங்கள் செல்கிறோம்" என்று அவர் கூறினார். பின்னாட்களில் அவர் டெலோ அமைப்பில் இணைந்துவிட்டதாக நான் அறிந்துகொண்டேன்.

குமார் நடராஜா அநுராதாபுரத்தில் வசித்து வந்தவர். பெளத்தர்களின் புனித நகரில் பலகாலம் வாழ்ந்துவந்த அவரது பாட்டனார் ஒரு வழக்கறிஞராக வேலைபார்த்துவந்தவர். அவர்களுக்கென்று கடையொன்றும், அழகிய வீடும், தோட்டம் செய்யும் காணியும் அங்கிருந்தன. "தெய்வாதீனமாக எமது உறவினர்கள் இப்போதும் யாழ்ப்பாணத்தில் வாழ்கிறார்கள். நாங்கள் அங்கு சென்று அவர்களுடன் தங்கப்போகிறோம்" என்று அவர் கூறினார். ஆனால் அவர் யாழ்ப்பாணத்தில் அதிக காலம் வாழவில்லை. அவர் ஈரோஸ் இயக்கத்தில் இணைந்துகொண்டார்.

கதிர்காமர், குமார் நடராஜா போன்ற இளைஞர்கள் ஒருபோதுமே யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருக்காதவர்கள். அவர்கள் சிங்களவர்கள் மத்தியில் இலங்கையின் தென்பகுதிகளில் பிறந்தவர்கள். அங்கேதான் தமது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர்கள். தெற்கோடு மனதளவில் தம்மை இணைத்துக்கொண்டவர்கள். ஆனால், இவர்களைத்தான் சிங்களவர்கள் பலவந்தமாக அவர்கள் தமது வாழிடங்கள் என்று நினைத்து இருந்தவிடங்களில் இருந்து பிடுங்கி, வடக்குத்தான் உங்களின் தாயகம், அங்கேயே ஓடிப்போங்கள் என்று ஒரு இரவிற்குள் துரத்தியடித்தார்கள்.

இந்தச் சூழ்நிலையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக இருந்த பேராசிரியர் கே. கைலாசபதி சிறப்பாகச் சொல்லியிருந்தார்,

"தாம் நெடுங்காலமாக வாழ்ந்துவந்த இடங்களிலிருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக, வன்முறைகளூடாகப் பிடுங்கி எறியப்பட்டமையானது அவர்களின் மனங்களிலும், உடலிலும் அவர்கள் தனியான தேசத்தைச் சேர்ந்தவர்கள், அந்தத் தனியான தேசம் நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது. தமிழ்த் தேசியத்திற்கு ஜெயவர்த்தன செய்த மிகப்பெரிய உதவியே இந்த வன்முறைகள். அன்றிலிருந்து தமிழர்களைப் பொறுத்தவரை இனிமேல் திரும்பிப் பார்த்து சமரசம் செய்வதற்கு இடமில்லையென்று ஆகிப்போயிற்று".

 வடக்குக் கிழக்கில் வாழ்ந்துவந்த இளைஞர்களும் தெற்கிலிருந்து துரத்தப்பட்டவர்களையொத்த கோபத்தினைக் கொண்டிருந்தனர். அவர்களின் இன கெளரவத்தினை இத்தாக்குதல்கள் காயப்படுத்தி விட்டிருந்தன. "சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்கி வருகிறார்கள், நாமும் இனிமேல் திருப்பித் தாக்க வேண்டும்" என்பதே ஜூலை இனக்கொலைக்கான அவர்களின் பதிலாக இருந்தது.

"தமிழ் இளைஞர்களின் மனோநிலை ஜூலைப் படுகொலைகளுக்குப் பின்னர் கடலளவு மாறிப்போயிற்று" என்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்பித்து வந்த பேராசிரியர் சிவத்தம்பி கூறினார். "தாக்குதல்களுக்கு முன்னர் போராளிகளின் தீரச் செயல்களை இளைஞர்கள் புகழ்ந்து பாராட்டிவந்தார்கள். ஆனால், போராளிகளுடன் இணையவேண்டும் என்கிற அவா அவர்களிடத்தில் அப்போது பெரிதாக இருக்கவில்லை. ஆனால், ஜூலை இனக்கொலைக்குப் பின்னர் அந்த நிலை மாறிப்போய்விட்டது. அவர்கள் தொடர்ந்தும் பார்வையாளர்களாக இருக்க விரும்பவில்லை. அவர்கள் ஆயுதப்போராட்டத்தின் பங்காளிகளாக மாற விரும்பினர்" என்றும் அவர் மேலும் கூறினார்.

ஆனால், வெளியாரின் உதவியில்லாமல் சிங்கள அரசை எதிர்த்துப் போராட முடியுமா என்கிற கேள்வி பல இளைஞர்களிடத்தில் இருந்தது. அதற்கு இரு காரணங்கள் அவர்களுக்கு இருந்தன‌. இந்தியாவின் உதவியினால் வங்கதேசப் போரில் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. வெளியாரின் உதவியின்மையினால் தெற்கின் ஜே.வி.பி யினரின் கிளர்ச்சி தோல்வியடைந்திருந்தது. ஆகவே, இந்தியா அயுதப் பயிற்சி வழங்கப்போவதாகத் தீர்மானித்தபோது அவர்கள் எதிர்பார்த்த வெளிநாட்டு உதவி  கிடைத்துவிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். ஆகவே பல நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் போராளி அமைப்புக்களில் இணையத் தொடங்கினார்கள்.

டெலோ அமைப்பு வேகமாக இயங்கத் தொடங்கியது. மினிபஸ் வண்டியொன்றினை வாடகைக்கு அமர்த்திக்கொண்ட டெலோ அமைப்பினர் யாழ்க்குடாநாடெங்கும் பயணித்து, "சிங்களவர்களை எதிர்த்துப் போராட விரும்புபவர்கள் எல்லாம் எங்களுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள். நாம் எமது வீரர்களை இந்தியாவுக்குப் பயிற்சிக்காக அனுப்பி வைக்கவிருக்கிறோம்" என்று ஒலிபெருக்கியில் அறிவித்தபடி வலம்வந்தார்கள்.

"அங்கு மிகவும் அவசரமான நிலைமை காணப்பட்டது. எமது வேண்டுகோளுக்கு இளைஞர்களிடையே இருந்து வந்த வரவேற்பினைப் பார்த்து நாம் அசந்துவிட்டோம்" என்று முன்னாள் டெலோ உறுப்பினர் ஒருவர் நினைவுகூர்ந்தார். பருத்தித்துறை ஹார்ட்லிக் கல்லூரியின் உயர்தர வகுப்பில் கற்றுக்கொண்டிருந்த அனைத்து மாணவர்களும் தம்முடன் வந்து இணைந்துகொண்டபோது தாம் அதிர்ந்துபோய் விட்டதாக அவர் கூறினார். 

ஈரோஸ் அமைப்பிடம் மினிபஸ் ஒன்றினை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளும் வசதிகள் இருக்கவில்லை. ஆகவே துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு யாழ்க்குடாநாடெங்கும் அது விநியோகித்து வந்தது.  "எல்லோரும் வந்து எங்களுடன் இணையலாம்" என்கிற டெலோவின் கொள்கையினை அது கைக்கொள்ளவில்லை. தமது அமைப்பிற்குரிய கொள்கையின் அடிப்படையிலேயே இளைஞர்களை அது சேர்த்துக்கொள்ள விரும்பியது. தம்முடன் இணையும் இளைஞர்கள் செயல்த்திறன் மிக்கவர்களாகவும், கொள்கையில் உறுதியானவர்களாக இருக்கவேண்டும் என்றும் அது எதிர்பார்த்தது.

இயக்கத்திற்குப் புதிதாக இளைஞர்களைச் சேர்க்கும் செயற்பாட்டில் புளொட் அமைப்பு சற்றுத் தாமதமாகவே இறங்கியது. தாம் அதுவரை கடைப்பிடித்துவந்த ஆட்சேர்ப்பிற்கான இயக்கவிதிகளை அது முற்றாகக் கைவிட்டு விட்டது. புளொட் அமைப்பில் எவரும் வந்து இணைந்துகொள்ளலாம் என்று அது அறிவித்தது. புளொட் அமைப்பிற்கு பணம் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. கிளிநொச்சி வங்கிக்கொள்ளையின் பின்னர் அவ்வமைப்பிடம் பெருமளவு பணம் கையிருப்பில் இருந்தது.

ஆட்சேர்ப்புச் செயற்பாட்டில் இறுதியாக இறங்கிய அமைப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகும். அவ்வமைப்பு ஐந்து போராளிக் குழுக்களிலும் மிகவும் வறியதாக அன்று இருந்தது. "எங்களிடம் பத்து ரூபாய்கள் கூட இருக்கவில்லை" என்று பின்னாட்களில் ஈ.பி.டி.பி அமைப்பில் சேர்ந்துகொண்ட ரமேஷ் நடராஜா என்னிடம் தெரிவித்தார். போராளிகளை இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அனுப்புவது செலவு மிகுந்த ஒரு விடயம் என்று அவர் கூறினார். இதுகுறித்து சுவாரசியமான விடயம் ஒன்றினையும் அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

இந்தியாவின் பயிற்சித் திட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பும் சேர்த்துக்கொள்ளப்பட்டபோது யாழ்ப்பாணத்து போராளிகளுடன் தொடர்புகொண்ட பத்மநாபா உடனடியாக ஆயிரம் இளைஞர்களை தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு கோரியிருந்தார். மேலும், "ஆட்களைச் சேர்ப்பது குறித்து நீங்கள் யோசிக்கவேண்டாம், மட்டக்களுப்பு அலுவலகத்தினர் அதனைச் செய்து தருவதாக எனக்கு உறுதியளித்திருக்கின்றனர்" என்று அவர் கூறினார்.

ஆனால், தமது கவலையெல்லாம் வேறாக இருந்ததாக ரமேஷ் என்னிடம் கூறினார். சேர்க்கப்பட்ட இளைஞர்களை யாழ்ப்பாணத்தில் தங்கவைத்து, பராமரித்து, பின்னர் பாதுகாப்பாக படகுகளில் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கவேண்டிய தேவை இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் பெருமளவு பணம் தேவை.

"இளைஞர்களை படகு ஒன்றில் அனுப்பிவைப்பதற்கு குறைந்தது 25,000 ரூபாய்களாவது வேண்டும். படகுக்கான வாடகை மட்டுமே 15,000 ரூபாய்கள். அவ்வளவு பணத்திற்கு நாம் எங்கே போவது? ஆகவே, கொள்ளையிடுவதென்று முடிவெடுத்தோம்" என்று கூறினார் ரமேஷ். 

 முதலாவது கொள்ளைச்சம்பவம் யாழ்ப்பாணத்தின் பிரதான தபாலகத்தில் நடத்துவதென்று முடிவாகியது. "தபாலகத்தில் பணம் இருப்பதை நாம் அறிந்துகொண்டோம். ஆனால், தபாலகத்திற்கு மிக அண்மையாக யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையம் அமைந்திருந்தது. ஆனால், எமக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எம்மில் எழுவர் கால்நடையாக தபாலகத்திற்குச் சென்று அங்கிருந்த தபால் அதிபரையும் ஏனைய ஊழியர்களையும் அச்சுருத்தினோம். அங்கிருந்த பணத்தினை ஐம்பது சிறிய பொதிகளாக அவர்கள் கட்டி வைத்திருந்தார்கள். அந்தப் பொதிகளை அவிழ்த்து அவற்றிலிருக்கும் பணத்தினை எம்மிடம் கையளிக்குமாறு ஊழியர்களை நாம் கோரினோம். பணத்தைக் கொள்ளையிட்டுச் செல்ல சுமார் 30 நிமிடங்கள் எடுத்தது" என்று அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் தபாலகத்தின் கொள்ளைச் சம்பவத்தின் வெற்றியினால் குதூகலமடைந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் சில நாட்களின் பின்னர் கார் ஒன்றைக் கடத்திக்கொண்டு கொக்குவில், பண்டத்தரிப்பு மற்றும் உரும்பிராய் ஆகிய இடங்களில் இயங்கிவந்த தபாலகங்களைக் கொள்ளையிட்டனர். அதன் பின்னர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை அவர்கள் கொள்ளையிட்டனர். இவற்றில் இருந்து சேர்த்துக்கொண்ட பணத்தின் மூலம் தமது இயக்கத்தில் சேர்ந்த அனைவரையும் இந்தியாவுக்குப் பயிற்சிக்காக அனுப்பி வைத்தனர்.

அந்நாட்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நகைச்சுவையான சம்பவங்கள் குறித்து அவ்வப்போது அவர்கள் பேசிக்கொள்வார்கள். 

உதாரணத்திற்கு, டெலோ அமைப்பில் இணைந்துகொண்ட ஒரு இளைஞருக்கு "தேங்காய்" என்று புனைபெயர் இடப்பட்டது. அவரது தாயார் சமைப்பதற்கு தேங்காயொன்றினை வாங்கிவரும்படி அவரை கடைக்கு அனுப்பியிருந்தார். கடைக்குச் செல்லும் வழியில் தன்னுடன் கூடக் கற்கும் சில நண்பர்களை அவர் சந்தித்தார். அவர்கள் இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் செல்வதாகக் கூறவே, அவரும் அவர்களுடன் இணைந்துகொண்டார்.

 இன்னும் ஒரு சுவாரசியமான சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது. ஈ.பி.ஆர் எல்.எப் அமைப்பிற்காக தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், அவ்வியக்கத்தின் இடைத்தங்கல் முகாமில்  சுவரொட்டியொன்றினை வரைந்துகொண்டிருந்தார். அதில், "பிரபாகரன் நீடூழி வாழ்க" என்று எழுதப்பட்டிருந்தது. அதனை அவதானித்த முகாமின் மேற்பார்வையாளர் அந்த இளைஞனிடம், "தோழர், பிரபாகரன் நீடூழி வாழவேண்டும் என்று நீங்கள் ஏன் வாழ்த்துகிறீர்கள்?" என்று அந்த இளைஞரைக் கேட்டிருக்கிறார். அதற்கு அப்பாவித்தனமாகப் பதிலளித்த அந்த இளைஞன், "ஏன், எமது இயக்கத்தின் தலைவர் அவர் இல்லையா?" என்று கேட்டிருக்கிறார்.

பயிற்சிக்கென்று அழைத்துச் செல்லப்பட்ட சில இளைஞர்களுக்கு தாம் இணைந்துள்ள இயக்கத்தின் விபரங்களோ அல்லது அன்றிருந்த இயக்களுக்குள் இருந்த முரண்பாடுகள் பற்றிய விபரங்களோ தெரிந்திருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் லேக்ஹவுஸ் பத்திரிக்கை நிருபர்களாகப் பணிபுரிந்த நண்பர்கள் இவ்வாறான பல சுவாரசியமான தகவல்களை எனக்கு அனுப்பியிருந்தார்கள். அந்நாட்களில் ஒவ்வொரு போராளி அமைப்பும் வாய்வழித் தொடர்பாடல் மூலமே தமிழ்நாட்டிற்குச் செல்லவிருக்கும் படகுகள், இடம், நேரம் பற்றிய விபரங்களை தமது உறுப்பினர்களுக்கு வழங்கி வந்தார்கள். இயக்கங்களால் அறிவிக்கப்பட்ட இடத்திற்கு, அறிவிக்கப்பட்ட நேரத்திற்குச் செல்லும் இளைஞர்கள், கடற்கரையிலிருந்து இடுப்பளவு நீர்மட்டம் வரை ஓடிச்சென்று தயாராக நிற்கும் படகுகளில் ஏறிக்கொள்ள வேண்டும். அப்படி ஓடிச்செல்லும்போது அது எந்த இயக்கத்தின் படகென்று ஆராய்ந்து பார்க்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. அவர்களைப்பொறுத்தவரை எல்லா இயக்கங்களும் தமிழீழத்திற்காகவே போராடுவதாக நினைத்தார்கள். 

ஒரு இளைஞன் இற‌ப்பர்ச் செருப்புகளை அணிந்தவாறு ஓடிக்கொண்டிருந்தான். அவன் ஓடிச்சென்று தடாலென்று படகில் ஏறிக்கொண்டபோது முழுப்படகுமே நீரில் நனைந்துவிட்டது. ஆனால், அந்த இளஞனின் செருப்பு கழன்று கடலில் மிதந்துகொண்டு செல்வதைக் கண்ட அவன், "என் செருப்பு, என் செருப்பு, என் செருப்பு" என்று அழத் தொடங்கினான். அவனது அழுகையினைக் கண்ட படகிலிருந்த ஏனைய இளைஞர்கள் சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

பெரும்பாலான போராளி அமைப்புக்களின் தலைவர்கள், எவர் இணைய விரும்பினாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று எடுத்த முடிவு பிழையானது என்று ரமேஷ் என்னிடம் வருத்ததுடன் கூறினார். "தமது இயக்கமே மிகப்பெரியது என்று காட்டி தில்லியின் பாராட்டுதல்களைப் பெறுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. எண்ணிக்கையினை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிய அவர்கள் தமது இயக்கத்தில் இணையும் இளைஞர்களின் தகுதிபற்றி அறிய விரும்பியிருக்கவில்லை. இந்தவகையான ஆசைக்குள் அகப்படாமையினாலேயே பிரபாகரனினால் இன்றிருக்கும் நிலையினை அடைய முடிந்தது" என்று என்னிடம் கூறினார்.

பிரபாகரன் மட்டுமே தனது இயக்கத்தில் இணையும் இளைஞர்கள் பற்றி அதிக சிரத்தை எடுத்துக்கொண்டார். இயக்கத்தின் அடிப்படை விதிகளை எச்சந்தர்ப்பத்திலும் தளர்த்தவோ, விட்டுக்கொடுக்கவோ அவர் விரும்பவில்லை. அவரது கடுமையான நடைமுறைகள் பற்றி அவரிடம் வினவியபோது, "50 இலட்சிய உறுதியும், கட்டுக்கோப்பும் கொண்ட போராளிகள், அலைந்துதிரியும் 500 பேரை விட திறன் கொண்டவர்கள்" என்று கூறினார்.

பிரபாகரன் ஆட்சேர்ப்பில் காட்டிய நடைமுறையே இலட்சிய உறுதியும், செயற்திறனும், துணிவும், தலைமை மீதான அசைக்க முடியாத விசுவாசமும், சுய ஒழுக்கமும் கொண்ட போராளிகளை உருவாக்க வழிவகுத்ததோடு, ஏனைய இயக்கங்கள் அனைத்திலுமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை மக்கள் வேறுபடுத்திப் பார்க்கவும் வழிசமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.