Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கள் கடந்த காலத் தவறுகளில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ளாவிட்டால், இன்னும் அழிவுகள் எங்களுக்காக இருகரம் விரித்துக் காத்திருக்கின்றது. 

  • Replies 89
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கள் முன்னோர் களைகளை பயிர் என வளர்த்து எங்களுக்கும்  போதித்து விட்டுச் சென்றுள்ளனர், அதன் பயனை நாங்கள் அனுபவிக்கிறோம், இதை எமது சந்ததிக்கு கடத்தாமல் வேரோடு பிடுங்கி குப்பையிலே போட்டுத் தீவைத்தாலே எதிர்கால அழிவிலிருந்து நமது சந்ததியை காத்தவராவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 40 கிலோ கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 40 கிலோ கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று திங்கட்கிழமை 40 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து படகு ஒன்றில் குருநகர் கடற்கரை பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்பட்ட நிலையில், கடற்படையினரின் சோதனை நடவடிக்கையின் மூலம் கஞ்சா மீட்கப்பட்டது.

கஞ்சாவை கடத்தி வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரையும் கைது செய்துள்ள கடற்படையினர் கஞ்சாவையும் குறித்த இளைஞனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1310396

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லூர் கந்த சுவாமி ஆலய வளாகத்தில் தங்கச் சங்கிலியை அபகரித்த பெண் கைது!

யாழில். ஹெரோயின் , கசிப்புடன் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) மாலை சுமார் 21 லீட்டர் கசிப்புடன் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே கசிப்புடன் 27 வயது மற்றும் 42 வயதான இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக இளவாலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை நேற்றைய திங்கட்கிழமை மாலை அச்சுவேலி பகுதியில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் , திருநெல்வேலி , குட்டியப்புலம் மற்றும் இணுவில் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் 60 மில்லிகிராம் , 55 மில்லிகிராம் மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு , அச்சுவேலி பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

https://athavannews.com/2022/1310617

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/11/2022 at 00:21, Kapithan said:

எங்கள் முன்னோர் விதைத்தவற்றை எங்கள் தலைமுறை அறுவடை செய்கிறது. 

☹️

நீங்கள் முன்னோர் என்று புலிகளை சொல்லவில்லை தானே :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

நீங்கள் முன்னோர் என்று புலிகளை சொல்லவில்லை தானே :unsure:

போராளிகளின் தியாகத்தை நான் கொச்சப்படுத்தியதில்லை..

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போதைப்பொருளை கட்டுப்படுத்த வடக்கு பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார்!

போதைப்பொருளை கட்டுப்படுத்த வடக்கு பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார்!

போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்குடன் வடமாகாண பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. அதனை இல்லாது ஒழிப்பதற்கு பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என்பவற்றில் மாணவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். திடீர் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.

போதைப்பொருள் ஒழிப்பு என்பது தனியே பொலிஸாரின் கடமை மாத்திரம் அல்ல. பொலிஸாரினால் மாத்திரம் அவற்றை இல்லாது ஒழிக்க முடியாது. மக்களின் பூரண ஆதரவு பொலிஸாருக்கு கிடைக்க வேண்டும்.

குறிப்பாக மாணவர்களின் பெற்றோர்கள் மிக அவதானத்துடன் , விழிப்பாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் சமூக அந்தஸ்துடன் வாழ வேண்டும்.

வடமாகாணத்தில் உள்ள 61 பொலிஸ் நிலையங்களிலும் தினமும் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்படுகின்றனர்.

வடமாகாணத்தில் பொலிஸார் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவில்லை. வீதி போக்குவரத்து விதி மீறல்களை கண்காணித்தல் , சட்டம் ஒழுங்கினை நிலை நாட்டுதல் என பல்வேறு செயற்த்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

https://athavannews.com/2022/1314439

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லூர் கந்த சுவாமி ஆலய வளாகத்தில் தங்கச் சங்கிலியை அபகரித்த பெண் கைது!

வைத்தியரின் ஸ்ரிக்கர் ஒட்டிய காரில் போதைப்பொருளுடன் பயணித்த இருவர் கொடிகாமத்தில் கைது!

வைத்தியர் என அடையாளப்படுத்தும் ஸ்ரிக்கர் ஒட்டிய காரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சென்ற இரு இளைஞர்கள் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரில் பயணித்த இரு இளைஞர்களில் ஒருவரிடம் 600 மில்லிகிராமும் மற்றைய இளைஞனிடம் 430 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்த இளைஞன் ஒருவரின் சகோதரர் வைத்தியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் , கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2022/1314167

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் அதிகாரிகளிடம் இருந்து மீண்டும் மக்களுக்கு வருகின்றது – நீதி அமைச்சர்

சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால் கைப்பற்றப்படும் ஹெரோயின் பின்னர் மீண்டும் சந்தைக்கு வரும் நிலை காணப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செலவீனங்கள் மீதான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஹெரோயினை கைப்பற்றும் பொலிஸ் அதிகாரிகளே அதனை மக்களிடமே திருப்பி அனுப்புவதை அண்மைக்காலமாக காணக்கூடியதாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான தவறுகளை செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1314119

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாட்டக்களப்பில் களுத்துறையை சேர்ந்த 5 பெண் கொள்ளையர்கள் கைது !

யாழில் ஹெரோயினுடன் பெண் கைது!

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் 130 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 38 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண்ணையும் , பெண்ணிடம் மீட்கப்பட்ட போதைப்பொருளை மேலதிக நடவடிக்கைக்காக சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1314601

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாணவிகளும் போதைக்கு அடிமையாகி வருவதாக தகவல்!

மாணவிகளும் போதைக்கு அடிமையாகி வருவதாக தகவல்!

பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பழக்கம் முன்னர் நகர்ப்புற பாடசாலைகள் தொடர்பில் மாத்திரம் பதிவாகியிருந்த போதிலும், தற்போது அது கிராமப்புற பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரின் போதைப்பொருள் பாவனையால் சிறுவர் இல்லங்களில் தங்கியிருப்பதாகவும், அவர்களில் பலர் துஷ்பிரயோக சம்பவங்கள் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடும் வைத்திய நிபுணர் கலாநிதி தீபால் பெரேரா, இதனைத் தடுப்பதற்கு வலையமைப்புத் திட்டமொன்று தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1314539

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு - வைத்தியர் தீபல் பெரேரா

By RAJEEBAN

09 DEC, 2022 | 01:19 PM
image

போதைப்பொருளிற்கு அடிமையாகும்  இளம் பெற்றோரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர் தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிக்கின்றது இவ்வாறு பாதிக்கப்பட்ட இருபது முதல் முப்பது வீதமான பெற்றோரின் பிள்ளைகள் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து உடனடியாக கவனம் செலுத்தி அதற்கான தீர்வொன்றை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை வோர்ட்களிற்கு செல்லும்போது இதனை நான் அவதானித்துள்ளேன் நோயாளிகளின் விபரங்களை அடிப்படையாக வைத்து நோயாளர்களின் விபரங்களை என்னால் பெறமுடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளிகளுடன் நாங்ள் பேசும்போது சில வேளைகளில் தாய் இருக்கமாட்டார் அல்லது தந்தை இருக்கமாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தந்தைமார் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகமாக காணப்படுகின்றது ஆனால் சில தாய்மாரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.

drug_addictss.jpg

நோயாளிகள் தங்கள் தாத்தா அல்லது பாட்டியுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் காணப்படுகின்ற உண்மை நிலவரத்தை அறிந்துகொள்வதற்கு இந்த ஆபத்தான போக்கு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இளம் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதன் அர்த்தம் என்னவென்றால் அவர்கள் பாடசாலை காலத்திலேயே போதைப்பொருளிற்கு அடிமையாகயிருக்கவேண்டும்,அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்பதால் நான் இது குறித்து கருத்து வெளியிட தீர்மானித்துள்ளேன் என தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாத்திரம் நாட்டிற்கு உண்மை நிலை தெரியவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை மோசமடைவதை தடுப்பதற்காக  நாங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்,இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

https://www.virakesari.lk/article/142634

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிளிநொச்சியில் 2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

கிளிநொச்சியில் 2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

கிளிநொச்சி 57வது படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ் மற்றும் 573 வது படைகளின் கட்டளை அதிகாரி 573 பிரிக்கேடியர் பிரசன்னா ஆகியோரின் வழிநடத்தலில், இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 2 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகாநந்தா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, குறித்த வீட்டில் மாறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதி 2 கிலோ மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்படுகிறது. இதன் போது, குறித்த வீட்டிலிருந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளது.

https://athavannews.com/2022/1314817

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 3 people and text that says 'சிறைச்சாலை விளக்கமறியலில் உள்ள காதலனுக்கு ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் சென்ற 17 வயது பாடசாலை மாணவி கைது~ News Me MEME SIYA My Lover ஏன்டி, இதுவரை ஒரு 20/= ரூபாட சூப்புற ஐஸ்பழமாவது வேண்டி தந்திருக்கயாடி...'

சிறைச்சாலை, விளக்கமறியலில்  உள்ள  காதலனுக்கு,
"ஐஸ்" போதைப் பொருளை எடுத்துச் சென்ற, 
17 வயது பாடசாலை மாணவி கைது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னாரில் போதையால் ஏற்பட்ட கொலை : மூவர் கைது - ஒருவர் தலைமறைவு

12 DEC, 2022 | 07:44 PM
image

தொழில் நிமித்தம் மன்னார் பேசாலையில்  குடியிருந்தவர்கள் ஒன்று கூடி மது அருந்திய வேளையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் தாக்கப்பட்டு மரணித்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் ஒருவர் தலைமறைவாகி உள்ள நிலையில்  பொலிசார் தேடி வருகின்றனர்.

பேசாலை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (08) இரவு இடம்பெற்ற  சம்பவம் தொடர்பாக மன்னார் மரண விசாரணை அதிகாரி எஸ்.ஈ.குண குமார் மரண விசாரனையை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது மேலும் தெரிய வருகையில்,,,

கொலை செய்யப்பட்டவர்  கொழும்பைச் சேர்ந்த சுப்பையா ஆறுமுகம் சங்கர் (வயது -40) என தெரிய வந்துள்ளது.

இவர் கிளிநொச்சிக்கு தொழிலுக்குச் சென்ற வேளையில் அங்கு ஜெயபுரத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்த பின் பேசாலை பகுதிக்கு தொழிலுக்கு குடும்பத்துடன் வருகை தந்து  வாடகை  வீட்டில் வசித்து  வந்துள்ளார்.

சம்பவ தினத்திற்கு முதல் நாள் இறந்த நபரின் மனைவி கொழும்புக்குச் சென்றுள்ளார். 

இந்த நேரத்தில் ஒன்றாக தொழில் புரிபவர்கள் ஒன்று சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் குறித்த குடும்பஸ்தர் தாக்குதலுக்கு உள்ளாகி மரணித்துள்ளார்.

இந்த சம்பவமானது சில தினங்களுக்கு முன் வளி மாசு காரணத்தால் ஏற்பட்ட இயற்கை குளறுபடியால் எவரும் கணக்கில் எடுக்காத நிலையில் மறுநாள்  (09) காலையே பொலிசாருக்கு தெரியப் படுத்தப்பட்டு பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த நபர்  இறந்ததாகவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்   உடல்  உறவினர்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்கொலை தொடர்பாக மூவர் சந்தேகத்தின் நிமித்தம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தலைமறைவாகிய ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/142938

  • கருத்துக்கள உறவுகள்
Posted

180 கிலோ கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!

180 கிலோ கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!

தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் , அதனை கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட படகொன்றினை கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்ட போது , படகில் இருந்து கஞ்சாவை மீட்டனர்.

அதனை அடுத்து படகில் இருந்த நபரை கைது செய்ததுடன் , படகினையும் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா , படகு மற்றும் கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1315578

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாட்டக்களப்பில் களுத்துறையை சேர்ந்த 5 பெண் கொள்ளையர்கள் கைது !

யாழில் போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 79 போதை மாத்திரைகளுடன் 49 வயதுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், வீட்டில் போதை மாத்திரைகள் வைத்திருப்பதாக சுன்னாகம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸாரால் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

https://athavannews.com/2022/1315755

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த போதைப்பொருள் மீட்பு

யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த போதைப்பொருள் மீட்பு

யாழ்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த கஞ்சா கலந்த (மாவா) போதைப்பொருள் யாழ்.மாவட்ட பொலிஸ் புலன்னாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென தயாராக இருந்த 3 கிலோ 500 கிராம் எடை உடைய கஞ்சா கலந்த மாவா பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கஞ்சா கலந்த மாவா பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தான் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கு இந்த மாவா பொருளை விற்பனை செய்வதாகவும் தனக்கு இதனால் அதிக லாபம் கிடைப்பதாகவும் நீண்ட காலமாக இந்த தொழிலை மறைமுகமாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்,

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1316102

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐஸ் போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

 

ஐஸ் போதைப்பொருளை உட்கொள்பவர்களின் ஆயுட்காலம் கண்டிப்பாக குறையும் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார் .

ஐஸ் போதைக்கு அடிமையானவர்களிடம் பசி படிப்படியாக குறைவதால், உடல் பலவீனமடைந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், பல்வேறு நோய்களுக்கு அவர்கள் இலக்காவது பொதுவான பண்பு. இதன் காரணமாக அவர்களின் உடல் மற்றும் மனவலிமை பலவீனமடைவதோடு கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்படும் எனவும் தீபால் பெரேரா தெரிவித்தார்.

மற்ற போதை மருந்துகளுடன் ஒப்பிடும்போது ஐஸ் போதைக்கு அடிமையாதல் அதிகம் என்றும், ஐஸ் மருந்துகளை உட்கொள்பவர்களின் ஆயுட்காலம் கண்டிப்பாக குறையும் என்றும் அவர் கூறினார்.
கடத்தல்காரர்கள் பலர் ஐஸ் போதைப்பொருள்களை பொய் கூறி பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக அறியமுடிகிறது ஞாபக சக்தி அதிகரிக்கும் படிக்கும்போது தூக்கம் வராது என பொய்களை பரப்பி வருகின்றனர். இவை அப்பட்டமான பொய்களாகும். மேலும் ஐஸ் மருந்துகளை உபயோகிப்பதால் நினைவாற்றல் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

https://thinakkural.lk/article/228815

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளைஞர்கள் மத்தியில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 பேர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமையவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளை உள்ளடக்கி இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 01 கிலோ 260 கிராம் மாவா, 09 கிராம் 630 மில்லிகிராம் ஹெரோயின், 02 கிராம் 38 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 207 கிராம் 590 மில்லி கிராம் கஞ்சா ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவன் மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரச பாடசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1316850

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்.துன்னாலை – சக்குச்சம்பாதி பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவா் கைது!

யாழ்.துன்னாலை – சக்குச்சம்பாதி பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவா் கைது!

யாழ்.துன்னாலை – சக்குச்சம்பாதி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவா் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த நபா் கைது செய்யப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவாிடமிருந்து சுமாா் 5 கிராம் 320 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரை பருத்தித்துறை நீதிமன்றில் நெல்லியடி பொலிஸார் முற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1317376

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

யாழில் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருள் 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை!

யாழில் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருள் 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை!

யாழ்ப்பாணத்தில் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக போதைப்பொருளுடன் கைதானவர்களிடம் இடம்பெற்ற  விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலை சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தமக்கு போதைப்பொருட்களை கொழும்பில் இருந்து ஒருவர் யாழ்ப்பாணத்திற்க்கு கொண்டு வந்து ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை 60 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்வதாகவும் , அதனை தாம் வாங்கி ஒரு கிராமை 85 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்வதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , அவர்களின் விற்பனை வலையமைப்பை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை, இவர்களுக்கு போதைப்பொருளை விற்பனைக்காக விநியோகிக்கும் நபர்களை கண்டறிவதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

https://athavannews.com/2022/1317541

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, தமிழ் சிறி said:

ஒரு கிராமை 85 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்வதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 என்னால் நம்பும்படியாக இல்லை இந்த பொலிஸாரின் செய்தி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யாழில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஆறுகால் மடப்பகுதியை சேர்ந்த இளைஞரே இவ்வாறு யாழ். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி, இந்த போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்ததாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கோண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2022/1317756

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொத்துக்கொத்தாக கைது செய்கிறார்கள், பல கிலோ கணக்கில் கைப்பற்றுகிறார்கள், சோதனைச்சாவடிகள் அமைக்கிறார்கள் இவ்வளவையுந்தாண்டி எப்படி மீண்டும் வருகிறது? இவர்களே விநியோகித்து விட்டு மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் செயற்படுகிறார்களோ? இவர்களை வெளியேற்றினால் உண்மை வெளிவரும்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.