ராஜீவ் காந்தி கொலை பின்னணியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் - காவல் துறை அதிகாரி ஓபன் டாக்..
By
ராசவன்னியன்
in காணொளிகள்
Share
-
Tell a friend
-
Topics
-
Posts
-
கற்கோவளம் இராணுவ முகாமில் இருந்து; படையினர் வெளியேற வேண்டும் யாழ். வடமராட்சி, பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள. இராணுவ முகாமிம் இருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு, இராணுவத் தலைமையகத்தால் உத்தரவிடப்பட்ட போதிலும், இன்னமும் இராணுவத்தினர் வெளியேறவில்லை. ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் 18ஆம் திகதி பொறுப்பேற்றிருந்தது. அமைச்சரவை பொறுப்பேற்று சில மணிநேரங்களில், பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து 14 நாள்களுக்குள் படையினர் வெளியேற வேண்டும் என்ற உத்தரவு இராணுவத் தலைமையகத்தால் பிறப்பிக்கப்பட்டது. எனினும், 14 நாள்களுக்கு மேலாகியும், இந்த முகாம் இராணுவத்தினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. தொடர்ந்தும் அந்தத் தனியார் காணியும், இராணுவ முகாமும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. எனவே, வாக்குறுதி வழங்கி மக்களை ஏமாற்றாது, அங்கிருந்து படையினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். குறித்த இராணுவ முகாமை அகற்றுமாறும், இராணுவத்தை வெளியேறுமாறும் மக்களும், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் கடந்த காலங்களில் பல கவனவீர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். குறித்த காணியை ஆக்கிரமிக்கும் வகையில் நில அளவீடு செய்வதற்குப் பல தடவைகள் முயற்சிகள் செய்யப்பட்டிருந்த போதிலும் மக்களின் எதிர்ப்பால் அந்தப் பணிகள் தடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=302347
-
தற்போது ரணில், ரணில் 2.0 தயாராகக்கூடும், சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது அனுர விடயத்தில் உண்மையாகி விடக்கூடாது.
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு! இலங்கைக் கடற்படை தனது 74 ஆவது ஆண்டு நிறைவை இன்று (09) கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில், கடற்படையின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2138 சிரேஷ்ட மற்றும் சாதாரண மாலுமிகள் இன்று முதல் அமுலாகும் வகையில் உயர் பதவிகளுக்காக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். முதன்முறையாக, இலங்கையில் கடற்படையின் ஆரம்பம் 1937 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கத் தொண்டர் கடற்படை கட்டளைச் சட்டத்தின் கீழ் ராயல் இலங்கை தன்னார்வ கடற்படை 1939 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் அது 1943 அக்டோபர் 1 ஆம் திகதி ‘ராயல் இலங்கை தன்னார்வ கடற்படை சேவை’ ஆனது. 1950 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க கடற்படைச் சட்டத்தின் மூலம், 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி ‘ராயல் சிலோன் நேவி’ ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம், அன்றைய அரச இலங்கை தன்னார்வ கடற்படை சேவையில் செயற்பட்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகளிடமிருந்து, நிரந்தரமான ஒரு தொடக்கமாக அமைந்தது. அன்றிலிருந்து, நாட்டின் கடல் பரப்பின் பாதுகாவலர் என்ற சிறப்புப் பொறுப்பை நிறைவேற்றி, நாளுக்கு நாள் வளர்ந்து வந்த ராயல் சிலோன் கடற்படை, 1972 இல் இலங்கை குடியரசாக மாறியதும் ‘இலங்கை கடற்படை’ ஆனது. 1980 ஆண்டு முற்பகுதியில், நாட்டின் வடக்குப் பகுதியை மையமாகக் கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக, கடற்படையின் பாரம்பரியப் பாத்திரத்திலிருந்து போர்ப் பாத்திரமாக மாற்றப்பட்ட கடற்படை, அதன் பின்னர் தேசிய மனிதவளத்திலும் இராணுவத் திறனிலும் படிப்படியாக வளர்ந்தது. 2009 ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை வெற்றிகொள்வதில் சுமார் மூன்று தசாப்தங்களாக தனித்துவமான பங்களிப்பை வழங்கியது. இலங்கை கடற்படை தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காகவும், அத்துடன் அல்லாதவற்றைக் கட்டுப்படுத்தவும் தனது வளங்களைப் பயன்படுத்துகிறது. கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பைப் பாதிக்கும் பாரம்பரிய கடல்சார் சவால்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுத்து கடற்படையினரின் அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்தி நாட்டின் கடல்சார் லட்சியத்தை அடைவதில் உறுதியாக உள்ளது. https://athavannews.com/2024/1411486 -
By கிருபன் · பதியப்பட்டது
ஒரே வாரத்தில் 40 தமிழக மீனவர்கள் கைது; இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் - அன்புமணி 09 Dec, 2024 | 11:52 AM சென்னை: “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. ராமேஸ்வரத்தில் மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று கூட கடுமையான போராட்டம் நடத்தியிருக்கும் நிலையில், மேலும் 8 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது என்றால், அது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேரை அவர்களின் விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில் மீன் பிடிக்கும் போது அவர்களை சிங்களக் கடற்படை அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது. அதை எந்த வகையிலும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 2-ஆம் தேதி 18 மீனவர்களும், 4-ஆம் தேதி 14 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட கடுமையான போராட்டம் நடத்தியிருக்கும் நிலையில், மேலும் 8 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது என்றால், அது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். 2024-ஆம் ஆண்டில் மட்டும் தமிழக மீனவர்கள் 569 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 73 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற இலங்கை அரசு மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் 96 மீனவர்களுக்கு 6 மாதங்கள் முதல் இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டும், அபராதம் விதிக்கப்பட்டும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நான் எழுப்பிய வினாவுக்கு அளித்த பதிலிலும் மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. ஆனாலும், அவர்களை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கைக் கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உள்ளிட்ட அங்குள்ள சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும் உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கும் மேலாக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு அன்புமணி தெரிவித்தார் https://www.virakesari.lk/article/200786 -
மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு; ரஷ்யாவில் தஞ்சமடைந்தார் சிரியா ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புதினின் வசிப்பிடமான க்ரெம்ளின் மாளிகை வட்டாரத் தகவலை சுட்டிக்காட்டி இத்தகவலை ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ், டாஸ், ரியா நோவோஸ்டி பத்திரிகைகள் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன. பைடன் வரவேற்பு: இதற்கிடையில் சிரியா விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். “ஜனாதிபதி ஆசாத்தின் வீழ்ச்சி நீதியின் வெற்றி. இது பல ஆண்டுகளாக துண்பப்பட்டுவரும் சிரிய மக்களுக்கு கிடைத்துள்ள ஒரு வரலாற்று வாய்ப்பு. இந்த வாய்ப்பு அவர்கள் தங்கள் தேசத்தை வளமான எதிர்காலத்துக்காக கட்டமைக்க உதவும். அவர்கள் தங்கள் நாட்டை பெருமைமிகு அடையாளமாக மாற்ற உதவும்” என்று அதிபர் பைடன் வரவேற்றுள்ளார். சிரிய பிரச்சினையின் பின்னணி: மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 1971-ல் ராணுவ மூத்த தளபதியாக இருந்த ஹபீஸ் அல் ஆசாத் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். 29 ஆண்டுகள் சிரியா அதிபராக இருந்த அவர் 2000-ம் ஆண்டில் காலமானார். அவரது மகன் பஷார் அல் ஆசாத் கடந்த 2000 ஜூலை 17-ம் தேதி ஜனாதிபதினார். அவர் ஷியா பிரிவை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஜனாதிபதி ஆசாத்துக்கு ஈரான், ரஷ்யா ஆதரவு அளித்தன. கிளர்ச்சி படைகளுக்கு துருக்கி, அமெரிக்கா ஆதரவு அளித்தன. கடந்த 2014-ல் சன்னி பிரிவை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழு சிரியாவின் பெரும் பகுதியை கைப்பற்றியது. ஜனாதிபதி ஆசாத் படைகள் கிளர்ச்சி படைகள் இடையிலான போர் பல ஆண்டுகள் நீடித்தது. இதில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர். பின்னர், ரஷ்யா, ஈரானின் ஆதரவால் ஜனாதிபதி ஆசாத்தின் கை ஓங்கி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டன. இந்த சூழலில் ரஷ்யா – உக்ரைன் போரை தொடர்ந்து, சிரியா ஜனாதிபதி ஆசாத்தின் ராணுவத்துக்கு ரஷ்யா, ஈரானின் ஆதரவு படிப்படியாக குறைந்தது. கடந்த 1-ம் தேதி சிரியாவின் அலெப்போ நகரை கைப்பற்றியது. அடுத்தடுத்து பல்வேறு நகரங்களை கைப்பற்றிய எச்டிஎஸ் படை வீரர்கள், நேற்று சிரியா தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றினர். சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்த போது, மனைவி, பிள்ளைகள் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், தற்போது ஆசாத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://thinakkural.lk/article/313382
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts