Jump to content

"சவால்'


Recommended Posts

Posted

தமிழ்த்தங்கை சவால் நன்றாக இருக்கிறது ஆனால் இன்னும் கொஞ்சம் கூட எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எங்கை தமிழ்த்தங்கை அக்காவை காணவில்லை

கள உறவுகளுக்கும் தோழர்களுக்கும்! நான் ஒரு சவாலை எதிர் கொள்ள வேண்டி இருப்பதால்

இன்னும் ஒரு வாரத்தின் பின் உங்கள் அனைவரையும் களத்தில் சந்திக்கின்றேன்.!!

நன்றி!

Posted

கள உறவுகளுக்கும் தோழர்களுக்கும்! நான் ஒரு சவாலை எதிர் கொள்ள வேண்டி இருப்பதால்

இன்னும் ஒரு வாரத்தின் பின் உங்கள் அனைவரையும் களத்தில் சந்திக்கின்றேன்.!!

நன்றி!

சவால் என்று கதை எழுதிய தமிழ் தங்கை அக்காவிற்கே சவாலா..............சவாலில் வென்று மறுபடியும் சவால் கதையை கொண்டு வரும்படி பேபியான் நான் கேட்டுகொள்கிறேன்........... :lol: ;)

Posted

எதிர்கொள்ள வேண்டிய சவாலை வெற்றியாக்கிக்கொண்டு சவாலோடு யாழ்களாம் வாங்கோ அக்கா.

  • 2 weeks later...
Posted

தமிழ்த்தங்கை அக்கா வந்துட்டீங்க போல. கவிதைப் பகுதிக்குள் கண்டேனே. வாங்கோ வாங்கோ சவால் எல்லாம் எபப்டி போச்சுது அக்கா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தமிழ்த்தங்கை அக்கா வந்துட்டீங்க போல. கவிதைப் பகுதிக்குள் கண்டேனே. வாங்கோ வாங்கோ சவால் எல்லாம் எபப்டி போச்சுது அக்கா?

விரைவில் வருகின்றேன் வெண்ணிலா!!மீண்டும் உயிர்ப்பு கொடுத்ததற்கு நன்றி..சவால்கள் தொடர்ந்தபடியே!!

நன்றி..

Posted

தமிழ்தங்கை அக்கா வந்தாச்சோ வருக வருக என பேபி வரவேற்கிறது உங்கள் சவாலை முடித்து இருபீர்கள் என்று நினைக்கிறேன்,எங்களுக்கு சவால் கதையை தாருங்கள்...... :D

Posted

விரைவில் வருகின்றேன் வெண்ணிலா!!மீண்டும் உயிர்ப்பு கொடுத்ததற்கு நன்றி..சவால்கள் தொடர்ந்தபடியே!!

நன்றி..

சரி அக்கா, விரைவில் வாங்கோ :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஒரு மாதிரி அன்றைய விவாதப்போட்டிகளும் நடந்து முடிந்திருந்தது. எப்போதும் பேச்சாற்றலுக்கும் கருத்துச்செறிவுக்குமுரிய பரிசைத் தட்டிச்செல்லும் கீர்த்திக்கு அன்று 'கருத்துச்செறிவுக்கு' உரிய முதல் பரிசு மட்டுமே கிடைத்தது. 'மனசு எத்தனை தூரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது ஒரு 'மொட்டைக் கடதாசியால்" என்று தன்னையே நொந்து கொண்டவளை, சிவானந்தம் பிள்ளை அவர்கள் தான் தேற்றினார். ' மகள் என்ர மகன் கனடாவில் இருந்து வந்திருக்கிறான் நீங்கள் கட்டாயம் வீட்டுக்கு வர வேணும், எதுக்கும் நான் அப்பாட்ட சொல்றனே!" ஓம் சரி ஐயா" என்று அங்கிருந்து நகர்ந்து கொண்டதும் இரவு நித்திரை கொள்ளாததுமாய் உடல் அலுப்பும் ஒன்று சேரவே வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் ஓடிப்போய் மெத்தையில் விழுந்தவள் தான்! விழித்ததும் இரவு 9 மணி 'பிள்ளையாரப்பா இனி எப்படி நித்திரை வரப்போகுது?!! என்று கை கால் அலம்பிக்கொண்டு வந்தவளை, தாய் "இந்துமதிதான் ' என்ன பிள்ளை சாப்பிடாமல் படுத்திற்றா, "அப்பா வேற எனக்குத்தான் பேச்சு, மகளை வெறும் வயித்தோட படுக்க விட்டுட்டாய் என்று! போ பிள்ளை போய் 'புட்டும் பலாப்பழமும் இருக்கு இல்லை என்றால் 'வெள்ளை இடியப்பமும் நண்டுக் குழம்பும் இருக்கு போய்ச்சாப்பிடு என்று அன்புக்கட்டளை இடவே, 'தனக்குப்பிடிச்ச நண்டுக் குழம்போடு வெள்ளை இடியப்பத்தை கொஞ்சம் அதிமாகவே சாப்பிட்டாள்!

'அப்பா" அழைக்கும் குரல் கேட்கவே " என்னப்பா!!.என்றவளை . 'என்ன கீர்த் என்னம்மா இத்தனை களைப்பா! இந்த வயசில!! தலைக்கும் மேல எல்லா பாரத்தையும் போடுறது. சரி பிள்ளை 'சிவா சாப்பிடக்கூப்பிட்டவன் என்ற தோழன் என்ற முறையில் தான் கூப்பிட்டவன் மகன் கனடாவில் இருந்து வந்திருக்கிறானாம் கட்டாயம் போக வேணும் இன்றைக்கு போகலாம் என்றிருந்தன் நீ படுத்திட்டியே பிள்ளை நாளைக்கு வெள்ளிக்கிழமை தானே பின்னேரமா போயிட்டு வருவம் என! என்று மூச்சுவிடாமல் முடித்த தன் அப்பாவுக்கு தலை ஆட்டியபடியே தன் கட்டிலில் வந்து அமர்ந்தாள். எப்போதெல்லாம் மனசு பாரமாய் இருக்கிறதோ அன்றெல்லாம் 'பாரதியார் தான் உற்ற தோழன் அவளுக்கு! அவரின் கவிதைக்குள் மூழ்கிப்போய் விடுவாள். அதிலும் 'சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா படிக்கும் போது அவளையும் அறியாமல் ஒரு பரவசம் 'சற்றுன் முகஞ்சிவந்தால் மனம் சஞ்சலமாகுதடி" நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடீ"!! என்ற வரிகள் புதிதாய் தோன்றவும்; புத்தகத்துள் ஒளித்து வைத்த அந்த முத்து முத்தான கையெழுத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்!!..

'யாரடா நீ! ஏனடா இந்த வதை எனக்கு?!! வெற்றுப்பத்திரமாய் வெள்ளையாய் இருந்த என் மனசில் எதற்கு காதல் கவிதை எழுதிப்போனாய்?!!..." கசக்கவும் முடியாமல் எறியாமலும் முடியாமல் கலங்கிப்போய் நின்றவளை தாயின் குரல் தான் ஓர் நிலைக்குக் கொண்டுவந்தது! தாய் தன்னை நோக்கி வருவதைக்கண்டதும் படபடப்பாய் மீண்டும் புத்தகத்துள் ஒளித்தாள் கீர்த்தி!

Posted

மீண்டும் சவால்" பாகம் 4 உடன் இணைந்த தமிழ்த்த்னங்கை அக்காவுக்கு நன்றிகள். :P

அட பாவம் கீர்த். ஆனாலும் நண்டுக்குழம்போடு இடியப்பாம் நல்லா சாப்பிட்டிடா. ஆமா அந்த வாத்தியாரின் மகன் கனடாவில் இருந்து வந்தவர் தான் உந்த கடதாசி ல காதலை அனுப்பி அன்பான பிள்ளையாக இருந்த வெள்ளை மன கீர்த்தியை குழப்பினவரோ? :rolleyes:

Posted

வெள்ளை இடியாப்பமும் நண்டு குழம்பும் சாப்பிட ருசியாக இருக்குமோ? ஒருக்க்கால் சாப்பிட்டு பாக்கவேணும். வெள்ளை இடியப்பம் எண்டு சொன்னது கோதுமை மா இடியப்பமா? வெள்ளைப்புட்டு தெரியும். வெள்ளை இடியப்பம் நினைவு இல்லை.

Posted

வெள்ளை இடியாப்பமும் நண்டு குழம்பும் சாப்பிட ருசியாக இருக்குமோ? ஒருக்க்கால் சாப்பிட்டு பாக்கவேணும். வெள்ளை இடியப்பம் எண்டு சொன்னது கோதுமை மா இடியப்பமா? வெள்ளைப்புட்டு தெரியும். வெள்ளை இடியப்பம் நினைவு இல்லை.

:) வெள்ளை அரிசிமாவும் கோதுமை மாவும் சேர்த்து அவிக்கிறது :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை நன்று! தொடருங்கள் வாழ்த்துக்கள். :):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வெள்ளை இடியாப்பமும் நண்டு குழம்பும் சாப்பிட ருசியாக இருக்குமோ? ஒருக்க்கால் சாப்பிட்டு பாக்கவேணும். வெள்ளை இடியப்பம் எண்டு சொன்னது கோதுமை மா இடியப்பமா? வெள்ளைப்புட்டு தெரியும். வெள்ளை இடியப்பம் நினைவு இல்லை.

,,,,,,

கலைஞா,,நீங்கள் வெள்ளை இடியப்பம் சாப்பிட்டதே இல்லையா? ஆச்சரியமா இருக்கு!!

வெள்ளைப்புட்டும் நண்டுக்குழம்பும் நல்லாத்தான் இருக்கும்!! நண்டிலும் கூழிலும் உள்ள ஆசையால் தான் இன்னும் சுத்த சைவமாக மாறவில்லை ;))

Posted

அட தமிழ்தங்கை அக்காவின் "சவால்" பாகம் 4 வந்திட்டோ நான் இன்றைக்கு தான் பார்தேன் நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்கோ எப்ப பாகம் 5 வெளிவரும் ........... :lol:

ஆனாலும் வெள்ளை இடியப்பமும் நண்டு குழம்பும் தான் பிடிக்கவில்லை பேபிக்கு :rolleyes: நண்டு குழம்பிற்கு பதிலா வேற குழம்பு போடுங்கோ :P !!பேபிக்கு நண்டு அலர்ஜி பேபிக்கு தெரியாது எப்படி ருசியா இருக்கும் என்று சோ எனக்கு பிடிக்கவில்லை......... ;)

Posted

அட தமிழ்தங்கை அக்காவின் "சவால்" பாகம் 4 வந்திட்டோ நான் இன்றைக்கு தான் பார்தேன் நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்கோ எப்ப பாகம் 5 வெளிவரும் ........... :D

ஆனாலும் வெள்ளை இடியப்பமும் நண்டு குழம்பும் தான் பிடிக்கவில்லை பேபிக்கு :lol: நண்டு குழம்பிற்கு பதிலா வேற குழம்பு போடுங்கோ :P !!பேபிக்கு நண்டு அலர்ஜி பேபிக்கு தெரியாது எப்படி ருசியா இருக்கும் என்று சோ எனக்கு பிடிக்கவில்லை......... ;)

:lol::lol: ஜமுனாக்கு பிடிக்காட்டால் என்ன செய்ய? கீர்த் க்கு பிடிச்சிருக்கே. :rolleyes: உங்களூக்கு வேணும்னா மட்டன் குழம்பு வைச்சு தரவா?

Posted

:lol::lol: ஜமுனாக்கு பிடிக்காட்டால் என்ன செய்ய? கீர்த் க்கு பிடிச்சிருக்கே. :rolleyes: உங்களூக்கு வேணும்னா மட்டன் குழம்பு வைச்சு தரவா?

பேபிக்கு பிடிகாட்டி ஒருத்தருக்கும் பிடிக்க கூடாது இது எப்படி இருக்கு :P ..............சரி மட்டன் குழம்பை விட இறால் குழம்பு வைத்து தீத்தியும் விடுங்கோ பேபிக்கு.............. :lol:

Posted

'சிவா சாப்பிடக்கூப்பிட்டவன் என்ற தோழன் என்ற முறையில் தான் கூப்பிட்டவன் மகன் கனடாவில் இருந்து வந்திருக்கிறானாம் கட்டாயம் போக வேணும்

தமிழ்தங்கை அக்கா சிவா வீட்டுக்கு சாப்பிட போனால் இனி வெள்ளை இடியப்பமும் இறால்குழம்பும் வைக்க சொல்லுங்கோ ஜம்முவுக்காக :D

Posted

தமிழ்தங்கை அக்கா சிவா வீட்டுக்கு சாப்பிட போனால் இனி வெள்ளை இடியப்பமும் இறால்குழம்பும் வைக்க சொல்லுங்கோ ஜம்முவுக்காக :D

வெரிகுட் இனி இந்த சட்டம் யாழில் அமுலுக்கு வரட்டும் எல்லா இடங்களிளும் இது எப்படி இருக்கு :( ..........தமிழ் தங்கை அக்கா விளையாட்டுக்கு பிறகு என்னை அடித்து போடாதையுங்கோ.......... :D

Posted

வெரிகுட் இனி இந்த சட்டம் யாழில் அமுலுக்கு வரட்டும் எல்லா இடங்களிளும் இது எப்படி இருக்கு :D ..........தமிழ் தங்கை அக்கா விளையாட்டுக்கு பிறகு என்னை அடித்து போடாதையுங்கோ.......... :D

:angry: தோளில் உட்கார விட்டால் தலையில் தான் உட்காருவேன் என அடம்பிடிச்சால் :3d_019:

Posted

:angry: தோளில் உட்கார விட்டால் தலையில் தான் உட்காருவேன் என அடம்பிடிச்சால் :3d_019:

தோளிள எப்படி உட்காரலாம் கதிரையில தானே உட்காரமுடியும் நிலா அக்கா......... :P

Posted

தோளிள எப்படி உட்காரலாம் கதிரையில தானே உட்காரமுடியும் நிலா அக்கா......... :P

பேபிகள் தோளிலை உட்காரலாம். உது கூட தெரியாதா?

Posted

பேபிகள் தோளிலை உட்காரலாம். உது கூட தெரியாதா?

இந்த பேபிக்கு தெரியாதே!! :D

Posted

இந்த பேபிக்கு தெரியாதே!! :D

இப்ப நீங்கள் என்ன நினைக்கிறீங்க தெரியுமா?

மம்மிட்ட போய் "மம்மி மம்மி என்னை தோளில் உட்கார வையுங்கோ" என்று கேட்கணும் என்றுதானே :D

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.