Jump to content

"சவால்'


Recommended Posts

Posted

இப்ப நீங்கள் என்ன நினைக்கிறீங்க தெரியுமா?

மம்மிட்ட போய் "மம்மி மம்மி என்னை தோளில் உட்கார வையுங்கோ" என்று கேட்கணும் என்றுதானே :D

அதே தான் நிலா அக்கா போய் மம்மியிட்ட கேட்டு பார்கிறேன் எப்படி ரியாக்சன் வருது என்று பார்த்துவிட்டு சொல்லுறேன்!! :D

  • Replies 72
  • Created
  • Last Reply
Posted

வெள்ளை இடியப்பம் சின்ன வயசில சாப்பிட்டமாதிரி கொஞ்சம் நினைவு இருக்கு. புட்டு இப்ப இடியப்பமா நினைவில வருதோ தெரியாது.

நீங்கள் நண்டு விரும்பி சாப்பிடுவீங்களா? நான் இப்போது சாப்பிடுவது. ஆனால் முன்பு குறைவு. ஏனென்றால் நண்டை, அது இறந்தபின் சாப்பிட்டாலும் அதை உண்ணும்போது கொஞ்சம் பயமாக இருக்கும். நண்டு முள் கால்களுடன் பெரிய உருவத்தில் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்குமே? அதை எப்படி சாப்பிடுவது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வெள்ளை இடியப்பம் சின்ன வயசில சாப்பிட்டமாதிரி கொஞ்சம் நினைவு இருக்கு. புட்டு இப்ப இடியப்பமா நினைவில வருதோ தெரியாது.நீங்கள் நண்டு விரும்பி சாப்பிடுவீங்களா? நான் இப்போது சாப்பிடுவது. ஆனால் முன்பு குறைவு. ஏனென்றால் நண்டை, அது இறந்தபின் சாப்பிட்டாலும் அதை உண்ணும்போது கொஞ்சம் பயமாக இருக்கும். நண்டு முள் கால்களுடன் பெரிய உருவத்தில் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்குமே? அதை எப்படி சாப்பிடுவது?

<<ச்ச்சோ என்ன கலைஞா, குழந்தைப்பிள்ளை மாதிரி சொல்றீங்க!...நண்டுக்கெல்லாம் பயப்படலாமா? உயிரோட இருந்தால் அது கடிக்கும் அது பயம்தான். ஆனால் கறியாகவோ, அல்லது கூழுக்குள் போடப்பட்டபின்னோ அதன் சுவையே தனி தான்!!..

ஜம்மு பேபி..இது உங்களுக்காக!!

"நண்டுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றையவர்

இறால் போல் சுருண்டுடுவார்"..

.ச்ச்சும்மா பகடிக்காக எழுதினது கோவிச்சுக்காதீங்கோ!!..இறாலை விட நண்டு உடலுக்கு நல்லது இறாலில் (கொலஸ்ட்ரால்). கரையாத கொழுப்பு மிக அதிகம்!. சுவையாகத்தான் இருக்கும் ஆனால் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியதில் 'இறாலுக்குத்தான் முதலிடம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சவால் 5

என்ன பிள்ளை விவாதப் போட்டியையே நினைச்சுக்கொண்டிருக்கிறியே" சரி சரி நாளைக்கு சிவா அண்ணை வீட்டையும் போக வேணும் நல்ல பிள்ளை மாதிரி போய்ப் படு இப்ப!

"சரி அம்மா, இன்றைக்கு பின்னேரம் படுத்ததால நித்திரை வரேல்லை

படுக்கிறன் அம்மா நீங்க போய்ப் படுங்கோ" தாயை அவ்விடத்தில் இருந்து அனுப்பி வைத்தாலே போதும் என்றிருந்தது அவளுக்கு!! " சே

என்ன மனசுடா இது" பெற்ற தாயை விட போற்றி வளர்க்கும் தந்தையை விட எங்கே இருந்து கொண்டு ஒருத்தன் கண் முன் வராமலே என்னை இந்தப்பாடு படுத்துகின்றானே" இது நல்லதற்கா கெட்டதற்கா என்பதுதான் பாவம் அந்தப்பேதை மனதுக்குத் தெரியவில்லை!!. பாரதியார் பாடலைப் படித்தபடியே தன்னையும் அறியாது நித்திரையில் ஆழ்ந்துவிட்டாள் கீர்த்தி! என்றும் போலவே அன்றைய காலையும் விடிந்தது ஆனால் என்ன அது ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வோர் அத்தியாத்தை எழுதிப்போகப்போகின்றது என்பதை யாருமே அறிவதில்லை. சிணுங்கும் தமிழோடு செல்லச் சிரிப்போடு சிட்டாக பறந்துதிரியும் கீர்த்தியை யாருக்குமே பிடிக்காமல் போகாது! மீண்டும் அந்தத் திருமுகத்தைப் பார்க்க மாட்டோமா என்று ஏங்கும் பலர் இருப்பதை அவளே அறியமாட்டாள்.

அன்றைய மாலை அப்பா, அம்மாவோடு கீர்த்தியும் சிவானந்தம் பிள்ளை வீட்டுக்குச் சென்றார்கள். அது அபாரமான வரவேற்பா இல்லை அன்பான வரவேற்பா என்பதை கீர்த்தியின் சின்ன மூளை எடை போட எத்தனித்தது. சிவானந்தம் பிள்ளையின் மனைவியை "மாமி என்றே கீர்த்தி அழைப்பது வழக்கம்" அன்றும் அப்படி அழைக்கவே 'வா என் மருமோளே' என்று அவர் அழைத்ததும் விக்கித்துப் போனாள் கீர்த்தி. சிவானந்தம்பிள்ளைக்கோ உள்ளூர மகிழ்ச்சி அதை ஒர் புன்முறுவலோடு வெளிப்படுத்தினார். சூரியாவும் இந்துமதியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் கீர்த்திக்குத்தான் ஒரே நெருடலாக இருந்தது. ஆசையோடு "மாமி" என்று அழைத்தவள் கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்ளும் நத்தையாய் சுருங்கிப்போனாள் அந்தத் தத்தை. ஒரு சிரிப்போடு சமாளித்துவிட்டு தாய்க்கு அருகில் வந்து அமர்ந்தவளை " ஹாய் கீர்த்"

என்ற குரல் திடுக்கிட வைத்தது 'இவன் தான் என்ற மகன் " கார்த்திக்" என்று அறிமுகம் செய்து வைத்த சிவானந்தம்பிள்ளையைத் தொடர்ந்து ஹாய் அங்கிள், ஆன்ரி …என்று ஒரு வணக்கம் சொல்லி விட்டு கீர்த்தியின் பக்கம் திரும்பினான் ' என்னப்பா ஹாய் சொன்னா ஹாய் சொல்ல மாட்டீங்களோ என்றவனை " வணக்கம்" என்று சொல்லிவிட்டு தாயின் கையைப் பிடித்தாள்.

ஹா! ஹா!! ரொம்ப்ப்பவும் வெட்கப் படறீங்க போல!! வெரி குட்! ஐ லைக் இட்". என்றவன் கடுப்பேற்ற "ச்ச்சோ ரொம்ப்ப நன்றி ஆனால் தமிழில் கதையுங்கோ!! என்று தனக்கு வந்த ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டாள் கீர்த்தி!! " வாவ்!! கோபம் கூட வருதா".? என்றவனை, ஒரு முறைப்போடு பார்த்துவிட்டு "என்னடா இவன் பெரியவங்களுக்கு முன்னால எப்படி கதைக்கணும் என்கிற பண்பு கூடத் தெரியலையே" என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டாள். ஆனாலும் அவனது சிரிப்பு 'மாதவனை நினைவுபடுத்தியது" சரி மகள் சாப்பிட வாங்கோ என்று அழைக்கவும் எல்லோரும் சாப்பாட்டு மேசை நோக்கி நடந்தார்கள். கீர்த்தியையே மொய்த்தபடி பார்த்துக்கொண்டிருந்தன கார்த்திக் இன் கண்கள்! 'தன்னை அறியாமல் அவன் திசையில் திரும்பினாலும் வேறொங்கோ பார்வையைத் திருப்பிய கீர்த்தியை 'சிவானந்தம்பிள்ளையும் கவனிக்கத் தவறவில்லை! "கீர்த்திக்கு நான் பரிமாறட்டுமா? !! என்றான் கீர்த்தியை நோக்கி கண் சிமிட்டியபடி" அப்போதுதான் ………..

தொடரும்

Posted

"கீர்த்திக்கு நான் பரிமாறட்டுமா? !! என்றான் கீர்த்தியை நோக்கி கண் சிமிட்டியபடி" அப்போதுதான்

அப்போதுதான்.......................................... :lol:

என்னாச்சு? உடனேயே தொடரும் போடுட்டீங்க. :unsure:

என்ன சாப்பாடு என்று கூட சொல்ல இல்லை. :D ம்ம்ம்ம்ம்ம் பாகம் 6 இல் சந்திப்பம்

Posted

கதை வழமைபோல் அருமையாக கொண்டு செல்கிறீர்கள். பாராட்டுக்கள்

சீக்கிரம் அடுத்த பாகத்தை போடுங்கோ வாசிக்க ஆவல்

Posted

தமிழ்தங்கை அக்கா என்ன சாப்படுபரிமாறும் நேரம் பார்த்து தொடரும் போட்டுவிட்டீங்க சரி விரைவில் பாகம் 6 வாசிக்க வேண்டும் பேபிக்கு பொறுமை இல்லை வெயிட் பண்ண!! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சவால் 6

அப்போதுதான் சிவானந்தம் பிள்ளை பேச்சைத் தொடக்கினார். சூர்யாவும் நானும் சின்னவயதுத் தோழர்கள் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். "இப்படி அவர் தொடங்கவும் கீர்த்தியின் முகம் இறுக்கமாயிற்று ஏதோ தனக்கு வேண்டப்படாத ஒரு விடயம் இங்கு அரங்கேறப்போகின்றது என்பது மட்டும் நிச்சயமாயிற்று அவளுக்கு!! ச்ச்சே வராமலே விட்டிருக்கலாமோ என்று மனசுக்குள் சலித்துக்கொண்டு வேண்டுமென்றே ஒரு புன்னகையை முகத்தில் தவழவிட்டபடி இருந்தாள் என்னதான் நடிக்க முயன்றாலும் இயல்பாக இருந்து பழகியவளுக்கு அது மிகவும் கஷ்டமாகவே இருந்தது!!.." சிவானந்தம்பிள்ளையோ தான் சொல்லவந்ததை முடித்து விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். 'என்னடாப்பா சூரி நீ வீட்டில சொல்லேல்லையோ? !! தங்கைச்சி மதியும் ஒரு புதிராப்பார்க்கிறா!! என்ற கேள்வியோடு நிறுத்தவே....'இல்லை சிவா, நீயே உன்ர வாயால சொல்றதுதான் நல்லா இருக்கும் இதென்ன புதுசாவே கதைக்கிறம் காலம் காலமா பழகின குடும்பம் எங்களுக்குள்ள என்ன முறை தலை எல்லாம் பார்த்துக்கொண்டு....சொல்ல வந்ததை சொல்லப்பா!! என்றார்.

என்ற மகன் இன்னும் மூன்று நாலு மாசம் இங்க நிற்பான். அதுக்குள்ள அவனுக்கும் ஒரு வாழ்க்கையை அமைச்சுக்குடுக்க வேணும் என்று பார்க்கிறன் அது மட்டுமில்ல எங்க நானும் சூரியும் சின்ன வயசில கதைச்சது நடக்காமல் போயிடுமோ கனடாவில் யாரையும் கட்டிக்கொண்டு வந்திடுவானோ என்று பயந்தனான் ஆனால் நல்ல காலம் என்ற பெயரைக் காப்பாத்திட்டான் அது மட்டுமில்ல கீர்த்தியை தனக்கு நல்லாப்பிடிச்சிருக்காம் என்று அவனே சொல்லிப்போட்டான் என்று சொல்லிக்கொண்டே இஞ்சேரப்பா என்ன பார்த்துக்கொண்டிருக்கிறா! சாப்பாட்டைப் போடனப்பா" என்றார் தன் மனைவியைப் பார்த்து!.

எல்லோருக்கும் அதில் திருப்தி இருந்தது. இந்துமதிக்கு மகிழ்ச்சியோ கவலையோ எதையும் வெளிப்படுத்த முடியவில்லை தன் கணவன் எதைச்சொன்னாலும் அது நல்லதுக்குத்தான் என்பதே அவளின் எண்ணம் இதுவரை அவர் தன்னை மீறி எதுவும் செய்ததும் கிடையாது அது மட்டுமல்ல சூர்யாவும் தன் மனைவியின் சம்மதம் கேட்ட பின்னரே எதையும் கையாளுவார். எல்லோரும் கலகலப்பாகவே இருக்க 'கீர்த்தியின் மனசு மட்டும் அங்கு இறுகிய பாறையாக பேரிரைச்சலோடு சத்தமிட்டுக்கொண்டிருந்தது".

கார்த்திக் தான் மறுபடி கீர்த்தியின் மெளனத்தைக் கலைத்தான் ' என்ன கீர்த்தி!! என்ன!! ஒரே ஆச்சரியமா இருக்கா ஒரே சைலண்டா" இருக்கீங்க?!!...நீங்கதான் பேச்சு, கவிதை,விவாதம் எல்லாத்திலையும் முதல் ஆளாச்சே" என்றபடி கீர்த்தியின் பதிலுக்கு ஆவலோடு காத்திருந்தான். 'அவளோ...'ம்" என்ற ஒற்றைச்சொல்லோடு எப்படா அங்கிருந்து வெளிக்கிடுவோம்' என்றிருந்தாள். இந்துமதியும் கீர்த்தியின் கவலை தோய்ந்த சங்கடப்படும் அந்த நிலையை கவனிக்கத் தவறவில்லை! பெத்தமனசு அல்லவா" !! "பிள்ளை உன்னை விட்டுட்டு நான் எப்படி இருக்கப்போறன்!! என்றே சொல்லிப் புலம்பியது அவள் மனசு!.

ஒருமாதிரி அன்றைய சந்திப்பின் நிகழ்வுகளும், எது நடக்க வேண்டுமோ அந்த நிகழ்வும் நடந்தேறியது சூர்யாவும் இந்துமதியும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய பின்னே 'கீர்த்தியிடம் பேச்சுக்கொடுத்தார்கள்" என்ன பிள்ளை ஏன் அங்க ஒரு மாதிரி இருந்தனி...என்ன நினைப்பினம்?!!. இப்படியே உன்னை வளர்த்தனான். எத்தனை ஆசையோட அந்தத் தம்பி உன்னோட கதைச்சுது ஏன் ஒரு வெறுப்போட பதில் சொன்னனீ" !! என்று சூர்யா ஒரு சிறு அதட்டலுடன் கேட்கவும் 'அழுதே விட்டாள் கீர்த்தி!!. "எதையும் பேசத்தோன்றவில்லை அவளுக்கு 'எல்லாமே நிச்சயிக்கப்பட்ட பின் அவளின் ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் அங்கே இடமிருக்கிறதா என்ன? முதல் முதலாக தந்தையின் பாசத்தின் மீது ஓர் சிறு இடைவெளி நுழைந்துவிட்டதாக உணர்ந்தவள். வீடு வந்து சேரும் வரை ஒன்றும் பேசவில்லை; அப்படியே மெத்தையில் போய் விழுந்தாள்!.

'என்ன இந்து! உனக்கு இதில ஏதும் ஆட்சேபணை இருக்கோ!!. என்று இந்துமதியைக் கேட்கவும்!!! நாளைக்கு கதைப்பம் அத்தான்'. எனக்கும் களைப்பா இருக்கு என்று அன்றைய நாளுக்கான தொடர்கதைக்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாள்.

'மெத்தையில் விழுந்து அழுதுகொண்டிருந்த கீர்த்திக்கு மனம் ஆறவே இல்லை!! மீண்டும் அந்தக் கடிதங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல்தான் மேலோங்கியது. அன்றைய இரவு!!!................

தொடரும்....................

Posted

ஹீஹீ பாவம் கீர்த்.

ஆமா அன்றைய இரவு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, என்னாச்சு அக்கா?

Posted

தமிழ்தங்கை அக்கா கதை நல்லா இருக்கு ஆனா பொறுத்த இடத்தில வந்க்டு தொடரும் போட்டது தான் கோபமா வருது எனக்கு!! ;)

  • 2 months later...
Posted

அக்காச்சி, தொடர் கதை இடையில நிண்டு போச்சுதோ? சவாலில் எப்பிடி வெற்றி கிடைத்தது எண்டு சொல்லி சுபமாக கதைய முடிச்சுவிடுங்கோ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அக்காச்சி, தொடர் கதை இடையில நிண்டு போச்சுதோ? சவாலில் எப்பிடி வெற்றி கிடைத்தது எண்டு சொல்லி சுபமாக கதைய முடிச்சுவிடுங்கோ..

இதைத்தானே "நக்கல்' நக்கல் என்று சொல்லுறவ!!...

கலைஞா மற்றும் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் சில முக்கிய பொறுப்புகளும் வேலைச்சுமைகளும் என்னை அழுத்திக் கொண்டமையால் தொடர்ந்து யாழ்குடும்பத்துக்கு வர முடியவில்லை ஆனால் இந்த நத்தார் விடுமுறையைத் தொடர்ந்து எனது பங்களிப்புகளும் படைப்புகளும் தொடரும்..

கலைஞா கதையை எழுதி முடித்துவிட்டேன்...இனி அங்கிருந்து இங்கு ஒட்ட வேண்டியதுதான் <_<) முடிவு ...வித்தியாசமாக இருக்கும்!!! ஆனால் நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சுபமே !!..

என்னை இன்னும் மறக்காமல் இருப்பதற்கு நன்றி கலைஞா <_<)

Posted

இல்லை, இல்லை... உங்களை நக்கல் எல்லாம் அடிக்கமாட்டேன். கதை எழுதி முடிஞ்சுதோ? அப்ப போட்டு விடுங்கோ. நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சவால் 7

அனைத்து உறவுகளும் மன்னிக்க வேண்டும் பணியில் சில பொறுப்புச்சுமைகள் கூடியதாலும் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவதற்குள் கொஞ்ச காலதாமதம் ஆகிவிட்டது. மீண்டும் உயிர்பூட்டிய நட்பின் கலைஞனுக்கு மிகுந்த நன்றி..:)

சவால் 7

அன்றைய இரவு முழுவதும் சிவராத்திரியாகவே இருந்தது கீர்த்திக்கு! மனசுக்குள் நிறைய்ய்ய்ய்ய நினைவுகள் வந்து அலைக்கழித்துப்போனது தான் செய்வது சரியோ தவறோ என்றுகூட அவளால் உணரமுடியவில்லை. தன் ஆதங்கத்தை வழமை போலவே கவிதை வரிகளாக்கினாள் கீர்த்தி "

என் கற்பனைக் காதலா! என்றுனை

காணுவேன்! என் கண்களில் தானடா!

தினம் உனை கனவினில் காண்கின்றேன்!

பூவினைத் தாங்கிடும் காம்பினைப்

போலவே! என்னை நீ ஏந்திடும் நாள்

என் திருநாள்! என்று நீ வருவாய்?!

தித்திக்க தித்திக்க அன்பினைக்

குழைத்து என் உயிரே என்னை

என்றதில் கரைப்பாய்?!கலப்பாய்?!

என் வானின் வெண்ணிலா தேய்

பிறை ஆகுதே! என் வானமாய்

நீ வந்தால் முழுமதி ஆகுமே!

தேசத்தின் திக்கெட்டும் உன்னையே

தேடினேன்! என்றுவந்தென் முன்

நிற்பாய்!தேவதை வாடினேன்!

முத்தாய் முத்தாய் உன் கைஎழுத்தில்

எந்தனின் காதலைக் கோர்த்தேன்!

வந்தெனைச் சேரும் நாளெதிர் பார்த்தேன்!

எழுதி முடித்ததும் மடித்து தான் வணங்கும் பிள்ளையார் படத்தின் முன் வைத்தாள். பிறகு அதை மடித்து பாரதியார் பாடலினுள் வைத்தாள். உறக்கம் வரவில்லை ஆயினும் பல நினைவுகள் அவளைத் தாலாட்டவே கொஞ்சம் கண் அயர்ந்தாள். எப்போதும் அதிகாலையிலே எழுந்திருப்பவள் அன்று நீண்ட நேரம் நித்திரையில் இருக்கவும் தாய் இந்துமதிதான் பதறியபடி ஓடி வந்தாள். 'காய்ச்சலாக இருக்குமோ என்று நெற்றியில் தொட்டுப்பார்க்கவும் அந்த ஸ்பரிசத்தின் உணர்வு தட்டவே கண் விழித்தாள் கீர்த்தி. "என்னம்ம்மா? என்றவள் கேட்டு முடிக்கும் முன்னரே என்னடா கீர்த் …ஏன் இவ்வளவு நேரம்? ! அதான் பயந்து போனன் என்றாள் தாய் தாய்மைக்கேயுரிய பரிவுடனும் பாசத்துடனும்.. "ச்ச்சோ நீங்க வேற..ஒரே அலுப்பா இருந்திச்சும்மா சரி என்ன நேரம் நான் இன்று முழுகிட்டு கோயிலுக்குப்போகணும் அம்மா!' என்றபடியே எழுந்திருந்து கோயிலுக்குப்போக ஆயத்தமானாள். அவள் வீட்டுற்கு ஒரு பதினைந்து நிமிட நடைதூரத்தில் இருக்கும் "வேழமுகப்பிள்ளையார் கோயிலுக்குப் போனால் தான் அவள் மனப்பாரம் கொஞ்சமாவது குறையும் போல் இருந்தது. பூக்கள் பறித்து ஒரு சின்ன மாலை கட்டினாள். கொஞ்சம் உதிரியாகப் பூக்களையும் எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்று 'அர்ச்சகரிடம் மாலையையையும் பூவையும் கொடுத்துவிட்டு 'பிள்ளைகளுக்கெல்லாம் நானே கடவுள் என்று சிரித்தபடி அமர்ந்திருக்கும் பிள்ளையாரை கண் மூடித் தியானித்தாள். " பிள்ளையாரப்பா எனக்குத் தெரியவே இல்லை நான் பண்றது சரியா தப்பா?!! எங்க அப்பா, அம்மா எனக்கு எப்பவும் கெடுதல் செய்ய மாட்டாங்க!அப்படித் தெரிஞ்சிருந்தும் எங்க அப்பா மேல் நேற்று எனக்கொரு சின்னக் கோவம் எட்டிப்பார்த்தது!! இதெல்லாம் நல்லாவே இல்லை' கண்ணுக்குத் தெரியாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருப்பவனுக்காக என்னைக் கண்ணாக எண்ணுபவர்களை எல்லாம் நான் வதைப்பது சரியா? முதல் முதலா என் மனசில தாக்கத்தை ஏக்கத்தை காதலின் விதைப்பை நினைப்பை ஊற்றி விட்டுப் போனவனை என் கண் முன்னே காட்டப்பா" என்று சொல்லிக்கொண்டு கண் திறந்தவளுக்கு நேரே "கண் அடித்தபடி கார்த்திக்" …ஹாய் கீர்த்' என்றான் வழக்கம் போலவே அவன் பழக்கம் மாறாமல்" 'நெஞ்சில் எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தாலும்" ஒரு புன்சிரிப்பை உதிர்த்தாள். 'அடடா! காலங்காத்தால கோயிலுக்குப் போற பழக்கம் எல்லாம் இருக்கா 'ஐ லைக் இட்"! என்றான் மீண்டும் கண் சிமிட்டியபடி" " எங்களுக்கு இருக்கறதெல்லாம் நல்ல பழக்கம் தான் என்றாள் வந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு!! " ஐ நோ பியூட்டி!. இந்தக் கலர் உங்களுக்கு ரொம்பவும் நல்லா இருக்கு அதுவும் எனக்கு பிடிச்ச 'க்ரீன்" ஸோ கியூட்".. என்று அவன் சொல்லவும் !' இங்க பாருங்க நான் கோயிலுக்கு வந்ததே என்னைப் பிடிச்ச ஏழரை விலகணும் என்றுதான் என்று கொஞ்சம் கோவமாகவே பேசியவள் சட்டென உதட்டைக் கடித்துக்கொண்டாள். "அப்படிக் கதைச்சிருக்கக்கூடாதோ? !!என்றவள் தடுமாறிச் 'ஸொறி" சொல்லவும் !!. அட …இங்கிலீஷ் தெரியுதே உங்களூக்கு வாவ்'! என்றான் ஆச்சரியம் மாறாத குரலில் அவன் தெளிவு அவன் கோவத்தைக் காட்டாமல் ஏற்றுக்கொண்ட விதம் கீர்த்தியின் மனசைப் பிசையவே 'உங்களுக்கு நான் அப்படிச்சொன்னது கோவம் வரேல்லையோ? !! " ம்ஹீம்!! என்கிட்ட கூட எனக்கு கோவம் வர்ரது உண்டு ஆனால் உங்க கிட்ட கெஞ்சிக்கேட்டாலும் கோவம் எட்டியே பார்க்க மாட்டேங்குதே என்று அவன் நடித்துக்காட்டவும் ' மெய் மறந்து சிரித்தாள் கீர்த்தி!! ஏனோ முதல் முதலாக அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது அவளுக்கு!. " சரி நான் வீட்டுக்குப்போகணும் என்றாள்!! 'அதுக்கென்ன வாங்களேன் நானே கூட்டிக்கொண்டு போறன்!! " இல்லை அது நல்லா இருக்காது நானே போறன்!. பிரசாதமும் வாங்கேல்லை! இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டுத்தான் போவேன் என்றவளை 'அதற்கு மேலும் தொந்தரவு பண்ணக்கூடாது என்று நினைத்தவன். இட்ஸ் ஓக்கே …கீர்த். "ஐ லவ் யூ" என்றபடி அவளின் பதிலுக்குக் காத்திராது விரைந்தான்.

கீர்த்திக்கு எல்லாமே கனவு போல் இருந்தது. கொஞ்ச நேரம் கோயிலிலேயே இருக்க வேண்டும் போல் இருந்தது. மனசு கொஞ்சம் இலேசாக இருந்தாலும் 'கார்த்திக் சொல்லிப்போன " ஐ லவ் யூ" காதில் எதிரொலித்தபடியே அவள் கனவுக்கும் கற்பனைகளுக்கும் கல்லெறிந்து போனது!.

என்ன செய்ய?!! இந்தக் கேள்விக்குரிய பதிலைத் தீர்மானிப்பது அவளைப்பொருத்தவரையில் பெரும் சவாலாகவே இருந்தது! 'மீண்டும் கொஞ்ச நேரம் கண் மூடிப் பிள்ளையாரைத் தியானித்தாள்!' விழிமூடித் திறந்த அந்த சொற்ப நேரத்துள் அவள் மடியினில் ஒரு கடிதம் கண் அடித்துச் சிரித்தது!.......................

தொடரும்....

Posted

பூவினைத் தாங்கிடும் காம்பினைப்

போலவே! என்னை நீ ஏந்திடும் நாள்

என் திருநாள்!

:icon_idea::D அக்காச்சி நல்ல ஜாலி மூட்டில இருக்கிறா போல இருக்கிது. கத, கவிதையெல்லாம் அந்தமாதிரி சீறிக்கொண்டு போகிது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பூவினைத் தாங்கிடும் காம்பினைப்

போலவே! என்னை நீ ஏந்திடும் நாள்

என் திருநாள்!

:icon_idea::D அக்காச்சி நல்ல ஜாலி மூட்டில இருக்கிறா போல இருக்கிது. கத, கவிதையெல்லாம் அந்தமாதிரி சீறிக்கொண்டு போகிது

ஆஹா!! நான் எப்போதுமே அப்படித்தான் கலைஞா...எந்தக்காயங்களும் என்னைக் காயப்படுத்தி இருந்தாலும் அதைப் பிறர்மீது நான் திணிப்பதில்லை :D இந்தக்கணம் தான் நிஜம் அதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

Posted

அக்கா நீண்ட காலத்தின் பின்சவாலோடு அவ்ந்த உங்களாஇக் கண்டதில் மகிழ்ச்சி. அக்கா எப்படி சுகம்?

அட கீர்த் இன் மடியில் கடிதமா? நல்லா இருக்குதே,. இனியாவது தெரியுமா அக்கடிதத்தின் நாயகன் இந்த கார்த்திக் தான் என?

மீண்டும் எப்போ வரும் சவால்?

  • 4 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சவால் 8 : நிறைவு!

மடியில் கடிதம் சுற்றும் முற்றும் பார்த்தாள் கீர்த்தி கண்ணை மூடிக்கொண்டு மீண்டும் சாமியைக் கும்பிட்ட படி கைகளில் வைத்திருந்த கடிதத்தை எடுத்துக் சுக்கு நூறாய்க் கிழித்தாள் கொண்டு போய் மரத்தடியின் கீழ் இருந்த குப்பைத் தொட்டியில் போட்ட படி நடந்தாள்; அவள் நடையின் வேகம் போலவே..அவள் திருமணமும் வெகு சிறப்பாக நடந்து முடிந்து அழுதபடி விமானநிலையத்தில் வந்து நின்றது கண் முன்னே நிழலாடியது. தொலைபேசி ஒலிக்கவே சுயநினைவு வந்தவளாய். என்ன கீர்த்தி இன்னமும் தேடுறீரோ போய் என்ரை கம்பியூட்டருக்குப் பக்கத்தில் இருக்கிற நீல நிற பைலில் தேடிப்பாரும்குரலுக்குச் சொந்தக்காரன் கார்த்திக்

தன்னை அன்னை தந்தை கவனித்ததை விட இருமடங்காய் பாசம் பொழியும் இவனை கீர்த்தி வெறுக்கவில்லை ஆனாலும் ஏதோ நெருடல்கள் அவளுக்கும் மனசுக்குமான சவாலில் ஏனோ கொஞ்சக் காலம் அவள் மனசை வென்றிருந்தாள் என்பதை உணர்ந்துகொண்டாள். முன்பை விட கார்த்திக் மீது தான் அதிக பாசம் காட்டுவதை அவளாலேயே உணரக் கூடியதாக இருந்தது. அவன் நல்லவன் என்பதில் துளியளவு சந்தேகமும் தற்போது அவளிடம் இல்லை ‘என்ன இது கார்த்திக் மீது இப்படி ஓர் ஆர்வமும் அதீத அன்பும் இழையோடத் தொடங்கி இருக்கிறதே என்றபடி அவன் கம்பியூட்டர் அறையுள் நுழைந்தாள்.

முதல் முறை கார்த்திக் கூட்டிக்கொண்டுபோய் காட்டியதோடு சரி அவள் அந்த அறைப்பக்கம் எட்டிப் பார்ப்பதே இல்லை. ‘அட எவ்வளவு அழகா அடிக்கி வைச்சிருக்கிறார்; ஆம்பிளைப்பிள்ளைகள் என்றால் குப்பை என்று சொல்லுவினம் ஆனால் கார்த்திக் ’ம் "தனக்குள்ளேயே ஒரு பெருமிதம் அவளுக்கு!!!!!....நீல நிற பைல் எங்கே ஓ அந்தா இருக்குது.ஒரு முறை அறையை நோட்டம் விட்டாள். திருமணத்தின் போது எடுத்த படங்களில் தானும் கார்த்திக்கும் இணைந்திருந்த படங்கள் எல்லாம் மிகப் பெரிதாக்கப்பட்டு அந்த அறையில் நேர்த்தியாக மாட்டப்பட்டிருந்தது. ’கொஞ்சம் சிரிச்சிருக்கலாமே கீர்த்தி என்று தன் படத்தைப் பார்த்து தானே சொல்லிக் கொண்டாள்.நீ நேசிப்பவனை விட உன்னை நேசிப்பவனே என்கின்ற வசனம் காதினுள் தேன் பாய்வது போல் ஒலித்துக்கொண்டிருந்தது மீண்டும் தொலைபேசி அடிக்க முதல்பைலை எடுப்பம் என்று எண்ணிக்கொண்டே பைலைத் திறந்தவளுக்கு பேரதிர்ச்சியும் கூடவே பேரானந்தமும்!!!.....இந்த இந்த இந்த எழுத்து.கார்த்திக்! என்னோட என் உணர்வோட மனசோட விளையாடினது நீங்களா?!! எத்தனை இரவு சிவராத்திரியா இருந்திச்சு.எத்தனை பகல்.வெறும்பகல் கனவாவே போச்சுதுஎப்படிக் கார்த்திக்.இதுவரை ஒண்ணுமே சொல்லாமல்இருங்க இன்றைக்கு கவனிச்சுக்கறேன் உங்களை என்று ஒரு பெருமிதத்தோடு சொல்லிக்கொண்டாள். மனசோடு போட்ட சவாலோடு பூரண வெற்றி பெற்றிருந்தாள் கீர்த்தி!..

நன்றி

முற்றும்

Posted

அடடா ஒருமாதிரி சவாலை வெற்றிகரமா முடிச்சுப்போட்டீங்கள்.

ஆனா கடைசியில ஒரு பாட்டு ஒரு டூயட் ஆட்டம் பாட்டு போட மறந்துபோனீங்கள் தமிழ்தங்கை. :D

ஆம்பிளைப்பிள்ளைகள் என்றால் குப்பை என்று சொல்லுவினம்

பொம்பிளைகள் எண்டாலும் குப்பை எண்டு சொல்லுவீனம். இப்ப எல்லா வீடுகளிலையும் அம்மாமார், அப்பாமார்தானே வீட்ட சுத்தம் பண்ணுறீனம். பிள்ளைகள் காலுக்கு மேல கால் போட்டு ரீவி பாத்துக்கொண்டு குப்பைகளும் போட்டுக்கொண்டு இருக்கிதுகள். பலர் வீட்டுக்கு செருப்பு போடுறது. இதால வீட்டில குப்பை இருந்தாலும், காலில ஒட்டிப்பிடிக்காதுதானே அப்ப அது தெரியாது.

[ஆனா நான் அப்பிடி இல்ல. வலு சுத்தம். ]

Posted

அட...பல நாட்களுக்கு பின் பல சவால்களுக்கு மத்தியில் தமிழ் தங்கை அக்கா,கீர்த்தியின் சவாலை வெற்றி செய்வதுடன் தன் தொடரை முடிவு செய்திருக்கிறா வாழ்த்துக்கள் அக்கா :D ..(ம்ம்..கடசி மட்டும் சோர்வு இல்லாம கதையை நகர்த்திய விதம் நன்றாக இருந்தது).. :lol:

ஒரு சவால் முடிந்து விட்டது எனி எப்போது அடுத்த சவால் தமிழ் தங்கை அக்கா...(நாங்களும் சவாலை சமாளிக்க சா சா வாசிக்க ஆவலாக இருக்கிறோம்.. :)

பிறகு அக்கா உந்த கதையில் வருது ஒரு வசனம் "நீ நேசிப்பவனை விட உன்னை நேசிப்பவனை மணந்தா வாழ்க்கை நன்னா இருக்கு அது தானே :wub: ..உதுக்காக நேசிக்கிற எல்லாரையும் கல்யாணம் கட்ட முடியுமா..??(அட நான் பகிடிக்கு :wub: )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடடா ஒருமாதிரி சவாலை வெற்றிகரமா முடிச்சுப்போட்டீங்கள்.

ஆனா கடைசியில ஒரு பாட்டு ஒரு டூயட் ஆட்டம் பாட்டு போட மறந்துபோனீங்கள் தமிழ்தங்கை. :D

பொம்பிளைகள் எண்டாலும் குப்பை எண்டு சொல்லுவீனம். இப்ப எல்லா வீடுகளிலையும் அம்மாமார், அப்பாமார்தானே வீட்ட சுத்தம் பண்ணுறீனம். பிள்ளைகள் காலுக்கு மேல கால் போட்டு ரீவி பாத்துக்கொண்டு குப்பைகளும் போட்டுக்கொண்டு இருக்கிதுகள். பலர் வீட்டுக்கு செருப்பு போடுறது. இதால வீட்டில குப்பை இருந்தாலும், காலில ஒட்டிப்பிடிக்காதுதானே அப்ப அது தெரியாது. <<<

******

எங்கட வீட்டில் அப்படி இல்லைப் பாருங்கோ கலைஞா...:D

[ஆனா நான் அப்பிடி இல்ல. வலு சுத்தம். ]<<<

அதைச்சொல்லவே வேண்டாம் கலைஞா,நீங்கள் குளிக்க எடுக்கும் நேரத்தில் இருந்தே தெரிந்து கொண்டேன் :lol:

அட...பல நாட்களுக்கு பின் பல சவால்களுக்கு மத்தியில் தமிழ் தங்கை அக்கா,கீர்த்தியின் சவாலை வெற்றி செய்வதுடன் தன் தொடரை முடிவு செய்திருக்கிறா வாழ்த்துக்கள் அக்கா :wub: ..(ம்ம்..கடசி மட்டும் சோர்வு இல்லாம கதையை நகர்த்திய விதம் நன்றாக இருந்தது).. :lol: <<

********************

தொடக்கம் தொட்டு முடிவு வரை வாசித்து நேசித்து ஆசிர்வதித்து....வாழ்த்திய உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி....

****ஒரு சவால் முடிந்து விட்டது எனி எப்போது அடுத்த சவால் தமிழ் தங்கை அக்கா...(நாங்களும் சவாலை சமாளிக்க சா சா வாசிக்க ஆவலாக இருக்கிறோம்.. :D **

அடுத்த தொடர் எழுதத்தொடங்கிட்டன்,,,முடிக்க கொஞ்சம் நிறையவே இருக்கு...முடிச்சுப்போட்டு...இ

Posted

நீண்ட இடைவெளியின் பின் சவாலை முடித்து விட்டீர்கள்.

நன்றிகள். இந்த சவால் இபப்டியே முடியாமல் போயிடுமோ னு நினைச்சேன். ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முழுமையா இன்று தான் வாசித்தேன் அருமையான கதை :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.