Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தமிழர் தொடர்பான இந்தியக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம்

டெசோ அமைப்பும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்தியா இராணுவ ரீதியில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அதே நேரம், தமிழர் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பாரிய மாற்றம் ஒன்று உருவாகத் தொடங்கியிருந்தது. ரஜீவுடனான தனது முதலாவது சந்திப்பிலேயே இந்த மாற்றத்திற்கான அடித்தளத்தினை ஜெயார் இட்டிருந்தார். இந்திரா காந்தியின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த ஜெயவர்த்தன, தன்னை இந்தியாவிந்தும், நேரு குடும்பத்தினதும், இந்திய மக்களினதும்  உண்மையான நன்பன் என்றும், பெளத்தத்தினை கடைப்பிடிக்கும் நேர்மையான முதிர்ந்த அரசியல்வாதியென்றும், இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களின் நலன்களை, குறிப்பாக தமிழ் மக்களின் நலன்களைக் காப்பதில் மிகுந்த அக்கறை கொண்ட அரசியல்த் தலைவர் என்றும் காட்டுவதில் ஈடுபட்டிருந்தார்.

 ரஜீவ் காந்தியுடனான தனது முதலாவது சந்திப்பில் தான் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவன் என்றும், நேருவின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவன் என்று ஜெயவர்த்தன கூறினார்.

1941 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஒழுங்குசெய்திருந்த ராம்கார் நிகழ்விலும் அவர் பங்குபற்றியிருந்தார். ஜவர்ஹல்லால் நேரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளை அவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்கு நேரு அனுப்பிய பதில்க் கடிதங்களையும் நேரு தொடர்பான ஆவணக் காப்பகத்திற்கு ஜெயார் அனுப்பிவைத்திருந்தார்.

ரஜீவுடன் பேசிய ஜெயார், தமிழர் பிரச்சினை தொடர்பாக சாதகமான தீர்வொன்றினை வழங்க தான் விருப்பம் கொண்டிருப்பதாகவும், ஆனால் தன்னைச் சுற்றியிருக்கும் தீவிரவாத அமைச்சர்கள் அதற்குத்தடையாக இருப்பதாகவும் கூறினார். மேலும், தமிழ் ஆயுதக் குழுக்கள் நடத்திவரும் பயங்கவாதத் தாக்குதல்கள் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கும் தனது முயற்சிகளை இக்கட்டான நிலைமைக்குத் தள்ளியிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு ஏதுவான நிலைமையினை இலங்கையில் உருவாக்குவதற்கு ரஜீவ் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டிக்கொண்டார்.

மேலும், ரஜீவின் தாயாரான இந்திரா காந்தியும் தமிழ்த் தீவிரவாதிகளால் சூழப்பட்டிருந்ததாக ரஜீவிடம் கூறினார் ஜெயவர்த்தன. அதனாலேயே தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திரா காந்தி பக்கச்சார்பான நிலையினை எடுத்திருந்தார் என்றும் ஜெயார் கூறினார். இந்தியாவின் இந்த பக்கச்சார்பான நிலைப்பாட்டிற்கு ஒற்றைக் காரணமாக பார்த்தசாரதியை ஜெயார் குற்றஞ்சாட்டினார். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் பார்த்தசாரதி வகித்த பாகம் தொடர்பாக சிங்கள மக்கள் பலத்த சந்தேகங்களைக் கொண்டிருப்பதாகவும் அவர் ரஜீவிடம் கூறினார். ஆகவே, புதிய இந்திய அதிகாரிகளை சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர் பரிந்துரை செய்தார். மேலும், இந்தியா இராணுவ ரீதியில் இலங்கையில் தலையிடலாம் என்கிற அச்சம் காரணமாக இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினூடாக தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது கடிணமானதாக மாறியிருப்பதாகவும் அவர் கூறினார்.

ரஜீவிடம் மேலும் பேசிய ஜெயவர்த்தன, இனப்பிரச்சினைக்கு நீதியானதும், இறுதியானதுமான தீர்வொன்றினைக் காண்பதற்கு தான் உண்மையிலேயே அக்கறை கொண்டிருப்பதகாவும், இதனைச் செய்வதற்கு இந்தியா தற்போது எடுத்திருக்கும் தமிழருக்குச் சார்பான நிலையிலிருந்து விலகி, பக்கச்சார்பின்றிச் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தியாவுடனான உறவினைப் புதுப்பிக்க தான் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசியலிலும், இராஜதந்திரத்தில் கற்றுக்குட்டியாகத் திகழ்ந்த ரஜீவ் காந்தி ஜெயார் விரித்த வலையில்  அகப்பட்டுக்கொண்டதுடன், ஜெயாருக்கு நான்கு வாக்குறுதிகளையும் அளித்தார்.

1. இந்தியா ஒருபோதும் இலங்கையினை ஆக்கிரமிக்காது.

2. பேச்சுவார்த்தைகளில் தூதராகச் செயற்படும் பார்த்தசாரதியை நீக்கிவிட்டு வேறொருவரை அமர்த்த இந்தியா விருப்பம் கொண்டிருக்கிறது.

3. இலங்கையுடனான உறவைப் புதுப்பிக்க இந்தியா நாட்டம் கொண்டிருக்கிறது.

4. இலங்கையில் இறையாண்மையும், ஒருமைப்பாடும் இந்தியாவினால் பாதுகாக்கப்படும்.

ஆனாலும், தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலேயே தீர்வு அமைந்திருக்க வேண்டும் என்று ஜெயவர்த்தனவிடம் அழுத்தமாகக் கூறினார் ரஜீவ். அவ்வாறு இல்லாதபட்சத்தில், இனப்பிரச்சினை நீண்டு சென்று, இறுதியில் இலங்கை பிளவுபடுவது நடக்கும் என்றும் ஜெயாரை அவர் எச்சரித்தார். 

அதற்குப் பதிலளித்துப் பேசிய ஜெயார், "உங்களுக்கும் அருகிலிருக்கும் சிறிய நாடுகளின் நம்பிக்கையினை பெற்றுக்கொள்ள முயலுங்கள், நீங்கள் இளமையானவர், பெரியதொரு நாட்டிற்குத் தலைவராக வந்திருக்கிறீர்கள், நீங்கள் நிச்சயம உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள், உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று கூறினார்.

  • Thanks 2
  • Replies 619
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தமிழருக்காக இலங்கையுடன் முரண்பட முடியாது என்று அமிர்தலிங்கத்திடம் கூறிய ரஜீவ் காந்தி
  

1984 ஆம் ஆண்டு கார்த்திகை 1 ஆம் திகதி இந்தியாவின் பிரதமராக ரஜீவ் பதவியேற்றுக்கொண்டார். 1944 ஆம் ஆண்டில் பிறந்த ரஜீவ் காந்தி, 1980 ஆம் ஆண்டு ஆனி 23 ஆம் திகதி அவரது சகோதரர் சஞ்ஜய் காந்தி விமான விபத்தில் இறக்கும்வரைக்கும் அரசியலில் இருந்து விலத்தியே வைக்கப்பட்டிருந்தார். சஞ்ஜய் காந்தியின் இறப்பினையடுத்து, தனது தாயாரான இந்திரா காந்திக்கு அரசியலில் பக்க பலமாக இருக்கும்பொருட்டு ரஜீவ் அரசியலுக்குள் நுழைந்தார். 1981 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவான ரஜீவ், தனது தாயாரை அடுத்து நாட்டின் பிரதமாராகவும், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவியேற்றார்.

கார்த்திகை 4 ஆம் திகதி தனது அமைச்சரவையினைத் தேர்வுசெய்த ரஜீவ், தனது தாயாரின் கீழ் அமைச்சர்களாகவிருந்த பலரைத் தனது அமைச்சரவையிலும் அமர்த்திக்கொண்டார். தனது தாயாரின் மறைவினால் ஏற்பட்ட அனுதாபத்தினை தனது அரசியல் இலாபத்திற்காகக்ப் பாவிக்க நினைத்த அவர், பாராளுமன்றத் தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார். மார்கழி 24 முதல் 28 வரையான 5 நாட்கள்  தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், 538 ஆசனங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 409 ஆசனங்களை காங்கிரஸ் கட்சி தனதாக்கிக் கொண்டது.

தை மாதம் 2 ஆம் திகதி ரஜீவின் வெற்றியை வாழ்த்தி, ஈழத்தமிழர் சார்பாக அவருக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பினார் அமிர்தலிங்கம். மேலும் தனது கடிதத்தில், இலங்கையில் வாழும் மூன்று மில்லியன் தமிழர்களினதும் வாழ்வு கடந்த இரு வாரங்களில்  மிகவும் இக்கட்டான நிலைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும், ஜெயவர்த்தன திடீரென்று சர்வகட்சி மாநாட்டினை முடித்துக்கொள்வதாக அறிவித்துக்கொண்டதையடுத்து, அவரது கட்சியினரும் ஏனையோரும் தான் முன்வைத்த அரசியல்த் தீர்விற்கான பரிந்துரைகளை முற்றாக உதாசீனம் செய்திருப்பதாகவும் கூறியிருந்தார். இதனால் கடந்த ஒன்றைரை வருடங்களாக இந்தியா முன்னெடுத்து வந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

"தமிழர் தாயகத்தில் இன்று கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதத்தினை முடிவிற்குக் கொண்டுவர கிடைக்கப்பெற்றிருந்த சந்தர்ப்பமும் இதனால் இல்லாதுபோயிருக்கிறது" என்றும் அமிர்தலிங்கம் கூறினார். "முன்னாள்ப் பிரதமர் இந்திராவின் உண்மையான அக்கறையே ஈழத்தமிழர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த இனக்கொலையினை முடிவிற்குக் கொண்டுவரும் அரசியல்த் தீர்வு முயற்சிகளை முன்னெடுக்க ஏதுவாக்கியிருந்தது. ஈழத்தமிழரின் பிரச்சினையினைத் தீர்ப்பது தொடர்பாக நீங்கள் எடுத்திருக்கும் உறுதிப்பாட்டினையும், தமிழர்கள் மீதான அட்டூழியங்களைக் கண்டிக்கும் முகமாக நீங்கள அண்மையில் பேசிய பேச்சுக்களையும் நாங்கள் நன்றியுடன் வரவேற்கிறோம். இந்தியாவினால் பேச்சுவார்த்தைகளுக்காக வழங்கப்பட்ட உதவிகளையும் தமிழர்களும், அரசாங்கமும் ஏற்றுக்கொண்டிருந்த நிலையில், இன்று இலங்கை அரசு நடந்துகொள்ளும் விதம் இந்தியாவின் உதவிகளை உதாசீனம் செய்வதாக உள்ளது. எமக்கு உதவுவதற்கு இந்தியாவைத் தவிர வேறு எவரும் இல்லை. உதவியற்ற தமிழர்கள் இன்று இந்தியாவின் தயவினால் தாம் முகம் கொடுத்துவரும் இனக்கொலையில் இருந்து தம்மைக் காப்பற்றிக்கொள்ள வேண்டுமென்று இரைஞ்சுகின்றனர்" என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், பார்த்தசாரதியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்ட அமிர்தலிங்கம், புதிய அரசாங்கத்தில் தமிழர் பிரச்சினை தொடர்பான நிலைப்பாடு என்னவென்பதையும் அறிய முற்பட்டார். இதனையடுத்து ரஜீவ் காந்தியுடனான சந்திப்பொன்றிற்காக புதுதில்லி வருமாரு அமிர்தலிங்கத்திற்கு அழைப்பு விடுத்தார் பார்த்தசாரதி. தை 13 ஆம் திகதி முன்னணியின் தலைவர்கள் பார்த்தசாரதியைச் சந்தித்தனர். அவர்களுடன் பேசிய பார்த்தசாரதி, இலங்கைத் தமிழர் தொடர்பான தனது அரசாங்கத்தின் புதிய கொள்கையினை ரஜீவ் காந்தி வரைந்துகொண்டிருப்பதாகக் கூறினார். புதிய கொள்கையின் வரையறைகள் பின்வருமாறு அமையும் என்று அமிர்தலிங்கத்திடம் அவர் மேலும் குறிப்பிட்டார்.

1. இலங்கையுடனான உறவில் கட்டாயப்படுத்தலைக் கைவிட்டு இணக்கப்பாடான போக்கினை இந்தியா கடைப்பிடிக்கும்.

2. பேச்சுவார்த்தைகளில் தமிழ் ஆயுத அமைப்புக்களையும் உள்வாங்கிக்கொள்ளுதல்.

3. பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கும் இடையே யுத்த நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்துதல்.

4. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்ய முயலுதல்.

இந்தியாவின் புதிய கொள்கை தொடர்பான தனது அவநம்பிக்கையினை அமிர்தலிங்கம் பார்த்தசாரதியிடம் தெரிவித்தார். ஜெயவர்த்தனவை நம்பமுடியாது என்று பார்த்தசாரதியை அமிர் எச்சரித்தார். அதற்குப் ப்தைலளித்த பார்த்தசாரதி தானும் ஜெயவர்த்தனவை நம்பவில்லையென்றும், இதனை ரஜீவிடம் தான் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், தனது ஆலோசனைகளை ரஜீவ் முற்றாகப் புறக்கணித்து வருவதாகவும், விரைவில் தன்னை அவர் ஓரங்கட்டி விடுவார் என்று தான் நம்புவதாகவும் அமிர்தலிங்கத்திடம் கூறினார் பார்த்தசாரதி. ஆகவே, ரஜீவை நேரில் சந்தித்து தனது அவநம்பிக்கைகள் குறித்து அமிர் பேசவேண்டும் என்று பார்த்தசாரதி கேட்டுக்கொண்டார்.

மறுநாள் ரஜீவ் காந்தியைச் சந்தித்தார் அமிர்தலிங்கம். அமிருடன் பேசும்போது, தான் இந்தியாவின் அயல் நாடுகள் அனைத்தோடும் சிநேகபூர்வமான உறவைப் பேண விரும்புவதாகவும், தமிழருக்காக தான் இலங்கையைப் பகைத்துக்கொள்ள முடியாதென்றும் கூறினார். "ஜனாதிபதி ஜயவர்த்தனவுடன் கடுமையான பேரம்பேசலுக்கு தயாராகுங்கள்" என்று அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் கூறினார் ரஜீவ் காந்தி. அதன்பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் பேசிய அமிர்தலிங்கம், இலங்கையில் மேலும் அப்பாவித்தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தான் ரஜீவைக் கேட்டுக்கொண்டதாகக் கூறினார். 

ரஜீவ் காந்திக்கும் அமிர்தலிங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி கொண்டது.  தனது அதிருப்தியினை இந்தியாவுக்கும் அது தெரியப்படுத்தியது. அரச பேச்சாளரான ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், "நாட்டினை கூறுபோடும் கனவுடன் திரியும் சிலர், கடந்த ஒன்றரை வருடங்களாக சர்வகட்சி மாநாட்டில் எட்டப்பட்ட முடிவுகளை புறக்கணித்துவிட்டு, தமது திட்டத்தினை நிறைவேற்ற வெளிநாட்டு அரசுகளுடன் பேசி வருகின்றனர். இதனை நாம் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறோம்" என்று கூறினார்.

இந்த வாரத்தில் தமிழ் ஆயுத அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் பார்த்தசாரதி சந்தித்தார். இலங்கை பிரச்சினை தொடர்பாக இந்தியக் கொள்கையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றம் குறித்து அவர்களை எச்சரித்தார். என்னுடன் பேசிய ஈரோஸ் அமைப்பின் சங்கர் ராஜி, தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கான உதவியினை இந்தியா வெகு விரைவில் நிறுத்திக்கொள்ளும் என்றும், ஆகவே அனைத்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து பொதுவான முன்னணியொன்றினை அமைப்பதன் மூலம் தமது கோரிக்கைகளை பலமாக முன்வைக்கலாம் என்றும் கூறியதாக என்னிடம் தெரிவித்தார்.

1985 ஆம் ஆண்டு தை மாதம் பார்த்தசாரதியுடனான தனது சந்திப்புக் குறித்து பாலசிங்கம் தான் எழுதிய  போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தை மாதம் 13 ஆம் திகதி அமிர்தலிங்கத்திற்கும், பார்த்தசாரதிக்கும் இடையிலான சந்திப்பு முடிவடைந்த பின்னரே ஆயுத அமைப்புக்களின் பிரதிநிதிகளை பார்த்தசாரதி சந்தித்தார் என்று பாலசிங்கம் எழுதுகிறார்.

"1985 ஆம் ஆண்டு தை மாதத்தில் பார்த்தசாரதியை தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவர் தோற்றுப்போனவராகவும், உற்சாகமின்றியும் காணப்பட்டார். இந்திரா காந்தியின் அகால மரணமும், ரஜீவின் எதேச்சதிகாரமான, அலட்சியமானபோக்கும் வயது முதிர்ந்த அந்த இராஜதந்திரியை வெகுவாகப் பாதித்திருந்தது.ரஜீவின் அரசாங்கம் கைக்கொள்ளவிருக்கும் புதிய கொள்கை தொடர்பாக எனக்குப் புரியப்படுத்த அவர் முயன்றார்.  கட்டாயப்படுத்தலின்றி, இணக்கப்பாடான போக்கையே இலங்கையுடன் இந்தியா இனிக் கடைப்பிடிக்கும் என்று அவர் என்னிடம் தெரிவித்தார். ஜெயவர்த்தனவின் வசீகரமான பேச்சுக்களால் கவரப்பட்ட ரஜீவ் காந்தி சமாதான வழிகளில் தமிழரின் பிரச்சினையினைத் தீர்க்கலாம் என்று வெகுவாக நம்பினார். பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், பேரம்பேசலினூடாகவும் இதனைச் செய்ய அவர் உறுதிபூண்டார். பேச்சுக்கள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வு காணப்பட்டவே இந்தியா விரும்புவதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். மேலும், போராளிகளுக்குப் பயிற்சியளிக்கும் இந்திராவின் இரகசியத் திட்டம் முற்றாகக் கைவிடப்படுவதோடு, பேச்சுவார்த்தைகளுக்கு முன்னோடியாக யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஜெயவர்த்தனவின் தந்திரமான, சூட்சுமமான, குள்ளநரித்தனத்தை ரஜீவிடம் புரியவைப்பதில் தான் தோற்றுப்போய்விட்டதாக என்னிடம் கூறி அவர் வருத்தப்பட்டார். இறுதியாக, ஈழத்தமிழருக்கான நீதியான தீர்வொன்றைப் பெற்றுத்தருவதிலிருந்து தான் விலக்கப்படுவது உறுதி என்றும் தனிப்பட்ட ரீதியில் என்னிடம் அவர் கூறினார். தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, ஒரு முன்னணியாக தமது கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம், நடக்கப்போகும் மிகவும் சவாலான சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு முகம்கொடுக்க ஆயத்தமாகுமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். ரஜீவின் நிர்வாகம் தொடர்பான புதிய கொள்கைகளை இந்தியாவின் புலநாய்வுத்துறை அதிகாரிகள் வெகு விரைவில் போராளி அமைப்புக்களுக்குப் புரியவைப்பார்கள் என்றும் அவர் என்னிடம் கூறினார்".

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உத்தேச பேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே தனது பக்க நிலைப்பாட்டினை இந்தியாவுக்கு தெரிவித்த ஜெயார்

large.Parthasarathi.jpg.a2c27830dfe45b6c4790aa7feb84cc53.jpg

கோபாலசாமி பார்த்தசாரதி

இந்தியாவின் கொள்கை மாற்றம் குறித்து பிரபாகரன் அனுமானித்திருந்தார் என்று எழுதும் பாலசிங்கம், அதனாலேயே பாரத்தசாரதி தன்னிடம் கூறிய விடயங்களை பிரபாகரனிடம் தான் விபரித்தபோது அவர் அதிர்ச்சியடையவில்லை என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.  ஆனால், யுத்தநிறுத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்த பிரபாகரன், புதிய தாக்குதல்கள் குறித்துச் சிந்தித்து வந்தார். இவ்வாறு பிரபாகரனால் திட்டமிடப்பட்ட தாக்குதல்களில் முதலாவது கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலாகும். இது குறித்து மேலே பார்த்தாயிற்று. அடுத்த தாக்குதல் யாழ்ப்பாணத்தின் பிரதான பொலீஸ் நிலையம் மீதானது. இது குறித்து இனிவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

அமிர்தலிங்கத்துடனான தனது சந்திப்பு நிறைவடைந்து நான்கு நாட்களின் பின்னர், தை மாதம் 18 ஆம் திகதி (1985), இந்தியாவிற்கான இலங்கையின் தூதுவர் பேர்ணாட் திலகரத்னவை தனது அலுவலகத்திற்கு  அழைத்த ராஜீவ் காந்தி, இலங்கையின் இனப்பிரச்சினையினைத் தீர்த்துவைக்க இந்தியா விருப்பம் கொண்டிருப்பதாகக் கூறினார். ஆகவே, ஜெயவர்த்தனவுடன் இதுகுறித்து பேசுவதற்கு சந்திப்பொன்றினை ஒழுங்குசெய்யுமாறு அவர் திலகரத்னவைக் கேட்டுக் கொண்டார். இச்சந்திப்புக் குறித்து ஜெயவர்த்தன அறிந்துகொண்டபோது அதனைத் தவிர்க்க முடிவுசெய்தார். ஆகவே, லலித் அதுலத் முதலியை இலங்கை அரசாங்கத்தின் விசேட தூதுவர் என்கிற பெயரில் இச்சந்திப்பில் கலந்துகொள்ள அனுப்புவதென்று முடிவெடுத்தார். இச்சந்திப்பு 1985 ஆம் ஆண்டு மாசி மாதம் 13 ஆம் திகதி தில்லியில் நடைபெற்றது. அந்த நாளினை இராணுவம் மீது பாரிய தாக்குதல் ஒன்றிற்கான நாளாக பிரபாகரன் குறித்துக்கொண்டார். 

ரஜீவுடன் சந்திப்பொன்றிற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட நாளான தை மாதம் 18 ஆம் திகதியிலிருந்து லலித்தை ரஜீவ் சந்தித்த நாளான மாசி மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியை  இந்தியாவின் சமாதானத் தூதுவர் பார்த்தசாரதியை விமர்சிக்கவும், மாகாணசபை முறைமையினைக் கோரிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை அரசியல் ரீதியாகப் பலமிழக்கப் பண்ணும் கைங்கரியங்களிலும் ஜெயவர்த்தன ஈடுபடலானார்.

பார்த்தசாரதி மீதான விமர்சனத்தை முன்வைத்த அரச ஊடகங்கள், அவர் ஒரு தமிழர் என்பதால், தமிழர்களுக்குச் சார்பாக நடக்கிறார் என்றும், அவரது மத்தியஸ்த்தத்தினை சிங்களவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் கூறத் தொடங்கின. மேலும், மாவட்ட சபைகளுக்கு மேலதிகமான எந்தத் தீர்வையும் தமிழர்களுக்கு வழங்கச் சிங்களவர்கள் தயாரில்லை என்று அவை எழுதிவந்தன. பிரதமர் பிரேமதாசா, "மாவட்ட சபைகளே, அதற்கு மேல் எதுவும் இல்லை" என்கிற பிரச்சாரத்தைத் தொடர்ச்சியாக நடத்தி வந்தார்.

 நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் தமது பக்க கோரிக்கையாகவும், தீர்வாகவும் இவற்றை இந்தியாவுக்கு மறைமுகமாகத் தெரிவிக்க இதனை இலங்கையரசு செய்திருந்தது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசியல் கற்றுக்குட்டியான ரஜீவை தமது வலைக்குள் வீழ்த்திய ஜெயவர்த்தனவும் லலித் அதுலத் முதலியும்

ரஜீவ் காந்திக்கும் லலித் அதுலத் முதலிக்குமிடையிலான சந்திப்பு நடைபெறவிருந்த நாளான மாசி மாதம் 13 ஆம் திகதி புலிகள் நடத்திய கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல் அவர்கள் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியளிக்கவில்லை. தாக்கிவிட்டு மறையும் உத்தியை அதுவரை காலமும் கடைப்பிடித்துவந்த போராளிகள், பலப்படுத்தப்பட்ட முகாம் ஒன்றினை நேரடியாகத் தாக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதை ஜெயார் உணர்ந்துகொண்டபோதிலும், இத்தாக்குதல் பிரபாகரன் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றிருக்கவில்லை. இத்தாக்குதலின் மூலம் அவர் அடைய எதிர்ப்பார்த்த இலக்கினை அவர்களால் அடைய முடியவில்லை. இத்தாக்குதலின் மூலம் கொக்கிளாய் முகாமினை முற்றாக அழித்துவிட பிரபாகரன் திட்டமிட்டிருந்தார். ஆகவே இத்தாக்குதலினால் ஏற்பட்ட சரிவைச் சரிசெய்ய அடுத்த தாக்குதல் வெற்றிகரமாக அமையவேண்டும் என்று அவர் உறுதிபூண்டார். அடுத்த தாக்குதலுக்கான திட்டத்தினை வகுத்த அவர், அதற்காக தனது போராளிகளை பயிற்றுவிக்க ஆரம்பித்தார்.

 large.PrabakaranandKiddu.jpg.59f5465819fe57f1b28d3033c01bae1e.jpg

பிரபாகரனுடன் கிட்டு

பண்டிதரின் மறைவிற்குப் பின்னர் கிட்டுவே டயாழ்ப்பாணத்தின் தளபதியாக பிரபாகரனால் நியமிக்கப்பட்டிருந்தார். கிட்டுவே யாழ்ப்பாணத் தாக்குதலை நடத்துவார் என்றும் பிரபாகரன் முடிவெடுத்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் பொலீஸ் தலைமைக் காரியாலயமான யாழ்ப்பாண பொலீஸ் நிலையமே புலிகளின் இலக்காக இருந்தது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்றினையே யாழ் பொலீஸ் நிலையத் தாக்குதலுக்கும் பிரபாகரன் தேர்வுசெய்தார். சித்திரை 10 ஆம் திகதியான அன்றே இங்கிலாந்தின் பிரதமர் மாக்கிரெட் தட்சர் கொழும்பிற்கு விஜயம் செய்யவிருந்தார். 

இராணுவத்தினருடனும், பொலீஸாருடனும் நேரடியாக மோதும் நிலைக்குத் தமிழ்ப் போராளிகள் வந்துவிட்டார்கள் எனும் செய்தியை சர்வதேசத்திற்குச் சொல்ல இத்தாக்குதலைப் பயன்படுத்த பிரபாகரன் எண்ணினார். 70 களில் தாக்கிவிட்டு மறையும் கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்ட போராளிகள், பின்னர் 1984 வரை, நின்று சண்டையிடும் கெரில்லாக்கள் எனும் நிலைக்கு உயர்ந்து, அதன் பின்னரான காலத்தில் இராணுவ முகாம்கள் மீதும் பொலீஸ் நிலையங்கள் மீதும் நேரடியான தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு முன்னேறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரபாகரனின் திட்டங்கள் குறித்து எந்தவித தகவலும் அறிந்திராத லலித் அதுலத் முதலி, ரஜீவ் காந்தியை எவ்வாறு ஜெயாரின் வலைக்குள் வீழ்த்தலாம் என்பது குறித்துக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். சிறந்த திட்டமிடலாளரும், ராணுவ விடயங்கள் குறித்து அறிந்து வைத்திருந்தவருமான ஜெயவர்த்தன, ஆரம்பம் முதலே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் இந்தியாவின் நலன்களும் ஒரே திசையில் பயணிக்கப்போவதில்லை என்பதை நன்கு அறிந்தே இருந்தார். இந்தியாவின் தேசிய நலன்கள் என்று வருகையில், தனது நலன்களை உறுதிப்படுத்திக்கொள்வதில், இலங்கை தன்னிடம் முற்றான சரணாகதியினை அடையவேண்டும் என்று இந்தியா எதிர்பார்த்தது. ஆகவேதான் தனது வெளியுறவுக் கொள்கையின் வழியே இலங்கையை வீழ்த்துவதற்கு தமிழ் மக்களை அழுத்தம் கொடுக்கும் கருவியாகப் பாவிக்க இந்தியா விரும்பியது. இதனால் இலங்கையிலிருந்து தமக்கான தனிநாட்டினை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு போரிட்ட தமிழ்ப் போராளி அமைப்புக்களின் அவாவும்  இந்தியாவின் தேசிய நலன்களும் நேர் எதிரானவையாக மாறிப்போயின‌.

தமது திட்டத்தின்படி, தாம் முன்வைக்கவிருக்கும் கோரிக்கைகளுக்கு ரஜீவ் காந்தியை இணங்கப்பண்ணுவதனூடாக தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தலாம் என்று லலித் திட்டமிட்டார். அவையாவன, 

1. இலங்கையை இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிக்காது எனும் உத்தரவாதம்.

2. சமரசப் பேச்சுவார்த்தைகளை மீள புதிதாக ஆரம்பிப்பது.

3. தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கான ஆயுத உதவிகளை இந்தியா நிறுத்திக்கொள்வது.

4. பார்த்தசாரதியைப் பேச்சுவார்த்தைகளிலிருந்து முற்றாக விலக்குவது.

5. தமிழ் நாட்டிலிருந்து மத்திய அரசாங்கத்தின் மேல் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இருப்பது.

6. பாக்கு நீரிணையில் இந்திய ‍- இலங்கைக் கடற்படைகளின் கூட்டு ரோந்துகளை ஆரம்பிப்பது.

சுமார் இரண்டு மணித்தியாலங்களாக தனது உதவியாளர் ஒருவர் உடனிருக்க, ரஜீவுடன் பேச்சுக்களில் ஈடுபட்ட லலித் அதுலத் முதலி, தனது கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றிற்கு ரஜீவின் சம்மதத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றார். தில்லியிலிருந்து ஜெயவத்தனவைத் தொடர்புகொண்ட லலித், "ரஜீவுடனான பேச்சுக்கள் சிநேகபூர்வமாகவும், மிகுந்த பலனளிப்பவையாகவும் இருந்தன" என்று அறிவித்தார்.

 பேச்சுக்களை ஆரம்பிக்கும்போது ரஜீவ் "பாக்கிஸ்த்தான் உள்ளடங்கலாக, தென்னாசியாவின் அனைத்து நாடுகளுடனும் நட்பான தொடர்பாடல்களை ஆரம்பிக்க மிகுந்த விருப்பம் கொண்டுள்ளேன்" என்கிற தலைப்புடனேயே ஆரம்பித்தார். மேலும், "ஜெயவர்த்தனவின் தில்லி வருகையினை மிகுந்த ஆவலுடன் நான் எதிர்பார்த்திருக்கிறேன்" என்றும் லலித்திடம் அவர் கூறினார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவட்டங்களை இணைத்து மாகாணங்களை உருவாக்குவதோ, மாவட்டங்களுக்கு சட்டம் ஒழுங்கு அதிகாரங்களை வழங்குவதோ தேவையற்றது ‍- ரஜீவ் காந்தி

 மிகுந்த விவாத் திறமை கொண்டவரான லலித் அதுலத் முதலி, ஜெயவர்த்தனவின் வாழ்த்துக்களுடன் ரஜீவைச் சந்தித்து, சர்வதேச அளவில் மிகப் பெரும் தலைவராக ரஜீவ் வருவார் என்று ஜெயார் வாழ்த்தியதாகவும் தெரிவித்திருந்தார். அவர் கூறியவாறே ரஜீவ் பாராளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்றிருந்தார். மேலும், நேருகுடும்பத்தின் நெருங்கிய நண்பன் என்கிற ரீதியில் ரஜீவிற்கு ஜெயவர்த்தன வழங்கிய ஆலோசனைகளைச்  செவிமடுத்ததற்காகவும் அவருக்கு லலித் நன்றி கூறினார்.அடுத்ததாக‌, இதுவரை காலமும் இந்தியா இலங்கை தொடர்பாகக் கைக்கொண்ட நடைமுறை காரணமாக சிங்கள மக்களிடையே இந்தியா ஆக்கிரமிப்பில் இறங்கப்போகிறது என்கிற எண்ணம் வேரூன்றி பெரு விருட்சமாக வளர்ந்து விட்டிருப்பதாகவும் கூறினார். 

ஜெயாரும், லலித்தும் விரித்த வலையில் ரஜீவ் வீழ்ந்து போனார். இலங்கை மீது இந்தியா எக்காலத்திலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடாது என்று லலித்திடம் உத்தரவாதம் அளித்தார் ரஜீவ். இதன் மூலம் ஜெயவர்த்தனவைக் கட்டுக்குள் வைத்திருக்க அதுவரை தான் கொண்டிருந்த சாட்டையினை இந்தியா இழந்தது.

அதன் பிறகு தனது இரண்டாவது கோரிக்கைகள் குறித்துப் பேச்சை ஆரம்பித்தார் லலித். பேச்சுவார்த்தைகளை புதிதாக ஆரம்பிப்பதும், பார்த்தசாரதியை பேச்சுக்களில் இருந்து முற்றாக அகற்றுவதும் தான் அவை. லலித் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பத்தை ரஜீவே அவருக்கு வழங்கினார். சர்வகட்சி மாநாட்டினை ஜெயார் திடீரென்று கலைத்துப்போட்டது தொடர்பான இந்தியாவின் ஏமாற்றம் குறித்து ரஜீவ் பேசியபோது, சிங்கள மக்களின் பங்களிப்பும், ஆதரவுமின்றி சர்வகட்சி மாநாட்டினைத் தொடர்ந்து நடத்துவது இயலாத காரியம் என்று லலித் கூறினார். எதிர்க்கட்சித் தலைவியான சிறிமாவின் நடவடிக்கைகள் சர்வகட்சி மாநாட்டினை ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவந்திருப்பதாக லலித் கூறினார். மேலும் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வினை பார்த்தசாரதி ஜெயார் மீது திணிப்பதாக லலித்  குற்றஞ்சாட்டினார். சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வு ஒன்றுபற்றி கலந்தாலோசிக்க புதிதாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பார்த்தசாரதி மிகவும் நெருங்கிச் செயற்பட்டு வருவதாக சிங்கள மக்கள் நம்புவதாகவும், ஆகவே புதிய பேச்சுவார்த்தைகளில் சிங்கள மக்கள் நம்பிக்கை கொள்ளவேண்டுமானால் பார்த்தசாரதி பேச்சுக்களில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் லலித் வாதிட்டார்.

large.Romesh_Bhandari.jpg.15c5f7b843d61369790290dc015d8077.jpg

ரஜீவினால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி - ஐப்பசி 31, 1985

 லலித் கேட்டுக்கொண்டபடியே பேச்சுவார்த்தைகளைப் புதிதாக ஆரம்பிக்க ஒத்துக்கொண்ட ரஜீவ், அவை நடுநிலையானவையாகவும், இலக்கை அடையும் நோக்கிலும் நடைபெறும் என்று உத்தரவாதம் அளித்தார். மேலும், தனது புதிய வெளியுறவுச் செயலாளரான ரொமேஷ் பண்டாரியே பேச்சுவார்த்தைகளுக்கு பொறுப்பாக இருப்பார் என்றும் கூறினார். ஜெயாருடன் தொடர்பாடுவது குறித்து பார்த்தசாரதி தன்னிடம் தெரிவித்த கருத்துக்களையும், எச்சரிக்கைகளையும் ரஜீவ் முற்றாக நிராகரித்ததுடன், அவரை அரசியல் விவகார குழுவிற்கு இடமாற்றம் செய்தார். ஜெயவர்த்தனவை சிறிதும் நம்பாத பார்த்தசாரதி, கிளட்டு நரியின் கபடத்தனம் குறித்து ரஜீவ் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று முன்னர் கூறியிருந்தார். ஆனால், ஜெயவர்த்தனவை மிகச் சிறந்த இராஜதந்திரியென்றும், உண்மையான பெளத்தன் என்றும் எடைபோட்ட ரஜீவ், பார்த்தசாரதியின் எச்சரிக்கையினை எள்ளளவும் கண்டுகொள்ளவில்லை.

லலித்திடம் பேசிய ரஜீவ், ராணுவத்தினரின் பிரசன்னத்தை தமிழர் பகுதிகளில் குறைத்து, அவர்களால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளை நிறுத்தி, தமிழர்களுக்கு ஓரளவிற்கான தன்னாட்சி அதிகாரத்தை வழங்குவது இலங்கைக்கு நண்மை பயக்கும் என்று கூறினார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல்த் தீர்வுகுறித்து ரஜீவும் லலித்தும் நீண்டநேரம் பேசினார்கள் என்று கூறப்படுகிறது. ரஜீவுடன் பேசும்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கோரும் மாகாணசபைகளை வழங்கும் நிலையில் தமது அரசாங்கம் இல்லையென்று லலித் கூறினார். மாவட்ட சபைகளே அரசாங்கத்தல் வழங்கப்படக் கூடிய அதிகபட்ச அதிகார அலகு என்று கூறிய லலித், தேவையேற்படின் மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்களை மீள்பரிசீலினை செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.  லலித்தின் கூற்றுடன் ஒத்துப்போன ரஜீவ், மாவட்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து மாகாணங்களாக உருவாக்கவேண்டிய தேவை இல்லை என்று கூறியதுடன், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் பொறுப்பினை அவற்றிற்குக் கொடுக்கவேண்டிய தேவையும் இல்லையென்று கூறினார்.

"லலித் அதுலத் முதலியைப் பொறுத்தவரை, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இந்திரா காந்தி கொண்டிருந்த அறிவைக் காட்டிலும், ரஜீவ் காந்தி பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தார்.மேலும், மாவட்ட சபைகள் ஒன்றிணைக்கப்பட்டு மாகாணங்களாகச் சேர்க்கப்படுதல் அவசியமில்லையென்கிற நிலைப்பாட்டையும் ரஜீவ் ஏற்றுக்கொண்டார். இதன்மூலம், இலங்கை அரசாங்கத்தின் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டுடன் ரஜீவ் ஒத்துப் போவதும், பார்த்தசாரதியின் நிலைப்பாட்டிலிருந்து அவர் விலகிச் செல்வதும் தெரிந்தது. மேலும், லலித்தும் ரஜீவும் மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருந்தார்கள். மேலும், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் போன்றே மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் கொடுக்கப்படத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டினை ரஜீவும் கொண்டிருந்தமை லலித்திற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.  மேலும், பஞ்சாப் விவகாரத்தில் இந்தியா இதே தவறை இழைத்திருந்தது என்றும், ஆகவே இனிமேல் இவ்வாறான தவறுகள் ஏற்படாது என்று ரஜீவ் உறுதியளித்தார்" என்று ஜெயவர்த்தனவின் சுயசரிதையினை எழுதிய கே.எம்.டி.சில்வாவும், ஹவார்ட் ரிக்கின்ஸும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

பொதுமக்கள் கொலைகள் குறித்து இலங்கை அரசாங்கத்தை தான் எச்சரித்ததாக ரஜீவ் காந்தி லொஸ் ஏஞ்ல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். "நீங்கள் பயங்கரவாதிகளைக் கொல்லலாம், அது பரவாயில்லை, ஆனால், பயங்கரவாதிகள் அல்லாத பொதுமக்களைக் கொல்லும்போது இந்தியாவில் ஏற்படும் உணர்வுகள் குறித்து நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் கொல்லப்படும் வேளை எம்மால் உதவுவது கடிணமாக இருக்கும் என்று லலித்திடம் நான் கூறினேன்" என்று ரஜீவ் மேலும் தெரிவித்தார்.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஜீவின் கூற்றினைத் தமக்குச் சார்பாகப் பாவித்த சிங்கள இனவாதிகள்

அத்துலத் முதலியுடன் மேலும் பேசிய ரஜீவ், அதிகரித்த இராணுவத்தினரின் பிரசன்னத்தினால் தமிழ் அகதிகள் பிரச்சினை உருவாகியிருக்கிறது என்று கூறினார். 1983 ஆம் ஆண்டு இனக்கொலையின் பின்னர் சுமார் 50,000 தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் இராணுவத்தினரின் அட்டூழியங்களால் மேலும் பல தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்குத் தப்பி வரும் சூழ்நிலை தோன்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது அதிகாரிகளின் கூற்றுப்படி சுமார் 9 நீண்ட மணித்தியாலங்கள் கடலில் பயணம் செய்து காலை புலரும் முன்னர் இராமேசுவரம் கடற்கரையினைத் தமிழ் அகதிகளின் படகுகள் அடைய ஆரம்பிக்கின்றன என்று கூறினார் ரஜீவ். மாசி மாதம் 5 ஆம் திகதி மட்டுமே ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 21 தமிழ் அகதிகள் இராமேஸுவரத்தை அடைந்திருந்தார்கள். மாசி மாதம் 9 ஆம் திகதி அதிகளவான‌ தமிழ் அகதிகள் அங்கு வந்து சேர்ந்தனர். இராமேசுவரம் தனுஷ்கோடி ஆகிய கடற்கரைகளில் அன்று மட்டுமே வந்திறங்கிய அகதிகளின் எண்ணிக்கை 363 ஆகும். மாசி 10 முதல் 12 வரையான மூன்று நாட்களில் நாளொன்றிற்குச் சராசரியாக 300 இலிருந்து 400 வரையான தமிழ் அகதிகள் தமிழ்நாட்டை வந்தடைந்திருந்தனர். இந்த எண்ணிக்கை இனிவரும் நாட்களில் அதிகரிக்கலாம் என்று தனது அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகவும், இது தமிழ்நாட்டில் கொந்தளிப்பான நிலைமையினை ஏற்படுத்தும் என்றும் அவர் லலித்தை எச்சரித்தார்.

லலித்தின் மூன்றாவது நோக்கம் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு இந்தியா வழங்கிவரும் ஆயுதப் பயிற்சியினையும், ஆயுதங்களையும் நிறுத்துவதும், தமிழ் நாட்டிலிருந்து வரும் அழுத்தத்தைச் சமாளிப்பதும் ஆகும். இவ்விடயத்தின் தனக்கு உதவுவதற்கென்று உதவிப் பொலீஸ் மா அதிபர் சிறில் ஹேரத்தையும் அவர் அழைத்துச் சென்றிருந்தார். இப்பயணத்தின்போது தமிழ்நாட்டில் இயங்கிவரும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் பயிற்சி முகாம்கள், இந்தியப் பயிற்றுவிப்பாளர்களின் பெயர் விபரங்கள், பயிற்சிகளின் போது பாவிக்கப்படும் ஆயுதங்களின் வகை மற்றும் எண்ணிக்கை தொடர்பான பல விடயங்களை சிறில் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார். இந்த விடயங்களை தம்மால் கைதுசெய்யப்பட்ட ஆயுத அமைப்புக்களின் உறுப்பினர்களிடமிருந்தும், இலங்கையரசிற்குப் பணத்திற்காக தகவல்களை விற்கும் இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் பெற்றுக்கொண்டதாக சிறில் கூறினார். சிறில் முன்வைத்த ஆவணங்களில் தமிழ் நாட்டில் போராளிகளின் பயிற்சிகளுக்குப் பொறுப்பாகவிருந்த இந்திய உளவு அமைப்பின் அதிகாரியான மலையாளி உன்னிகிருஷ்ணன் மற்றும் இன்னொரு மலையாளியும் தமிழ்நாட்டு உளவுத்துறையின் தலைவருமான மோகன் தாஸ் ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இவ் அதிகாரிகள் இருவரும் இலங்கையரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பதை போராளி அமைப்புக்களும் உறுதிப்படுத்தியிருந்தன. பின்னாட்களில் அமெரிக்க உளவு அமைப்பினருக்கு இந்தியாவின் இரகசியங்களை விற்றார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் ரோ அதிகாரி உன்னிகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 தம்மால் சேகரிக்கப்பட்ட இவ்விடயங்களை ரஜீவ் காந்தியின் முன்னால் வைத்த லலித், "இவை தொடர்பாக நீங்கள் அறியாமல் இருக்கலாம்" என்று அப்பாவித்தனமான முறையில் ரஜீவைப் பார்த்து வினவினார். கலவரமடைந்த ரஜீவ் காந்தி, "இதுகுறித்து நிச்சயம் விசாரிக்கிறேன்" என்று பதிலளித்தார். மேலும், இலங்கை கோரியிருந்த பாக்கு நீரிணையில் இந்திய இலங்கைக் கடற்படைகளின் கூட்டு ரோந்து குறித்து தான் ஆராயப்போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

 large.JR-Jayewardene-Lalith-Athulathmudali-and-Rajiv.webp.e579dfdeecedac5d4aa3dd9436557432.webp

ரஜீவ் காந்தி, லலித் அதுலத் முதலி மற்றும் ஜயவர்த்தன‌

ரஜீவ் காந்தியுடனான லலித்தின் சந்திப்பு அரசாங்கத்திற்குள்ளும், ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களுக்குள்ளும் புதிய உத்வேகத்தினையும், நம்பிக்கையினையும் ஏற்படுத்தியிருந்தது. இந்திய இலங்கை உறவுகளை புதுப்பிக்கும் நிகழ்வு இது என்று பல அரசியல் அவதானிகள் கருதினர். இந்திய அரசாங்கத்தினதும், கொள்கை வகுப்பாளர்களினதும் மனமாற்றம் என்று இதனை வர்ணித்து டெயிலி நியூஸ் பத்திரிக்கை ஆசிரியத் தலையங்கம் தீட்டியிருந்தது. 

இந்தியாவின் வெளியுறவுத்துறையின் இராஜாங்க அமைச்சர் குர்ஷெட் அலாம் கான் பாராளுமன்றத்தில் விடுத்த அறிக்கையில், இலங்கையில் ஏற்பட்டுவரும் நெருக்கடியான சூழ்நிலை மற்றும் அவற்றால் இந்தியாவில் ஏற்பட்டுவரும் சிக்கல்கள் குறித்து ரஜீவ் காந்தியும் லலித் அதுலத் முதலியும் விரிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டார்.

மேலும், லலித்திடம் பேசிய ரஜீவ் காந்தி, இலங்கை வேண்டிக்கொண்டால் இனப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு இந்தியா உதவக் கூடும் என்றும் ஆனால், இனப்பிரச்சினைக்கான அரசியல்த் தீர்வினை இலங்கை அரசாங்கமே கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறியதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழர்களின் வாழிடங்களில் அதிகரித்துவரும் இராணுவப் பிரசன்னம். அதனால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அகதிகள் பிரச்சினை குறித்து ரஜீவ் இந்தியாவின் கரிசணையினை லலித்திடம் பகிர்ந்து கொண்டதாகவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படைச் சுட்டு கொல்லுதல், காயப்படுத்துதல் மற்றும் கைதுசெய்தல் ஆகிய செயற்பாடுகளுக்கெதிராக கடுந்தொணியில் தனது கண்டனத்தினை லலித்திடம் முன்வைத்ததாகவும் அவ்வறிக்கை மேறும் கூறியது.

large.Palkstraight.jpg.957d84a89b238ee50d8a761a19563796.jpg

பாக்கு நீரிணை

பாக்கு நீரிணைப் பகுதியைத் தடைசெய்யப்பட்ட வலயமாக இலங்கை அரசாங்கம் 1984 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அறிவித்ததிலிருந்து இலங்கைக் கடற்படைக்கும் இந்திய மீனவர்களுக்குமிடையிலான பிணக்கென்பது ஆரம்பமாகியிருந்தது. இதனைச் சந்தர்ப்பமாகப் பாவித்த தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வரலாயினர். மேலும், பொருட்களைக் கடத்துதல், தமிழ்ப் போராளி அமைப்புக்களின் போராளிகளையும் பொருட்களையும் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே கொண்டுசேர்த்தல் ஆகிய செயற்பாடுகளிலும் தமிழ்நாட்டு மீனவர்களின் ஒருபகுதியினர் ஈடுபட்டு வந்தனர். ஐப்பசி மாதத்தில் மட்டும் 74 தமிழ்நாட்டு மீனவர்களைக் கைதுசெய்த இலங்கை கடற்படை, அவர்களுக்குச் சொந்தமான 17 ட்ரோலர் படகுகளையும் பறிமுதல் செய்திருந்தது. அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இவர்களில் பெரும்பாலானவர்கள் கடுமையான எச்சரிக்கைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், ட்ரோலர்களின் நடத்துனர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

1985 ஆம் ஆண்டு தை மாதத்தின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் இரு மீனவர்கள் கொல்லப்பட்டனர். இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இரு இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்றதற்காக தில்லியில் இருந்த இலங்கை உயர்ஸ்த்தானிகரை தனது அலுவலக‌த்திற்கு வரவழைத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர். இதற்குப் பதிலளித்த இலங்கை அதிகாரிகள் கொல்லப்பட்ட இரு மீனவர்களும் இலங்கையின் கடற்பரப்பிற்குள் மீன்பிடித்துக்கொண்டு நின்றார்கள் என்று நியாயப்படுத்தியிருந்தனர். இந்திய மீனவர்களைப் பாதுகாக்க இந்திய கரையோர ரோந்துப் படையினரை இந்தியா நிறுத்தியது. இந்தியாவின் கடற்பரப்பிற்குள் நுழைந்தார்கள் என்கிற குற்றச்சாட்டில் இலங்கைக் கடற்படையினரின் ரோந்துக் கப்பல் ஒன்றினைக் கைப்பற்றிய இந்திய கடலோர ரோந்துப் படை, இலங்கைக் கடற்படைக் கப்பலில் இருந்த கடற்படை அதிகாரிகளைக் கைதுசெய்தது. பாக்கு நீரிணையில் தனது ரோந்துகளையும் இந்தியக் கடற்படை அதிகரித்தது.

இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமது கடற்படை அதிகாரிகளையும், கைப்பற்றப்பட்ட ரோந்துக் கப்பலையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டது. பதிலளித்த இந்திய அதிகாரிகள், இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ட்ரோலர் உரிமையாளர்களையும் 17 ட்ரோலர்களையும் உடனடியாக விடுவித்தால் மாத்திரமே இலங்கைக் கடற்படை அதிகாரிகளும் அவர்களது ரோந்துக் கப்பலும் விடுவிக்கப்படும் என்று கூறவும், இரு நாடுகளும் இணங்கி பரஸ்பர விடுவிப்பு இடம்பெற்றது.

இந்தப் பிணக்கினைத் தனக்குச் சார்பாகப் பாவிக்க நினைத்த ஜெயவர்த்தன, இலங்கை - இந்திய கடற்படையினர் இணைந்து ரோந்துக்களில் ஈடுபட வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியதுடன், போராளிகள், அவர்களுக்கான ஆயுதங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் என்பன கடத்தப்படுவதை இதன் மூலம் தடுத்துவிடலாம் என்றும் ரஜீவிடம் கூறினார். ஆரம்பத்தில் இதுகுறித்துச் சிந்திக்க இணங்கிய ரஜீவ் பின்னர் அதனை நிராகரித்துவிட்டார்.  தில்லியில் தன்னைச் சந்தித்து, ஜெயாரின் கோரிக்கைக்கு இணங்கவேண்டாம் என்று தமிழ்நாட்டு முதல‌மைச்சர் எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டதையடுத்தே ரஜீவ் ஜெயாரின் கோரிக்கையினை நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

கூட்டு ரோந்தினை ரஜீவ் நிராகரித்து விட்டதனால் கொழும்பில் நிலவிவந்த உற்சாகச் சூழ்நிலை சற்றும் மாறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் ரஜீவ் கூறிய "மாவட்ட சபைகளை இணைக்கத் தேவையில்லை, மாவட்டங்களுக்கு சட்டம் ஒழுங்கு அதிகாரத்தினை எவ்விதத்திலும் பகிர்ந்தளிக்கத் தேவையில்லை" போன்ற கூற்றுக்களைப் பயன்படுத்த நினைத்ததுடன், "மாவட்ட சபைகளுக்கு மேலதிகமாக தமிழர்களுக்கு எதனையும் தரமாட்டோம்" என்கிற தமது நிலைப்பாட்டை மீண்டும் தூக்கி நிறுத்த  முடிவெடுத்தார்கள்.

தமது நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க பாரிய பிரச்சாரமொன்றினை ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னெடுத்தனர். இப்பிரச்சாரத்தின் முக்கிய இலக்கே இலங்கைப் பிரச்சினை தொடர்பாக புது தில்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டினை ஆளமாக்குவதுதான். தில்லி மத்திய அரசின் நிலைப்பாடு இலங்கையரசாங்கத்திற்குச் சாதகமானதென்றும், வடக்குக் கிழக்கிற்கு அதிகாரங்களைக் கொடுப்பதென்பது இலங்கைக்கு மட்டுமல்லாமல், இந்தியாவின் நலன்களுக்கும் பாதகமாக அமையும் என்றும் இலங்கை பிரச்சாரம் செய்யத் தொடங்கியது.

பிரேமதாஸ இன்னொரு படி மேலே சென்று, "அவர்கள் பிரிவினைவாதிகள் மட்டுமல்ல, மார்க்ஸிஸ சிந்தனை கொண்ட பிரிவினைவாதிகள். ஆகவே அவர்கள் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்படுதல் அவசியம்" என்று முழங்கினார். பின்னணியில் பிரமாண்டமான வாத்திய இசை முழங்க பிரேமதாச இனவன்மத்தைக் கக்கும் பேச்சுக்களைக் கொழும்பின் மேடைகளில் நிகழ்த்தி வந்தார். அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்த சிறில் மத்தியூ உடனடியாக பாரிய யுத்தம் ஒன்றினை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பாராளுமன்ரறத்திற்குள்ளேயும், வெளியேயும் தொடர்ச்சியாக பேசிவந்த அவர், தமிழ்ப் போராளிகள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்று முழங்கினார்.

தன்னால் முடுக்கிவிடப்பட்ட இனவன்மம் மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதையடுத்து அதனைப் பாராளுமன்றத்திற்குள் எடுத்து வந்த ஜெயார், தனது மாசி 20 ஆம் திகதிய பேச்சில் "தமிழ்ப் பிரிவினைவாதிகள் முடிவானதும்,  இறுதியானதுமான தாக்குதலுக்குத் தயாராகிறார்கள்" என்று கூறி தமிழர்களுக்கெதிரான சிங்களவர்களின் உணர்வினை மேலும் பற்றியெரியச் செய்தார். இதனால் தமிழர்கள் அச்சத்துடன் வாழ ஆரம்பித்தனர். ஏக காலத்தில் ஜெயவர்த்தனவின் அடியாட்களாகச் செயற்பட்ட காமிணி, லலித் ஆகியோரும் தமிழர்களுக்கெதிராக சிங்களவர்களைத் தூண்டிவிடும் இனவன்மப் பேச்சுக்களைத் தொடர்ச்சியாக நிகழ்த்தத் தொடங்கினர்.

மாசி மாதம் 24 ஆம் திகதி, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய லலித் அதுலத் முதலி தமது இறுதி யுத்தத்தை பங்குனி அல்லது சித்திரையில் நடத்த தமிழ்ப் போராளிகள் தயாராகி வருவதாகக் கூறினார். "நாம் அந்த யுத்தத்திற்குத் தயாராகவே இருக்கிறோம். அவர்களைத் தோற்கடித்து, நாம் வெற்றிபெறுவோம்" அன்று அவர் அங்கு கர்ஜித்தார். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/3/2024 at 02:21, ரஞ்சித் said:

ஈழத்தமிழர் தொடர்பான இந்தியக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம்

டெசோ அமைப்பும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்தியா இராணுவ ரீதியில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அதே நேரம், தமிழர் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பாரிய மாற்றம் ஒன்று உருவாகத் தொடங்கியிருந்தது. ரஜீவுடனான தனது முதலாவது சந்திப்பிலேயே இந்த மாற்றத்திற்கான அடித்தளத்தினை ஜெயார் இட்டிருந்தார். இந்திரா காந்தியின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த ஜெயவர்த்தன, தன்னை இந்தியாவிந்தும், நேரு குடும்பத்தினதும், இந்திய மக்களினதும்  உண்மையான நன்பன் என்றும், பெளத்தத்தினை கடைப்பிடிக்கும் நேர்மையான முதிர்ந்த அரசியல்வாதியென்றும், இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களின் நலன்களை, குறிப்பாக தமிழ் மக்களின் நலன்களைக் காப்பதில் மிகுந்த அக்கறை கொண்ட அரசியல்த் தலைவர் என்றும் காட்டுவதில் ஈடுபட்டிருந்தார்.

 ரஜீவ் காந்தியுடனான தனது முதலாவது சந்திப்பில் தான் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவன் என்றும், நேருவின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவன் என்று ஜெயவர்த்தன கூறினார்.

1941 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஒழுங்குசெய்திருந்த ராம்கார் நிகழ்விலும் அவர் பங்குபற்றியிருந்தார். ஜவர்ஹல்லால் நேரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளை அவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்கு நேரு அனுப்பிய பதில்க் கடிதங்களையும் நேரு தொடர்பான ஆவணக் காப்பகத்திற்கு ஜெயார் அனுப்பிவைத்திருந்தார்.

ரஜீவுடன் பேசிய ஜெயார், தமிழர் பிரச்சினை தொடர்பாக சாதகமான தீர்வொன்றினை வழங்க தான் விருப்பம் கொண்டிருப்பதாகவும், ஆனால் தன்னைச் சுற்றியிருக்கும் தீவிரவாத அமைச்சர்கள் அதற்குத்தடையாக இருப்பதாகவும் கூறினார். மேலும், தமிழ் ஆயுதக் குழுக்கள் நடத்திவரும் பயங்கவாதத் தாக்குதல்கள் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கும் தனது முயற்சிகளை இக்கட்டான நிலைமைக்குத் தள்ளியிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு ஏதுவான நிலைமையினை இலங்கையில் உருவாக்குவதற்கு ரஜீவ் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டிக்கொண்டார்.

மேலும், ரஜீவின் தாயாரான இந்திரா காந்தியும் தமிழ்த் தீவிரவாதிகளால் சூழப்பட்டிருந்ததாக ரஜீவிடம் கூறினார் ஜெயவர்த்தன. அதனாலேயே தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திரா காந்தி பக்கச்சார்பான நிலையினை எடுத்திருந்தார் என்றும் ஜெயார் கூறினார். இந்தியாவின் இந்த பக்கச்சார்பான நிலைப்பாட்டிற்கு ஒற்றைக் காரணமாக பார்த்தசாரதியை ஜெயார் குற்றஞ்சாட்டினார். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் பார்த்தசாரதி வகித்த பாகம் தொடர்பாக சிங்கள மக்கள் பலத்த சந்தேகங்களைக் கொண்டிருப்பதாகவும் அவர் ரஜீவிடம் கூறினார். ஆகவே, புதிய இந்திய அதிகாரிகளை சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர் பரிந்துரை செய்தார். மேலும், இந்தியா இராணுவ ரீதியில் இலங்கையில் தலையிடலாம் என்கிற அச்சம் காரணமாக இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினூடாக தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது கடிணமானதாக மாறியிருப்பதாகவும் அவர் கூறினார்.

ரஜீவிடம் மேலும் பேசிய ஜெயவர்த்தன, இனப்பிரச்சினைக்கு நீதியானதும், இறுதியானதுமான தீர்வொன்றினைக் காண்பதற்கு தான் உண்மையிலேயே அக்கறை கொண்டிருப்பதகாவும், இதனைச் செய்வதற்கு இந்தியா தற்போது எடுத்திருக்கும் தமிழருக்குச் சார்பான நிலையிலிருந்து விலகி, பக்கச்சார்பின்றிச் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தியாவுடனான உறவினைப் புதுப்பிக்க தான் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசியலிலும், இராஜதந்திரத்தில் கற்றுக்குட்டியாகத் திகழ்ந்த ரஜீவ் காந்தி ஜெயார் விரித்த வலையில்  அகப்பட்டுக்கொண்டதுடன், ஜெயாருக்கு நான்கு வாக்குறுதிகளையும் அளித்தார்.

1. இந்தியா ஒருபோதும் இலங்கையினை ஆக்கிரமிக்காது.

2. பேச்சுவார்த்தைகளில் தூதராகச் செயற்படும் பார்த்தசாரதியை நீக்கிவிட்டு வேறொருவரை அமர்த்த இந்தியா விருப்பம் கொண்டிருக்கிறது.

3. இலங்கையுடனான உறவைப் புதுப்பிக்க இந்தியா நாட்டம் கொண்டிருக்கிறது.

4. இலங்கையில் இறையாண்மையும், ஒருமைப்பாடும் இந்தியாவினால் பாதுகாக்கப்படும்.

ஆனாலும், தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலேயே தீர்வு அமைந்திருக்க வேண்டும் என்று ஜெயவர்த்தனவிடம் அழுத்தமாகக் கூறினார் ரஜீவ். அவ்வாறு இல்லாதபட்சத்தில், இனப்பிரச்சினை நீண்டு சென்று, இறுதியில் இலங்கை பிளவுபடுவது நடக்கும் என்றும் ஜெயாரை அவர் எச்சரித்தார். 

அதற்குப் பதிலளித்துப் பேசிய ஜெயார், "உங்களுக்கும் அருகிலிருக்கும் சிறிய நாடுகளின் நம்பிக்கையினை பெற்றுக்கொள்ள முயலுங்கள், நீங்கள் இளமையானவர், பெரியதொரு நாட்டிற்குத் தலைவராக வந்திருக்கிறீர்கள், நீங்கள் நிச்சயம உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள், உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று கூறினார்.

இந்த பகுதி தமிழர் உரிமை போராட்டத்தில் மிக முக்கிய திசை திருப்ப புள்ளியாக அமைந்துவிட்டது, ஒரு மோசமான நிகழ்வினை ஜே ஆர் தனக்கு சாதகமாக்கி கொண்டார் என்பதனை தெளிவாக காட்டுகிறது.

ஜே ஆர் தொடர்பாக இந்த தமிழர் போராட்டத்திற்கு காரணமானவர்(UNP) என சிங்கள தரப்பால் குற்றம் சாட்டப்படுகின்றவேளை அவர் தனது சாதுரியத்தினால் தமிழர் போராட்டத்தினை நசுக்குவதற்கான புறக்காரணிகளை உருவாக்கிவிட்டிருந்தார்.

இவ்வாறான ஒரு தமிழரசியல்வாதி தமிழர் தரப்பில் இதுவரை இல்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, vasee said:

இவ்வாறான ஒரு தமிழரசியல்வாதி தமிழர் தரப்பில் இதுவரை இல்லை.

அரச அதிகாரமும், நாட்டின் தலைவர் என்கிற சர்வதேச அங்கீகாரமும் கொண்ட ஒருவர் செய்யக்கூடிய அரசியல் சித்துவிளையாட்டுக்களை அரச அதிகாரமும், சர்வதேச அங்கீகாரமும் அற்ற ஒரு சிறிய இனத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் சாதாரண அரசியல்வாதிகளால் செய்ய முடியும் என்று நாம் நம்பவில்லை. ஆகவேதான் சர்வதேச அங்கீகாரமும், நடைமுறை அரசுக்கான முயற்சியும் எம்மைப் பொறுத்தவரை அவசியமாகியது. அந்த முயற்சியைத்தான் இலங்கையும், இந்தியா தலைமையிலான சர்வதேசமும் சேர்ந்து அழித்தன. 
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய தந்திரக் கடிதமும், தெரிந்தே வலையில் வீழ்ந்த ரஜீவும்

large.Vadduvaakal_stupa.jpg.29e268a5744d7747f67de9772a49920c.jpg

வட்டுவாகல் பெளத்த தூபி, முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கான நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பின் சின்னம்

 ஐக்கிய தேசியக் கட்சியின் இனவன்மத்திற்கு நிகரான வெறுப்பினை எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சியும் உமிழத் தொடங்கியது. தமிழரின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வை அடைய எத்தனிக்காமைக்கும், பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க முடியாமற்போனமைக்காகவும் அரசாங்கத்தை எதிர்க்கட்சியின் தலைவரான சிறிமா கடுமையாகக் கண்டித்திருந்தார். "உங்களால் வடக்கில் ஒரு கூட்டத்தையோ அல்லது எந்தவொரு நிகழ்வையோ இன்று நடத்த முடியுமா?" என்று அவர் அரசிடம் வினவினார்.தனது தவறுகளை மறைக்கவே நாட்டினைக் கொதிநிலையில் வைத்திருக்க அரசாங்கம் முயல்கிறது என்றும் அவர் கண்டித்தார்.

எதிர்க்கட்சியினர் நாடு முழுவதும் மேற்கொண்டு வந்த அரசிற்கெதிரான பிரச்சாரத்தை மழுங்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சியினர் "பயங்கரவாதத்தை முறியடிக்க அரசிற்கு உதவுவோம்" எனும் தலைப்பில் தமது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டனர். "உன்னை விடவும் நானே தீவிரமான சிங்கள பெளத்தன்" எனும் தொனியில் ஒருவரையொருவர் விஞ்சும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சிங்கள பெளத்தர்களின் நலன்களைக் காத்துக்கொள்ள தமது எதிரிகளை விடவும் தாமே சிறந்தவர்கள் எனும் பிரச்சாரத் தந்திரம் 1952 ஆம் ஆண்டு சிங்கள இனவாதத்தின் பிதாமகன் என்று என்று அறியப்பட்டவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்த்தாபகருமான எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றைய பிரச்சாரங்கள் அரசாலும், சுதந்திரக் கட்சியினராலும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

நாட்டில் வலிந்து உருவாக்கப்பட்ட தமிழர்களுக்கெதிரான வன்மத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வைத் தரவும் பொறுப்புணர்வு மிக்க பொருத்தமான அரசியல்த் தலைவர் தானே என்று இந்தியாவுக்கும், சர்வதேசத்திற்கும் காட்டுவதற்கு இத்தருணத்தை ஜெயார் பாவித்துக்கொண்டார். பங்குனி 1 ஆம் திகதி ஜெயார் ரஜீவிற்கு எழுதிய கடிதத்தில் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக ஒரு அதிகாரியை இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். அரசியல் ரீதியிலான தீர்விற்கு தான் விருப்பம் கொண்டிருப்பதாகவும் அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.மேலும், மாகாணசபைகளை அமைப்பது தொடர்பிலும் தான் சாதகமான கருத்தினைக் கொண்டிருப்பதாகவும்  குறிப்பிட்டிருந்தார். ஆனால், இவை எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டையாக இருப்பது பயங்கரவாதம் என்றும், அதனை முற்றாக இல்லாதொழிக்க ரஜீவ் காந்தி தனக்கு உதவ முன்வரவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

ஜெயார் ரஜீவுக்கு எழுதிய தந்திரக் கடிதம்

 "அன்பான ரஜீவிற்கு. 1978 ஆம் ஆண்டு இந்தியாவுக்கான எனது பயணத்தின்போது நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியுடன் இக்கடிதத்தை ஆரம்பிக்க அனுமதி கொடுங்கள். "நான் இந்தியாவினதும் அதன் மக்களினதும் நண்பன். அதன் கலாசார பாரம்பரியத்தை இரசிப்பவன். இந்தியாவின் மிகப்பெரும் மகனான மகாத்மா காந்தியின் சீடன்".

நான் இலங்கையின் ஜனாதிபதி என்கிற ரீதியில் மட்டுமல்லாமல், நேரு குடும்பத்தின் நெருங்கிய நண்பன் என்கிற ரீதியிலும் இக்கடிதத்தை எழுதுகிறேன். உங்களின் பேரனாரை 1939 ஆம் ஆண்டு எனது இல்லத்தில் வரவேற்று விருந்தளித்தவன் என்கிற வகையில், உங்களின் குடும்பத்தை நன்றாக அறிந்துகொண்டவன் என்கிற வகையில், அந்தக் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். உண்மைக்காக, அகிம்சை முறையில் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களில் ஒருவரான உங்களின் பேரனாரை நான் ஒரு வீரனாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இன்றும் அதே கொள்கைகளைக் கடைப்பிடிக்க நான் முயன்று வருகிறேன். 1941 ஆம் ஆண்டு இந்தியக் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ராம்கார் நிகழ்வில் நான் பங்கேற்றபோது நேருவின் அலகாபாத் வீட்டிலேயே நான் தங்கியிருந்தேன். பின்னாட்களில் அவர் சிறையிலடைக்கப்பட்டபோது அவரோடு கடிதத் தொடர்பில் நான் இருந்தேன். எமக்கிடையிலான கடிதத் தொடர்பின் நகல்களை நேருவின் நினைவு ஆவணக் காப்பத்திற்கு நான் அனுப்பியிருக்கிறேன். அவற்றினை உங்களை நேரில் சந்திக்கும்போது உங்களுக்குக் காட்டுவதிலும் ஆர்வமாயிருக்கிறேன். 1942 இல் இந்தியாவை விட்டு வெளியேறு எனும் போராட்டத்தின்போது பொம்பேயில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியினரின் கூட்டத்திலும் நான் கலந்துகொண்டிருந்தேன். நான் அன்று தங்கியிருந்த திருமதி ஹூத்தி சிங் வீட்டில் உங்கள் பேரனாரும், உங்கள் தகப்பனாரும் தங்கியிருந்தனர். இக்கடிதத்தின் ஆரம்பத்தில் நான் எழுதிய வாக்கியங்களை நீங்கள் சந்தேகிக்கக் கூடாது, அவை எனது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட நிகழ்வுகளின் எண்ணங்களாகும்.

ஆனால் துரதிஷ்ட்டவசமாக, எமது நாடுகள் இரண்டிற்கும் இடையில் அண்மைக்காலமாக சில சிக்கல்கள் உருவாகியிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். எனது மனதில் இச்சிக்கல்கள் பலமான தாக்கத்தை ஏறபடுத்தியிருப்பதுடன், இவற்றினை மிக விரைவில் நாம் தீர்த்துக்கொள்ளமுடியும் என்றும் நம்புகிறேன். அந்த வகையில், சில வாரங்களுக்கு முன்னர் எனது அமைச்சருடனான‌ உங்களின் கலந்துரையாடல்களில் நீங்கள் குறிப்பிட்ட சில விடயங்களுக்காக உங்களுக்கு நான் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் இன்று எதிர்நோக்கும் முட்டுக்கட்டைகளை உடைத்துப்போட இந்தக் கலந்துரையாடல் உபயோகமாகியிருக்கிறது என்று நான் நம்புகிறேன். இதனைச் செய்வதற்கு, உங்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவது அவசியம் என்று கருதுகிறேன். ஆனபோதிலும், அவ்வாறான சந்திப்பொன்று நிகழ்வதற்கு முன்னோடியாக உங்களின் மூத்த இராஜதந்திரியொருவரை இங்கு அனுப்பி என்னுடன் பேச ஒழுங்குசெய்வது சாலப் பொறுத்தம் என்று எண்ணுகிறேன். இவ்வாறான ஒரு ஒழுங்கினை நான் மிகவும் வரவேற்பதோடு, உங்களுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், தீர்வுதொடர்பான உங்களின் மனவோட்டத்தினை என்னால் சரிவரப் புரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். தற்போது நாம் முகம் கொடுக்கும் சில பிரச்சினைகளுக்கான ஒருமித்த தீர்வினை அடைந்துகொள்ள எம்மிருவருக்கும் இது துணைபுரியும் என்பது எனது நம்பிக்கை.

எமது பாராளுமன்றத்தில் மாசி மாதம் 20 ஆம் திகதி நான் ஆற்றிய உரையில் காத்திரமான அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தேன். ஆனால், எனது கருத்துக்களை தவறான வழியில் சில வெளிநாட்டு ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்தன. ஆகையால், எனது பேச்சின் பிரதிகளை உங்களின் பார்வைக்காக இத்தாள் அனுப்பிவிடுகிறேன். எமது எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளை உங்களின் அண்மைய அறிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

எனது பாராளுமன்ற உரையில் சில விடயங்கள் குறித்து நான் பேசியிருந்தேன். எமது நாட்டின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்றுவரும் அசம்பாவிதங்கள் உள்ளடக்கிய சூழ்நிலைக்கு ஒத்த சூழ்நிலையினை பஞ்சாப் போன்ற பகுதிகளில் இந்தியாவும் எதிர்நோக்கியிருக்கிறது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாதிகள் தமது அரக்க முகங்களை வெளியே நீட்டிக்கொண்டு வருகிறார்கள். இலங்கை போன்ற சிறிய நாட்டில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகள் இந்த நாட்டின்மீது கடுமையான தாக்கங்களை உண்டுபண்ணினாலும், இங்கிருந்து பல நூறு மைலகள் தொலைவில் இருக்கும் இந்தியாவின் தலைநகரான தில்லிக்கு எமது நாடு முகம்கொடுத்திருக்கும் பயங்கரமான சூழ்நிலை தெரிவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவானவையே.

சர்வகட்சி மாநாட்டில் நான் ஆற்றிய பேச்சில் இருவிடயங்கள் குறித்த இணக்கப்பாடுகளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் என்னால் எட்ட முடியவில்லை. அதாவது, வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரு அலகு மற்றும் இரண்டாவது சபைக்கான யோசனைகள் என்பனவே அவையாகும். ஆனால், ஒரு மகாணத்திற்குற்பட்ட மாகாணசபைகளை அமைக்கும் யோசனையினை நான் வரவேற்கிறேன். அரசியல்த் தீர்விற்கான முயற்சிகள் மேற்கொள்ளும் அதேவேளை, மாகாணசபையூடாக அதிகாராப் பரவலாக்கக் குறித்த பேச்சுக்களில் தொடர்ந்தும் ஈடுபட நான் தயார இருப்பதை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் நான் அறியத் தந்திருக்கிறேன்.

உங்களிடம் நான் கேட்பது மிகச்சிறிய விடயங்கள் மட்டுமே. இந்தியாவில் அமைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள், அங்கிருந்து இலங்கைக்கெதிராக அவர்கள் முன்னெடுத்துவரும் நாசகார வேலைத்திட்டங்கள் குறித்து நாம் மறந்துவிடலாம். ஆனால், அங்கிருந்து எமது நாட்டிற்குள் ஆயுதங்களுடன் அவர்கள் நுழைவதைத் தடுக்க எமக்கு உதவும் அதேவேளை தமிழ் அகதிகள் உவ்விடம் வருவதை தடுக்கவேண்டாம் என்றும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதனைச் செய்வதற்கு எமது இரு நாடுகளினதும் கடற்படைகள் இணைந்து கண்காணிப்பில் ஈடுபடும் நடைமுறை ஒன்றினை உருவாக்குவதன் மூலம், வடக்குக் கிழக்கில் நிலைகொண்டிருக்கும் எமது இராணுவத்தினரை போரிடுவதில் இருந்து எம்மால் விலகியிருக்கச் செய்ய முடியும்  என்பதோடு, நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை முடிவிற்குக் கொண்டுவரவும், வடக்குக் கிழக்குப் பகுதிகளை சுமூகமான சூழ்நிலைக்கு எம்மால் திருப்பிக்கொள்ளவும் முடியும் என்றும் நம்புகிறேன். உங்களின் அயலில் அமைந்திருக்கும் சிநேகபூர்வமான அயலாராகிய எங்களின் நாட்டில் இன்று நடைபெற்றுவரும் உயிரழிவுகளும், சொத்தழிவுகளும் நிறுத்தப்பட்ட நீங்கள் உண்மையாகவே அக்கறை கொண்டு செயற்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன். நாம் இருவரும் எமது மக்களின் பிரதிநிதிகள். இருவரும் பெரும்பான்மையான வாக்குகளைத் தேர்தலில் பெற்றுக்கொண்டவர்கள். நாட்டில் உள்ள வாக்காளர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் எம் இருவருக்கும் வாக்களித்திருக்கிறார்கள். அத்துடன், பாராளுமன்றத்தில் இருவரும் ஆறில் ஐந்து பெரும்பான்மையினைப் பெற்றிருக்கிறோம்.  எல்லை தாண்டிய பயங்கரவாதம் எமது நாடுகளின் ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. இனப்பிரச்சினைத் தீர்விற்குத் தடையாக இருக்கும் பல விடயங்களில் மிகமுக்கியமானதும், அழிக்கப்படவேண்டியதும் இந்தப் பயங்கரவாதமே என்பதில் எமது நாட்டின் அரசியற் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுத்திருக்கின்றன. இன்று நாம் முகம்கொடுக்கும் ஆபத்தினை உணர்ந்துகொண்டு, உங்களுக்கும் பிரச்சினையாக மாறியிருக்கும் எல்லை கடந்த தமிழ்ப் பயங்கரவாதத்தை அழிக்க எமக்கு உதவுவீர்களா?"

ஆனால், இக்கடிதத்திற்குப் பின்னரான ரஜீவின் நடவடிக்கைகள் அவர் ஜெயார் விரித்த தந்திர வலையில் முற்றாக வீழ்ந்துவிட்டார் என்பதனையே காட்டியிருந்தது.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை 

பாலசிங்கத்திற்கும், அமிர்தலிங்கத்திற்கும் பார்த்தசாரதியினால் கூறப்பட்டதற்கமைய, இந்திய உளவுத்துறை அதிகாரிகள் ரஜீவ் காந்தி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்த விளக்கங்களைப் போராளி அமைப்புக்களின் தலைவர்களுக்கு வழங்கினார்கள்.  இச்சந்திப்புக்கள் பங்குனி மாதத்தின் ஆரம்பத்தில்,  ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்திற்கு சில நாட்களுக்குப் பின்னர், சென்னையிலும், இந்துக்களின் புனித தலமாகிய காசியிலும் இடம்பெற்றிருந்தன. ரோ அமைப்பின் தலைவரான கிரிஷ் சந்திர சக்சேனா சென்னையில் போராளி அமைப்புக்களின் தலைவர்களைச் சந்தித்து இதுகுறித்துப் பேசினார். புலநாய்வுப் பணியகத்தின் இயக்குநரான எம்.கே.நாராயணன் (2009 இல் இனக்கொலையினை நடத்திய அதே நாராயணன் தான்) காசி சந்திப்பை நடத்தினார்.

 large.Girish.jpg.1211db1f49a94147f6175cb76f6e07cf.jpg

கிரிஷ் சந்திர சக்சேனா

இந்தச் சந்திப்புக் குறித்த தகவல்களை போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் பாலசிங்கம் குறிப்பிட்டிருக்கிறார். சென்னையில் இரகசிய இடமொன்றில் நடந்த இச்சந்திப்பில் தானும் பிரபாகரனும் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். உயரமான உடற்கட்டமைப்பும், மாநிறமும் கொண்ட சக்சேனா அதிகாரம் மிக்க தொனியில் தம்முடன் பேசியதாக பாலசிங்கம் கூறுகிறார். அது கலந்துரையாடல் போன்று இருக்கவில்லை, மாறாக எமக்குக் கட்டளையிடுவது போன்றே இருந்தது என்று பாலசிங்கம் எழுதுகிறார்.

இந்திரா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து ஆரம்பத்தில் விளக்கிய சக்சேனா, பின்னர் ரஜீவின் அரசாங்கத்தில் வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்துப் பேசினார். இந்திராவின் காலத்தில், தமிழர்களின் போராட்டத்தினை நசுக்குவதற்காக ஜெயார் இந்தியாவின் நலன்களுக்கு எதிரான வெளிநாட்டுச் சக்திகளை இலங்கைக்குள் கொண்டுவந்தபோது இந்தியா சர்வதேச அரசியல் அழுத்தங்களை எதிர்நோக்க வேண்டி வந்தது என்று கூறினார். 1983 ஆம் ஆண்டின் இனக்கலவரம் இனக்கொலைக்கு நிகரான குணவியல்புகளைக் கொண்டிருந்ததோடு, லட்சக்கணக்கான தமிழ் அகதிகள் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வரவும் காரணமாகியது என்று சக்சேனா கூறினார். இதனால் தமிழ்நாட்டில் பாரிய உணர்வலைகள் உருவாகி இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் நிலையும் ஏற்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார். இதனாலேயே இந்தியா இவ்விவகாரத்தில் தலையிட வேண்டிய தேவை உருவாகியது என்று அவர் மேலும் கூறினார்.

பாலசிங்கத்திடமும் பிரபாகனிடமும் பேசிய சக்சேனா. இந்தியாவின் நோக்கம் தமிழ் மக்கள் மீதான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது, சமாதானத்தை மீள உருவாக்குவது, இனங்களுக்கிடையிலான இணக்கப்பட்டினை ஊக்குவிப்பது என்பவற்றுடன், மிக முக்கியமாக பிராந்தியத்தில் உறுதிப்பாட்டினை உருவாக்குவதுதான் என்று கூறினார். மேலும், தமிழ் மக்களைப் பாதுகாக்கவும், அரச இராணுவத்தின் பிரசன்னத்தைக் கட்டுப்படுத்தவுமே தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் கூறினார். மேலும், இலங்கையின் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும் எந்த செயற்பாட்டிற்கும் இந்திரா காந்தி உங்களுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்று அவர்களைப் பார்த்து மேலும் கூறினார் சக்சேனா. இராணுவ ரீதியில் தீர்வொன்றினை ஏற்படுத்த நினைத்த ஜெயாரை பேச்சுவார்த்தை மேசைக்கு வரப்பண்ணுவதனூடாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் ரீதியிலான தீர்வொன்றிற்கு உந்துவதற்காகவே உங்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

இந்தியாவிற்குள்ளும் பல பிரிவினைவாதப் போராட்டங்களை தாம் முகம்கொடுத்து வரும் வேளையில், இலங்கையில் பிரிவினைக்கு இந்தியா உதவுவதென்பது, உள்நாட்டில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதால், இந்தியா தமிழ்ப் போராளிகளின் தனிநாட்டிற்கான கோரிக்கையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறினார். 

பின்னர் ரஜீவ் காந்தி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் குறித்து விளக்குவதில் ஈடுபட்டார் சக்சேனா, 

இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு எழுதுகிறார்,

"பிரபாகரனைப் பார்த்துக்கொண்டே தனது குரலை உயர்த்திப் பேசத் தொடங்கினார் சக்சேனா. "நீங்கள் இந்தியாவினது நிலைப்பாட்டினை புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்வத்கைத் தவிர வேறு வழியில்லை" என்று கட்டளையிடுமாற்போல் அவர் பேசினார். இந்தியாவின் புதிய பிரதமர் அயல் நாடுகளுடன், குறிப்பாக இலங்கையுடன் சிநேகபூர்வமான உறவினை ஏற்படுத்தவே விரும்புகிறார். இலங்கையில் சமாதானத்தையும், சுமூகமான சூழ்நிலையினையும் உருவாக்க அனைத்துத் தரப்புக்களையும் இணைத்து புதிய சமாதானச் செயற்பாடுகளை ஆரம்பிக்க அவர் உறுதி பூண்டிருக்கிறார். ஆகவே, தமிழ் போராளி அமைப்புக்கள் தமது ஆயுதப் போராட்டத்தை முழுமையாகக் கைவிட்டு இந்தியாவின் மத்தியஸ்த்தத்துடன், இலங்கை அரசாங்க‌த்துடன் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லும் காலம் விரைந்து உருவாகி வருகிறது என்று கூறிவிட்டு கூட்டத்திலிருந்து எழுந்து சென்றார், அத்துடன் அந்தச் சந்திப்பும் முடிவிற்கு வந்தது" என்று பாலசிங்கம் குறிப்பிடுகிறார். 

ரஜீவ் காந்தியின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்து அறிந்துகொண்டபோது பிரபாகரன் அதிர்ச்சியோ, ஏமாற்றமோ அடையவில்லை என்று பாலசிங்கம் கூறுகிறார். "ஜெயவர்த்தன தொடர்பான ரஜீவ் காந்தியின் கணிப்பு அடிப்படையிலேயே மிகவும் தவறானது என்று பிரபாகரன் கூறினார். இந்தியா அழுத்தம் கொடுத்த போர்நிறுத்தம் குறித்து பிரபாகரன் அதிருப்தியடைந்தார், இந்தியா அவசரப்பட்டு எடுத்த முடிவு என்று அதனை வர்ணித்தார். அரச இராணுவத்தின் போரிடும் வலு பலவீனப்படுத்தப்பட்டு, அவர்களின் போரிடும் மநோநிலை சிதைவடையப்பட்டாலன்றி ஜெயவர்த்தன ஒருபோதும் தமிழருக்கான நீதியினைத் தரப்போவதில்லை" என்று பிரபாகரன் கூறினார்.

 large.MKNarayanan.jpg.26db6562e4619e2a3cdc025e4862a022.jpg

1985 இலிருந்து 2009 வரை தமிழர்களின் இனவழிப்பில் நேரடியாகப் பங்காற்றிய எம்.கே.நாராயணன்

அவ்வாறே காசியில் இடம்பெற்ற சந்த்திப்பில் கலந்துகொண்ட புலநாய்வுப் பணியகத்தின் இயக்குநர் எம்.கே.நாராயணனும், ரஜீவ் காந்தியின் புதிய வெளியூரவுக் கொள்கையினை விளக்கியதோடு, அரசியல் ரீதியிலான சமரசப் பேச்சுக்களூடாக தீர்வினைக் காணும் இந்தியாவின் முயற்சிகளுக்கு அனைத்து போராளி அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், நாடுகளுக்கிடை
யிலான பிணக்குகளைத் தீர்த்துக்கொள்வதற்காக ரஜீவ் காந்தி புதுமையான யோசனைகளைக் கொண்டிருக்கிறார் என்றும் நாராயணன் தம்மிடம் கூறியதாக பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.

பிரபாகரனிடமும், பாலசிங்கத்திடமும் பேசிய நாராயணன், தென்னாசியப் பிராந்தியத்தை சமாதானமும், அமைதியும் கொண்ட வலயமாகவும், பிறச் சக்திகளால் அடிபணிய வைக்க முடியாத பிராந்தியமாகவும் உருவாக்க ரஜீவ் காந்தி முயல்கிறார் என்று கூறினார். ரஜீவின் தலைமையில், இப்பிராந்தியத்தின் வல்லரசு என்கிற ரீதியில், இந்தியா,  புதிய ஒழுங்கினையும், அமைதியையும், நாடுகளுக்கிடையே சிநேகபூர்வமான உறவினை உருவாக்குவதன் மூலம் அடைந்துகொள்ள முயல்கிறது என்றும் அவர் கூறினார். 

ரஜீவின் இச்சிந்தனையூடாக இனப்பிரச்சினைக்கு சமரசத் தீர்வொன்றினை உருவாக்க சமாதானப் பேசுக்களை ஆரம்பிக்க இந்தியா விளைகிறது என்று நாராயணன் கூறினார். ஆகவே தமிழர்களின் உண்மையான அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்ள அனைத்துத் தமிழ் அமைப்புக்களிடமிருந்தும், குறிப்பாக தமிழ்ப் போராளி  அமைப்புக்களிடமிருந்து ஒத்துழைப்பினை இந்தியா எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாற்றம் தொடர்பாக பிரபாகரனின் கருத்தை அறிந்துகொள்ள நாராயணன் முயன்றபோது, பிரபாகரன் பின்வரும் விடயங்களைக் கூறினார், 

1. அரச அடக்குமுறையே தமிழர்களின் ஆயுதப் போரட்டத்திற்குக் காரணமாக அமைந்தது.

2. புலிகள் ஆயுத மோகத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் அல்ல. ஆனால், தமிழர்களின் இருப்பையும், அவர்களின் அடையாளத்தையும் காத்துக்கொள்ள வேறு வழியின்றியே ஆயுதத்தினைக் கைகளில் எடுத்திருக்கிறார்கள்.

3. நீதியும், சமத்துவமானதுமான தீர்வொன்றினை சமாதான வழிமுறைகள் மூலம் இந்தியா பெற்றுக்கொடுக்கத் தயாராக இருந்தால் தமிழ் மக்கள் அதனை நன்றியுடன் வரவேற்பார்கள்.

4. மீண்டுவர முடியாத இனவாதச் சிந்தனைகளில் அமிழ்ந்துபோய் இருக்கும் சிங்கள அரசியல்த் தலைமைகள் குறித்து பலத்த சந்தேகங்கள் தமிழ் மக்களின் மனங்களில் இருக்கிறது.

5. ஜெயவர்த்தன தொடர்பாக ரஜீவ் காந்தி கொண்டிருக்கும் நிலைப்பாடு குறித்தும் தமிழர்கள் மிகுந்த சந்தேகம் கொண்டிருக்கிறார்கள்.

 என்று கூறியதோடு, தமிழர்களின் நலன்களுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ரஜீவ் காந்தியைத் தள்ளிவிடும் கைங்கரியங்களில் ஜெயவர்த்தனவின் குள்ளநரித்தினம் இறங்கியிருக்கிறது என்றும் நாராயணனிடம் பிரபாகரன் தெரிவித்தார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரொமேஷ் பண்டாரியின் பிடிவாதமும், யாழ்ப்பாண பொலீஸ் நிலையத் தாக்குதலும்

ரஜீவ் காந்தி கடைப்பிடிக்க ஆரம்பித்த "நல்ல அயலான்" கொள்கையின்படி தமிழர்களுக்குச் சார்பாகச் செயற்படுகிறார் என்று சிங்களவர்கள் விமர்சித்த பார்த்தசாரதி ஓரங்கட்டப்பட்டு புதிய வெளியுறவுச் செயலாளராக ரொமேஷ் பண்டாரி நியமிக்கப்பட்டார். ஜெயவர்த்தனவுடன் தொடர்புகொண்ட ரஜீவ், நேரடிப் பேச்சுக்களுக்கு முன்னர் உயர் அதிகாரியொருவரை கொழும்பிற்கு அனுப்புமாறு ஜெயார் கேட்டுக்கொண்டமையினைத் தான் வர‌வேற்பதாகவும், அதன்படி தனது புதிய வெளிவிவகாரச் செயலாளர் ரொமேஷ் பண்டாரியை இனப்பிரச்சினைக்கான தீர்வுகுறித்த ஆரம்ப கட்டப் பேச்சுக்களை நடாத்த‌ தான் அனுப்பிவைப்பதாகவும் கூறினார். பண்டாரிக்கு வழங்கப்பட்ட பணி இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுதான். கொழும்பிற்கு வந்து ஜெயவர்த்தனவுடனும் அவருடைய அமைச்சர்களுடனும் பேசி, கள நிலவரம் தொடர்பான விடயங்களைத் தெளிவாக புரிந்துகொள்ள அவர் ஒப்புக்கொண்டார். 

 large.Thondaiman.jpg.e1f9534bf08c77e4b6559ccad0cdf8f2.jpg

செளமியமூர்த்தி தொண்டைமான்

பங்குனி 25 ஆம் திகதி கொழும்பிற்கு விஜயம் செய்த பண்டாரி ஜெயவர்த்தன, லலித், காமிணி, ரொனி டி மெல், தொண்டைமான் மற்றும் தேவநாயகம் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். பண்டாரியுடனான சந்திப்பின் பின்னர் தொண்டைமானுடன் பேசும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. "இந்த மனிதனுக்கு எதுவுமே புரியவில்லை. நிரந்தரமான தீர்வொன்றிற்கு வடக்கும் கிழக்கும் இணைவது அத்தியாவசியமானது என்று நான் கூறியபோது, இணைப்பு அவசியமில்லை என்று என்னிடமே கூறுகிறார். ஜெயவர்த்தன முன்வைக்கும் மாவட்ட சபைகளைப் போதுமான தீர்வென்று வாதாடிய பண்டாரி, இச்சபைகளுக்குக் கொடுக்கப்படும் அதிகாரங்களூடாக தமிழர்களின் நலன்களைக் காத்துக்கொள்ள முடியும் என்று வாதாடுகிறார். இங்குள்ள பிரச்சினையின் ஆளம் குறித்து உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்று அவரது முகத்திற்கு நேரே கூறினேன்" என்று தொண்டைமான் ஆத்திரத்துடன் கூறினார்.

கொழும்பு விஜயத்தை முடித்துக்கொண்டு தில்லி திரும்பும் வழியில் சென்னையில் தரித்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை பண்டாரி சந்தித்தார். தன்னிடம் பேசிய பண்டாரி "ஜெயவர்த்தன மீது நம்பிக்கை வையுங்கள், புதிய பேச்சுவார்த்தைகளில் திறந்த மனதுடன் பங்குபற்றுங்கள்" என்று கேட்டுக்கொண்டதாக அமிர்தலிங்கம் என்னிடம் தெரிவித்தார். அமிர்தலிங்கத்திடம் பேசிய பண்டாரி, போராளி அமைப்புக்களுடன் இந்தியா விரைவில் பேசும் என்றும், பேச்சுவார்த்தைகளில் அவர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக யுத்த நிறுத்தம் ஒன்றும் இந்தியாவால் கொண்டுவரப்படும் என்றும் கூறினார். "ஜெயவர்த்தனவை நம்பாதீர்கள் என்று நாம் அவரிடம் மன்றாட்டமாகக் கேட்டுக்கொண்டோம், ஆனால் எமது கோரிக்கைகள் எதனையும் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்" என்று பண்டாரி குறித்து அமிர்தலிங்கம் கூறினார். 

தில்லி திரும்பியதும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பண்டாரி, "இலங்கையில் நடக்கும் போர் வெகுவிரையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு பேச்சுவார்த்தைகள் உடனே ஆரம்பிக்கப்படும்" என்று கூறினார். இலங்கையின் இனப்பிரச்சினையினை மிக இலகுவாகத் தீர்த்துக்கொள்ள முடியும் என்கிற மாய விம்பத்தை ரஜீவிடம் அவர் அழகாக முன்வைத்தார்.

பண்டாரி தனக்கு வழங்கிய அறிக்கையினை அடிப்படையாக வைத்து சித்திரை 10 ஆம் திகதி இந்தியப் பாராளுமன்றத்தில் பேசிய ரஜீவ், "சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் தெரிகிறது" என்று உற்சாகமாகக் கூறினார். சில நாட்களுக்குப் பின்னர் கொழும்பிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இந்தியத் தூதர் சத்வாலுக்கு விருந்துபசாரம் ஒன்று நடைபெற்றது. அங்கு பேசிய தொண்டைமான், ரஜீவின் பேச்சிற்குப் பதிலடியாக, "சுரங்கப்பாதையோ முடிவின்றி நீண்டு செல்கிறது, வெளிச்சத்தைக் காண்பதற்குப் பதிலாக, இருளே சூழ்ந்து வருகிறது" என்று கூறினார்.

பண்டாரியின் கொழும்பு விஜயத்தினையடுத்து உடனடியாக செயலில் இறங்கிய ரஜீவும் அவரது ஆலோசகர்களும் ஜெயவர்த்தன கேட்டுக்கொண்டதன்படி இரு நாட்டு எல்லைகளுடாகவும் நடைபெற்று வந்த போராளிகளின் போக்குவரத்தினைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கினர். தமிழ்நாட்டிலிருந்து யாழ்க்குடா நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு சென்ற‌ அதிவேகப் படகு ஒன்றை இந்தியக் கரையோர ரோந்துப் படையினர் கைப்பற்றினர். அப்படகில் இயந்திரத் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கிர்ணேட்டுக்கள் என்பன காணப்பட்டதுடன், அப்படகில் பயணித்துக்கொண்டிருந்த சீருடை தரித்த இரு .பி.ஆர்.எப்.எப் போராளிகளும் இந்தியர்களால் கைதுசெய்யப்பட்டனர்.

 இச்செய்தியை தமக்குச் சாதகமாகப் பாவித்த இலங்கையரசும், ஊடகங்களும், இந்தியா போராளிகளை முடக்க ஆரம்பித்து விட்டதாகவும், இதன் மூலம் பயங்கரவாதச் செயல்கள் குறைவடைந்து வருவதாகவும் பேசத் தொடங்கின.

போராளிகளை முடக்க இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்து லங்கா கார்டியனின் ஆசிரியர் மேர்வின் டி சில்வாவுக்கு ரஜீவ் காந்தி பங்குனி மாதத்தின் இறுதி வாரத்தில் வழங்கிய செவ்வியில், "நாம் அவர்களை முடக்கும் செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறோம், இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைகளைத் தணித்து சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கவே எத்தனிக்கிறோம்" என்று கூறியதன் மூலம் தனது அரசு போராளிகளை முடக்குவதை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

large.Margaret-Thatcher-inaugurating-Victoria-Dam.webp.9d4401c9008c00187b9ec2762982b481.webp

மகாவலி ஆற்றின் விக்டோரியா அணைக்கட்டினைத் திறந்துவைக்கும் இங்கிலாந்துப் பிரதமர் மாக்கிரெட் தட்சர், காமிணி திசாநாயக்க, ஜெயவர்த்தன மற்றும் லலித் - சித்திரை 11, 1985

பங்குனி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், சித்திரையின் ஆரம்பத்திலும் போராளிகளின் தாக்குதல்கள்கள் எதுவும் நடைபெறவில்லை. இதற்குக் காரணம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இங்கிலாந்துப் பிரதமர் மாக்கிரெட் தட்சரின் வருகையின்போது யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் பொலீஸ் நிலையம் மீது பாரிய தாக்குதல் ஒன்றினை நடத்தும் ஏற்பாடுகளில் பிரபாகரன் இறங்கியிருந்தமையாகும். இலங்கையின் விசேட பொலீஸ் அதிரடிப்படைக்கான பயிற்சிகளை வழங்க கீனி மீனி கூலிகளை இங்கிலாந்து அரசே இலங்கை அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்திருந்ததுடன், தொடர்புகளையும் ஏற்படுத்தி, பயிற்சிக்கான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்திருந்தது.

large.KittuandLTTERebels.jpg.dc1a6a1a9a338d6d2d71d11e22320f96.jpg

சித்திரை 10 ஆம் திகதி இரவு,  தளபதி கிட்டு தலைமையில் 200 புலிப் போராளிகள் நான்கு மினிபஸ்கள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் ஆகியவற்றின் மூலம் யாழ்நகரிற்குள் பிரவேசித்தார்கள். பொலீஸ் நிலையத்திற்கு எதிரே அமைந்திருந்த யாழ்ப்பாணக் கோட்டையின் முற்பகுதியைத் தவிர்த்து, பொலீஸ் நிலையத்தின் ஏனைய பகுதிகளை அரைவட்ட வடிவில் சூழ்ந்து நிலையெடுத்துக்கொண்டார்கள். அருகில் இருந்த தொலைத்தொடர்பு பரிவர்த்தனை மையத்திற்குச் சென்ற போராளிகள் அங்கிருந்த ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தனர். இன்னொரு குழுவினர் யாழ் வைத்தியசாலைக்கு அருகில் இருந்த இலங்கை மின்சாரச் சபைக்குச் சென்று மின்சாரத்தினைத் துண்டித்தனர். நகர் முழுவதும் இருளில் மூழ்கிக்கொள்ள, இரவு 9:45 மணியாகியிருந்தது. 

நகரை இருள் சூழ்ந்து கொண்டதே தாக்குதலை ஆரம்பிப்பதற்கான சமிக்ஞையாக இருந்திருக்க வேண்டும். உடனடியாக பொலீஸ் நிலையம் மீதும், அருகிலிருந்த உதவிப் பொலீஸ் மா அதிபரின் அலுவலகம் மீதும் புலிகள் தாக்குதலை ஆரம்பித்தனர். சுமார் 100 பொலீஸார் நிலை கொண்டிருந்த பொலீஸ் நிலையம் மீது மோட்டார்கள், கிர்ணேட் உந்துகணைச் செலுத்திகள் மற்றும் எறிகுண்டுகளைப் பயன்படுத்திப் புலிகள் தாக்கினர். சுமார் 3 மணிநேரம் நடந்த தாக்குதலில் நான்கு பொலீஸார் கொல்லப்பட, இருவர் ஆயுதங்களுடன் புலிகளிடம் சரணடைய, மீதமானோர் அருகிலிருந்த கோட்டை இராணுவ முகாமிற்குள் ஓடிச்சென்று தஞ்சமடைந்தனர். கட்டிடத்திற்குள் நுழைந்த புலிகள் அங்கிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியபின், கட்டடத்திற்குக் குண்டுவைத்துத் தகர்த்துவிட்டுச் சென்றனர்.

சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்த குருநகர் இராணுவ முகாமிற்கு பொலீஸ் நிலையம் தாக்கப்படுவது தெரிந்திருந்தும், தாக்குதலை முறியடிக்க இராணுவத்தினரை அனுப்ப விரும்பவில்லை. தமது முகாமும் தக்கப்பட்டால் திருப்பித் தாக்குவதற்கான நிலையெடுத்து அவர்கள் முகாமிலேயே காத்திருந்தனர். பொலீஸ் நிலையத்தைத் தக்கவைக்க இராணுவம் முயலும் பட்சத்தில் அந்த முயற்சியைத் தோற்கடிக்க புலிகளும் தமது அணிகளை அப்பகுதியில் நிறுத்தியிருந்தனர். பொலீஸ் நிலையம் நோக்கிச் செல்லும் வீதிகளில் அமைந்திருந்த மதகுகளைத் தகர்த்து, வீதிகளில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்ததுடன், யாழ்நகர் முழுவதும் புலிகளின் கண்காணிப்பின் கீழ் அன்றிரவு கொண்டுவரப்பட்டிருந்தது.

 இத்தாக்குதலில் 35 உப இயந்திரத் துப்பாக்கிகள் (எஸ்.எம்.ஜி), 80 தானியங்கித் துப்பாக்கிகள் (சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டவை), ஒரு கிர்ணேட் உந்துகணைச் செலுத்தி, 175 கிர்ணேட்டுக்கள், 100 புகைக்குண்டுகள், 50 கைத்துப்பாக்கிகள் மற்றும் பெருமளவு துப்பாக்கி ரவைகள் என்பன புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

சென்னையிலிருந்த புலிகளின் அலுவலகம் இத்தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தது. அவர்கள் விடுத்த அறிக்கையில், "இந்தப் பிரதேசத்தின் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு நவீன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன, இவ்வாறான குண்டுச் சத்தத்தினை இப்பகுதி இதற்கு முன்னர் கேட்டதில்லை" என்று கூறப்பட்டிருந்தது.

ஜெயாரினால் எதுவுமே பேச முடியவில்லை. மாக்கிரெட் தட்சரை அவமதிக்கவே புலிகள் இதனைச் செய்தார்கள் என்றும், தமிழர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தச் செய்வதன் மூலம் அவர்களைப் போராளிகளை நோக்கித் தள்ளவே இதனைச் செய்தார்கள் என்றும் அவர் கூறினார்.

ரஜீவ் காந்தியின் புதிய வெளியுறவுக் கொள்கைக்குப் பதிலாகவும், ஜெயவர்த்தனவின் தமிழ் மக்களின் மீதான படுகொலைகளுக்கு பதிலடியாகவும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய போராளிகள், தமக்குள் ஒருமித்த முன்னணி ஒன்றை உருவாக்கும் செயற்பாட்டிலும் இறங்கினார்கள்.

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் உருவாக்கமும் அதில் இணைந்துகொள்வதில் புலிகள் காட்டிய தயக்கமும்

 

1985 ஆம் ஆண்டு சித்திரை 10 ஆம் திகதி யாழ் பொலீஸ் நிலையம் தரைமட்டமாக்கப்பட்டது. அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பதாக ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனும் போராளிகளின் கூட்டமைப்பிற்குள் புலிகளும் இணைந்துகொண்டனர். ஏனைய மூன்று அமைப்புக்களுமான ஈரோஸ், .பி.ஆர்.எல்.எப் மற்றும் டெலோ ஆகியவை கருநாநிதியின் கோரிக்கைக்கு ஏற்ப இதில் இணைந்திருந்தனர். 

large.ENLF-1.jpg.52c089b6359f9907600b6bcf466ed538.jpg

 ஈழத் தேசிய விடுதலை முன்னணி ‍- சிறி சபாரட்ணம், பிரபாகரன், பாலகுமார் மற்றும் பத்மநாபா

.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரான பத்மநாபாவின் முயற்சியினாலேயே இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. சென்னையில் இயங்கிவந்த .பி.ஆர்.எல்.எப் அமைப்பின் செயலகத்தில் இக்கூட்டமைப்பின் முதலாவது சந்திப்பு சித்திரையில் இடம்பெற்றிருந்தது. மூன்று போராளி அமைப்புக்களான டெலோ, ஈரோஸ், .பி.ஆர்.எல்.எப் ஆகியவற்றின் தலைவர்களும், மூத்த போராளிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 இச்சந்திப்பின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் தீர்மானிக்கப்பட்டிருந்தன,

 1. கருநாநிதியினால் கருத்துருவாக்கம் கொடுக்கப்பட்ட இவ்வமைப்பின் ஸ்த்தாபக‌ உறுப்பினர்களாக டெலோ, ஈரோஸ் மற்றும் .பி.ஆர்.எல்.எப் அமைப்புக்களே இருப்பர்.

2. இக்கூட்டமைப்பிற்கு ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்று பெயரிடப்படும்.

3. இக்கூட்டமைப்பின் அரசியல் நோக்கங்கள் விரிவாக‌ ஆராயப்படும்

4.  ஏனைய போராளி அமைப்புக்களையும் இக்கூட்டமைப்பில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பது .

இச்சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் புலிகளையும் புளொட் அமைப்பையும் இக்கூட்டமைப்பிற்குள் இணைந்துகொள்ள கோரிக்கை விடுக்க வேண்டும் என்கிற கருத்தினைக் கொண்டிருந்தனர். அதன்படி, புளொட் அமைப்பையே முதலில் தொடர்புகொண்டனர். புலிகளை முதலில் தொடர்புகொண்டால், புளொட் அமைப்பு தம்முடன் இணைந்துகொள்ள விரும்பாது என்று அஞ்சியமையினாலேயே புலிகளைத் தொடர்புகொள்வதற்கு முன்னர், புளொட் அமைப்பினைத் தொடர்புகொள்ள எண்ணினர். இக்கூட்டமைப்பின் செயலாளராக .பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ரமேஷ் எனும் போராளி தெரிவுசெய்யப்பட்டார். 

இச்சந்திப்பில் கலந்துகொண்ட தலைவர்கள் இதுகுறித்து அறிக்கையொன்றினையும் தமிழில் வெளியிட்டிருந்தனர்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்க தமிழ் போராளி அமைக்களுக்கிடையேயான ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்துகொண்ட டெலோ, ஈரோஸ் மற்றும் .பி.ஆர்.எல்.எப் ஆகிய அமைப்புக்களின் தலைவர்கள் ஒருங்கிணைந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனும் கூட்டமைப்பினை உருவாக்கியிருக்கிறோம்.

எமது அமைக்களின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் காத்துக்கொள்ளும் அதேவேளை எமது கூட்டமைப்பிற்குள் ஏனைய முக்கிய அமைப்புக்களையும் இணைத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம். எமது அரசியல் நோக்கத்தையும் செயற்பாட்டுத் திட்டத்தையும் பின்வருமாறு வரையறை செய்கிறோம், 

நாம் வரிந்துகொண்டிருக்கும் அடிப்படை அரசியல் நோக்கங்களாக பின்வருவன அடையாளம் காணப்பட்டிருக்கின்றன,

1. சிறிலங்கா ஆக்கிரமிப்பிலிருந்து எமது தாய்நாட்டிற்கான சுதந்திரத்தை வென்றெடுப்பது.

2. முற்றான தமிழ் ஈழ சுதந்திரத்தை அன்றி வேறு எந்தத் தீர்விற்கும் உடன்படுவதில்லை.

3.அனைத்து மக்களையும் இணைத்த ஆயுதப் போராட்டத்தின் ஊடாக விடுதலையினை வென்றெடுப்பது.

4. ஒரு சோசலிச சமூகத்தை தமிழ் ஈழத்தில் உருவாக்குவது.

5. அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும், நவ காலணித்துவத்தினதும் விலங்குகளில் இருந்தும் தமிழ் ஈழத்தை விடுவிப்பது.

நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் குறைந்தபட்ச செயற்திட்டம் பின்வருமாறு அமையும்,

 1. சிறிலங்கா இராணுவத்திற்கெதிரான எமது ஆயுத நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது.

2. வெளிநாடுகளில் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தினை முன்னெடுப்பது.

3. விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கான நிதியினை தனியாரிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுக்கொள்வதற்கு பொதுவான நிதியம் ஒன்றினை உருவாக்குவது. 

எமது மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் அனைத்து விடுதலை இயக்கங்களையும் எம்முடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.  

இவ்வறிக்கை சிறி சபாரட்ணம், பத்மநாபா மற்றும் பாலகுமார் ஆகியோரினால் கையொப்பம் இடப்பட்டிருந்தது.

large.ENLF-2.jpg.d309f91529e1962a7ea3cb9e47e2cf5a.jpg

கருநாநிதிக்கு மிகவும் நெருக்கமானவராகத் திகழ்ந்த சிறி சபாரட்ணம் ஏனையவர்களை இக்கூட்டமைப்பில் இணையுமாறு வலியுறுத்தி வந்தார் என்பதுடன், கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது உடனடியாக அது குறித்து கருநாநிதிக்கும் அறியத் தந்தார். இக்கூட்டமைப்பின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த கருநாநிதி, அமைப்பின் தலைவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். மறுநாள் தி.மு. வின்  அனைத்துப் பத்திரிக்கைகளிலும் இப்புகைப்படம் வெளிவந்திருந்தது.

தமிழ் போராளி அமைப்புக்களை ஒரு கூட்டமைப்பிற்குள் கொண்டுவர எடுத்த முடிவினை முதலில் விமர்சித்தவர் எம்.ஜி.ஆர். மறுநாள் புலிகளின் தூதுக்குழுவினைச் சந்தித்த எம்.ஜி.ஆர், பாலசிங்கத்திடம் பேசும்போது புலிகள் ஏன் இந்தக் கூட்டமைப்பில் இணைவதற்குத் தயக்கம் காட்டுகிறார்கள் என்று வினவினார். பதிலளித்த பாலசிங்கம் மூன்று காரணங்களை முன்வைத்து, இக்கூட்டமைப்பு ஏன் சாத்தியப்படாது என்பதை விளக்கினார்.  

விடுதலைப் போராட்டத்தின் மீது முற்றான ஈடுபாடு கொண்டு இயங்குவதற்கான விருப்பம் இல்லாது போதல் : சில அமைப்புக்கள் செயற்பாடுகள் இன்றியே காணப்பட்டன. இன்னும்  சில அமைப்புக்கள் கடிதத் தலைப்புகளுடன் தமது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொண்டிருந்தனர். வேறு சில அமைப்புக்கள் அரசாங்கத்தின் இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களில் ஈடுபட விரும்பவில்லை. தமது இயலாமைக்கான காரணங்களை கண்டுபிடித்து விவாதிப்பதிலேயே அவர்களின் காலம் செலவிடப்பட்டு வந்தது. மேலும், புளொட் அமைப்புப் பேசிவரும் மக்கள்மயப்படுத்தப்பட்ட போராட்டமும், .பி.ஆர்.எல்.எப் அமைப்பின் சமூகத்தின் அடித்தட்டு வர்க்கத்திலிருந்து போராட்டத்தினை வளர்ப்பது என்பதெல்லாம் தமது இயலாமையினை மறைக்க அவர்களால் முன்வைக்கப்பட்டு வரும் சாட்டுக்கள் என்றும் பாலசிங்கம் கூறினார்.

செயற்பாடுகளைத் திட்டமிடுவதிலும், ஒருங்கிணைப்பதிலும் காட்டும் அசமந்தமும், இயலாமையும்:   பாலசிங்கம் பேசும்போது, ஏனைய அமைப்புக்கள் தமது செயற்பாடுகளை திட்டமிடுவதிலும், ஒருங்கிணைப்பதிலும் தோற்று வருவதாகக் கூறினார். தமது அமைப்பின் நிதி வளத்தினையே சரியாக முறையில் நிர்வகிக்கவும், தமது போராளிகளைப் பராமரிக்கவும் முடியாமல் இருப்பவர்கள் எவ்வாறு ஒருங்கிணைந்த வழியில் இதனைச் செய்வார்கள் என்று அவர் வினவினார்?

ஏனைய போராளி அமைப்புகளில் காணப்பட்ட ஒழுக்கக் கேடான பழக்க வழக்கங்கள்  எம்.ஜி.ஆர் இடம் மேலும் பேசிய பாலசிங்கம், சில அமைப்புக்களில் காணப்படும் நிதிப்பற்றாக்குறையும், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய விடயங்களில் காணப்படும் குறைபாடுகளும் அவ்வமைப்புக்களின் போராளிகளுக்கிடையே ஒழுக்கமின்மையினை ஊக்குவித்து வருவதாகக் கூறினார். மேலும், புலிகளின் போராளிகளிடையே கடுமையான ஒழுக்கத்தினையும், கட்டுப்பாட்டினையும் பேண பிரபாகரன் முன்னுரிமை கொடுத்துவருவதாகவும், பத்திரிக்கைகளில் வரும் போராளி அமைப்புக்களின் சமூகச் சீர்கேடுகள் ஏனைய போராளி அமைப்புக்களினால் செய்யப்பட்டவை என்றும் கூறினார். "தமிழ்நாட்டு மக்கள் தமிழ் ஈழத்தில் போராடி வரும் அனைத்து அமைப்புக்களையும் புலிகள் என்றே அழைத்து வருவதால், வேறு அமைப்புக்களால் செய்யப்பட்டு வரும் ஒழுக்கச் சீர்கேடுகள் புலிகளின் தலையில் வந்து வீழ்கிறது" என்று பாலசிங்கம் தொடர்ந்து கூறினார்.  

1984 சித்திரையில் எம்.ஜி.ஆர் போராளி அமைப்புக்களிடையே ஒற்றுமையினை வலியுறுத்தியபோதும் அதற்கான அரசியல்த் தேவை அப்போது இருக்கவில்லை. அவ்வாறே, 1982 ஆம் ஆண்டு பாண்டி பஜார் துப்பாக்கிச் சண்டையின்பின்னர் ஈரோஸ் அமைப்பின் அருளரால் முன்வைக்கப்பட்ட அமைப்புக்களுக்கிடையிலான ஒற்றுமை குறித்த கோரிக்கையும் அன்றைய அரசியல் நிலைமையினால் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போராளி அமைப்புக்களுக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகள்

1984 ஆம் ஆண்டு ஈழ்த் தேசிய விடுதலை முன்னணி உருவாக்கப்பட்டபோது புலிகள் அதில் இணைய ஆர்வம் காட்டவில்லை. மேலும், இவ்வமைப்பினை உருவாக்கிய தலைவர்களுக்கும் புலிகளை இணைத்துக்கொள்வதில் விருப்பம் இருக்கவில்லை. டெலோ அமைப்பினரோடு ஏற்பட்டிருந்த முரண்பாடு ஒன்றின் காரணமாகவே புலிகள் இக்கூட்டமைப்பில் இணைவதைத் தவிர்த்து வந்தனர். இதைவிடவும், இக்கூட்டமைப்பில் புலிகளும் இணைந்துகொண்டால் அவர்களின் ஆதிக்கமே அமைப்பில் காணப்படும் என்று இம்மூன்று தலைவர்களும் அஞ்சினர்.

புலிகள் - டெலோ ஆரம்ப முரண்பாடு

1984 ஆம் ஆடியில் சிறி சபாரட்ணம் வெளியிட்ட அறிக்கையொன்றில் புலிகள் இயக்கத்திற்கும், டெலோவிற்கும் இடையில் காணப்பட்ட நம்பிக்கையீனம் குறித்தும், முரண்பாடு குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வறிக்கையில் தன்னைப் படுகொலை செய்ய புலிகள் முயல்வதாக சபாரட்ணம் குற்றஞ்சாட்டியிருந்தார். தனது அமைப்பினுள் இருந்த சில அதிருப்தியாளர்களால் இரு முறை தன்மீதான படுகொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இம்முயற்சிகளை புலிகள் வெளியில் இருந்து ஆதரித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் 1982 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து சிறிசபாரட்ணம் டெலோ அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார் . அவர் தலைமைப் பொறுப்பினை எடுத்துக்கொண்ட காலத்திலிருந்தே டெலோ அமைப்பிற்குள் உள்வீட்டு முரண்பாடுகள் தோன்றி வளர்ந்து வந்தன. 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இம்முரண்பாடுகள் உச்சத்திற்குச் சென்றிருந்தன. சிறி சபாரட்னம் அரசியல் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டுவதில்லையென்றும், இராணுவச் செயற்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், ரோ அமைப்பின் தாளத்திற்கு ஏற்பவே ஆடுவதாகவும், போராளிகளின் நலன் குறித்து அவர் அக்கறை கொள்வதில்லையென்றும் அமைப்பிற்குள் இருந்த பல மூத்த உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். மேலும், பயிற்சி முகாம்களில் காணப்படும் குறைபாடுகளை சில போராளிகள் சுட்டிக் காட்டியபோது, அவற்றினை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, அப்போராளிகளைக சிறி சபாரட்ணம் கடுமையாகத் தண்டித்ததாகவும் பல குற்றச்சட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டன.

சிறீ சபாரட்ணம் மேலும் கூறுகையில், 1984 ஆம் ஆண்டு வைகாசி 5 ஆம் கதி அமைப்பிற்குள் இருக்கும் அதிருப்தியாளர்கள் தன்னைக் கடத்திச் சென்று கொன்றுவிடத் திட்டம் தீட்டியதாகவும், ஆனால் அதுகுறித்து தான் முன்னமே அறிந்துகொண்டதனால் தனது வதிவிடத்தை அன்றிரவு மாற்றிக்கொண்டு தப்பித்ததாகவும் தெரிவித்தார். இக்கடத்தலைச் செய்வதற்காக தனது அமைப்பிற்குள் இருந்த அதிருப்தியாளர்கள் புலிகளிடமிருந்து ஒரு ரிவோல்வரையும், ஒரு போத்தல் குளோரோபோமையும் வாங்கியிருந்தார்கள் என்றும் குறிப்பிட்டார். மேலும், இச்சம்பவம் நடைபெற்று 4 நாட்களுக்குப் பின்னரும் அதே குழுவினர் தன்னைக் கொல்ல எத்தனித்தபோது, தான் சாதுரியமாகச் செயற்பட்டு அதனைத் தடுத்துவிட்டதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தன்னைக் கொல்ல முயன்றவர்களை தனக்கு விசுவாசமான போராளிகள் கைதுசெய்து அடைத்து வைத்திருந்த்தாகவும், ஆனால் புலிகளின் அணியொன்று அவர்களை அடைத்துவைத்த டெலோ போராளிகள் மீது ஆனி 6 ஆம் திகதி தாக்குதல் நடத்தி அவர்களை விடுதலை செய்துவிட்டதாகவும் அவ்வறிக்கை மேலும் கூறியது. ஆனால், இக்குற்றச்சாட்டுக்களை பிரபாகரன் முற்றாக மறுத்திருந்தார்.

புலிகள் - புளொட் முரண்பாடு 

1984 ஆம் ஆண்டு கார்த்திகையில் குறும்பசிட்டி பகுதியில் ஆறு புலிகளின் போராளிகளை புளொட் அமைப்பினர் கடத்திச் சென்று கடுமையான சித்திரவதைகளின் பின்னர் சுட்டுக் கொன்றிருந்தனர். இதனையடுத்து புலிகளுக்கும் புளொட் அமைப்பினருக்கும் இடையே பூசல்கள் உருவாக ஆரம்பித்திருந்தன. குறும்பசிட்டிப் படுகொலைகளை .பி.ஆர்.எல்.அப் அமைப்பினரின் ஈழச் செய்தி எனும் பத்திரிக்கை விலாவாரியாக விபரித்திருந்தது. இதனையடுத்து .பி.ஆர்.எல்.எப் அமைப்பினருக்கும் புலிகளுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஒன்று ஏற்பட்டிருந்தது. 

ஈ.பி.ஆர்.எல்.எப் - புளொட் முரண்பாடு

ஈழத் தேசிய முன்னணி எனும் கூட்டமைப்பிற்குள் புலிகளைக் கொண்டுவர .பி.ஆர்.எல்.எப் அமைப்பு விரும்பியது. ஆனால் ஈரோஸின் பாலகுமாரோ புளொட் அமைப்பை எப்படியாவது கூட்டமைப்பிற்குள் இழுத்துவரப் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால், புளொட் கூட்டமைப்பிற்குள் வருவதை .பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் எதிர்த்தனர். மட்டக்களப்புச் சிறையுடைப்பின் பின்னர் .பி.ஆர்.எல்.எப் அமைப்பினரும் புளொட் அமைப்பினரும் முரண்பட்டுப் போயிருந்தனர். சிறையுடைப்பினைத் திட்டமிட்டு செயற்படுத்தியது புளொட் அமைப்பினரே என்று உமா மகேஸ்வரன் உரிமை கோரியிருந்தார். சிறையுடைப்பில் மாணிக்கதாசனின் பங்கினை வெகுவாக உயர்த்திப் பேசிய உமா, டக்கிளஸ் தேவாநந்தாவின் பங்களிப்பினை வேண்டுமென்றே மறைத்துப் பேசிவந்தார். .பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் இப்பிணக்கினை மறந்து, முன்னோக்கிச் செல்ல விரும்பினார். ஆனால், இரண்டாம் நிலைத் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ரமேஷ் போன்றவர்கள் புளொட் அமைப்பினர் கூட்டமைப்பிற்குள் வருவதை எதிர்த்தே வந்தனர்.

1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒன்றினையடுத்து புளொட் அமைப்பினரை ஈழத் தேசிய முன்னணி எனும் கூட்டமைப்பிற்குள் கொண்டுவர தான் எடுத்து வந்த முயற்சிகளை ஈரோஸின் பாலகுமார் கைவிட்டார். கோடாம்பாக்கம், வேளாளர் வீதியில்  அமைந்திருந்த இக்கூட்டமைப்பின் அலுவலகத்தில் பாலகுமார் இருந்தவேளை அவரைச் சந்திக்க உமா மகேஸ்வரன் வந்திருந்தார்.அவரை சிநேகபூர்வமாக வரவேற்ற பாலகுமார், தமது கூட்டமைப்பான ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் புளொட் அமைப்பும் இணைந்துகொள்ள வேண்டும் என்கிற வேண்டுகோளினை உமாவிடம் முன்வைத்தார். இதனால் மிகுந்த கோபமடைந்த உமா, "இந்த கூட்டமைப்பின் கடிதத் தலைப்பில் ஈறோஸ் அமைப்பின் இலட்சினைப் போன்ற இலட்சினை அகற்றப்படும்வரை நான் இணைந்துகொள்ள மாட்டேன்" என்று கூறினார்.

1985 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பார்த்தசாரதியுடனும், ரஜீவுடனும் பேசியதன் பின்னர், ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைவதென்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி முடிவெடுத்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஆகியோருடன் பேசிய பார்த்தசாரதி, தமிழ் அமைப்புக்கள் தமக்குள் ஒருமித்த அணியொன்றினை உருவாக்குவதன் மூலம், இலங்கை குறித்து மாறி வரும்   இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தமிழருக்குச் சார்பான நிலையினைத் தோற்றுவிக்கலாம் என்று ஆலோசனை வழங்கியிருந்தார். இதனையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் சந்திப்பொன்றிற்கு இணங்கிய ஈழத் தேசிய விடுதலை முன்னணியினர், புலிகளையும் புளொட் அமைப்பையும் அழைப்பதென்றும் முடிவெடுத்தனர்.

ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளரான ரமேஷுக்கு, யாழ் பல்லைக் கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவரானஇராஜநாயகத்தினூடாக பிரபாகரன் அனுப்பிய செய்தியில்,   இராணுவத்தினர் மீதான தாக்குதல்களில் ஈழத் தேசிய விடுதலை முன்னணியினருடன் தான் ஒருங்கிணைந்து செயற்படத் தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அக்கூட்டமைப்பில் இணைய விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார்.

 large.Kodampakkammap.jpg.ca056ece147e39751c155c8781cb46f1.jpg

சென்னை, கோடாம்பாக்கம் ரயில்வே நிலையம்

ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கோடாம்பாக்கம் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பாக அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், வி.பொன்னம்பலம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் கலந்துகொண்டவர்களிடம் பார்த்தசாரதியும், ரஜீவும் தன்னுடன் பேசிய இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கையான "அயல்நாடுகளுடன் சிநேகபூர்வமான உறவுகளை ஏற்படுத்துவது" எனும் விடயம் குறித்து விளங்கப்படுத்தினார் அமிர்தலிங்கம்.

மேலும், ரஜீவ் காந்தி, ஜெயவர்த்தன மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் இணைந்து ஜெயவர்த்தனவுடன் பேச வேண்டும் என்று ரஜீவ் கேட்டுள்ளதாகவும் அமிர்தலிங்கம் மேலும் கூறினார்.

"எமது குரல் உரக்க ஒலிக்க வேண்டுமானால், நாம் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். ஈழத் தேசிய விடுதலை முன்னணி கடந்த 12 மாதங்களாக இயங்கி வருகிறது. ஆகவே, அதனுடன் இணைந்து, அதனை மேலும் பலப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய விரும்புகிறோம்" என்று அமிர்தலிங்கம் கூறினார்.

மேலும், அங்கு பேசிய அமிர், புலிகளையும் ஈழத் தேசிய விடுதலை முன்னணிக்குள் கொண்டுவர ஏனைய அமைப்புக்களின் தலைவர்கள் முயலவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த ரமேஷ், பிரபாகரனிடம் இருந்து தனக்குக் கிடைத்த செய்தியை அங்கு வெளிப்படுத்தியதுடன், "அவர் எம்முடன் சேர்ந்து செயற்பட விரும்புகிறார், ஆனால் இணைந்துகொள்ளத் தயங்குகிறார்" என்று கூறினார்.  

அதன் பின்னர், பிரபாகரனையும் கூட்டமைப்பிற்குள் கொண்டுவர முயலுமாறு பத்மநாபாவையும், ரமேஷையும் கேட்டுக்கொண்டதுடன், இன்னொரு நாளைக்கு இச்சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

பாரத்தசாரதியுடனான பாலசிங்கத்தின் சந்திப்பிற்குப் பிறகு புலிகள் அமைப்பிற்குள்ளும், ஈழத் தேசிய விடுதலை முன்னணியினருடன் சேர்ந்து செயற்படலாம் என்கிற பேச்சுக்கள் இடம்பெற ஆரம்பித்திருந்தன. ஆகவேதான், இராணுவ ரீதியில் இக்கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற பிரபாகரனும் சம்மதம் தெரிவித்திருந்தார். இந்தியாவால் முன்னெடுக்கப்படவிருக்கும் யுத்த நிறுத்தம் மற்றும் சமரசப் பேச்சுவார்த்தைகளின்போது தமிழர் தரப்பினைப் பலப்படுத்த இணைந்த முன்னணியொன்று தேவை என்கிற கருத்தினை புலிகள் இயக்கத்திற்குள் பாலசிங்கமே முதலில் முன்வைத்திருந்தார். பிரபாகரனோ யுத்த நிறுத்தத்தினை நிராகரித்து வந்ததுடன், ஜெயவர்த்தனவை நம்பமுடியாது என்கிற நிலைப்பாட்டிலும் இருந்தார்.

போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் புலிகள் இயக்கத்திற்குள் அன்று நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்து பாலசிங்கம் இவ்வாறு குறிப்பிடுகிறார், 

"வெகு விரைவில் யுத்த நிறுத்தம் ஒன்றினையும், அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளையும் இந்தியா ஆரம்பிக்கும் என்பதை நாம் அனுமானித்தோம் . இழப்பதற்கு எதுவுமே இல்லாததனால், யுத்த நிறுத்தம் ஒன்றினை ஜெயவர்த்தன வரவேற்பார் என்று நாம் கணக்கிட்டோம். முதலாவதாக,  தமிழ்ப் போராளி அமைப்புக்களிடமிருந்து இடையறாது தாக்குதல்களை எதிர்நோக்கி வந்த அவரது இராணுவத்தினருக்கு யுத்த நிறுத்தம் என்பது தேவையான ஓய்வினைக் கொடுக்கும் என்று அவர் எதிர்பார்க்கலாம்".

"இரண்டாவது விடயம், பேச்சுக்களின்போது விடாப்பிடியான நிலையினைக் கடைப்பிடித்து, தமிழரின் அபிலாஷைகளை முழுவதுமாக உதாசீனம் செய்வதென்பது ஜெயாரைப் பொறுத்தவரையில் கடிணமாக இருக்காது. ஆகவே, ரஜீவ் காந்தியின் சமாதானத் திட்டம் ஜெயாரின் சதிகளுக்குத் துணைபோய், தமிழரின் நலன்களுக்கு கேடாக அமையப்போகிறது. இந்தியாவின் இலங்கை தொடர்பான புதிய வெளியுறவுக் கொள்கைக்கும், தமிழரின் அபிலாஷைகளுக்கும் இடையே பாரிய விரிசல் ஒன்று ஏற்பட்டு வருவதை எம்மால் காணக்கூடியதாக இருந்தது".

 எவருடனும் இணைந்துகொள்ளாது தனியாகவே செயற்படுவதென்று தான் எடுத்த முடிவினால், மாறிவரும் சூழ்நிலைகளில் புலிகள் அமைப்பு தனிமைப்படுத்தப்பட்டு பலவீனமாக்கப்படும் என்பதை பிரபாகரன் உணர்ந்திருந்தார். சிறி சபாரட்ணத்தை தமது யோசனைக்கு ஏற்ப செயற்பட வைப்பதன் மூலமும், தமது முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஊடாகவும் ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனும் கூட்டமைப்பினை இந்தியா முற்றுமுழுதாக தனது செல்வாக்கினுள்  கொண்டுவந்துவிடும் என்பதை பிரபாகரன் உணர்ந்துகொண்டார். இந்தியா முன்னெடுத்திருக்கும் யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கெதிராக தான் எடுக்கும் எந்த முயற்சியும் தோற்கடிக்கப்படும் என்பதையும் பிரபாகரன் கண்டுகொண்டார். ஆகவே, அவர் முன்னால் இருந்த ஒரே தெரிவு, ஈழத் தேசிய விடுதலை முன்னணியினருடன் இணைந்துகொள்வதன் மூலம் தன்னைப் பலப்படுத்திக் கொள்வதுதான்.

1985 ஆம் ஆண்டு பங்குனி இரண்டாம் வாரத்தில் இராஜநாயகத்தின் ஊடாக ரமேஷுக்கு கூட்டமைப்பில் தானும் இணைந்துகொள்ள இணக்கம் தெரிவிப்பதாக செய்தியனுப்பினார் பிரபாகரன். பங்குனி 23 ஆம் திகதி கூட்டமைப்பின் அலுவலகத்தில் சந்திப்பொன்றினை ரமேஷ் ஒழுங்குசெய்தார். இச்சந்திப்பில் கலந்துகொள்ள பாலசிங்கத்தையும், இராஜநாயகத்தையும் பிரபாகரன் அனுப்பி வைத்தார். 

இச்சந்திப்பில், ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைந்துகொள்ளும் பிரபாகரனின் விருப்பத்தை பாலசிங்கம் அறிவித்தார். மேலும், இலங்கை தொடர்பான இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்தும், அது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் ஏற்படுத்தப்போகும் பாதகமான தாக்கங்கள் குறித்தும் பார்த்தசாரதி தன்னிடம் தெரிவித்த கருத்துக்களை அங்கே பகிர்ந்துகொண்டார். இந்தியா செய்ய நினைக்கும் யுத்த நிறுத்தம், தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்குப் பாதகமானது என்றும் அவர் கூறினார். பேச்சுவார்த்தைகளின் போது விடாப்பிடியான நிலைப்பாட்டினை எடுப்பதன் மூலம், பேச்சுக்களை இழுத்தடித்து, கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கும் தனது இராணுவத்திற்கு ஓய்வினையும், மீள் ஒருங்கிணைவிற்கான கால அவகாசத்தையும் வழங்க ஜெயவர்த்தன முயல்வார் என்றும் அவர் மேலும் கூறினார். "எமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள எமக்கிருக்கும் ஒரே கவசம் எமக்கிடையிலான ஒற்றுமைதான். எமக்கிடையே பொதுவான அரசியல், இராணுவ செயற்திட்டம் ஒன்று இருப்பது அவசியம்" என்றும் அவர் கூறினார்.

ஈழத் தேசிய விடுதலை முன்னணிக்குள் புலிகளையும் இணைத்துக்கொள்வதில் தமது விருப்பத்தினைத் தெரிவித்த அதன் தலைவர்கள், வெகு விரைவில் அமைப்புக்களின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்ய விரும்புவதாகக் கூறினர். அதற்குப் பதிலளித்த பாலசிங்கம், பிரபாகரனின் பாதுகாப்புக் குறித்து தாம் கவனம் கொள்வதால், முதலாவது கூட்டத்தினை ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் நடத்தலாம் என்று பரிந்துரை செய்தார். "இக்கூட்டம் ஒரு ஐந்து நட்சத்திர நிகழ்வாகும், ஆகவே ஐந்து நட்சத்திர விடுதியில் இதனை நடத்துவதே சாலப் பொறுத்தம்" என்று தனது வழமையான நகைச்சுவை உணர்வுடன் கூறினார் பாலசிங்கம். 

பாலசிங்கத்திற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய கூட்டமைப்பின் செயலாளரான ரமேஷ், "ஜெயாரின் ஐந்து நட்சத்திர ஜனநாயகத்திற்கு பேச்சுவார்த்தைகளில் முகங்கொடுக்கப்போகும் நாங்கள் அவரது பாணியிலேயே இக்கூட்டத்தையும் நடத்தலாம்" என்று என்று நகைச்சுவையாகப் பதிலளித்தார்.

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலாவது சந்திப்பு  
large.ENLF-1.jpg.52c089b6359f9907600b6bcf466ed538.jpg

 

நான்கு முக்கியமான போராளித் தலைவர்களுக்கிடையிலான முதலாவது சந்திப்பு சென்னையில் அமைந்திருக்கும் நட்சத்திர விடுதியான Plush Hotel  இல் சித்திரை 10 ஆம் திகதி (1985) நடைபெற்றது. புலிகள் இயக்கத்தில் சார்பில் பிரபாகரன், இராசநாயகம், பாலசிங்கம் ஆகியோர் பங்குபற்றினர். டெலோ அமைப்பின் சார்பில் சிறீ சபாரட்ணமும், மதியும் பங்குபற்றினர். .பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, குலசேகரன், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் அமைப்புச் சார்பாக பாலகுமாரும் முகிலனும் பங்குபற்றினர்.

ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் என்கிற ரீதியில் ரமேஷ் இக்கூட்டத்தை நடத்தியதுடன், விருந்தினர்களையும் வரவேற்றார். பிரபாகரன், பாலகுமார், சிறீ சபாரட்ணம் ஆகியோருக்கிடையில் ஏற்கனவே பரீட்சயம் இருந்தது. ஆனால், பிரபாகரனும், பத்மநாபாவும் சந்தித்துக்கொண்டது இதுவே முதல்த் தடவை.

வழமைபோலவே, சூழ்நிலையின் தீவிரத்தினைத் தணிக்கும் விதமாக நகைச்சுவையாக சில விடயங்களைப் பேசத் தொடங்கினார் பாலசிங்கம். ஆனால், கூட்டம் தீவிரமாகவே நடைபெற்றது. ரஜீவ் காந்தியின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்த பேச்சுக்களை ஆரம்பிக்கும் முன்னர் இரு விடயங்கள் குறித்துப் பேச்சினை ஆரம்பித்தார் பிரபாகரன். முதலாவது, அக்கூட்டமைப்பின் பெயர். இரண்டாவது , போராளி அமைப்புக்களுக்கிடையே பிணக்குகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடைமுறைகள். 

"நாங்கள் போராடுவதற்கு எதற்காக?" என்று பிரபாகரன் கேட்டார். "அது தமிழ் ஈழத்திற்காகவா அல்லது ஈழத்திற்காகவா? நாமும், டெலோ அமைப்பும் தமிழ் ஈழத்திற்காகவே போராடுகிறோம், ஆனால் உங்கள் அமைப்பின் பெயரில் ஈழம் என்றே இருக்கிறது. முதலில் எமது நோக்கம் குறித்த தெளிவு எமக்கு இருக்க வேண்டும். ஆகவே, ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனும் பெயர் மாற்றப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.

பிரபாகரன் கூறியதில் ஒரு காரணம் இருந்தது. ஈழம் எனும் சொல் புராதன இலக்கியங்களில் முழு இலங்கை நாட்டையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. சங்க கால இலக்கியங்களில் இலங்கைத் தமிழ்ப் புலவர் ஒருவரை ஈழத்து பூத்தந்தேவனார் என்று குறிக்கப்பட்டிருப்பதுடன், இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உணவுவகைகளை ஈழத்து உணவு என்று சங்க கால இலக்கியங்கள் கூறுகின்றன. ஆகவேதான், இலங்கையில் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களை புலிகளும், டெலோ அமைப்பும் தமிழ் ஈழம் என்று அழைக்கின்றன. இவ்விரு போராளி அமைப்புக்களும் தமது போராட்ட இலட்சியத்தை தமிழ் ஈழம் என்றே அழைத்தும் வருகின்றன. ஆனால், .பி.ஆர்.எல்.எப் அமைப்போ அல்லது ஈரோஸ் அமைப்போ தமிழ் ஈழத்திற்கும், ஈழத்திற்குமான வேறுபாட்டினை நோக்கவில்லை.

பாலகுமார் இதுகுறித்துப் பேசும்போது, "நாமும், .பி.ஆர்.எல்.எப் அமைப்பும் ஈழம் என்றே பாவித்து வருகிறோம், நாம் ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்கிற கூட்டமைப்பினை உருவாக்கும்போது டெலோவும் அதனை ஏற்றுக்கொண்டது" என்று பதிலளித்தார்.

நிலைமையின் பதற்றத்தைத் தவிர்க்க எத்தனித்த பத்மநாபா, "நாம் பெயர் குறித்து சர்ச்சையில் ஈடுபடலாகாது. எமக்குள் ஒற்றுமையே முக்கியமானது. அவசியமென்றால், பெயர்மாற்றம் குறித்தும் சிந்திக்கலாம்" என்று கூறினார்.

பதிலுக்குப் பேசிய பாலகுமார், ".பி.ஆர்.எல்.எப் அமைப்பைப் பொறுத்தவரை பெயர் மாற்றம் ஒரு பெரியவிடயமாக இல்லாதிருக்கலாம், ஆனால் நான் எனது அமைப்பில் உள்ளவர்களுடன் பேசித்தான் இதுகுறித்துக் கருத்துக் கூறமுடியும்" என்று கூறினார்.

பின்னர் போராளிகளின் தலைவர்கள் கூட்டமைப்பின் பெயர் குறித்து பின்னர் தீர்மானிக்கலாம் என்று கூறியதுடன், இச்சந்திப்பின் பெயரை "ஈழத் தேசிய விடுதலை முன்னணி - புலிகள் சந்திப்பு" என்று அறிக்கையில் குறிப்பிடலாம் என்று இணங்கினர். இதன்மூலம், கூட்டமைப்பிற்குள் இணைந்தாலும், புலிகளின் தனித்துவத்தை பிரபாகரனால் பாதுகாத்துக்கொள்ள முடிந்தது. கூட்டத்தின் நிறைவில் வெளியிடப்பட்ட அறிக்கையின் முதலாவது வாக்கியம் பின்வருமாறு அமைந்திருந்தது, "ஈழத்தின் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ஈழத் தேசிய விடுதலை முன்னணியும், புலிகள் இயக்கமும் ஒன்றிணைந்து செயற்பட முடிவெடுத்திருக்கிறோம்" .

இக்கூட்டத்தில் பிரபாகரனால் எழுப்பப்பட்ட இரண்டாவது விடயம், ஒரு போராளி அமைப்பிலிருந்து இன்னொரு அமைப்பிற்கு போராளிகள் தாவுவது அவ்வமைப்புக்களுக்குள் முரண்பாட்டினை உருவாக்கி வருகிறது என்பது. "எனது அமைப்பிலிருந்து வெளியேறி, இன்னொரு அமைப்பிற்குச் சென்று, அங்கிருந்து எனது அமைப்பைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி, எமது இயக்கத்தின் நடவடிக்கைகளுக்குப் பாதகம் ஏற்படுத்த எவர் முயன்றாலும், நிச்சயமாக நான் அவர்களைப் பிடிப்பேன். அவ்வாறே, உங்களின் அமைப்புக்களிலிருந்து எவர் வெளியேறி எனது அமைப்பில் இணைந்து, உங்களின் நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்க முயன்றால் நீங்களும் அதைச் செய்யுங்கள். இவ்வாறான இயக்கத் தாவல்களை நாம் முறியடிக்க வேண்டும். ஒரு போராளி தனது அமைப்பிலிருந்து வெளியேற விரும்பினால், அவர் அதனைத் தாராளமாகச் செய்யலாம், ஆனால், அவர் இன்னொரு அமைப்பில் இணைய முடியாது. ஆகவே, நாம் இதுகுறித்து முடிவொன்றிற்கு வரவேண்டும்.  உங்கள் அமைப்பிலிருந்து வெளியேறி எனது அமைப்பில் சேர வருபவர்களை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை, அதுபோலவே எனது அமைப்பிலிருந்து உங்களிடம் வருபவர்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது" என்று பிரபாகரன் தீர்க்கமாகக் கூறினார்.  

பிரபாகரனது கருத்தை பத்மநாபா ஏற்றுக்கொள்ள மறுத்தார். இவ்வாறான் நடவடிக்கைகள் போராளிகளின் சுதந்திரத்தைப் பாதித்து விடும் என்று அவர் கூறினார். அது ஜனநாயகத்திற்கு முரணானது என்று வாதிட்டார்.

பத்மநாபாவின் கருத்தினை சிறீ சபாரட்ணமும் பாலகுமாரும் ஆதரித்தார்கள். இதனால், இவ்விடயம் அப்போதைக்குக்  கிடப்பில் போடப்பட்டது.

கூட்டத்தின் முக்கிய விடயம் குறித்து தலைவர்களிடையே இணக்காப்பாடு ஏற்பட்டிருந்தது. அதாவது, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா எடுத்திருக்கும் புதிய வெளியுறவுக் கொள்கை. பாலசிங்கம் இத்தீர்மானம் குறித்து தனது போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்,

 இணைந்த செயற்பாடுகளுக்கான திட்டத்தினை வரைதல்,

பொதுவான அரசியல் நோக்கத்தில் இணக்கப்பாடு : சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர் தாயகத்திற்கு முற்றான சுதந்திரத்தை ஏற்படுத்துவது. இலங்கை இராணுவத்திற்கெதிராக ஒவ்வொரு அமைப்பும் செய்யவேண்டிய பங்கினை ஏற்றுக்கொள்வது. அமைப்புக்களுக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பின் மூலம் ஒன்றிணைந்த இராணுவ தாக்குதல்களை உருவாக்குவது. இந்தியா முன்னெடுத்துவரும் யுத்த நிறுத்த முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்து கலந்தாலோசிக்க தலைவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக‌ச் சந்தித்துக்கொள்வது. 

கூட்டத்தின் முடிவில் தலைவர்கள் அனைவரும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிட்டதுடன், குழுவாக நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். பாலசிங்கத்தின் கூற்றுப்படி அக்கூட்டம் சுமூகமாகவும், வினைத்திறன் கொண்டதுமாக அமைந்திருந்தது. 

 தலைவர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கை,

ஈழத்தின் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்திச் செல்ல ஈழத் தேசிய விடுதலை முன்னணியும், தமிழீழ விடுதலைப் புலிகளும் இணைந்து செயலாற்றுவதென்று முடிவெடுத்திருக்கிறோம். ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனும் அமைப்பு சித்திரை 1984 இல் உருவாக்கப்பட்டதுடன், இக்கூட்டமைப்பில் மூன்று போராளி அமைப்புக்களான டெலோ, ஈரோஸ் மற்றும் .பி.ஆர்.எல்.எப் ஆகியவை அங்கம் வகிக்கின்றன.

இந்த நான்கு போராளி அமைப்புக்களினதும் ஒன்றிணைவின் மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஆயுத ரீதியான போராட்டமென்பது மிக முக்கிய திருப்பமாக உருமாறியிருக்கிறது. இதன்மூலம் புரட்சிகரப் போராளிகள் ஒன்றிணைந்து தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தைப் பலப்படுத்த முடியும்.

இராணுவ அடக்குமுறைகளுக்கு நாளாந்தம் முகங்கொடுத்து வரும் தமிழ் மக்கள், எமது இந்த அறிவிப்பின் மூலம் மகிழ்வடைவார்கள் என்றும், இதனால் உற்சாகமடைந்து தமது விடுதலை பாதையில் முன்னோக்கிப் பயணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தேசிய விடுதலை முன்னணி ஆகிய நாம் பின்வரும் அரசியல் நோக்கங்களை வரிந்து கொண்டிருக்கிறோம்,

1. சிங்கள அடக்குமுறை ஆட்சியிலிருந்து எமது தாய்நாட்டின் இறையாண்மையினையும், சுதந்திரத்தையும் நாம் வென்றெடுப்போம்.

2. சுய நிர்ணய உரிமையின் அடிப்படியில் உருவாக்கப்படும் சுதந்திரமான தனிநாட்டைத் தவிர வேறு எந்தத் தீர்விற்கும் நாம் உடன்படப் போவதில்லை.

3. ஒருமித்த மக்கள் ஆயுதப் போராட்டத்தை எமது போராட்ட வடிவமாக வரிந்துகொள்ளுவோம்.

4. எமது விடுதலைப் போராட்டத்தினை சோசலிசப் பாதையில் வழிநடத்துவதனூடாக, சோசலிச சமூகத்தை எமது தாயகத்தில் ஏற்படுத்துவோம்.

5. உலக ஏகாதிபத்தியங்களில் இருந்தும், நவ காலணித்துவ அடக்குமுறைகளிலிருந்தும் எமது தாயகத்தை விடுவித்து, அணிசேராக் கொள்கையுடன் அதனை வழிநடத்துவோம்.

அரசியல் ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நாம் இணைந்து செயற்படுவதென்றும், இலங்கை இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை ஒருங்கிணைந்து செயற்படுத்துவதென்றும் நாம் முடிவெடுத்திருக்கிறோம். 

எமது மக்களிடமும், எமது மக்களின் விடுதலையினை ஆதரிக்கும் அன்பர்களிடமும் நாம் விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில், நீங்கள் தந்துவரும் ஆதரவினையும் உதவியினையும் மேலும் தொடர்வதன்மூலம், எம்மால் இன்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஒருங்கிணைவை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதுதான்.  

அறிக்கையின் இறுதியில் பிரபாகரன், சிறீ சபாரட்ணம், பாலகுமார் மற்றும் பத்மநாபா ஆகியோர் கையொப்பம் இட்டிருந்தனர்.

போராளி அமைப்புக்களுக்கிடையிலான கூட்டமைப்பு தொடர்பான செய்திகள் வெளிவர ஆரம்பித்த போது வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என்று அனைவருமே மிகுந்த உவகையடைந்து காணப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழான ஈழநாடு இதனை வரவேற்றிருந்தது. பல முக்கியமான தமிழர்களும், அமைப்புக்களும் போராளிகளுக்கிடையிலான ஒற்றுமையினை பாராட்டியிருந்தனர். எம்.ஜி.ஆர் மற்றும் கருநாநிதி ஆகியோரும் இதனை வரவேற்றிருந்தனர்.

இது இவ்வாறிருக்க, போர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தமது தாக்குதல்களை போராளிகள் தீவிரப்படுத்தியிருந்தனர். பண்டிதரின் வீரச்சாவினையடுத்து புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியாக பதவியேற்றுக்கொண்ட கிட்டு, போராளிகளிடையே காணப்பட்ட புதிய உத்வேகத்தை இராணுவத்தினர் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தியதோடு, ஒவ்வொரு அமைப்பிற்குமென்று பகுதிகளை பொறுப்புக் கொடுத்திருந்தார். தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களின் ஊடாக புலிகள் அமைப்பே இராணுவத் தாக்குதல்களில் முன்னணிக்கு வரத் தொடங்கியிருந்தது.

தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்க தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நடத்துவதை இராணுவமும், பொலீஸாரும் ஒரு நடைமுறையாகவே கடைப்பிடித்து வந்தனர். ஆனால், இப்பழிவாங்கல்த் தாக்குதல்களைத் தடுப்பதற்குப் போராளிகள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மக்களிடையே வரவேற்பினைப் பெறத் தொடங்கின. இவ்வாறான தடுப்புத் தாக்குதல்களை கிட்டுவே முன்னின்று, ஒருங்கிணைத்து நடத்தினார்.

 

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டாவது சந்திப்பு

 கள நிலவரத்தைச் சற்றும் புரிந்திராத இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும், அவர்களால் வழிநடத்தப்பட்ட ரஜீவும் ஜெயவர்த்தனவுடனான உறவுப்பாலத்தைக் கட்டும் முயற்சியில் மூழ்கியதுடன், யுத்த நிறுத்தம் குறித்த அதீத நம்பிக்கையுடன், பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளிலும் முழுமூச்சாக இறங்கியிருந்தனர். இந்தியர்களின் இந்த மனநிலை போராளித் தலைவர்கள் இரண்டாவது முறை சந்திப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தியிருந்தது. 

முதலாவது சந்திப்பு நடந்து சரியாக ஒரு வாரத்தின் பின்னர் இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்தது. பிரபாகரன் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. புலிகள் சார்பாக பாலசிங்கமும் இராஜநாயகமும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய பாலசிங்கம், கூட்டமைப்பின் பெயர் குறித்து பிரபாகரன் சிக்கல் எதனையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்று தன்னிடம் கூறி அனுப்பியதாக அறிவித்தார். மேலும், பதம்நாபா அன்று கூறிய ஒற்றுமையே இன்று அவசியம், கூட்டமைப்பின் பெயர் அல்ல என்பதை பிரபாகரனும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். ஆகவே, போராளிகளின் கூட்டமைப்பை "ஈழத் தேசிய விடுதலை முன்னணி - புலிகள் முன்னணி" என்று அழைக்கப்படுவது பொருத்தமானது என்று பாலசிங்கம் பிரேரித்தபோது, ஏனைய தலைவர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர்.  

பெயரில் விட்டுக் கொடுப்பொன்றினைச் செய்ததன் ஊடாக போராளிகளுக்கிடையில் ஒற்றுமையினை உருவாக்கியதுடன், புலிகளின் தனித்துவத்தையும் பிரபாகரன் உறுதிப்படுத்திக் கொண்டார். மேலும், புலிகளின் மேலாதிக்கமும் இக்கூட்டமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இக்கூட்டமைப்பு வெளியார் பார்வைக்கு அழகனாதாகத் தோன்றினாலும், தொடர்ச்சியான சச்சரவுகளைக் கொண்ட, ஒருவரில் ஒருவர் சந்தேகம் கொண்ட, ஒருவரை ஒருவர் தடக்கி வீழ்த்த தருணம் பார்த்திருக்கும் இவர்களை இந்திய புலநாய்வுத்துறை மிக இலகுவாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடும் என்று பிரபாகரன் நம்பினார். குறிப்பாக, சிறீ சபாரட்ணத்தின் மீது ரோ கொண்டிருந்த செல்வாக்கின் அளவை உணர்ந்துகொண்ட பிரபாகரன், போராளி அமைப்புக்களுக்கிடையிலான கூட்டமைப்பின் மூலம் அச்செல்வாக்கினை குறைக்கலாம் என்று எதிர்பார்த்தார்.

பிரபாகரன் எதிர்பார்த்தது போலவே போராளித்தலைவர்களை திம்பு பேச்சுவார்த்தை நோக்கி இந்தியா தள்ளிச் சென்றது. இப்பேச்சுக்களை டெயிலி நியூஸ் சார்பாகப் பதிவு செய்ய நானும் திம்பு சென்றிருந்தேன். அங்கிருந்த வேளை இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ரொமேஷ் பண்டாரியை செவ்வி காணும் வாய்ப்புக் கிடைத்தது. சுமார் 10 நாட்கள் சென்னையில் தங்கியிருந்து தமிழ்நாட்டுத் தலைவர்களையும், கொழும்பின் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகளையும் சந்தித்தேன். அவர்கள் எல்லோரும் அப்போது இந்தியா வகுத்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு போராளிகளைப் பலவந்தப்படுத்தும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திம்புப் பேச்சுவார்த்தை முஸ்தீபுகள்

1985 ஆம் ஆண்டு வைகாசி 23 ஆம் திகதி இந்திய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரியை அவரது அலுவலகம் அமைந்திருக்கும் செளத் புளொக்கில் சந்திக்கச் சென்றிருந்தேன். அவரைச் சந்தித்து டெயிலிநியூஸ் பத்திரிகைக்காக செவ்வி காணவே அங்கு சென்றேன். நான் அங்கு இருந்த நேரத்தில், அறையின் கதவைத் திறந்துகொண்டு சற்றுக் குட்டையான உருவ அமைப்பைக் கொண்ட நபர் ஒருவர் உள்ளே எட்டிப் பார்த்தார். "மன்னிக்க வேண்டும், ஒரு இரண்டு நிமிடங்கள் தருவீர்களா?" என்று என்னிடம் கேட்டுக்கொண்ட பண்டாரி, எழுந்துசென்று அந்தக் குள்ளமான மனிதரைக் கைலாகு கொடுத்து வரவேற்றார். சில நிமிட நேரம் அவருடன் பேசிய பின்னர்,  "நான் உங்களைக் கொழும்பில் சந்திக்கிறேன்" என்று கூறி விடைகொடுத்தார்.

பின்னர், தான் அமர்ந்திருந்த இருக்கையில் மீண்டும் வந்து அமர்ந்துகொண்டு பேசத் தொடங்கினார். "இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்தியத் தூதுவரே அவர். நான் இலங்கைக்குச் செல்லும்போது, அவரும் அங்கிருப்பார்" என்று என்னிடம் கூறினார். 

"அப்படியா, ஏன் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை? நான் அவரிடமும் பல விடயங்கள் குறித்து செவ்வி காணவேண்டுமே?" என்று நான் கேட்டேன். பதிலளித்த பண்டாரி, "நீங்கள் அவரை கொழும்பில் சந்திப்பீர்கள்" என்று கூறினார்.

large.JNDEEPSHIT.jpg.375814cbb87c0d8a019eca41162445a3.jpg 

அந்தக் குள்ளமான மனிதர் வேறு யாருமல்ல. அவர்தான் வைகாசி 27 ஆம் திகதி கொழும்பிற்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்ட ஜே.என்.டிக்ஷீட். அதற்கு முதல்நாள் கொழும்பை வந்தடைந்த டிக்ஷீட், தனது நியமனக் கடிதத்தை இலங்கை வெளியுறவு அமைச்சர் ஹமீதிடம் கையளித்து பணியை ஆரம்பித்திருந்தார். தனது நியமனத்தை ஜெயவர்த்தனவிடமும் அவர் அன்றிரவு 9:30 மணிக்கு அவரது இல்லத்திற்குச் சென்று காண்பித்தார்.  அவரை முதன்முதலாக பேட்டிகண்ட செய்தியாளரும் நான் தான்.

மறுநாள் காலை தில்லியிலிருந்து புறப்பட்டு இலங்கை செல்லும் வழியில், திருச்சியில் இறங்கி எனது சகோதரனுடன் ஒருநாளைக் கழித்தேன்.

திருச்சியில் இருந்த நாளில், கொழும்பில் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியும் எனது நண்பருமான ஒருவரைச் சந்திக்க முயன்றேன். அவர் அப்போது தமிழ்ப் போராளி அமைப்புக்கள் மீது இந்தியாவின் கட்டளைகளுக்கு அமைந்து நடக்கும் அழுத்தத்தினை  கொடுக்கும் அதிகாரிகளுடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் என்று அறிந்துகொண்டேன். ஆனியில், தில்லிக்குப் பயணித்த தமிழர் பிரதிநிதிகளுடன் அவரும் சென்றிருந்தார்.

பண்டாரியிடம் விடைபெற்று  கொழும்பு செல்ல டிக்ஷீட் வந்தபோது, நான் இலங்கை தொடர்பான இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்து பண்டாரியுடன் பேசிக்கொண்டிருந்தேன். தென்னாசியாவில் சமாதான வலயம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ரஜீவ் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்று பண்டாரி என்னிடம் தெரிவித்தார். இந்தியாவின் அயல் நாடுகளுடன் சிநேகபூர்வமான உறவினை உருவாக்க ரஜீவ் முயன்றுகொண்டிருந்தார். அயல்நாடுகளுடன் கெடுபிடியான மூத்த அண்ணன் எனும் அவப்பெயரைக் களைந்துவிட ரஜீவ் முயன்றுவருவதாக கூறப்பட்டது.

ஆகவே, ரஜீவின் இந்த சிந்தனையூடாகவே இலங்கையுடனான உறவும் இருக்கவேண்டும் என்று தாம் விருபுவதாக நான் சந்தித்த இந்தியர்கள் என்னிடம் கூறினார்கள். "சிறிலங்காவில் சண்டைகள் நிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவேண்டும். 28 ஆம் திகதி நான் இலங்கைக்குச் செல்லும்போது இதற்கான அடித்தளத்தினை இடும் பணிகளை ஆரம்பிப்பேன்" என்று பண்டாரி என்னிடம் தெரிவித்தார்.

ஆனால், அவர் கூறும் அடித்தள வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்பதை நான் அறிவேன். பங்குனியில் அவர் முதன்முதலாக இலங்கை வந்திருந்தபோது, "இந்தியாவின் விருப்பத்தின்படி ஒழுகி நடக்க போராளிகள் ஒத்துக்கொள்கிறார்களா?" என்று நான் அவரிடம் கேட்டபோது, "அவர்களுக்கு வேறு வழியில்லை, இந்தியா சொல்வதை அவர்கள் நிச்சயம் கேட்கவேண்டும். பேச்சுவார்த்தைகள் ஊடாக தமக்குத் தேவையானதை அவர்கள் பெற்றுக்கொள்ள முயலவேண்டும்" என்று பண்டாரி என்னிடம் அன்று கூறியிருந்தார். 

இயல்பாகவே அடுத்ததாக அவரிடம் கேட்கவேண்டிய கேள்வியொன்று எண்ணத்தில் வந்துபோனது, "அப்படியானால், ஜெயாரும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படி நடப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" என்பதுதான் அந்தக் கேள்வி. ஆனால், அன்று அதனைக் கேட்பதை நான் தவிர்த்துக்கொண்டேன்.

எனது தகவல்களைத் தாங்கியவாறு டெயிலி நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது. நான் கொழும்பை வந்தடைந்தவுடன், லலித் அதுலத் முதலி எனக்கு நன்றி தெரிவித்திருந்ததாக எனது ஆசிரியர் மணிக் டி சில்வா என்னிடம் கூறினார். மேலும், டிக்ஷீட்டை இந்திய வெளியுறவகத்தில் சந்தித்து செவ்வி கண்டமைக்காகவும் மணிக் என்னிடம் நன்றி தெரிவித்தார். டிக்ஷீட் என்னைக் கண்டவுடன் அதிசயித்துப் போனார். "நான் கொழும்பு வருமுன் வெளியுற‌வுச் செயலாளரைச் சந்திக்க வந்தபோது, அவருடன் பேசிக்கொண்டிருந்தது நீங்கள் தானே?" என்று என்னைக் கேட்டார். அந்தச் சந்திப்பும், மட்ராஸ் கிறிஸ்ட்டியன் கல்லூரியில் நாம் இருவரும் கல்விகற்றோம் என்கிற விடயமும் எம்மிருவரையும் நெருங்கி வரப்பண்ணியிருந்தது.

என்னிடம் பேசும்போது, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மிகுந்த கண்ணியத்துடன் தன்னை நடத்தியதாக டிக்ஷீட் கூறினார். மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தீர்க்கமான உறவு ஒன்று உருவாகும் வேளையில் நீங்கள் வருகை தந்திருக்கிறீர்கள் என்று தன்னை ஹமீது வாழ்த்தியதாகவும் டிக்ஷீட் என்னிடம் கூறினார். இலங்கை தொடர்பாக இந்திரா கடைப்பிடித்த கொள்கைகள், நோக்கங்களை விடவும் ரஜீவ் காத்திரமான கொள்கைகளையும், செயற்பாடுகளையும் மேற்கொள்வார் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஹமீது டிக்ஷீட்டிடம் கூறியிருக்கிறார். இந்த நிபந்தனையுடனேயே இந்தியாவின் கோரிக்கையான போராளிகளுடன் இலங்கையரசாங்கம் நேரடியாகப் பேசவேண்டும் என்பதனை ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் ஹமீது மேலும் கூறியிருக்கிறார்.

டிக்ஷீட்டுடனான முதலாவது சந்திப்பிலேயே அவர் பத்திரிக்கையாளர்களுடன் மிகவும் நட்பாகப் பழகக் கூடியவர் என்பதை அறிந்துகொண்டேன். அதுமட்டுமல்லாமல், பத்திரிக்கையாளர்களை எப்படி இலாவகமாகக் கையாளவேண்டும் என்கிற உத்தியையும் அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார். பத்திரிக்கையாளர்கள் தன்னிடமிருந்து எதனை அறிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பதை நன்கு தெரிந்துகொண்ட அவர், அவர்களைத் தனது நோக்கத்திற்காக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையும் நன்கு தெரிந்துவைத்திருந்தார். ஜெயவர்த்தன்விடம் தனது நியமனக் கடிதத்தினைக் காண்பிக்கச் சென்றபோது, ஜெயவர்த்தனவுடன் தான் பேசிய விடயங்கள் சிலதை, "இதனை வெளியில்க் கூறவேண்டாம்" என்கிற எச்சரிக்கையுடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார் டிக்ஷீட். ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, பண்டாரி நாளை இலங்கை வருகிறார். வந்தவுடன் உங்கள் அரசாங்கத்திற்கும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒழுங்குகள் பற்றிப் பேசுவார் என்று கூறியிருக்கிறார் டிக்ஷீட். மேலும், தமிழ்ப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிப்போர் குறித்த விடயங்கள் தொடர்பாகவும் பண்டாரி உங்களிடம் அறியத் தருவார் என்றும் ஜெயாரிடம் அவர் கூறியிருக்கிறார். அடுத்ததாக, ரஜீவுடனான நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கான உத்தியோக பூர்வமான‌ அழைப்பினையும் பண்டாரி விடுப்பார் என்று டிக்ஷீட் கூறியிருக்கிறார்.

டிக்ஷீட்டிடம் பேசிய ஜெயார், ரஜீவுடனான சந்திப்பை தான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடந்தகால கசப்புணர்வுகளையும், ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் அவநம்பிக்கைகளையும் களைய ரஜீவ் முயற்சிப்பார் என்று தான் நம்புவதாகவும் கூறியிருக்கிறார். 

இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ்ப் பிரதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்களுக்கான நடவடிக்கைகள் குறித்த செயற்திட்டத்தினை ரோ வின் இயக்குனர் சக்சேனாவே வரைந்திருந்தார். அதன் பிரதியொன்று லலித் அதுலத் முதலியுடனான சந்திப்பின் பின்னர் அவரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த ஆவணத்தில் பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகள், கால அட்டவணை போன்றவை உள்ளிட்ட பல இரகசிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பணி என்னவெனில், இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதுதான் என்று டிக்ஷீட் என்னிடம் கூறினார். எனது செவ்வியினூடாக இலங்கையரசாங்கத்திற்கும் தமிழ்ப் போராளிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் யுத்த நிறுத்தம் குறித்த செய்தியை இலங்கை மக்களுக்கு அறியத்தரவும், அதற்காக அவர்களைத் தயார்ப்படுத்தவும் அவர் எண்ணியிருந்தார்.

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தியாவின் சமாதான முயற்சிகளை தனது இராணுவத்தினரின் நலனுக்காகப் பாவிக்க எண்ணிய ஜெயாரும், தொடர்ச்சியான தாக்குதல்களில் இறங்கிய போராளிகளும்
 

தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்கள், குறிப்பாக பிரபாகரன் இந்தியாவின் இலங்கை தொடர்பான புதிய வெளியுறவுக் கொள்கை குறித்து மிகுந்த அதிருப்தியடைந்திருந்தார். ஆகவே, இந்தியாவின் இந்தத் திடீர் மாற்றத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையினைக் கையாள்வது குறித்து ஆராய ஈழத்தேசிய விடுதலை முன்னணி - புலிகள் கூட்டமைப்பு அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபடத் தொடங்கியது. அதுபோன்றே, இந்தியாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய சூழ்நிலையினைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்த நினைத்த ஜெயவர்த்தனவும், லலித்தும், இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கையூடாக தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தையும், அவர்களின் கோரிக்கையான தனிநாடு அல்லது சுயாட்சி நிறைந்த பிராந்தியம் எனும் கருப்பொருளையும் முற்றாகவே சிதைத்துவிட கங்கணம் கட்டினர்.

தனது இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு, அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மூச்சுவிடுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றினை உருவாக்கிக் கொடுக்க  நினைத்தார் ஜெயார். யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் கடமைகளை முற்றிலுமாகக் கைவிட்டிருந்த பொலீஸார் தமது முகாம்களைக் காப்பாற்றிக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தனர். வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளில் பொலீஸாரும் இராணுவத்தினரும் கூட்டாக கவச வாகனத் தொடரணிகளில் ரோந்து புரிந்து வந்தனர்.

போராளிகள், இந்த ரோந்து தொடரணிகள் மீதும், இராணுவ முகாம்கள் மற்றும் பொலீஸ் நிலையங்கள் மீதும் தமது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே வந்தனர்.

சித்திரை 10 ஆம் திகதி ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் இணைந்துகொண்ட அதே நாள், புலிகள் யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்திருந்தனர். இத்தாக்குதல் அரசாங்கத்தின் உயர் மட்டத்திலும், பாதுகாப்புத் துறையினரின் அதிகாரிகள் மட்டத்திலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்குப் பதிலடியாக தமிழ் மக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களுக்கு ஜெயார் உத்தரவிட்டார். இது அன்று நிலவிய சூழ்நிலையினை மோசாமக்கி விட்டிருந்தது.இத்தாக்குதல்கள் போராளிகளை நோக்கி மக்களை மேலும் தள்ளிவிட்டது. பெருமளவு இளைஞர்கள் போராளி அமைப்புக்களில் இணைந்துகொண்டதுடன், தமிழ் மக்களைக் காக்கும் வீரன் என்கிற நிலைக்குப் பிரபாகரன் மக்கள் மத்தியில் உயர்ந்துகொண்டிருந்தார். தமிழ் மக்களைக் காக்கும் நோக்கில் புலிகளுடன் இணைந்து ஏனைய போராளி அமைப்புக்களும் கண்ணிவெடித் தாக்குதல்கள் மற்றும் பொலீஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்கள் என்பவற்றில் ஈடுபடலாயினர். இராணுவத்தினரும், பொலீஸாரும் முகாம்களுக்குள் தொடர்ந்தும் முடக்கப்பட்டு வந்ததுடன் அவர்களின் ரோந்து அணிகள் மீது பதுங்கியிருந்து தாக்கும் செயற்பாடுகளும் போராளிகளால் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. 

சித்திரை 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்ல எத்தனித்த 27 தமிழ்ப் பொதுமக்களை கடற்படை சுட்டுக் கொன்றிருந்தது. இத்தாக்குதலுக்குப் பழிவாங்க மாத்தையா தலைமையிலான புலிகளின் அணியொன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் ரோந்து சென்ற பொலீஸ் இராணுவ‌ வாகனத் தொடரணி மீது சித்திரை 21 ஆம் திகதி (1985) தாக்குதலொன்றினை மேற்கொண்டது. படகில் கொல்லப்பட்ட அனைவரையும் பயங்கரவாதிகள் என்று அழைத்த லலித் அதுலத் முதலி, கடற்பயணத் தடையினை மீறி எவர் சென்றாலும் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது சரியென்று பாராளுமன்றத்தில் கூறினார். ஒட்டுசுட்டான் கண்ணிவெடித் தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் பலியாகினர். 

தம்மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் தாக்குதலில் இராணுவ இறங்கியது. புலிகளின் தாக்குதல் நடைபெற்ற பிரதேசத்தைச் சுற்றிவளைத்த இராணுவம், அங்கிருந்த 24 இளைஞர்களை இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றது. தம்மால் கொல்லப்பட்ட தமிழர்களை அனைவரையும் புலிகள் என்று அறிவித்த இராணுவம், கண்ணிவெடித் தாக்குதலுக்குப் பின்னரான துப்பாக்கிச் சண்டையில் இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் அறிவித்தது. பின்னர், அதேநாள், அப்பிரதேசத்தில் வான் ஒன்றில் பயணித்த 10 தமிழர்களை வீதியில் இறக்கிய இராணுவம், அவர்களையும் வரிசையில் நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றது. அங்கு கொல்லப்பட்ட பத்து அப்பாவிகளும் புலிகளின் பட்டியலில் இராணுவத்தினரால் சேர்க்கப்பட்டார்கள்.

மறுநாளான சித்திரை 22 ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பகுதியில் சென்ற இராணுவ தொடரணி மீது மாத்தையா தலைமையிலான புலிகள் அணி நடத்திய தாக்குதலில் 20 இராணுவத்தினர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.

சித்திரை 25 ஆம் திகதி, என்றுமில்லாதவாறு புளொட் அமைப்பு ஒரு தாக்குதலில் இறங்கியது. சிங்களப் பகுதியான மதவாச்சி பொலீஸ் நிலையம் மீது புளொட் நடத்திய தாக்குதலின் போது 12 ரைபிள்களும், 24 ஒற்றைச் சன்னத் துப்பாக்கிகளும், ஒரு உப இயந்திரத் துப்பாக்கியும், துப்பாக்கி ரவைகளும் அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இத்தாக்குதலில் சிங்களப் பொலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். தேசிய புரட்சி குறித்துப் பேசிவந்த புளொட் , ஒரு சிங்களவரைக் கொன்றதற்காக சிங்கள மக்களிடம் மன்னிப்புக் கேட்டிருந்தது.

large.PrabakaranandPulendran.jpg.205919eb7d5b3d2c35c46aa5b997313d.jpg

புலேந்திரனுடன் பிரபாகரன் 1987 ல்

 அதேநாள், அம்பாறை மாவட்டத்தில் விசேட அதிரடிப்படை மீது ஈரோஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் ஆறு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டனர்.

மறுநாள், சித்திரை 26 ஆம் திகதி, புலிகளின் திருகோணமலை மாவட்டத் தளபதி சந்தோசம் மாஸ்ட்டரும், புலேந்திரன் அம்மானும் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கட்டைப்பறிச்சான் பகுதியில் இராணுவ ரோந்தணி மீது தாக்குதல் ஒன்றினை நடத்தினர். கண்ணிவெடியில் அகப்பட்ட இராணுவத்தினர் பயணம் செய்த ஜீப் வண்டி சிதறியபோது, ஒரு லெப்டினன்ட் தர அதிகாரியும் ஆறு சிப்பாய்களும் கொல்லப்பட்டனர்.

large.Jaffnamap.jpg.81ee8ca6d777705996fe0d3409fdfc5e.jpg

இத்தாக்குதல் நடைபெற்று இருநாட்களுக்குப் பின்னர், சித்திரை 28 ஆம் திகதி, யாழ்ப்பாண மாவட்டத்தில் இருவேறு கண்ணிவெடித் தாக்குதல்கள் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்டன. இவற்றில் முதலாவது தாக்குதலை நடத்திய கிட்டு, ஈழநாடு பத்திரிக்கையிடம் பேசும்போது பிரபாகரனின் வழிநடத்துதலிலேயே அத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினார். யாழ்ப்பாணத்தின் கரவெட்டிப் பகுதியில், நவிண்டில் வீதியில் கண்ணிவெடி நிலத்திற்குக் கீழ் புதைக்கப்பட்டிருந்தது. "தொடரணியின் முன்னால் வரும் ஜீப் வண்டியை இலக்குவைத்து கண்ணிவெடியை இயக்குவதென்றும் தீர்மானித்தோம். ஜீப் தாக்குதலுக்குள்ளானதும், பின்னால் வந்துகொண்டிருந்த துருப்புக் காவியில் பயணிக்கும் இராணுவத்தினர் உடனேயே வெளியில் குதித்து பதில்தாக்குதலுக்கு நிலையெடுப்பார்கள் என்று நான் அனுமானித்தோம். அவர்கள் நிலையெடுக்கக் கூடிய இடங்கள் என்று நாம் கருதிய இடங்களில் எமது போராளிகளை நிலைவைத்திருந்தோம். இராணுவத்தினர் நிலையெடுக்கும்போது அவர்கள் மீது தாக்குதலைத் தொடுக்குமாறு போராளிகளுக்குப் பணித்திருந்தோம். நாம் நினைத்தவாறே அனைத்தும் நடந்தது" என்று கிட்டு கூறினார்.

எட்டு வாகனங்கள் அடங்கிய தொடரணியின் முன்னால் வந்த ஜீப் வண்டி தாக்குதலுக்கு உள்ளானது. அதிலிருந்து எட்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். பின்னால் வந்துகொண்டிருந்த துருப்புக் காவி வாகனங்களில் பயணித்த இராணுவத்தினர் உடனடியாக வாகனங்களை விட்டிறங்கி அயலில் இருந்த தோட்டக் காணிகளில் நிலையெடுத்துத் தாக்கத் தொடங்கினர். ஆனால், அக்காணிகளில் ஏற்கனவே மறைந்திருந்த புலிகளின் தாக்குதல் அணி, இராணுவத்தினரின் பதுங்கு நிலைகளுக்குப் பின்னால் இருந்து இராணுவத்தினர் மீது மீது தனது தாக்குதலை ஆரம்பித்தது. இத்தாக்குதலில் மேலும் பத்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மொத்தமாக 18 இராணுவத்தினர் அன்றைய தாக்குதலில் கொல்லப்பட்ட, புலிகளின் தாக்குதல் அணி இழப்பின்றி முகாம் திரும்பியது.

அதேநாள் மாலை, பருத்தித்துறை பொலீஸ் நிலையத்திற்கருகில் பதுங்கியிருந்த புலிகள், அருகிலிருந்த இராணுவ முகாமிலிருந்து வெளியே வரவிருந்த இராணுவத்தினருக்காகக் காத்திருந்தனர். வெளியே வந்த ஜீப் வண்டி மீது கிர்னேட்டுக்கள் கொண்டும், பெற்றொல்க் குண்டுகள் கொண்டும் தாக்குதல் நடத்தினர். ஜீப் தீப்பற்றிக்கொள்ள அதில் பயணித்த நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

சித்திரை 30 ஆம் திகதி, குருநகர் இராணுவ முகாமிலிருந்து கொழும்புத்துறை நோக்கிப் பயணித்து, பின்னர் அரியாலையூடாக நெடுங்குளம் வீதி வழியே வந்த இராணுவத் தொடரணியுடன் புலிகள் நேரடியான துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். கடுமையான சண்டையில் பத்து இராணுவத்தினர் கொல்லப்பட இராணுவத் தொடரணி பின்வாங்கிச் சென்றது.

 

Edited by ரஞ்சித்
Map attached
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இராணுவத்தின் பழிவாங்கற்படுகொலைகளும், போராளிகளின் எதிர்வினையும்

 

தம்மீதான தாக்குதல்களுக்கு இராணுவத்தினரிடமிருந்த ஒரே பதில் பொதுமக்கள மீது தாக்குதல்   நடத்துவதுதான். இது மேலும் மேலும் தமிழ்மக்களை இந்தியாவிற்குத் தப்பிப் போக உந்தியது. பொதுமக்கள் மீதான தாக்குதல்களும், அதனால் ஏற்படுத்தப்பட்ட அகதிகள் பிரச்சினையும்   தமிழ்நாட்டில் கொந்தளிப்பான நிலைமையினை ஏற்படுத்தியது. இவ்விரு பிரச்சினைகளும்  வைகாசி 3 ஆம் திகதி பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்கப்பட்டன. கீழ்ச்சபையில்   பேசிய பிரதமர் ரஜீவ் பின்வருமாறு பதிலளித்தார்.

"இலங்கைத் தமிழர்கள் குறித்து நான் கவலைப்படுகிறோம். இது வெறுமனே தென்னிந்திய மக்களின் கவலை மட்டுமல்ல, மொத்த இந்தியாவினதும் கவலையாகும். இங்கே அகதிகளாகத் தஞ்சம் கோரி  வந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தமது நாட்டிற்குப் பாதுகாப்பாகத் திரும்பி,   கெளரவத்துடனும், சுய மரியாதையுடனும், சுதந்திரத்துடனும், தமது அன்றாடச் செயற்பாடுகளில்   ஈடுபடும் சூழ்நிலை உருவாக்கப்பட்டு பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ வேண்டும்   என்று விரும்புகிறோம். இதுகுறித்த எமது நிலைப்பாட்டினை பலமுறை நாம் எடுத்துக்   கூறியிருக்கிறோம்"

ராஜ்ய சபாவில் பேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் குர்ஷிட் அலாம் கான், "இலங்கையில் நடைபெற்று வருவது மனித நேயத்திற்கு முரணானது, குரூரமானது, வருந்தத்தக்கது" என்று கடுமையான தொனியில் பேசினார். மேலும், தமிழ்ப் பிரதேசங்களில் "இராணுவத்தினரை   அகற்றிவிட்டு சாதாரண பொலீஸாரைக் கடமையில் ஈடுபடுத்த இலங்கை அரசாங்கம் முயல   வேண்டும்" என்றும் கூறினார்.

அலாம் கானின் ராஜ்ய சபாப் பேச்சு ஜெயவர்த்தனவைச் சினங்கொள்ள வைத்திருந்தது. ஆகவே,   தனது அரச ஊடகங்களைக் கொண்டு அலாம் மீது கடுமையான விமர்சனங்களை அவர்   முன்வைக்கத் தொடங்கினார். ஆனால், ரூபவாகினி, லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் இயக்குநர்களைச் சந்தித்த ஜெயார், அவர்களது   விமர்சனங்களின்போது  ரஜீவ் காந்தியைத் தாக்குவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பணித்தார்.   அனுபவ முதிர்ச்சி அற்றவரான ரஜீவுடன் நட்புப் பாராட்டுவதன் மூலம் தமது திட்டங்களை இலகுவாக நடைமுறைப்படுத்திவிடலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் எண்ணினார்கள்.  

ஆனாலும்,   பார்த்தசாரதியின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட சவுத் புளொக்கின் தமிழர் சார்பு    நிலைப்பட்டிற்கெதிரான விமர்சனங்களைத் தொடர்ந்தும் கைக்கொள்ள ஜெயார் விரும்பினார்.   ஐக்கியதேசியக் கட்சியின் திட்டமிடல்ப் பிரிவு இந்தியாவுக்கெதிரான பிரச்சாரத்தில் முழுமூச்சுடன்  ஈடுபடத் தொடங்கியது.

தமிழ் மக்கள் மீதான இராணுவத்தின் தொடர்ச்சியான பழிவாங்கற் தாக்குதல்களும்,   இந்தியாவுக்கெதிராக அரச ஊடகங்களினால் முடுக்கிவிடப்பட்டிருந்த கடுமையான   பிரச்சாரங்களும் போராளி அமைப்புக்களின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதுடன்,   அநுராதபுரம் போன்ற இடங்களில் தாக்குதல்களை முன்னெடுக்கவும் உந்தித் தள்ளியிருந்தது என்று கூறலாம்.

 வைகாசி 4 ஆம் திகதி (1985), ஊர்காவற்றுரையில் அமைந்திருந்த கடற்படை முகாம் மீதும், குருநகர் இராணுவ முகாம் மீதும் .பி.ஆர்.எல்.எப் அமைப்புத் தாக்குதல் நடத்தியிருந்தது.கடற்படை முகாம்  மீதான தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. .பி.ஆர்.எல்.எப் அமைப்பின் திருகோணமலை   மாவட்டத் தளபதி மோட்டர் உந்துகணையினை வடிவமைத்திருந்தார். அவர் ஏவிய மோட்டார்க்   குண்டுகள் கடற்படை முகாமினுள் வீழ்ந்து வெடித்தபோது முகாமினுள் இருந்த கடற்படையினரிடத்-தில் அச்சமும், பதற்றமும் பற்றிக்கொண்டது. மோட்டார்த்தாக்குதலையடுத்து கடற்படையினர்   முகாமின் பின்புறத்திற்குச் சென்று நிலையெடுத்துக் கொண்டனர்.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கவசவாகனமொன்றை ஓட்டியவாறே .பி.ஆர்.எல்.எப் அமைப்பின்   தாக்குதற்பிரிவு முகாமினுள் நுழைந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சின்னவன் மோட்டார்   செலுத்தியினுள் நுழைத்துக்கொண்டிருந்த மோட்டார்க் குண்டு உள்ளேயே வெடித்ததனால், அவர்  அவ்விடத்திலேயே உடல் சிதறி மரணமானார். இதனைக் கண்ணுற்ற கடற்படையினர், முன்னேறி   வந்து தாக்குதலை ஆரம்பித்தனர். கடற்படையினரின் தாக்குதலில் 22 .பி.ஆர்.எல்.எப் போராளிகள் கொல்லப்பட, மீதமானோர் தாக்குதலைக் கைவிட்டு விட்டுப் பின்வாங்கிச் சென்றனர். தாக்குதல்   அணியின் முக்கிய தளபதிகளான வேலு மற்றும் கணேஷ் ஆகியோரும் கொல்லப்பட்ட   போராளிகளில் அடங்குவர். .பி.ஆர்.எல்.எப் அமைப்பிற்கு இத்தாக்குதல் முயற்சி பெரும் பின்னடை-வாக மாறியது. கடற்படை முகாம் மீதான தாக்குதலின்போது குருநகர் இராணுவ முகாமிலிருந்து   உதவிகள் கிடைப்பதைத் தடுக்கும் நோக்குடனேயே குருநகர் முகாம் மீதான திசைதிருப்பும் தாக்குதலை ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இன்னொரு அணி மேற்கொண்டது.

large.KidduAnnaa.jpg.7177a4546ef714717dddefd1cd395c2f.jpg

கிட்டுவும் போராளிகளும் யாழ்ப்பாணம் 1987

வைகாசி 7 ஆம் திகதி வல்வெட்டித்துறை இராணுவ முகாமைத் தாக்கிய புலிகள் ஐந்து   இராணுவத்தினரைக் கொன்றனர். இரு நாட்கள் கழித்து, வைகாசி 9 ஆம் திகதி இராணுவத்தினர் மீது புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு மேஜரும் இன்னும் ஐந்து இராணுவத்தினரும்   கொல்லப்பட்டனர்.

தம்மீதான தாக்குதல்களுக்குப் பழிவாங்க பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களில்   இராணுவத்தினர் ஈடுபட்டனர். கரையோரக் கிராமங்களைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், வீடு  வீடாகச் சென்று இளைஞர்கள் அனைவரையும் இழுத்துச் சென்றனர். கைகள் பின்னால் கட்டப்பட்ட இளைஞர்களில் பல பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். பன்னிரு இளைஞர்களை   பொதுக்கிணறு ஒன்றின் முன்னால்  வரிசையில் நிற்கவைத்த இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.  வீடுகளில் இருந்த இளைஞர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்கும். ஆனால், அன்று நடந்த   படுகொலைகளில் மிகவும் கொடூரமான கொலைகள் ஊரணி எனும் வல்வெட்டித்துறையின்   சிற்றூரில் நடைபெற்றது. சுமார் 25 இளைஞர்களை இழுத்துச் சென்ற இராணுவத்தினர் அவர்கள்   அனைவரையும் சனசமூக நிலைய அறையொன்றினுள் அடைத்து அவ்வறையினைக்   குண்டுவைத்துத் தகர்த்தபோது உள்ளிருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். அன்று மட்டும் கொல்ல-ப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 75.

பொதுமக்கள் மீதான படுகொலைகள் பிரபாகரனையும், வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்களையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும் மிகுந்த கோபத்திற்குள் ஆழ்த்தியிருந்தது. இராணுவத் தீர்வில் சென்றுகொண்டிருக்கும் ஜெயாரை சமாதான வழிகளுக்குத் திரும்பவைத்து, பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான அழுத்தத்தினைக் கொடுக்கவேண்டியதன் அவசியத்தை இப்படுகொலைகள் குறித்து நிற்பதாக ரஜீவின் அரசு கூறியது. 

தனது இராணுவம் தமிழர்களைப் படுகொலை செய்து கொண்டு வந்தபோது, தனது   குள்ளநரித்தனமான அரசியலைத் தொடர்ச்சியாகச் செய்துவந்த ஜெயார், புது தில்லியின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டினைப் பலவீனமாக்கியும், அதேவேளை ரஜீவுடன் நட்புப் பாராட்டியும்   நடந்துவந்தார். இந்தியக் கொங்கிரஸ் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு   அக்கட்சியின் தலைவராகிய ரஜீவ் காந்திக்கு கடிதம் ஒன்றினை ஜெயார் எழுதினார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஜீவ் காந்திக்கு ஜெயார் அனுப்பிய கடிதம்,


காங்கிரஸ் தலைவருக்கு,

காங்கிரஸ் கட்சியின் நூறாவது நிறைவுநாளை நீங்கள் கொண்டாடும் இத்தருணத்தில், இக்கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
1940 ஆம் ஆண்டு பீகாரில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சியின் ராம்கத் மாநாட்டில் நானும் ஒரு இளைஞனாகக் கலந்துகொண்டிருந்தேன். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட இறுதி நிகழ்வு அது. இந்தியக் காங்கிரஸ் வழியில் நாமும் எமது சுதந்திரத்தை அடைந்துகொள்ள இலங்கை தேசிய காங்கிரஸ் எனும் அமைப்பின் சார்பில் நாங்கள் அன்று கலந்துகொண்டிருந்தோம். இந்தியக் காங்கிரஸ் கட்சியின் அனுபவங்களைக் கற்றுத் தெளிந்துகொள்ளுமாறு எங்களை அன்றைய தலைவர் மெளலானா ஆசாத், மகாத்மா காந்தி மற்றும் பண்டித் நேரு ஆகியோர் அழைத்திருந்தனர். இருவருடங்கள் கழித்து 1942 ஆம் ஆண்டு மும்பாயில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய உயர்குழுக் கூட்டத்திலும் நான் கலந்துகொண்டிருந்தேன். அக்கூட்டத்திலேயே மகாத்மா காந்தி, "இந்தியாவை விட்டு வெளியேறு" எனும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். அப்போராட்டம் இந்தியா சுதந்திரம் அடையும்வரையில் தொடர்ந்தும் நடந்து வந்தது. அப்போராட்டத்தினை ஒத்த போராட்டம் ஒன்றினூடாகவே எமது நாட்டின் சுதந்திரத்தையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்று உறுதிபூண்டோம். 
உங்களின் மிகப்பெரும் தலைவர் மகாத்மா காந்தி புத்தரின் போதனையான அகிம்சையில் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தவர். உங்களது நாட்டின் அயலில் வாழும் நாம் அதே புத்தரின் போதனைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டு எமது வாழ்க்கையினை முன்னெடுத்து வருகிறோம். புத்தரின் போதனைகள் ஊடாக உங்கள் நாடு அடைந்திருக்கும் மகத்தான வெற்றிகளை நாம் எப்போதும் பெருமையுடன் நோக்குகிறோம். ஆகவேதான், பண்டித் நேருவின் பேரனான உங்களுக்கு இந்நேரத்தில் நான் அனுப்பும் வாழ்த்து சரியான சந்தர்ப்பத்தில் அனுப்பப்பட்டதாக அமைகிறது. உங்களின் தலைமையின் கீழ், இந்தியாவும், அதனைச் சுற்றியுள்ள மக்களும் என்றுமே நலமுடன் வாழ்வார்கள் என்கிற நம்பிக்கையுடன் எனது கடிதத்தினை நிறைவு செய்கிறேன்.

ஜே.ஆர்.ஜெயவர்தன‌
ஜனாதிபதி, இலங்கை சோசலிசக் குடியரசு

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயாரின் கடிதத்தை புறக்கணித்த ரஜீவும், வடக்குக் கிழக்கில் போராளிகள் தீவிரப்படுத்திய தாக்குதல்களும்

ஆனால், ரஜீவுக்கு ஜெயார் அனுப்பிய இக்கடிதம், பங்குனி 1 ஆம் திகதி அவர் அனுப்பிய கடிதத்திற்கு ஒத்த பயனைக் கொடுக்கவில்லை. பொதுமக்கள் மீதான இராணுவத்தினரின் தாக்குதல்கள், தமிழ்நாட்டிற்கு வந்து குவிந்த அகதிகள், பேச்சுவார்த்தைக்கான அட்டவணை குறித்து ரோ மற்றும் இந்திய உயர்ஸ்த்தானிகருடனான பேச்சுக்களின்போது ஜெயவர்த்தனவும், லலித்தும் காட்டிய அசமந்தம் ஆகியவை ஜெயார் மீது ரஜீவ் காந்தி வைத்திருந்த மதிப்பினை மழுங்கடிக்கத் தொடங்கியிருந்தன.

இராணுவ முஸ்தீபுகளைக் கைவிட்டு விட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீவொன்றினை எட்டுவதற்கான அழுத்தத்தினை ஜெயார் மீது கொடுக்க ரோ முயன்றுகொண்டிருந்தது.  அதன்படி, வைகாசி 10 ஆம் திகதி, ரோவின் கட்டளையில் கொக்காவிலில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைத் தொலைக்காட்சிச் சேவையின் பரிவர்த்தனைக் கோபுரத்தின் மீதும், அருகிலிருந்த ராணுவ முகாம் மீதும் டெலோ அமைப்புத் தாக்குதல் நடத்தியது. நான்கு நாட்கள் கழித்து புலிகள் நடத்திய தாக்குதலில் வழிபாட்டிற்குச் சென்றவர்கள் உட்பட 148 சிங்களவர்கள் அவர்களின் புனித நகரான அநுராதபுரத்தில் கொல்லப்பட்டனர்.

கொக்காவில் தாக்குதலில் ஒரு டசின் இராணுவத்தினரை டெலோ போராளிகள் கொன்றார்கள். ஆனால், அவர்கள் தரப்பிலும் ஒன்பது பேர் உயிரிழந்தார்கள். இராணுவத்தினரின் கனரக ஆயுதப் பாவனையிலேயே டெலோவின் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இந்தியா தமக்கு வழங்கியிருக்கும் ஆயுதங்களின் ஊடாக விடுதலையினை வென்றெடுப்பது சாத்தியம் இல்லை என்பதை போராளி அமைப்புக்கள் உணரத் தலைப்பட்டன. ஆனால், புலிகள் இயக்கம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே, தமக்கு வழங்கும் ஆயுதங்களின் மூலம் தமது இராணுவ வல்லமையினைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இந்தியா முனையும் என்பதை பிரபாகரன் நன்கு உணர்ந்தே இருந்தார். ஆகவேதான் அமெரிக்காவிடமிருந்தும், இங்கிலாந்திடமிருந்தும் இலங்கையரசு தருவித்த ஆயுதங்களுக்கு நிகரான அல்லது அவற்றை விடவும் திறமையான ஆயுதங்களைத் தனது அமைப்பிற்காக அவர் தருவித்துக்கொண்டார்.

large.ltcolvictorltte1.jpeg.68e7ceadb410cb913343fb5367322445.jpeg

தலைவருடன் மன்னார்த் தளபதி விக்டர்

மறுநாள் மூன்று வெவ்வேறு இடங்களில் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்தினர். வைகாசி 11 ஆம் திகதி விக்டர் தலைமையில் புலிகள் மன்னார் பொலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தி அதனை நிர்மூலம் செய்தனர். பல பொலீஸார் கொல்லப்பட்டதுடன் பெருமளவு ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் தானியங்கித் துப்பாக்கிகளும், உப இயந்திரத் துப்பாக்கிகளும் அடங்கும். வைகாசி 12 ஆம் திகதி, சந்தோசம் தலைமையிலான புலிகளின் அணியொன்று திருகோணமலையில் நடத்திய தாக்குதலில் ஜீப்பொன்றில் பயணம் செய்த நான்கு பொலீஸார் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குள்ளான பொலீஸாருக்கு உதவிக்கு வந்த விசேட அதிரடிப்படையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் மேலும் பத்து விசேட பொலீஸ் கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். அதேநாள் யாழ்ப்பாண மாவட்ட‌த்தில் புலிகளால் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் மேலும் 13 இராணுவத்தினல் பலியானார்கள்.

 இலங்கையின் வடக்குக் கிழக்கில் அன்று நிலவிய சூழ்நிலையினை இந்தியா டுடே பின்வருமாறு பதிவுசெய்திருந்தது,

 "இலையுதிர்கால இலைகள் போல இலங்கை நடுங்கிக் கொண்டிருக்கிறது. இலங்கையின் வடக்குக் கிழக்கில் நீளத்திற்கும், அகலத்திற்கும் இலங்கை இராணுவத்தை போராளிகள் தொடர்ச்சியாகத் துன்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள். கொழும்பை மண்டியிட வைக்க மிகவும் திட்டமிட்டு அவர்கள் செயற்படுவதுபோலத் தெரிகிறது".

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிற்சேர்க்கை:

அநுராதபுரம் பெளத்த வழிபாட்டுத் தலம் மீதான புலிகளின் தாக்குதல் பெருமளவு அவப்பெயரினை எமக்கு ஏற்படுத்தியது. இலங்கையரசுகள் ஆண்டாண்டுகளாக சர்வதேசத்தில் எம்மைப் பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம் செய்யவும், எமக்கெதிரான இனவழிப்பு யுத்தத்திற்கு பலம் சேர்க்கவும் இதனைப் பெருமளவில் பாவித்து வந்தன. ஆனால், இத்தாக்குதலுக்கான மூல காரணம் என்னவென்பதை சர்வதேசமோ அல்லது விமர்சகர்களோ ஒருபோதும் உணர்ந்துகொள்ளவில்லை. எம்மில்ப் பலரும் இதுகுறித்த விமர்சன‌ங்களைக் கொண்டிருக்கிறோம். 

ஆகவே. இத்தாக்குதலுக்கான முகாந்திரங்களை விளக்க இதனைச் சந்தர்ப்பமாகப் பாவிக்கிறேன்.

கீழ்வரும் சம்பவங்கள் அநுராதபுரத் தாக்குதலுக்கு முன்னர் தமிழர் தாயகத்தில் இடம்பெற்றவை. அதனைப் படித்தவாறே அநுராதபுரத் தாக்குதல் குறித்துப் பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மன்னார்ப் படுகொலைகளே அநுராதபுரத் தாக்குதலுக்கு வழிவகுத்தன‌ மேரி ஆன் வீவர் எனும் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர் 1985 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் மன்னாரில் இலங்கை இராணுவம் ஆடிய கோரத் தாண்டவங்களைச் செய்தியாக்கியிருந்தார். அவரது செய்தியின் தமிழ் வடிவம்.

அமெரிக்கா வியட்னாம் வீது நேபாம் குண்டுகளை வீசி அப்பகுதிகளை அழித்தபின் கிடந்த அகோரங்களை ஒத்த காட்சிகளை ஒடுங்கி நீண்ட தீவான மன்னாரில் நான் கண்டேன். கண்ணுக்கெட்டிய பகுதியெங்கும் எரிந்து, கருகிக் கிடந்த பனைமரங்களும், தென்னை மரங்களும் அகோரங்களின் அளவைச் சொல்லி நின்றன. மேலும் பல மரங்களை வெட்டிச் சாய்த்திருந்தார்கள். 

இலங்கையரசாங்கத்தைக் கேட்டால், பனைமரங்களை இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் அழித்துத் துப்பரவு செய்கிறோம் என்று காரணம் சொல்கிறது. ஆனால், மன்னாரில் வாழும் தமிழ் மக்களைக் கேட்டாலோ, இப்பகுதியில் சகட்டுமேனிக்குப் படுகொலைகளிலும், படுபாதகச் செயல்களிலும் ஈடுபட்டு வரும் அரச இராணுவம், புலிகளின் தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள இப்பகுதியெங்கிலும் மரங்களை எரித்தும், வெட்டி வீழ்த்தியும் சுடுகாடாக்கி வருகிறது. வனாந்தரமாக்கிவிடப்பட்டிருக்கும் எமது நிலங்களிலிருந்து மண்ணை வாரி இழுத்துக்கொண்டுபோய் மண் அரண்களை அமைத்துப் பதுங்கிக் கொள்கிறது என்று கூறுகிறார்கள். 


இந்தியாவிலிருந்து வெறும் 22 மைல்கள் தொலைவிலேயே மன்னார் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில்த்தான் ஆறு பிரிவினைவாதப் போராளி அமைப்புக்களின் பயிற்சி முகாம்கள் அமைந்திருக்கின்றன. இந்த தீவில், குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் வடக்கில் நம்பிக்கை என்பது மருந்திற்கும் கிடைப்பதில்லை. பிரிவினை கோரிப் போராடும் பையன்களுக்கும், ஒழுக்கமற்ற இலங்கை இராணுவத்திற்குமிடையிலான மோதல்கள் முழு அளவிலான சிவில் யுத்தமாக மாறியிருக்கின்றது. தமிழ் மக்கள் இங்கு தொடர்ச்சியான அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். மார்கழி 4 முதல் தை 27 வரையான இரு மாத காலத்தில் மட்டும் குறைந்தது 160 தமிழ் மக்களை இராணுவம் கொலை செய்திருக்கிறது. 


ஏறக்குறைய நூறு வீதம் சிங்களவர்களைக் கொண்ட இராணுவம் பிரதிநிதித்துவம் செய்யும் நாட்டின் 75 வீதமான சிங்கள மக்களுக்கும், இந்து மற்றும் கிறீஸ்த்தவ மதங்களைப் பின்பற்றும் 20 வீதம் சனத்தொகையினைக் கொண்ட தமிழ் மக்களுக்கும் இடையிலான இனரீதியான பிளவென்பது மீளமுடியாத ஆளத்திற்குச் சென்றுவிட்டது போலத் தெரிகிறது. மன்னார் நோக்கிச் செல்லும் வீதியின் ஓரத்தில் காணப்பட்ட எல்லா வீடுகளும், கடைகளும் தீயில் கருகிப் போய்க் கிடக்கின்றன. பாழடைந்துபோன நிலையில் ஒரு வைத்தியசாலையும் கிடக்கிறது. வீதிகளில் அதீத பதற்றத்துடனும், அகம்பாவத்துடனும் நிற்கும் இராணுவத்தினர் வீதியில் வரும் பஸ்களையும், ஏனைய வாகனங்களையும் மறித்து போராளிகளுக்கான ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று சல்லடை போடுகிறார்கள். 


மார்கழி 4 ஆம் திகதி இராணுவத்தால் நடத்தப்பட்ட படுகொலையின் ஆதாரங்கள் எம்மைச் சுற்றி எங்கும் கிடக்கின்றன. அதிகாலை வேளையில் மூன்று இராணுவ வாகனங்கள் கண்ணிவெடியில் அகப்பட்டதைத் தொடர்ந்து இப்படுகொலைகள் ஆரம்பித்தன. இத்தாக்குதலில் ஒரு படைவீரர் கொல்லப்பட்ட இன்னும் மூன்று படைவீரர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து சுமார் 30 பேர் அடங்கிய இராணுவ அணியொன்று மன்னார் பகுதியெங்கும் படுகொலைகளில் இறங்கியது. ஆறு மணித்தியாலங்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட அட்டூழியங்களில் முதலாவதாக அவர்கள் மன்னார் மத்திய வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தினார்கள். வீதியால் வந்துகொண்டிருந்த வாகனங்களை மறித்து உள்ளிருந்தோரை வெளியே இழுத்துச் சுட்டுக் கொன்றார்கள். தபால் நிலையத்தில் பணியாற்றிய 15 ஊழியர்களை வரிசையில் நிற்கவைத்துத் துப்பாக்கியால் சுட்டு, அவர்களில் எண்மரைக் கொலை செய்தார்கள். வயல்களில் வேலைசெய்துகொண்டிருந்த மக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அருகிலிருந்த கன்னியாஸ்த்திரிகள் மடத்தினுள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களிடமிருந்த கைக்கடிகாரங்கள், தங்கச் சிலுவைகள், சங்கிலிகள் என்பவற்றை அறுத்துச் சென்றார்கள். அன்று மட்டுமே நடத்தப்பட்ட படுகொலைகளில் 150 தமிழர்களை இராணுவம் கொன்றது. இன்னும் 20 தமிழர்களை தமது முகாம்களுக்கு இழுத்துச் சென்றது. இதுவரை அவர்கள் குறித்து எந்தச் செய்தியும் வெளியே தெரியவில்லை. 

Edited by ரஞ்சித்
spelling
  • கருத்துக்கள உறவுகள்
Posted

2007 இல் எழுதப்பட்ட கட்டுரை

ஆக்கம் :சச்சி சிறீகாந்தா

இணையம் : இலங்கை தமிழ்ச் சங்கம்

 

1985 ஆம் ஆண்டு வைகாசி 14 ஆம் திகதி, தமிழர் தாயகத்தின் எல்லைகளுக்கு வெளியே புலிகள் முதன்முதலாக நடத்திய தாக்குதலான அநுராதபுரத் தாக்குதலில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அடங்கலாக 146 சிங்களவர்கள் கொல்லப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் கடந்தோடிவிட்டன. புலிகளின் இந்த ஆக்ரோஷம் அண்மைய தமிழ் ஈழ வரலாற்றில் முன்னுதாரண மாற்றமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.  இத்தாக்குதலின் மூலம் இலங்கைப் பாராளுமன்றம் உதட்டளவில் பேசிவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு அர்த்தமற்றுப் போயிருப்பதுடன், சிங்கள இனவாதிகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் நடத்திவரும்  அகம்பாவமான பேச்சுக்களும் அடிபட்டுப் போயிருக்கின்றன. துணிவான, சிங்களவர்களின் வாய்வானவேடிக்கைகளுக்குப் பணியாத இளைய‌ தமிழ்த் தலைமுறை ஒன்றிற்கு அவர்கள் தற்போது முகம்கொடுக்கிறார்கள்.  

அநுராதபுரம் மீதான தாக்குதலை இன்றுவரை விமர்சித்து எழுதிவருவோர், இத்தாக்குதலுக்கு முன்னர் தமிழ் மக்கள் மீது மன்னாரில் இலங்கை இராணுவம் நடத்திய நரவேட்டைகள் குறித்துப் பார்க்க மறந்துவிடுகிறார்கள்.

அவசரமாகவும், முழுமையற்ற தகவல்களைக் கொண்டும் அநுராதபுரத் தாக்குதலை டைம்ஸ் பத்திரிக்கை செய்தியாக்கியிருக்கிறது. 

டைம்ஸ் பத்திரிக்கை வேண்டுமென்றே தவறவிட்ட சில விடயங்களைப் பார்க்கலாம். 

முதலாவதாக, "பிரிவினைவாதப் போராளிகள்" என்று பொதுவாக அழைத்ததன் மூலம் அமைப்பின் பெயரை சரியாகக் குறிப்பிட அது மறந்திருக்கிறது. 1985 ஆம் ஆண்டில், டைம்ஸ் பத்திரிக்கை உட்பட்ட சர்வதேச ஊடகங்கள் புலிகளுக்கும், அவர்களின் எதிரிகளான தமிழ் பிரிவினைவாதிகள் என்று தம்மை உரிமை கோரும் அமைப்புக்களுக்கும் இடையிலான வேறுபாட்டினை புரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது.  

அடுத்ததாக, அநுராதபுரம் நோக்கிக் கடத்திச் செல்லப்பட்ட பஸ் வண்டியில் எத்தனை போராளிகள் இருந்தார்கள் என்பது குறித்தும் டைம்ஸ் பத்திரிக்கை தகவல் எதனையும் வெளியிடவில்லை. 

மூன்றாவதாக, தாக்குதல் அணியினை வழிநடத்தியது யாரெனும் தகவலும் அச்செய்தியில் குறிப்பிடப் படவில்லை. பின்னர் அவர் ஒரு இந்து என்று டைம்ஸ் அடையாளம் கண்டிருந்தது. இங்கே உண்மை என்னவென்றால், தாக்குதல் அணிக்குத் தலைமை தாங்கியது மன்னார் பன‌ங்கட்டிக்கொட்டுப் பகுதியில் பிறந்தவரும், புலிகளின் மன்னார்ப் பிராந்தியத் தளபதியுமான லெப்டினன்ட் கேணல் விக்டர் என்று அழைக்கப்பட்ட கத்தோலிக்கரான மேர்சிலின் பியூஸ்லஸ் என்பதே உண்மை. 18 மாதங்கள் கழித்து, 1986 ஆம் ஆண்டு ஐப்பசி 12 ஆம் திகதி மன்னார் அடம்பனில் இராணுவத்தினருடனான மோதல் ஒன்றில் விக்டர் வீரச்சாவடைந்தார். புலிகளின் உத்தியோகபூர்வ இதழான விடுதலைப் புலிகளின் தகவல்களின்படி விக்டர் வீரமரணம் எய்தியபோது அவருக்கு வயது வெறும் 23 தான்.  நான் இத்தகவல்களை இங்கே தருவதற்கான காரணம், சிக்காகோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான ரொபேர்ட் பேப் போன்றோரின், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த தளபதிகளோ அல்லது கரும்புலி வீரர்களோ புலிகள் அமைப்பில் இருக்கமுடியாது எனும் கருத்தினை உடைக்கத்தான்.

நான்காவதாக, டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியின்படி, தமிழர்கள் மீதான சிங்களவர்களின் தாக்குதல்களை முடுக்கிவிடவே அநுராதபுரம் மீது புலிகள் தாக்கினார்கள் என்று பொருள்ப்பட எழுதியிருந்தது. ஆனால், 1985 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் மன்னார் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இராணுவத்தின் அட்டூழியங்களைப் பார்க்கும் பலர் டைம்ஸ் பத்திரிக்கை முன்வைக்கும் கருதுகோளினை பொய்யென்று நிறுவுகிறார்கள்.   

இன்றுவரை, அநுராதபுர தாக்குதல் குறித்து தொடர்ச்சியாக எழுதிவரும் புத்தகங்களாகட்டும், இணையத் தளங்களாகட்டும், டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான சிங்களவரின் பார்வையினைப் பிரதிபலித்தே எழுதுகின்றன. ஆனால், புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதியான லெப்டினன்ட் கேணல் விக்டர் அவர்கள் அநுராதபுரம் மீது தாக்குதலை நடத்த அவரைத் தூண்டியது எதுவென்பதை இவர்கள் அனைவரும் பார்க்கத் தவறிவிடுகின்றனர்.

1985 ஆம் ஆண்டு வைகாசி 14 ஆம் திகதிக்கு முன்னர் மன்னார்ப் பிராந்தியத்தில் இராணுவத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அட்டூழியங்கள் குறித்த செய்திகளைப் பார்க்கும் ஒருவரால், இராணுவத்தால் திட்டமிட்ட ரீதியில் மன்னார் மக்களின் அமைதியான வாழ்வும் அவர்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டு வருவதையும், 1984 ஆம் ஆண்டின் பின்னரைப் பகுதியிலிருந்து 1985 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்கள்வரை கையறு நிலையில் வாழ்ந்துவரும் இந்து, கிறிஸ்த்தவ, இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்களின் அவலங்களையும் பார்க்காமல் இருக்க முடியாது.

குறிப்பு : மன்னார்ப் படுகொலைகள் குறித்து சர்வதேச ஊடகங்களில் வெளிவந்த ஐந்து கட்டுரைகளை சிறீகாந்தா அவர்கள் தனது கட்டுரையில் விபரிக்கிறார். இக்கட்டுரைகளைப் படிக்கும் ஒருவருக்கு விக்டர் தலைமையிலான புலிகள் எதற்காக அநுராதபுரத் தாக்குதலை முன்னெடுத்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இத்தொடருடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டபோதிலும், சபாரட்ணம் இக்கட்டுரைகள் குறித்து எதுவுமே குறிப்பிடாததனால், அதற்கான இணைப்பினை மட்டும் இங்கு பதிந்துவிட்டுத் தொடர்கிறேன்.

https://www.sangam.org/2007/05/Mannar_Massacres.php?uid=2395&print=true

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநுராதபுரத் தாக்குதல்

large.Victor.jpg.be4ae0d63d71f1dddce8ce4600c8817a.jpg

பெளத்தர்களின் போயா தினமான, 1985 ஆம் ஆண்டு வைகாசி 14 ஆம் திகதி காலை, விக்டர் தலைமையில் புறப்பட்ட 14 சீருடை தரித்த புலிகள், புத்தளம் - அநுராதபுரம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்வண்டியொன்றைக் கடத்தினார்கள். பின்னர், கிறீஸ்த்துவிற்கு முன் 5 ஆம் நூற்றாண்டிலிருந்து, கிறிஸ்த்துவிற்குப் பின் 10 ஆம் நூற்றாண்டுவரை சிங்கள பெளத்தர்களின் புராதன தலைநகராக விளங்கிய அநுராதபுரம் நகரின் மத்தியில் அமைந்திருந்த பிரதான பேரூந்துத் தரிப்பிடத்திற்குச் அதனை ஓட்டிச் சென்றார்கள்.  பேரூந்துத் தரிப்பிடத்தில் காத்துநின்ற பயணிகள் மீது தாம் கொண்டுவந்த இயந்திரத் துப்பாக்கிகளால் அவர்கள் சரமாரியாகச் சுட்டபோது ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அடங்கலாக சுமார் நூறு பொதுமக்கள் இறந்துவீழ்ந்தார்கள்.

பின்னர் உலக பெளத்தர்களால் கொண்டாடப்படும் புனித வெள்ளரசு மரம் அமைந்திருந்த பகுதிநோக்கி அவர்கள் சென்றார்கள். பெளத்த மதத்தை ஆரம்பித்த புத்தர் அமர்ந்திருந்து ஞானம் பெற்றதாகக் கூறப்படும் வெள்ளரசு மரத்தின் கிளையினை ஊன்றியே இந்த வெள்ளரசு மரமும் உருவாக்கப்பட்டதாக கூறப்படுவதால் இம்மரமும் பெளத்தர்களால் புனிதமானதாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறீஸ்த்துவிற்கு முன் 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட அசோக மன்னனின் மகளான சங்கமித்தையே இந்த வெள்ளரசுக் கிளையினை இலங்கைக்குக் கொண்டுவந்ததாக  சிங்கள பெளத்தர்கள் கூறுகிறார்கள்.  அப்பகுதியில் இருந்த சிங்கள பெளத்த குருக்கள், பெண் குருக்கள், வெள்ளையுடையணிந்த சாதாரண பெளத்தர்கள் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

பின்னர் வில்பத்து வனப்பகுதி நோக்கிச் சென்ற தாக்குதல் அணி, போகும் வழியில் இருந்த பொலீஸ் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தியவாறே சென்றது. வில்பத்து வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வன இலாகா முகாம் மீது புலிகளின் தாக்குதல் அணி நடத்திய தாக்குதலில் நான்கு ஆயுதம் தரித்த காவலாளிகள் கொல்லப்பட்டார்கள். அன்று மட்டும் புலிகளால் கொல்லப்பட்ட சிங்களவர்களின் எண்ணிக்கை 148 ஆகும்.

தாக்குதலையடுத்து உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, புலிகளைத் தேடி வேட்டையாட விசேட பொலீஸ் கொமாண்டோக்களை அரசு வரவழைத்தது. ஆனால், அவர்கள் வருவதற்கிடையில் தாக்குதல் அணி அங்கிருந்து அகன்று சென்றிருந்தது. அநுராதபுரம் விமானப்படை முகாமிலிருந்து கிளம்பிச் சென்ற உலங்குவானூர்தியொன்று வில்பத்துக் காட்டுப் பகுதியூடாக புலிகளின் பஸ் வண்டி சென்றுகொண்டிருப்பதை அவதானித்துவிட்டு அதன்மீது தாக்குதல் நடத்தியது. உடனடியாக பஸ்ஸை விட்டிறங்கிய புலிகள் உலங்குவானூர்தி மீது திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள். புலிகளின் தாக்குதலில் யாழ்ப்பாணத்தில் பிறந்து துப்பாக்கி இயக்குனரான விமானப்படை சார்ஜன்ட் ஹத்த கபுராலகே ஜயரட்ண என்பவர் காலிலும் நெஞ்சிலும் துப்பாக்கிச் சூடுபட்டுக் காயமடைந்தார். அதனையடுத்து உலங்குவானூர்தி திரும்பிச் சென்றது. காயமடைந்த விமானப்படை வீரர் இன்றும் வாழ்கிறார் (2005). தாக்குதலில் ஒரு கையினையும், காலையும் இழந்த அவரை அன்றைய ஜனாதிபதியின் ஆலோசகர் ரவி ஜயவர்த்தன இஸ்ரேலுக்கு அனுப்பி செயற்கைப் பாகங்களை அவருக்குப் பெற்றுக்கொடுத்தார்.

அநுராதபுரம் மீதான தாக்குதல் குறித்த செய்திகள் கொழும்பை வந்தடைந்தபோது நான் லேக் ஹவுஸ் காரியாலயத்தில் இருந்தேன். சிங்கள பெளத்தர்கள் இச்செய்தியைக் கேட்டதும் கடும் கோபமடைந்தார்கள். தமிழர்கள், தம்மீது சிங்களவர்களால் பழிவாங்கும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அஞ்சிய‌போதும் அப்படி நடக்கவில்லை. அரசாங்கத்தில் உள்ளவர்களால் தூண்டப்பட்டால் ஒழிய சாதாரணச் சிங்களவர்கள் தம்மை கொல்லப்போவதில்லை என்பதை தமிழர்கள் அன்று புரிந்துகொண்டார்கள். நான் உடனடியாக டொரிங்டன் சதுக்கத்தில் இருந்த எனது தொடர்மாடி வீட்டிற்குச் சென்றேன். 1983 ஆம் ஆண்டில் எனது வீடு எரியூட்டப்பட்டதையடுத்து நாம் டொரிங்டனில்த்தான் வாழ்ந்துவருகிறோம். தாக்குதல் குறித்த செய்தி வந்தபோது, வீட்டில் மகன் மட்டும் தனியாக இருந்தமையினால், அவரது பாதுகாப்புக் குறித்த கவலையுடன் நான் வீட்டிற்குக் கிளம்பினேன். நான் எனது வீடிருக்கும் பகுதியை அடைந்தபோது, பொலீஸ் ரோந்து வண்டியொன்று அப்பகுதிக்கு வந்தது. நான் மகனிடம், "பயப்படாதே, இனிமேல் அவர்கள் வன்முறைகளில் இறங்கமாட்டார்கள். அரசாங்கம் இனிமேல் அவர்களைத் தூண்டாது" என்று கூறினேன்.

சிங்கள மக்கள் அமைதிகாத்து வருவதை தொடர்ச்சியாக சிங்களப் பத்திரிக்கைகள் பாராட்டி எழுதிவந்தன. சிங்கள மக்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்றும் அவை எழுதின. ஆனால், அந்த கருத்துத் தவறானது என்பதை தமிழர்கள் அறிவார்கள். இம்முறை ஜெயவர்த்தன சிங்களவர்களைத் தூண்டிவிடவில்லை, அதனாலேயே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நடைபெறவில்லை என்பதே உண்மை. சிங்களக் காடையர்களை தூண்டிவிட்டு தமிழர் மீது தாக்குதல் நடத்தினால், தமிழ்ப் போராளிகளும் பதில்த் தாக்குதல்களில் இறங்குவார்கள் என்கிற அச்சம் ஜெயாருக்கு ஏற்பட்டிருந்தது. அதனாலேயே சிங்களவர்களைத் தூண்டிவிடுவதை அவர் இம்முறை தவிர்த்திருந்தார். 

வழமைபோல சிங்கள ஊடகங்கள் நடப்பதை உணர்ந்துகொள்ள மறுத்துவிட்டன. சிங்களவர்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவை உணர மறுத்துவிட்டன. தொண்டைமான் இதனை ஒரு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். 1983 இல் நடத்தப்பட்டது சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட பழிவாங்கற் தாக்குதல்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். அது, ஜெயவர்த்தனவினால் நன்கு திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்ட பயங்கரவாதம் என்று அவர் கூறினார். அனிட்டா பிரதாப்புடனான செவ்வியில் பிரபாகரனும் இதனையே கூறியிருந்தார்.

அநுராதபுரத் தாக்குதலையடுத்து ஜெயார் நிலைகுலைந்துபோனார். லலித்தோ கடுமையான அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தார். சிங்கள மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் நம்பிக்கையினை இத்தாக்குதல் சேதப்படுத்தப்போவதை அவர்கள் நன்கு உணர்ந்துகொண்டார்கள். அநுராதபுரம் மீதான தாக்குதல் உட்பட, வடக்குக் கிழக்கில் பரவலாக போராளிகளால் நடத்தப்பட்ட வந்த தாக்குதல்களின் பின்னால் இந்தியாவின் ரோ இருப்பதாக அவர்கள் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். சிங்கள ஊடகங்களில் தமது சந்தேகங்களை அவர்கள் வெளிப்படையாகவே முன்வைத்து வந்தார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குமுதினிப் படகுப் படுகொலைகள்

large.Kumuthinimassacre1.jpg.03bca330192d7f371c787ae042825617.jpg

அநுராதபுரத் தாக்குதலையடுத்துக் கொதிப்படைந்த ஜெயாரும், அதுலத் முதலியும் இதற்கான பதிலை இரு வகைகளில் வகுத்தனர். முதலாவது சிங்கள மக்களின் மனோநிலையினை மீளக் கட்டியெழுப்புதல். இரண்டாவது, பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதன் மூலம் இந்தியாவின் முயற்சிகளைச் செயலிழக்கப்பண்ணுதல். சிங்கள மக்களின் மனோநிலையினை மீளக் கட்டியெழுப்ப அவர்கள் எடுத்துக்கொண்ட முதலாவது நடவடிக்கையினூடாக பல தமிழ் மக்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.  இந்தியாவை செயலிழக்கப்பண்ணும் தமது இரண்டாவது நடவடிக்கை போராளிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு அவர்களைப் போகப் பண்ணியிருந்தது.  

தமிழ் மக்கள் மீதான படுகொலைகளின் முதலாவது தொகுதிக் கொலைகள் வைகாசி 15 ஆம் திகதி, அநுராதபுரத் தாக்குதல் நடந்து ஒருநாளின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. அந்நாள் காலை 7:40 மணிக்கு, நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவான் இறங்குதுறை நோக்கிச் செல்லும் தனது நாளாந்தப் பயணத்தை குமுதினி எனும் பெயர் கொண்ட மக்கள் படகு ஆரம்பித்தது. குறிக்கட்டுவானிலிருந்தே யாழ்ப்பாணத்திற்கான பஸ்வண்டிச் சேவைகள் நடந்துவந்தன.  மோட்டார் இயந்திரம் கொண்டு இயக்கப்பட்ட அப்படகில் பெண்கள், குழந்தைகள் உட்பட 80 பேர் அன்று காலை பயணம் செய்துகொண்டிருந்தனர்.

காங்கேசு சாந்தலிங்கம், அவரது மனைவி குசலகுமாரி, அவரது மைத்துனி அனுஷியா, அவர்களது சித்தி சரோஜா மற்றும் அவர்களது பிள்ளை லெகி ஆகியோரும் அன்று காலை குமுதினிப் படகில் பயணம் செய்துகொண்டிருந்தனர். கணபதிப்பிள்ளை கணேசபிள்ளை குடும்பமும் அன்று படகில் இருந்த குடும்பங்களில் ஒன்று. சாந்தலிங்கமும் கணேசபிள்ளையும் அன்றைய படுகொலைகளில் உயிர்தப்பி நடந்த அகோரத்திற்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள்.

 large.NainathivuJetty.jpg.b6c307e969272b8080b1dfb3b931c44d.jpg

நைனாதீவு இறங்குதுறை

வைகாசி 25, 2000 இல் ஞாயிறு வீரகேசரிப் பத்திரிகைக்கு அவர்கள் வழங்கிய செவ்வியில் 16 வருடங்களுக்குப் பின் இலங்கையின் சரித்திரத்தில் நிகழ்த்தப்பட்ட மிகவும் அகோரமான கடற்படுகொலை குறித்த விபரங்கள் வெளிக்கொணரப்பட்டன.

"நாம் நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு அரை மணிநேரம் ஓடியிருப்போம். நெடுந்தீவுக்கும், நைனாதீவிற்கும் இடையிலான கடற்பகுதியினூடாக நாம் பயணித்துக்கொண்டிருக்கும்போது, எமது படகு நோக்கி Fibre Glass இனால் செய்யப்பட்ட படகு ஒன்று வந்துகொண்டிருப்பதை அவதானித்தோம். அப்படகு எம்மை அண்மித்ததும், அதிலிருந்தவர்கள் எமது படகு செலுத்தியிடம் படகின் இயந்திரத்தை உடனே நிறுத்துமாறு கட்டளையிட்டார். அதன்பின்னர், எமது படகைச் சுற்றி இரண்டுமுறை வட்டமடித்த அவர்கள், இறுதியில் எமது படகுடன் தாம் வந்த படகினை சேர்த்துக் கட்டினர். அப்போது நாம் நைனாதீவை அண்மித்திருந்தோம்" என்று சாந்தலிங்கம் கூறினார்.

"கறுப்பு நிறத்தில் டீ‍சேர்ட்டும், கட்டைக் காற்சட்டையும் அணிந்த, திடகாத்திரமான ஏழு அல்லது எட்டு நபர்கள், கைகளில் தானியங்கித் துப்பாக்கிகளுடனும், இன்னும் சில ஆயுதங்களுடனும் எமது படகில் தாவி ஏறிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள். அவர்களை நான் முன்னர் கடற்படையினரின் சீருடையில் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவர் இயந்திரத்தின் அறைக்குள்ச் சென்று அதனைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தார்".

"பின்னர், உள்ளிருந்த பயணிளையும், படகோட்டியையும் படகின் மேற்தட்டிற்குச் செல்லுமாறு கட்டளையிட்டனர். அவர்கள் கட்டளையிட்டவாறே நாம் எல்லோரும் படகின் மேற்பகுதிக்குச் சென்றோம். பின்னர், படகின் முன்புறத்தில் இருந்த அறை ஒன்றிற்குள் எம்மைப் போகச் சொன்னார்கள். அங்கிருந்த ஆண்களையெல்லாம் வரிசையில் நிற்கும்படி கட்டளையிட்டார்கள். உங்களிடம் அடையாள அட்டைகள் இருக்கின்றனவா என்று எங்களைப் பார்த்துக் கேட்டார்கள். நாமும், ஆம், கொண்டுவந்திருக்கிறோம் என்று பதிலளித்தோம். பின்னர் ஆண்களை படகின் இயந்திரம் அமைந்திருந்த பகுதியூடாக, படகின் பின்புறத்திற்குப்  போகச் சொன்னார்கள்.  மற்றையவர்கள் தமது பெயர்களை உரக்கச் சொல்லியவாறே இயந்திரம் இருந்த அறைக்குள் செல்லுமாறு பணிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு பயணியும் இயந்திரத்தின் அறைக்குள்  நுழையும்போது துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் எமக்குக் கேட்டது. கூடவே உடல்கள் கடலினுள் விழும் சத்தமும் எமக்குக் கேட்டது".

large.kumuthini2.jpg.1bf7b5a1f24ecf4874d969893fd22699.jpg

கடற்படையினரால் வேட்டையாடப்பட்ட குமுதினிப் படகுப் பயணிகள்

"வரிசையில் நான் நடுவில் நின்றிருந்தேன். எனது முறை வந்தது. நான் இயந்திரத்தின் அறையினுள் நுழைந்தபோது இரத்த வெள்ளத்தில் கிடந்த சில உடல்களைக் கண்டேன். அதிர்ச்சியில் நான் அலறத் தொடங்கினேன். யாரோ பின்னாலிருந்து எனது பின்னந்தலைப் பகுதியில் பலமாகத் தாக்கினார்கள். அங்கே கிடந்த உடல்களின் மீது நான் வீழ்ந்தேன். என்னை இழுத்தெடுத்த அவர்கள், தாம் வைத்திருந்த கோடரியினால் என்னை வெட்டத் தொடங்கினார்கள். நான் இறந்ததுபோல அசைவற்றுக் கிடந்தேன். பின்னர் என்னை அங்கே கிடந்த உடல்களின் மீது எறிந்துவிட்டு எனக்குப் பின்னால் நின்ற ஆணைக் கொல்லத் தொடங்கினார்கள்.  அவரது உடல் என்மீது வீழ்ந்தது. பின்னர், ஒன்றன் பின் ஒன்றாக‌ உடல்கள் என்மீது வந்து விழத் தொடங்கின. இக்கொலைகள் குறைந்தது 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து நடைபெற்றன. பின்னர், ஒரு கடற்படை வீரன் இன்னமும் உயிருடன் யாராவது இருக்கிறீர்களா? இருந்தால் வெளியே வாருங்கள் என்று கத்தினான். நான், என்மீது கிடந்த உடல்களை தள்ளை அகற்றிவிட்டு எழுந்து நின்றேன்". 

"சித்தி என்னிடம் பேசும்போது, எனது மனைவியையும், மைத்துனியையும் அவர்கள் கொன்றுவிட்டதாகக் கூறினார். எமது படகு மெதுமெதுவாக நெடுந்தீவு நோக்கி மிதந்து சென்றுகொண்டிருந்ததை நாம் அவதானித்தோம். படகிலிருந்த சிவப்பு நிறப் பயணப் பை ஒன்றினை மேலே உயர்த்திப் பிடித்து எம்மால் முடிந்தவரை கூச்சலிட்டோம். தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த படகிலிருந்தோர் இதனை அவதானித்திருக்க வேண்டும். அவர்கள் தம்முடன் இன்னும் ஒரு பெரிய படகை எடுத்துவந்து எம்மைக் குறிக்கட்டுவானுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து யாழ்பாணம் வைத்தியசாலைக்கு நாம் கொண்டுசெல்லப்பட்டோம்" என்று சாந்தலிங்கம் கூறினார். 

கணேசபிள்ளை தனது அனுபவத்தைக் கூறும்போது, "எனது முறை வந்தது, நான் இயந்திரத்தின் அறையினுள் நுழைந்தேன். நான் உள்ளே நுழையும்போது பின்னாலிருந்து எனது தலையில் பலமாகத் தாக்கினார்கள். இன்னுமொருவன் கோடரியால் என்னை வெட்டினான். நான் அலறிக்கொண்டே கீழே வீழ்ந்தேன். மூன்றாமவன் எனது வாயினை தான் வைத்திருந்த வாளினால் வெட்டினான். நான் ஒருபுறமாகப் புரண்டு அறையின் கரைக்குச் சென்றேன்". 

"நான் மீண்டும் எழுந்திருந்தபோது, அவர்கள் சென்றுவிட்டார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன். என்னைச் சுற்றி எங்கும் உடல்கள் சிதறிக் கிடந்தன. சிலர் என்னைப்போன்றே குற்றுயிராகக் கிடந்ததை நான் கண்டேன். சிவப்புப் பையொன்றினைத் தூக்கிப் பிடித்து தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த படகொன்றின் கவனத்தை எம்மால் ஈர்க்க முடிந்தது. எம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிங்களவர்கள் பேசும் கொச்சைத் தமிழில் பேசினார்கள். தமக்கிடையே சிங்களத்தில் பேசிக்கொண்டார்கள். எம்மீது தாக்குதல் நடத்தியவர்களில் இருவரை நைனாதீவு கடற்படை முகாமில் நான் கண்டிருக்கிறேன். அவர்கள் இருவரையும் சீருடையிலும், சிவில் உடையிலும் பலமுறை கண்டிருக்கிறேன். கறுப்பு நிற டீ சேர்ட்டுக்களையே அவர்கள் பெரும்பாலும் அணிவார்கள். அவர்கள் பாக்கிஸ்த்தானில் பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரமானவர்கள் என்று ஊர்ச் சனங்கள் கூறக் கேட்டிருக்கிறேன். என்னால் அவர்களை அடையாளம் காண முடியும்" என்று அவர் கூறினார்.

இத்தாக்குதலில் ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் அடங்கலாக 48 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். அநுராதபுரத் தாக்குதலுக்குப் பழிவாங்கவே இத்தாக்குதலை அரசாங்கம் நடத்தியது. நன்றாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலை இது. ஒவ்வொரு பயணியும் ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தம்மால் கொல்லப்படுபவர்களின் ஓலம் வெளியே கேட்காதிருக்க, உயிருடன் இருந்தவர்கள் தமது பெயர்களைச் உரத்துச் சத்தமிடவேண்டும் என்று கடற்படையினர் கட்டளையிட்டிருக்கிறார்கள்.

சர்வதேச மன்னிப்புச் சபை இப்படுகொலைகள் குறித்துக் கேள்வி எழுப்பியது. படுகொலையிலிருந்து உயிர்தப்பியவர்களின் கண்ணால்க் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில், படுகொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் நைனாதீவு கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் என்கிற விபரங்களுடன் அது அறிக்கை வெளியிட்டது. ஆனால், இப்படுகொலைகளை தமது படையினர் செய்யவில்லை என்று மறுதலித்த பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி, "இதனைச் செய்தது யாரென்று கூறுவதற்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை" என்று கூறினார்.

சர்வதேசத்திலிருந்து எழுந்துவந்த விமர்சனங்களையடுத்து, இப்படுகொலைகள் குறித்து விசாரிக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. விசாரணைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அவசர அவசரமாக விசாரணைகள் நடத்தப்பட்டு, அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையினை பத்திரமாக தனது ஆவணக் காப்பகத்தில் மறைத்துவைத்த அரசாங்கம் இன்றுவரை அதுகுறித்த விபரங்களை வெளியே விடவில்லை.

 இப்படுகொலை நடைபெற்று இரு நாட்களுக்குப் பின்னர் நற்பிட்டிமுனைப் பகுதியில் இன்னொரு படுகொலையினை அரசாங்கம் நடத்தியது. இப்படுகொலை குமுதினிப் படுகொலையினை விடவும் குரூரமானதாக இருந்தது.

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆக்கிரமிப்பாளர்களாயினும் சரி ஆட்சியாளர்களாயினும் சரி அவரவர்களுக்கென வீரர்களும் ஆதரவாளர்களும் இருப்பார்கள்.
    • (தரநிலை அறியில்லை) குன்றன் (மாவீரர்)    
    • இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் டமாஸ்கஸில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து புகை எழுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை சிரிய ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதோடு, கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்குள் படைகளை நகர்த்தியுள்ளது. அங்கு இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிரிய நிலப்பரப்பின் அளவையும் விரிவுபடுத்தியுள்ளது. இஸ்ரேல் தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறது. ஆனால் இஸ்ரேல் தனது நீண்டகால எதிரியை பலவீனப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதாக மற்றவர்கள் கருதுகின்றனர். இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை எப்படி நடத்தியது? ஞாயிற்றுக்கிழமை அசத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) 310க்கும் மேற்பட்ட தாக்குதல்களை பதிவு செய்துள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் (SOHR) தெரிவித்துள்ளது. வடக்கே அலெப்போவில் இருந்து தெற்கில் டமாஸ்கஸ் வரை சிரிய ராணுவத்தின் முக்கியமான நிலைகளைக் குறி வைத்து இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன. ஆயுதக் கிடங்குகள், வெடிபொருள் கிடங்குகள், விமான நிலையங்கள், கடற்படைத் தளங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட ராணுவ வசதிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்கள் "சிரிய ராணுவத்தின் அனைத்து திறன்களையும்" அழித்து வருவதாகவும், "சிரியா மீதான உரிமை மீறல்" என்றும் எஸ்.ஓ. ஹெச்.ஆரின் நிறுவனர் (SOHR) ராமி அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். சிரியா அசத் ஆட்சிக்குப் பிந்தைய சகாப்தத்திற்கு மாறும் இந்தச் சூழலில் ஆயுதங்கள் "பாங்கரவாதிகளின் கைகளில் கிடைப்பதை" தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. சிரியா: பஷர் அல்-அசத்தின் வீழ்ச்சியால் ரஷ்யாவுக்கு என்ன அடி?10 டிசம்பர் 2024 காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?7 டிசம்பர் 2024 ரசாயன ஆயுதங்கள் குறித்து இஸ்ரேல் எழுப்பும் கவலைகள் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கடந்த 2018ஆம் ஆண்டில், டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள டூமாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியதாக அசத்தின் ராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டது. ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படும் பஷர் அல்-அசத்தின் ஆயுதக் கிடங்கை எந்தக் குழு கைப்பற்றும் என்பது குறித்து இஸ்ரேல் கவலை கொண்டுள்ளது. சிரியாவிடம் இதுபோன்ற ஆயுதங்கள் எங்குள்ளன, எத்தனை ஆயுதங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத் அவற்றைப் பதுக்கி வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. திங்கள் கிழமையன்று, ஐ. நா-வின் ரசாயன கண்காணிப்புக் குழு சிரியாவில் இருக்கும் அதிகாரிகளை அவர்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுமாறு எச்சரித்தது. சிரியாவில் உள்ள முன்னாள் ஐ. நா ஆயுத ஆய்வாளரும், இப்போது ஸ்வீடனில் உள்ள உமியா பல்கலைக்கழகத்தில் ஹிஸ்டாலஜி இணை பேராசிரியருமான அகே செல்ஸ்ட்ரோம், இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களால் சிரியாவின் ரசாயன ஆயுத திறன்களைக் குறிவைத்து வருவதாகக் கூறுகிறார். "சிரியாவின் ராணுவத் திறனை இஸ்ரேல் அழித்து வருகிறது. இதில் ராணுவ தளங்கள் முதல் ராணுவ உபகரணங்கள் வரை அனைத்தும் அடங்கும்" என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2013ஆம் ஆண்டில், பஷர் அல்-அசத்துக்கு விசுவாசமான படைகள் சிரிய தலைநகரான டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியான கெளட்டா மீது நடத்திய தாக்குதலில் நரம்பியல் மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய சரின் வாயுவைப் பயன்படுத்தியதாகவும், இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. சமீபத்திய தாக்குதல்களிலும் சரின் வாயு, குளோரின் வாயு போன்ற ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், கிளர்ச்சிக் குழுக்களிடமும் ரசாயன ஆயுதங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் அவர்கள் கடந்த காலத்தில் எதிரிகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று முனைவர் செல்ஸ்ட்ரோம் கூறுகிறார். "இஸ்ரேலுடனான மோதலில் வலிமையைக் காட்ட அசத் இந்த ஆயுதங்களை வைத்திருந்தார், ஆனால் அவர் அவற்றைப் பயன்படுத்த விரும்பவில்லை. இப்போது சிரியாவில் முற்றிலும் மாறுபட்ட அரசாங்கம் இருந்தாலும், ரசாயன ஆயுதங்களை இஸ்ரேல் அழிக்க விரும்புகிறது" என்று விளக்கினார். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 சிரியா: மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? அடுத்து என்ன நடக்கும்?11 டிசம்பர் 2024 கோலன் குன்றுகளில் இஸ்ரேல் என்ன செய்கிறது? படக்குறிப்பு, சிரியாவில் எந்தெந்த பகுதிகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டும் வரைபடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கோலன் குன்றுகளில் உள்ள ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை (buffer zone) தமது படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிவித்தார். கோலன் குன்றுகள் என்பது சிரியாவின் ஒரு பகுதி, இது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தனது தற்காலிக தற்காப்பு நடவடிக்கை என்று நெதன்யாகு குறிப்பிட்டார். "அக்டோபர் 7, 2023இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் போன்று சிரியா தரப்பில் இருந்தும் வர வாய்ப்புள்ளது. அதுபோன்ற எந்தத் தாக்குதலையும் தடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியுள்ளது" என்று லண்டனின் எஸ். ஓ.ஏ.எஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கில்பர்ட் அச்கர் கூறினார். "அதே நேரம் இந்த ராணுவ நடவடிக்கை இஸ்ரேல் முன்னோக்கி நகர்வதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட மண்டலத்தின் எல்லைக்கு அருகில் மற்ற சக்திகள் நகர்வதைத் தடுப்பதற்கும் ஒரு வாய்ப்பு" என்றார். ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது குறித்து அரபு நாடுகளின் அறிக்கைகளில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. திங்களன்று எகிப்திய வெளியுறவு அமைச்சகத்தால் இந்த நடவடிக்கை "சிரிய பிராந்தியத்தை ஆக்கிரமித்தல் மற்றும் 1974 பிரிவினை ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல்" என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய படைகளின் முன்னேற்றங்கள் ராணுவ நடவடிக்கையற்ற பகுதியைத் தாண்டி டமாஸ்கஸில் இருந்து 25 கி.மீ உள்நோக்கிச் சென்றுவிட்டதாக சிரிய அறிக்கைகள் கூறின. ஆனால் இஸ்ரேலிய ராணுவ வட்டாரங்கள் இதை மறுத்தன. கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்கு அப்பால் அதன் துருப்புகள் செயல்படுவதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் முதன்முறையாக ஒப்புக் கொண்டன. ஆனால் இஸ்ரேலிய ஊடுருவல் குறிப்பிடத்தக்க வகையில் மேலும் முன்னேறவில்லை என்று செய்தித் தொடர்பாளர் நாதவ் ஷோஷானி கூறினார். அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?11 டிசம்பர் 2024 இலங்கையில் திடீரென அதிகரித்த விலைவாசி - ரூ 260க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசி10 டிசம்பர் 2024 கோலன் குன்றுகள் என்பது என்ன? அதை ஆக்கிரமித்துள்ளது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கோலன் குன்றுகள் என்பது தென்மேற்கு சிரியாவில் உள்ள பாறைகள் நிறைந்த பகுதி. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இப்பகுதி இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த 1967இல் நடைபெற்ற மத்திய கிழக்கு போரில், கோலன் குன்றுகளின் உச்சியிலிருந்து இஸ்ரேல் மீது சிரியா வெடிகுண்டுகளை வீசியது. ஆனால், விரைவிலேயே சிரிய ராணுவத்தை எதிர்த்து, சுமார் 1,200 சதுர கிலோமீட்டர் அளவிலான அப்பகுதியை இஸ்ரேல் தன்வசப்படுத்தியது. கடந்த 1073இல் யோம் கிப்பூர் போரின்போது, கோலன் குன்றுகளை மீண்டும் தன்வசப்படுத்த சிரியா முயன்று, அதில் தோல்வியுற்றது. அதைத் தொடர்ந்து, 1974இல் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அப்போதிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தக் கோட்டில் ஐ.நா சபையின் கண்காணிப்புப் படை உள்ளது. ஆனால், 1981இல் இப்பகுதியை இஸ்ரேல் முழுவதுமாக ஆக்கிரமித்தது. ஆனால், அதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை. கோலன் குன்று பகுதியிலிருந்து முழுவதுமாக இஸ்ரேல் திரும்பப் பெறும் வரை, எவ்வித அமைதி ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம் என, சிரியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. கோலன் குன்று பகுதியிலுள்ள பெரும்பாலான சிரிய அரபு மக்கள், 1967 போரின் போது அங்கிருந்து வெளியேறினர். தற்போது, அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேற்றங்கள் உள்ளன. அதில், சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர். 1967 மோதல் முடிவுக்கு வந்த உடனேயே, இந்த குடியேற்றங்களை இஸ்ரேலிய மக்கள் கட்டமைத்தனர். இந்தக் கட்டமைப்புகள் 'சட்ட விரோதமானவை' என சர்வதேச சட்டம் கூறுகிறது. ஆனால், இதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. கோலன் பகுதியில் குடியேறியவர்கள், சுமார் 20,000 சிரிய மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். இப்பகுதியில் வாழும் பெரும்பாலான சிரிய மக்கள் ட்ரூஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், கோலன் குன்றுகளை இஸ்ரேல் ஆக்கிரமித்த பின்னரும் அங்கிருந்து வெளியேறவில்லை. உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 இஸ்ரேலின் அச்சம் நியாயமானதா? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளின் மஜ்தல் ஷம்ஸ் அருகே இஸ்ரேலிய ராணுவ வாகனம் நிறுத்தப்பட்டது. கோலன் குன்று பகுதிகளில் ஐ.நா படைகள் ரோந்து செல்லக்கூடிய ராணுவ நடவடிக்கையற்ற பஃபர் பகுதி (Buffer Zone) மீதான ஆக்கிரமிப்பு தற்காலிகமானது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால், அங்கிருந்து துருப்புகளை திரும்பப் பெறுவது சிரியாவின் அடுத்த அரசின் செயல்பாட்டைப் பொருத்தே அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "சிரியாவில் வளர்ந்து வரும் புதிய சக்திகளுடன் அமைதியான உறவை ஏற்படுத்துவதே எங்களின் விருப்பம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்றால், இஸ்ரேல் மற்றும் அதன் எல்லைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார். "சிரியாவில் உள்ள கிளர்ச்சிக் குழு, கோலன் குன்று பகுதியில் ஊடுருவலாம் என இஸ்ரேல் நம்புகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்காக, சிரிய எல்லையில் இஸ்ரேல் படைகள் மேலும் முன்னோக்கிச் செல்கின்றன," என்று லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் முனைவர் ஹெச்ஏ ஹெல்லியெர் தெரிவித்தார். "இருப்பினும், இஸ்ரேல் முன்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கோலன் குன்றுகளை ஆக்கிரமித்து பலப்படுத்தியது. மீண்டும் அவ்வாறு செய்யலாம்" என அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியோன், தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகவே, சிரிய ராணுவ தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். "அதனால்தான் நாங்கள் மூலோபாய ஆயுத அமைப்புகளைத் தாக்கி வருகிறோம். உதாரணமாக, எங்களுடைய இலக்குகள், ரசாயன ஆயுதங்கள் அல்லது தொலைதூர ஏவுகணைகள் மற்றும் ரக்கெட்டுகள் ஆகியவை. பயங்கரவாதிகளின் கைகளில் அந்த ஆயுதங்கள் சிக்காமல் இருக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என்றார். எனினும் பேராசிரியர் அச்கர் கூறுகையில், "சிரியாவில் அதிகளவில் ரசாயன ஆயுதங்கள் இல்லை. இரண்டு அல்லது மூன்று இடங்களில்தான் உள்ளன. ஆனால், 300க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. சிரியாவை பலவீனமாக்க இஸ்ரேல் முயல்வதை இது காட்டுகிறது" என்றார். இஸ்ரேல் பஷர் அல்-அசத் குறித்து அறிந்து வைத்துள்ளதாகவும் ஆனால் சிரியாவில் அடுத்து யார் ஆட்சிக்கு வருவார் என்பதில் தெளிவற்று இருப்பதாகவும் குறிப்பிட்டார். "லிபியா போன்ற கிளர்ச்சிக் குழுக்களாக சிரியா பிரிந்துவிடும் என்று இஸ்ரேலியர்கள் நம்புகிறார்கள். இந்தக் குழுக்களில் ஒன்று அல்லது மற்றொன்று இஸ்ரேலுக்கு விரோதமாக இருக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்" என அவர் தெரிவித்தார். "இத்தகைய குழுக்களின் கைகளில் சிரியாவின் ரசாயன மற்றும் இதர ஆயுதங்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என இஸ்ரேல் நினைப்பதாக" அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cn7rv5ej8lzo
    • 👍............... ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவது முற்றிலும் வேறான நிகழ்வுகள், கோஷான்............👍. மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள். சொந்த மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்படுவது அசாத் போன்றோருக்கும் மற்றும் அவர்களின் வழி வந்தோருக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இன்றைய ரஷ்யர்கள் லெனினைக் கூட விடவில்லை.........😌.
    • “தாய்லாந்து மசாஜ்”….. ஐயோ, ஆளை விடுங்கடா சாமி. 😂 தலை தப்பினது, தம்பிரான் புண்ணியம். 🤣 ஆபத்து எங்கை இருந்தெல்லாம் வருகுது.  இனிமேல்… உசாராக இருக்க வேணும். 😁 😃
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.