Jump to content

உஞ்சுக்


Recommended Posts

பதியப்பட்டது

10724537__1182007059__1__2-77b4eab6a113b90d50a6cf8e7d931888___big__.jpg

உஞ்சுக்

உஞ்சு இது வேறை ஒண்டுமி;ல்லை எங்கட நாயைக்கூப்பிடுறபேர். எப்படி இந்தப்பெயர் வந்தது என்று எனக்குத்தெரியாது. எங்கட வீட்டில இருந்த எல்லா நாய்களையும் அப்படித்தான் கூப்பிட்டோம். எங்கட முதல் உஞ்சு ஒரு கறுப்பு வெள்ளையும் கலந்த நாய். அமைதியான நாய். நான் அது குரைத்ததை அதிகம் பார்த்ததே கிடையாது. ஆனால் வளவுக்கை யாரும் வந்த அமைதியாப்போய் கடித்து வைக்கும். அதிகமா தேங்காய் பிடுங்க வாறவனைத்தான் அது கடித்து வைக்கும். அதை எங்கட தாத்தாஎங்கையோ இருந்து பிடித்து

வந்ததா அம்மா சொல்லுவா. தாத்தா இறந்த போது அந்த நாய் ஊளையிட்டு அழுததை நான் பார்த்திருக்கிறன்.

எண்பத்தி மூன்று கலவரத்தில ஆமி ரோட்டால போறவாற ஆக்களையெல்லாம் சுட்டபோது இது அவங்களைப்பாத்து பேய்தனமா குரைக்கும். அவங்கள் கோவத்தில கேட்டை காலால உதைச்சுட்டு போயிருக்கிறாங்கள். அப்ப பயத்தில ஏனடா இந்த நாயை வளர்கிறம் என்று இருக்கும். அதற்குப்பிறகு அதற்கும் வயசாகிபோச்சு. ஒரு கட்டத்தில கண் தெரியாம போச்சு. ஒருநாள் இரவு எங்கட கிணத்தில விழுந்திட்டுது. பிறகு கறன்ட் இல்லாத நேரத்திலயும் விளக்கு வெளிச்சத்தில் வாளியைக்கட்டி அதை ஒரு மாதிரி அப்பா வெளிய எடுத்தார்.

அதற்க்குப்பிறகு அது கனகாலம் இருக்க இல்லை. காணாப்போட்டுது. அம்மா சொல்லுவா அது எங்கடவீட்டில செத்து எங்களுக்கு கஸ்டம் குடுக்கக்கூடாது என்று எங்கையோ போய் செத்துவிட்டதென்று. அதுக்குபிறகு நாய் இல்லாம கொஞ்சநாள் இருந்தம்.

பிறகு மாமா மீன்வாங்கப்போன இடத்தல ஒரு மண்ணிற நாய்க்குட்டி பிடிச்சு வந்தார். அது ஒரு பேய்பிடித்த நாய். இரவில எப்ப பாத்தாலும் வெற்றிடத்தைப்பாத்து குலைத்துக்கொண்டே இருக்கும். இரவில அதோட கரைச்சல் தாங்க முடியேல்லை என்று அம்மா மாமாக்கு பேசுவா. உண்மைதான் அப்ப எங்கட வீட்டைச் சுத்தி சுவரோ யன்னலோ இல்லை. அறைகள் மட்டுந்தான் அறுக்கையா இருக்கும் .விறாந்தையில தான் நாங்கள் படுத்திருப்பம். இந்த நாய் இரவில கேற்றில இருந்து குரைச்சுக்கொண்டு ஓடிவரும் பிறகு தாத்தாவின்ர மரக்கட்டில்ல பாஞ்சு ஏறிநின்று வயிரவர்கோயில் திசையில குரைக்கும். அம்மா சொல்லுவா வயிரவர் உலாவுறார் அதுதான் நாய் குரைக்கிறதென்று. இதால நான் ஒன்டுக்குபோகக்கூட வீட்டுப்படியிங்க பயந்திருக்கிறன். அப்படிப்போனாலும் நாய் குரைக்கிற பக்கம் பாக்காம ஒடி வந்து வீட்டுக்கை ஏறிடுவன்.

ஒரு நாள் நாய் பிடிக்கிறவங்கள் வந்தாங்கள். முதலே தெரிஞ்சதால எங்கட நாயை உள்ளை விட்டு கேட்டை பூட்டிட்டு நாங்கள் கேட்டில ஏறி விடுப்புப்பாத்துக்கொண்டு இருந்தம். கேற்றுக்கு அடில இருந்த ஓட்டைக்குள்ளால வெளியபோன எங்கட நாய்; அவனைப்பார்த்து வீரங்காட்டி குரைக்;க அவன் சுருக்கைப்போட்டு பிச்சு வண்டிலுக்கை போட்டுட்டான். பிறகு நான் ஓடிப்போய் அப்பாவைக்கெஞ்சி அப்பா ஒரு ஐந்து ரூவா குடுத்து விடுவிச்சார். பிறகு

அந்த நாய் வலிப்பு வந்து செத்துப்போயிட்டுது. அந்த நிறம் ராசி இல்லை என்று அம்மா சொன்னா.

அதுக்குப்பிறகும் அதே நிறத்தில வந்தது ஒன்றும் நிலைக்க இல்லை.

கனகாலத்துக்குப்பிறகு கறுப்பும் வெள்ளையும் நிறத்தில புதிசா ஒரு நாய்குட்டி அப்பா யாரிட்டையோ வாங்கி வந்தார். அதுதான் எங்கட கடைசி உஞ்சு. அது வளர்ந்து ரோட்டில யாரையும் போக விடாது. டுட்டரிக்கு போற பெடியங்கள் எல்லாம் காலதூக்கிகொண்டுதான் சைக்கிள்ள போவாங்கள். எப்படியாவது றோட்டுக்குப்போயிடுற அதை துரத்திப்பிடிச்சு உள்ள விடுறது ஒரு நாளைக்கு இரண்டு மூன்டுதரம் நடக்கும். வீட்டுக்கு வாறவையை

நாயிட்டையிருந்து காப்பாத்த அதை பிடிச்சு அமத்தி வைச்சிருக்கிறதும் அது நாங்கள் விடுப்புபார்க்க ஓடிப்போய் கடிக்கபோறதும் சாதாரணம்.

இந்தியன் ஆமி காலத்திலயும் அது மோப்பம் பிடிச்சு ஆமி காம்பிலயிருந்து நடக்க வெளிக்கிடவே குரைக்க ஆரம்பிச்சிடும். கடைசியா நாங்கள் இந்தியாக்கு வெளிக்கிடேக்கை அதுக்கு விளங்கியிருக்காது. ஏதோ இடம் பெயர்ந்துதான் போகினம் அடிக்கடி வந்து சாப்பாடு வைப்பினம் என்டு நினைச்சு ஏமாந்துதான் போயிருக்கும்

Posted

ஆதிபத்தியன் உங்கட உஞ்சுக் கதை நல்லா இருக்கு... நீங்கள் மணியின் அவட்டர் படத்தை வச்சு இருக்கிறீங்கள், குழப்பமாக உள்ளது. நீங்கள் மணி இல்லைதானே?

Posted

ஆதிபத்தியன் உங்கட உஞ்சுக் கதை நல்லா இருக்கு... நீங்கள் மணியின் அவட்டர் படத்தை வச்சு இருக்கிறீங்கள், குழப்பமாக உள்ளது. நீங்கள் மணி இல்லைதானே?

எனக்கும் இது குழப்பமாதான் இருக்கு.

Posted

உங்கள் வாழ்கையில் பல நாய்களை சந்தித்து இருகிறீங்கள் போல இருக்கு ஆதிபத்தியன் அண்ணா மிகவும் நன்றாக இருந்தது உஞ்சுக் கதை வாழ்த்துகள்..........அது சரி உஞ்சுக் என்றா ஏதாவது அர்த்தம் இருக்கா?? :lol: ;)

Posted

நான் அவனில்லை :lol:

மணி அத்தான் இப்படி நான் அவன் இல்லை என்று சொன்னீங்க என்றா உஞ்சுக் நீங்க இல்லை என்று எடுத்து போடுவாங்க கவனம்......... :P ;)

Posted

அம்மா சொல்லுவா வயிரவர் உலாவுறார் அதுதான் நாய் குரைக்கிறதென்று. இதால நான் ஒன்டுக்குபோகக்கூட வீட்டுப்படியிங்க பயந்திருக்கிறன். அப்படிப்போனாலும் நாய் குரைக்கிற பக்கம் பாக்காம ஒடி வந்து வீட்டுக்கை ஏறிடுவன்.

ஐயோ பாவம் ஆதீபன் அண்ணா. வயிரவரின் வாகனம் தானே நாய். அப்புறம் அவர் போறப்போ ஏன் நாய் பார்த்து குரைக்கணும்?

டுட்டரிக்கு போற பெடியங்கள் எல்லாம் காலதூக்கிகொண்டுதான் சைக்கிள்ள போவாங்கள்

அட பாவமே. உப்படி சைக்கிளில் போனப்போ காலைத்தூக்கி ஹாண்டில் இல் வைச்சுட்டு போய் இருக்கிறன் நானும் நம்ம பக்கத்து வீட்டு நாய்த் தொல்லையால்.

வீட்டுக்கு வாறவையை நாயிட்டையிருந்து காப்பாத்த அதை பிடிச்சு அமத்தி வைச்சிருக்கிறதும் அது நாங்கள் விடுப்புபார்க்க ஓடிப்போய் கடிக்கபோறதும் சாதாரணம்
.

அட அப்போ உங்க வீட்டுக்கு வாறவர்கள் பயந்து பயந்து தான் வரணும்.

ஏதோ இடம் பெயர்ந்துதான் போகினம் அடிக்கடி வந்து சாப்பாடு வைப்பினம் என்டு நினைச்சு ஏமாந்துதான் போயிருக்கும்

ஐயோ பாவம். நன்றியுள்ல மிருகம். ஏமாந்திடிச்சு. ஆமா உங்களுக்கு கவலையாக இருக்கவில்லையா?

உங்கள் உஞ்சுக் பற்றிய சுவாரசியமான அனுபவம் நல்லா இருக்குங்கோ.

Posted

நானும் ஒரு பொக்கட்டோக் வளர்க்கிறன். ஆனால் அதை உஞ்சுக் னு கூப்பிட்டால் வராது. ஜனா னு கூப்பிட்டால்தான் வரும். செல்லமா ஜனி னு கூப்பிட்டால் கூட வராது. என்னோடை தான் நல்லமாதிரி.

(என்ன ஜம்மு ஏதோ முணுமுணுப்பது போல இருக்குதே. பெரியம்மா வீட்டில் களவெடுத்த டோக்கி தானே என்று)

Posted

உங்கள் வாழ்கையில் பல நாய்களை சந்தித்து இருகிறீங்கள் போல இருக்கு ஆதிபத்தியன் அண்ணா மிகவும் நன்றாக இருந்தது உஞ்சுக் கதை வாழ்த்துகள்..........அது சரி உஞ்சுக் என்றா ஏதாவது அர்த்தம் இருக்கா?? :lol: ;)

"உஞ்சு உஞ்சு நாய்க்குட்டி ஊரா வீட்டு நாய்குட்டி" என பாலர்வகுப்பு ஆசிரியை ஒரு பாடல் சொல்லிக்குடுத்திருக்கிறா. உஞ்சு என்றா நாயை அன்பா அழைக்கிற பேர்என நினைக்கிறன்.

Posted

நானும் ஒரு பொக்கட்டோக் வளர்க்கிறன். ஆனால் அதை உஞ்சுக் னு கூப்பிட்டால் வராது. ஜனா னு கூப்பிட்டால்தான் வரும். செல்லமா ஜனி னு கூப்பிட்டால் கூட வராது. என்னோடை தான் நல்லமாதிரி.

(என்ன ஜம்மு ஏதோ முணுமுணுப்பது போல இருக்குதே. பெரியம்மா வீட்டில் களவெடுத்த டோக்கி தானே என்று)

ஓ அக்காவும் வளர்கிறீங்களா பொக்கட்டோக் எனக்கு நல்லா தெரியுமே..............ஓ நல்லா இருக்குது பெயர் நாயிற்கு............என்னோட கூட நல்ல மாதிரி தான் அக்கா................. :P

(ஆமாம் பெரியம்மா வீட்டை எடுத்தது என்று எனக்கு மட்டும் தானே தெரியும்)

Posted

"உஞ்சு உஞ்சு நாய்க்குட்டி ஊரா வீட்டு நாய்குட்டி" என பாலர்வகுப்பு ஆசிரியை ஒரு பாடல் சொல்லிக்குடுத்திருக்கிறா. உஞ்சு என்றா நாயை அன்பா அழைக்கிற பேர்என நினைக்கிறன்.

ஓ அப்படியா அண்ணா நன்றி தகவலுக்கு......... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.