Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரிந்துரை செய்தல்

Featured Replies

நல்லாக இருக்குங்க உங்கள் கவிதை

4 கருத்துக்கள் பகிர்ந்த உடனேயே உங்களாஇ எல்லா இடமும் போக அனுமதித்துவிட்டார்களா?

எங்கேயோ இடிக்குதே.

அறிமுகப் பகுதியில் எழுதியதன் பின் தான் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி தரப்படும் என்பது - ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டுக்காகவும், வம்பு செய்ய வருபவர்களைத் தடுப்பதற்காகவும், தமிழில் தட்டச்ச முடியாதவர்கள் முதலில் தட்டச்சு செய்து பழகுவதற்காகவும் தான். யாரவது ஏற்கனவே யாழ் கருத்துக்களத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களை பரிந்துரைத்தால் அவர்களுக்கு தமிழில் தட்டச்சுவதிலும் பிரச்சனை இல்லை என்றால் உடனடியாக அனுமதி வழங்கப்படும். ஆனால், எல்லோரும் அறிமுகப் பகுதியில் கட்டாயம் ஒரு அறிமுகப் பதிவை இடவேண்டும். இது தம்மை ஏனைய உறுப்பினர்களோடு ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும், அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும்.

நிலா, உங்கள் நண்பர்களையும் யாழ் கருத்துக்களத்துக்கு அழைத்து வாருங்கள். புதிதாக எனது நண்பர் ஒருவர் இணைந்திருக்கிறார் - அவரின் பெயர் இன்னது என்று எமக்கு தனிமடல் அனுப்புங்கள். உடனடியாக அனுமதி வழங்கப்படும். :icon_mrgreen:

அறிமுகப் பகுதியில் எழுதியதன் பின் தான் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி தரப்படும் என்பது - ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டுக்காகவும், வம்பு செய்ய வருபவர்களைத் தடுப்பதற்காகவும், தமிழில் தட்டச்ச முடியாதவர்கள் முதலில் தட்டச்சு செய்து பழகுவதற்காகவும் தான். யாரவது ஏற்கனவே யாழ் கருத்துக்களத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களை பரிந்துரைத்தால் அவர்களுக்கு தமிழில் தட்டச்சுவதிலும் பிரச்சனை இல்லை என்றால் உடனடியாக அனுமதி வழங்கப்படும். ஆனால், எல்லோரும் அறிமுகப் பகுதியில் கட்டாயம் ஒரு அறிமுகப் பதிவை இடவேண்டும். இது தம்மை ஏனைய உறுப்பினர்களோடு ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும், அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும்.

நிலா, உங்கள் நண்பர்களையும் யாழ் கருத்துக்களத்துக்கு அழைத்து வாருங்கள். புதிதாக எனது நண்பர் ஒருவர் இணைந்திருக்கிறார் - அவரின் பெயர் இன்னது என்று எமக்கு தனிமடல் அனுப்புங்கள். உடனடியாக அனுமதி வழங்கப்படும். :lol:

உங்கள் தெளிவான விளக்கத்துக்கு நன்றிகள் வலைஞன் அண்ணா. நான் அக்கருத்தை எழுதிய சில நிமிடங்கலீன் பின்னர் அறிந்தேன் ஒருவரின் நண்பி எனவும் அவர் தனிமடலில் உங்க கிட்ட பூமகளை அறிமுகம் செய்து வைத்த பின்னரே உள்நுழைய அனுமதித்ததாகவும். நான் எதுவும் சந்தேகத்தில் கேட்கவில்லை. ஏனைய புது உறுப்பினர்கள் மனமுடைய கூடாது என்பதற்காகவே, எதுவும் தப்பிருப்பின் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அறிமுகப் பகுதியில் எழுதியதன் பின் தான் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி தரப்படும் என்பது - ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டுக்காகவும், வம்பு செய்ய வருபவர்களைத் தடுப்பதற்காகவும், தமிழில் தட்டச்ச முடியாதவர்கள் முதலில் தட்டச்சு செய்து பழகுவதற்காகவும் தான். யாரவது ஏற்கனவே யாழ் கருத்துக்களத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களை பரிந்துரைத்தால் அவர்களுக்கு தமிழில் தட்டச்சுவதிலும் பிரச்சனை இல்லை என்றால் உடனடியாக அனுமதி வழங்கப்படும். ஆனால், எல்லோரும் அறிமுகப் பகுதியில் கட்டாயம் ஒரு அறிமுகப் பதிவை இடவேண்டும். இது தம்மை ஏனைய உறுப்பினர்களோடு ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும், அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும்.

நிலா, உங்கள் நண்பர்களையும் யாழ் கருத்துக்களத்துக்கு அழைத்து வாருங்கள். புதிதாக எனது நண்பர் ஒருவர் இணைந்திருக்கிறார் - அவரின் பெயர் இன்னது என்று எமக்கு தனிமடல் அனுப்புங்கள். உடனடியாக அனுமதி வழங்கப்படும். :)

அட இப்படியெல்லாம் புதிய உப சரத்துக்கள் கள விதிக்குள்ள ரகசியமாவே வைச்சிட்டுத்தான்......???!

ம்ம்ம்... இங்கும் அப்ப பரிந்துரைப்புக் கலாசாரம் (recommendation culture) வளர்க்கிறீங்களோ... இல்ல....???!

சட்டத்தின் முன் சகலரும் சமன் என்ற நிலை தளர்ந்து பரிந்துரைப்பின் முன் சட்டம் தளர்வு என்ற நிலை....???!

இப்படி வேறும் தளர்வுகள் இருந்தா முன்னாடியே சொல்லிடுங்க..!

இறுதியில் கேள்வி கேட்ட நிலாவை குளிர்விக்க..... ஒரு வரி...! :lol:

நல்லாப் போகுது.. நிர்வாகம்... தமிழர்கள் ஆச்சே..! :(:lol:

Edited by nedukkalapoovan

நெ.போ.ன்.

வலைஞன் சரியான முறையில் சொன்னார் எதற்காக புதிய உறுப்பினர்களை எழுதவிடுவதில்லை என்பதற்கு..

மற்றும் புதி நபர் நம்கத்தன்மைஇல்லாதவராக இருக்கம் பட்சத்தில் தவறான கருத்துகளை உடனுக்குடன் நீக்கமுடியாமலும் போய்விடுமெ..

இதுவே பரிந்துரை செய்வதால் அந்த சந்தேகம் இருக்காது அல்லவா..

மற்றவர்களுக்கு வரும் சந்தேகம் விடை தெரியாமல் வருவது..

ஆனால்..

உங்களுக்கு வரும் சந்தேகம்..எல்லாம் தெரிந்து வருவது.. :lol:

ஒரு மனிதனின் திறமை, ஆற்றலை அவனாக வெளியிட அனுமதிக்க வேண்டும் என்பதும்.. விதி என்ற ஒன்று நிறுவப்பட்டால் அதற்குள் எல்லோரும் அடங்க வேண்டும் என்பதும்.. நியாயமான எதிர்பார்ப்பு.

வலைஞன் சார் கூறுவது போலவே எல்லாத் தகமைகள் இருந்தும் யாழில் இருப்பவர் ஒருவரின் அறிமுகம் கிடைக்காமல்.. வாசலில் தவழ நேரும் ஒரு உறவுக்கும்.. யாழில் ஏலவே இருக்கும் ஒரு நபரின் பார்வைக்கு தகுதியானவர் என்ற அடிப்படையில் பரிந்துரை வாங்கி உள் நுழைய வசதி உள்ள ஒருவருக்கும் இடையில் உள்ள சங்கட நிலையை நீங்கள் ஊக்குவிக்கிறீர்களா..??!

என்னதான் பரிந்துரைக்கப்பட்ட நபராக இருந்தாலும்.. அவர் ஒரு 20 கருத்து எழுதி உள்ள வருவதால்.. அப்படி என்ன தாமதமாகிடும்...??! கள விதி என்பது சமனான அமுலாக்கத்துக்குள் அமைய வேண்டும். பரிந்துரை என்ற பாரபட்சமிடல்.. தகமை இருந்தும் பரிந்துரைக்க ஆளற்ற உறவுகளின் விசனத்துக்கு இலக்காகும்.

உள்ள விசனம் போதாது என்று. அதுமட்டுமன்றி.. வெண்ணிலா கேட்காத வரைக்கும் அது ஒரு ரகசிய விதி. பகிரங்கமாகக் கேட்டதால்.. அது பகிரங்க விதி. ஆக... ரகசிய விதிகளும் சலுகை அளிக்கப்படலும் யாழிலும் பக்கச் சார்பு என்ற நிலையெடுக்கிறதா.. என்ற கேள்வியை எழுப்புகிறதே...! அதுமட்டுமன்றி.. பரந்துரைகள் ரகசியமாக்கப்படுவதன் பின்னணி..??!

விசேட கள விதி உப சரத்துக்களின் கீழ் வருபவர்களை இவர்கள் இன்னாரின் பரிந்துரைக்கு அமைய வந்தார்கள் என்று இனங்காட்டுதல் புதிதாக இணைய உள்ள உறவுகளும் பரிந்துரைகளுக்கு முயற்சிக்க வசதியாக அமையாதா...??! இப்படி இன்னோரென்ன...கேள்விகள் தொக்கு நிற்கின்றனவே.. அதுதான்.. விகடகவியாரே..! :lol:

Edited by nedukkalapoovan

ஐயோ நெடுக் அண்ணா நான் தான் சும்மா கிடந்த சங்கை ஊதிட்டேனோ? நான் சும்மா எனக்கான சந்தேகத்தைக் கேட்டேன் . நீங்க நிர்வாகத்தை எல்லாம் கூட்டிக்கொண்டு வந்துட்டியள்

நிர்வாகமே என்னால் பதியப்பட்ட கருத்தால் தான் இங்கு சில வாதம் நடக்குது எனில் மன்னிச்சிடுங்கோ ;)

சந்தேகத்தைக் கேட்டுத் தெளியுறது நல்லம் தானே. பிறகெதற்கு ஆயிரம் தரம் மன்னிப்பு. துணிஞ்சு கேளுங்கள்.. நில்லுங்கள்..! :rolleyes:

  • தொடங்கியவர்

வெண்ணிலா, சந்தேகங்கள் இருந்தால் நிர்வாகத்தினரிடம் நேரடியாகக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அதில் தவறெதுவும் இல்லை. தயங்காமல் கேட்கலாம். மன்னிப்பெல்லாம் அவசியமற்றவை!

  • கருத்துக்கள உறவுகள்

அட இப்படியெல்லாம் புதிய உப சரத்துக்கள் கள விதிக்குள்ள ரகசியமாவே வைச்சிட்டுத்தான்......???!

ம்ம்ம்... இங்கும் அப்ப பரிந்துரைப்புக் கலாசாரம் (recommendation culture) வளர்க்கிறீங்களோ... இல்ல....???!

சட்டத்தின் முன் சகலரும் சமன் என்ற நிலை தளர்ந்து பரிந்துரைப்பின் முன் சட்டம் தளர்வு என்ற நிலை....???!

இப்படி வேறும் தளர்வுகள் இருந்தா முன்னாடியே சொல்லிடுங்க..!

இறுதியில் கேள்வி கேட்ட நிலாவை குளிர்விக்க..... ஒரு வரி...! :rolleyes:

நல்லாப் போகுது.. நிர்வாகம்... தமிழர்கள் ஆச்சே..! :D:)

ஏற்கனவே பல புது உறுப்பினர்கள் பல மாதங்களாக கருத்து எழுத முடியாமல் status of validating இல் இருக்கிறார்கள்.இவர்கட்கு ஒரு கள உறுப்பினர் ஸ்பொன்சர் பண்ணா விட்டால் கருத்து எழுத முடியாது என்று கள நிர்வாகம் சொல்கிறதா? அல்லது புது உறுப்பினர்களை என்ன அடிப்படையில் கருத்து எழுத அனுமதிக்கின்றீர்கள்.?

கருத்துக்களத்தில் இணைபவர்களுக்கு, பதிவுசெய்யும் போது அவர்கள் கொடுக்கிற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். அந்த மின்னஞ்சலில் அனுப்பப்படுகிற இணைப்பின் மூலம் அவர்கள் validating செய்யவேண்டும். அவர்கள் பதிவுசெய்யும் போதே இதுபற்றி அவர்களுக்கு அறியக் கொடுக்கப்படும். சிலர் தவறான மின்னஞ்சல் முகவரியை கொடுப்பார்கள். எனவே அவர்களால் validating செய்ய முடியாது. அப்படியானவர்களே இன்னும் validating என்ற நிலையில் இருக்கிறார்கள். அநேகமாக ஒவ்வொரு நாளும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது புதிய உறுப்பினர்களின் validating சரிபார்க்கப்படுகிறது.

validating செய்ததன் பின் அவர்கள் "யாழ் அரிச்சுவடி" பகுதியில் அறிமுகத்தை முன்வைக்கவேண்டும். முன்னரே சிலதடவைகள் குறிப்பிட்டது போல் - தமிழில் தட்டச்சத் தெரியாதவர்கள் தட்டச்சு செய்து பழகவும், ஏனைய கருத்துக்கள உறவுகளுடனான அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்குமே இந்தப் பகுதி. இவையனைத்துமே பாதுகாப்புக்கானதே. validating முறைகூட அண்மையில் கொண்டு வரப்பட்டது தான். காரணம், கோமாளித்தனமாக தடை செய்யச் செய்ய மீண்டும் மீண்டும் புதிய பெயர்களில் இணைந்து அறிமுகப்பகுதியில் அநாகரிகக் கருத்துக்கள் சிலரால் எழுதப்பட்டதாலேயே இந்த முறைமை கொண்டுவரப்பட்டது.

அறிமுகப் பகுதியில் தமிழில் எழுதுகிறார்களா, ஏனைய கருத்துக்கள உறவுகளோடு பண்போடும், நட்போடும் பழகுகிறார்களா என்பதையே முதலில் பார்க்கிறோம். மற்றும்படி எல்லாரும் கருத்துகளத்தில் கருத்துக்களை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். எந்தவிதப் பாகுபாடும் இல்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வலைஞன் மிக்க நன்றி.

வணக்கம் வலைஞன் எனக்கு மற்றைய பக்கங்களில் போஸ்ட் அடிக்கமுடியாது இருக்கிறது, உதவி செய்யமுடியுமா? கொசுக்கடி தாங்கல, கொசுவலையும் இல்லாது விலை யாஸ்தி இங்கு.விடியற்காலையில் இருந்து போஸ் அடிக்க முயற்ச்சிசெய்கின்றேன். முடியலயே!!

:lol::lol: :P :D

நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. அப்போ தயங்காமல் கேட்கலாம் என்கிறீங்க.

பயப்பிடாம கேளுங்கோ உதவி வேண்டும் என்றா தர பல பேர் காத்திருகிறோம்............ :P

பயப்பிடாம கேளுங்கோ உதவி வேண்டும் என்றா தர பல பேர் காத்திருகிறோம்............ :P

ஹீஹீ என்அக்கு ஆதரவு எல்லாம் வேணாமுங்கோ ஆனால் சில சந்தேகங்கள் மட்டுமே

அவற்றைக் கேட்பதால் நிர்வாகத்துக்கு என் மேல் கோவம் வராவிடில் சந்தோசம்.

என்னை திட்டணும் என்றால் தனிமடலில் திட்டுங்கோ :lol:

நிர்வாகத்தினர் எல்லா இடமும் கருத்துக்களை எழுதமாட்டார்கள் ஆனால் எல்லா இடமும் பார்ப்பார்கள். தவறான கருத்துக்களை நீக்குவார்கள் என்பது உண்மையே.

ஆனால் "யாழ் உறவோசை" பகுதிக்குள் நிர்வாகத்திடம் சில சந்தேகங்கள் கேட்டும் அதற்கு நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சிலவேளை தனிமடலில் பதில் அளிக்கின்றனரோ தெரியா. ;)

உதாரணத்துக்கு

இதை ஏன் இன்னும் நிர்வாகம் கவனிக்கவில்லை.

ஓ இக்கருத்து எழுதப்பட்டதன் பின்னர் இன்னும் நிர்வாகத்தினர் யாழுக்கு வரவில்லை என சொல்ல போறீங்களா? :lol: ஆனால் "கருத்துக்களில் மாற்றங்கள்" தலைப்பில் தினமும் நிர்வாகத்தினர் மாற்றிவிட்டுதானே போறார்கள்.

எப்படியக்கா உங்களுக்கு மட்டும் இப்படி நல்ல நல்ல சந்தேகங்கள் எல்லாம் வருது எங்களின் குரு இதை நினைத்து புல்லரித்து போய் இருப்பார் என்று நினைகிறேன்......... :P :lol:

இன்னொன்று :lol:

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் - ஒருவர் யாழில் தடை செய்யப்பட்டால் அவரது status.. தமிழில் எப்படி சொல்லுவது -- நிலை - தடைசெய்யப்பட்டோர் என்று காட்டப்படும் இல்லையா? இல்லாதுவிடின் கருத்துக்கள உறவுகள் அல்லது கருத்துக்கள உறுப்பினர்கள் அல்லது validating இப்படி காட்டப்படும்.

ஆனால், நேற்று என்று நினைக்கின்றேன், காவல்துறை கவிதைப் பூங்காட்டு பகுதியில் வன்னிமைந்தன் எழுதியதாக சொல்லி ஒரு கவிதையை ஒட்டி இருந்தார். அங்கு அவர் வன்னிமைந்தன் தான் யாழில் தடைசெய்யப்பட்டுள்ளதாக தனக்கு தனிமடல் அனுப்பி இருந்தார் என்று கூறி இருந்தார். உடனே, நான் வன்னிமைந்தனின் புரபைலுக்கு போய் அவரது யாழ் status ஐ பார்த்தேன். அதில் கருத்துக்கள உறவுகள் என்று இருந்தது. அப்படியாயின் காவல்துறை வன்னிமைந்தன் யாழில் தடை செய்யப்பட்டு உள்ளதாக கூறியது தவறா? எங்கே பிழை நடந்தது என்று விளங்கவில்லை..

இதுதான் அந்த லிங்க்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=338492

இதுவும் நிர்வாகத்திடம் கேட்கப்பட்ட கேள்விதான். அதே உறவோசைப் பகுதிக்குள் தான். ஆனாலும் இதுவரையில் உறுப்பினர்களுக்கு பதில் தரவில்லை. உண்மையிலேயெ வன்னி மைந்தனை த்டை செய்திருந்தீர்களா? இல்லை காவல்துறை தான் சும்மா சொன்னாரா என்பது இதுவரை தெரியாத போதிலும் தற்போது வன்னி மைந்தனால் யாழில் எழுத முடிகின்றது.

எனவே நிர்வாகம் தனிமடலில் விளக்கம் கொடுக்கிறீர்களாஅ?

ஏன்னா இது உறவோசைப் பகுதிக்குள் கேட்கப்பட்ட கேள்வியாக இருப்பினும் பதில் இல்லாமல் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டிருகின்றன. அதனால் தான் கேட்டேனுங்கோ :lol:

நன்றிகள் வலைஞன் அண்ணா

  • 3 weeks later...

'இறால் குழம்பு, குழம்பு ரெடி' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

--------------------

நட்புடன், இணையவன்.

இறால் குழம்பு பார்க்க வடிவா இருக்கு வெண்ணிலா

அது சரி நீங்கள் செய்து பார்த்துட்டீங்களா?

இறால் குழம்புக்கு தக்காளி பொடுறதை விட முருங்கக்காய் போட்டு வைச்சால் சூப்பரா இருக்கும் ;)

இல்லையக்கா நான் அசைவம் சாப்பிடுவதில்லை. ஆதலால் செய்து பார்க்கவில்லை

முருக்கங்காய் போட்டு சமைக்கிறதா? எனக்கு தெரியாது. ஆனால் கூடுதலாக தக்காளிதான் போட்டு சமையல் செய்வது என கேள்விப்பட்டிருக்கிறேன்

வணக்கம் இணையவன். ரசிகை அக்கா எழுதியதற்கு நான் இவ்வாறு பதில் அளித்தேன். அதை எதற்காக நீக்கினீர்கள்? ஏதாவது தப்பாக எழுதிட்டேனா? அல்லது இருபொருள்பட எழுதிட்டேனா? எனக்கு விளக்கம் தேவை. தயவுசெய்து சொல்லுங்கோ மட்டுறுத்தினர் இணையவன் அவர்களே சொல்லுங்கோ

இல்லையக்கா நான் அசைவம் சாப்பிடுவதில்லை. ஆதலால் செய்து பார்க்கவில்லை

முருக்கங்காய் போட்டு சமைக்கிறதா? எனக்கு தெரியாது. ஆனால் கூடுதலாக தக்காளிதான் போட்டு சமையல் செய்வது என கேள்விப்பட்டிருக்கிறேன்

பேபிக்கு தெரிந்தளவிள இதில ஒன்றும் பிழை இருகிற மாதிரி தெரியவில்லை :lol: !!எனி ஏதாவது விளக்கம் வரும் அது தான் ஊகத்தில எழுதினீங்க அப்படி இப்படி என்று. :lol: ................என்ன கொடுமை......... :P

அட நாப் கொஞ்சகாலம் தான் வரவில்லை அதுவும் 2நாள் :P அதுகுள்ள இப்படியா எனி நாம வந்க்டுட்டோம் தானே சட்டம்,ஒழுங்கு எல்லாம் சிறப்பாக இருக்கும்.......... :lol:

  • தொடங்கியவர்

இல்லையக்கா நான் அசைவம் சாப்பிடுவதில்லை. ஆதலால் செய்து பார்க்கவில்லை

முருக்கங்காய் போட்டு சமைக்கிறதா? எனக்கு தெரியாது. ஆனால் கூடுதலாக தக்காளிதான் போட்டு சமையல் செய்வது என கேள்விப்பட்டிருக்கிறேன்

வணக்கம் இணையவன். ரசிகை அக்கா எழுதியதற்கு நான் இவ்வாறு பதில் அளித்தேன். அதை எதற்காக நீக்கினீர்கள்? ஏதாவது தப்பாக எழுதிட்டேனா? அல்லது இருபொருள்பட எழுதிட்டேனா? எனக்கு விளக்கம் தேவை. தயவுசெய்து சொல்லுங்கோ மட்டுறுத்தினர் இணையவன் அவர்களே சொல்லுங்கோ

தொடர்ந்து எழுதப்பட்ட 3 கருத்துக்கள் நீக்கப்பட்டதால், இடையில் இருந்த உங்கள் கருத்தும் சேர்த்து இணையவனால் நீக்கப்பட்டுவிட்டது. மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. தவறுக்கு வருந்துகிறோம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

தொடர்ந்து எழுதப்பட்ட 3 கருத்துக்கள் நீக்கப்பட்டதால், இடையில் இருந்த உங்கள் கருத்தும் சேர்த்து நீக்கப்பட்டுவிட்டது. மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. தவறுக்கு வருந்துகிறோம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

உங்கள் தவறை ஏற்றுக்கொள்கின்ற போதிலும் மீண்டும் இவ்வாறான கருத்துக்களை நீக்க மாட்டீங்க என நம்புகின்றேன். நன்றிகள். :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.