Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெசொனில் மீண்டும் பறந்தது புலிக்கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நான் தெரிந்து கொண்டவரை உக்கிரேன் மக்கள் ஐரோப்பாவில் உள்ள ஒரு மேற்குலக நாடாகவே தங்களை அடையாளபடுத்த விரும்புகின்றனர்.ரஷ்யாவை வெறுக்கிறார்கள். இலங்கை தமிழர்கள் இந்தியாவை வெறுப்பது போன்று . நீங்கள் சொல்கின்ற படி அவர்கள்  மேற்குலகிடம் தான் மாட்டி கொள்ளவே  விரும்புகிறார்கள் என்றே வைத்து கொள்வோம். உக்கிரேன் மக்களுக்கு முழுமையான உரிமை உள்ளது தாங்கள் யாரிடம் மாட்டி கொள்ள வேண்டும் என்பது. ரஷ்ய சர்வாதிகாரி வெள்ளைத் தோல் புதினை தங்களுடைய தலைவாராக ஏற்று ரஷ்யாவுக்காக பிரசாரம் செய்கின்ற இலங்கை தமிழர்களே ரஷ்யாவுக்கு செல்ல விரும்பாமல் மேற்குலநாடுகளிலேயே மாட்டி கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து ரஷ்யாவுக்காக பிரசாரம் செய்து திரிகின்ற போது  உக்கிரேன் மக்களும் மேற்குலகிடம் தானே மாட்டி கொள்ள  விரும்புவார்கள்.

யுத்தம் ஆரம்பிக்க முதல் உக்ரேன் மேற்குலகுடன் நல்ல நட்புறவுடன் இருந்த நாடுதானே?
வியாபார முதலீடுகள் தொடக்கம்  அனைத்து அரசியல் தொடர்புகளும்  மேலைத்தேய நாடுகளுடன்  இருந்த உக்ரேனுக்கு என்ன குறை இருந்தது?

ஈழத்தமிழருக்கு சொந்த நாடுமில்லை.அரசியல் உரிமைகளும் இல்லை. ஆனால் உக்ரேன் மக்களுக்கு சொந்த நாடும் சகல உரிமையும் இருக்கின்றது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

யுத்தம் ஆரம்பிக்க முதல் உக்ரேன் மேற்குலகுடன் நல்ல நட்புறவுடன் இருந்த நாடுதானே?
வியாபார முதலீடுகள் தொடக்கம்  அனைத்து அரசியல் தொடர்புகளும்  மேலைத்தேய நாடுகளுடன்  இருந்த உக்ரேனுக்கு என்ன குறை இருந்தது?

இந்திய இராணுவம் யாழ்பாணத்தில் வந்து இறங்கிய பின் எல்லாம் பார்த்த பின்பு கேட்டதாம் இந்தியாவில் மக்கள் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள் ஆனால் நீங்கள் இங்கே வீடு வசதிகளுடன் நன்றாக வாழ்கிறீர்கள் எதற்கு ஆயுதம் எடுத்து போர் செய்கிறீர்கள் என்று கேட்டனராம் என்று சொன்னார்கள் அது தான் நினைவுக்கு வந்தது.

ஈழத்தமிழருக்கு சொந்த நாடுமில்லை.அரசியல் உரிமைகளும் இல்லை. ஆனால் உக்ரேன் மக்களுக்கு சொந்த நாடும் சகல உரிமையும் இருக்கின்றது அல்லவா?

உண்மை
தமிழீழம் என்ற நாடு  இருந்து அங்கே இந்தியா வந்து அதில் ஒரு பிரதேசத்தை பிடித்து வைத்துகொண்டு  இன்று தொடக்கம் இது இந்தியாவின் பிரதேசமாக இருக்கும் என்றால் அதை ஏற்று கொள்ளமாட்டீர்கள் தானே

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, vasee said:
On 13/11/2022 at 23:08, பெருமாள் said:

கனபேர் உங்களை தேட துவங்க போறாங்கள் .😀

நான் கேள்விப்பட்டதன் அடிப்படையிலேயே பதிவிட்டிருந்தேன், எனக்கு வேறு எதுவும் தெரியாது.

யார் எல்லாம் உங்களை தேடுவார்கள் என்று சிந்திக்கிறேள் 🤣
அமெரிக்க உளவுத்துறை
ரஷ்ய KGB
இந்திய றோ

  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2022 at 09:21, விளங்க நினைப்பவன் said:

யார் எல்லாம் உங்களை தேடுவார்கள் என்று சிந்திக்கிறேள் 🤣
அமெரிக்க உளவுத்துறை
ரஷ்ய KGB
இந்திய றோ

நான் நினைக்கிறேன் பெருமாள் கூறியது யாழ்களத்தில் உள்ளவர்கள் தேடப்போவதாக கூறினார் என கருதுகிறேன், நீங்கள் அதுக்கு மேலேயே போய்விட்டீர்கள்.

எல்லோருமாக சேர்ந்து எங்கேயாவது என்னை கோர்த்து விட முயற்சிக்கிறீர்கள் என்பது புரிகிறது, இருந்தாலும் இவ்வளவு ஆசை கூடாது.

No photo description available.

ஆனால் அது நடக்காது, எனென்றால் அவர்களுக்கு வேலை வெட்டி இருக்கிறது, என்னை தேட அவர்கள் என்ன வேலை வெட்டி இல்லாதவர்களா?

2012 செப்டெம்பர் மாதம் 18 திகதி என நினைக்கிறேன் மாலை 6 ம்ணியளவில் எனது குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

வானில் சூரியன் அஸ்தமிக்கும் தருணம் ( சாய்வு வெய்யில் என்பார்கள்), உண்மை வடக்கிலிருந்து ஒரு நேர்கோட்டில் தெற்கு நோக்கி ஒரு விண்கலம் சத்தமின்றி அதிவேகமாக பயணித்து கொண்டிருந்தது.

அதன் அமைப்பு ஒரு பாதி தேய்பிறை போல இருந்தது, சூரிய ஒளியில் வெள்ளியில் மின்னியது அதனை காணொளியாக பதிவு செய்து கொண்டேன், அதனை உள்ளூர் தொலைகாட்சி ஒன்றிற்கு அதன் இணையத்தளத்தில் காணொளியினை தரவேற்ற முடியாமையினால், VLC player  இல் அந்த விண்கலத்தினை பெரிதாக்கி ( பழைய தொலைபேசி என்பதால வெற்று கண்ணால் பார்ப்பதைவிட ஒளிப்பதிவில் அந்த விண்கலம் மிக சிறியதாக காணப்பட்டது) நிழற்படம் எடுது அனுப்பிவைத்தேன்.

அவர்கள் ஆதாரத்துடன் அனுப்பிய விடயத்தினையே கண்டு கொள்ளவில்லை.

இந்த விடயம் நான் கேள்விப்பட்ட, பழைய சம்பவத்துக்கெல்லாம் என்னை ஏன் தேடப்போகிறார்கள்?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கபூர்வமாக கருத்து எழுதியோர், பாராட்டியோருக்கும், (உள்)நோக்கபூர்வமாக கருத்து கூறியோருக்கும் நன்றிகள்.

பலர் என்னை போலவே உணர்ந்துள்ளீர்கள் என்பதை காணும் போது மகிழ்சியாக இருக்கிறது.

கெசோனில் இருந்து வந்த மக்களின் மகிழ்சி வீடியோக்கள் என்னை அப்படியே 87-90 காலப்பகுதிக்கு எடுத்து போய் விட்டிருந்தது.

ஆனால் சில வேற்றுமையையும் கண்டேன்.

நாங்கள் (பெரும்பாலோர்) சாத்தானின் படைகளின் தாங்கிகள் பலாலியில் இருந்து சுதுமலைக்கு வந்த போது பூத்தூவினோம் (புலிகளின் சந்தேகத்தையும் மீறி). பின்னர் இந்திய வல்லூறுகளின் கப்பல் திருமலையை விட்டு நீங்கும் போது இதே போல் மகிழ்ந்தோம்.

ஆனால் சாத்தானின் படைகள் கெசோனில் உள்ளிட்ட போது அந்த மக்கள் முடிந்தளவு தமது எதிர்ப்பை வெளியிட்டார்கள். ஆரம்பத்தில் சில போராட்டங்கள் கூட நடக்க தலைப்பட்டது. பின்னர் ரஸ்ய படைகள், குறிப்பாக எம்மை கொடுமைக்கு ஆளாக்கிய ஈ என் டி எல் எப், திரி ஸ்டார், ஈபி, டெலோ, புலொட் போல, கெசோனில் ரம்சான் காடிரோவின் காவாலிகளும், வாக்னர் கூலிப்படை கிரிமினல்களும் அந்த மக்களை அடக்கி அடி பணிய வைத்தார்கள்.

ரஸ்ய ஆதரவு டெலிகிராம் சானல்களில், காடிரோவ் படையினர் கைதாகிய ஒரு போராட்டகாரரை வேணும் என்றே கண்ணி வெடி இருக்கும் வளவுக்குள் அனுப்பி வெடிக்க வைத்து, சிரித்து ரசித்த கொடுமைகள் எல்லாம் பரிமாறப்பட்டன (ரஸ்ய ஆதரவு தளங்களில்) - இங்கே எழுதும் RT முகவர்கள் இதெல்லாம் செட்டப், பொய் என்பார்கள். 

ஆகாசவாணி இந்திய இராணுவம் செய்த கொடுமைகளை பொய் என்றதை கேட்டு வளர்ந்த நாம் உண்மையை ஊகிக்க வல்லோம்.

அப்படி இருந்தும் முடிவில் எப்படி யுத்தம் இல்லாமல் யாழை, திருமலையை விட்டு இந்திய கூலிகள் ஓடினார்களோ அப்படியே ரஸ்ய காவாலிகளும் ஓடும் படியாயிற்று.

எம்மை போல இந்திய பூச்சாண்டிக்கு அதிகம் மயங்காமல் ஆரம்பம் முதலே ரஸ்ய ஆக்கிரமிப்பு படைகளின் நோக்கத்தை இனம் கண்டுகொண்டு எதிர்ப்பாய் இருந்த கெசோன் மக்கள், அவர்கள் விடுதலை உணர்வு போற்றலுக்குரியதே.

இங்கே ஒப்பீடு கெசோன் மக்களின் உணர்வையும், எம்மக்களின் 90ம் ஆண்டு மனநிலையையும் மட்டுமே.

புலிகளையோ, போராட்டத்தையோ உக்ரேனுடன் ஒப்பிட கூடிய அளவுக்கு நானோ, என்னை போல் உணர்ந்த யாருமோ இல்லை.

தெரிந்திருந்துந்தும் - சிலர் குய்யோ, முறையோ என இங்கே கதறிய காரணம் - பின்னக நெருப்புத்தான்🤣.

அந்த உறவுகளின் தீக்காயத்தை ஆற்றும் பொருட்டு இதோ அவர்களுக்காக இன்னொரு பிரத்தியேக கவிதை.

முன்னம் இட்ட தீ முப்புரத்திலே,

பின்னர் இட்ட தீ தென்னிலங்கையிலே,

அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே,

”கோமாளி” செலன்ஸ்கி இட்ட தீ

பிற்புறத்திலே….

மூழ்க, மூழ்கவே…..🤣.

கீழே ஒரு டொப்பான வீடியோ இணைக்கிறேன். 

சில உறவுகள் பார்க்க முன்னம் வசிலீன் குடுவையை கைகாவலாக வைத்து கொள்ளவும்🤣

 

https://twitter.com/therecount/status/1592120700319723521?s=20&t=zTMCw8aRbhwLo_L4toLrFg
 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

கீழே ஒரு டொப்பான வீடியோ இணைக்கிறேன். 

சில உறவுகள் பார்க்க முன்னம் வசிலீன் குடுவையை கைகாவலாக வைத்து கொள்ளவும்🤣

 

https://twitter.com/therecount/status/1592120700319723521?s=20&t=zTMCw8aRbhwLo_L4toLrFg
 

உந்த இடத்துக்கு ரஷ்யனுக்கு பதிலாய் அமெரிக்கன் வந்து போய் இருந்தால் சாம்பலுக்கு மேல தான் நிண்டுதான் செலென்ஸ்கி தேசிய கீதம் பாடியிருப்பார்....

ரஷ்யா விட்டுச்சென்ற இடங்களில் ஒரு கீறல் கூட விழவிவில்லை. செய்திகளில் காட்டும் போது பார்த்தால் தெரியும்.

மனிதநேயமிக்க மாண்புமிகு புட்டின் வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

நான் நினைக்கிறேன் பெருமாள் கூறியது யாழ்களத்தில் உள்ளவர்கள் தேடப்போவதாக கூறினார் என கருதுகிறேன், நீங்கள் அதுக்கு மேலேயே போய்விட்டீர்கள்

நான் நகைசுவைக்கு சொன்னது😀
எனக்கு ஒரு தெரிந்தவர் ஒருவர் சொன்னார் இந்திய இராணுவம் இலங்கை வந்த போது இனி அமெரிக்கா புலிகளுக்கு ஆயுதங்கள் கொடுக்க போவதாக தனக்கு ஆட்கள் சொன்னார்களாம்

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2022 at 19:32, விளங்க நினைப்பவன் said:

நான் நகைசுவைக்கு சொன்னது😀
எனக்கு ஒரு தெரிந்தவர் ஒருவர் சொன்னார் இந்திய இராணுவம் இலங்கை வந்த போது இனி அமெரிக்கா புலிகளுக்கு ஆயுதங்கள் கொடுக்க போவதாக தனக்கு ஆட்கள் சொன்னார்களாம்

இது இந்திய இராணுவம் இலங்கைக்கு வருவதற்கு முன்னர், அப்போது அமெரிக்கர்களை முதலில் அணுகியது புலிகள்தான் என கேள்விப்பட்டேன், ஆனால் வேறு ஒரு நாடு (சர்வாதிகாரி என அழைக்கப்பட்டவர் தற்போது உயிருடன் இல்லை) தானாக உதவியிருந்ததாக கேள்விபட்டேன், மேற்கொண்டு இது தொடர்பாக கேள்விப்பட்டதன் அடிப்படையில் பேசுவது நன்றாக இருக்காது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, vasee said:

மேற்கொண்டு இது தொடர்பாக கேள்விப்பட்டதன் அடிப்படையில் பேசுவது நன்றாக இருக்காது என நினைக்கிறேன்.

 

நீங்கள் சொன்னது சரி தான். ஏராளமான கதைகள் உலாவுகின்றன, பெரும்பாலும் கற்பனை கதைகள் தான்.😂
நேற்று யாழ்களத்தில் ஒரு தகவல் படித்தேன் முன்னைய கூட்டமைப்பின் தலைவரின் மகன் லிபியாவுக்கு சென்று கடாபியிடம் தமிழீழத்திற்கு ஆயுத உதவ கேட்டதாக.
2.எனக்கு சொன்னவர்கள் முற்கால கிழக்கு யேர்மனியில் இருந்து கனடா வந்த தமிழர்கள் பலர் கடலில் தத்தளித்ததாக கனடா அரசு அவர்களைகாப்பாற்றி அடைக்கலம் கொடுத்தது ஆனால் வீரகேசரியில் மேற்கு யேர்மனியில் இருந்து வெளிகிட்ட அகதிகள் என்று உள்ளது

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.