Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல் - பலர் படுகாயம் - என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல் - பலர் படுகாயம் - என்ன நடந்தது?

இந்தியா, சீனா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப்படம்

12 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்த மோதல் நடந்ததாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் சீன ராணுவ துருப்புக்கள் நுழைந்ததாகவும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் இந்திய இராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் உடனடியாக அங்கிருந்து பின்வாங்கி விட்டதாக இந்திய ராணுவம் கூறுகிறது.

இந்த மோதலுக்குப் பிறகு பரஸ்பரம் அமைதியை நிலைநாட்ட அப்பகுதியின் தளபதி சீனாவில் உள்ள எல்லை கட்டளை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்களை விட சீன ராணுவ வீரர்கள் அதிக அளவில் காயம் அடைந்ததாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தியாவின் முக்கிய ஆங்கில நாளிதழான தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மோதி அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்

இந்த விவகாரம் தொடர்பான தகவல் வெளியே வரத் தொடங்கிய பிறகு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசை இலக்கு வைத்து காங்கிரஸ் கட்சி விமர்சித்திருக்கிறது.

 

எல்லையில் நடக்கும் இதுபோன்ற செயலை பொறுத்துக் கொள்ள முடியாது என்று சீனாவிடம் மத்திய அரசு கடுமையான தொனியில் பேசி வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இடுகையை பதிவிட்டிருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இந்த மோதல் குறித்த தகவல்களை இத்தனை நாட்களாக அரசு மறைத்தது ஏன் என அகில இந்திய மஜ்லிஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்பியுமான அசாதுதீன் ஒவைசி மத்தியில் ஆளும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் இருந்து வெளியாகும் செய்தி கவலை அளிக்கிறது.

இந்தியா, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டு, பல நாட்கள் நாட்டையே இருளில் மூழ்கடித்த அரசு, குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, நாடாளுமன்றத்தில் இது குறித்து உரிய தகவலை தெரிவிக்காதது ஏன்? என்று அவர் தமது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த மோதலுக்கு என்ன காரணம்? துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதா அல்லது கல்வான் போல இருந்ததா? இந்திய வீரர்களின் நிலை என்ன? எத்தனை வீரர்கள் காயமடைந்தனர்? சீனாவுக்கு வலுவான செய்தியை தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றம் ஏன் தனது வீரர்களுக்கு இந்த நேரத்தில் தனது ஆதரவைத் தெரிவிக்கக் கூடாது?" என்று ஒவைசி கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

மேலும் ஒவைஸி தமது ட்வீட்டில், "எந்த நேரத்திலும் சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. ஆனால் மோதியின் பலவீனமான தலைமைதான், சீனா முன் இந்தியா அவமானப்படுவதற்கு காரணம். நாடாளுமன்றத்தில் அவசரமாக இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஏதுவாக, நாளை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுப்பதாகவும் ஒவைஸி தெரிவித்துள்ளார்.

கல்வானில் என்ன நடந்தது?

இந்தியா சீனா தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2020ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதில் மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். கல்வானில் சீன ராணுவ வீரர்களும் அதிக அளவில் கொல்லப்பட்டதாக இந்தியா கூறி வருகிறது. ஆனால் நான்கு ராணுவ வீரர்கள் மட்டுமே இறந்ததாக சீனா உறுதி செய்தது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலிய நாளிதழான 'தி கிளாக்சன்' தனது புலனாய்வு செய்தியில் கல்வானில் நான்கு சீன வீரர்கள் அல்ல, சீனாவுக்கு அதை விட பல மடங்கு இழப்பாக குறைந்தது 38 வீரர்கள் வரை இறந்ததாகக் கூறியிருந்தது. கல்வன் மோதலில் பங்கேற்ற ஒரு தளபதி இந்த ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் விருந்தினராக சீனாவால் அழைக்கப்பட்டிருந்தார். 2020ஆம் ஆண்டில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான சூழ்நிலை நிலவி வந்தது. அந்த ஆண்டு மே 1ஆம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரியின் வடக்குக் கரையில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் டஜன் கணக்கான வீரர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து, ஜூன் 15ஆம் தேதி கால்வன் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஜூன் 16ஆம் தேதி இந்த மோதல் குறித்து இந்திய ராணுவத்தின் செய்திக்குறிப்பு ஒன்று வெளியானது. அதில், "மோதல் நடந்த இடத்தில் பணியில் இருந்த 17 ராணுவ வீரர்கள் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தனர். பிறகு இந்த மோதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது என்று ராணுவம் தெரிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு சீனாவும் ஒரு அறிக்கையை பல மாதங்களுக்குப் பிறகு வெளியிட்டது, ஆனால் அதில் தமது தரப்பில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது தெளிவாக இல்லை. பல மாதங்களுக்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இறந்த தனது நான்கு வீரர்களுக்கு மரணத்திற்குப் பிந்தைய பதக்கங்களை சீனா அறிவித்தது. அப்போதுதான் அந்நாட்டின் உயிரிழப்பு புள்ளிவிவரமும் வெளி உலகுக்குத் தெரிய வந்தது.

https://www.bbc.com/tamil/articles/cj7zpvvndmro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய – சீன எல்லையில் இரு நாடுகளின் படையினரும் மோதல்

By SETHU

13 DEC, 2022 | 09:54 AM
image

இந்திய – சீன எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. 

அருணாச்சலப் பிரதேசத்தின் டாவாங் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இம்மோதல் இடம்பெற்றதாக இந்திய இராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.

இம்மோதலில் இரு நாடுகளின் படையினருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. சுமார் 20 இந்திய படையினர் காயமடைந்ததாகவும் அதிக எண்ணிக்கையான சீன படையினருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவத்தின் பின்னர், அமைதியை உறுதிப்படுத்துவதற்காக இரு நாடுகளின் இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய, சீன படையிருக்கு இடையில் சுமார் ஒன்றரை வருடத்தின் பின் ஏற்பட்ட முதல் மோதல் இதுவாகும் 

2020 ஆம் ஆண்டு  லடாக் பிராந்தியத்தில் இரு நாடுகளின் படையிருக்கும் ஏற்பட்ட மோதலில் குறைந்தபட்சம் 24 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/142952

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய-சீன ராணுவத்தினர் மோதலின்போது என்ன நடந்தது? - ராஜ்நாத் சிங் விளக்கம்

ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

13 டிசம்பர் 2022, 07:07 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அருணாச்சல பிரதேச மாநிலத்தை ஒட்டியுள்ள இந்திய - சீன எல்லையில் இருநாட்டு ராணுவத்தினரும் மோதிக்கொண்டது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மக்களவையில் விளக்கமளித்தார்.  

ராஜ்நாத் சிங் பேசும் முன்னர் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இது குறித்து அமைச்சர் விளக்கமளித்தால் மட்டும் போதாது; விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அவை விதிகள் மற்றும் மரபுகளைக் காரணம் காட்டி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இதனால் எதிர்க்கட்சியினர் செய்த அமளியால் நற்பகல் 12 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோது ராஜ்நாத் சிங் எல்லை மோதல் குறித்து விளக்கமளித்தார்.

டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் சீன ராணுவ துருப்புகள் நுழைந்ததாகவும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் இந்திய ராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது.

 

இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர்; இதைத் தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் உடனடியாக அங்கிருந்து பின்வாங்கி விட்டதாக இந்திய ராணுவம் கூறுகிறது.

 

ராஜ்நாத் சிங் என்ன பேசினார்?

''டிசம்பர் 9 2022 அன்று, தவாங் செக்டரின் யாங்ட்சே பகுதியில் உண்மையான எல்லைக் கோட்டை (Line of Actual Control) தன்னிச்சையாக மீறி, அங்கிருந்த நிலையை மாற்ற சீன ராணுவத்தினர் முயன்றனர். நமது ராணுவத்தினர் சீனாவின் இந்த முயற்சியை உறுதியுடன் எதிர்த்தனர்,'' என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

''இந்திய ராணுவம், மக்கள் விடுதலை ராணுவத்துடன் (சீன ராணுவத்தை) சண்டையிட்டு அவர்களை வெளியேற்றியது. எல்லையில் அமைதியைக் கடைபிடிக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவின் வெளியுறவு அதிகாரிகள் மட்டத்திலும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.'' 

''இந்திய ராணுவத் தளபதிகள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால், மக்கள் விடுதலை ராணுவத்தினர் தங்கள் இடங்களுக்கே திரும்பிச் சென்றனர். இந்த நிகழ்வுக்குப் பின், டிசம்பர் 11ஆம் தேதி அப்பகுதியின் இந்திய ராணுவ கமாண்டர் தமது சீன சகாவுடன் கொடி சந்திப்பு ஒன்றை நடத்தினார்.''  

''நமது பிராந்தியத்தின் ஒழுங்கைப் பாதுகாக்க நமது படையினர் முற்றிலும் அர்ப்பணிப்புடன் உள்ளனர்; அதற்கு எதிரான செயல்களைத் தடுத்து நிறுத்தத் தயாராக உள்ளனர் என்று இந்த அவையிடம் கூற விரும்புகிறேன்.'' 

இந்திய ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை; தீவிரமான காயங்களும் யாருக்கும் ஏற்படவில்லை, என்று ராஜ்நாத் சிங்  தெரிவித்தார்.

இந்திய - சீன ராணுவத்தினரின் மோதல் குறித்த விவாதத்துக்கு அனுமதி வழங்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ராஜ்நாத் சிங் பேசி முடித்த பின்னர், எதிர்க்கட்சியினர் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்திய-சீன எல்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

காங்கிரஸ் அமளி - அமித் ஷா கூறிய காரணம்

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

இதனிடையே இன்று மக்களவை ஒத்தி வைக்கப்பட்ட பின், நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் சீனா மற்றும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதகுரு ஜாகீர் நாயக்கின் அமைப்பிடம் இருந்து பணம் பெற்றது குறித்த கேள்வியைத் தவிர்க்கவே காங்கிரஸ் கட்சியினர் கேள்வி நேரத்தின்போது அமளி செய்தனர் என்று தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் சீன தூதரகத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியும், ஜாகீர் நாயக்கிடம் இருந்து 50 லட்சம் ரூபாயும் பெற்றுள்ளது என்று அமித் ஷா தெரிவித்தார்.

''இந்திய பாதுகாப்பு அமைச்சர் இதுகுறித்து (எல்லை மோதல் குறித்து) விளக்கமளிப்பார் என்று கூறிய பின்னரும் காங்கிரஸ் கட்சியினர் கேள்வி நேரத்தின்போது அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தில் கேட்கப்பட இருந்த கேள்விகளின் பட்டியலைப் பார்த்த பின்னர் என்னால் காங்கிரஸ் கட்சியின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அந்தக் கேள்வி ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷனுக்கு வெளிநாட்டு நன்கொடைகள் முறைப்படுத்தல் சட்டத்தின் (எஃப்.சி.ஆர்.ஏ) கீழ் வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது குறித்த கேள்வி. அவர்கள் பதிலளிக்கவிட்டிருந்தால் 2005-2007 காலகட்டத்தில் சீன தூதரகத்திடம் இருந்து அவர்கள் 1.35 கோடி ரூபாய் பெற்றிருந்தனர். அது எஃப்.சி.ஆர்.ஏ விதிகளுக்கு முரணானது. அதனால் அந்த அமைப்பின் பதிவை இந்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது என்று கூறியிருப்பேன்,'' என்று அமைச்சர் சொன்னார் என ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.

இந்திய - சீன எல்லையில் என்ன நடந்தது?

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்த மோதல் நடந்ததாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் உடனடியாக அங்கிருந்து பின்வாங்கி விட்டதாக இந்திய ராணுவம் கூறுகிறது. இந்த மோதலுக்குப் பிறகு பரஸ்பரம் அமைதியை நிலைநாட்ட அப்பகுதியின் தளபதி சீனாவில் உள்ள எல்லை கட்டளை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிய வந்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்களை விட சீன ராணுவ வீரர்கள் அதிக அளவில் காயம் அடைந்ததாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தியாவின் முக்கிய ஆங்கில நாளிதழான தி இந்து செய்தி வெளியிட்டது.

https://www.bbc.com/tamil/articles/c0vqygn3xgxo

  • கருத்துக்கள உறவுகள்

சீனப்படையினரின் அத்துமீறல் விவகாரம்: சீன இராணுவம் அறிக்கை!

சீனப்படையினரின் அத்துமீறல் விவகாரம்: சீன இராணுவம் அறிக்கை!

சமீபத்திய சீனப்படையினரின் அத்துமீறல் விவகாரம் தொடர்பில், சீன இராணுவம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி அருணாச்சலப் பிரதேச எல்லைப்பகுதியான தவாங்கில் இந்திய இராணுவத்தால் சீனப்படையினர் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து சீன இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சீனப்படைகள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது எல்லை தாண்டிவந்த இந்திய வீரர்கள் சீன வீரர்களுடன் மோதியதாக கூறப்பட்டுள்ளது.

அசல் எல்லைக் கோடு பகுதியில் 8 அல்லது 10 வீரர்கள்தான் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், 300 சீன வீரர்கள் அந்த வழியாக வரவேண்டிய அவசியம் ஏதுமில்லை என்றும் இந்திய ராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

300 வீரர்களுடன் ஊடுருவல் முயற்சி நடைபெற்றதாகவும், அப்பகுதியில் நீண்ட காலமாகவே சீன அத்துமீறல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருவதாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1315823

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.