Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய இலங்கைக்கு அனுமதி!

இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய இலங்கைக்கு அனுமதி!

இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய இலங்கைக்கு அந்நாட்டு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்வதற்கு ‘வொஸ்ட்ரோ’ என்ற கணக்கை தொடங்க மத்திய வங்கி ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையும் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்கு அமெரிக்க டொலர்களுக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும்.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜூலை மாதம் இந்த முறையை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், ரஷ்யா, மொரிஷியஸ் ஆகிய நாடுகளும் இதே அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

https://athavannews.com/2022/1315896

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

ரூபாய் மூலம் சர்வதேச பரிவர்த்தனை : இலங்கைக்கான ஐந்து வோஸ்ட்ரோ கணக்குகளை அங்கீகரித்து இந்தியா !

சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு டொலரை பயன்படுத்தாமல் ரூபாயை பயன்படுத்துவதற்கான வழிமுறையை கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

அதன்படி தஜிகிஸ்தான், கியூபா, லக்சம்பேர்க் மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இந்த பொறி முறையைப் பயன்படுத்துவது குறித்து இந்தியாவுடன் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரில் மொஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடைமுறை முன்னதாக ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் டொலர் பற்றாக்குறை உள்ள நாடுகளை இந்த பொறிமுறைக்குள் கொண்டு வரும் முயற்சியாக இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாதம் பொறிமுறையை அமைத்தது.

அதன்படி இந்திய மத்திய வங்கி, ரஷ்யாவுடன் ரூபாய் வர்த்தகத்திற்காக 12 வோஸ்ட்ரோ கணக்குகளை திறக்க வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் மேற்கூறிய நாடுகளை தவிர மொரிஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் ஆர்வம் காட்டியுள்ள நிலையில் இலங்கையுடனான வர்த்தகத்திற்கான ஐந்தும் மொரிஷியஸ் உடனான வர்த்தகத்திற்காக ஒன்று உட்பட ஆறு கணக்குகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை எண்ணை வளம்கொண்ட சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உள்ளிட்ட பெரிய வர்த்தக பங்காளிகளுடன் ரூபாயில் வர்த்தகத்தை மதிப்பாய்வு செய்வது குறித்து இந்தியா தொடர்ந்து விவாதித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1315939

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை இந்தியாவின் மாநிலமாகி விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, புலவர் said:

இலங்கை இந்தியாவின் மாநிலமாகி விட்டதா?

இனி இலங்கைக்கு வரும்போது இந்திய பணமாக கொண்டு வாருங்கள்! எதுவும் நடக்கலாம், விசா? அடிக்கடி செய்திகளை ஆராயுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏற்கனவே சிறீலங்காவின் ஏற்றுமதி & இறக்குமதி , சுங்க தீர்வையற்ற கடைகள் USD இல் நடைபெறுகிறது. 

இந்தியாவுடன் வர்த்தகம் செய்யும் போது எங்கேயோ இருக்கும் USD ஏன்? 

இந்திய ரூபாயில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்தால் foreign exchange rates loss இருக்காது என நினைக்கிறேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா காசுக்கு நாங்க எங்க போவது? அ(சு)ரசாங்கமே😴😴

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளிநாட்டு டொலர் கொண்டுவருவோருக்கே எரிபொருள் என்று சொன்ன நாட்டில் இது ஒன்றும் அதிசயமில்லை. இது பக்கத்து நாடுதானே எதுக்கும் ஒரு எட்டு ஓடிப்போய் கேளுங்கள். இதைவிட ஒரு இறையாண்மை இருக்குதா இந்த நாட்டுக்கு? கூப்பிட்டு கேளுங்கோ உதயன் கம்மன்பில, சரத் வீரசேகர, விமல் வீரவன்ச போன்றவர்களை.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.