Jump to content

பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வா வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வா வெற்றி

By T. Saranya

31 Oct, 2022 | 10:29 AM
image

பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவை முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தோற்கடித்துள்ளார்.

கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், 2 ஆவது சுற்று வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவும், முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவும் இத்தேர்தலில் போட்டியிட்டனர்.

லூலா டா சில்வா 50.9 சதவீத வாக்குகளையும் ஜெய்ர் போல்சனரோ 49.1 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

69 வயதான ஜெய்ர் போல்சனரோ, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளராக விளங்கியவர்.

2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் டொனால் ட்ரம்ப் கூறியதைப் போன்று, இம்முறை பிரேஸில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜெய்ர் போல்சனரோ  அவநம்பிக்கைகளை வெளியிட்டு வந்தார். 

இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரங்கள் குறித்து அவர் சந்தேகம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் இன்னும் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.

77 வயதான லூலா டி சில்வா, ஏற்கெனவே 2003 முதல்  2010 ஆம் ஆண்டு வரை இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.

எனினும், லஞ்சக் குற்றச்சாட்டு காரணமாக அவர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/138755

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் அதிபர் தேர்தல்: வலதுசாரி போல்சனாரோவை தோற்கடித்த இடதுசாரி லூலு

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பிரேசில் தேர்தல்

பட மூலாதாரம்,REUTERS

பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, தீவிர வலதுசாரியான தற்போதைய அதிபர் ஜேர் பொல்சனாரோவை தோற்கடித்ததால் பிரேசில் இடதுசாரி பக்கமாகத் திரும்பியுள்ளது.

பிரேசிலின் அரசியல் களத்தில் எதிரெதிர் பக்கங்களில் நேருக்கு நேர் மோதிய இரண்டு போட்டியாளர்களின் வலது, இடது எனப் பிளவுபட்ட பிரசாரத்திற்குப் பிறகு, லூலா 50.9% வாக்குகளைப் பெற்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாமல் சிறையில் இருந்தது, அதிபர் பதவிக்கு நிற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது போன்றவற்றுக்குப் பிறகு ஓர் அரசியல்வாதியாக லூலாவுக்கு இது பிரமிக்க வைக்கும் மறுபிரவேசம்.

பிரேசிலின் அரசாங்க எண்ணெய் நிறுவனமான பெட்ரோப்ராஸுடனான ஒப்பந்தங்களுக்கு ஈடாக பிரேசிலின் கட்டுமான நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

 
 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

லூலா தனது தண்டனை ரத்து செய்யப்படுவதற்கு முன்பாக 580 நாட்கள் சிறையில் இருந்தார். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கினார்.

அவருடைய வெற்றி உரையை, "என்னை உயிரோடு புதைக்க முயன்றார்கள். இதோ மீண்டு வந்துவிட்டேன்" என்று தொடங்கினார்.

 

line

லூலா குறித்த ஐந்து முக்கிய தகவல்கள்

 

வெற்றிக்குப் பிறகு தனது மனைவி ரோசேஞ்சிலாவை அணைத்துக்கொண்ட லூலா

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

வெற்றிக்குப் பிறகு தனது மனைவி ரோசேஞ்சிலாவை அணைத்துக்கொண்ட லூலா

  • அவருக்கு 77 வயதாகிறது
  • இடதுசாரி அரசியல்வாதி
  • முன்னாள் கொல்லர்
  • 2003 முதல் 2010ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார்
  • 2018ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார்
 

line

ஆரம்பத்திலிருந்தே அவர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் முதல் சுற்றில் கணிக்கப்பட்டதைவிட மிகக் குறைவான வாக்குகளை பெற்று அவர் முன்னிலையில் இருந்தபோது, பிரேசிலியர்கள் கணிப்பின் துல்லியத்தைச் சந்தேகிக்கத் தொடங்கினார்கள்.

நிறுவன அமைப்புகளும் ஊடகங்களும் தனக்கு எதிராக இருப்பதாகவும் அதனால் அவருக்குள்ள ஆதரவு குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் போல்சனாரோ வைத்த குற்றச்சாட்டுகளை நம்பிய அவருடைய ஆதரவாளர்கள், அவரது வெற்றியில் முழு நம்பிக்கை கொண்டிருந்தனர்.

லூலாவை "ஒரு திருடன்" என்று முத்திரை குத்தி, அவரது தண்டனையை ரத்து செய்ததால் அவர் நிரபராதி என்று அர்த்தமல்ல என்றும் சரியான சட்ட நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் வாதிடும் போல்சனாரோவின் ஆதரவாளர்களை இடதுசாரி தலைவர்களின் வெற்றி குழப்பமடையச் செய்யலாம்.

ஜேர் போல்சனாரோ தோல்வியடைந்தாலும் அவருக்கு நெருக்கமான அரசு பிரதிநிதிகள் பெரும்பான்மையாக உள்ளனர். அதாவது லூலா சட்டமன்றத்தில் அவரது கொள்கைகளுக்குக் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்வார்.

ஆனால், ஜனவரி 2003 மற்றும் டிசம்பர் 2010-க்கும் இடையில் இரண்டு முறை பதவியிலிருந்த லூலாவுக்கு அரசியல் கூட்டணிகளை உருவாக்குவது புதிதல்ல.

அவரது துணை அதிபருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது முன்னாள் போட்டியாளரான ஜெரால்டோ அல்க்மினை அவர் தேர்ந்தெடுத்தார். அவர் முந்தைய தேர்தல்களில் லூலாவை எதிர்த்துப் போட்டியிட்டார்.

 

ஜேர் போல்சனாரோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

கூட்டணியை உருவாக்கும் அவரது உத்தி பலனளித்தது, அவரது தொழிலாளர் கட்சிக்கு வாக்களிப்பதைப் பற்றிச் சிந்திக்காத வாக்காளர்களையும் அந்த முடிவு அவர் பக்கம் இழுத்தது.

அவரது வெற்றி உரையில், அவர் தனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பிரேசிலியர்களுக்கும் சேர்த்து ஆட்சி செய்வேன் எனக் கூறி, ஒரு சமரச தொனியில் பேசினார்.

"இந்த நாட்டிற்கு அமைதியும் ஒற்றுமையும் தேவை. மக்கள் இனி போராட விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.

ஜேர் போல்சனாரோ இன்னும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. தீவிர வலதுசாரி அதிபர் பிரேசிலின் மின்னணு வாக்குப்பதிவு முறையின் நம்பகத்தன்மையில், எந்த ஆதாரத்தையும் வழங்காமல் சந்தேகம் எழுப்பியதால் பிரசாரம் ஒருபுறம் மிகவும் பதட்டமாக இருந்தது.

இதனால், முடிவு அவருக்கு எதிராக வந்தால் அவர் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் இரண்டாவது சுற்றுக்கு ஒருநாள் முன்பு, அவர், "சிறிதளவும் சந்தேகமில்லை. யார் அதிக வாக்குகளைப் பெற்றாலும் வெற்றியைப் பெறுவார்கள். அதுதான் ஜனநாயகம்," என்றார்.

 

line

போல்சனாரோ பற்றிய ஐந்து முக்கிய தகவல்கள்

 

ஜேர் போல்சனாரோ

பட மூலாதாரம்,REUTERS

  • இவருக்கு 67 வயதாகிறது
  • தீவிர வலதுசாரி
  • முன்னாள் ராணுவ கேப்டன்
  • இரண்டாவது ஆட்சிக்காலத்திற்காக வேட்பாளராக அதிபர் தேர்தலில் நின்றார்
  • பிரேசிலின் மின்னணு வாக்குப்பதிவு முறையின் நம்பகத்தன்மையில் ஆதாரமற்ற சந்தேகங்களை எழுப்பினார்
 

line

தேர்தல் நாளிலேயே வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், வாக்களிப்பதைத் தடுக்கும் முயற்சி என்று லூலாவின் பிரசாரம் கூறியதால் அது காவல்துறையினரால் நிறுத்தப்பட்டது.

தேர்தல் மன்றத்தின் தலைவரான அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ், அனைத்து சோதனைச் சாவடிகளையும் சாலை தடைகளையும் நீக்குமாறு நெடுஞ்சாலை காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

சில வாக்காளர்கள் வாக்களிக்க தாமதமானாலும், யார் வாக்களிப்பதும் தடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார். ஆனால், இந்த சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

லூலாவை விட அவருக்குக் குறைவான வாக்குகள் பதிவானது அதிகாரபூர்வமாக இருப்பதால் போல்சனாரோ எப்போது, என்ன சொல்வார் என்று இப்போது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

பிரேசில் தேர்தல் அங்கு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. குறிப்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போல்சனாரோ அரசாங்கத்தின் இன்னொரு நான்கு ஆண்டுகள் அமேசான் மழைக்காடுகளில் மேலும் காடழிப்புக்கு வழிவகுத்திருக்கும் என்று கவலைப்படுகிறார்கள்.

 

பிரேசில் தேர்தல்

பட மூலாதாரம்,EPA

லூலா தனது வெற்றி உரையில், "அமேசானை பாதுகாக்க சர்வதேச ஒத்துழைப்புக்கு தயாராக இருப்பதாக" கூறினார்.

"இன்று நாம் பிரேசில் மீண்டு வந்துவிட்டதாக உலகத்திற்குச் சொல்கிறோம். இப்போத் உள்ளதைப் போல் சர்வதேச அரசியலில் ஒதுக்கி வைக்கப்பட முடியாத அளவுக்கு பிரேசில் மிகவும் பெரிய நாடு," என்று கூறினார்.

ஆனால், அவரது பேச்சின் மையத்தில் பட்டினையை சமாளிப்பதற்கான வாக்குறுதி இருந்தது. இது பிரேசிலில் அதிகரித்து வருகிறது. 3.3 கோடிக்கும் மேலான மக்களைப் பாதிக்கிறது.

லூலாவின் முதல் இரண்டு பதவிக் காலத்தில் அவர் பிரபலமடைந்ததற்கு முக்கியமான காரணம், லட்சக்கணக்கான பிரேசில் மக்களை வறுமையிலிருந்து மீட்டது.

ஆனால், தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதாரத்தில் அந்த சாதனையை மீண்டும் உருவாக்குவதற்கான நிதியைக் கண்டுபிடிப்பது, குறிப்பாக விரோதம் கொண்ட காங்கிரஸால் அவர் தடுக்கப்பட்டால், எளிதான காரியமாக இருக்காது.

https://www.bbc.com/tamil/global-63453052

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'பிரேஸிலின் டொனால்ட் ட்ரம்ப்’ : அதிகார கைமாற்றத்துக்கு ஜனாதிபதி போல்சனரோ ஒப்புதல்

By DIGITAL DESK 3

02 NOV, 2022 | 04:52 PM
image

பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ இன்னும் தோல்வியை நேரடியாக  ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் அவர் அதிகார கைமாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலின் 2 ஆவது சுற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

'பிரேஸிலின் டொனால்ட் ட்ரம்ப்' என வர்ணிக்கப்படும் ஜெய்ர் போல்சனரோ, இத்தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்பது தொடர்பில் ஏற்கெனவே சந்தேகம் வெளியிட்டு வந்தார்.  இதனால் அவர் தேர்தல் பெறுபேற்றை  ஏற்றுக்கொள்ளாமல் விடக்கூடும் என அஞ்சப்பட்டது.

நேற்று முன்தினம் வெளியான பெறுபேறுகளின்படி, முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வா 50.1 சதவீத வாக்குகளைப் பெற்று இத்தேர்தலில் வெற்றியீட்டினார். தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவுக்கு 49.1 சதவீத வாக்குகளே கிடைத்தன.

அதன்பின் 2 நாட்களாக ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ, நேரடியாக தோல்வியை  ஒப்புக்கொள்ளவில்லை.

Brazilian-President-Jair-Bolsonaro-AFP-2

Photo : AFP 

 

ஆனால், அவர் புதிய அரசாங்கத்திடம் அதிகாரத்தை கையளிப்பதற்கு ஜெய்ர் போல்சனரோ ஒப்புதல் அளித்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மாளிகையிலிருந்து 2 நிமிடங்கள் உரையாற்றிய அவர், தோல்வியை ஒப்புக்கொள்ளவோ அல்லது தனது வெற்றியீட்டிய வேட்பாளரான லூலா டி சில்வாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவோ இல்லை.

எனினும், 'இக்குடியரசின் ஜனாதிபதி மற்றும் பிரஜை என்ற வகையில், அரசியலமைப்புக்கு இசைந்து செயற்படுவேன்' என ஜெய்ர் போல்சனரோ கூறினார்.

அதன்பின் தனது அதிகாரிகளின் பிரதானி சிரோ நோகுய்ராவிடம் ஒலிவாங்கியை அவர் கொடுத்தார்.

அப்போது 'ஆட்சி மாற்றதுக்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு போல்சனரோ 'அதிகாரம்' அளித்துள்ளார் என சிரோ நோகுய்ரா கூறினார்.

2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் தோல்வியின் பின்னர் அவரின் ஆதரவாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெய்ர் போல்சனரோவின் ஆதரவாளர்கள் குறிப்பாக லொறி சாரதிகள், நேற்று வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜெய்ர் போல்சனரோ, 'அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எப்போதும் வரவேற்கப்படும்' என்றார்.

பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள 77 வயதான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி 3 ஆவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

https://www.virakesari.lk/article/138976

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலிய வம்சாவழியை  சேர்ந்தவர் இத்தாலியின் பேரன் என்று பத்திரிகைகள் கொண்டாடுகின்றன .எதுவென்றாலும் அமெரிக்க கார்ப்பரேட் கொம்பனி  முதலாளிகளுடன் இவர் தொடர்ந்து முரண்டு பிடித்தால் விபத்து மூலம் கொல்லப்படுவார் .நல்ல வளம் இருந்தும் தென்னமெரிக்கா  நாடுகளுக்கு தலைமை தாங்க  உண்மையான உளசுத்தமான அதிபர்கள் வருவதில்லை வந்தாலும் தங்கள் நாட்டை விற்று பிழைப்பவர்களே  வருவது உண்டு .

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.