Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்ச்சுகல் அணியின் வெளியேற்றம் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையின் முற்றுப்புள்ளியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்ச்சுகல் அணியின் வெளியேற்றம் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையின் முற்றுப்புள்ளியா?

ronaldo

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

போர்ச்சுக்கல்லின் நட்சத்திர வீரர்  கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் மொராக்கோ அணி போர்ச்சுகல்  அணியை 1-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

போட்டியிலிருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியவுடன் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டதா?

போர்ச்சுக்கல் அணி காலிறுதி போட்டியில் இருந்து வெளியேறியவுடன் ரொனால்டோவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இந்த புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

தனது அணியின் பயிற்சியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவரது தகுதி குறைக்கப்பட்டு ஒரு மாற்று வீரராக அதாவது சப்ஸ்டியூட் ஆக ஆட்டத்தில் இறக்கப்பட்டார் ரொனால்டோ. 37 வயதாகும் ரொனால்டோவால் இன்னும் உலகக் கோப்பை வெற்றி என்ற மகுடத்தை சூட முடியவில்லை. கடந்தமாதம்  மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பில் இருந்து அவர்  கோபமாக வெளியேறினார். எனவே அவரின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தாலும் திரும்பி சென்று ஆடுவதற்கு எந்த கிளப்பும் காத்திருக்கவில்லை. ஆனால் அவரது ரசிகர்கள் ரொனால்டோ அடுத்து எந்த கிளப்பில் விளையாடப் போகிறார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 

போர்ச்சுகல் மக்கள் இன்னும் ரொனால்டோவை கொண்டாடிக் கொண்டு இருப்பதால் அவரின் எதிர்காலம் குறித்து அவர்கள் கவலை கொள்கின்றனர்.

ஒரு கோல், ஒரு கோபமான வெடிப்பு, பின்னர் நீக்கம்

உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு சிறிதுகாலம் முன்பு யுனெடெட் கிளப்பில் இருந்து ரோனால்டோ வெளியேறினார். ஆனால், கத்தாரில் அவரது தொடக்க ஆட்டங்கள் சிறப்பாகவே இருந்தன.

கானாவுக்கு எதிரான முதல் குழு போட்டியில் போர்ச்சுகல் அணியின் சர்ச்சைக்குரிய பெனால்டியில் அவர் வென்றார். ஃபிஃபா,  அது முழுமையான நுண்ணறிவுத் திறனுடன் அடிக்கப்பட்ட கோல் என்று பாராட்டியது. ஐந்து உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சிறப்பையும் ரொனால்டோ பெற்றார்.

ஆனால் அவரது பாதை ஒரே சீராக செல்லவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் எந்த கோலையும் அடிக்கவில்லை. அதற்குள் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. பின் தென் கொரிய அணியுடனான போட்டியில் மாற்று வீரராக பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

அதன் பின் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 16ஆவது இடத்தில் அவரின் பெயர் இருந்தது. 2008ஆம் ஆண்டு ரொனால்டோ முக்கிய போட்டிகளை விளையாடத் தொடங்கிய காலத்தில் இருந்து அவ்வாறு அவர் அமர வைக்கப்பட்டது இதுவே முதல்முறை. அதேசமயம் அவருக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட கான்காலோ ரோமாஸ் ஹாட் ரிக் கோல் அடித்து அசத்தினார்.

அதேபோலதான் மொராக்கோ அணியுடனான போட்டியிலும் நடத்தப்பட்டார் ரொனால்டோ. ஆனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் அதாவது 51ஆவது நிமிடத்தில் களமிறங்கினார் ஆனால் அப்போது ஏற்கனவே மொராக்கோ அணி ஒரு கோல் அடித்து முன்னனியில் இருந்தது.

கோல் ஏதும் அடிக்கவில்லை என்றாலும் சர்வதேசப் போட்டிகளில் 196வது முறையாகத் தோன்றி குவைத் கால்பந்து வீரர் பதார் அல் முடாவாவின் சாதனையை சமன் செய்தார். ஆனால் இதை மறக்கமுடியாத ஒரு தருணமாக மாற்ற தவறவிட்டார் ரொனால்டோ. சர்வதேச அளவில் ஆண்களுக்கான கால்பந்து போட்டிகளில் 118 கோல் அடித்து சாதனை புரிந்திருந்தாலும் அந்த எண்ணிக்கையை அதிகரிக்க அவரால் முடியவில்லை.

ronaldo

பட மூலாதாரம்,GETTY IMAGES

விருப்பம் கொண்டவர், ஆனால், இறுதியான முடிவாக இல்லை

நேற்றைய ஆட்டத்தில் வெறும் பத்து முறை மட்டுமே பந்தை தொட்டார் ரொனால்டோ. 91ஆவது நிமிடத்தில்தான் அவர் ஒரு ஷாட்டை  அடிக்க முற்பட்டார். ஆனால், மொராக்கோ கீப்பர் போனோவை தாண்டி அது கோலாக மாறும்  சக்தியை கொண்டிருக்கவில்லை. ரொனால்டோ  களத்தில் சரியான பந்துக்காக எப்போதுமே தயாராக காத்திருந்தார், ஆனால் ஒருபோதும் அது நிகழவே இல்லை.

இறுதி விசில் ஒலிக்கப்பட்டதும் எதிரணியில் இருந்த சிலருடன் கைகுலுக்கி விட்டு, மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

ரொனோல்டோ தனது உணர்ச்சிகள் மேலோங்கும் முன்பு டனலுக்குள் நுழைந்து விட்டார். இந்த போட்டியை விட்டு வெளியேறும்போது இந்த உலகக் கோப்பை போட்டி எவ்வாறு  சிறப்பாக அவரது நினைவில் இருக்கும்  என்பதையும்,  அதே போல் பயிற்சியாளருடனான  சலசலப்பையும் அவரது கண்கள் சிந்திய கண்ணீர் வெளிப்படுத்தியது.

அணியின் பயிற்சியாளர் சாண்டோஸ் இருவருக்கும் இடையேயான சர்ச்சையை வெளிப்படுத்திக் கொள்ளாமல், "கிறிஸ்டியானோ மீது வைக்கப்பட்ட விமர்சனம் அவரது விளையாட்டில் தாக்கம் செலுத்தியது என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் ஒரு ஒருங்கிணைந்த அணியாக இருக்கின்றோம்," என்றார்.

ronaldo

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரசிகர்களின் ஆதரவு

அவர்கள்  ஒற்றுமையாக இருக்கலாம், எனினும்,  தங்களது அணி சிறந்த அணியா இல்லையா என்பது குறித்து நிறைய விவாதங்களுக்குப் பிறகு கோப்பை கனவை தவறவிட்டு நாடு திரும்புகிறது போச்சுகல் அணி.

முக்கிய இறுதிப் போட்டிகளில் எந்த ஒரு அணிக்கும் ஆச்சரியமான தோல்விகளைத் தொடர்ந்து புதிய சகாப்தங்கள் மற்றும் புதிய தொடக்கங்கள் வரும். ஆனால், சாண்டோஸ், அணியின் பயிற்சியாளாரக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, அவர்கள் இப்போது ரொனால்டோவை நிராகரிக்க வாய்ப்பில்லை.

யூரோ 2016 போட்டியில் வென்று, முதன்முறையாக போர்ச்சுகல் சர்வதேச போட்டி ஒன்றில் வெற்றிப் பெற்றுள்ளது என்ற சிறப்பை தேடி தந்தவர் ரொனால்டோ. இப்போதும் இதை போர்ச்சுகல் மக்கள் மறக்கவில்லை.

சனிக்கிழமையன்று அல் துமாமா ஸ்டேடியத்திற்கு வெளியே 'ரொனால்டோ 7' சட்டைகளை அணிந்திருந்த போர்ச்சுகல் ரசிகர்களின் எண்ணிக்கையே அதற்கு சான்று.

அடுத்த உலக் கோப்பை போட்டி தொடங்கும்போது ரொனால்டோவுக்கு 41 வயது ஆகியிருக்கும். ஆனால், அவர் விரும்பினால், நிச்சயமாக 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு  மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. அதற்குள் அவர் யாருக்காக விளையாடப்போகிறார் என்பது முற்றிலும் வேறு விஷயமாக இருக்கிறது. ஜனவரி 1 ஆம் தேதி அணிகளுக்கு இடையே வீரர்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வு தொடங்கும்போது ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய பல கிளப்புகள் ஆர்வமாக உள்ளன, சவுதி அரேபிய தரப்பில் அல்-நாஸ்ர் அவரை ஒரு பெரிய தொகையுடன் ஒப்பந்தம் செய்வதாக  கடந்த வாரம்  கூறியிருக்கிறார். தற்போதைய இந்தப் போட்டியில் மத்திய கிழக்கு மைதானம் அவருக்கு மகிழ்ச்சியை வழங்காமல் இருந்திருக்கலாம் - ஆனால் அடுத்ததாக அவர் களம் இறங்கும் இடமாகவும் இருக்கலாம்.

https://www.bbc.com/tamil/articles/cyr528jey0eo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

போர்ச்சுகல் அணியின் வெளியேற்றம் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையின் முற்றுப்புள்ளியா?

 

கிட்டத்தட்ட 40 வயது வரைக்கும் கோலோச்சியுள்ளான். இதுக்கு மேலை வேறை என்ன வேணும்  ஒரு மனிசனுக்கு....?????

தலைக்கனம் பிடிச்ச ஆர்ஜென்ரினா மெர்சிய விட ஆயிரம் மடங்கு மரியாதைக்குரியவன்.

Messi verhöhnte bereits während des Spiel die Niederländer

Bild

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கிட்டத்தட்ட 40 வயது வரைக்கும் கோலோச்சியுள்ளான். இதுக்கு மேலை வேறை என்ன வேணும்  ஒரு மனிசனுக்கு....?????

தலைக்கனம் பிடிச்ச ஆர்ஜென்ரினா மெர்சிய விட ஆயிரம் மடங்கு மரியாதைக்குரியவன்.

Messi verhöhnte bereits während des Spiel die Niederländer

Bild

 

அண்ணை ரொனால்டோவின் விளையாட்டு மட்டுமல்ல அதற்கப்பாலான அவரின் நடவடிக்கைகள் பிடிக்கும். மற்றவரின் விளையாட்டிற்கு மட்டுமே ரசிகன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரொனால்டோஒரு மிகத்திறமையான வீரர் மட்டுமல்ல. புகைத்தல்>மதுப்பழக்கம் அற்ற  உடம்பில் பச்சை குத்தாத கொ;கோலா போன்ற கார்பரேட் கம்பனிகளின் பானங்களை தனது தொலைக்காட்சிப் பேடட்டிகளின் போது ஒதுக்கி வைத்த  ஒரு சிறந்த மனிதர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்டியானோ ரொனால்டோ

By PONMALAR

12 DEC, 2022 | 11:59 AM
image

பெயர்: கிறிஸ்டியானோ ரொனால்டோ டாஸ் சான்டோஸ் அவெய்ரோ. சுருக்கமாக ரொனால்டோ.

பெயருக்கான காரணம்: பிரபல நடிகராக இருந்து அமெரிக்காவின் அதிபரானவர் ரொனால்ட் ரீகன். இவரது மிகப்பெரிய ரசிகராக இருந்தவர் ரொனால்டோவின் தந்தை. அதனால் தனக்குப் பிடித்தமான நடிகரின் பெயரையே மகனுக்கு சூட்டிவிட்டார் தந்தை.

 

02.jpg

 

கொழுப்பு: உடற்பயிற்சி மூலம் உடலில் உள்ள கொழுப்பின் அளவை பத்து சதவீதமாக வைத்துள்ளார் ரொனால்டோ. அதனால்தான் அவரால் விரைவாக ஓட முடிகிறது. அந்தரத்தில் பறந்து கோல் அடிக்க முடிகிறது.  

பிறந்த இடம் மற்றும் திகதி: போர்த்துக்கலின் தன்னாட்சிப் பகுதியான மதீராவிலுள்ள ஃபஞ்சல் நகரத்தில் 1985 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி பிறந்தார்.

செல்லப்பெயர்கள் : சிறு வயதில் கிரைபேபி,  பிரபலமான செல்லப்பெயர் CR7, கால்பந்து ரசிகர்கள் மத்தியில் GOAT, எல் பிச்சோ, நெருங்கியவர்கள் கிறிஸ், ரோன் என்று அழைக்கின்றனர்.

பார்ட்னர்: ஆறு வருடங்களுக்கு முன்பு மாட்ரிட் நகரிலுள்ள உலகப்புகழ்பெற்ற ஃபெஷன் நிறுவனமான ‘குச்சி’யின் பிரத்யேக ஷோரூமிற்குச் சென்றிருந்தார் ரொனால்டோ. அங்கே கடை உதவியாளராகப் பணிபுரிந்து வந்த ஜியோர்ஜினா என்ற பெண் மீது ரொனால்டோ காதலில் விழுந்தார். இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கு முன்பு ரஷ்ய மொடல் இரினா உட்பட பல பிரபலங்களுடன் காதலில் இருந்தார். ஜியோர்ஜினாவுடனான காதல் மட்டுமே நீள்கிறது.

 

05.jpg

 

உயரம்: 6 அடி, 2 அங்குலம்.

குழந்தைகள்: ரொனால்டோவுக்கு 12 வயதில் கிறிஸ்டியானோ ஜூனியர் என்ற மகன் இருக்கிறான். ஜூனியரின் அம்மாவுடன் செய்த ஒப்பந்தத்தின் காரணமாக அம்மா யார் என்று ரொனால்டோ வெளிப்படுத்தவில்லை. சரியான நேரம் வரும்போது அம்மா யார் என்று ஜூனியருக்கு வெளிப்படுத்துவதாக சொல்லியிருக்கிறார் ரொனால்டோ.

ஒருவேளை இரினா குழந்தையாக கிறிஸ்டியானோ ஜூனியர் இருக்கலாம் என்று கிசுகிசுவும் உள்ளது. தவிர, ஜியோர்ஜினா மூலமாக ஈவா, மேட்டியோ, அலானா, பெல்லா என்று நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஏப்ரலில் ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பிறக்கும்போதே ஆண் குழந்தை இறந்துவிட்டது. அந்தப் பெண் குழந்தைதான் பெல்லா.

இன்சூரன்ஸ்: 2009ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் ஃபுட்பால் கிளப், ரொனால்டோவின் கால்களை சுமார் 850 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்துள்ளது.

பெற்றோர்: மாநகராட்சியில் தோட்ட வேலை செய்துவந்த ஜோஸ் டினிஸ் அவெய்ரோவுக்கும், சமையல் வேலை செய்துவந்த மரியா டோலோரெஸ் டாஸ் சான்டோஸ்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தவர்தான் ரொனால்டோ. அப்பா, அம்மா, சகோதர, சகோதரிகள் என மொத்த குடும்பத்தின் உறுப்பினர்களான ஆறு பேரும் ஓர் அறை கொண்ட வீட்டில் வசித்து வந்தனர். இன்று உலகின் விலை உயர்ந்த வீடுகளில் ஒன்று, ரொனால்டோவுடையது.  

‘முன்பே மூன்று குழந்தைகள், கணவனின் குடிப்பழக்கம் மற்றும் வறுமை காரணமாக ரொனால்டோ வயிற்றில் இருந்தபோது கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவரை அணுகியிருக்கிறேன். மருத்துவர் கருக்கலைப்பு செய்ய மறுத்துவிட்டார்...’ என்று பின்னாட்களில் சொல்லியிருக்கிறார் ரொனால்டோவின் தாயான மரியா. கடுமையான குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி இறந்துவிட்டார் ரொனால்டோவின் தந்தை.

டட்டூ: அடிக்கடி இரத்த தானம், எலும்பு மச்சை தானம் செய்வதால் மற்ற விளையாட்டு வீரர்களைப் போல ரொனால்டோ டட்டூ குத்திக்கொள்ளவில்லை; மதுவும் அருந்துவதில்லை.

03.jpg

அடையாளம்: போர்த்துகல் தேசிய கால்பந்து அணியின் கேப்டன்.

சாதனைகள்: ஃபிரான்சைச் சேர்ந்த ‘ஃபிரான்ஸ் ஃபுட்பால்’ எனும் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கும் தங்கப்பந்து விருதை ஐந்து முறை வென்றிருக்கிறார் ரொனால்டோ. தவிர, நான்கு முறை ஐரோப்பியன் தங்க காலணி, 32 கோப்பைகள், ஐந்து முறை யூஇ எஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் பட்டங்கள், நாட்டுக்காகவும், கிளப் அணிகளுக்காகவும் விளையாடியதில் 800க்கும் அதிகமான கோல்களை அடித்த வீரர், சர்வதேசப் போட்டிகளில் மட்டும் 118 கோல்கள் அடித்த வீரர், 1100 போட்டிகளில் விளையாடிய வீரர்களில் ஒருவர்... என ரொனால்டோவின் சாதனைகள் அசர வைக்கின்றன. ஐந்து உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளிலும் கோல் அடித்த ஒரே வீரரும் ரொனால்டோதான்.

படிப்பு: குடும்ப வறுமையின் காரணமாக பெரிதாக ரொனால்டோ படிக்கவில்லை. ஒரு நேர்காணலில் ரொனால்டோவிடம் ‘உங்களுக்குப் பிடித்த சப்ஜெக்ட் என்ன?’ என்று கேள்வி முன்வைக்கப்படுகிறது. ‘சப்ஜெக்ட் என்றால் என்ன?’ என்று கேட்கிறார் ரொனால்டோ.  ‘மேத்ஸ், சயின்ஸ்...’ என்று நேர்காணல் செய்தவர் சொல்ல, ‘ஓ... ஞாபகம் வருகிறது... ‘சின்ஸ்’ எனக்கு பிடிக்கும்...’ என்கிறார். சயின்ஸைத்தான் ‘சின்ஸ்’ என்கிறார் ரொனால்டோ.

தாய்மொழி போர்த்துகீசிய மொழி என்பதால் ஆரம்ப நாட்களில் அவரது ஆங்கிலம் திணறியது. இப்போது ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுகிறார்.மட்டுமல்ல; கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ரொனோல்டோவின் வாழ்க்கையைப் பற்றிய பாடம் உள்ளது.

1.jpg

வருமானம்: கால்பந்து விளையாட்டின் மூலமாக ஒரு பில்லியன் டொலர், அதாவது சுமார் 8,160 கோடி ரூபாய் சம்பாதித்த முதல் கால்பந்தாட்டாக்காரர் மற்றும் மூன்றாவது விளையாட்டு வீரர் ரொனால்டோதான். இதுபோக சமூக வலைத்தளங்கள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாக பில்லியன் கணக்கில் அள்ளுகிறார்.

கார்கள்: ரொனால்டோ ஒரு கார் பிரியர். உலகின் மிக விலை உயர்ந்த புகாட்டி, ரோல்ஸ் ராய்ஸ், மெக்லேரன் என அவரது கார்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

ஆரம்ப நாட்கள்: தந்தை பணிபுரிந்து வந்து ஒரு கால்பந்து கிளப்பில் ரொனால்டோ விளையாடத் தொடங்கியபோது அவருடைய வயது 7. தன்னால் ஒரு தொழில்முறை கால்பந்தாட்டக்காரனாக முடியும் என்ற நம்பிக்கை வந்தபோது ரொனால்டோவின் வயது இதுதான்.  உடனே படிப்பை நிறுத்திவிட்டு கால்பந்து விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினார். குடும்பச்சூழல் காரணமாக மகனின் படிப்பை நிறுத்துவதற்கு அம்மாவும் ஒப்புதல் தந்துவிட்டார்.

இரவு பகல் பாராமல் கால்பந்தே கதியாகக் கிடந்தார். 15 வயதில் இதயநோய் தாக்கியது. இனிமேல் ரொனால்டோவால் கால்பந்து விளையாட முடியாது என்ற நிலை. இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நாட்கள் கழித்து கால்பந்து விளையாட ஆரம்பித்துவிட்டார்.  புகழ்பெற்ற பல கிளப்களில் விளையாடி போர்த்துகல்லின் தேசிய அணியில் 18 வயதிலேயே இடம்பிடித்துவிட்டார்.  இதற்குப்பிறகு நிகழ்ந்தது எல்லாம் வரலாறு.

04.jpg

விமர்சனம்: சில ரசிகர்களும், சில விளையாட்டு விமர்சகர்களும் திமிர் பிடித்தவன், பொது வெளியில் அகங்காரத்துடன் நடந்துகொள்பவன் என்ற விமர்சனத்தை பரவலாக முன்வைக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/142879

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.