Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கால்பந்து மன்னர் பெலே காலமானார்

பெலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

கால்பந்து மன்னர் என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெலே தனது 82-ஆவது வயதில் காலமானார்.

கால்பந்து உலகம் கண்ட மிகச் சிறந்த வீரர்களுள் முதன்மையானவர் என்று பெலே கருதப்படுகிறார்.

1950-களின் இறுதியில் தொடங்கி 21-ஆண்டுகள் கால்பந்து ஆடிய பெலே 1363 போட்டிகளில் ஆடி 1,281 கோல்களை அடித்திருக்கிறார். இவற்றில் தனது நாட்டுக்காக 92 சர்வதேசப் போட்டிகளில் அவர் அடித்த 92 கோல்களும் அடங்கும்.

கால்பந்து வரலாற்றில் உலகக் கோப்பை வென்ற அணியில் 3 முறை  இடம்பெற்ற ஒரே வீரர் இவர் மட்டும்தான். 1958, 1962, 1970 என மூன்று முறை பிரேசில் அணி உலகக் கோப்பையை வென்றபோதும் அவர் அணியில் இருந்தார்.

 

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர் என்று 2000-ஆவது ஆண்டில் பெலேயை ஃபிஃபா தேர்வு செய்தது. 

2020-ஆம் ஆண்டில் பிபிசி நடத்திய ஒரு வாக்கெடுப்பில் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, மாரடோனா ஆகியோரைவிட உலகின் மிகச் சிறந்த வீரர் என்று பெலே தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த சில காலமாக சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை கோளாறுகளால் அவர் அவதிப்பட்டு வந்தார். 

2021-ஆம் ஆண்டு அவருக்கு மலக்குடலில் இருந்த புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது. எனினும் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த நவம்பரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பல உறுப்புகளின் செயலிழப்பு காரணமாக, அவரது முந்தைய மருத்துவ சிக்கல்களுடன் தொடர்புடைய பெருங்குடல் புற்றுநோய் வளர்ச்சியின் விளைவாக" இறந்துவிட்டதாக மருத்துவமனை கூறியுள்ளது.

"உத்வேகத்தாலும் அன்பாலும் நினைவுகூரப்படும் பெலே, இன்று அமைதியாக மரணமடைந்தார்.  அன்பும்  அன்பு, அன்பு, அன்பு, என்றென்றும்." என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

"எல்லா காலத்திலும் சிறந்த விளையாட்டு வீரர் என்பதைவிட பெலே சிறப்பானவர்” என்று பிரேசில் கால்பந்து சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

"எங்கள் கால்பந்து மன்னர் வெற்றி பெற்ற பிரேசிலின் மிகச்சிறந்த தலைவராக இருந்தார். கடினமான தருணங்களிலும் அவர் அஞ்சவில்லை. தன் தந்தைக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தருவதாக வாக்களித்தார். அதை மூன்று முறை பரிசளித்தார்.”

 

பெலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

"எங்கள் மன்னர் எங்களுக்கு ஒரு புதிய பிரேசிலைக் கொடுத்தார், அவருடைய பாரம்பரியத்திற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நன்றி, பெலே."

பெலேவின் இறுதிச் சடங்கு விவரங்களை அவரது முன்னாள் கிளப்பான சான்டோஸ் வெளியிட்டுள்ளது. திங்கள்கிழமை காலை, அவரது உடல் மருத்துவமனையில் இருந்து கிளப்பின் மைதானத்துக்கு கொண்டு செல்லப்படும், அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மைதானத்தின் மையத்தில் வைக்கப்படும்.

செவ்வாயன்று, சாவ் பாலோவில் உள்ள சாண்டோஸ் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்படும். 

https://www.bbc.com/tamil/articles/c4n27d4040yo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

'முரட்டு உதை' கால்பந்து உலகில் புரட்சி செய்த 'மன்னர்'

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஃபெர்னாண்டோ டுவார்டே
  • பதவி,.
  • 30 டிசம்பர் 2022, 03:06 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
பெலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசியாக நான் பெலேவை நேரில் பார்த்தபோது, அவர் மத்திய லண்டனில் உள்ள ஒரு சுரங்கப்பாதை கிளையின் கவுன்டருக்கு பின்னால், சாலட் ஃபில்லிங்ஸை சாண்ட்விச்சில் பொருத்த முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

 அது மார்ச் 2015. அப்போது பிரேசிலிய கால்பந்து ஜாம்பவானின் கடினமான காலகட்டம் அப்போது தொடங்கியிருக்கவில்லை. தனது நாட்டு மக்களால் ‘கிங் பெலே’ என்று அழைக்கப்பட்ட அந்த மனிதருடன் சேர்ந்த அமெரிக்க துரித உணவு நிறுவனம் செய்யப்பட்ட ஒரு விளம்பர செயல் அது.

 அதற்குள் பெலேவும் நானும் ஏற்கெனவே பலமுறை சந்தித்திருந்தோம். பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் அவர் என்னைக் கூட்டிச் சென்றபோது, அவருடைய முகத்தில் ஒரு நீண்ட புன்னைகையை ஏற்படுத்துவதற்கு அது போதுமானதாக இருந்தது. அவருடன் நேரடியாக ஒரு நேர்காணலை பெறும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்திருந்தது. அவர் 74 வயதில் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது தான், அன்றைய மதிய நேரத்தின் என்னுடைய மகிழ்ச்சிகரமான நினைவு.

 “மருத்துவமனை விஷயத்தில் அனைவரையும் கவலைப்படுத்துவிட்டீர்கள், கிங்” என்று நான் அவரிடம் கூறினேன்.

 

 “நான் டிரெஸ் கொரகோஸ்(போர்ச்சுகீசிய மொழியில் மூன்று இதயங்கள்) என்ற ஊரில் பிறந்தேன் என்பதை மறந்துவிட்டீர்களா? ‘மூன்று இதயங்கள்’ உள்ள ஒருவரைத் தரையில் சாய்ப்பது கடினம்,” என்று அவர் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

 “அவெஞ்சர்களில் ஒருவரைச் சந்திப்பதைப் போல”

 

ஓராண்டுக்கு முன்பு, சூரிச்சில் நடந்த கால்பந்து நிர்வாகக் குழுவான ஃபிஃபாவின் விருது வழங்கும் விழாவில் அவர் தோன்றியபோது அவர் மிகவும் பலவீனமாகத் தெரிந்தார். மற்ற பல பிரேசிலிய செய்தியாளர்களைப் போல, அவர் நீண்ட காலம் இருக்கமாட்டார் என்று நானும் உண்மையிலேயே கவலைப்பட்டேன்.

 பெலே ஏற்கெனவே சிறுநீரக பிரச்னைகளுடன் போராடிக் கொண்டிருந்தார். அவரது 21 ஆண்டுகால தொழில்முறை கால்பந்து வாழ்க்கை முழுவதும் எதிராளிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆட்டங்களில் அது சேதமடைந்திருந்தது.

 நாங்கள் ஒவ்வொரு முறை சந்தித்துக்கொண்ட பிறகும், அதில் நடப்பதைப் பற்றி சிந்தித்துக்கொண்டே அடுத்த நாட்களைக் கழித்தேன். நம்மைப் பார்ப்பதில் எப்போதும் மகிழ்ச்சியடையக் கூடிய அவெஞ்சர்களில் ஒருவருக்கு முன்னால் இருப்பதைப் போல் இருந்தது.

பல கால்பந்து ரசிகர்களுக்கும், குறிப்பாக பிரேசிலியர்களுக்கும், எட்சன் அரான்டெஸ் டோ நாசிமென்டோவாக பிறந்த இவர் ஒரு சூப்பர் ஹ்யூமன். கால்பந்தை உதைத்தவர்களிலேயே மிகப்பெரிய விளையாட்டு வீரர்.

ஜான் லெனான் ஒருமுறை ராக் அண்ட் ரோலை சக் பெர்ரி என்றழைக்க வேண்டுமெனக் கூறியதைப் போல், கால்பந்துக்கு பெலே எனப் பெயரிட்டிருக்க வேண்டும்.

ஒரு வீரராக மூன்று ஃபிஃபா உலகக் கோப்பைகளை வென்ற ஒரே நபர் அவர் தான். 1958இல் உலகக்கோப்பையை முதலில் வென்றபோது, அவருக்கு வயது 17 தான். பிறகு, 12 ஆண்டுகள் கழித்து மெக்சிகோவில் பட்டத்தை வென்ற பிரேசில் அணியின் ஒரு பகுதியாகவும் அவர் இருந்தார். அந்த அணி, இன்றும் சிறந்த அணிகளுக்கான வாக்கெடுப்பை நடத்தினால் அதில் வெற்றி பெறுகிறது.

பெலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்தப் போட்டியில் பெலேவின் செயல்திறனுக்கான சிறந்த பாராட்டுகளில் ஒன்று, இறுதிப்போட்டியில் அவரை குறிவைத்து ஆடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தற்காப்பு ஆட்டக்ககாரரான இத்தாலியின் டார்சிசியோ பர்க்னிச்சின் பாராட்டு.

“அனைவரையும் போலவே அவரும் தோல், எலும்புகளால் ஆனவர் தான்’ என்று ஆட்டத்திற்கு முன்பு எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஆனால், நான் தவறு செய்துவிட்டேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பிரேசில் தனது மூன்றாவது உலகக்கோப்பையை வென்ற ஆட்டத்தில், பெலே ஒரு கோல் அடித்தார், இரண்டு கோல் வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்தார். அந்த கோல், அவர் தனது வாழ்க்கையில் அடித்த 1,200க்கும் மேற்பட்ட கோல்களில் ஒன்று.

பெலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாத்தியமே இல்லாத அளவிலான தேசிய பொக்கிஷம்

பெலே விளையாட்டையும் மீறிய ஒரு தோற்றத்தைப் பதித்து வைத்தார். மறைந்த அமெரிக்க கலைஞரான ஆண்டி வார்ஹோல், புகழின் நிலையற்ற தன்மை குறித்த அவருடைய புகழ்பெற்ற மேற்கோளை திருத்திக்கொள்வதற்கே பெலேவின் புகழ் வழிவகுத்தது.

“எனது கோட்பாட்டிற்கு முரண்பாடான சிலரில் பெலேவும் ஒருவர். 15 நிமிட புகழுக்குப் பதிலாக, அவருடைய 15 நூற்றாண்டுகளுக்கு இருக்கும்” என்று வார்ஹோல் கணித்தார்.

நான் 1973இல் பிறப்பதற்கு முன்பே பெலே சர்வதேச விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். ஆனால், பிரேசிலில் வளர்ந்ததால் அவருடைய சாதனைகளைப் பற்றிய கதைகளை மீண்டும் மீண்டும் கேட்பதிலிருந்து தப்பிக்க முடியவில்லை.

ஆனால், பிரேசிலை உலகின் மிக வெற்றிகரமான கால்பந்து நாடாக மாற்ற உதவுவதோடு, கறுப்பின மனிதரான பெலே, இன்னும் குறிப்பிடத்தக்க ஒன்றைச் செய்தார்.

வெட்கக்கேடான அடிமைத்தனமும் பிரிவினை வரலாறும் நீடித்த ஒரு நாட்டின் தேசியப் புதையலாக உயர்ந்து, இன்றும் அந்தப் புகழோடு இருக்கிறார்.

அன்றும் சரி இன்றும் சரி, அவர் மிகவும் பிரபலமான பிரேசிலியன். நியூயார்க்கில் இருந்து துணை-சஹாரா ஆப்பிரிக்கா வரை நான் பயணித்த அனைத்து இடங்களிலும், நான் எங்கிருந்து வருகிறேன் என்பதைக் கூறிய பிறகு எவரும் முதலில் குறிப்பிடும் பெயர் அவருடையதுதான்.

பெலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெலே, நிச்சயமாக விமர்சகர்களையும் கொண்டிருந்தார். 1964, 1985-க்கு இடையில் பிரேசிலை இரும்புக்கரத்துடன் ஆட்சி செய்த ராணுவ ஆட்சிக்கு எதிராக அவர் பேசியிருக்க வேண்டும் என்று நினைத்தவர்களும் இருந்தனர். அந்த ஆட்சியின் தலைவர்கள் தேசிய அணியின் வெற்றியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் வெட்கப்படவில்லை.

அடக்குமுறைகளுக்கு கண்ணை மூடிக் கொண்டிருந்தது பெலே மட்டுமல்ல. ஆனால், அவர்களில் எவருக்கும் அவருக்கு இருந்த அளவுக்கான கவர்ச்சி இருக்கவில்லை.

2021 நெட்ஃப்லிக்ஸ் ஆவணப்படத்தில் ராணுவ ஆட்சி நடந்த காலகட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களில் “கால்பந்து வீரர்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள்” என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் பெலே கூறினார்.

“[மீறல்கள்] குறித்து எனக்குத் தெரியாது என்று நான் சொன்னால், அது பொய். ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எங்களுக்கு உறுதியாகத் தெரிந்திருக்கவில்லை.”

பிந்தைய ஆண்டுகளில், ராணுவத்திற்கு எதிராக 1974 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு சர்வதேச ஓய்விலிருந்து திரும்பி வர மறுத்ததாக பெலே கூறுவார்.

பெலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெலே விளையாடிய நாட்களிலோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ, பிரேசிலில் இனவெறிக்கு எதிரான முறையான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடவில்லை.

2014ஆம் ஆண்டில், பிரேசிலிய சாம்பியன்ஷிப் விளையாட்டில் ஓர் இனவெறி சம்பவத்தை இயல்பாக்கிய பிறகு அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் விளையாடிய நாட்களில், “நான் பங்கேற்ற ஒவ்வொரு விளையாட்டையும் நிறுத்துவதற்கு” போதுமான இனரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாகக் கூறினார்.

பெலேவின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகளால் சூழப்பட்டது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக அவருடைய மகன் எட்சன் கைது செய்யப்பட்டார். 1960களின் முற்பகுதியில் ஒரு நெருக்கமான உறவில் பிறந்த மகள் சாண்ட்ராவை அவர் ஒப்புக்கொள்ள மறுத்தார்.

நெட்ஃப்லிக்ஸ் ஆவணப்படத்தில், பெலே “எனக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் எனத் தெரியாத அளவுக்குப் பல தொடர்புகள்” இருப்பதாக ஒப்புக்கொண்டார்.

1977-ஆம் ஆண்டி அமெரிக்காவின் மோசமான முதல் தொழில்முறை கால்பந்து லீக்கில் விளையாடிய பிறகு பெலே கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

அவர் நிர்வாகத்தின் பக்கமாகச் செல்லவில்லை. மேலும் விளையாட்டின் மீதான அவருடைய ஈடுபாடு பெரும்பாலும் தொலைக்காட்சியில் கருத்து தெரிவிப்பதாக மட்டுமே இருந்தது. 1994ஆம் ஆண்டு பிரேசில் ஆண்கள் பிரிவு அணி உலகக்கோப்பையை வென்றபோது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தின் பத்திரிகை பெட்டியில் ஹெட்செட் அணிந்தபடி அவர் மேலும் கீழும் குதிக்கும் காட்சி, இன்னும் என் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது.

பெலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவர் சோப் ஓபராக்கள், எஸ்கேப் டு விக்டரி போன்ற திரைப்படங்களிலும் தோன்றுவார். 1995-98-க்கு இடையில் பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

பெலே எண்ணற்ற தேசிய, சர்வதேச நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ளார். இது சில நேரங்களில் கேலிக்கு வழிவகுத்தது. ஆனால், பின்னோக்கிப் பார்த்தால் அதுவொரு துணிச்சலான நடவடிக்கையாகவும் இருந்தது.

 பெலே தேசிய, சர்வதேச ஊடகங்களுக்கான மேற்கோள்களுக்கான ஆதாரமாக இருந்தார். பிரபலமான சக ஊழியர்களை வருத்தப்படுத்தினாலும்கூட, அவர் தனது வார்த்தைகளை அதிகம் அளவிடவில்லை.

 பிரேசிலின் உலகக் கோப்பையை வென்ற முன்கள வீரர் ரொமாரியோ ஒருமுறை, “பெலே வாயை மூடிக்கொண்டிருந்தால், அவர் ஒரு கவிஞர்” எனக் கூறினார்.

 அவரால் அசாதாரணமான கணிப்புகளையும் கூற முடியும்.

 1970களில் ஓர் ஆப்பிரிக்க அணி “21ஆம் நூற்றாண்டுக்கு முன்பு உலகக் கோப்பையை வெல்லும்” என்று கணித்தவர் பெலே. இதை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் அரையிறுதியைக் கூட எட்டவில்லை.

1994ஆம் ஆண்டு அர்ஜென்டினாவை வீழ்த்தி தகுதிச்சுற்றில் கொலம்பியா வெற்றி பெற்ற நேரத்தில் அது உலகக்கோப்பையை வெல்லும் என்றும் அவர் தெரிவித்தது பிரபலமானது. ஆனால், அவர்கள் அமெரிக்காவிடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறினார்கள்.

பெலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெலேவின் கணிப்புகள் பிரேசில் செய்தியாளர்களிடையே கேலிக்குரியதானது.

‘விளையாட்டில் எனக்குள்ள வரலாறு, என் மனதிலுள்ளதை வெளிப்படையாகப் பேசும் உரிமையை எனக்குக் கொடுக்கிறது’

2006இல் பெர்லினில் நடந்த மற்றோர் அதிசயமான தருணத்தில், “விளையாட்டில் எனக்குள்ள வரலாறு எனக்கு என் மனதைப் பேசுவதற்கான உரிமையை அளிப்பதாக நான் கருதுகிறேன்,” என்று அவர் என்னிடம் கூறினார். ஒரு சொகுசு ஹோட்டலில் அவர் மற்றும் அவருடைய ஊழியர்களுடன் நான் இங்கிலாந்து, ஈக்வடாருக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கான உலகக்கோப்பையை போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அன்று பிற்பகலில், அவர் அனைத்திற்கும் எதிராகவும், அவரது கருத்தை நியாயமற்ற முறையில் விமர்சித்த அனைவருக்கும் எதிராகவும், டியாகோ மாரடோனா உட்பட, ஒரு முழு விளக்கத்தைப் பேசினார். அதுவொரு சிறப்பான கட்டுரைக்கு வித்திட்டது. ஆனால், அது வெளியுலகுக்கு வரவே இல்லை. ஏனெனில், “நீ இங்கே ஒரு நண்பராக வந்திருக்கிறாய், செய்தியாளராக இல்லை” என்று கிங் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருந்தார்.

பெலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

கால்பந்து மன்னரை எதிர்ப்பதற்கு நான் யார்? ஆனால், அந்தப் போட்டியின் காலிறுதியில் பிரேசில் பிரான்ஸிடம் தோற்று வெளியேறியபோது, பெலே அளித்த ஒரேயொரு செய்தித்தாள் பேட்டியும் எனக்குத்தான்.

லியோனெல் மெஸ்ஸி கால்பந்து உலகில் வலம் வரத் தொடங்கியதிலிருந்து, உலகின் சிறந்த கால்பந்து வீரராக பெலே வீழ்த்தப்பட்டதாகச் சொல்லிக்கொள்ள பலர் ஆசைப்படுகிறார்கள். ஆனால், பிரேசிலிய ஜாம்பவானின் பார்வையில் அப்படியில்லை.

 “என்னால் ஹெட்டர்களை அடிக்க முடியும், இரண்டு கால்களாலும் பந்தைக் கையாள முடியும். மெஸ்ஸி இடதுபுறத்தையே அதிகம் பயன்படுத்த முனைகிறார். அதோடு அவர் ஆயிரம் கோல்களையும் அடித்தாக வேண்டும்,” என்று என்னிடம் பெலே லண்டனில் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cd13yl1d0k5o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைசிறந்த கால்பந்தாட்ட வீரனுக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலிகள்…

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பீலே மரணம் - கண்ணீர்விட்டு புகழாரம் சூட்டிய உலகின் நாளேடுகள்

By RAJEEBAN

30 DEC, 2022 | 03:28 PM
image

பிரேசிலின் கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலேயின் மரணம் இன்று சர்வதேச அளவில் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது - பீலேயின் மரணம் குறித்த செய்தியை நாளேடுகள் துயரத்துடன் வெளியிட்டிருந்தன.

8PwFcwxp.jpg

1970  ம் ஆண்டு மெக்சிக்கோ நகரில் இடம்பெற்ற உலககிண்ண போட்டியின் இறுதியாட்டத்தில் பிரேசில் வெற்றிபெற்றபின்னர் தனது அணிவீரர்களின் தோளில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை கார்டியன் தனது முதல் பக்கத்தில்  வெளியிட்டுள்ளதுடன்  அவர் முழு உலகிற்கும் தனது திறமைகளை வழங்கியவர் என குறிப்பிட்டுள்ளது.

FlLY01bWYActd0T.jpg

பிரேசிலின் ஓ குளோபோ  பீலே நித்தியமானவர் என தெரிவித்துள்ளது.

ஸ்பெயினின் எல்பையிஸ் 1970 உலக கிண்ண வெற்றிப்படத்துடன் கால்பந்தாட்ட ராஜா பீலேவுக்கு குட்பை என தெரிவித்துள்ளது.

FlLtK4sWQAAGzeb.jpg

பிரான்சின்L’Équipe  அவர் மன்னர் என தெரிவித்துள்ளது.

FlLbInlWYAMjV8i.jpg

1970ம் ஆண்டு வெற்றியை பீலே கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள மிரர் அவரை மிகச்சிறந்தவர் என வர்ணித்துள்ளது.

கால்பந்தை அழகாக்கிய தெய்வீக மேதையை உலகம் போற்றுகின்றது என மிரர் தெரிவித்துள்ளது.

FlLniaFWYAMOqHc.jpg

FlK_rJ6X0AE8RmX.png

https://www.virakesari.lk/article/144559

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள்.......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

'அனைத்தையும் மாற்றிய கால்பந்து ராஜா' - நெய்மார், மெஸ்ஸி, எம்பாப்பே, ரொனால்டோ அஞ்சலி

பெலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

"கிங்" பீலே "எல்லாவற்றையும் மாற்றினார்" என்று பிரேசில் முன்கள வீரர் நெய்மார், கால்பந்து ஜாம்பவான் பெலேக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தனது 82வது வயதில் பெலே காலமானார். அவருக்கு கால்பந்து நட்சத்திரங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

"பெலேவுக்கு முன், கால்பந்து ஒரு விளையாட்டாக மட்டுமே இருந்தது" என்று நெய்மார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"பெலே அனைத்தையும் மாற்றினார். கால்பந்தை கலையாகவும், பொழுதுபோக்காகவும் மாற்றினார். ஏழைகளுக்காக, கறுப்பின மக்களுக்காக குரல் கொடுத்தார்."

 
பெலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

"முக்கியமாக, அவர் பிரேசிலை அறியும்படி செய்தார். கால்பந்தும் பிரேசிலும் அவரால் மேம்பட்டன. மன்னருக்கு பிரேசில் நன்றி செலுத்துகிறது! அவர் மறைந்துவிட்டார், ஆனால் அவரது மந்திரம் நிலைத்திருக்கும்."

பிரான்ஸ் முன்கள வீரரும் நெய்மரின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி வீரருமான கிலியன் எம்பாப்பே பெலேவை "கால்பந்தாட்டத்தின் ராஜா" என்று வர்ணித்துள்ளார். "அவரது பாரம்பரியத்தை ஒருபோதும் மறக்க முடியாது" என்றும் கூறினார்.

தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பெலே தனது நாட்டுக்காக 92 போட்டிகளில் 77 கோல்கள் உட்பட 21 வருட வாழ்க்கையில் 1,363 போட்டிகளில் 1,281 கோல்களை அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

பெலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர், பீலே 2000 ஆம் ஆண்டில் ஃபிஃபாவின் நூற்றாண்டின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"மறைவில்லாத மன்னர் பீலேவுக்கு சாதாரணமாக விடை தருவது, கால்பந்து உலகம் முழுவதையும் தற்போது சூழ்ந்திருக்கும் வலியை வெளிப்படுத்த போதுமானதாக இருக்காது” என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார்.

"தொலைவில் இருந்தால்கூட, அவர் எப்பொழுதும் என்மீது காட்டிய அக்கறை, நாங்கள் சந்தித்துக் கொண்ட ஒவ்வொரு கணத்திலும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.”

பெலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

“கால்பந்தை நேசிக்கும் நம் ஒவ்வொருவரிடமும் அவரது நினைவு என்றென்றும் நிலைத்திருக்கும்.”

உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியின் முன்னாள் வீரர் ரொனால்டோவும் பெலேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். 

"தனித்துவம் வாய்ந்த மேதை. நுட்பம், கற்பனை, துல்லியம். அனைத்துக் காலத்திலும் சிறந்தவர்"

பெலேவுக்கு புகழாரம் சூட்டியிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "தாழ் நிலையில் இருந்து வந்த கால்பந்து ஜாம்பவான் பீலேவின் எழுச்சி, வேறு எவருடன் ஒப்பிட முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cl4855ym4k5o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேலேயின் மறைவை முன்னிட்டு 3 நாட்கள் துக்க  தினங்களாக பிரகடனம் : பிரேஸில் அரசு அறிவிப்பு

By SETHU

30 DEC, 2022 | 09:47 AM
image

கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேயின் மறைவையொட்டி, பிரேஸில் அரசாங்கம் 3 நாட்களை துக்க தினங்களாக பிரகடனப்படுத்தியுள்ளது.

பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலே (Pele) தனது 82 வயதில் வியாழக்கிழமை (29) காலமானார்.

1958, 1962, 1970 ஆம் ஆண்டுகளில் உலகக்கிண்ணப் போட்டிகளில் பிரேஸில் சம்பியனாகுவதற்கு பேலே பெரும் பங்காற்றினார். 

3 உலகக்கிண்ணங்களை வென்ற ஒரேயொரு வீரர் பேலே ஆவார். 

தனது 21 வருட கால்பந்தாட்ட வாழ்க்கையில் 1363 போடடிகளில் 1281 கோல்களைப் புகுத்தி அவர் உலக சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

பிரேஸில் அணிக்காக 77 கோல்களைப் புகுத்தி அவர் சாதனை படைத்திருந்தார்.

அண்மைக்காலமாக சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் குடல் புற்றுநோயினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்

இந்நிலையில்? பிரேஸிலின் சாவோ போலோ நகரிலுள்ள அல்பர்ட் ஐன்ஸ்டீன் வைத்தியசாலையில்  நேற்று வியாழக்கிழமை (29) பேலே காலமானார் என அவரின் மகள் கெலி நசிமென்டோ தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/144500

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild

விளையாட வேண்டிய வயதில் விளையாடினீர்கள்.
சாதிக்க வேண்டிய வயதில் சாதித்தீர்கள்
அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தீர்கள்.
சம்பாதிக்க வேண்டியதை சம்பாதித்தீர்கள்.
உலகிற்கு சொல்லவேண்டியதை சொன்னீர்கள்.
வகிக்க வேண்டிய பதவிகளை வகித்தீர்கள்.
இதற்கு மேல் என்ன வேண்டும்?
இனியென்ன?
இறக்க வேண்டிய வயதில் இறந்தீர்கள்.☁️

சந்தோசமாக சென்று வாருங்கள்.🙏🏼

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

Bild

விளையாட வேண்டிய வயதில் விளையாடினீர்கள்.
சாதிக்க வேண்டிய வயதில் சாதித்தீர்கள்
அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தீர்கள்.
சம்பாதிக்க வேண்டியதை சம்பாதித்தீர்கள்.
உலகிற்கு சொல்லவேண்டியதை சொன்னீர்கள்.
வகிக்க வேண்டிய பதவிகளை வகித்தீர்கள்.
இதற்கு மேல் என்ன வேண்டும்?
இனியென்ன?
இறக்க வேண்டிய வயதில் இறந்தீர்கள்.☁️

சந்தோசமாக சென்று வாருங்கள்.🙏🏼

சரியான தருணத்தில் சொல்லப்பட்ட சரியான வாசகங்கள்......!  🌹

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேலேயின் இறுதிச் சடங்குகள் நாளை மறுதினம்

By SETHU

01 JAN, 2023 | 02:51 PM
image

பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேயின் இறுதிச் சடங்கு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேலேயின் பூதவுடல், அவர் நீண்டகாலமாக விளையாடிய சான்டோஸ் கால்பந்தாட்டக் கழகத்தின் விலா பெல்மைரோ அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை திங்கட்கிழமை காலை முதுல் செவ்வாய்க்கிழமை காலை வரை வைக்கப்படவுள்ளது. நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை அவரின் இறுதிச் சடங்குகள் சான்டோஸ் நகரில் நடைபெறும். 

பேலேயின் தாயாரான, அண்மையில் 100 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய செலேஸ்ட் தங்கியுள்ள வீட்டையும் பேலேயின் இறுதி ஊர்வலம் கடந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேலே, தனது 82 ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை காலமாகியமை குறிப்பிடத்தக்கது.

பேலேயின் மறைவையொட்டி, பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ 3 நாட்களை துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

கால்பந்தாட்டத்தின் மன்னன்

3 உலகக்கிண்ணங்களை வென்ற ஒரேயொரு வீரர் கால்பந்தாட்ட வீரர் பேலே ஆவார்.  கால்பந்தாட்டத்தின் மன்னன் என புகழப்படுபவர் அவர்.

1940 ஆம் ஆண்டு பிறந்த பேலேயின் உண்மையான பெயர் எட்ஸன் அராரான்டஸ் டோ நசிமென்டோ. பேலே என்பது பாடசாலைக் காலத்தில் சூட்டப்பட்ட அவரின் பட்டப்பெயர்தான். 

 

1958, 1962, 1970 ஆம் ஆண்டுகளின் உலகக்கிண்ணப் போட்டிகளில் பிரேஸில் சம்பியனாகுவதற்கு பேலே பெரும் பங்காற்றினார்.

pele-1970-trophy.jpg

1970 ஆம் ஆண்டின் உலகக்கிண்ணத்துடன் பேலே

1971 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெற்றபோது 92 போட்டிகளில் 77 கோல்களைப் புகுத்தி பிரேஸில் சார்பாக அதிகூடிய கோல் புகுத்திய வீரராக பேலே விளங்கினார். அச்சாதனையை 51 ஆண்டுகளின் பின் கடந்த உலகக்கிண்ணப் போட்டிகளில், நெய்மார் தனது 124 போட்டியில் சமப்படுத்தினார்.

1954 முதல் 1974 ஆம் ஆண்டுவரை பிரேஸிலின் சான்டோஸ் கழகத்துக்காக மாத்திரமே பேலே விளையாடினார். அக்கழகத்துக்காக 636 போட்டிகளில் 613 கோல்களை அவர் புகுத்தினார். பிற நாடுகளின் கழகங்கள் பேலேவை ஒப்பந்தம் செய்வதை தடுப்பதற்காக, பேலேவை தேசிய சொத்து என, 1961 ஆம் ஆண்டு அப்போதைய பிரேஸில் ஜனாதிபதி ஜானியோ க்வாத்ரோஸ் பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக 1974 ஒக்டோபரில் பேலே அறிவித்தார். அதன் பின்னர், அமெரிக்காவின் நியூ யோர்க் கொஸ்மோஸ் கழகத் தலைவரின் கோரிக்கையின் பேரில் 1975 முதல் 1977 வரை அக்கழகத்துக்காக 64 போட்டிகளில் விளையாடி 37 கோல்களைப் புகுத்தினார்.

pele-guinnes-2.jpg

தனது 21 வருட கால்பந்தாட்ட வாழ்க்கையில் உத்தியோகபூர்வமற்ற போட்டிகள் உட்பட 1,363 போட்டிகளில் 1,283 கோல்களைப் புகுத்தி அவர் உலக சாதனை படைத்தார்.

கால்பந்தாட்ட வாழ்க்கையில் அதிக (1283) கோல்களைப் புகுத்தியமைக்காகவும், 3 உலகக் கிண்ணங்களை வென்றமைக்காகவும் கின்னஸ் உலக சாதனை சான்றிதழ்களை பேலேவிடம் கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் 2013 ஆண்டு கையளித்தனர்.

1999 ஆம் ஆண்டில் நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக பேலேவை சர்வதேச ஒலிம்பிக் குழு பிரகடனப்படுத்தியது. அத்துடன்  நூற்றாண்டின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை பேலலேவுக்கும் ஆர்ஜென்டீனாவின் டியகோடி மரடோனாவுக்கும் 2000 ஆம் ஆண்டு  சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) வழங்கியிருந்தது. 

https://www.virakesari.lk/article/144699

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேலேயின் பூதவுடல் 14 மாடி கல்லறைக் கட்டடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

By SETHU

04 JAN, 2023 | 05:58 AM
image

பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேயின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை (3)நல்லடக்கம் செய்யப்பட்டது.

கால்பந்தாட்டத்தின் மன்னன் பேலே, கடந்த வியாழக்கிழமை தனது 82 ஆவது வயதில் காலமானார்.

பேலே விளையாடிய கால்பந்தாட்டக் கழகமான, பிரேஸிலின் சான்டோஸ் நகரிலுள்ள, சான்டோஸ் கழகத்தின் விலா பெல்மைரோ அரங்கில், அவரின் பூதவுடன் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (02) காலை முதல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.  

pele-1970-trophy.jpg

பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் லூலா டா சில்வா, சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்பன்டினோ உட்பட சுமார் 2 லட்சத்துக்கு அதிகமானோர் பேலேயின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின் பேலேயின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை( இலங்கை, இந்திய நேரப்படி புதன் அதிகாலை) நல்லடக்கம் செய்யப்பட்டது.

சான்டோஸ்  நகரிலுள்ள 14 மாடிகளைக் கொண்ட செங்குத்தான  கல்லறைக் கட்டடமொன்றின் 9 ஆவது மாடியில் பேலேயின் உடல் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Pele-Funeral-santos.-2-AFP-Photo.jpg

 

Memorial_Necr_pole_Ecum_nica_-_Pele_Fune

Pele-funeral-2.jpg

https://www.virakesari.lk/article/144885



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.