Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

தென் கொரிய தூதுக்குழு தலைவர் பிரதி அமைச்சருக்கு டோஸ் 

image_08a1d57cf5.jpg

தென் கொரியாவில் இருந்து வந்து, பிரதி அமைச்சருடனான சந்திப்புக்காக காத்திருந்த நிலையில், அமைச்சரின் குழு அரை மணிநேர தாமதமாக வர, கடுப்பாகிய குழுவின் தலைவர், போட்டுத் தாக்கி உள்ளார்.

ஒரு அமைச்சர் தாமதமாக வந்து, நொண்டி சாட்டுகளை சொல்லிக் கொண்டு இருப்பது தவறு.

முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒரு சந்திப்புக்கு, நேரத்துடன் செல்லவேண்டும் என்பதை பாடசாலைகளிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இது போன்ற பழக்கங்கள் தான், இலங்கையின் முன்னோக்கி செல்வதை தடுக்கின்றது என்று பொரிந்து தள்ளி விட்டார்.

image_6e1c03b26d.jpg

வாங்கிக் கட்டிய அமைச்சரின் அப்பாவி முகம்

இந்தாளுக்கு தலைவர் சொல்லியதை, மொழிபெயர்த்து சிங்களத்தில் யாராவது சொன்னார்களா என்று தெரியவில்லை.

தலைவருக்கு தெரியாது, இவர் மகிந்தா ஆள். பள்ளிக்கூடமே போயிருக்க மாட்டார் என்று.

வா, உனக்கு இருக்கு... ஏர்போர்ட் பக்கம் வருவாய் தானே என்று மகிந்த கட்சி அமைச்சர் நினைத்திருக்க கூடும்.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, Nathamuni said:

தலைவருக்கு தெரியாது, இவர் மகிந்தா ஆள். பள்ளிக்கூடமே போயிருக்க மாட்டார் என்று.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச 10´ம் வகுப்பு படித்திருக்கும் போது....
பிரதி அமைச்சர் பள்ளிக்கூடம் போனால் என்ன போகாட்டி என்ன. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மான ரோசம் உள்ளவனுக்கு நாட்டுப் பற்றுள்ளவனுக்கு உறைக்கும். மகிந்த கோத்த கும்பலுக்கு உறைக்குமா என்ன..!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Nathamuni said:

பாடசாலைகளிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும்.

எதற்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டு ? ஆசிரியர்களே தாமதமாக வந்து முன்னுதாரணமாகிறார்கள் மாணவர்களுக்கு.  பாராளுமன்றத்துக்கு ஜனாதிபதி, பிரதம மந்திரி கூட்டத்தை அறிவிப்பார்கள் ஒருநேரத்திற்கு, வருவதோ அவர்களுக்கு வேண்டிய நேரத்திற்கு, அதிலும் பாதியில் கிளம்பிவிடுவார்கள், இருக்கிற நேரத்திலும் அடிதடி. இது தெரியாமல், நேரத்தின் அருமை, பொறுப்பு கூறல் என்பது கிடையாத நாட்டில் வந்து, கூட்டத்தை கூட்டியது தூதுக்குழுவின் தவறு. அமைச்சர் பாவம்! தன் பழக்கத்தை திடீரென இவருக்காக மாற்ற முடியுமோ?   ஒன்று செய்யலாம்; வழங்கும் உதவியில் இவற்றை போதிக்க ஆசியர்களையும் சேர்த்து வழங்கலாம்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.