Jump to content

எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே இருந்து பல லட்சம் சம்பாதிக்கும் நபர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே இருந்து பல லட்சம் சம்பாதிக்கும் நபர்

ஷோஜி

பட மூலாதாரம்,MORIMOTO_SHOJI/INSTAGRAM

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று கூறும் வடிவேலுவின் நகைச்சுவையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்... அதேபோல ஜப்பானில் ஒரு மனிதர் சும்மா இருக்கிறார். அதை சேவையாகவும் வழங்கி வருகிறார்.

"என்னடா இது?" என்று நீங்கள் புருவத்தை உயர்த்துவது புரிகிறது. சும்மா இருந்தே பல ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு ஜப்பானிய மனிதரைப் பற்றிய கதைதான் இது.

“நீ மட்டும்தான் எதுவும் செய்யாமல் சும்மாவே இருக்கிறாய் என்று எல்லாரும் சொல்வார்கள். எனவே அதையே ஒரு சேவையாக வழங்க நான் முடிவு செய்துவிட்டேன்,” என்கிறார் ஜப்பானை சேர்ந்த ஷோஜி மோரிமோட்டோ.

ஜப்பான் தலைநகர் டோக்யோவை சேர்ந்த இவர் வாடிக்கையாளர்களுக்கு விநோதமான சேவை ஒன்றை வழங்கி வருகிறார்.

 

அதாவது எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதற்காக இவரை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.

ஜப்பானின் ‘டு நத்திங் கை’ (Do – nothing guy) என்று அழைக்கப்படும் இவர், இந்த சேவைக்காக கட்டணத்தையும் வசூலிக்கிறார்.

“எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதற்காக மக்கள் என்னை வாடகைக்கு எடுப்பார்கள். எனது வாடிக்கையாளர்களுடன் செல்லும்போது தேவையானவற்றிற்கு மட்டும் பதில் கூறுவேன். உணவு விடுதிகளுக்கு கூட்டிச் சென்றால் அவர்களுடன் சேர்ந்து உணவு உண்பேன்,” என்கிறார் ஷோஜி

உங்களுக்கு உங்கள் வாடிக்கையாளர்கள் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்காதா என்று கேட்டால் இல்லை என்கிறார் ஷோஜி. “நிச்சயமாக நானாக எந்தப் பேச்சையும் தொடங்க மாட்டேன்,” என்கிறார் அவர்.

ஷோஜியின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் அவரை வாடகைக்கு எடுத்ததற்கு ஒவ்வொரு காரணங்களைச் சொல்கின்றனர்.

புதியதாகத் திறக்கப்பட்ட தனது கஃபேவில் ஆட்கள் பெரிதாக வரவில்லை என்பதால் ஷோஜியின் சேவையை அணுகி அவரை கஃபேவில் அமர வைத்து உணவு வழங்கியுள்ளார் வாடிக்கையாளர் ஒருவர்.

அதேபோல தனியாகச் செல்ல விரும்பாத இடங்களுக்கு அழைத்துச் செல்லவும், ஒன்றாகச் சேர்ந்து உணவு உண்ணவும் ஷோஜியின் சேவையைப் பலர் அணுகியுள்ளனர்.

“பொதுவாக தனியாகச் செல்லக் கடினமாக இருக்கும் இடங்களுக்கு என்னை அழைத்து செல்வர். அதேபோல தனது நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் என்று நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பாத சில செய்திகளை என்னிடம் பகிர்ந்து கொள்ள எனது சேவையை அணுகுவார்கள்,” என்கிறார் ஷோஜி.

இது சும்மா இருக்கும் சேவை என்றாலும் தனது சேவைக்கு கட்டணம் வசூலிக்கிறார் ஷோஜி. ஒரு முறை அவரது சேவையை அணுகுவதற்கு 10 ஆயிரம் யென் அல்லது 85 அமெரிக்க டாலர்களை வசூலிக்கிறார் அவர். இது இந்திய மதிப்பில் சுமார் 7 ஆயிரம் ரூபாய்.

உணவகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதோடு சேர்த்து பயணக் கட்டணத்தையும் வழங்க வேண்டும். அதேபோல வாடிக்கையாளர்கள் எங்கேனும் கூட்டிச் சென்றால் அங்கே ஆகும் செலவுகளை அவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தனது இந்த சேவையில் சில நேரங்களில் சில உணர்ச்சிகரமான அனுபவங்களும் ஷோஜிக்கு நேர்ந்துள்ளது.

“ஒரு வாடிக்கையாளரின் காதலர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். அவரின் ஞாபகத்தால் துயரப்பட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர் என்னை அழைத்து அவரது காதலருடனான நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். தனது காதலர் வழக்கமாக அணியும் தொப்பியை என்னிடம் கொடுத்து என்னை வழி அனுப்பி வைக்கச் சொன்னார்” என்கிறார் ஷோஜி

இம்மாதிரியாக பல காரணங்களுக்காக ஆண்கள் பெண்கள் என இருபாலரும் ஷோஜியை அணுகுகின்றனர்.

அதில் பொதுவான ஒரு காரணம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னுடன் இருக்க ஒரு துணை வேண்டும் என்பதுதான்.

ஷோஜியின் முன்னாள் மேலாளர்தான் இந்த சேவையை தொடங்குவதற்குத் தூண்டுதலாக இருந்துள்ளார்.

மனிதர்கள் நடந்து செல்கின்றனர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“பொதுவாக என்னால் ஒரு குழுவாகச் சேர்ந்து சரியாக பணி செய்ய இயலாது. நான் வேலை பார்த்த இடத்தில் என்னுடைய மேலாளார், நீ இங்கிருந்தாலும் இல்லை என்றாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்றார். அப்போது சும்மா இருந்து கொண்டே ஏன் நம்மால் உருப்படியாக எதையும் செய்ய முடியாதா என யோசித்தேன். அப்போதிலிருந்து என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்,” என்கிறார் ஷோஜி.

ஷோஜியின் சேவையை ஒருமுறை அணுகியவர்கள் மீண்டும் மீண்டும் அவரின் சேவையை அணுகவும் செய்கிறார்கள். அப்படி ஒருவர்தான் கொடாமி இஷிஹாரா.

தனது பிறந்தநாளன்று ஷோஜியின் சேவையை அணுகிய இவர், தனது தோலில் சூரிய ஒளி பட்டால் சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் தனது நண்பர்கள் அது குறித்து கவலை கொள்வார்கள், எனவே தனது பிறந்தாளுக்கு வெளியில் செல்ல ஷோஜியின் சேவையை அணுகியதாகக் கூறுகிறார்.

ஷோஜிக்கு இந்த ‘சேவைப் பணி’ பல புதிய கண்ணோட்டங்களையும் வழங்கியுள்ளது.

“இந்த சேவையை நான் தொடங்குவதற்கு முன்பு சாலையில் நடந்து செல்லும் மக்களைப் பார்த்தால் அவர்கள் இந்த சமூகத்துடன் ஒன்றி வாழ்கிறார்கள் என்னால் தான் அது முடியவில்லை என்று நினைப்பேன். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பல பிரச்னைகள் உள்ளன என்பதை இப்போது நான் புரிந்து கொண்டேன்,” என்கிறார் ஷோஜி.

“தனிமையாக உணர்பவர்கள் என்னை அதிகம் வாடகைக்கு எடுக்கின்றனர்,” என்று கூறும் ஷோஜி, சும்மா இருந்தாலும் பிஸியாகவே இருக்கிறார்.

ஆம். ஒரு நாளைக்கு மூன்று வாடிக்கையாளர்களை ஷோஜி சந்திக்கிறார்.

சும்மாவே இருந்தால் வெறுமையாக இருக்காதா, ஒவ்வொரு நாளும் எப்படி உணர்கிறீர்கள் என்று ஷோஜியிடம் கேட்டால், “இந்த சேவையைத் தொடங்கிய பிறகு நான் பலவிதமான மனிதர்களைச் சந்தித்து வருகிறேன்.

அதில் அனைவரும் இந்த சமூகத்திற்கு ஏதேனும் பயனுள்ளதைச் செய்கிறார்களா என்று கேட்டால் நான் இல்லை என்றுதான் சொல்வேன். அனைத்து விதமான மனிதர்களும் சேர்ந்ததுதானே இந்த சமூகம்,” என்று தனது சேவையைத் தொடங்குகிறார் ஷோஜி.

https://www.bbc.com/tamil/articles/c3g4ee799v2o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடான்ஸ்சாமி என்ன வேலை செய்கிறார்? 

சதா யாழில் மினகெடுகிறாரே?

அரச பணத்தில் வாழ்கிறாரா?

அல்லது தெருவோர யாசகரா?

ஓய்வூதியக்காரரா?

கட்சிகள், புலநாய்வு ஏஜென்சிகளிடம் பணம் வாங்குகிறார?

இப்படி பலவாறு யோசித்து மண்டையை உடைக்கும் உறவுகளுக்கு ஒரு வழியாக இன்று பதில் கிடைத்திருக்கும்.

# 9 வருடக்காத்திருப்பு 🤣

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Summa Irukra GIF - Summa Irukra Sad - Discover & Share GIFs

பதில் கிடைச்சிட்டுது .....சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் சாமி .........!  😢 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

உடான்ஸ்சாமி என்ன வேலை செய்கிறார்? 

சதா யாழில் மினகெடுகிறாரே?

அரச பணத்தில் வாழ்கிறாரா?

அல்லது தெருவோர யாசகரா?

ஓய்வூதியக்காரரா?

கட்சிகள், புலநாய்வு ஏஜென்சிகளிடம் பணம் வாங்குகிறார?

இப்படி பலவாறு யோசித்து மண்டையை உடைக்கும் உறவுகளுக்கு ஒரு வழியாக இன்று பதில் கிடைத்திருக்கும்.

# 9 வருடக்காத்திருப்பு 🤣

அதுகும்… ஆறு, ஏழு மனைவிகளை வைத்துக் கொண்டு, செலவுக்கு எப்படி சமாளிக்கிறார். 😂

25 minutes ago, suvy said:

பதில் கிடைச்சிட்டுது .....சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் சாமி .........!  😢 

 

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நொச்சி... தங்களது இந்தக் கேள்வியை தற்போதுதான் கவனித்தேன். காலையில் உடற் பயிற்சிக்குப் போய் விட்டு வந்து, மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டு விட்டு... இரண்டு மணியளவில் சைக்கிளை எடுத்துக் கொண்டு 7 கிலோ மீற்றர் ஓடி விட்டு வந்து இப்போ... ஐஸ் கோப்பி குடித்துக் கொண்டு  இருக்கின்றேன். 
    • தேவைக்கு ஏற்ற பதிவு நிழலி. நாங்கள் இன்னமும் தமிழர்களின்  சங்ககாலத்து வீரம், ஆளுமை போன்ற பழைய காலத்துப்  பெருமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோமே தவிர, இப்பொழுது எந்த நிலையில்  இருக்கின்றோம் அடுத்து என்ன செய்யப் போகின்றோம் என்பதைப் பற்றி  நாங்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. மற்றைய நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் யேர்மனியைப் பற்றி என்னால் ஓரளவு சொல்ல முடியும். யேர்மனியில், தாயகத்துக்காக, தமிழர்களின் மீட்சிக்காக செயற்படும் அமைப்புகளைக் காண முடிவதில்லை. தமிழ் அமைப்புகள் என்று தொடங்கப்படும் பல அமைப்புகள் நீண்ட காலங்களுக்குச் செயற்படுவதும் இல்லை. ஒரு காலத்துக்குப் பின் அவை முடங்கிப் போய்விடுகின்றன. ஓரளவுக்கு நீண்ட காலங்களாகச்  செயற்படும் அமைப்பு என்றால், விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டு உலகத் தமிழர் இயக்கமாக மாறி இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒன்றைத்தான் சொல்ல முடியும். இவர்களின் இருப்புக்குக் காரணமே யேர்மனியில் உள்ள தமிழ் பாடசாலைகள்தான். தமிழர் ஒருங்கிணைப்பானது  விடுதலைப் புலிகளின் சகல  நிகழ்வுகளைகளையும் மேடை ஏற்றுகிறது. அதில் உள்ளவர்கள் கோட் சூட், கறுப்பு- வெள்ளை, மஞ்சள்-சிவப்பு ஆடைகளை அணிந்து வந்து நிகழ்ச்சிகளை அலங்கரிக்கிறார்கள். கோயில்களை நிர்வகிக்கிறார்கள். தமிழ் பாடசாலைகள் நடத்துகிறார்கள். இதில் இவர்கள் நடத்தும் பாடசாலையில் கல்விப் பாடப் புத்தகங்கள் சரியானதில்லை, தமிழர்களது வரலாற்றைக் கொச்சைப் படுத்துகிறது என சில அதிருப்தியாளர்கள் சேர்ந்து வேறு ஒரு அமைப்பைத் தனியாகத் தொடங்கி பாடசாலைகளை நடாத்துகிறார்கள். போட்டிக்கு கோயில்களை உருவாக்குகிறார்கள். இங்கே கவனிக்க வேண்டியது புலிகள் அமைப்பே தங்களுக்குள் பிரிந்து நிற்கிறார்கள் என்பதே. இவர்களிடம் ‘புலிகள் புராணம்’ பாடுவதைத் தவிர வேறு  பொது நோக்கு என்று எதுவுமே இல்லை என்பது வருத்தத்துக்குரியது. தமிழர் ஒருங்கிணைப்பில் இருப்பவர்களிடம் தமிழ் உணர்வு இருக்கும் அளவுக்கு அரசியல் பற்றிய பெரிய அறிவுகள் கிடையாது என நினைக்கின்றேன்.ஆனால்  தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதைக் கவனித்திருக்கின்றேன். இப்பொழுது நொச்சியை நான் கருத்துக்கள் தர அழைக்கிறேன்  
    • தலைவருக்கே தெரியாதென்று தலைவரே சொல்லியிருந்தார். ஆரம்பத்தில் ஒரு காணொளியில் மிகவும் நிதானமாகவும் நல்ல திட்டங்களோடும் பேசியிருந்தார். மிகவும் பாராட்டக் கூடிய மாதிரி இருந்தது.
    • எனது கை மணிக்கட்டில் ஒரு நோ. அப்பில் பென்சிலைப் பிடிக்க விரல்களால் முடியவில்லை. ஆக கருத்துப் படங்களை சில நாட்களுக்கு உருவாக்க வாய்ப்பிருக்காது. நேற்று வைத்தியரின் அழைப்புக்காக பார்வையாளரின் அறையில் அமர்ந்திருந்தேன். எனக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தவர் பத்திரிகை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார், இடையிடையே என்னையும் பார்த்துக் கொண்டார். ஏதோ என்னுடன் பேச நினைக்கிறார் என்பது விளங்கியது. பார்வையாளர் அறை என்பதால் சத்தம் போட்டு கதைக்க முடியாது. நானும் ஒரு புன்னகையை அவருக்குத் தந்துவிட்டு இருந்து விட்டேன். அவருக்கான வைத்தியரின் அழைப்பு வர, எழுந்தவர் என்னருகில் வந்து, “நீங்கள் சிறீலங்காவா?’ என்று மெதுவாகக் கேட்டார்.  ‘ஓம்’ என்று தலையாட்டினேன். உங்கள் புது ஜனாதிபதியைப் பற்றி செய்தி வந்திருக்கிறது என தான் வாசித்துக் கொண்டிருந்த  அந்தச்  செய்தித்தாளை என்னிடம் தந்து விட்டுப் போனார். Taz யேர்மனியில் வெளிவரும் ஒரு பத்திரிகை. “இலங்கையில் இடதுசாரி ஜனாதிபதி - புதிய திசைகாட்டி” அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றியானது நாட்டிற்கு ஒரு புதிய திசையைக் காட்டுகிறது. ஆனால் எங்கே? சீனாவை நோக்கிச் செல்கிறதா? ஊழலைக் கைவிடுகிறதா? என்று அதன் முதற் பக்கத்தில் அனுரா திஸநாயக்காவின் பெரிய படத்துடன் செய்தி இருந்தது. செய்தியின் முழு விபரங்களும் உட் பக்கத்தில் இருந்தன. தென்னிலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை நகருக்கு வெளியே ஒரு வீதியின் முனையில் ரசீன் முஹம்மது பொறுமையுடன் நிற்கின்றார். வெயில் அடிக்கும் சூழலில் லேசான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. 21.09.2024 சனிக்கிழமை,சிறீலங்காவில் உள்ள 13,000 வாக்கு நிலையங்களில் ஒன்றான புத்த கோவிலின் பக்கத்து வீதியில் …. என்று ஆரம்பிக்கும் கட்டுரை, 38 ஆண்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலில் 17 மில்லியன் பேர்கள் வாக்களார்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. ….55 வயதான அனுரா திஸநாயக்கா, ஒரு தொழிலாளியின் மகன். நன்கு அறியப்பட்ட வேட்பாளர்கள் மத்தியில் இருந்து ஒரு தொழிலாளியின் மகனான அவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்…. ….இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உட்பட தெற்கே உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தங்கள் கைகளில் இரத்தக் கறைகளைக் கொண்டவைதான் என்று கொழும்பில் உள்ள சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த கருத்துக்கணிப்பாளர் ரவி ரன்னன்-எலியா தெரிவிக்கிறார்…. என்று தொடரும் கட்டுரை இலங்கையின் பொருளாதரத்தையே பெரிதும் அலசுகிறது. …..”அதிகளவு கடன் சுமை காரணமாக நிதியளித்தல்  மற்றும் புனரமைப்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளோ மிக அதிகமாக இருக்கின்றன.  இலங்கையின் தற்போதைய அந்நியச் செலவாணிக் கையிருப்பை வைத்து மூன்று மாதகால மட்டுமே இலங்கையால் இறக்குமதியைச் செய்ய முடியும் என்றும், அரசியல்துறையைச் சேர்ந்த அஷ்வின் ஹெம்மாதகம தெரிவித்துள்ளார். …..”கடந்த காலங்களில் இங்குள்ள அனைவரும் ராஜபக்ஷக்களுக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் நெருக்கடிக்குப் பிறகு, மக்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை  இப்பொழுது அளித்திருக்கிறது” என ரஸீன் முஹம்மத் தெரிவிக்கிறார் என்று கட்டுரை முடிவடைகிறது. ஆனால் அந்தப் பெரிய நீண்ட கட்டுரையில் சங்கெடுத்து முழங்கிய பொதுக் கட்டமைப்பின் தமிழ் வேட்பாளரான அரியநேத்திரன் பற்றி ஒரு வரி கூட இல்லை. ஆக சர்வதேசத்துக்கு எங்களின் சங்கொலி கேட்கவில்லை. அல்லது அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது. https://taz.de/Linker-Praesident-in-Sri-Lanka/!6035398/  
    • அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர்.  புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.