Jump to content

பிரித்தானிய பிரதமர் ரிசி சுனக்கிற்கு தண்டம் விதித்த காவல்துறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரிசி சுனக்கிற்கு காரின் பின் இருக்கையில் இருக்கை பட்டி இன்றி பயணித்த குற்றத்துக்காக  தண்டம் விதித்தது பிரித்தானியாவின் லாங்கஷேர்  காவல்துறை.

பிரித்தானியாவில் தனது அரசாங்கத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு பற்றி ஒரு சிறு வீடியோவை ஓடும் காரில் இருந்து வெளியிட்டே இப்படி சிக்கலில் மாட்டி உள்ளார் ரிசி.

ஒரு தண்ட அறிவிப்பு 42 வயதான இலண்டன் ஆணுக்கு வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது லாங்கஷேர்  காவல்துறை. ரிசி தவறை முழுமையாக ஏற்று மன்னிப்பு கோருவதுடன், தண்டதையும் செலுத்துவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்பு கொவிட் விதிகளை மீறி விருந்தில் கலந்தமைக்காக பொரிசுடன் சேர்த்து ரிசிக்கும் தண்டம் விதிக்கப்பட்டது நினைவுகூறதக்கது.

பிரதமர் சட்டங்களை புறம்தள்ளி நடப்பதை இது காட்டுவதாக அரசியல்வாதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

(செய்தியின் சுருக்கம், மொழிபெயர்ப்பல்ல).

https://www.bbc.co.uk/news/uk-politics-64353054

 

 

 

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • goshan_che changed the title to பிரித்தானிய பிரதமர் ரிசி சுனக்கிற்கு தண்டம் விதித்த காவல்துறை
  • கருத்துக்கள உறவுகள்

காரில் இருக்கை பட்டி அணியாததால் பிரித்தானிய பிரதமருக்கு அபராதம் விதிப்பு

By T. SARANYA

21 JAN, 2023 | 10:16 AM
image

காரில் இருக்கை பட்டி அணியாமல் சென்றதால் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானிய பிரதமர்  ரிஷி சுனக், 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி காணொளி மூலம் பேசினார். அந்த காணொளியில் ரிஷி சுனக், காரில் இருக்கை பட்டி (seatbelt) அணியாமல் பயணித்தபடி பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 

இது வைரலாக பரவியதுடன், பிரதமரே இருக்கை பட்டி அணியாமல் காரில் சென்றதற்கு பலரும் விமர்சித்திருந்தனர். இருக்கை பட்டி அணியாமல் சென்றதற்காக ரிஷி சுனக் மன்னிப்பும் கோரினார். இதனிடையே, இருக்கை பட்டி அணியாமல் காரில் பயணித்ததற்காக ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/146342

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் யாழ்பாணத்தானான உங்களுக்கு தெரியாது என சொன்னால் -  உங்கள் பிரதேசவாதம் அப்பட்டமாக தெரிந்து விடும் என்பதால் யூகேயை இழுக்கிறீர்களாக்கும்.🤣 இங்கே முன்பே எழுதியதுதான் வடக்கு கிழக்கின் எந்த ஊரும் என் சொந்த ஊரே. எனக்கே நான் எந்த ஊரவன் என்ற பிரக்ஞை இல்லாத போது உங்களுக்கும் அது தேவையில்லை🤣.  தகவல்கள் பிழை என்றால் சுட்டலாம். பொத்தாம் பொதுவில் நான்-கிழக்குமாகாணத்தான்,  non-கிழக்குமாகாணத்தான் என்ற பிரதேசவாத கதைகளை விட்டு விட்டு.
    • உண்மை....புலம்பெய்ர்ந்த சகல இனத்தவர்களும் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் ,,மிகவும் குறைந்த சதவீததினரே இப்படியான வேலைகளை செய்கின்றனர்....  
    • விளையாட்டை விளையாட்டாக பாருங்கோ ...இனமத பேதமின்றி ரசியுங்கோ...இப்படிக்கு புலம்பெயர்ஸ் இதற்கு முக்கிய காரணம் ..புலம்பெயர்  இஸ்ரெல் வால்களும் ,பலஸ்தீன வால்களும்..... இந்த வால்கள் இப்படி மோதுவதால் பலஸ்தீனர்களை இஸ்ரேல் தொடர்ந்து அழிக்க போகின்றனர்  
    • கூட்டமைப்பு பிழை விட்டது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதை பிரதேசவாதத்தால் வந்த பிழை - என வேண்டும் என்றே தப்பாக வர்ணித்து அதன் மூலம் வடக்குகிழக்கு தமிழ் மக்கள் மனதில் மேலும் மேலும் பிரிவினையை தூண்டி, ஒற்றுமையை குலைத்து, அவர்கள் பலத்தை மேலும் சிதைக்க உதவியது அதைவிட பெரிய வரலாற்று பிழை. அதில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. கருணாவுக்குத்தான் வாக்கு போட்டேன் என்கிறீர்கள் - நீங்கள் அம்பாறை வாக்காளர் எனில் பிள்ளையானுக்கு எப்படியிம் போட்டிருக்க முடியாதே🤣. கள்ள வாக்கு போட்டால்தான் உண்டு. ஆனால் அந்த தேர்தலில் அம்பாறையில் பிள்ளையான் கட்சி விலகி கொள்ள அங்கே கருணா கேட்டார். இருவரும் ஒரு துப்பாக்கியின் இரு குழல்கள்தான். நீங்கள் கூட யாழ்களத்தில் கருணாவுக்கு ஆதரவு, பிள்ளையானுக்கு இல்லை என்றெல்லாம் எழுதவில்லை. மட்டு அம்பாறையில் எந்த தமிழ் தேசிய கட்சிக்கும் ஆதரவில்லை. பிள்ளையான், கருணாவுக்கு ஆதரவு என்பதே உங்கள் நிலைப்பாடாக இருந்தது. அதாவது ஸ்டாலின், கோபாலகிரிஸ்ணன் ஆகியோரால் முன் தள்ளபட்ட “கிழக்கு மைய அரசியல்”. அதைத்தான் நீங்கள் ஆதரித்தீர்கள்.  இப்போ கிழக்கு மைய அரசியல் மையவாடிக்கு போனதும் கருணா அச்சா, பிள்ளையான் கக்கா என புதுக்கரடி விடுகிறீர்கள்🤣. கருணாவும், பிள்ளையானும் கோக்கும் பெப்சியும் போலதான். அடுத்து, கருணா வெல்லவில்லை ஆகவே நானும் அவரும் பொறுப்பல்ல என மெல்ல நழுவ பார்கிறீர்கள் (இதைதான் தமிழகத்தில் நீங்கள் பாவித்த அநாகரீக சொல்லான மொள்ளமாரி என்பார்கள்).  நீங்கள் கருணாவுக்கு வாக்கு சேகரிக்கும் முன்பே அவர் எம்பி, பிரதி அமைச்சர், சுதந்திர கட்சி பிரதித்தலைவர். அப்போதும் காணி பிரச்சனை, உங்கள் ஆன்மாவிற்கு நெருங்கிய கல்முனை விடயம் எல்லாமும் இருந்தது? ஒரு கல்லைத்தன்னும் தூக்கிப்போட்டாரா? இல்லை. அப்போ அடுத்த முறை தனியே எம்பியாகி அதுவும் சிங்கள கட்சி எதுவும் சீட் கூட கொடாமல் திரத்தி விட்ட பின், இவர் ஆணி புடுங்குவார் என எப்படி நினைத்தீர்கள். டகால்டி வேலை தானே👇    
    • ஆனால் சகோ. நீங்கள் ஒன்றை கவனித்தீர்களோ தெரியவில்லை புலம்பெயர் தேசங்களில். அகதிகளாக புலம்பெயர்ந்து வந்த பல இனங்களின் புலம்பெயர் வாழ்வு இந்த மலிவான இன்பம் கொடுப்பதிலும் சிக்கி இருக்கிறது. உதாரணமாக வியட்நாம் பெண்களை சொல்லலாம். ஆனால் இந்த விடயத்திலும் தமிழர்கள் முன்னுதாரணமாக உழைப்பு மற்றும் நேர்மையால் மட்டுமே உயர்ந்தார்கள். வீதியில் எவரும் நின்றதில்லை. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.